Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. இந்தப் பாடலுக்கு நடனமாடுபவர்கள், எம்.என்.நம்பியாரும், புஸ்பலதாவும். கட்டிலில் படுத்திருந்து எழுந்து ஓடுபவர்தான் ராஜசுலோசனா. ராஜசுலோசனா நல்ல நடிகை மட்டுமல்ல சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர். திருமால் பெருமை படத்தில், “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…” பாடலுக்கு பத்மினியுடன் சேர்ந்து அழகாக ஆடியிருப்பார். குலேபகாவலியில் வரும், “ பாசமும் நேசமும் இரத்த..” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. நல்லவன் வால்வான் படத்தில் “குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குது..” பாடலில் எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கிணற்றடியில் போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது
  2. யேர்மனியின் இன்றைய பொருளாதாரம் வலுவானதுதான். உற்பத்தியும் ஏற்றுமதியும் உறுதியாகத்தான் இருக்கின்றன. யேர்மனியின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்மையாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றது. முக்கிய உற்பத்தித்துறைகள் என்று பார்த்தால், இயந்திரங்கள், வாகனங்கள் (மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎன்டபிள்யூ, பொல்க்ஸ்வாகன்), இரசாயனப் பொருட்கள், அத்துடன் மின்னணு சாதனங்கள் என பல துறைகள் இருக்கின்றன. இப்பொழுதும் யேர்மனிய உற்பத்திப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு இருக்கின்றது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, சுத்தமான ஆற்றல் கூடிய பசுமைத் தொழில்நுட்பங்களிலும் யேர்மனி இப்பொழுது முக்கிய முதலீடுகளை செய்து கொண்டிருக்கிறது. யேர்மனியின் இப்பொழுது இருக்கும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் சில முக்கிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலை இன்னும் இருப்பதாகவே கருதுகிறேன். யேர்மனியில் மட்டுமல்ல உலகமெங்குமே மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துத்தான் இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், பென்சனுக்கு வழங்கப்படும் தொகை பெரிதாகிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் பென்சன் வயதை உயர்த்தும் திட்டங்கள் இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் யேர்மனிக்கு வந்த பொழுது பென்சன் வயது 60. ஆனாலும், வேண்டுமானால் 58 வயதில் பென்சன் எடுக்க அப்பொழுது வழி இருந்தது.ஆனால் எனக்கு பென்சன் எடுக்க அனுமதிக்கப்பட்ட பொழுது எனது வயது 66 வருடங்களும் 8 மாதங்களும் இருந்தது. இப்பொழுது பென்சன் எடுப்பதாயின் வயதெல்லை 67 வருடங்கள் அல்லது 45 வருடங்கள் கண்டிப்பாக வேலை செய்திருக்க வேண்டும். யேர்மனி உலகில் முன்னணி கார் உற்பத்தி நாடாக இருந்தாலும், அண்மையில் எலக்ட்ரிக் வாகன மாற்றம் மற்றும் சீனாவின் போட்டி காரணமாக பாரம்பரிய கார் நிறுவனங்கள் உற்பத்தி வீழ்ச்சியை சந்திக்கின்றன என்பது உண்மைதான். வேலைவாய்ப்பு இல்லாமல் மூன்று மில்லியனுக்கு மேலாக மக்கள் இருந்தாலும், இது பெரும்பாலும் வேலைக்கான குறைந்த தகுதியுடையோர் மற்றும் குடியுரிமை பெற்ற வெளிநாட்டில் இருந்து வந்து குடியிருப்பவர்களிடையே அதிகமாகக்காணப்படுகிறது. உயர் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு இன்றும் ஆட்கள் தேவை அதிகமாகவே இருக்கின்றது. யேர்மனியில் மிகப் பெரிய சவாலாக இருப்பது இதுவே, மருத்துவம், தொழில்நுட்பம், ஹோட்டல்/சமையல், கட்டிட வேலை போன்ற துறைகளிலும் ஆட்கள் குறைவாக உள்ளனர். இதனை சரி செய்ய, வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை வரவழைக்கும் புதிய குடியேற்றக் கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்திய ரஸ்யாவின் நடவடிக்கைகள், யேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.பெருமளவு தொகையை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்க வேண்டிய தேவை யேர்மனி ஏற்படிருக்கின்றது. அதாவது, நாட்டின் உள்நாட்டுத் தேவைகளுக்கும் மேலான ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய தேவை. அத்தோடு, உக்ரைன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அளிக்கப்படும் பெரும் தொகை, உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிக்கான செலவுகள் என பெரும் தொகையை யேர்மனி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களூடாக யேர்மனி, மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆகவேதான் அகதிகளுக்கு புகழிடம் தந்து பாதுகாக்கிறது. அகதிகளுக்கு உதவுவது என்பது அவர்களின் பெரும்பாலான மனதையும், உண்மை உணர்ந்த அவர்களின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. யேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் (1951) ஜெனிவா உடன்படிக்கைகளில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.இந்த உடன்படிக்கை என்பது அகதிகளை அவதிப்படுத்துவதைத் தடுப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பு, வாழும் இடத்தை வழங்குவது, அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் வாழ்வாதாரத்தைக் கவனித்துக் கொள்வது போன்றவற்றுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச சட்டமாகும். யேர்மனி, சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.இன்று கோவில்களைக் கட்டுவது, வீதிகளை இடை மறித்து கடவுளை தேரில் வைத்து இழுப்பதுமான செயற்பாடுகள், தெருவெல்லாம் தேங்காய் உடைத்து காவடி எடுத்து ஆடுவது, டோர்ட்மன்ட் போன்ற நகரங்களில் தெருவிழாக்கள் செய்வதும் நான் மேற் குறிப்பிட்ட நல்லிணக்கமும், சுதந்திரம், சமத்துவமும்தான் காரணம். பொதுவாக, அரசியல் தஞ்சம் என்பதை தள்ளி வைத்து இட்டு மனிதாபிமான செயற்பாடுகளாலேயே எங்களில் பலருக்கு யேர்மனியில் வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சில வருடங்களாக வெளிநாட்டவர்களால் ஏற்படும் வன்முறைகளால்தான் AFD போன்ற வலதுசாரிகள் கட்சி வளர்ந்து வருகிறதே தவிர, பொருளாதார வீழ்ச்சி அதன் வளர்ச்சிக்குக் காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாம் உலகக் போரின் பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா நாடுகள் தங்கள் படைகளை நிறுத்தி அழுத்தம் கொடுத்த பொழுதும், யேர்மனி பொருளாதார வளர்ச்சியில் உச்சம் கண்ட நாடு மட்டுமல்ல, உள்கட்டமைப்பையும் திறமையாக அமைத்திருந்தது. இன்று யேர்மனி காணும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சீர் செய்யப்படும். நம்பிக்கையிருக்கிறது. YouTube இன் மூலம் சம்பாதிக்கலாம் என்று அவனவன் சொல்வதெல்லாம் தாங்கள் பணம் பார்ப்பதற்கேயன்றி வேறொன்றுமில்லை. ‘தமிழ் பொக்கிசம் சொல்லும் தகவல்களை இந்தியர்கள்கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இப்பொழுது நான்கு இந்தியத் தமிழர்கள் புதிதாக வீடு வாங்கிக் குடியேறியிருக்கிறார்கள்’
  3. பயணத்தில் வந்த இரண்டு கதைகளுமே சிறப்பு. நீங்கள் மண் குவியல் பற்றிக் குறிப்பிட்ட பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது, வல்லிபுரக் கோவில் மண் குவியல்தான். அன்று ஏழு பெரிய மண்குவியல்களைத் தாண்டித்தான் கோவிலில் இருந்து கடற்கரைக்கு (கடல் தீர்த்தம்) போக முடியும். இப்பொழுது அங்கே அவை இருக்காது. கள்ள மணல் அள்ளி மணல் மலையையே அழித்திருப்பார்கள். இப்பொழுது இங்கே என்ன நடக்கப் போகிறதோ?
  4. உண்மைதான் அவருக்கு தென்னகத்து ஜேமஸ்போண்ட் என்ற பட்டமும் இருக்கிறது. இவரது படங்களில் நல்ல பாடல்களும் இருக்கிறது. குறிப்பாக, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி நீ எங்கே என் நினைவுகள் அங்கே அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் தோழ்வி நிலையென நினைத்தால் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்… என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்
  5. ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார். சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல், “இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..” இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”
  6. அரசனுக்கு ஏது பணம்? எல்லாம் பொது மக்களிடம் வரியாக வசூலித்ததுதானே.
  7. கண்ணதாசனும் ,வாலியும் இன்று இல்லை. வைரன், சின்னதால் பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமில்லை. சூடு கண்ட பூனை திரும்ப வராது. கவிதை அருமை
  8. எம்ஜிஆர் நடித்த படங்களில் எப்போதும் ஒரு இனிமையான மெலோடி பாடல் இடம்பெறும். எம்ஜிஆரின் இந்தப் பாணியை இயக்குனர் எஸ்.சங்கரும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். எம்ஜிஆர் படங்களின் மெலோடி பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ் போன்ற மென்மையான குரலுடைய பாடகர்களை அவர் பயன்படுத்தினார். சில சமயங்களில் ரி.எம்.எஸ். பாடியபோது, பெண் குரலுக்கு எஸ்.ஜானகியை இணைத்திருப்பார். அறுபதுகளில் எம்ஜிஆர் பட பிரபல மெலோடி பாடல்கள் என, குலேபகாவலி – ஏ.எம்.ராஜா& ஜிக்கி பாடிய "மயக்கும் மாலை பொழுதே நீ போ..." மஹாதேவி – ஏ.எம்.ராஜா & சுசீலா பாடிய "கண்மூடும் வேளையிலும் கலை என்ன…" திருடாதே – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம்..." பாசம் – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "பால் வண்ணம் பருவம் கண்டு..." என்று பலதை சொல்லிக் கொள்ளலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் வர்ணத்திரைப்படமாக வெளியான படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ஆகும். அந்தப் படத்தின் "மாசிலா உண்மைக் காதலே" பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வண்ணப் படத்தின் பாடல் காட்சி இங்கே கறுப்பு வெள்ளையில் வந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த இந்தப் பாடல், அன்றைய காதலர்களை கட்டிப்போட்ட இனிமையான மெலோடியாக இருந்தது.
  9. துணையோடு போனதால் 20 யூரோ போச்சு. ஆனால் எழுதுவதற்கு ஒன்று கிடைத்தது.
  10. அவகேடோ(avocado) என்ற சொல் Nahuatl மொழியில் ahuacatl என்பதிலிருந்து உருவானது, அதன் அர்த்தம் ஆண் விதைப்பை. அடுத்தமுறை அவகேடோ வாங்கும் போது உங்கள் நினைவுக்கு வரும்
  11. அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
  12. “புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆
  13. "ஆடவாங்க அண்ணாச்சி..." "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில் ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா. எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது. பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.