Everything posted by ஏராளன்
-
வட்டுவாகல் பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க
Published By: VISHNU 23 APR, 2025 | 03:45 AM நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக இன்றையதினம் (22) பிற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் முதலானோர் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212692
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
'ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர்' - ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப்படை வீரர் 22 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சம்பவ இடத்திலிருந்த 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,PTI உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார். திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஷுபம் திவேதியின் உறவினர் சௌரப் திவேதி, "ஷுபமுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதிதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பஹல்காமில் இருந்தார். சம்பவத்திற்கு பிறகு, அவரது மனைவி என் மாமாவை தொலைபேசியில் அழைத்து ஷுபம் தலையில் சுடப்பட்டதாகக் கூறினார். தனிநபர்களின் பெயர்களைக் கேட்ட பிறகு துப்பாக்கிச் சூடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2-3 நாட்களுக்குப் பிறகு ஷுபமின் உடல் விடுவிக்கப்படும் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சௌரப் திவேதி யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?22 ஏப்ரல் 2025 12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்22 ஏப்ரல் 2025 'ஆண்களை குறிவைத்து தாக்குதல்' 'ஆயுததாரிகள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது' என்று தாக்குதலை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். "தீவிரவாதிகள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஒரு ஒரு சிறிய புல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்று ஒரு பெண் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார். "அவர்கள் தெளிவாக பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டுமே குறிவைத்துச் சுட்டனர். சில ஆண்களை ஒரே தோட்டா மூலமும், சில ஆண்களை பல தோட்டாக்கள் மூலமும் கொன்றனர். அந்த இடமே ஒரு புயல் வீசியது போல இருந்தது," என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேசியுள்ள பல்லவி ராவ் என்ற மற்றொரு பெண் (சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரும் ஒருவர்) 'ஆண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக்' கூறினார். படக்குறிப்பு,அனந்த்நாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்திய பிரதமர் மோதி அவசர ஆலோசனை பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஏப்ரல் 22) சௌதி அரேபியா சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி. அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோதி நடத்திய ஆலோசனை கூட்டம் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பஹல்காம் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது "இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது. ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு பட மூலாதாரம்,ANI ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி முகமையான பிடிஐ தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் நகர எல்லைகளில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகக் கண்டறியும் வகையில் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மறுபுறம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகாரிகள், காவலர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் சாலைகளில் விரிவான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களின் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. பஹல்காமில் உள்ள சிலரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, தாக்குதல் குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோதி என்ன சொன்னார்? இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். "இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்', என்று குறிப்பிட்ட அவர், "இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்", என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க அதிபர் டிரம்ப தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாவுக்காகவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு." என்று கூறியுள்ளார். புதின் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், "இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் தக்க தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயார் நிலையில் உள்ளோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார். 'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்'- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மோதியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்) ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். 'நான் அதிர்ச்சியடைந்தேன்' - முதல்வர் உமர் அப்துல்லா இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். "நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 'சோவியத் வீழ்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்' - சர்வதேச அரசியலில் போப் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறார்?22 ஏப்ரல் 2025 உள்துறை அமைச்சர் கூறியதென்ன? "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். "இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?22 ஏப்ரல் 2025 சிறைச்சாலை முதல் ஈஸ்டர் வரை - மரணத்திற்கு முந்தைய ஒரு வாரத்தில் போப் என்னென்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அனந்த்நாக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் "பாதிக்கப்பட்டோரில் தமிழர்கள்" "அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், விலைமதிப்பற்ற பல உயிர்களை பலியாக்கியது. இது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்", என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி மையத்தை தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக 011-24193300, 9289516712 என்ற உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூலை, ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு நேரடியாக சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது "பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன", என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்திகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது" என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார், - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c87przv5rx8o
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னௌ உரிமையாளர் கோயங்காவுடன் டெல்லி அணி வீரர் லோகேஷ் ராகுல் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடந்த சீசனில் மைதானத்திலேயே தன்னைத் திட்டிய லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் கோயங்காவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் களத்திலேயே பதிலடி கொடுத்தார். அத்துடன், கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்த தவறிய லக்னெள லக்னெள அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் 5வது முறையாக 50 ரன்களுக்கும் மேல்பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 87 ரன்கள் சேர்த்த இந்த இணை 10-வது ஓவரில் தான் பிரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக ஆடிய மார்க்ரம் 33 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் இருந்து லக்னெளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்ஸர் படேல் பந்துவீசினார், இதனால் பெரிய அளவுக்கு ஷாட்களை மார்க்ரம், மார்ஷால் ஆட முடியவில்லை. அருமையாகப் பந்துவீசிய அஸ்கர் படேல் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 10 ஓவர்களுக்குள் தனது ஸ்பெல்லை முடித்துவிட்டார். 10 ஓவர்களுக்கு மேல் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி லக்னெள பேட்டர்களுக்கு நெருக்கடியளித்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்த லக்னெள அணி அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, 5 விக்கெட்டுகளையும் இழந்தது. கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய நிகோலஸ் பூரன் 9 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டாகினார். டி20 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 முறையாக பூரனை ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ரிஷப் பந்த் களமிறங்க வேண்டிய இடத்துக்கு வந்த அப்துல் சமது 2 ரன்னில் முகேஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார். 87 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த லக்னெள அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஸ்கோரை உயர்த்தினர். பதோனி 36 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் ஓவரில் போல்டாகினார். கடைசி 2 பந்துகள் இருக்கும் போது களமிறங்கிய ரிஷப் பந்த் முகேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை பயன்படுத்த நடுவரிசை பேட்டர்கள் தவறவிட்டனர். வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்க வேண்டிய ரிஷப் பந்த் ஏன் கடைசி நேரத்தில் களமிறங்கினார் என்பதும் புரியவில்லை. முக்கியமான கட்டத்தில் பரிசோதனை முயற்சி செய்து லக்னெள அணி ஆபத்தில் சிக்கியது. டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஸ்டார்க், சமீரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் லக்னெள ரன் ரேட்டை உயரவிடாமல் கட்டுப்படுத்தியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களும் லக்னெள பேட்டர்களை எளிதாக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கவிடவில்லை. லக்னெள பேட்டர்கள் நேற்று 4 சிக்ஸர்களும், 14 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். வெற்றி - தோல்வி எதுவாக இருந்தாலும் தோனியை சிஎஸ்கே நம்புவது ஏன்?22 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ரசிகர்களை முதல் போட்டியிலேயே கவர்ந்த 'ஆயுஷ் மாத்ரே' அணியில் இடம் பிடித்த சுவாரஸ்ய பின்னணி21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், கே.எல்.ராகுலின் பதிலடியும் சாதனையும் கடந்த சீசனில் லக்னெள அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை, அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கடுமையாகப் பேசினார். கே.எல்.ராகுலுக்கு அணியின் உரிமையாளரிடம் இருந்தே கடும் நெருக்கடி வந்தது. ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை கழற்றிவிட்ட லக்னெள ரூ.24 கோடி கொடுத்து ரிஷப் பந்தை வாங்கி கேப்டனாக்கியது. ஆனால், கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் வாங்கி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு சிறந்த நடுவரிசை, 3வது வீரராகவும் களமிறங்கி அருமையான ஃபினிஷிங் ரோலை கே.எல்.ராகுல் செய்து வருகிறார். இந்த சீசனில் 3வது அரைசதத்தையும் கே.எல்.ராகுல் நேற்று அடித்தார். கடந்த முறை லக்னெளவுக்கு எதிராக டெல்லி மோதிய போது தனக்கு குழந்தை பிறந்திருந்ததால் ராகுல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், தன்னை ஏலத்தில் நிராகரித்த லக்னெளவை நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தனது பேட்டிங்கால் பழிதீர்த்துவிட்டார். ஒன்டவுனில் களமிறங்கிய ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அபிஷேக் போரெலுடன் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப், அக்ஸர் படேலுடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் டெல்லி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து லக்னெள உரிமையாளருக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் நேற்று 130 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரரும் குறைந்த போட்டிகளில் இந்த அளவு ரன்களை எட்டியதில்லை. டேவிட் வார்னர் 135 போட்டிகளிலும் விராட் கோலி 165 போட்டிகளில் எட்டியதை ராகுல் விரைவாக எட்டி சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் தொடர்ந்து கே.எல்.ராகுல் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிவிரைவு 5 ஆயிரம் ரன்கள் சாதனை நிச்சயம் தேர்வாளர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கும். சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன?21 ஏப்ரல் 2025 மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டம் முடிந்ததும் களத்திலிருந்து வெளியேறிய லோகேஷ் ராகுலை லக்னௌ அணி உரிமையாளர் கோயங்கா அங்கேயே சென்று பாராட்ட முயன்றார். கோயங்கா மற்றும் அவரது மகன் ஷஸ்வத்துக்கு அவசரஅவசரமாக கைகொடுத்த லோகேஷ் ராகுல், கோயங்கா பேசியதை காதில் வாங்காதது போல் அவசரஅவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார். லோகேஷ் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமான் விஹாரி, லக்னௌ உரிமையாளருடன் அவர் கைகுலுக்கியதை 'Cold Hand Shake' என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு லக்னௌ அணி கேப்டனாக இருந்த போது தோல்விக்காக அவரை கோயங்கா களத்திலேயே கடுமையாக திட்டியதையும், தற்போது அவரை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் ராகுல் சென்றதையும் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தோல்விக்கு காரணமான ரிஷப் பந்த் ரிஷப் பந்த்தின் தவறான கேப்டன்சி தான் லக்னெளவின் தோல்விக்கு மூலகாரணமானது. லக்னெள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், லக்னெள அணி 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு முக்கியக் காரணம், தொடக்க வரிசை பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தாததும், நடுவரிசையை மாற்றி அப்துல் சமதை களமிறக்கி, கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பந்தின் முடிவும் தான் காரணம். கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகத்துக்குப்பின் ரிஷப் பந்த் 7வது வரிசையில் நேற்று தான் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் தோனியைப் போன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ஃபினிஷிங் டச் செய்ய நினைத்தாரா அல்லது, பரிசோதனை முயற்சியா எனத் தெரியவில்லை. இதற்கான ரிஷப் பந்த் விளக்கமும் தெளிவாக இல்லை. அவர் கூறுகையில் " நாங்கள் ஸ்கோரை விரைவாக அதிகரிக்க நினைத்து, அப்துல் சமதை களமிறக்கினோம், விக்கெட் அப்படித்தான் இருந்தது. மில்லர் களமிறங்கிய பின் தேக்கமடைந்துவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் வரிசையை விரைவில் கண்டறிவோம்" என்று விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்துல் சமதைவிட, ரிஷப் பந்த் மோசமான பேட்டரா, ரிஷப் பந்த் இந்த விக்கெட்டை பயன்படுத்தி அதிரடியாக ஸ்கோர் செய்யமாட்டாரா என்ற கேள்விகளை வர்ணனையாளர்கள் எழுப்பினர். அப்துல் சமது ஆட்டமிழந்த பின்பு கூட ரிஷப் பந்த் களமிறங்கியிருக்கலாம் ஆனால் அப்போது கூட அவர் களமிறங்காமல் மில்லரை அனுப்பியது மிகப்பெரிய தவறாக இருந்தது. தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தவுடன் அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள சரியான பேட்டர்களை களமிறக்க வேண்டும், பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் வீரர்களை அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டம் முழுவதும் கடும் குழப்பத்துடனே இருந்தார். கேட்சை நழுவிட்ட பிரின்ஸ் யாதவ், அப்துல் சமது இருவரையும் களத்திலேயே கடுமையாகத் திட்டினார். டிஆர்எஸ் ரிவியூ செய்வதிலும் பந்த் தாமதமாக செயல்பட்டார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 108 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து பேட்டிங்கிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. லக்னெள அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு - ஃபார்முக்கு வந்த ரோகித் சர்மாவால் மும்பை எளிதான வெற்றி20 ஏப்ரல் 2025 விராட் கோலி புதிய சாதனை - இரண்டே நாட்களில் பஞ்சாபை பழி தீர்த்த ஆர்சிபி20 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு ரிஷப் பந்த் கூறிய காரணம் லக்னெள அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசுகையில் "நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக இந்த மைதானத்தில் சேர்த்துவிட்டோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. முதலில் பந்துவீசும் அணிக்கு இந்த மைதானம் நன்கு உதவும். லக்னெளவில் இதுபோன்று எப்போதும் நடக்கும், 2வது இன்னிங்ஸில் விக்கெட் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த தவறுகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். ஆயுஷ் பதோனியை இம்பாக்ட் ப்ளேயராக பயன்படுத்தி, மயங்க் யாதவை கொண்டுவரத் திட்டமிட்டோம். அவரின் உடல்நிலை தேறி இப்போதுதான் வந்துள்ளார். நான் 7-வது வீரராகக் களமிறங்கியதற்கு காரணம், விக்கெட்டை சிறப்பாக பயன்படுத்தவே. அப்துல் சமதை அனுப்பினோம். மில்லர் வந்தபின் விக்கெட்டில் சிக்கிவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் கலவையை அடுத்துவரும் போட்டிகளில் உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெளவை நெருங்கும் ஆபத்து இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியிடுகிறது, நிகர ரன்ரேட்டில் குஜராத் அணியைவிட 0.600 புள்ளிகள் பின்னடைவுடன் 2வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. அதேசமயம், லக்னெள அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 10 புள்ளிகளுடன் பஞ்சாப், ஆர்சிபி அணிகளுடன் லக்னெளவும் மல்லுக்கட்டுகிறது. ஆர்சிபி, பஞ்சாப் நிகர ரன்ரேட் பிளஸில் இருக்கும்போது, லக்னெளவின் ரன்ரேட் 10 புள்ளிகள் பெற்றாலும் மைனசில் இருப்பது ஆபத்தாகும். லக்னெளவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை பெற்றால், 10 புள்ளிகளுடன் லக்னெளவை பின்னுக்குத் தள்ளி 4 அல்லது 3வது இடத்தை நோக்கி நகர்ந்துவிடும். ஆதலால், லக்னெள அணியின் நிலைமை அடுத்துவரும் போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொருத்து மாறும். இப்போது தங்கம் வாங்கலாமா? விலை உயர்வு தொடருமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் பிரதமர் மோதி - வக்ஃப் சட்டம் பற்றி விவாதிக்கப்படுமா?22 ஏப்ரல் 2025 ஐபிஎல் கூடுதல் விவரம் இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்) நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (8 போட்டிகள்) ஜோஸ் பட்லர் (குஜராத்)- 356 ரன்கள் (8 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்)- 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7x1gx7pnxo
-
யாழில் அதிகரிக்கும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அ.ஜோன் ஜிப்பிரிக்கோ
23 APR, 2025 | 10:50 AM யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளது. அதே நேரம் குறிப்பாக வலிகாமம் தென் மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய் கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல தென்னைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெண் ஈ தாக்கம் பாரிய அழிவை நிரந்தரமாக ஏற்படுத்தியுள்ளது. பல மரங்கள் காய்கள் இல்லாமல், ஓலைகள் நிறம்மாறி காய்ந்தும், பட்டுபோன நிலையிலும், பல மரங்கள் உள்ளன. இவற்றைவிட அதன் எச்சங்களினால் தென்னை மரங்களின் பச்சயம் இல்லாமல் மறைக்கப்படுவதுடன் மட்டுமல்ல அருகிலுள்ள பல பயன் தரு மரங்களான மாமரங்கள், பலாமரங்கள், வாழைமரங்கள் என சகல மரங்களினதும் , பயிர்களினதும் இலைகளும் கறுமையாக மாற்றமடைந்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பச்சயம் அற்று ஔித்தொகுப்பு நடைபெறாமல் ஏனைய பயிர்களும் மரங்களும் அதிகம் பாதிப்புள்ளாகி அழிவடையப் போகின்றன. இந்த தாக்கத்தை உரிய விவசாய திணைக்களமோ, மாவட்ட செயலகமோ, பிரதேசசெயலகங்களோ கணக்கில் கொண்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை செய்வதாக தெரியவில்லை. பல பெண் தலைமைத்து குடும்பங்கள், பொருளாதார கஸ்டமுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதாரங்களாக பயிரிட்டுள்ள தென்னை உட்பட ஏனைய பயன்தரு மரங்கள், பயிர்களும் வெண் ஈ தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளதால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வியாக மாறி வருகிறது. ஆகவே சண்டிலிப்பாய் பிரதேசெயலக பிரிவில் மட்டுமல்லாது முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய விவசாய அமைச்சு வடக்குமாகாண ஆளுநர், மாவட்ட செயலர் ஆகியோர் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212705
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - அமைச்சரவை பேச்சாளர்
22 APR, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. அவை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கலவரமடையத் தேவையில்லை. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இந்த விசாரணைகளை முறையாக முன்னெடுத்திருந்தால் தற்போது பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு கைது செய்திருக்கவும் முடியும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணைகளை மறைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. சில விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலான சாட்சிகள் மறைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் கடந்த 6 மாதங்கள் மாத்திரமே விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதற்காக கலவரமடைகின்றர் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும். அண்மையில் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிள்ளையான் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டமையை மாத்திரம் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருகின்றன. அவை தொடர்பில் தற்போதும் மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கப்படும் போது கிடைக்கப் பெறும் தகவல்களில் பெரும்பாலானவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன. இவை தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகள் மிகவும் சிக்கலானவையாகும். கர்தினால் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையக் கூடியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூத்திரதாரி யார்? அவர் ஒருவரா பலரா? அது குறித்து எப்போது அறிவிப்பது என்ற பொறுப்புக்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்போம். எவ்வாறிருப்பினும் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான கால வரையறையை எம்மால் தற்போது கூற முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித தவறும் இல்லை. அவரால் கூறப்பட்டதைப்போன்று தற்போது ஒவ்வொரு காரணிகளாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையிலேயே அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. விசாரணைகளுக்கு தேவையான உதவி, ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் மாத்திரமே அரசாங்கத்தின் தலையீடு காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/212643
-
கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனா ஃபிஷர் பதவி, பிபிசி சூழலியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் தெற்கு எல்லையில் உள்ள கடற்கரையில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் திட்டம் ஒன்று செயல்படத் தொடங்கியுள்ளது. சீக்யூர் (SeaCURE) என்று அறியப்படும் இந்தத் திட்டம் பிரிட்டிஷ் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது. புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியான பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது. ஆனால் ஏற்கனவே வெளியேறிய வாயுக்களை உறிஞ்ச வேண்டும் என்பது இந்த பிரச்னைக்கான தீர்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனப் பல விஞ்ஞானிகளும் நம்புகின்றனர். 'கார்பன் பிடித்தல்' என அறியப்படும் இந்தத் திட்டம், உமிழ்வுகள் ஏற்படும் இடத்திலேயே பிடிக்கப்பட வேண்டும் அல்லது காற்றிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. கடலில் இருந்து புவியை வெப்பமடையச் செய்யும் கார்பனை எடுக்க முடியுமா என்பதைப் பரிசோதிப்பது தான் சீக்யூர் திட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. ஏனென்றால் காற்றை விடவும் தண்ணீரில் தான் கார்பன் அதிக அடர்த்தியில் இருக்கும். இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? இந்தத் திட்டம் செயல்படும் இடத்தின் நுழைவு வாயிலை அடைய நீங்கள் வெய்மௌத் கடலுயிர் மையத்தின் பின் செல்ல வேண்டும். அந்த வழியில் "கவனம்: மோரே மீன்கள் உங்களைக் கடிக்கலாம்" என்கிற அறிவிப்பை கடந்து செல்ல வேண்டும். இந்த மகத்தான திட்டத்தை இங்கு வைத்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பாறைகள் நிறைந்த கடலுக்கு அடியே சென்று, இங்கிலீஷ் கால்வாய் வழியே கடல் நீரை உறிஞ்சி கரைக்குக் கொண்டு வரும் குழாய் இது. தண்ணீரிலிருந்து கார்பனை நீக்குவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை குறைப்பது செலவு குறைந்த வழியாக இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இந்தத் திட்டம் முயற்சி செய்கிறது. சீக்யூர் திட்டத்தில் கடல்நீர் மீண்டும் கடலுக்கு அனுப்பபடுவதற்கு முன்பாக கார்பனை நீக்குவதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் கடலுக்குச் செல்லும் நீர் மீண்டும் அதிக கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி?20 ஏப்ரல் 2025 பூமி போலவே இன்னொரு கிரகத்தில் உயிர்கள் வாழும் அறிகுறி - நாசா ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு21 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,ப்ளைமௌத் கடல் ஆய்வகத்தின் பேராசிரியர் டாம் பெல் கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியமாவது எப்படி? இங்கு வரும் முதல் காட்சி ஊடக செய்தியாளர்கள் பிபிசி செய்தியாளர்கள் தான். ப்ளைமௌத் கடல் ஆய்வகத்தின் பேராசிரியர் டாம் பெல் நமக்கு இந்த இடத்தைச் சுற்றிக் காட்ட வந்துள்ளார். கடல்நீரை மிகவும் அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு சுத்திகரிப்பு செய்வதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. இதன் மூலம் கடல்நீரில் கரைந்திருக்கும் கார்பன் மீண்டும் வாயு ஆகி கார்பன் டை ஆக்ஸைடாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. "இது கடல்நீர் ஸ்ட்ரிப்பர்" எனச் சிரிப்புடன் சொல்கிறார் பேராசிரியர் பெல். இந்த 'ஸ்ட்ரிப்பர்' அமிலத்தன்மை கொண்ட கடல் நீர் மற்றும் காற்றுடனான தொடர்பை அதிகப்படுத்தும் பெரிய துருப்பிடிக்காத ஸ்டீல் தொட்டி ஆகும். "பாட்டிலில் அடைக்கப்பட்ட பானத்தை நீங்கள் திறக்கும்போது நுரை வரும். அது தான் கார்பன் டை ஆக்சைட்." என்கிறார் பெல். "நாங்கள் கடல் நீரை ஒரு பெரிய பரப்பளவில் சேகரிக்கிறோம். இது தரையில் பானத்தை ஊற்றுவது போன்றது தான். கடல் நீரிலிருந்து கார்பன் டை ஆக்சைடு விரைவாக வெளியேற உதவும்." என்றார் காற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டு கருகிய தேங்காய் நார்கள் மூலம் செறிவூட்டப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த ரசாயனம் சேர்க்கப்பட்டு மீண்டும் கடலுக்கு செல்லும் ஓடையில் தண்ணீர் விடப்படுகிறது. இந்த நீர் கடலுக்குச் சென்ற பிறகு மீண்டும் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க மிகச் சிறிய அளவில் பங்காற்றுகிறது. K2-18b கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி? - ஆய்வை வழிநடத்தும் நிக்கு மதுசூதன் யார்?18 ஏப்ரல் 2025 7 மீட்டர் நீளம், அரை டன் எடை - 100 ஆண்டுகளில் முதன்முறை தென்பட்ட பிரமாண்ட கணவாய் மீன்18 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,கடல் நீரில் இருக்கும் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த அல்கலி என்கிற ரசாயனம் சேர்க்கப்பட்டு மீண்டும் கடலுக்கு செல்லும் ஓடையில் தண்ணீர் விடப்படுகிறது நீரை பயன்படுத்துவதால் உள்ள நன்மைகள் என்ன? ஏற்கனவே காற்றிலிருந்து நேரடியாக கார்பனை உறிஞ்சும் நிறைய வளர்ந்த 'கார்பன் பிடித்தல்' தொழிநுட்பங்கள் உள்ளன. ஆனால் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அதற்கே உரிய நன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார் சீக்யூர் திட்டத்தை வழிநடத்தும் முனைவர் பால் ஹலோரன். "கடல் நீரில் காற்றில் இருப்பதை விட 150 மடங்கு அதிக அளவிலான கார்பன் உள்ளது," என்கிறார் ஹலோரன். "ஆனால் இதில் வேறு விதமான சவால்கள் உள்ளன. கடல் நீரில் உள்ள கார்பனைக் குறைக்க நாம் செயல்படுத்தும் திட்டத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது." தற்சமயத்தில் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 100 மெட்ரிக் டன் கார்பன் அளவு கார்பனைக் குறைக்கிறது. ஆனால் இது மிகவும் குறைவு. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து வரும் ஒரு வணிக விமானம் வெளியிடுகிற கார்பன் அளவு கூட இதை விட அதிகம். ஆனால் உலகப் பெருங்கடல்களின் அளவை வைத்துப் பார்க்கையில் இதில் திறன் உள்ளது சீக்யூர் திட்டத்தினர் நம்புகின்றனர். உலகத்தில் உள்ள கடல்நீரில் 1% சுத்திகரிப்பு செய்யப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் நீக்கப்படுவதற்கான திறன் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சீக்யூர் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், கார்பனை நீக்கும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். கடலில் மிதக்கும் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் இது சாத்தியப்படலாம். "ஜீரோ கார்பன் உமிழ்வை அடைய கார்பன் நீக்கம் என்பது அவசியமானது. மேற்கொண்டு வெப்பமடைவதைத் தடுக்க ஜீரோ உமிழ்வு என்பது தேவைப்படுகிறது." என்கிறார் கார்பன் பிடிப்பு தொழில்நுட்ப வல்லுனரும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் உறுப்பினருமான முனைவர் ஒலிவர் ஜெடேன். "கடல் நீரிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. காற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. அடிப்படையில் 15 முதல் 20 வாய்ப்புகள் வரை உள்ளன. இறுதியில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி நிச்சயமாக அதன் செலவைப் பொறுத்து தான் இருக்கும்," என்றார் அவர். சீக்யூர் திட்டம் அரசிடமிருந்து 3 மில்லியன் யூரோ நிதியுதவி பெற்றுள்ளது. இது பசுமை இல்ல வாயுக்களை சேகரித்து, சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களை வளர்க்கும் முயற்சியில் பிரிட்டிஷ் நிதியுதவி வழங்கும் 15 திட்டங்களில் ஒன்று ஆகும். "ஜீரோ உமிழ்வை அடைவதற்கு வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை நீக்குவது அவசியமாகிறது," என்கிறார் ஆற்றல் துறை அமைச்சர் கெர்ரி மெக்காரத்தி. "எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள சீக்யூர் போன்ற புதுமையான திட்டங்கள் இதைச் செயல்படுத்த தேவையான பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்கி, திறன் சார்ந்து வேலைகளை ஆதரிப்பது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது." என்றார். கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,உலகத்தில் உள்ள கடல்நீரில் 1% சுத்திகரிப்பு செய்யப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் நீக்கப்படுவதற்கான திறன் உள்ளது சுற்றுச்சூழல் மீதுள்ள சில தாக்கம் கார்பன் குறைந்த நீர் கடலில் அதிக அளவு இருக்கும் போது, அதில் வாழ்கிற உயிரினங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் உள்ளது. வெய்மௌத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடத்திலிருந்து கடல் நீர் ஒரு குழாய் மூலம் மிகச் சிறிய அளவிலே வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இருக்க சாத்தியமில்லை. எக்ஸ்டர் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் கய் ஹுப்பர் இந்தத் திட்டத்தின் சாத்தியமான தாக்கங்களை ஆய்வு செய்து வருகிறார். அவர் ஆய்வக சூழலில் குறைந்த கார்பன் நீரில் கடல் உயிரினங்களை வைத்து பரிசோதித்து வருகிறார். "கடல் உயிரினங்கள் சில காரியங்களைச் செய்ய கார்பனைச் சார்ந்திருக்கின்றன," என்கிறார். "ஃபைட்டோபிளாங்க்டன் ஒளிச்சேர்க்கை செய்ய கார்பனைப் பயன்படுத்துகிறது. கடற்சிப்பி போன்ற உயிரினங்கள் தனது ஓடுகளை உருவாக்க கார்பனைப் பயன்படுத்துகின்றன. கார்பன் குறைந்த நீரின் அளவை அதிகரிப்பதால் சுற்றுச்சூழலில் சில தாக்கங்கள் இருக்கும்" என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்வதாக ஹுப்பர் தெரிவிக்கிறார். "இதனால் பாதிப்புகள் இருக்கும் என்றாலும் கார்பன் குறைந்த நீரை நீர்த்துப் போகச் செய்வது போல அதை தவிர்ப்பதற்கான வழிகளும் இருக்கலாம். இவை தொடக்கத்திலே விவாதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c793r10zxd9o
-
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும் ; நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைகழங்கள் கல்லூரிகளின் தலைவர்கள் வேண்டுகோள் Published By: RAJEEBAN 22 APR, 2025 | 12:36 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் உயர்கல்வியில் தலையிடுவதை அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் கூட்டாக கண்டித்துள்ளனர். பல்கலைகழகங்கள் கல்லூரிகளின் அமெரிக்க சங்கமே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாங்கள் ஒருகுரலில் பேசுகின்றோம் டிரம்ப் நிர்வாகத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்காக அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை ஏற்க தயாராகயிருக்கின்றோம், நியாயபூர்வமான அரசாங்கத்தின் கண்காணிப்புகளை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் இருப்பினும் எங்களின் கல்லூரிகளில் கற்பவர்கள், வாழ்பவர்கள் பணியாற்றுபவர்கள் மீதான அரசாங்கத்தின் தேவையற்ற தலையீட்டினை எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க கல்விநிறுவனங்கள் தங்களின் சுதந்திரத்தை மீறும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றிணைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது. இதேவேளை ஹவார்ட் பல்கலைகழகம் கல்வி தொடர்பான முடிவெடுப்பதை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு டிரம்ப் நிர்வகாம் முயல்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது. https://www.virakesari.lk/article/212625
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
22 APR, 2025 | 08:58 PM தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பைசரன் பகுதிக்கு கால் நடையாக மட்டுமே செல்ல முடியும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாப் பருவத்தில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸ் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியிலும், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/212684
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
ரணிலுக்கு நாள் குறித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317189
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 40th Match (N), Lucknow, April 22, 2025, Indian Premier League DC chose to field. Lucknow Super Giants (20 ov) 159/6 Delhi Capitals Current RR: 7.95 • Last 5 ov (RR): 41/2 (8.20) Win Probability: LSG 34.50% • DC 65.50%
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றது Published By: VISHNU 22 APR, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (21) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 39ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 39 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் குஜராத் டைட்டன்ஸின் முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் ஷுப்மான் கில், சாய் சுதர்மன், ஜொஸ் பட்லர் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் சிறந்த களத்தடுப்புடன் கூடிய துல்லியமான பந்துவீச்சும் பிரதான பங்காற்றின. இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளை ஈட்டிய குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முன்னிலையில் இருக்கிறது. நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் குவித்தது. சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து முதலாவது விக்கெட்டில் 74 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். முதலாவதாக ஆட்டம் இழந்த சாய் சுதர்மன் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 55 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அடுத்து களம் புகுந்த ராகுல் தெவாட்டியா ஓட்டம் பெறாமல் வந்த வழியே திரும்பிச் சென்றார். ஜொஸ் பட்லர் 23 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஷாருக் கான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கொல்கத்தாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்பித்திலிருந்து குஜராத் பந்துவீச்சாளர்களிடம் சவாலை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித் தலைவர் அஜின்கியா ரஹானே மாத்திரம் சற்று தாக்குப் பிடித்து 36 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார். அண்ட்றே ரசல் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மத்திய வரிசையில் இம்ப்பெக்ட் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா, ராஷித் கான் ஆகிய இருவரும் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர். ஆட்டநாயகன்: ஷுப்மான் கில் https://www.virakesari.lk/article/212590
-
மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டல்; சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது ஒரு எல்லைப்புற மாவட்டம். இதன் இனப்பரம்பல் கணிசமான அளவு மாற்றப்பட்டிருக்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது இந்த ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார பிரச்சனையே. கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட தவறே ஜேவிபி என்ற என்பிபி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தது. இலங்கை மக்கள் என்ற வகையில் பார்த்தால் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி, மக்களுடைய சொத்தை கொள்ளை அடிக்காத அரசாங்கமும், ஆட்சியாளர்களும் இருக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. ஆனால் தமிழ்மக்களை பொறுத்தவரை இதைவிட மேலதிகமாக இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய முதற்படிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நாங்கள் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம். ஆனால் எமது அரசியல் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடிவு நோக்கிய பயணத்தில் மாற்றமில்லாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை இருக்கிறது. தற்போதைய அரசுக்கு பயங்கவரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை நீக்காமல் இப்போதும்பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அதேபோல அண்மையில் வவுனியாவில் மக்களின் சொந்தகாணிகளுக்குள் வனவளத்திணைக்களம் எல்லை போடுகின்றமை தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்றமையால் அதனை தடுக்கமுடிந்தது. ஏன் அரசாங்கத்தால் இதனை செய்யமுடியாது. இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது சொந்த காணிகளுக்குள் செல்வதை இந்த திணைக்களம் எதற்காக தடுக்கிறது. வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ளமக்கள் இது தங்களுக்குரிய காணி என்று தெரிவித்த போது அங்கு நின்ற வனவளத் திணைக்கள அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார். நான் அவர்களை எச்சரித்திருந்தேன். இதன் மூலம் அடக்கு முறை அரசியலை செய்வதற்கு அரசாங்கம் மாறினாலும் அரச நிர்வாகம் மாறவில்லை என்பது புலப்படுகிறது. அதனை மாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஆறுமாதங்களுக்குள் மாற்றுங்கள் என்று கூறுவது இயலாத விடயம்.அதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு நாங்களும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அது பொதுவான பிரச்சனை. ஆனால் இந்த மக்களின் காணி விடயங்களில் நிதி செலவளிக்காமல் உடனடியாக தீர்வினை வழங்கமுடியும். அதனை செய்ய ஏன் தயங்குகின்றனர். இந்த நிர்வாகங்களை கையாளமுடியாத கையாலாகாத அரசாங்கமாகவே இது இருக்கிறது. என்று தெரிவித்தார். https://thinakkural.lk/article/317198
-
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
Published By: VISHNU 22 APR, 2025 | 08:39 PM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 22ஆம் திகதி செவ்வாய்க்கிழைமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/212682
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
Pope Francis Died: வாடிகன் அறிவிப்பு; உலக அளவில் போப்பாண்டவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன? போப் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்படும் சில மணி நேரங்களுக்கு முன்புவரை சந்திப்பு நடத்தினார். சர்வதேச அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன? #PopeFrancis #Catholic #Vatican இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பாக்கு நீரிணை ஒற்றைக் காலுடன் நீந்திக்கடந்து சாதனை படைத்த இந்தியப் பெண்
பாக் ஜலசந்தியை ஒற்றை காலுடன் நீந்திக் கடந்து சாதித்த மாற்றுத்திறனாளியான நீச்சல் வீராங்கனை! Published By: DIGITAL DESK 2 19 APR, 2025 | 05:38 PM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும். இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மரத்தன் முறையில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், வெள்ளிக்கிழமை (18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர். மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனை, வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி. இதற்கு முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார். அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் போலீசார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார். மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து சனிக்கிழமை (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார். ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212393
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்! 21 APR, 2025 | 02:46 PM பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212532
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல்; தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்
21 APR, 2025 | 05:35 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதி செய்துக்கொள்வதற்கு பின்வரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். 1. தேசிய அடையாள அட்டை 2. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு 4. தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டை 5. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தகவல்கள் உறுதிசெய்யும் கடிதம் https://www.virakesari.lk/article/212570
-
வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுகிறது.
-
மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர்!
மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு 21 APR, 2025 | 05:02 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஆஜராகியிருந்தார். இதன்போது, மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். https://www.virakesari.lk/article/212566
-
சனிப் பெயர்ச்சி இன்று உண்டா? திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அறிவிப்பால் சர்ச்சை - அறிவியல் உண்மை என்ன?
Science Vs சனிப் பெயர்ச்சி: ஜாதகத்தில் சனிப்பெயர்ச்சி என்பது என்ன? TV Venkateshwaran Explains சனிப்பெயர்ச்சி, ராசிகள், ஏழரை சனிப் போன்றவற்றை அறிவியல் ரீதியாக எப்படி புரிந்துகொள்வது? மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன் எளிமையாக விளக்குவதை இந்த காணொளியில் காண்போம். Producer - Subagunam இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன் குற்றசாட்டு - தடைகளையும் விதித்தது
20 APR, 2025 | 01:15 PM ரஸ்யாவிற்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீன அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். உக்ரைன் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான், சீனா யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர் மாநாட்டில் சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றது, சீன அரசாங்க பிரதிநிதிகள் ரஸ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டியிருந்தார். உக்ரைனிடம் இது குறித்த தகவல்கள் உள்ளது, எதிர்வரும் நாட்களில் அதனை வெளியிடவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சீனாவின் மூன்று நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ள உக்ரைன் இந்த நிறுவனங்கள் அதிநவீன ஸ்காண்டர்(iskander missile) ஏவுகணைகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/212441
-
ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்
95 வயதில் கோடீஸ்வரர் ஆன விவசாயி; ஒரேயொரு மரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்திய Indian Railway 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக, மஹாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள கர்ஷி கிராமத்தைச் சேர்ந்த 95 வயதான கேஷவ் ஷிண்டே என்ற விவசாயிக்கு ரூ. 1 கோடியை வழங்க மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் உத்தரவிட்டுள்ளது. #Maharastra #RedSandalWood #Farmer இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் நிறைவு : விசேட ஆராதனைகள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு 21 APR, 2025 | 09:57 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் அவர்கள் நம்பிக்கை மீது வைத்த தளம்பாத சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத்தாக்குதலின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பு கொச்சிக்கை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார். இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறையின் தலைவர் மார்சல்லோ கர்தினால் செமேராறோ ஆண்டகையினால் 2024 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் கொழும்பு கொச்சிக்டை புனித அந்ததோனியார் திருத்தலத்திலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலும் தங்களது உயிரை இழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்களும் ஏனையோரின் பெயர்களும் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் அவர்கள் நம்பிக்கை மீது வைத்த தளம்பாத சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ஆண்டகைக்கு அறிவித்துள்ளார். இவர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாற்று சூழலும் சமூக சூழலும் மதத்தின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் தங்கள் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைகளையும் பொதுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் காட்டிய மனப்பாங்கான வீரத்தையும் திருத்துறை மதிப்பிட்டுக்கொண்டு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. மேலும் அதே தினத்தில் உயிரிழந்த வேறு மதங்களைச் சார்ந்த 7 பேரும் மிக்க மரியாதையுடன் நினைவு கூரப்படுகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள இந்த அகராதியில் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக தூண்டப்பட்ட வன்முறையால் நம்பிக்கை மீதுள்ள பொறுப்பு தங்கள் இரக்கத்தை சிந்தியவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் எமது அன்புக்குரிய சகோதர சகோதரிகளும் பிள்ளைகளும் ஆவார்கள். இவர்கள் காட்டிய நம்பிக்கையின் சாட்சியத்தை இறுதி வரை பாதுகாக்கவும் பரப்பவும் நினைவுகளை நிலைத்திருக்கச் செய்யவும் இந்த அறிவிப்பு வழங்கப்படுகின்றது என்று இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212494
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓகோ! அப்ப நாங்க பின்தொடரலயோ அண்ணை?!
-
உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
1,127 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் உள்ள கோளில் உயிர் அறிகுறி தெரிந்தது எப்படி? விஞ்ஞானி நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி படக்குறிப்பு,வான் இயற்பியல் மற்றும் புறக்கோள் அறிவியல் விஞ்ஞானி பேராசிரியர் நிக்கு மதுசூதன் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் K2-18b. பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதும், பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் (சுமார் 1,127 லட்சம் கோடி கி.மீ. ) தொலைவில் அமைந்துள்ளதுமான இந்தப் புறக்கோள்தான் இன்று உலகளவில் பேசுபொருளாக இருக்கிறது. இந்தப் புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 99.7% இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதுவே, இந்தப் புறக்கோள் (சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்) குறித்து இன்று அதிகம் பேசப்படுவதற்குக் காரணம். இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதும் அளவுக்கு அப்படி என்ன கிடைத்தது? இந்தப் புறக்கோளில் என்ன இருக்கிறது? இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட குழுவை வழிநடத்தியவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மற்றும் புறக்கோள் அறிவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் நிக்கு மதுசூதன், தனது கண்டுபிடிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவரது நேர்காணல் இங்கே. பேரண்டத்தில் உயிர்களின் இருப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கேள்வி: விண்வெளி அறிவியல் மீதும் குறிப்பாக பூமியைத் தாண்டி வாழும் உயிர்களுக்கான தேடல் மீதும் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் இளம் வயதில் இதன் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது எது? பதில்: குறிப்பாக விண்வெளி அறிவியல் என்றில்லை. ஆனால், அடிப்படை அறிவியல் மீது மிகவும் ஆர்வமாக இருந்தேன். அணு இயற்பியல், துகள் இயற்பியல் அல்லது நுண் இயற்பியல், வான் இயற்பியல் அனைத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகவே, இவற்றில் புதிய துறைகள் உருவாக வாய்ப்புள்ளவற்றை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தேன். அப்படி தேடிக் கொண்டிருக்கும் போது, வான் இயற்பியலில் கருந்துளை பற்றிக்கூட ஆய்வு செய்துள்ளேன். உயர் ஆற்றல் வான் இயற்பியலில் ஆய்வு செய்யத் தொடங்கியிருந்தபோது புறக்கோள்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அப்படித்தான் இந்தத் துறைக்கு மாறினேன். கேள்வி: உங்கள் அறிவியல் ஆய்வுப் பயணத்தில், வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பது பற்றிய பார்வை எப்படி மாறியுள்ளது? அது உண்மையில் இருக்கலாம் என்று எப்போதுமே நம்பினீர்களா? பதில்: தரவுகளின்படி பார்த்தால், ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் இருப்பது நமக்குத் தெரியும். பிற நட்சத்திரங்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தாலும், அதில் எங்காவது உயிர்கள் இருக்கலாம் என்று கணிப்பது மிக எளிது. அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மண்டலத்திற்கு வெளியே கோள்கள் இருப்பது பற்றி நமக்குத் தெரியாது. சூரிய மண்டலம் தனித்துவமானது என்று மக்கள் கருதினர். வேறு கோள்கள் இல்லை என நினைத்தனர். ஆனால், இப்போது பெரும்பாலான நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் என்று நமக்குத் தெரியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்த எண்ணிக்கையை வைத்தே, அதில் எங்காவது உயிர் இருக்கலாம் என யூகிக்கலாம். இன்னும் அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. ஆனால், இந்தத் துறையில் இதுவரை நான் செய்த ஆய்வுகள், அவதானித்த தரவுகள் அந்த ஊகத்திற்கு வலு சேர்க்கின்றன. அதுமட்டுமின்றி, நம்மிடம் அதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. அது மிக முக்கியமான விஷயம். ஒருவேளை பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கலாம். ஆனால், அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இல்லையென்றால், அப்படி யூகிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இருக்காது. இப்போது கிடைத்துள்ள ஆய்வு முடிவு முக்கியமானது. இது மிகப்பெரிய தருணம். மனித வரலாற்றில் முதன்முறையாக, ஒரு குறிப்பிட்ட கோளில் உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் திறன் நம்மிடம் இருக்கிறது. அதன் உதவியுடன் ஒரு கோளை ஆய்வு செய்து, உயிர் இருப்பதற்கான சில குறிப்புகளைக் கண்டறிந்துள்ளோம். இத்தகைய ஆய்வை இன்னும் அதிகமாக புறக்கோள்களில் செய்வதன் மூலம், பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்கலாம். அது இரு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளில் என எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்தச் சூழல் நமக்கு முன்பு இருக்கவில்லை. அதை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகவே நான் பார்க்கிறேன். ரூ.1.28 கோடியில் விண்வெளிச் சுற்றுலா - விஞ்ஞானிகள் எச்சரிக்கும் ஆபத்து என்ன?20 ஏப்ரல் 2025 ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' அறிவியல் உலகையே மாற்றிய கதை19 ஏப்ரல் 2025 K2-18b புறக்கோளில் உயிர்கள் வாழும் அறிகுறி தெரிந்தது எப்படி? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,K2-18b புறக்கோள் கேள்வி: K2-18b புறக்கோளுக்கு வருவோம். பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்தக் குறிப்பிட்ட புறக்கோள் உதவும் என்பதில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? பதில்: அறிவியல் கோணத்தில், கண்டிப்பாக ஆதாரங்கள் வேண்டும். ஆகவே, இப்போது அதை மிக உறுதியாகக் கூற முடியாது. இப்போதுள்ள தரவுகளும், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கடந்த பல ஆண்டு கால ஆய்வில் கிடைத்த அனைத்து தரவுகளும், எங்களுக்கு அளிக்கும் விளக்கம், இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்பதே. உயிர் வாழ ஏதுவான பெருங்கடலும், அதில் உயிர்களும் இருக்கலாம் என்பதே. இப்போதைக்கு அதுதான் சரியான விளக்கமாக உள்ளது. ஆனால், நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். இது உறுதியல்ல, ஆரம்பக்கட்ட ஆய்வுகள்தான். மேலதிக ஆய்வுகள் உண்மை அப்படியல்ல எனவும் கூறலாம். ஆனால், சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது உண்மையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேள்வி: K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான (99.99994%) ஆதாரங்களை திரட்ட என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? பூமியைத் தாண்டி உயிர்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? பதில்: நமக்கு இப்போது கிடைத்துள்ள தரவுகளே இதுவரை கிடைக்காத ஒன்றுதான். துகள் இயற்பியலில் ஹிக்ஸ் போசானை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பெரிய பெரிய கண்டுபிடிப்புகள், மிகவும் நுண்ணிய அளவில் கண்டறியப்படுவதன் ஊடாகவே தொடங்குகின்றன. இயற்பியலின் பல பிரிவுகளிலும் இதே கதைதான். இங்கு அப்படித்தான் நடக்கிறது. இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வாயிலாக சிறு ஆதாரம் கிடைத்துள்ளது. அது மேலும் அதிகமாக ஆய்வு செய்யத் தூண்டுகிறது. ஆகவே கூடுதலாக கவனம் செலுத்துகிறோம். இப்படியாக முழு திறனையும் பயன்படுத்தும்போது, காலப்போக்கில் சிக்மா ஃபைவ் (99.99994%) அளவுக்கான ஆதாரம் கிடைக்கும். ஆரம்பத்தில் நாங்கள் டைமெதைல் சல்ஃபைடு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், இன்னும் கூடுதல் நேரம் வேண்டுமென்று சொல்லியிருப்போம். ஆனால், 2023இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இந்தப் புறக்கோளை 1-5 மைக்ரான் என்ற அளவில் கண்காணித்த சிறிது நேரத்திலேயே, முதல் முறையாக கரிம மூலக்கூறுகள் அடங்கிய வேதிமங்களைப் பார்த்தோம். இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், அந்தக் கோளின் வளிமண்டலத்தில் அவை அதிகமாக இருப்பதுவே அவற்றை எளிதாக நாங்கள் கண்டறியக் காரணம். அதோடு, மிகவும் சிறிய அளவில் டைமெதைல் சல்ஃபைட் இருப்பதற்கான தரவுகள் கிடைத்தன. அது மிகச் சிறிய சிக்னலாக இருந்தது. அது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு இல்லையென்றாலும், எங்களை மேற்கொண்டு ஆய்வு செய்யத் தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது. பிறகு நாங்கள் மீண்டும் ஆய்வு செய்தோம். இந்த முறை 5-10 மைக்ரான் என்ற அளவில் வைத்து புறக்கோளை அவதானித்தோம். அதன் மூலம் சிக்மா த்ரீ(Sigma Three) அளவுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு கோளை தொலைநோக்கியில் ஆராயும்போது, அதில் உயிர் இருப்பதற்கான அடையாளம் தென்படுமென்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ஆகவே, நாம் ஏற்கெனவே கணிசமான ஆதாரங்களைப் பார்க்கிறோம் என்பதால் இதுவே முக்கியமான முன்னேற்றம்தான். இதோடு, இனி வரும் நாட்களில் இந்தத் தரவுகளை மேலும் வலுவாக உறுதி செய்ய முடிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்று அவதானிப்புகளை மேற்கொள்வோம். அதற்கு வெகு காலம் எடுக்காது, ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். K2-18b கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி? - ஆய்வை வழிநடத்தும் நிக்கு மதுசூதன் யார்?18 ஏப்ரல் 2025 முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 மீத்தேன் வாயுவுக்கும் உயிர் இருப்புக்குமான தொடர்பு பட மூலாதாரம்,CAMBRIDGE UNIVERSITY படக்குறிப்பு,K2-18b புறக்கோள் கேள்வி: K2-18b கோளில் டைமெதைல் சல்ஃபைட், டைமெதைல் டைசல்ஃபைட் அபரிமிதமாகக் காணப்படுகிறது. நீங்களும் உங்கள் ஆய்வுக் கட்டுரையில், வருங்காலத்தில் இதை மீத்தேன் அதிகமுள்ள வளிமண்டல மாதிரிகளின் மூலம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கவுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். உயிர்கள் இல்லையென்றால் மீத்தேன் உற்பத்தி தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்பது நமக்குத் தெரியும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 99.99994% நிச்சயமாக உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்திற்கு வர முடியுமா? பதில்: இதுவொரு சுவாரஸ்யமான கருத்து. நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி உயிர்களின் இருப்புடன் பூமியில் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கோளிலும்கூட அங்கு வாழக்கூடிய உயிர்கள் மீத்தேன் உற்பத்திக்குக் காரணமாக இருக்கலாம். மீத்தேன் இருப்பு என்பது நிச்சயமாக சிக்மா 5 அளவுகோலை எட்டுவதற்கான ஆதாரம்தான். அதில் சந்தேகமே கிடையாது. இருந்தாலும், நாங்கள் அதை இன்னும் வலுவாக உறுதி செய்துகொள்ள முயல்கிறோம். நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இந்தப் புறக்கோளுடைய வளிமண்டலத்தின் பெரும்பகுதி, பூமியில் இருப்பதைப் போன்ற நைட்ரஜன் மிகுதியுடைய ஒன்றல்ல. மாறாக, அது ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம். அவ்வளவு ஹைட்ரஜன் இருக்கும்போது, உயிர்களே இல்லாமல் வேறு காரணிகளின் மூலமாகவும் கூட மீத்தேன் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம். ஆகவே, அத்தகைய உயிர்களற்ற காரணியால் உற்பத்தியான மீத்தேனை, உயிர்கள் இருப்பதற்கான சான்றாகக் கருதிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதன் காரணமாகவே, உயிர்கள் இருந்தால் நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி இருக்கும் என்றாலும், மீத்தேன் இருப்பதாலேயே இந்தக் குறிப்பிட்ட புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இந்தக் கோளில் கண்டறியப்பட்ட டி.எம்.எஸ்-இன் (டைமெதைல் சல்ஃபைட்) இருப்பு அதிலிருந்து வேறுபட்டது. அதிக அளவில் வளிமண்டலத்தில் அது காணப்படுவது, உயிர்கள் இல்லாமல் சாத்தியமில்லை. இருந்தாலும், திறந்த மனதுடன் வேறு காரணங்களும் இருக்கக்கூடுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். பட மூலாதாரம்,NASA கேள்வி: டைமெதைல் சல்ஃபைடோ அல்லது டைமெதைல் டைசல்ஃபைடோ நேரடி மீத்தேன் அல்ல. மாறுபட்ட வடிவத்தில் நடக்கக்கூடிய மீத்தேன் உற்பத்திதானே! அதோடு, ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம் என்பதால், உயிர்களற்ற வேறு காரணங்களால்கூட இந்த வேதிமங்கள் உற்பத்தி ஆகியிருக்கலாம் அல்லவா? பதில்: ஆம். இந்த வேதிமங்களை உயிர்களற்ற சூழலில் குறைந்த அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால், இந்தப் புறக்கோளில் இவற்றின் அளவு அதீதமாக உள்ளது. அங்கு இந்த வேதிமங்கள் பூமியில் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்தி உயிர்கள் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் விஷயம். கோட்பாட்டு ஆய்வுகள், இந்த அளவுக்கு இவை இருக்க வேண்டுமெனில், அதற்கு குறைந்தபட்சம் 20% உற்பத்தியேனும் உயிர்களிடம் இருந்து வர வேண்டும் எனக் கூறுகின்றன. அதனால்தான், இதைச் சரியான பாதையாகக் கருதுகிறோம். இருந்தாலும், நமக்குத் தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. எனவே வேறு புதிய சாத்தியங்களும் இருக்கலாம் என்ற கோணத்திலும் இதை ஆராய வேண்டியுள்ளது. கேள்வி: நீங்கள் வேறு ஏதேனும் புறக்கோள்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? இதேபோன்ற பிற ஹைஷன் கோள்களின் வளிமண்டலங்களுடன் இதன் தரவுகளை ஒப்பிடுவது இந்த வாயுக்களின் உயிரியல் மற்றும் உயிரியல் அல்லாத உற்பத்திக் காரணிகளை வேறுபடுத்திப் பார்க்க உதவுமா? பதில்: நிச்சயமாக உதவும். வேறு சில கோள்களிலும் அத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் சிலவற்றின் தரவுகள் கைவசம் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அவை குறித்து விரிவாகப் பேச இயலாது. கேள்வி: ஒருவேளை, K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த உயிர்கள் பூமியில் உள்ள உயிர்களை ஒத்த அடிப்படையைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதா அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமா? பதில்: அங்கு என்ன மாதிரியான உயிர்கள் இருக்கலாம் என்பது குறித்து நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பூமியில் வாழக்கூடிய எளிய, நுண்ணிய உயிர்கள் இந்த வேதிமங்களை உற்பத்தி செய்வதால், அதேபோன்ற நுண்ணுயிர்களே இந்தப் பெருங்கடல்சூழ் புறக்கோளிலும் இருக்கக்கூடும் என்று நாம் யூகிக்கலாம். ஆனால், அதைத் தாண்டி எப்படியான உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கணிப்பது சாத்தியமில்லாதது. இப்போதைக்கு அதில் எந்தக் கருத்தையும் நம்மால் கூற முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce826w24588o