Everything posted by ஏராளன்
-
ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 போட்டியில் வியாஸ்காந்த் பந்துவீச்சில் பிரகாசிப்பு; ஆனால் இலங்கை ஏ அணிக்கு ஏமாற்றம்
பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஆசிய கிண்ண உதயத் தாரகைகள் சம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் சூடியது Published By: Vishnu 24 Nov, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார். பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231321
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
Stumps 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India South Africa (8 ov) 489 & 26/0 India 201 Day 3 - South Africa lead by 314 runs. Current RR: 3.25
-
யாழ்ப்பாணத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் ஆரம்பம்
தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது - பிமல் ரத்நாயக்க 24 Nov, 2025 | 10:51 AM கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம். விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் இனங்காணப்பட்ட விடயம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பெரியளவில் இல்லை. மழை காலத்தில் அது பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வீரர் வியாஸ்காந் இலங்கை தேசிய அணியில் விளையாடுகிறார். இதுவொரு நல்ல தருணம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் பயிற்சி பெற ஒரு இலட்சம் ரூபாய் கட்ட வேண்டும். போதிய வசதிகள், உதவிகள் விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு முடிவு கட்ட பெருமளவு விளையாட்டுகளை விளையாடக் கூடிய வசதி கொண்ட உள்ளக விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டு துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2026 ஓகஸ்ட் 31, மழை காலம் ஆரம்பிக்க முன் உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இங்கு நடைபெறும் முதல் போட்டிக்கு நான் வருவேன் - என்றார். https://www.virakesari.lk/article/231266
-
தமிழ்நாட்டின் தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!
Published By: Digital Desk 1 24 Nov, 2025 | 02:25 PM இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231279
-
நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலின் பிடியில் சிக்கியுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள் 24 Nov, 2025 | 01:56 PM நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை இந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பின்னர், எஞ்சிய 38 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடகிழக்கு நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயிருடன் மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு கிறிஸ்தவ சங்கம் நேற்று (23) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (21) மற்றும் சனிக்கிழமை (22) ஆகிய இரு தினங்களிலும் 10 - 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தனித்தனியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தமது பெற்றோர்களை சென்றடைந்துள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இன்னும் 253 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231278
-
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவ தளபதி பலி
24 Nov, 2025 | 02:39 PM லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார். மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்ற மிகப்பெரிய ஹிஸ்புல்லா தளபதி எனக் குறிப்பிடப்படுகிறது. தெற்கு லெபனானிலும், பாலஸ்தீன அகதி முகாம்களிலும் இஸ்ரேல் தினசரி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/231262
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு கடினமான குழு, இந்தியாவுக்கு இலகுவான குழு; ஒரே குழுவில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 04:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது. 2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படும். இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும். அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது. பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும். கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும். இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது. ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231307
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர் Nov 24, 2025 - 04:51 PM இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். கனடாவில் உள்ள சில உள்ளூர் குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாக தெரிவித்தார். அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாத கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmid23hsu01yao29nv7ewnbc5
-
'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?
பட மூலாதாரம், Getty Images 24 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்: அந்தமான் கடல் பகுதி நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதிகள் நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது. அரபிக்கடல் பகுதிகள் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் 'காணாமல் போகிறார்கள்'? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? End of அதிகம் படிக்கப்பட்டது "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா. மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார். மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி, நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும். தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழை எச்சரிக்கை இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை? கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லையில் கனமழை நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர். குற்றாலம் அருவி தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo
-
இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு
24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது. 14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன. எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும், ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/231259
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை! Nov 24, 2025 - 06:15 AM நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmicfe86c01x2o29n0b9urn8c
-
பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான், பந்துவீச்சில் தாரிக் அபாரம், மும்முனை ரி20 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் Published By: Vishnu 24 Nov, 2025 | 12:10 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டி மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் உஸ்மான் தாஹிர் பதிவுசெய்த ஹெட் - ட்ரிக்கும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் சய்ம் அயூப் (13) ஆட்டம் இழந்தார். ஆனால், சாஹிப்ஸதா பர்ஹான், முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலப்படுத்தினர். சாஹிப்ஸதா 41 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 52 பந்துகளில் 7 பவண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களையும் பெற்றனர். பக்கார் ஸமான் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், சிக்கந்தர் ராஸா (23), ரெயான் பேர்ல் ஆகிய இருவரும் ஸிம்பாப்வேயை மீட்டெடுக்க முயற்சித்தனர். சிக்கந்தர் ராஸா ஆட்டம் இழந்த பின்னர் வரிசையாக விக்கெட்கள் சரிந்தன. இதனிடையே 10ஆவது ஓவரில் உஸ்மான் தாரிக் தனது 2, 3, 4ஆவது பந்துகளில் டோனி முனியொங்கா, டஷிங்கா முசேக்கிவா, வொஷிங்டன் மஸகட்ஸா ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார். ஆனால், ரெயால் பேர்ல் தனி ஒருவராகத் திறமையை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231237
-
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 09:20 AM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/231256
-
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்
யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை Nov 24, 2025 - 06:51 AM சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு - காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும். அதுபோல பி.ப 6.20 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmicgotnt01x3o29nhdf05joh
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
Tea 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India South Africa 489 India (36 ov) 102/4 Day 3 - Session 1: India trail by 387 runs.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
தேஜஸ் விமான விபத்தில் இறந்த விமானிக்கு கோவை, இமாச்சலில் இறுதி அஞ்சலி பட மூலாதாரம், @IafSac படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் துபையில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதை செலுத்துவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பட்டியல்கரில் காலை முதலே மக்கள் திரண்டிருந்தனர். நமான்ஷ் ஸ்யாலின் மனைவியும் விங் கமாண்டருமான அஃப்ஷான் ஸ்யால், விமானப்படை சீருடையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவர் ராணுவ மரியாதையுடன் தனது கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன், விங் கமாண்டர் நமான்ஷின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் காங்க்ரா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தந்தை கூறியது என்ன? ''நாடு ஒரு சிறந்த விமானியை இழந்துள்ளது, நான் என் இளம் மகனை இழந்துள்ளேன். அவர் வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்பு என்பதே இருந்ததில்லை; பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்திய அரசு தனது தரப்பில் விசாரணை நடத்துகிறது, அதே நேரத்தில் துபை அரசும் விசாரணை செய்து வருகிறது." என்று நமான்ஷின் தந்தை ஜகன் நாத் ஸ்யால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். "எங்கள் விமானி நமான்ஷின் இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள வந்துள்ளேன். அவர் 12ஆம் வகுப்புக்குப் பிறகு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்ந்தார்," என உள்ளூர்காரரான ராஜீவ் ஜம்வால் கூறுகிறார். "என்டிஏவில் அவர் சிறப்பாக செயல்பட்டார், மேலும் விமானப்படையிலும் அவர் சிறந்த விமானிகளில் ஒருவராக இருந்தார். அவருக்கு மரியாதை செலுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்," என்று கூறினார். "எங்கள் கிராமத்தில் துக்க சூழல் நிலவுகிறது... மிகவும் மோசமாக உணர்கிறேன். வார்த்தைகள் இல்லை... இப்படி நடந்திருக்கக் கூடாது," என நமான்ஷ் ஸ்யாலின் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் கூறுகிறார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, கணவர் நமான்ஷ் ஸ்யாலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மனைவி விபத்து நடந்தது எப்படி? இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவின் போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார். துபையில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில், விமானம் புறப்பட்ட உடனேயே தரையில் விழுந்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது தெரிகிறது. இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவில் விமான சாகசத்தின்போது இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி தனது உயிரை இழந்தார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உருவான தேஜஸ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டில் தயாரித்த ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானம்தான் தேஜஸ். இந்த விமானம் வெகு தொலைவில் இருந்தே எதிரி விமானங்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடியது மற்றும் எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விமானத்தால், தன்னைவிட அதிக எடை கொண்ட சுகோய் விமானம் தாங்கக்கூடிய அதே அளவு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிப் பறக்க முடியும். 2004 ஆம் ஆண்டிலிருந்து தேஜஸில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஞ்சின் F404-GE-IN20 பயன்படுத்தப்படுகிறது. தேஜஸ் மார்க் 1 வகை தற்போது F404 IN20 எஞ்சினைப் பயன்படுத்துகிறது. தேஜஸ் போர் விமானங்கள் சுகோய் போர் விமானங்களை விட இலகுவானவை மற்றும் எட்டு முதல் ஒன்பது டன் வரை எடையைத் தாங்கக்கூடியவை. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உடன் 97 தேஜஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. அவற்றின் விநியோகம் 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், 2021 இல் இந்திய அரசு ஹெச்ஏஎல் உடன் 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விநியோகம் 2024 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஞ்சின்கள் பற்றாக்குறை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6xqg74pwxo
-
வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த புத்தகம் ரூ. 82 கோடிக்கு ஏலம் போனது ஏன் தெரியுமா?
பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்லாண்டுகள் கழித்தும் அந்த காமிக்ஸ் புத்தகம் மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் 1939-இல் வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் அது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது மிகவும் சிறப்பாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. தற்போது இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளது. ஏலத்தில் இது 9.12 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 82 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது. வியாழக்கிழமை இவ்விற்பனையை நடத்திய டெக்சாஸைச் சேர்ந்த 'ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ்' நிறுவனம், இதனை 'காமிக்ஸ் சேகரிப்பின் உச்சம்' என்று வர்ணித்துள்ளது. பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, காமிக்ஸ் புத்தகத்தின் முழு அட்டைப்படம் அந்த மூன்று சகோதரர்களும், 2024ஆம் ஆண்டில், வீட்டின் பரணில், சிலந்தி வலைகள் சூழ்ந்திருந்த ஓர் அட்டைப் பெட்டிக்குள், பழைய செய்தித்தாள்களுக்கு அடியில் 'சூப்பர்மேன் #1' உள்ளிட்ட ஆறு காமிக்ஸ் புத்தகங்களைக் கண்டெடுத்ததாக ஹெரிடேஜ் நிறுவனம் கூறியுள்ளது. ஏல நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு முன் அவர்கள் சில மாதங்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் தொடர்புகொண்ட சில நாட்களிலேயே, ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லான் ஆலன் அவர்களைச் சந்தித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத அந்தச் சகோதரர்கள், 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்கள். "அதிக மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்களைத் தான் சேகரித்து வைத்திருப்பதாக அவர்களின் தாயார் பலமுறை கூறியுள்ளார், ஆனால் அவற்றை அவர்களுக்குக் காட்டியதே இல்லை," என்று ஆலன் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சமையல் அலுமினிய பாத்திரங்களை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்? மீறி உபயோகித்தால் என்ன பிரச்னை? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் End of அதிகம் படிக்கப்பட்டது "பொதுவாக, 'எனது காமிக்ஸ் புத்தகங்களை அம்மா தூக்கி எறிந்துவிட்டார்' எனப் பிள்ளைகள் புகார் சொல்வார்கள். அந்தக் கதைகளுக்கு நேர்மாறான ஒரு சுவாரஸ்யமான கதை இது," என்கிறார் அவர். "பெரும் பொருளாதார மந்தநிலைக்கும் இரண்டாம் உலகப் போரின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தானும் தனது சகோதரனும் வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களை, அந்தத் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்," என்று ஹெரிடேஜ் நிறுவனம் கூறியது. வடக்கு கலிஃபோர்னியாவின் குளிர்ந்த காலநிலை, அந்தக் காமிக்ஸ் புத்தகத்தின் பழைய காகிதங்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்துள்ளது என ஆலன் குறிப்பிட்டார். "ஒருவேளை இந்த காமிக்ஸ் புத்தகங்கள் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் இருந்திருந்தால், அவை பாழாகியிருக்கும்," என்றும் அவர் கூறினார். காமிக்ஸ் புத்தக ஏலத்தில் புதிய சாதனை புத்தகத்தின் இந்தச் சிறப்பான நிலை காரணமாக, காமிக்ஸ் புத்தகங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான சிஜிசி (CGC), இந்த 'சூப்பர்மேன் #1' புத்தகத்திற்கு 10-க்கு 9.0 என்ற மதிப்பீட்டை வழங்கியது. இது '8.5' என்ற வேறொரு புத்தகத்திற்கு வழங்கப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சூப்பர்மேன் #1 புத்தகம், வாங்குபவருக்கான கட்டணம் உட்பட 9 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையானது. இதன் மூலம், இதற்கு முன் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தின் சாதனையை விட 3 மில்லியன் டாலர் அதிக விலைக்கு விற்றுப் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சூப்பர்மேனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய 1938ஆம் ஆண்டு படைப்பான 'ஆக்ஷன் காமிக்ஸ் எண் 1' (Action Comics No. 1), கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. பரணின் பின்பகுதியில் காமிக்ஸ் புத்தகங்கள் கொண்ட அந்தப் பெட்டி பல ஆண்டுகளாக யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்தது என, அந்த மூன்று சகோதரர்களில் இளையவர் கூறியதாக ஏல நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பல ஆண்டுகள் கடந்த நிலையில், வாழ்க்கையில் தொடர்ச்சியான இழப்புகளையும் மாற்றங்களையும் குடும்பம் சந்தித்து வந்தது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளே முக்கியமானதாக மாறியதால், ஒரு காலத்தில் அக்கறையுடன் எடுத்து வைக்கப்பட்ட காமிக்ஸ் பெட்டி நினைவில் இருந்து மறைந்தது. கடந்த கிறிஸ்துமஸ் வரை அது அப்படியே இருந்தது," என அந்தச் சகோதரர்களில் இளையவர் கூறியுள்ளார். "இது காமிக்ஸ் புத்தகங்கள், அதன் பழைய காகிதங்கள் பற்றிய கதை மட்டுமல்ல. கடந்த கால வாழ்வின் மற்றும் குடும்பத்தின் நினைவுகள், எதிர்பாராத வழிகளில் மீண்டும் நம்மை வந்தடையும் என்பதற்கான ஒரு சான்று இது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8q12eepqlo
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
அடுத்த நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரும்; வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் Published By: Vishnu 23 Nov, 2025 | 06:27 PM ( இராஜதுரை ஹஷான்) நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும். அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231232
-
யாழ்ப்பாணத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் ஆரம்பம்
Published By: Vishnu 23 Nov, 2025 | 08:11 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர். இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231234
-
வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம் - அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கை!
Published By: Vishnu 23 Nov, 2025 | 06:47 PM வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம். கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தை தூண்ட முனைகிறது. எமது அரசாங்கம் தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை . கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவு கூரும் உரிமையை வழங்கியது எமது அரசாங்கமே. நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் விதமான தயக்கமும் இல்லை. அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். எமது அரசாங்கம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது. இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டை சூறையாடுவதே நோக்கம். இதை நான் விளாவரையாக கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில் ராஜபக்சர்கள் சூறையாடினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளை செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231233
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
முத்துசாமி சதம், யான்சன் அரைசதம்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா பட மூலாதாரம், Getty Images இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது 428/7 என்ற வலுவான நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார். 247/6 என்ற ஸ்கோரில் இருந்து இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் முத்துசாமி, வெரெய்னே இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டே இழக்காமல் முதல் செஷனைக் கடந்தனர். இரண்டாவது செஷனில் ஜடேஜா பந்துவீச்சில் வெரெய்ன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 45 ரன்களோடு வெளியேறினார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியாக விளையாடி வேகமாக ரன் சேர்த்தார். அவர் 53 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் அதிரடி ஒருபக்கம் இருக்க, நிதானமாகவும் உறுதியாகவும் விளையாடிய செனுரன் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 428/7 என்ற நிலையில் இருக்கிறது. முத்துசாமி 107 ரன்களுடனும், யான்சன் 51 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று இதுவரை வீசப்பட்ட 55.1 ஓவர்களில் இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7#asset:94f7d311-6cfd-4f66-bcd1-3c4b4d6a63f7 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India Toss:- South Africa, elected to bat first South Africa 489 India (6.1 ov) 9/0 Day 2 - India trail by 480 runs. Current RR: 1.45
-
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்
அண்ணை, 782 வழித்தடம்(யாழ் - மானிப்பாய் - சங்கானை - சுழிபுரம் - காரைநகர்) காலையில் செல்ல உள்ளதாம், மாலை சேவையை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல் 23 Nov, 2025 | 05:10 PM (நமது நிருபர்) அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினர். அந்தக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர். https://www.virakesari.lk/article/231229
-
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் - தொல். திருமாவளவன் பங்கேற்பு
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே...!; இசைப்பாடல் வெளியீடு 23 Nov, 2025 | 04:22 PM (எம்.நியூட்டன்) நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (23) 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க. சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ''கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?'' என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இந்த இசைப்பாடலை பாடல் வரிகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231225