Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. நட்பார்ந்த நொச்சி, இங்கு யாரும் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை. சிங்கள தேசிய விசுவாசிகளும் இல்லை. நீங்கள் நினைக்கும், விரும்பும் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களை யாராவது வைத்தால் அவர்களை, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது தேச விரோதிகள் எனச் சாயம் பூசப் பார்க்கிறீர்கள். ஒரே இடத்தையே நீங்கள் சுற்றிச் சுற்றி வருவதால் தேசியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் வரையறை செய்து வைத்திருக்கும் அந்தத் தேசியத்தை விட்டு வெளியே வந்து பேசுங்கள். புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒரு போராட்ட வடிவம். அதில் தோற்று விட்டோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்களையும் சந்தித்து விட்டோம். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’ என்று பிரபாகரன் சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன். இலங்கை அரசியலில் வரலாற்றில் இல்லாத ஒரு மாற்றம் இன்று நிகழ்ந்திருக்கிறது. ‘இலங்கையில் இடதுசாரி ஆட்சியா?’ என அயல்நாடு உட்பட மேற்கத்திய நாடுகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது எங்களுக்கு ஒரு புதிய தளம் கிடைத்திருக்கிறது. அங்கேயும் ஒரு தடவை நாங்கள் முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கும் கால அவகாசம் தர வேண்டித்தான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் முடிய வேண்டும். சர்வதேசமோ, இந்தியாவோ தங்கள் நலன்களைக் கருதாமல் தமிழர்களின் உரிமைகளுக்கான ஒரு தீர்வைத் தரப் போவதில்லை என்பதும் நாங்கள் அறிந்த பாடம்தான். சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்க நாங்கள் செய்யாத ஆர்ப்பாட்டங்களா? சனல் 4 வெளியிடாத ஆவணங்களா? சங்கு ஊதித்தான் தெரியப்படுத்த வேண்டுமா? இன்று நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனக் கொலைகள், யார் சொல்லியும் கேளாமல் அடுத்த நாட்டுக்குள் புகுந்து அழிக்கும் இஸ்ரேலின் ஆணவம்… என்று பலதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு புதிதாக நாங்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது? விட்டால் தமிழ் மக்கள் சிங்களத்துடன் ஒத்துப் போய் விடுவார்களோ என்ற ஒரு அச்சம் தான் இன்று பலரைக் கிலி கொள்ள வைத்திருக்கிறது. தேசியத்தை வைத்து எழுதுபவர்கள், மக்கள் மத்தியில் தங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் இப்பொழுது பலமாக குரல் தருவதும் அதற்காகத்தான். ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பில் மூன்று பேர்கள் இருந்தார்கள். அதில் அனுராவும் இருந்தார். அப்பொழுது அவரைப் பற்றிய விபரங்களை மக்களுக்கு நினைவூட்டி இருக்கலாம். அவர் வென்றதன் பின்னர், இப்பொழுது எதற்கு இவ்வளவு அவசரம்? வெற்றுப் பேச்சு மறவர்களுக்கு புது வேலை ஒன்று வந்திருக்கிறது, அது அனுராவை விரைவில் வெளியே அனுப்புவது. இப்படியான செயல்களைச் செய்விக்க அயல்நாடு கூடத் தயங்காது. ஆனால் செய்பவர்களுக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது இப்படியானவர்கள்தான் தேசியத்தை அழிப்பவர்கள் என்று. இன்னும் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்களுக்காக நிழலி ஒரு திரியைத் திறந்திருந்தார். உங்களுக்கான அழைப்பையும் நான் அங்கே ஏற்கெனவே விடுத்திருந்தேன். வாருங்கள் ‘அடுத்தது என்ன?’ என்பதை அங்கே பேசுவோம்.
  2. திமுக, வேறு கட்சிகளை வளர விடாமல் இடையிலேயை கிள்ளி எறிந்து விடும். சினிமாவில் இருந்து ஒரு தளபதி வருகிறார். அவரை அரசியலில் இருந்து விரட்டுகிறார்களா? அவர் தாக்குப் பிடிப்பாரா? பார்க்கலாம்.
  3. நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.
  4. விசுகு, வரலாறுகளை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன். ‘எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது’ என்று சொல்லியிருந்தேன்.
  5. ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான். “யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன்” என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை. இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள். இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால் சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாது’ என்று. அதே நிலைதான் இங்கும். சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம். சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையா’ என்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி. ‘நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும் இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார். ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி. பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார் ‘போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்’ என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம். மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி’ என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லை’ என்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம். எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடி” என்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை. இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல் ‘இனவாதி’ என்று உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது. கஜினி பலமுறை (17) தோற்றும் இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.
  6. விமானத்தில் வழங்கப்படும் உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. அதைகண்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள். “நான் அந்தக் கரப்பான் பூச்சியை கண்டு பிடிக்க முன் எனது இரண்டு வயது மகன் அந்த உணவில் பாதியைச் சாப்பிட்டு விட்டான்.அந்த உணவை நான் விசமாகவே பார்க்கிறேன்” என Suyesha Savant டிவிட்டரில் (X) பதிந்திருக்கிறாள். https://indianexpress.com/article/business/aviation/cockroach-meal-air-india-delhi-new-york-flight-9593185/
  7. ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம். அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்? நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில் உங்களைப் போல எனக்கும் தேவை இருக்கிறது.
  8. நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள். ‘இனவெறியன்’ என்று சொல்லும் போதே இந்தப் பதிவின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது. உண்மையைத்தானே பதிவிடுகிறார் என்றால், ஜனாதிபதித் தேர்தலிலேயை இவைகளைப் பதிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் அனுரா சொன்னதுக்கு எதிராக ரணில் கேட்டபோதவது போட்டிருக்கலாம். இந்த இடத்தில் சுமந்திரன் ஏன் சுஜித்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்த்திருந்தார் என்பதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்து விடுகிறது. சுமந்திரன் மட்டும் அனுராவை (நேரடியாக) ஆதரித்திருந்தால், சங்கு மட்டுமல்ல முரசும் அடித்திருப்பார்கள். சுமந்திரனின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும் “பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்” இல் வந்துவிடப் போகிறது. இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம். வெண்ணை திரண்டு வர எப்பொழுதும் வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே நாங்கள் சட்டியை உடைத்து விடுவோம்.
  9. அப்போ கிழக்கில் கிடைத்த வாக்குகள் எதை உணர்த்துகிறது? நாங்கள் மண்ணுக்குமேலே விழுந்தால்தானே மீசையில் மண் ஒட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.