Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 2
  2. மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை - ஜனாதிபதி Dec 6, 2025 - 08:03 PM அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்லாவை மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார். கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார். https://adaderanatamil.lk/news/cmiue951x02gao29nsdh4o4hm
  3. அனுபவ பேட்டர்களை கூட குழப்பும் 'கவண்' உத்தி பும்ராவுக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2025, 10:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அவர் ஓடும் விதம் மற்ற எல்லோரும் ஓடுவதை விடவும் வித்தியாசமானது. அவருடைய கடைசி கட்ட 'ஆக்‌ஷனும்' வித்தியாசமாக இருக்கும். நான் அவரது பந்துவீச்சை போதுமான அளவு எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு ஒத்துப்போக எனக்கு சில பந்துகள் அவகாசம் எடுக்கவே செய்கிறது" ஆஸ்திரேலிய பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ஜஸ்ப்ரித் பும்ராவையும் அவரது பந்துவீச்சு முறை பற்றியும் இப்படிச் சொல்லியிருந்தார். பும்ராவின் வேரியேஷன்கள், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தி, துல்லியம் மற்றும் சீரான செயல்பாடு அவரை நம்பர் 1 டெஸ்ட் பௌலராக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பும்ராவின் 'வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷனே' பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்டர்கள் பலரும் கூறியுள்ளனர். மெதுவாக ஓடிவந்து, முதுகை முன்னே அதிகமாகவும், பக்கவாட்டில் கொஞ்சமாகவும் வளைத்து, கைகளை முழுமையாக நீட்டி அவர் பந்துவீசும் முறை சற்றே தனித்துவமான ஒன்று. இது அதிகம் காயம் ஏற்படுத்தக்கூடிய முறை என்று ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தாலும், வெகுவிரைவிலேயே பும்ராவின் ஆயுதமாக மாறிவிட்டது. அந்த பந்துவீச்சு முறையை 'டீகோட்' செய்த பல முன்னணி வீரர்களும் வல்லுநர்களுமே, அதுவே அவருக்கு மிகப் பெரிய பலம் என்று கூறியிருக்கிறார்கள். விளம்பரம் பும்ராவின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 6), அந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை எப்படி அவரது பலமாக விளங்குகிறது என்று பார்ப்போம். குழப்பம் ஏற்படுத்தும் 'வேகம் இல்லாத சிறிய ரன் அப்' வழக்கமாக பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் ரன் அப் அதிக தூரம் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஓடிவரும் வேகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால், பும்ராவின் ரன் அப் குறுகிய தூரம் கொண்டது. அதேசமயம் மெதுவானதும் கூட. இது பேட்டர்களின் தயார் நிலையை சோதிப்பதோடு, அவர்களுக்கு எதிர்பாராத சவாலைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் இங்கிலாந்தின் இரு முன்னாள் கேப்டன்கள். இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின்போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பும்ராவின் பந்துவீச்சு பற்றி அலசியிருந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது '10 அடிக்கு ஒரு பாம்பு': உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா? தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி 'குளியலறையில் லைஃப் பாய் சோப்': பிரெஷ்னேவ் இந்தியா வந்த போது சோவியத் முன்வைத்த விசித்திரமான கோரிக்கைகள் 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்துவீசுவதற்கு முன்பான ரன் அப்பில், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் பும்ரா அதிக தூரமோ, அதிக வேகமாகவோ ஓடுவதில்லை அப்போது பேசிய நாசர் ஹுசைன், "நீங்கள் (ஒரு பேட்டராக) எப்போது நகரப் போகிறீர்கள் என்று யோசிக்கும் போது பும்ராவின் 'ஸ்டட்டரிங் ரன் அப்' (நின்று நின்று ஓடுவது போன்ற ரன் அப்) சிக்கலை ஏற்படுத்தும். அவர் ஓடி வருவதைப் பார்த்தால், அந்தப் பந்து ஏதோ காலிங்வுட் வீசும் வேகத்தில் (சற்றே மிதமான வேகத்தில்) வரும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஏன் சில சமயம் அவர் ஓடிவருவதைப் பாதியில் நிறுத்தப் போகிறாரா என்றுகூட நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியிருக்கப் போவதில்லை" என்று கூறினார். பெரும்பாலான பேட்டர்களுக்குமே 'டிரிகர் மூவ்மெண்ட்' என்பது இருக்கும். அதாவது, அவர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக தங்கள் ஸ்டான்ஸில் இருந்து சிறிய அளவு நகர்வார்கள். பந்துவீச்சாளர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது, அவர்கள் இந்த நகர்வைத் தொடங்குவார்கள். பெரும்பாலான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை வழக்கமான பாணியில் இருக்கும் என்பதால் அவர்களுக்குப் பிரச்னை இருக்காது. இந்த இடத்தில்தான், பும்ராவின் வித்தியாசமான ரன் அப், அவர்களைக் குழப்பிவிடும். அதனால்தான் ஸ்மித் போன்ற அனுபவ வீரருக்கே, ஒவ்வொரு முறையும் பும்ராவை எதிர்கொள்ளும்போது சில பந்துகள் அவகாசம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் மெதுவாக ஓடிவருவதைப் பார்த்துவிட்டு, பந்தை வேகமாக எதிர்கொள்வதும் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த ஆண்டு, டெய்லி மெயில் பத்திரிகையில் பும்ரா பற்றி எழுதியிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டுவர்ட் பிராட், "பும்ரா மிகவும் அமைதியாக, மெதுவாக, 'shuffle' செய்து ஓடும்போது அங்கே ஆற்றல் அதிகம் உண்டாகப்படுவதில்லை. அதனால் அங்கு பில்ட் அப்பே இல்லை. அப்படியிருக்கும் போது திடீரென்று பந்து பெரும் வேகத்தில் உங்களை நோக்கி வரும்போது பெரும் குழப்பம் ஏற்படுத்தும். இதுவே மற்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பாருங்கள், நல்ல வேகத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கிரீஸை நோக்கி ஓடிவருவார்கள். அப்போது ஒரு பேட்டருக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். பும்ரா விஷயத்தில் அது நேரெதிராக இருக்கிறது" என்றார். இதன்மூலம் உளவியல் ரீதியாக ஒரு பேட்டரை பும்ராவின் ரன் அப் குழப்புகிறது என்கிறார் பிராட். பும்ராவின் டெலிவரி ஸ்டிரைட் (Delivery Stride - பந்தை வீசுவதற்கு முன்பான கடைசி அடி) சிறிதாக இருப்பதால் அவரால் சமநிலையைத் தக்கவைக்க முடிகிறது, கட்டுப்பாட்டோடு இருக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இன்று நம்பர் 1 டெஸ்ட் பௌலராகத் திகழ்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா ஆற்றலை உருவாக்கும் பௌலிங் ஆக்‌ஷன் அதேசமயம், மெதுவாக ஓடிவரும் ஒருவரால் எப்படி பந்தை வேகமாக வீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது. "பெரும்பாலான பௌலர்கள் 60% ஆற்றலை அவர்களின் வேகமான ரன் அப் மூலம் உருவாக்குகிறார்கள். ஆனால், பும்ரா தான் ஓடிவருவதன் மூலம் 30% ஆற்றலையும், தன் பௌலிங் ஆக்‌ஷன் மூலம் 70% ஆற்றலையும் உருவாக்குகிறார்" என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளெமிங். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றில் இப்படிக் கூறியிருந்த ஃபிளெமிங், பும்ரா தன் ரன் அப்-ன் கடைசி சில அடிகளில் வேகத்தை உருவாக்குகிறார் என்றும் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி 7 ஸ்போர்ட் நிகழ்ச்சியொன்றில் அலசியிருந்த ஃபிளெமிங், அந்த பந்துவீச்சு முறையால் அவர் உடல் கவண் போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்று ஃபிளெமிங் கூறினார். "பும்ராவின் முன்கால் வேகத்தைக் குறைக்கும்போது, உடல் மற்றும் தோள்பட்டை இலக்கை (பேட்டர்) நோக்கி கவண் போல் செலுத்தப்படுகிறது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்கிறார் டேமியன் ஃபிளெமிங். பும்ரா பந்துவீசும்போது அவரது முழங்கை மடக்கப்படாமல் நீண்டிருக்கும். இந்த நிலையை ஹைப்பர்-எக்ஸ்டென்ஷன் (hyperextension) என்கிறார்கள். இந்த நிலையில் பும்ராவுடைய முழங்கையின் வேகம் குறையும்போது, முன்கையின் வேகம் அதிகரித்து, அது கவண் போல் செயல்பட்டு பந்தை முன்னே செலுத்தத் தொடங்குகிறது என்றார் ஃபிளெமிங். மூன்றாவது கட்டமாக அவருடைய மணிக்கட்டும் இதேபோன்ற வேலையைச் செய்வதாக அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகையாக நீண்டிருக்கும் பும்ராவின் கையும், வளைந்துகொடுக்கும் அவரது மணிக்கட்டும் கவண் போல் செயல்பட்டு பந்தை இலக்கை நோக்கி செலுத்துகின்றன என்கிறார் டேமியன் ஃபிளெமிங் "பும்ராவின் மணிக்கட்டு நம்பமுடியாத அளவுக்கு வளைந்துகொடுக்கிறது (flexible). இதை நீங்கள் சர்வதேச பௌலர்களிடம் அதிகம் பார்க்க முடியாது. இங்கே உள்ளங்கையின் வேகம் குறையத் தொடங்கும்போது, மணிக்கட்டின் வேகம் கூடி அது கவண் போல் பந்தைத் தள்ளுகிறது" என்று ஃபிளெமிங் கூறினார். இப்படி பும்ராவின் பந்துவீச்சு முறை அவரது உடலின் மூன்று பகுதிகளை கவண் போல் பயன்படுத்துவதால் அவருடைய பந்தில் வேகம் உருவாகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் கைகள் பந்துவீசும்போது மடங்கியே இருக்கும். பும்ரா இந்த இடத்தில் மாறுபடுகிறார் விரைவாக கீழே இறங்கும் பந்து பெரும்பாலான பௌலர்களைக் காட்டிலும் பும்ராவின் பந்து சீக்கிரமாக ஆடுகளத்தில் பிட்ச்சாகிவிடும். அதனால் பேட்டர்கள் அதைக் கணிப்பது மிகவும் கடினமாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார் ஐஐடி கான்பூரின் விண்வெளி பொறியியல் பேராசிரியர் சஞ்சய் மிட்டல். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அது பின்னோக்கி சுழன்றுகொண்டே (back spin) செல்கிறது. அப்போது மேக்னஸ் விளைவு (Magnus effect) காரணமாக பந்தில் மேல்நோக்கி விசை ஏற்படுத்தப்படுகிறது. "பேக் ஸ்பின்னுடன் நகரும் கிரிக்கெட் பந்தில் இருக்கும் மேக்னஸ் விசை, பந்தை காற்றில் அதிக நேரம் மிதக்க வைக்கிறது. இது பேட்டர்கள் பந்தை அடிப்பதை எளிதாக்குகிறது" என்கிறார் சஞ்சய் மிட்டல். அதேசமயம், பும்ரா பந்தை அதீதமாக பின்னோக்கி சுழலச் செய்வதால், அவர் தலைகீழ் மேக்னஸ் விளைவை உருவாக்குகிறார் என்றும், அதனால் பந்து விரைவாக பிட்ச் ஆகி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு பந்தை ரிலீஸ் செய்வது, அந்தப் பந்து விரைந்து ஆடுகளத்தில் பிட்ச்சாகக் காரணமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள் "பும்ராவால், 1000 ஆர்பிஎம் சுழற்சி வேகம் மற்றும் மிகவும் நிலையான சீம் பொசிஷனுடன் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். இது கிரிக்கெட் பந்திற்கு கிட்டத்தட்ட 0.1 சுழல் விகிதத்தை அளிக்கிறது. ஐஐடி கான்பூரின் தேசிய காற்று சுரங்கப்பாதை வசதியில் உள்ள சுழலும் கோளத்தில் (Rotating sphere at the National Wind Tunnel Facility) செய்யப்பட்ட சோதனைகள், இந்த சுழல் விகிதம் பந்தில் தலைகீழ் மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பும்ராவின் அதீத வேகத்தில் நகரும் ஒரு கிரிக்கெட் பந்தில், கீழ்நோக்கிச் செல்லும் விசை செயல்படும்போது, பந்து கூர்மையாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளைக் கணிப்பதில் சிரமப்படுகிறார்கள்" என்று சஞ்சய் மிட்டல் எழுதியிருந்தார். சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு (கவண் போல் என்று ஃபிளெமிங் குறிப்பிட்டது) பந்தை ரிலீஸ் செய்வதுதான் அவரது பந்துகளில் பின்னோக்கிய சுழற்சியை அதிகப்படுத்துகிறது. இது வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பின்னோக்கிய சுழற்சியையும் அதிகப்படுத்துகிறது. அதனால், பந்து விரைவாக பிட்ச் ஆகிறது. ஆக, பும்ராவின் உடல் கவண் போல் செயல்படுவது, வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பந்தை வேகமாக கீழே இறக்கி அவரது பந்துவீச்சை மேலும் தனித்துவமாக்குகிறது. பட மூலாதாரம்,Getty Images குறையும் இடைவெளி, குறையும் நேரம் பும்ராவின் இந்த பௌலிங் ஆக்‌ஷன் இன்னொரு விதத்திலும் பேட்டர்களுக்கு சவாலாக விளங்குகிறது. பெரும்பாலான பௌலர்கள் பந்தை விடுவிக்கும்போது அவர்கள் கை பௌலிங் கிரீஸுக்கு நேர் கோட்டிலோ அல்லது சற்று முன்னரோ இருக்கும். ஆனால், பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம், அவரது பந்துவீச்சு கையான வலதுகை வெகுதூரம் முன்தள்ளி இருக்கிறது. மிகையாக நீட்டப்பட்ட பும்ராவின் கை (hyperextended arm) காரணமாக, அவர் பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளி பந்தை விடுவிக்கிறார். இதனால் பந்துக்கும் பேட்டருக்குமான இடைவெளி குறைவதோடு, பேட்டர் எதிர்பார்ப்பதை விட பந்து சீக்கிரமே வந்துவிடுகிறது. அதனால், அவர்கள் அதற்கு வினையாற்றுவதற்கான நேரம் குறைகிறது. அதனால் அவர் வீசும் வேகத்தை விட அதிக வேகத்தில் பந்துவீசுவதாக பேட்டர்கள் உணர்கிறார்கள். இதுபற்றிய ஆர்தர்டன் மற்றும் மார்க் வுட் இடையிலான உரையாடலில், ஒரு தருணத்தில் வுட்டை விட 47 செ.மீ முன்தள்ளி பந்தை பும்ரா ரிலீஸ் செய்ததாகக் குறிப்பிட்டார் ஆர்தர்டன். "அந்தப் பந்து நான் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு 47 நொடிகள் முன்பாகவே என்னை தாக்கும்" என்று நகைச்சுவையாகப் பதிவு செய்திருந்தார் வுட். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளியே பந்தை ரிலீஸ் செய்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா எந்த பேட்டரும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கிரீஸிலிருந்து ரிலீஸ் ஆகும் பந்துக்கே ஆடிப்பழகியிருப்பார்கள். வெகு சில வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சற்று முன்னர் வருவார்கள். பும்ராவை எதிர்கொள்ளும்போது அவர்கள் முற்றிலும் பழக்கப்படாத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களால் வேறொரு வேகத்தில் பந்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பல தனித்துவங்கள் நிறைந்ததால் தான் பும்ராவின் பந்துவீச்சைக் கணிப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது. இதுபற்றிப் பேசிய நாசர் ஹுசைன், "பும்ராவுடைய ரன் அப், அவருடைய ஆக்‌ஷன், மிகையாக நீண்டிருக்கும் கைகள், பந்தை வீசும்போது அவர் இருக்கும் நிலை... இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் பேட்டர்கள் குழப்பம் அடைவார்கள். அதனால் பும்ராவைப் பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ஆடுவதுதான் பாதுகாப்பானது" என்றும் அறிவுரை வழங்குகிறார். இந்த தனித்துவங்கள் போக இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோயர் பால்கள் என பல வேரியேஷன்களை வைத்திருக்கும் பும்ரா, அதைத் துல்லியமாகவும் செயல்படுத்துகிறார். 'இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்றே தெரியவில்லை' இன்று பெரிய அளவு பேசப்படும் இந்த வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷன் தனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் பும்ரா. இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடனான ஒரு உரையாடலில் இதுபற்றிப் பேசியிருந்த அவர், "எனக்கு இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பயிற்சியாளர்கள் என்று யாரும் இல்லை. அதனால் அப்போது நான் யாரையெல்லாம் பார்க்கிறேனோ, அவர்களைப் போல பந்துவீசிப் பார்ப்பேன். அவை அனைத்தும் சேர்ந்து இப்படியொரு ஆக்‌ஷன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த முறையால் தன் உடல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் அதைத் தொடர்ந்ததாகவும் பும்ரா கூறினார். "அப்போது(சிறு வயதில்) பவுண்டரி எல்லைகள் சிறிதாக இருக்கும். அதனால் என்னால் அதிகம் ஓடமுடியாது. அப்போதெல்லாம் நான் இன்றுபோல் நடக்கவில்லை. ஓடிக்கொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான் ஆற்றலை சேமிக்கலாமே என்று கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டம் என்று மாற்றிக்கொண்டேன். அதனால் வேகம் குறையவில்லை எனும்போது அதையே பின்பற்றத் தொடங்கினேன்" என்றார் பும்ரா. அப்படி ஆற்றலை சேமித்ததன் மூலம் பெரிய ஸ்பெல்கள் வீசும் ரஞ்சி போன்ற போட்டிகளில் மற்ற பௌலர்களை விட தான் சற்று புத்துணர்வாக இருந்ததாகவும் கூறினார். இந்த முறை அங்கு நன்றாகத் தனக்கு உதவியதால், அதையே சர்வதேச அரங்குக்கும் எடுத்துவர முடிவு செய்ததாகவும் கூறினார் பும்ரா. அவர் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த பந்துவீச்சு முறையை எந்த பயிற்சியாளரும் பெருமளவு மாற்றவில்லை என்பது. இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் உடன் கடந்த ஆண்டு நான் கொண்டிருந்த உரையாடலில், அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார். "எந்தவொரு வீரரின் இயற்கையான இயல்பையும் நாம் விருப்பத்துக்கு மாற்றிவிடக்கூடாது. பயிற்சி கொடுப்பதன் முக்கிய சாராம்சம், அவர்களை மேம்படுத்துவதுதான். நாங்கள் பும்ராவிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை உணர்ந்தோம். அதை எப்படி சரியாகக் கையாள்வது, எப்படி காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வது, அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷனை மாற்ற நினைத்ததே இல்லை" என்று பரத் அருண் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c075dy3grxyo
  4. ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு 06 Dec, 2025 | 03:34 PM வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை (05) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232608
  5. Published By: Digital Desk 1 06 Dec, 2025 | 12:25 PM நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/232599
  6. இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் ; ஜனாதிபதி 06 Dec, 2025 | 05:26 PM அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார். கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும். அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232623
  7. இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி, ருத்துராஜ் சதங்கள் Published By: Vishnu 03 Dec, 2025 | 07:11 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்றுவரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது. ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தியுள்ளார். ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார். கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதெச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும். ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இந்தியா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த முதலாவது சதம் இதுவாகும். வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.) இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர். கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/232366 RESULT 2nd ODI (D/N), Raipur, December 03, 2025, South Africa tour of India India 358/5 South Africa (49.2/50 ov, T:359) 362/6 South Africa won by 4 wickets (with 4 balls remaining) Player Of The Match Aiden Markram, SA 110 (98)
  8. 05 Dec, 2025 | 05:37 PM யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்கள் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, மேலதிக இரண்டு வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/232546
  9. டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் Dec 5, 2025 - 03:49 PM நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார். இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmispqmzc02f1o29nffix7kpm
  10. 2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Dec 5, 2025 - 07:33 PM 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. https://adaderanatamil.lk/news/cmisxqy2602fbo29n08z2vdsd
  11. அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு பூராகவும் 504 மருத்துவக் குழுக்கள் Dec 5, 2025 - 04:48 PM நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் "சுரக்" அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரணக் குழுக்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,041 பாதுகாப்பு நிலையங்களை மையமாக வைத்து இந்த மருத்துவக் குழுக்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாகச் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், அனர்த்த முகாமைத்துவ தேசிய இணைப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் சமித்தி சமரகோன் தெரிவித்தார். அத்துடன், ஏனைய அனைத்து உதவி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் மருத்துவக் குழுக்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 98.3% ஆனோரைப் பரிசோதித்து முடித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப மருந்துகளை வழங்கி மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உரிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர, குறிப்பிட்ட இடங்கள் அல்லது கிராமங்களுக்கு மேலும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படின், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு நாளின் 24 மணித்தியாலமும் அழைக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmisru1bi02f3o29nxhl3s41d
  12. மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் உடனே முதலுதவி செய்ய வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வாழைப் பழம் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 4 வயது சிறுவன், மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், இதற்குரிய முதலுதவியை உடனே செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மேலும், குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்ட வேண்டுமென அறிவுறுத்தும் மருத்துவர்கள், யாராயினும் உணவை நன்கு மென்று கவனமாக உண்பதோடு, சாப்பிடும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த சிறுவன் ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதிக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு, தமது இரு குழந்தைகளுக்கும் மகாலட்சுமி வாழைப் பழத்தை ஊட்டியுள்ளார். அதைச் சாப்பிடும்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் இது குறித்து விளக்கிய ஈரோடு அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சசிரேகா, ''அந்தச் சிறுவனை வீட்டிலிருந்து 20 நிமிடங்களில் இங்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இங்கு வரும்போதே உயிர் இல்லை. உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சென்றதால் ஆக்சிஜன் நுரையீரலுக்குப் போகாமல் சிறுவன் மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளான்" என்று தெரிவித்தார். இந்தக் காரணத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அவர், "உடற்கூராய்வு முடிந்துவிட்டது. சிறுவனுக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லை. சிறுவனின் வாய்க்குள் வாழைப் பழம் அடைத்து இருந்ததைக் கண்டறிந்தோம்'' என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள் (சித்தரிப்புப் படம்) ''இதுபோன்ற நேரங்களில் உடனடியாக முதலுதவி செய்வதுதான் உயிரைக் காக்க ஒரே வழி. இந்தச் சிறுவனுக்கே முதலில் முதலுதவியைச் செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படியில்லாமல், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வரை மூச்சுக்குழாய் அடைபட்டே இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு," என்று விளக்கினார் மருத்துவர் சசிரேகா. அதேவேளையில், உணவுக் குழாயில் பல்வேறு பொருட்கள் சிக்கியதாக வந்தவர்களை, சிறு சிறு சிகிச்சை முறைகள் மூலமாகவும், அறுவை சிகிச்சைகள் மூலமாகவும் காப்பாற்றியுள்ளதாக, ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது எப்படி? கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையை விழுங்கும்போது, அதுவும் இதேபோல தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான். மாத்திரை, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கும்போது, சிறுவர்கள் உயிரிழப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை எப்படிக் கையாள்வது என்ற விழிப்புணர்வு இருந்தால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,Getty Images கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசியபோது, "எந்த வயதினராக இருந்தாலும், உணவுக் குழாயில் செல்ல வேண்டிய உணவு மூச்சுக் குழாய்க்குச் செல்லும்போது, இந்த விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக" கூறுகிறார். மேலும், இதற்குக் கால தாமதமின்றி உரிய முதலுதவியை உடனே செய்துவிட்டால் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். மருத்துவ ஆராய்ச்சியாளர் எரின் காலமன் எழுதியுள்ள கட்டுரையின்படி, மனித உடலில் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் என கழுத்து மற்றும் மார்பு வழியாக இரு குழாய்கள் செல்கின்றன. அதில் உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு, காற்றுப் பாதையில் செல்வதே சுவாசம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார். மனித உடலின் இயக்கவியல் குறித்து விளக்கிய மருத்துவர் பாலகிருஷ்ணன், "மூச்சுக்குழாய் எப்போதும் திறந்திருக்கும், உணவுக் குழாய் மூடித்தான் இருக்கும். உணவு உள்ளே செல்லும்போதுதான் அது திறக்கப்படும், அப்போது மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும்" என்றார். "ஆனால், உணவு வருவதை மூளை அறிவுறுத்தி, உணவுக் குழாய் திறக்கப்படுவதற்குள் அவசர அவசரமாக விழுங்கினால், மூடாமல் திறந்திருக்கும் மூச்சுக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும். அதனால்தான் சுவாசம் பாதிக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images அதோடு, குழந்தை முதலில் ஊட்டப்பட்ட வாழைப்பழத் துண்டினை விழுங்குவதற்குள் மேன்மேலும் பழத்தைக் கொடுக்கையில், அவற்றை மொத்தமாக விழுங்க எத்தனிக்கையில், இத்தகைய விபரீதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் கவனத்துடன், சிறு சிறு அளவில் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் மருத்துவர் சசிரேகா. அதோடு, பல குழந்தைகள், நாணயம், மோமோஸ், பட்டாணி, பாதாம் போன்றவற்றை விழுங்கிவிட்டதாக அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும், ''வேகமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம்" என்று கூறுகிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இவை மட்டுமின்றி, சிக்கன் பீஸ் உள்படப் பசை போன்ற தன்மையைக் கொண்ட உணவுகள் தொண்டைக்குள் ஒட்டிக் கொள்வதால், தசைகளின் செயல்பாட்டு நேரம் மாறி, உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஆபத்து யாராக இருந்தாலும் சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் தர்மேந்திரா. "சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கவனமின்றிச் சாப்பிடும்போது, உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு மூச்சுக்குழாய்க்குச் சென்று புரையேறுதல் நடக்க வாய்ப்புள்ளது" என்கிறார் அவர். மேலும், எந்த உணவையும் நன்கு மென்று விழுங்கச் சொல்லி, குழந்தைகளைப் பழக்குவதும் மிக மிக அவசியமென்று அவர் வலியுறுத்துகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''வாழைப்பழம் அவ்வளவு எளிதில் அடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது, கவனம் சிதறி மூச்சுக்குழாய் திறந்து அதில் அடைத்திருக்கலாம். குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்'' என்கிறார். உணவுக் குழாயில் சிக்குவதை சிறு கால அவகாசத்திற்கு உள்ளாகவே எடுத்துவிடலாம் என்று கூறும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பி.எஸ்.ராஜன், மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிவிட்டால் சில விநாடிகளுக்குள் முதலுதவி தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை விளக்கும் புகைப்படம் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது எப்படி? மாதக்கணக்கில் இருமிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அதன் மூச்சுக் குழாய்க்குள் பட்டாணி இருந்ததைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சையில் அகற்றியதாகச் சொல்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். பல்வேறு மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பட்டாணி, பாதாம் போன்றவற்றை உணவாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், குழந்தைகள் பொம்மைகளில் (Toys) பயன்படுத்தப்படும் பட்டன் பேட்டரிகளையும் வெளிநாடுகளில் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார். ''இருப்பதிலேயே பொம்மைகளில் பயன்படுத்தும் பட்டன் வடிவிலான பேட்டரிதான் மிக ஆபத்தானது. அதை விழுங்கிய பல குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். விழுங்கிய ஒரு மணிநேரத்தில் இருந்து அதிலுள்ள ரசாயனம் கசியத் தொடங்கிவிடும். அது குடல் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால் நம் நாட்டிலும் அது தடை செய்யப்பட வேண்டும்'' என்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இதுபோல, சாப்பிடும்போது உணவுப் பொருள் தொண்டையில் சிக்கினாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை குழந்தைகள் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டாலோ, உடனடியாக ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும். இந்த முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் முன்பு விளக்கிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்று விவரித்தார். ஆனால், சிறு குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அவர்களைத் தங்கள் தொடை மீது வயிறு அழுத்தியிருப்பது போலப் படுக்க வைத்து, முதுகில் தட்ட வேண்டுமென்று மருத்துவர் அருண்குமார் விளக்கினார். இந்த மிகவும் எளிமையான முதலுதவி முறை பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவித்த அவர், "பொது மக்களுக்கும் அதைக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxpe0eqwr9o
  13. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு Dec 5, 2025 - 06:32 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2
  14. இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார். பட மூலாதாரம்,Getty Images எந்த மருந்து? பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம். இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார். மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,Getty Images மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம். இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம். இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார். உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை. மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது. அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது. அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,Getty Images தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும். சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார். இருமல் வெளியேறட்டும் பட மூலாதாரம்,Getty Images இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது. இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும். "வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும். நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்". பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo
  15. Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம். சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/232530
  16. 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP கட்டுரை தகவல் ஜாஷுவா செய்சஸ் பிபிசி நியூஸ் பிரேசில் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம் பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது. சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது. மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர். அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான். "அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது," எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார். "ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை," என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் "பொருந்தாத நடத்தை", "மன நிலை மாற்றங்கள்", "நிலையற்றத்தன்மை", மற்றும் "உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை" இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்," என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார். கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார். பட மூலாதாரம்,Vídeo/Reprodução படக்குறிப்பு,கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் "மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்" குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். பட மூலாதாரம்,Arquivo Pessoal படக்குறிப்பு,9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன் கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. "சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்." என்றார். சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்," என்றார். கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம்,Parque Zoobotânico Arruda Câmara/AFP படக்குறிப்பு,சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, 'கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது' என்றனர். அதற்கு அவன், 'இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்' எனக் கூறினான் " என்கிறார் ஆலிவெரா. மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார். "நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை," என்றார் ஆலிவெரா. 'கொள்ளையில் ஈடுபட ஆர்வம்' கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா. ''குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.'' சமூக ஊடகங்களில் அவருக்கு "வாகுவெரின்ஹோ" (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, "மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்," என்றார். ''சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை''. என்றார் ஆலிவெரா முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார். "சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்" என நினைவு கூறும் ஆலிவேரா. "அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்தார். காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், "அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது." எனத் தெரிவித்தார். விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm28mz4g53po
  17. வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள் பட மூலாதாரம்,Planet Labs PBC 5 டிசம்பர் 2025, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயல் காரணமாக கன மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தற்போதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. களனி ஆறு, மகாவலி ஆறு, தெதுறு ஓயா ஆறு, மல்வத்து ஓயா போன்ற ஆறுகளின் கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடுவளை, தந்திரி மலை போன்ற இடங்களும் தற்போது கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. திட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. களனி ஆறு தெதுறு ஓயா ஆறு வெருகல் ஆறு மகாவலி ஆறு மல்வத்து ஓயா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e94de2wpro
  18. வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர். அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின் கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும். கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார். கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார். வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார். ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார். அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார். இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது. அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார். பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார். ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார். பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார். ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/232249
  19. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர்! Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 03:43 PM வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர். டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது. டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர். இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது. கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர். இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது. நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/232526
  20. Published By: Vishnu 04 Dec, 2025 | 10:35 PM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் கேங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் ஷெங் குபிங் ஆகியோரும் அடங்குகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து, தற்போது முகம்கொடுத்து வருகின்ற இயற்கை அனர்த்த நிலைமை குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் மஹரகம மாநகர சபையின் முதல்வர் சமன் சமரகோன், துணை முதல்வர் ரஞ்சன் நாம்படுன்ன மற்றும் ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்த சீன குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுடன் கலந்துரையாடினர். தற்போது இலங்கை முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அவசர அனர்த்த பேரழ நிலைமை குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கும் வெற்றிகொள்வதற்கும் சீனா வழங்குகின்ற ஒத்துழைப்பு குறித்தும் தரவுகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கடினமாக சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்கு இதன்போது பிரதி அமைச்சர் நன்றிகளை தெரிவித்தார். சீனாவும் இதுபோன்ற பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அந்த நிலைமைகளை தங்களால் நிர்வகித்துக் கொள்ள முடிந்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் தகவல் மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறிப்பாக, நிகழ்கால சீனாவை கட்டியெழுப்பும் போது சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விபரித்த சீன பிரதிநிதிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை தற்போது சீனா நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்காக இலங்கையின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. https://www.virakesari.lk/article/232476
  21. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது ; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய 05 Dec, 2025 | 10:37 AM அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் வியக்கத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அந்த உணர்வே நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எம்மை முன்னோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றது. டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்துக் கலந்துரையாடுவதற்காக 3,000இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உயர் தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் 350 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட IT மற்றும் BPM துறைக்கான இலங்கை தேசியச் சபையாகிய SLASSCOM சங்கம் ஆகியன இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன. மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது. அத்தோடு, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகிய முக்கிய துறைகளுக்கு வருகை தந்திருக்கும் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இந்தத் துறைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் நாம் எதிர்பார்க்கின்றோம். அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனை நடைமுறைப்படுத்துவது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தமது முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அத்தோடு, ஆவணப்படுத்தல் மற்றும் காலத்திற்கேற்ற கண்காணிப்பு உட்பட இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதிநிதிகள் முன்வந்தனர். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் வரையறுக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றன. அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை விளக்கிய பிரதமர், IT மற்றும் BPM முதலீடுகளுக்கு இலங்கையை ஒரு முன்னணித் தளமாக மாற்றுவது தொடர்பான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, மறுசீரமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான முன்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். மனித வளத்தை மேம்படுத்துதல், கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தேசியத் திட்டம் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளது. அரச துறையை டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதையும், முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தொழில்களுக்கான மூலோபாய விரிவாக்கச் சந்தையாக இலங்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட NASSCOM மற்றும் SLASSCOM இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு முயற்சியாகும். அத்துடன் 2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் (Technology and Leadership Forum) SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக இது அமைந்தது என்றார். இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் SLASSCOM, NASSCOM ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/232497
  22. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று : வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு! Published By: Vishnu 05 Dec, 2025 | 07:10 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமான மற்றும் மானியங்கள் 5,300 பில்லியன் ரூபா மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1757 பில்லியன் ரூபாவாகும். 2026 நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள்,வைத்தியர்கள், விவசாயிகள்,கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுயையினர் குறித்துவிசேட கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக வரிகள் ஏதும் அடுத்தாண்டுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபாய்,பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாய், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாய்,கல்வி , உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாய், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாய், அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது. நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இலக்குகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். அரச செலவினத்துக்காக ஒத்துக்கப்பட்டுள்ள செலவினத்தை அதிகரிக்க நேரிடும். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்து புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய இக்கட்டான நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால திட்டமிடல் குறித்து விசேட உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பு கோரல் இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின் சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் புதிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேபோல் தற்போதைய நெருக்கடியான நிலையில் வரவு - செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,எதிர்க்கட்சிகளில் எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் தாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் வரவு- செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232482
  23. Rebuilding SriLanka' நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி! Dec 5, 2025 - 06:55 AM 'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் ஊடாக இதுவரை 30,470க்கும் மேற்பட்ட வைப்புக்கள் (transaction) இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிலிடக்கூடிய கணக்குகள் ஊடாக இந்த நிதியத்திற்கு சுமார் 61 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 33 நாடுகளிலிருந்து உரிய கணக்குகளுக்கு இந்தப் பணம் கிடைத்துள்ளது. அதற்கமைய, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்தார். கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmis6nid202eco29n1xu82t3u
  24. “சிறையில் சித்திரவதை; என் உயிருக்கு ஆபத்து; இராணுவ தளபதி அசிம் முனீர் மனநிலை சரியில்லாதவர்” - இம்ரான் கான் பகிரங்கம் 04 Dec, 2025 | 06:31 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதில் “என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அண்மையில் சிறையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, இம்ரான் கான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பல தகவல்கள் சமூக ஊடக தளங்களில் பரவின. அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்திலும் அந்நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. அதன் பின்னர், இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதியளித்தது. உஸ்மா சிறையில் இம்ரான் கானை சந்தித்துவிட்டு, வெளியே வந்து, “இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால், அவருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என தெரிவித்தார். சகோதரியை சந்தித்த பின்னர், இம்ரான் கான் அளித்த அறிக்கையினை அவரது தெக்ரிக் இ இன்சாப் கட்சி வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது: “எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், இராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜியும் பொறுப்பாவார்கள். நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானம் அற்றவைகளாக உள்ளன. இராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்” என இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/232459
  25. 04 Dec, 2025 | 05:17 PM ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ஜூலை மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு பசுபிக் பெருங்கடலில் சுனாமி அலை எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்போது எழுந்த சுனாமியின் முழு அலை தோற்றத்தையும், செயற்கைக்கோளைக் கொண்டு தெளிவாக எடுத்த காட்சிப் பதிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. SWOT (Surface Water and Ocean Topography) என்ற செயற்கைக்கோளே இந்த சுனாமி புகைப்படத்தை எடுத்திருக்கிறது. நாசா மற்றும் பிரெஞ்சு ஏஜென்சியின் கூட்டுமுயற்சியில் உருவான இந்த செயற்கைக் கோள் ஆறுகள், ஏரிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, பசுபிக் கடலிலும் இலேசான சுனாமி கிளம்பியபோது, SWOT செயற்கைக்கோள் தற்செயலாக சுனாமி எழுந்த கடற்பரப்புக்கு மேல் கடந்து சென்றது. அப்போது சுனாமியின் முழு அலை வடிவத்தையும் மிகத் தெளிவாக படமெடுத்தது. சுனாமியை மிக உயர்ந்த தெளிவாக படமெடுத்த முதல் செயற்கைக்கோளாக SWOT கருதப்படுகிறது. சுனாமி என்பது ஒற்றை அலையாக, சீராக சிதறாமல் மேலெழும்புவதாக இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில், சுனாமி ஆற்றலால் நடுக்கடலில் அலைகள் பிளவுபட்டு, சிதறி, பின்னர் மீண்டும் உருவாகும் என்பதையும் சுனாமியானது சிக்கலான ஆற்றல் வடிவத்தை கொண்ட ஓர் இயற்கைப் பேரனர்த்தம் என்பதையும் இந்த செயற்கைக்கோள் துள்ளியமான படத்தின் ஊடாக காண்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/232456

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.