Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்கிறது. இந்தப் பண்ணைத் தோட்டத்தில்தான், கிடைத்த எந்த வேலையையும் செய்யக்கூடிய தொழிலாளியான மேட்யூஸ், தனது வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில் பயங்கரமான சூழ்நிலையில் ஒரு பெண் இருந்தது, அவனது பெற்றொருக்கும் தெரியவில்லை என்கிறார்கள். Gaika கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தவள்தான் மால்கோர்ஸற்றா (Małgorzata). 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்லைன் மூலமாக மேட்யூஸ்வைச் சந்தித்தபோது அவளுக்கு வயது 25. இருவரும் சில மாதங்கள் தொடர்பில் இருந்தார்கள். ஒருநாள் மால்கோர்ஸற்றாவை அந்த அறையில் வைத்து மேட்யூஸ் பூட்டிவிட்டான். அந்த நாள் எப்போது என்பது அவளுக்கு நினைவில் இல்லை. கடைசிவரை தான் எங்கே சிறைப்பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் கர்ப்பமாகி பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டிய தருணத்தில் மருத்துவ மனைக்கு அவளைக் கூட்டிச் சென்ற போதும் பல அச்சுறுத்ததல்களை விடுத்தே அவளை மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறான். யாருடனும் கதைப்பதற்கு அவளுக்கு மேட்யூஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. பிறந்த குழந்தையையும் வைத்தியசாலையில் தத்துக் கொடுத்துவிட்டு அவளை அழைத்து வந்துவிட்டான். “பல்வேறு பொருள்களைக் கொண்டு மால்கோர்ஸற்றாவின் முகத்திலும் உடலிலும் மேட்யூஸ் தாக்கியிருக்கிறார். அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவளை பட்டினி போட்டிருக்கிறார், சித்திரவதைகள் செய்து வன் புணர்வு செய்திருக்கிறார். மிகவும் மோசமாக பலமைறை தாக்கப்பட்டிருக்கிறாள். கடந்த வாரம் மேட்யூஸ் தாக்கியதில் மால்கோர்ஸற்றா கைகள் மற்றும் கால்கள் உடைந்த நிலையில் அவள் இறந்துவிடுவாளோ என்ற பயத்தில் நோவா சோலில்( Nowa Sól )உள்ள மருத்துவமனைக்கு 27ந் திகதி மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறார்” என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். நோவா சொல் மருத்துவமனையில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மருத்துவத் தாதிக்கு தனது நிலையை மால்கோர்ஸற்றா சொல்ல, கடந்த புதன் கிழமை (28.08.2024) மேட்யூஸ் கைது செய்யப்பட்டான். “எனது மகன் ஏறக்குறைய ஒரு துறவி போலவே வாழ்ந்தவன். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் இப்படி ஒரு சம்பவத்தைச் செய்திருக்க மாட்டான். அத்தோடு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கட்டிடத்தில் ஒரு பெண் அடைக்கப் பட்டிருந்ததையோ, சித்திரவதை செய்யப்பட்டதையோ நாங்கள் பார்க்கவில்லை” என மேட்யூஸ்வின் தாய் பத்திரிகைகள் கேள்வி கேட்ட போது சொல்லியிருக்கிறார். இப்படியான குற்றச் செயலுக்கு 25 வருட சிறைத்தண்டணை கிடைக்கலாம் என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். போலந்துப் பத்திரிகையில் வந்த செய்தி இந்தப் பக்கத்தில் இருக்கிறது. மொழி தெரியாவிட்டாலும் படங்களைப் பார்க்கலாம். https://myglogow.pl/pl/11_dzieje-sie/160049_zwyrodnialec-wiezil-kobiete-cztery-lata-byla-torturowana-i-gwalcona.html
  2. சின்னம்மையைத்தான் கொப்பளிப்பான்/கொப்புளிப்பான் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். ஊரில் யாருக்காவது கொப்பளிப்பான் வந்தால் ஒரு பனைக் கள்ளும், அரைக்கீரையும் முக்கியமான மருந்துகள். கொப்பளிப்பானை அம்மாள் வருத்தம் என்று சொல்வார்கள். இது குரங்குஅம்மை என்பதால் விஸ்ணுவும் சேர்த்தியோ தெரியவில்லை.
  3. ஹிளவ்டியாவின் தந்தை பயிர்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். தான் இறந்து அடக்கம் செய்யப்படும் கல்லறையைச் சுற்றி எப்போதும் பச்சை பசேல் என காய் கறி மரங்கள் இருக்க வேண்டும், குறிப்பாக தக்காளி மரங்கள் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அவளது தந்தை இறந்த பின்னர் அவளால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், யேர்மனியில் கல்லறைகளைச் சுற்றி காய்கறி மரங்கள் நடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் காய் கறிகள், பழ மரங்கள் நடுவதை கல்லறைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இறந்தவர் அடக்கம் செய்யப்படும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். இறந்தவர் கல்லறையில் உறங்குகிறார். பயிர்ச் செய்கைக்காக, மண்வெட்டி கொண்டு நிலத்தைத் தோண்டுவது அவரது அமைதிக்கு ஊறு விளைவிக்கும். கல்லறைகளின் பாதுகாப்புக் கருதியும், இறந்தவர் அமைதியாக உறங்குகிறார் என்ற நினைப்பைக் கருத்தில் கொண்டும், ஒருவர் வளர்க்கும் பயிரானது அடுத்தவரது கல்லறைக்கு இடைஞ்சலைத் தரும் என்பதாலும் பயிர்ச் செய்கையை அனுமதிக்க முடியாது என யேர்மன் கல்லறைத்தோட்டக்காரச் சங்கத் தலைவர் மைக்கல் பலன்பெர்ஹர் (57) அறிவித்திருக்கிறார். யேர்மனியில் என்னால் முடியாவிட்டாலும் ஒஸ்ரியாவில், வியன்னாவில் என் தந்தையின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது. வியன்னாவில் எனது தந்தையின் கல்லறையில் தக்காளிச் செடிகளை வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறாள் ஹிளவ்டியா. இறந்தவர்கள் தங்கள் கல்லறைகளில் அமைதியாக உறங்க வியன்னாவில் முடியாதா? என்றால், அவர்கள் நாட்டுச் சட்டம் அப்படி.
  4. யேர்மனி, சோலிங்கனில் கடந்த வாரம் ஒருவர் கண்மூடித்தனமாக பொது மக்கள் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைத் தந்திருந்தாலும் நேற்று நடந்த சம்பவம் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் உயிராபத்து இருக்கும் பட்சத்தில் அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று யேர்மனியில் நடைமுறை ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட பல புகலிடக் கோரிக்கையாளர்கள் யேர்மனியில் தொடர்ந்து தங்கியிருக்க வாய்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்த நடைமுறையில்தான் தற்சமயம் ஒரு மாறுதல் வந்திருக்கிறது. கடந்த வாரம் சோலிங்கன் நகரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவரது புகலிடக் கோரிக்கை கடந்த வருடமே நிராகரிக்கப் பட்டு அவரது நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் நடைமுறையில் இருந்த சில அனுகூலமான விடயங்களால் அவரை அவரது நாட்டுக்கு யேர்மனிய அரசு திருப்பி அனுப்பவில்லை. நாடு கடத்தப்பட வேண்டிய அவரால், கடந்த வாரம் நடாத்தப்பட்ட அனர்த்தமானது யேர்மனிய அரசு மீது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “வெளி நாட்டவரைத் திருப்பி அனுப்பு” என்ற குரல்கள் இப்பொழுது இங்கு பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான AFD (Alternative for Germany) கட்சியின் வாக்கு வீதம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் Sachsen, Thueringen ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல்களில் AFDயின் வெற்றி ஏற்கெனவே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படியான ஒரு நிலையில்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 பேர் நேற்று, யேர்மனி, லைப்ஸிக் விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். இந்த 28 பேரும் பல விதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதுடன் யேர்மனிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என உள்நாட்டு அமைச்சு அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் பொறுப்பேற்றதன் பின்னர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் யேர்மனியின் முதல் நிகழ்வு இதுவாகும். திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளருக்கு அவர்களது நாட்டில் உயிராபத்து இருந்தாலும், அவர்களால் யேர்மனிய மக்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்ற நிலையிலேயே அவர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. யேர்மனிய அரசின் இந்த நடவடிக்கை தொடருமாயின், புகலிடக் கோரிக்கையாளரின் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும், இந்த நடைமுறையை வரவேற்பதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுக் கிடைத்த செய்தி ஆறுதலைத் தந்திருந்தாலும் இன்று விடிந்த போது, “Ravensburg நகரில் 31 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் தாக்கியதில் 25 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்” என ஒரு செய்தியும், “Siegen நகரில் நடக்கும் விழாவுக்குப் பயணித்த பேரூந்தில், 32 வயதான யேர்மன் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்” என்ற செய்தியும் வந்திருக்கிறது.
  5. ‘மூன்று பேர் ஒரு வேலைத் தளத்தில் இருந்தால், ஒருவர் தனிமைப் படுத்தப் பட்டு இருவர் குழுவாக இருப்பார்கள்’ என யேர்மனியில் சொல்வார்கள். ஒற்றைமையின்மை எல்லா நாட்டு இனத்திலும் இருக்கிறது.ஆனால் நாங்கள் எதிலும் தீவிரமாக இருப்போம்.
  6. ‘யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் கூட்டம் என்ற அரசியல்வாதிகளின் நிலை மாற வேண்டும். ஆயுதப் போராட்ட நேரத்திலும் அதற்கு முன்னரும் ஏன் இப்பொழுதும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பது அவர்கள்தான். அரசியல்வாதிகள் எப்படியோ தங்களது சொகுசான வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள். மக்களை சிந்திக்க விடுங்கள். சேர்ந்திருப்பதோ, பிரிந்திருப்பதோ, பேசாமல் இருப்பதோ எது சரியென அவர்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் இருப்புக்காக குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதிகளைவிட விசமானவர்கள்.
  7. ஆஹா, அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பெரியண்ணாவுக்கும் சர்வதேச ஜனநாயகவாதிகளுக்கும் தமிழர்களது பலத்தையும் ஒற்றுமையையும் காட்ட அரிதான சந்தர்ப்பம் கிடைத்துருக்கிறது. எல்லோரும் ஒன்றாக, குறிப்பாக பொது வேட்பாளர், அவரை முன் மொழிந்த முதிர்ந்த பழுத்த அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் வித்தகர் நிலாந்தன் எல்லோரும் வாருங்கள். 30ந் திகதி வீதியில் இறங்கிப் போராட ஒன்றாகத் திரண்டு வாருங்கள். எந்த மக்களை ஒற்றுமையாக ஓரணியில் திரளச் சொன்னீர்களோ அவர்களே உங்களை அழைக்கிறார்கள். வாருங்கள். வந்து மக்களுக்காகப் போராடுங்கள். ஒருவேளை நீங்கள் வருவீர்களானால், 50 வீத வாக்குகள் கிடைக்கும் என்று சிவசக்தி ஆனந்தன் சொன்ன மாதிரி இல்லாமல் 80 வீதமான வாக்குகளோ அதற்கு மேலான வாக்குகள் கூடக் கிடைக்க வாய்ப்பிருக்கு. வெல்க தமிழ் என்று முழங்கு சங்கே
  8. யேர்மனியில் நான் வசிக்கும் நகரில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நூறன் பேர்க் நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்த ஊரவன் ஒருவர் ஊருக்குப் போவதாக சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தான். அப்பொழுது நாட்டில் நிலமைகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை என்பதால் நான் போவதை தவிர்த்திருந்தேன். ஊருக்குப் போய் மூக்கு முட்ட கள்ளு குடிக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. ஊருக்குப் போய் திரும்பி வந்து அலைபேசியில் தொடர்பு கொண்டான். ஊர் விடையங்களைப் பற்றி நிறையக் கதைத்தான். கள்ளு குடித்ததைப் பற்றி ஒரு வரி கூட அவன் சொல்லவில்லை. ஆனால் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “கள்ளுக் குடிக்கலாம் எண்டு ஆசையாத்தான் இருந்தது. கூட வாறதுக்கு இரண்டு மூன்று பேர் தயாராகவும் இருந்தினம். ஆனால் எனக்குள்ளை ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. கள்ளுக் குடிச்சு வெறி ஏறினாப் போலே, ‘வெளிநாட்டுக்குப் போயிற்று வந்தால் பெரிய நினைப்பு. நாங்களெல்லாம் அவரிட்டை கள்ளுக் குடிக்க ஊம்போணுமோ?’ எண்டு எனக்கு அவங்கள் இரண்டு சாத்து சாத்தினால் என்ன செய்யிறது எண்டு பயம் வந்தது. எதுக்கு வில்லங்கம் எண்டு நான் கள்ளுக் குடிக்கப் போக இல்லை” இந்த நினைவை மீட்ட வைத்தது இந்தச் செய்தி
  9. யேர்மனியில், பன்றி சேமிப்பின் ஒரு அடையாளம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.