Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. எல்லாம் சரி. நீங்கள் ஏன் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை?
  2. பொது வேட்பாளர் ஒரு குறியீடு மட்டுமே. அவர் ஜனாதிபதித் தேர்தலிலே வெல்ல மாட்டார் என்பது தெரிந்த விடயம். அது சிவாஜிலிங்கமா? அரியநேத்திரனா? என்பது பிரச்சினையில்லை. ஆனால் ஒரு கட்சிக்குள் அதுவும் மத்தியகுழு உறுப்பினராக இருந்து கொண்டு அந்தக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் பிற கட்சிகளுடன் இணைந்து ஒருவர் பொதுவேட்பாளராகப் போட்டியிடுகின்றார் என்றால் இங்கே யார் அறிவில் கீழே இருக்கிறார் என்ற கேள்வி ஒன்று வரத்தான் செய்கிறது. அதேநேரம் இவர்களுக்கு வந்த ‘பொது வேட்பாளர்’ என்ற எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சிவாஜிலிங்கத்துக்கு வந்திருக்கிறது என்றால் சிவாஜிலிங்கம் அறிவில் இவர்களுக்குள் உயர்ந்து நிற்கின்றாரல்லவா? என்ற கேள்வியும் இருக்கின்றது.
  3. விசுகு,அவர்களது போராட்டத்தில் ஒரு தீர்வுதான் அது தமிழீழம். ஓரளவாவது என்று அவர்கள் உடன்பட்டிருந்தால் இத்தனை மாவீரர்கள் இல்லை. அரசியல் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் அனந்தியும் அடக்கம். மாவீரர்கள் மதிப்புக்குரியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது தியாகம் அளப்பரியது. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும், அரசியல் செய்வதும் ஏற்புடையது அல்ல. மாவீரர்களை எப்படி அனந்தி இதயத்தில் வைத்திருக்கின்றாரோ அது போல்தான் மற்றவர்களும். அனந்தி தனது சாக்கடை அரசியலுக்குள் புனிதமான மாவீரர்களை இழுத்து சேரடிக்காமல் இருக்க வேண்டும். பொது வேட்பாளரை மாவீரன் பிரபாகரனே ஏற்கமாட்டார்.
  4. இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம். இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.
  5. அப்பவும் பிரச்சினை இருக்கிறது ரசோதரன். ஒருதடவை அல்ல இரண்டு முறை சிவாஜிலிங்கம் நின்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் சர்வதேசத்துக்கு ஒற்றுமையைக் காட்டவோ? சிங்களத்துக்கு சேதி சொல்லவோ தமிழ் அரசியல்வாதிகளுக்கோ நிலாந்தன் போன்றவர்களுக்கோ சிந்திக்க நேரமும் கிடைக்கவில்லை. அறிவும் சரியாக வேலை செய்யவில்லை. இப்பொழுதுதான் அவர்களுக்கு எல்லாமே கூடி வந்திருக்கிறது. இருக்கிற கட்சிகளிலேயே வெளிநாடுகளுடன் கதைப்பதில் முன்னிலையில் நின்றது தமிழரசுக் கட்சிதான். அதையும் உடைத்து விட்டால், “நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான்டி ஒரு தோன்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” என்று தமிழர்கள் சங்கெடுத்து ஊத வேண்டியதுதான். என்னைப் பொறுத்த வரையில், இந்தத் தேர்தல் முடிந்தவுடன் அரியநேத்திரன் மட்டுமல்ல பொதுவேட்பாளர் தொடர்பில் பங்களித்த அத்தனை அரசியல்வாதிகளும் ஒதுங்கிப் போவதுதான் தமிழர்களுக்கான பேர் உதவியாக இருக்கும்.
  6. விசிகு, ஒன்றியத்தின் தலைவராக இருந்து அதன் யாப்புக்குள் கட்டுப்பட்டு செயற்பட்ட உங்களது நேர்மையைப் பாராட்டுகிறேன். 👏 இப்பொழுது தமிழரசுக் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோர் கட்சியின் யாப்புக்குள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள் இருந்து கொண்டே வெளியில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களே நியாயமாகத் தெரிகிறதா? பொது வேட்பாளராகப் போட்டியிட அரியநேத்திரன் தனது கட்சியிடம் கேட்டாரா? கட்சிதான் அனுமதித்ததா? ஒரு கட்சியின் யாப்புக்குள் கட்டுப்படாதவர்கள் எப்படி தமிழினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவார்கள்?
  7. தமிழரசுக் கட்சிதான் கூறுகிறது. அப்படியாயின் அந்தக் கட்சிக்குள் அரியம் இல்லையா?
  8. நிலாந்தன் பார்க்க😅 வேண்டிய வீடியோ. ஒருவேளை, “ஜெயலலிதா எங்கே?கூட்டிக் கொண்டு வா” என்று அரியம் சொன்னால் நிலாந்தன் யாரைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்?
  9. கொஞ்சம் யதார்த்தமாக யோசித்துப் பாருங்கள் விசுகு. இலங்கையின் அதியுயர் நிலையில் இருக்கும் ஜனாதிபதி வீடு தேடி வருகிறார். அது மாவைக்கு கிடைத்த மரியாதைதானே.அவரை வரவேற்பதுதானே தமிழர் பண்பு. வந்தவருக்கும் தெரியும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தனக்கு இல்லை என்று. ஆனாலும் ஒரு முயற்சி செய்ய அவர் முனைகிறார். இவரும் வரவேற்று கலந்துரையாடி விட்டு, மரியாதை நிமித்தம் அறிக்கை ஒன்றை விடுகிறார். அவ்வளவுதான் இந்த விடயம். இங்கே பெரிது படுத்த வேண்டியது எதுவுமே இல்லை. குறைகள் பிடிப்பது என்றால் எல்லோரிடமும் அது இருப்பதை பார்க்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்பதே உங்களைப் போன்று எனக்கும் இருக்கும் விருப்பம். தேவைகள் கருதி எங்களிடமும் மாற்றம் வரவேண்டும். அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப நாமும் பயணம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இந்திய இராணுவத்தை வெளியே அனுப்புவதற்கு, எவருடன் சண்டையிட்டோமோ அவர்களுடனேயே பேசி நண்பர்களாகி ஆயுதம் பெற்று இந்திய இராணுவத்தை வெளியேற்ற வகை செய்து மீண்டும் யுத்தத்தை மேற்கொண்டோமே அது அரசியல். நீங்கள் நீண்டகாலம் ஒரு அமைப்பில் இருப்பதால், அதன்மேல் உள்ள ஈடுபாட்டால் சிலவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவர்களுடைய காலம் இனி வரப் போவது இல்லை. இன்றைய தளம் வேறு. இப்பொழுது நடப்பது ஆயுதப் போராட்டமல்ல. அரசியல் போராட்டம்.
  10. அரியநேத்திரனை, செந்திலோடு ஒப்பிட்டிருந்தால் ஓரளவுக்காவது ஏற்றுக் கொண்டிருக்கலாம். நிலாந்தனுக்கும் நகைச்சுவை நன்றாக வருகிறது
  11. வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம் கொண்ட தந்தை துப்பாக்கியை எடுத்து நான்கு முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் மகளின் தொடையிலும் ஒரு குண்டு அவளின் தோள்பட்டையிலும் பாய்ந்திருக்கின்றன. காயங்களுடன் அலறிக் கொண்டு ஓடிய மகளை அயலவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மகளின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை அறிவித்திருக்கிறது. தந்தையிடம் துப்பாக்கி பாவிப்பதற்கான அனுமதி இருக்கிறது. இந்த வயதிலும் குறி தவறாமல் சுடும் அவரை எப்படி வீட்டுக்குள்ளே போய் கைது செய்வது என்று தெரியாமல் பொலிஸார் ஒன்றரை மணி நேரம் வீட்டைச் சுற்றி நின்றிருக்கிறார்கள். தந்தை தானாக வெளியே வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு வருமா அல்லது மனநல மருத்துவ மனையில் அவரை அனுமதிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். பேசாமல் பெரிசு முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம். 96 வயதில் இந்த வீரம் அதிகம்தான். இந்தச் செய்தியை இங்கே வாசித்தேன் (யேர்மன் மொழி) https://www.n-tv.de/panorama/96-Jaehriger-schiesst-auf-Tochter-nach-Streit-um-Pflegeheim-article25209186.html
  12. இன்று (05.09.2024) காலை முதல் முனிச் (Munich) நகரத்தில் ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கை ஒன்று நடந்து வருகிறது என யேர்மனி தென் மேற்கு ஊடகம் அறிவித்திருக்கிறது. இன்று காலை 9 மணிக்குப் பிறகு, இஸ்ரேலிய துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் நாசி ஆவண மையத்திற்கு அருகிலும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. முனிச்சில் உள்ள நாசி ஆவண மையம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள் இருக்கும் இடம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். இந்தப் பகுதியிலேயே ஆயுததாரி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.பாதுகாப்பு நிறைந்த இடமானாதால் அங்கிருந்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், துப்பாக்கிதாரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதம் ஏந்திய நபரின் அடையாளம் இன்னும் வெளிவரவில்லை. பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவங்களை யாராவது புகைப்படங்கள், அல்லது ஒலி,ஒளி பதிவுகள் எடுத்திருந்தால் அவற்றை புலனாய்வாய்துறையின் இணையத்தளத்தினூடாக அறியத்தரலாம் என புலானாய்வுத்துறை கேட்டிருக்கிறது. செப்டம்பர் 5, 1972 இல், முனிச்சில், பாலஸ்தீனிய தீவிரவாதிகள் ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெற வந்திருந்த இரண்டு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் ஒன்பது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பணயக்கைதிகளும், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஐந்து கொலையாளிகளும் இறந்திருந்தார்கள். அவர்களுக்கான நினைவேந்தல் இருந்ததால் இஸ்ரேலிய தூதகரம் இன்று காலையில் திறக்கப்படவில்லை. அதனால் ஒரு அனர்த்தம் தவிர்க்கப் பட்டிருக்கிறது. https://x.com/RonenSteinke/status/1831597456032739359? https://www.n-tv.de/politik/Muenchen-Polizei-schiesst-bewaffnete-Person-nieder-article25206386.html
  13. ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html
  14. என் வீட்டிலே எனக்குத் தெரியாமல் Dr.T.கோபிசங்கர் கமரா மாட்டி இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. கடைசி வரிகளை வாசிக்கும் போது ‘ பார் மகளே பார்’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.