Everything posted by Kavi arunasalam
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.
சப்பறம் சம்பவத்தை நம்புறம்
-
ஒரு சோறு
ஆக, உங்களுக்கு அந்த வீட்டின் விலை தெரிந்திருக்கிறது. சிறீலங்கன் என்றால் சும்மாவா? புலம்பெயர் தமிழர்களிடம் இந்த விவகாரம் -அது அடுத்தவன் விவகாரத்தை அறிந்து கொள்ளும் சுபாவம் அதிகம் என நினைக்கிறேன். “எங்கை வேலை செய்யிறீங்கள்? என்ன சம்பளம்? கார் நல்ல விலை வரும் போலை. எவ்வளவுக்கு வாங்கினீங்கள்?……. “ ம்… வயது வந்தவர்கள், பார்வையில் குறைபாடு ஏதும் இருந்திருக்கலாம். அல்லது வீட்டின் விலையை அறிந்து கொள்ள சாயம் பூசிய தலையில் குளிராக இருக்கட்டும் என்றும் வைத்திருக்கலாம். எது எப்படியோ, “கூட்டச் சொல்லிவிட்டால் அங்கே என்ன கதை?” என்ற குரல் வருமுன் மல்லாக்காகப் படுத்திருக்கும் தும்புத்தடியை போய் நிமிர்த்தி எடுத்து வேலையை ஆரம்பியுங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடைசி பஸ்ஸையும் பிடிக்கேலாமல் போட்டுது. அதனாலேதான் லேட். பிறந்தநாள் வாழ்த்து குமாரசாமி. நலமோடு மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்.- கருத்துப்படம் 18.08.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேவிகாவின் நடையைப் பார்த்தீர்களா Suvy? இடை இருக்கிறதா? அல்லது இல்லையா? “பிரமீளா என்ற தேவிகா எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கின்றார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று ஒரு தடவை கண்ணதாசன் பொது வெளியில் சொல்லப் போக, ஒரு கிசுகிசு அப்பொழுது ஓட ஆரம்பித்திருந்தது.- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
மறுபதற்கில்லை விசுகு. இதை மேலே நானும் குறிப்பிட்டிருக்கிறேன். “ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக்காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன்என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப்பிரித்துப் பார்க்கிறோம்” சத்தியராஜ் ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி. ஆளும் கட்சி எதுவானாலும் ‘ஜால்ரா’ அடிக்கும் ஆள்தான் அவர் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இப்பொழுது தனது மகளையும் திமுகவில் இணைத்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல். அவரது அரசியல் எனக்குத் தேவையில்லாதது. முடியுமானால், ஈழத் தமிழ் கடலில் அத்துமீறி நுளைந்து மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தைஅழிக்காதீர்கள்” என்று தமிழக மீனவர்களுக்குச் சொல்லட்டும்- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
பெரிதாக வரவில்லை என்றால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்று அர்த்தம். போருக்கு முன்னரும், போர் நடந்த காலத்திலும், போர் முடிந்து ஒரு தசாப்த காலத்திலும் நடந்தவை இப்பொழுது இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது சிங்கம். தமிழர் பகுதிகளில் இருந்து சிங்களக் கட்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்புகிற காலத்தில் இருக்கிறோம். கனக்க ஏன்? தமிழ் சிறி கூட சிங்கள சிறிலங்கா நாட்டுக்குப் போய் ஆப்பம்,பொல் சம்பல்,கிரிபத் என நன்றாக சாப்பிட்டு அனுபவித்துவிட்டு வரும் போது கடுகு முதல் கட்டாப்பாரை கருவாடுவரை கட்டிக் கொண்டு வரவில்லையா? அவ்வப்போது பேரினவாத த்துக்கு எதிராக ஏதாவது வடிவமைக்கிறேன். சில வேளை இந்த இணைப்பில் உங்களுக்கு ஏதாவது தட்டுப்படலாம். https://yarl.com/forum3/gallery/album/204-கிறுக்கல்கள்/ பார்க்கவில்லை. சசிகுமார் நடித்த Freedom திரைப்படம் 10ம் திகதி திரைக்கு வருகிறது. ஈழத்தமிழர் சார்ந்த கதை. எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து அவற்றை எதிர்த்து கதையில் நாயகன் போராடினாலும், இந்திய,தமிழ்நாட்டுப் பொலிஸாரை நல்லவர்களாகக் காட்டி படம் முடிவடையும். இறுதியாக, சத்தியராஜ் என்ற நடிகர் அப்பழுக்கற்ற 100 சதவீத சந்தர்ப்பவாதி இது என் கருத்து. நல்லது கந்தப்பு,(முருகப்) பெருமாள் (எல்லாம் முருகனைச் சார்ந்த பெயர்களாகவே இருக்கிறது) இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு என் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் மேற்கொண்டு என்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை. என் வழியில் என் பயணம் இருக்கும்.- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
பெருமாள், ‘குறை நினைக்க வேண்டாம்’ என்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாதது. எம்ஜிஆர் ஆட்சியில் அவரது பக்தன். கருணாநிதியை விட்டு வைகோ வெளியேற வைகோவின் நண்பன்.( காவல்நிலையத்தில் ஒருவர் தன் பெயர் கோபாலசாமி என்று சொல்லும்போது அன்போடு மகிழ்ச்சியாக அமாவாசை தழுவிக் கொள்ளும் காட்சி ஒன்று புரட்டுத் தமிழன் படத்தில் இருக்கிறது). அம்மா ஆட்சிக்கு வந்தால் அன்பான பிள்ளை. தன் பிள்ளையை அம்மாவின் விழாவில் ஆடவிட்ட நாகராஐசோழன். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு ஐயா. இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள் மேடைகளிலும் பார்த்தாயிற்று. தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே உங்கள் உத்தரவு” என கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன். சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால், அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே? செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல். ஆனாலும் ஒன்று உருத்துகிறதே? "எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்? சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும். அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும். தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா? ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே “நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே… உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா… கண்ணதாசன் தன்னை வெளிக் காட்டிய வரிகள்- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
- கருத்துப்படம் 07.07.2025
From the album: கிறுக்கல்கள்
- புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன்
பொதுவெளியில் ஒருவர் துப்புவது, அல்லது சிறுநீர் கழிப்பது போன்றவை, சிலருக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. இது சும்மா ஒரு நாள் வந்த பழக்கம் இல்லை. பல வருடங்களாகத் தொடரும் ஒரு வழக்கம்தான். 2009க்குப் பிறகு யேர்மனிக்குப் வந்த சிலர், வெற்றிலை போடுவதையும், பொதுவெளியில் துப்புவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு முறை, ஒருவர் நடைபாதையில் துப்புவதைக் கண்டேன். அவரிடம் நேராகப் போய், "தம்பி, தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்." என்று சொன்னேன். உடனடியாக அவரிடம் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது,“நீ என்ன யேர்மனிய போலீஸா?” அத்தோடு போயிருந்தாலும் பரவாயில்லை. அவர் சண்டைக்குத் தயாராக நின்றார். சேர்ட்டின் கை மடிப்பை மேலே இழுத்துவிட்டு ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்ற நிலையில் இருந்தார். இவ்விதமான விஷயங்களை சும்மா கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அரசியலில் ஓர் நிலை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலர் – வேலை இல்லாமல் வேலன் சாமியாக இருக்கிறவர்களே இவற்றை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அது அவர்களுக்கே நல்ல பெயரைத் தரும். அதோடு நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
- கருத்துப்படம் 02.07.2025
From the album: கிறுக்கல்கள்
- அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.
இப்போது வரும் பல கட்டுரைகளில் எங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், சுமந்திரனின் பெயரை இழுத்துவிட்டு அவரை ஒரு தடவையாவது விமர்சிக்காமல் கட்டுரையாளர்கள் போக மாட்டார்கள். யாருடைய கட்டுக்குள்ளும் மனுசன் அகப்பட மாட்டார் என்பது புரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் ‘சங்கு’ பெற்ற துன்பம் நிலாந்தனுக்கும் இருக்கும். அதனால், சுமந்திரனை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அமைதியாக இருக்க மாட்டார். ஆனால், "தமிழ் கட்சிகள் ஒன்றாகவேண்டும்" என்று எழுதுவதை மட்டும் விட மாட்டார். ‘அணையா விளக்கு’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடந்த அவதூறு நிகழ்ச்சிக்கு சிறீதரன் தான் காரணம் என்று நேராகச் சொல்லவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளலாம். நிலாந்தனும் அந்த விஷயத்தை மெதுவாக தொட்டுச் செல்கிறார். உண்மையில் குற்றம் சுமந்திரனிடம் அல்ல, சிறீதரனிடம் தான். "அனைவரும் வருங்கள்" என்று சொல்லி, சமூக நலவாதிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சுமந்திரனை நேரடியாக எதிர்க்கத் தைரியம் இல்லாத,தனது கட்சிக்குள்ளேயே ஆளுமையை நிலைநாட்ட முடியாத ஒருவர், தனக்கு வேண்டாதவர்களை அவமதிக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான். சிறீதரன் ஒரு விசச் செடி என்பது சிந்தித்தால் புரியும். அவருக்கு அவரது அரசியல் நலன்தான் முக்கியம், பொதுநலமல்ல. ஒட்டுமொத்தமாகச் சொன்னால், அவருக்கு ஆசிரியர் வேலையும் சரியாக வந்திருக்காது. அவர் அரசியலில் இருப்பது தமிழருக்கும் நன்மை பயக்காது. அவர் பேசாமல் ஒரு வியாபாரியாகவே இருந்து விடலாம்.- எமது கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்; படகுகள் பறிமுதல் செய்யப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கருத்துப்படம் 30.06.2025
From the album: கிறுக்கல்கள்
- மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக பௌத்த மததலைவர்களின் உதவியை நாடினாரா? மறுக்கின்றார் நாமல்
- கருத்துப்படம் 30.06.2025
From the album: கிறுக்கல்கள்
- வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை. போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாது” என்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம். ஒரு கேள்வி எழுகிறது – போருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது. நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள் “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு” என யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும் யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது. கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும் அங்கிருப்பவர்களிடம் இல்லை. பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை- பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்
நானும் அதைச் செய்திருக்கின்றேன். அதற்கான அடையாள அட்டை எப்பொழுதும் எனது Purseக்குள் இருக்கும்.- இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்
- கருத்துப்படம் 28.06.2025
From the album: கிறுக்கல்கள்
- நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
நாடு அனுராவோடு வீடு உறவோடு - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.