Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் அநுர அரசும் பல்டி - இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவிடம் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை 12 APR, 2025 | 12:52 PM - ஆர்.ராம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்கும் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேர்தல்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அரசாங்கம் நீக்கும் வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கால எல்லை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுக்கு வரவுள்ளநிலையில் அதனை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அப்பின்னணியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றது. தொழில்துறையும் மக்களும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் வரிச்சலுகைகள் அவசியமானவை என்பது பொதுப்படைய விடயமாகும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இலங்கையில் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டமானது தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று தான் ஜே.வி.பியையும் இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பயன்பாட்டில் பாதிப்புக்குள்ளான அனுபவம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கும் நன்றாகவே உள்ளது. அவ்வாறான நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், அவ்விதமான நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முழுமையாக மாறியிருக்கின்றார்கள். தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை பல்வேறு விதமான காரணங்களுக்காக பயன்படுத்தும் நிலைமைகளே உள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த காலத்தில் இருந்த அத்தனை அரசுகளும் அதனை நீக்குவதாகவே கூறிவிட்டு இழுத்தடிப்புக்களைச் செய்து வந்திருந்தார்கள். அப்பின்னணியில் ஒரு கட்டத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தபோது பிரஸ்ஷல்சுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக உறுதியளித்துவிட்டு வந்திருந்தார். அதன்பின்னர் அவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு விளைந்தார். எனினும் அது கைகூடவில்லை. அதன்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுவும் நிறைவேறவில்லை. குறித்த இரண்டு சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்தது. அச்சட்டமூலங்கள் பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோது அதில் பங்கேற்க முடியாது என்று ஜே.வி.பி.அறிவித்ததோடு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவது தான் தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டது. தமது ஆட்சியில் நீக்கப்படும் என்றும் கூறியது. எனினும், நாங்கள் நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டையையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது ஜே.வி.பியும் அதனை ஆதரித்துள்ளது. தற்போது, அந்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதில் சட்டத்தினை இயற்றுவதற்கு தயாராகின்றது. அநுர அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்துடனான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பை குழுவானது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடடினாக நீக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கோர வேண்டும் என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்களில் ஒன்றான பி.ஆர்.எல்.எம்.இன் தலைவரும் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமானது, தற்போது வரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்தினை நீக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். ஆனால், ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எமக்கும் வழங்குவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்பினருக்கும் வழங்குவார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது கிடையாது. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் மட்டுமல்ல, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த நிலைமையே தற்போது வரையில்நீடிக்கின்றது. தற்போது ஆட்சிக்கு வந்தவர்களும் இந்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருந்தாலும் சில விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் இறைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாகவே உள்ளது. ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி தான் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஏமாற்றும் தந்திரமாகும். ஆகவே தற்போதைய அரசாங்கமும் ஏமாற்றுச் செயற்பாட்டையே செய்கிறது,போலி வாக்குறுதியையே வழங்கியுள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரையில் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை நீக்க வேண்டும். அதன் மூலமாகவே அரசாங்கத்தினை வழிக்குக் கொண்டுவர முடியும் என்றார். https://www.virakesari.lk/article/211885
  2. படக்குறிப்பு,ஜான் ஜெபராஜை கைது செய்த போலீஸார் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார். தனிப்படை போலீஸார் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் ஜான் ஜெபராஜை போக்சோ நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்போடு காவல்துறையினர் அழைத்து வந்தனர். யார் இந்த ஜான் ஜெபராஜ்? பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது ஜான் ஜெபராஜின் கிறிஸ்தவ மத இசை நிகழ்ச்சிகளுக்கு, பெரும் கூட்டம் கூடுவது வழக்கமாகவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களிலும் இவர் இசை ஊழிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தென்காசியை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (வயது 37), ஒரு கிறிஸ்தவ மத போதகர். தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, அவருடைய சொந்த ஊர் செங்கோட்டை. எஸ்எம்எஸ்எஸ் அரசுப்பள்ளியில் கடந்த 2005 வரை படித்த பின், சதர்ன் ஆசியா பைபிள் கல்லுாரியில் படித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெவிமினிஸ்ட்ரிஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி, அதனை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ், கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார். இலங்கையில் பள்ளி செல்லும் வயதில் 'தாயாகும்' சிறுமிகள் - காரணங்களும் தீர்வுகளும் என்ன? கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் கடந்த ஆண்டிலிருந்து அந்த ஆலயமும் மூடப்பட்டுவிட்டதாக கிராஸ்கட் ரோட்டில் உள்ள அந்த கட்டடத்துக்கு அருகில் இருப்பவர்கள், பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர். அதன்பின், தனியாக அரங்கங்களை எடுத்து ஜெபக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் ஜான் ஜெபராஜ் நடத்தி வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக, கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளன. அதேபோன்று, அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசுகிற பேச்சுக்கள், பாடல்கள் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் இளைஞர்களின் கூட்டம் மிக அதிகளவில் திரள்வதையும் அதில் காண முடிகிறது. அவருடைய பேச்சும், பாடல்களும், நடனமும் இளைய வயதினரை குறி வைப்பதாகவுள்ளன. கடந்த சில மாதங்களாக கோவையில் ஜான் ஜெபராஜ் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை என்பதும், அவர் இங்கு இல்லை என்பதும் அவருடைய சமூக ஊடகப் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின்போது, 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, தற்போது ஜான் ஜெபராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெயர் கூற விரும்பாத காவல் அதிகாரி, ''கடந்த 2024 மே மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அந்தக் குழந்தைகள் யாரிடமும் சொல்லவில்லை. சில மாதங்களாக அவர் கோவைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிதான், தங்களுக்கு நடந்தது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி பெயரில்தான் தற்போது புகார் தரப்பட்டு, இரு சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார். டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 Y மற்றும் U ஆகிய எழுத்துகளால் பெண் காவல் அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?9 ஏப்ரல் 2025 மற்ற பாஸ்டர்களின் விமர்சனம் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 (I) (m) (கடுமையான பாலியல் தாக்குதல்) மற்றும் அதற்கான தண்டனைப் பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதால் வேறு எந்தத் தகவலையும் பகிர முடியாது என்று காவல் ஆய்வாளர் ரேணுகா கூறியுள்ளார். ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, ஆதரவும், எதிர்ப்புமாக பலவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஜெபராஜுக்கும், மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களுக்கும் இடையில் இணக்கம் இல்லை என்பதும், மோதல் இருந்ததும் பல்வேறு பதிவுகளின் மூலமாகத் தெரியவருகிறது. இதே கருத்தை, பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு பாஸ்டர்களும் தெரிவித்தனர். இதற்கு முன்பாக ஜான் ஜெபராஜ் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பல்வேறு காணொளிகளிலும் இந்த மோதல் போக்கு வெளிப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 குறிப்பாக, கிறிஸ்தவ மதபோதகர் அகஸ்டின் ஜெபக்குமார் என்பவர், இவரை 'பாட்டுக்காரன்' என்று கூறி, இவர் மேடையில் பேசுகிற சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஜான் ஜெபராஜும் தனது இசை நிகழ்ச்சிகளில் அகஸ்டின் ஜெபக்குமார் பெயரைக் குறிப்பிட்டே விமர்சித்துள்ளார். இவ்விருவருக்கிடையிலான மோதல் காணொளிகளும் சமூக ஊடகங்களில் இன்னும் வலம் வருகின்றன. வேறு சில மதபோதகர்களும் இவரைப் பற்றி விமர்சித்துள்ளனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை கிறிஸ்தவ மதபோதகர்கள் ஐக்கியம் (Pastor's Fellowship) அமைப்பின் தலைவர் சாம்சன் எட்வர்டு, ''கோவையில் பெந்தகோஸ்தே சபை பாஸ்டர்கள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்கள் என மொத்தம் 800 பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ளனர். இதில் ஜான் ஜெபராஜ் எப்போதுமே இணைந்ததில்லை. அவரை ஒரே ஒரு நிகழ்வில் ஐந்தே நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.'' என்றார். அவர் மீதான பாலியல் புகாரின் உண்மைத்தன்மை குறித்து எதுவும் தனக்குத் தெரியாத நிலையில், அதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது என்று கூறிய சாம்சன் எட்வர்டு, கடந்த சில மாதங்களாக அவர் கோவையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்றார். கோவையில் அவர் எந்த ஆலயத்தையும் வெகுகாலம் நடத்தியதில்லை என்றும் அவர் கூறினார். மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 திரை வசனங்களை பயன்படுத்தியவர் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி காணொளிகளில், இளைய வயதினரை ஈர்க்கும் வகையில், சினிமா பாடல் மெட்டுக்களில் கிறிஸ்தவப் பாடல்களை பாடுவதும், ஆடுவதும் நகைச்சுவை நடிகர்கள் வடிவேல், விவேக் உள்ளிட்ட பலருடைய பிரபல வசனங்களை அவர் அடிக்கடி பயன்படுத்துவதும் தெரிகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் நடத்துவது போலவே, அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கும் Live in Concert என்றே சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் நடந்துள்ளது. தன்னைத் தேடி வரும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து, பொறாமையிலேயே மற்ற மத போதகர்கள் தன்னை விமர்சிப்பதாக இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசியதையும் காணொளிகள் வாயிலாக பார்க்க முடிகிறது. ஜான் ஜெபராஜ் குறித்து மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களும், மற்றவர்களைப் பற்றி ஜான் ஜெபராஜும் காணொளிகளில் பகிர்ந்துள்ள தகவல்களையும், கருத்துகளையும் பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜான் ஜெபராஜ் மற்றும் அவர் தரப்பில் தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், ''ஜான் ஜெபராஜ் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர் வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் விரைவில் அவர் கைதாக வாய்ப்பு அதிகமுள்ளது,'' என்றார். அவர் மீது வேறு எந்தப் புகார்களும் வந்துள்ளதா என்பது பற்றி கேட்டபோது, ''இதுவரை வேறு எந்தப் புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடந்திருந்தாலும் இப்போதுதான் புகார் வந்துள்ளது. அதனால்தான் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் காவல் ஆணையர் சரவணசுந்தர். கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 வேலை, ஓய்வூதியம், வட்டி: பங்குச் சந்தை சரிவு உங்களை எவ்வாறு பாதிக்கலாம்? 4 முக்கிய விஷயங்கள்9 ஏப்ரல் 2025 மே 18 – சென்னையில் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 18 ஆம் தேதியன்று சென்னை காமராசர் அரங்கத்தில் 'JJ-REBORN என்ற பெயரில் ஜான் ஜெபராஜ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடப்பதாக அவருடைய சமூக ஊடகப்பக்கங்களில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. டிக்கெட் புக்கிங் நடப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் தேவாலயம் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை என்னுடன் இருந்தவன் திருடிவிட்டான், புதிய தேவாலயம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவாகும். அதற்கு நிதி திரட்டவே இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு பண உதவி செய்ய விரும்பாதவர்கள், இதைப் பொருட்படுத்த வேண்டாம். தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம், '' என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM வழக்குப்பதிவுக்கு முன் ஜான் ஜெபராஜ் வெளியிட்ட ஆடியோ போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு, 3 வாரங்களுக்கு முன்பு, ஜான் ஜெபராஜ் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் ஒரு மணி நேரம் அதில் அவர் பேசியுள்ளார். கோவை ஒய்எம்சிஏ கட்டடத்தில் முதல் முதலாக சபையைத் துவக்கியது குறித்தும், அதன்பின் கிராஸ்கட் ரோட்டில் மற்றொருவருடன் இணைந்து சபை நடத்தியதாகவும் அதில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் முதல் தேதியன்று கோவையில் புதிய கட்டடத்தில் மீண்டும் சபை துவங்குமென்றும் உறுதியளித்துள்ள அவர், தற்போது தன்னுடைய சபையில் 2,300 குடும்பங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தன்னைப் பற்றி அவதுாறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுத்தளத்தில் வைத்தால் அதைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும் பேசியுள்ளார். பல்வேறு பிரச்னைகளால் சாப்பிடாமல் 9 கிலோ எடை குறைந்ததாகவும், தற்கொலைக்கு பலமுறை முயன்றதாகவும் அந்த ஆடியோவில் ஜான் ஜெபராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்துள்ள இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கடவுளே நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆடியோவையும் முக்கிய ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக காந்திபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5xx2qv31lo
  3. 13 APR, 2025 | 10:36 AM சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர். அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார். செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்ன செய்துள்ளது என்று? இலங்கையில் சுமார் 75 ஆண்டுகளாக வரலாற்றைக் கொண்ட தன்மானம் மிக்க தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய மிக்க தமிழரசுக் கட்சி இந்த கிராமத்திற்கு மாத்திரம் அல்ல வடகிழக்கு தமிழர் தாயகத்திற்காக பல உயிர் தியாகங்களை செய்திருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய கட்சி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் ஐயாவை நாங்கள் பலி கொடுத்திருக்கின்றோம். நிமலன் சவுந்தரநாயகம் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். சந்திரநேரு ஐயாவை பலி கொடுத்திருக்கின்றோம், கொழும்பில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல உயிர் தியாகங்களை செய்த கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சி மாத்திரமே. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக முப்பது ஆண்டுகள் யுத்தம் செய்தனர், அகிம்சை வழியில் அரசியல் வழியில் போராடினர். அந்த நேரத்தில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாத அரசுகள் கூட தமிழ் மக்களின் போராட்டத்தை ஏற்று பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் இன்று இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக ஆட்சிக்கு வந்த அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைப் பிரச்சினையும் இல்லை என்ற கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, அரசியல் அதிகாரத்தை தர மறுக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுகிறது, மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் கிராமங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரம் அல்ல தென்னிலங்கையில் உள்ள பல பேரினவாத கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக இங்குள்ள சில தமிழர்களை ஏமாற்றி கையூட்டுக்களை கொடுத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை தருவதில்லை அவர்கள் தொடர்ந்து சிங்கள மக்களுக்கான ஆட்சியையே நடாத்தி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதைத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் தங்களது இருப்பைப் பாதுகாக்க எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு இன்று வந்து எமது வீட்டு திண்ணையை தட்டுகின்றனர் தேசிய மக்கள் சக்தி வாக்களிக்குமாறு. நாம் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் அல்ல ஏனை மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிப்போமாக இருந்தால் நாம் எமது அடையாளத்தை, நாம் தமிழர்கள் என்ற பூர்வீகத்தை எமது வரலாற்றை இழப்போம் என்பதோடு எமது இருப்பை பாதுகாப்பதற்கும் இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்றுவரை போராடிவரும் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211944
  4. 13 APR, 2025 | 10:24 AM உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறுகையில் , தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது. கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே.. அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள். இதற்காக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே தான் இம் முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள். பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை பார்த்தால் அவர்களுக்குப் பின்னால் மரம் உள்ளது. அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள். நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம். இன வாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தியுள்ளார்கள். எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, கடன் சுமை என பல இடர்களை சந்தித்தது. தற்போது பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். இதனையடுத்து அரச சேவையை மீள் எழுச்சி பெறவும் மக்களுக்கு திறந்த சேவைகளை வழங்கவும் அரசாங்க துறையில் சம்பள உயர்வை ஏற்படுத்தியுள்ளோம். ரூபா 38000 பெற்ற ஒருவர் ரூபா 63000 வரை பெறுகிறார். ரூபா 54000 பெற்ற வைத்தியர் ரூபா 94000 பெறுகிறார். இதற்காக இந்தவருடம் 11 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 30000 உத்தியோகத்தர்களை அரச துறையில் ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போன்று அரசாங்க கொடுப்பனவுகளான அஸ்வெசும நலன்புரி சேவை, முதியோர், சிறுநீரக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளர்களை இணைக்கவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/211942
  5. வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் 13 APR, 2025 | 10:08 AM வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது. சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/211938
  6. 12 APR, 2025 | 12:23 PM - ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோக பூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலைமையானது வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது. அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை. அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை. மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள். டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்காத நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்காக டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/211882
  7. சாதனைமேல் சாதனை: அபிஷேக் சிக்சர் மழையால் 246 ரன் இலக்கை அநாயசமாக எட்டிப் பிடித்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியுள்ளது. 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றிருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து ரசிகர்களை வியக்க வைத்தது. அந்த அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட், இந்த தொடரில் முதன் முறையாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்து சாதனை சதத்துடன் அந்த அணியை எளிதாக வெற்றி பெறவும் வைத்தார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலிலும் ஏற்றம் கண்டுள்ளது. அதிரடியால் மிரட்டிய அபிஷேக் சர்மா பல சாதனைகளையும் படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. முந்தைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வியில் தள்ளிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மிரட்டினார். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பிரப்சிம்ரன் பவுண்டரிக்கு விரட்ட, அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தை கிரீசுக்கு வெளியே வந்து சிக்சருக்கு விளாசினார் ஆர்யா. ஷமியின் அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். இருவரது அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது. ஆனால் ஆர்யாவின் வாண வேடிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் ஹர்ஷல் படேல் நேற்றைய ஆட்டத்தின் போக்கால் தொடக்கத்திலேயே கொண்டு வரப்பட்டார். அதற்கு சன்ரைசர்ஸ் அணிக்க பலனும் கிடைத்தது. 13 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசியிருந்த ஆர்யா, ஹர்ஷல் படேல் பந்தில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாசும் தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்தார். சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரப்சிம்ரன் ஸ்ரேயாஸ் விளாசல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆர்யா அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரனும் கேப்டன் ஸ்ரேயாசும் ரன்ரேட்டை அதிகபட்ச நிலையில் அப்படியே பராமரித்தனர். இருவரது பேட்டில் இருந்தும் பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் சென்ற வண்ணம் இருந்தன. ஸ்ரேயாஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான அரைசதத்தை எட்டினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் கண்டார். மறுபுறம் சன்ரைசர்ஸ் சார்பில் ஐபிஎல் அறிமுகம் கண்ட ஈஷான் மலிங்கா தனது முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்தார். பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் ஹர்ஷல் படேல் இம்பாக்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்த ஹர்ஷல் படேல் இறுதிக்கட்ட ஓவர்களிலும் தாக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 250 ரன்களை எளிதாக தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அணை போட்டவர் ஹர்ஷல் படேல்தான். ஆட்டத்தின் 15-வது ஓவராக தனது மூன்றாவது ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் அதிரடியில் எதிரணிகளை மிரட்டக் கூடிய ஷஷாங்க் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல், 18-வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தடாலடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஹர்ஷல் பெவிலியனுக்கு அனுப்பினார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் எடுத்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவரது அணி ரசிகர்களை குஷிப்படுத்தினார். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை குவித்தது. ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்ஷல் படேல் (பவுலர்) சன்ரைசர்ஸ் பதிலடி 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி இந்த சீசனில் முதன் முறையாக சிறப்பான தொடக்கம் தந்தது. யான்சென் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி வாண வேடிக்கையை தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முந்தைய போட்டிகளில் ஜொலிக்காத அபிஷேக் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 2 முறை அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பவும் செய்தார். 28 ரன்களை எடுத்திருந்த போது டீப் பாயிண்டில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யாஷ் தாகூர் தவறவிட்டார். அதேபோல், 57 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய ஓவரில் அபிஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இரு கண்டங்களில் இருந்தும் தப்பிய அபிஷேக் தனது அதிரடியை ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்தில் தொய்வடைய விடவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் டிராவிஸ் ஹெட் - மேக்ஸ்வெல் வாக்குவாதம் 19 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அவர் அசத்தினார். அபிஷேக் - ஹெட் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 7.3 ஓவரிலயே சதத்தை எட்டிவிட்டது. டிராவிட் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். சேஸிங்கில் 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான ரன்னில் பாதியை எடுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை எட்டிய போது ஒருவழியாக முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 13-வது ஓவரில் சாஹல் வீசிய இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் செய்தார். எனினும், இதனை பெரிய அளவில் கொண்டாடும் மனநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கவில்லை. காரணம், முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய போது சன்ரைசர்ஸ் அணி சாத்தியமில்லாததாக கருதப்பட்ட வெற்றியை சாத்தியமான ஒன்றாக ஆக்கியிருந்தது. டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா சதம் டிராவிஸ் ஹெட் அவுட்டானதும் அடுத்த 4 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் சதம் இதுவாகும். தொடக்கம் முதலே வாண வேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை அதுவும், சேஸிங்கில் அடித்தார். சதம் அடித்ததும் தனது ஸ்டைலில் கொண்டாடினார். அத்துடன், 'இது ஆரஞ்சுப் படைக்கானது' என்று ஒரு பேப்பரை பெவிலியனை நோக்கி காட்டினார். இந்த சீசனில் முந்தைய போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அபிஷேக் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி, 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கட்டத்தில் ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. கிளாசனும், இஷான் கிஷனும் எளிதான வெற்றியை விரைவிலேயே தங்களது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா சாதனைமேல் சாதனை அபிஷேக் சர்மா அடித்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் லோகேஷ் ராகுல் அடித்த 132 ரன்களே ஐபிஎல்லில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அபிஷேக் சர்மா சேர்த்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி பேட்டர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அபிஷேக் சர்மா மூன்றாவது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டுள்ளார். அந்த வரிசையில், நிகோலஸ் பூரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியுடன் இந்த சாதனையை அந்த அணி பகிர்ந்து கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டங்கள் முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: ஜெய்ப்பூர் நேரம்: மாலை 3.30 இரண்டாவது ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்12 ஏப்ரல் 2025 சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 நேரம்- இரவு 7.30 இடம் – லக்னெள ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 349 ரன்கள் (6 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y477r00g7o
  8. 13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211941
  9. அண்ணை, போறபோக்கப் பார்த்தா அந்த சங்கட்டம் வராது போலயே?! STRATEGIC TIMEOUT 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League Punjab Kings 245/6 Sunrisers Hyderabad (7/20 ov, T:246) 93/0 SRH need 153 runs in 78 balls. Current RR: 13.28 • Required RR: 11.76 • Last 5 ov (RR): 65/0 (13.00) Win Probability: SRH 29.84% • PBKS 70.16%
  10. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் - பாஜகவின் 'திட்டம்' இதுவா? அரசியல் கணக்கு என்ன? பட மூலாதாரம்,K ANNAMALAI கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன். கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன? நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், அரசியலுக்கு வரும் முன்னரே நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார். நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன். பின்நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் பெயர் சொல்லும் தலைவராக வளர்ந்திருந்தார். அப்போதும் கருப்பசாமி பாண்டியனுடன் பரஸ்பரம் நட்பு பாராட்டியதாகக் கூறுகின்றனர் நெல்லை மாவட்ட அதிமுகவினர். பட மூலாதாரம்,K ANNAMALAI அரசியல் களம் 2001-ம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , இவருக்கு சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை. 2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார். பட மூலாதாரம்,X 'முன்பு போல அதிமுக இல்லை' "ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என்று காரணம் கூறி 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் விமர்சித்ததையும் காண முடிந்தது. இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் இந்த பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு கட்சி மாறிய பின்னர் மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன். சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார். அனைத்து கட்சிகளுடன் இணக்கம் பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X இதன் பின்னர் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன். இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற போதும், அதிமுக கூட்டணியில் தேர்வான 4 பா.ஜ.க. எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தார் நயினார் நாகேந்திரன். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம்பெறத் தவறுவதில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட போதே கடந்த பிப்ரவரி மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டதும் நடந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் முடித்தார். பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன் அரசியல் கணக்கு என்ன? தற்போது பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றிருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி," பிற முக்குலத்தோர் சமுதாய தலைவர்களான டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை மறைக்கும் அளவுக்கு நயினாரின் செல்வாக்கு உயருமா என்று கேட்டால், தேர்தல் அரசியலில் தங்களை நிரூபித்த தினகரன் மற்றும் , பன்னீர்செல்வத்துடன் ஒப்பிடுகையில் நயினார் நாகேந்திரன் சபார்டினேட் (துணை நிலைத் தலைவர்) தான். எனவே அவரை இவர்களுக்கு மாற்றாகக் கருத முடியாது. பாஜகவில் இருக்கும் இதே சமுதாயத்தைச் சார்ந்த மற்றவர்களோடு ஒப்பிடுகையில் , முக்குலத்தோர் மத்தியில் கட்சியை வளர்க்க நயினார் நாகேந்திரன் பயன்படலாம்.'' என்கிறார் அவர் மேலும், ''தேர்தல் அரசியலைப் பொருத்தவரையிலும் சசிகலா தனது பலத்தை நிரூபிக்காதவர், ஆனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தேர்தலை சந்தித்தவர்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தேர்தலை வென்றவர் டிடிவி தினகரன், கடைசியாக சந்தித்த தேனி மக்களவைத் தேர்தலில் 2வது இடமும் பெற்றிருக்கிறார். இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தவர். மற்றவகையில் தேசிய கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவரை, தேர்தலில் நிரூபித்த தலைவர்களுடன் ஒப்பிட தேவையில்லை" என்றார். "தேசிய கட்சியின் நிழல்" பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X மேலும் தேசிய கட்சியான காங்கிரசில் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகையின் வளர்ச்சிக்கென ஒரு எல்லை இருப்பதைப் போலத்தான், நயினார் நாகேந்திரனும் தேசிய கட்சியின் அடையாளத்தால் அறியப்படுவார் என்று ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார். ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை மேடையில் வைத்துக் கொண்டே, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ''கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்" என அமித் ஷா கூறியிருக்கிறார் தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் நோக்கம் கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போதைய அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரனை தேர்வு செய்திருப்பதும் கட்சியை வளர்ப்பதற்கான வியூகமே என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg13298y57o
  11. LIVE 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League Punjab Kings 245/6 Sunrisers Hyderabad (4/20 ov, T:246) 60/0 SRH need 186 runs in 96 balls. Current RR: 15.00 • Required RR: 11.62 Win Probability: SRH 26.40% • PBKS 73.60%
  12. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை! 12 APR, 2025 | 09:31 PM மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக நாளை (13) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பின் மின் உற்பத்தியாளர்கள் தங்கள் சூரிய மின் அமைப்புகளை தாமாக முன்வந்து நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நீண்ட விடுமுறை காலம் மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக, தேசிய மின்சார தேவை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பு தேசிய மின் கட்டமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, மின் கட்டமைப்பில் ஸ்திரமற்றதன்மை ஏற்பட்டுள்ளது. இது திடீர் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கம் கூட நாடளாவிய ரீதியில் அல்லது பகுதியவில் மின் தடையை ஏற்படுத்தக்கூடும். இதனால் தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தனமையை பேண உங்கள் ஒத்துழைப்பை இலங்கை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211933
  13. பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 12:21 PM (நா.தனுஜா) பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த சத்சர நிமேஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவர் பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில், கடந்த 2 ஆம் திகதி பொலிஸ்காவலின் கீழ் பதிவான சத்சர நிமேஷின் உயிரிழப்பு, கடந்த பல ஆண்டுகளாகப் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி இச்சம்பவமானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் எத்தகைய மோசமான, மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டுமொரு முறை உணர்த்துகிறது. இருப்பினும் உயரதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த உண்மையை உணரமுடியவில்லை அல்லது அவர்கள் உணர மறுக்கிறார்கள். பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்போது, சில மணித்தியாலங்களின் பின்னரோ அல்லது சில நாட்களின் பின்னரோ குறித்த சம்பவம் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைப்பதால் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் அவ்வேளையில் பெருமளவான ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ அல்லதுசாட்சியங்கள் சிதைக்கப்பட்டோ இருக்கக்கூடும். அதுமாத்திரமன்றி பொலிஸ்காவலின் கீழிருந்த பிறிதொரு நபர் அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலும், அவர் தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக சாட்சியமளிக்க முன்வருவது மிகக்கடினமானதாகும். கடந்த பல ஆண்டுகளாக பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். இருப்பினும் அச்சம்பவங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும். மேலும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதையும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன என்பதையும் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211872
  14. INNINGS BREAK 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League PBKS chose to bat. Punjab Kings (20 ov) 245/6 Current RR: 12.25 • Last 5 ov (RR): 68/2 (13.60) Sunrisers Hyderabad Win Probability: PBKS 87.96% • SRH 12.04%
  15. தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள், புராண/இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இரவு நேரங்களில் வீதிகளில் மேடை அமைத்து இது நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சம்பந்தன், தமிழ்நாட்டின் மூத்த தெருக்கூத்து கலைஞர்களில் ஒருவர். தயாரிப்பாளர்: சிராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல் #Therukoothu ##TherukoothuSongs இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  16. Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 05:04 PM மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மலேசியாவின் ஷா ஆலம் டமான் ஆலம் இண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் ஆவார். கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/211910
  17. INNINGS BREAK 26th Match (D/N), Lucknow, April 12, 2025, Indian Premier League LSG chose to field Gujarat Titans (20 ov) 180/6 Current RR: 9.00 • Last 5 ov (RR): 45/3 (9.00) Lucknow Super Giants Win Probability:GT 53.01% • LSG 46.99%
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே கனமழை பதிவாகியுள்ளது. இது வெப்பச்சலன மழை என்றும், வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெப்பச்சலனம் மட்டுமின்றி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் கூட தற்போதைய மழைக்கு காரணம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கோவையில் கடந்த ஆண்டு கோடையில் அதீத வெப்பம் நிலவிய நிலையில், இந்தாண்டு அதிக மழை பெய்துள்ளது. இந்த அதீத வெப்பத்திற்கும் அதிக மழைக்கும் என்ன காரணம்? காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கோவை எதிர்கொண்டுள்ளதா? 2024 ஏப்ரலில் வரலாறு காணாத வெப்பநிலை; 2025 ஏப்ரலில் மழை! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத மாதத்தில் முந்தைய 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கோவையில் வெப்பம் பதிவானது. அதையடுத்து மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியது. கோவையில் அதுவரை பதிவான வெப்பநிலையில் அதுவே அதிக அளவு என்று வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியது. ஆனால் தமிழகத்தில் அதே ஆண்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட 33 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த சராசரி கோவையில் இன்னும் அதிகமாக இருந்தது. அந்தளவுக்கு கோவை, நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாகியிருந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி மாதத்திலும் பகலில் அதிக வெயிலும், இரவில் அதிகமான குளிரும் உணரப்பட்டது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆய்வகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.2 டிகிரி செல்சியஸ் அளவிலும், பிப்ரவரி மாதத்தில் 32.4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவரை பிப்ரவரி மாதங்களில் பதிவானதில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் இதன் காரணமாக, இந்த ஆண்டில் கோடையில் மேலும் வெப்பம் அதிகரிக்குமென்று மக்கள் மத்தியில் ஒரு வித அச்சவுணர்வு எழுந்திருந்தது. அதற்கு மாறாக, கடந்த மார்ச் மாதத்திலிருந்தே இதமான காலநிலையும் இடையிடையே மழையும் பெய்து வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு, கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய சந்தோஷ் கிருஷ்ணன், இந்த வெப்பச்சலன மழை மதியத்திலிருந்து இரவு வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பெய்யும் என்றும் கணித்திருந்தார். வெப்பச்சலன மழை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன், ''வெயில் அடித்து காற்றில் ஈரப்பதம் மேலேழும்புவதே வெப்பச்சலனம் எனப்படுகிறது. பகலில் வெயில் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், இரவில் மழை பெய்வதை வைத்தே அதை வெப்பச்சலன மழை என்று அறியலாம். கொங்கு மண்டலத்தில் சில நாட்களுக்கு மதியம் வரை நல்ல வெயில் இருக்கும். மாலை மற்றும் இரவில் மழை பெய்யும். இது இயற்கையான அறிவியல் நடைமுறைதான்.'' என்றார். வெப்பச்சலன மழை பற்றி எளிமையாக விளக்கிய புதுக்கோட்டை அன்னை தெரசா வேளாண் கல்லுாரியின் முதல்வரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான பாலசுப்பிரமணியம், கிராமங்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைப் பார்க்கும்போது, மாலையில் இன்று மழை பெய்யும் என்று கணிப்பது இந்த வெப்பச்சலன மழையைத்தான் என்று தெரிவித்தார். பருவமழை, வெப்பச்சலன மழை இரண்டிலும் மழை பெய்வதற்கான இயற்கையின் நகர்வுகள் ஒன்றுதான் என்றும் அவர் விளக்கினார். ''பருவமழை தவிர்த்து, வெப்பக்காற்று மேலேழும்போது, மேகத்திலுள்ள நீர்த்துளிகள், ஆங்காங்கே மழையாகப் பெய்வதே வெப்பச்சலன மழை. இதை மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி என்றும் சொல்வார்கள். இந்த மழை பரவலாகப் பெய்யாது. தொடர்ந்தும் பெய்யாது. 10 நிமிடங்கள் பெய்யும், பின்பு நின்று விடும். பருவமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும். இது சற்று மாறுபடும் '' என்றார் பாலசுப்ரமணியம். அதீத வெப்பத்துக்கும், அதீத மழைக்கும் காரணம் காலநிலை மாற்றம்தான் என்கிறார் அவர். இந்த வெப்பச்சலன மழை, கொங்கு மண்டலம் மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களிலும் வெயில் மேலும் அதிகரிக்குமென்றும் கூறினார். ''கொங்கு மண்டலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அந்த பகுதியில் வழக்கத்தை விட, இந்த முறை கோடையில் பெய்யும் வெப்பச்சலன மழை அதிகமாகவுள்ளது. வழக்கமாக கோவைக்கு அதிகபட்சமாக 18–20 செ.மீ. (200 மில்லி மீட்டர்) கோடை மழை கிடைக்கும். ஆனால் ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாகவே 14 செ.மீ. கோடை மழை பதிவாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.'' என்கிறார் சந்தோஷ் கிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோயம்புத்துார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வெப்பம் குறைவதற்கு காரணம் இதுதான்! ஆனால் இது வழக்கமான இயற்கையான நடைமுறைதான், அதிகமென்று சொல்ல முடியாது என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளருமான முனைவர் கீதாலட்சுமி. கோடை காலங்களில் வழக்கமாக நடக்கும் மேலடுக்கு சுழற்சியின் ஒரு பகுதிதான் தற்போது பெய்யும் மழைக்குக் காரணம் என்கிறார் அவர். இந்த வெப்பச்சலன மழை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெய்வதற்கும், கடந்த ஆண்டில் அதீத வெப்பம் இருந்தபோது, இந்த மழை பெய்யாததற்குமான காரணம் குறித்து கீதா லட்சுமி கூறுகையில், ''கடந்த ஆண்டில் அதீத வெப்பத்துக்கு இயற்கையான சில மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். வெப்பச்சலன மழையைப் பொருத்தவரை, இந்தப் பகுதியில்தான் பெய்யும் என்பதைக் கணிக்க முடியாது.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''பொதுவாக நீர்நிலைகள், கடல் உள்ள பகுதிகளில்தான் காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும். அதற்காக அதே பகுதியில் மழை பெய்யுமென்று கூற முடியாது. காற்று எந்த திசையில் அடிக்கிறது, அதன் வேகம் எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்தே மழை பெய்யும் இடத்தை இயற்கை தீர்மானிக்கிறது.'' என்றார். பிபிசி தமிழிடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான சத்தியமூர்த்தி, ''இந்த ஆண்டில் கொங்கு மண்டலத்தின் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது; அதற்கு மழை ஒரு காரணமாகவுள்ளது. ஆனால் இந்த மழை, வழக்கத்துக்கு மாறான நடைமுறையாகத் தெரிகிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்தது வெப்பச்சலன மழையாக இருக்கலாம். ஆனால் கோவையில் ஒரே நாளில் 70 மி.மீ. மழை பெய்ததற்கு, வழக்கத்துக்கு மாறாக கோடையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தான் காரணம்.'' என்றார். ''கடந்த சில ஆண்டுகளாக கோவைக்கு 150 மில்லி மீட்டர் (15 செ.மீ.) வரை கோடை மழை பெய்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் இந்த அளவு பெய்ய வேண்டிய மழை, இப்போதே 102 மி.மீ. அளவுக்குப் பதிவாகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மேலே இருப்பதால் இந்த ஆண்டில் கோடை மழையின் அளவு மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கலாம்.'' என்றும் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார். சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய சத்தியமூர்த்தி, இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் 28 மில்லி மீட்டரும், ஏப்ரலில் 10 நாட்களுக்குள் 74 மில்லி மீட்டரும் மழை பெய்ததே வெப்பத்தின் தாக்கம் குறைந்ததற்குக் காரணம் என்கிறார். ''ஆனால் மே மாதத்தில் வெப்பத்தின் அளவு எப்படியிருக்குமென்பதை இப்போதுள்ள இயற்கைச் சூழ்நிலையை வைத்துக் கணிக்க முடியாது. மழை தொடர்ந்தால் வெப்பம் குறையும். மழை குறைந்து விட்டால் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோன்று தமிழகத்துக்கான தென்மேற்குப் பருவமழையையும் மே இரண்டாம் வாரத்தில்தான் கணிக்க முடியும்.'' என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2wxqjlz5zo
  19. வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதனால், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது. மறுபுறம், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வட கொரியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை புதுப்பிக்க விரும்புவதாகக் கூறிவருகிறாா். இதற்கு வட கொரியா இதுவரை பதிலளிக்காத நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கிம் ஜாங் உன் என தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த வாரம் நடத்திய மாநாட்டில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்க உறுதிபூண்டன. இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரியும் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிப்பவருமான கிம் யோ ஜாங், “வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று நினைப்பது வெறும் பகல் கனவு. அணு ஆயுத பலம் பெற வேண்டும் என்பது நாட்டின் அரசியல் சாசனத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடா்பாக பிற நாடுகள் ஆலோசிப்பது நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் ஆகும். வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதை இது நியாயப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316987
  20. 12 APR, 2025 | 01:30 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்கள் 10 - 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றமும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது சிறுவர்கள் பயத்தில் அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது. மாலை நான்கு மணி வரை மதிய உணவின்றி சிறுவர்களை பொலிஸார் பாடசாலையின் அறையில் அடைத்து வைத்ததையடுத்து, பெற்றோர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். “பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், எனவே அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு பொலிஸார் நடந்துகொள்ள வேண்டும்” என பொலிஸாருக்கு வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, சிறுவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பெற்றோர் இந்த பிரச்சினையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211887
  21. பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி 12 APR, 2025 | 10:31 AM முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211862
  22. யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு முக்கிய சாலை திறப்பு - அதில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 59 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீதியொன்று கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி பகுதியின் அச்சுவேலி முதல் பருத்தித்துறை வரையான வீதி, சுமார் 35 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி திறக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த பிரதேச மக்கள் வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM கட்டுப்பாடுகள் என்ன? பலாலி அதிவுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ராணுவ குடியிருப்பின் ஊடாக இந்த வீதி செல்வதாக அந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அந்த அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாளாந்தம் அதிகாலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே இந்த வீதி திறக்கப்பட்டிருக்கும். இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் மற்றும் திருப்புதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த வீதியில் நடைபயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அதிகூடிய வேகமாக 40 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM படக்குறிப்பு,இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீதியில் என்ன இருக்கின்றது? யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதி முழுமையாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு என அழைக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் காணிகளை ராணுவம் கையகப்படுத்தியிருந்தது. இவ்வாறு பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட ராணுவ பயன்பாட்டுக்கள் இடம்பெற்று வந்த பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில், கடந்த கால அரசாங்கங்கள் பல காணிகளை விடுவித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு முன்நகர்வாக இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை 35 வருடங்களின் பின்னர் இந்த வீதியூடாக பயணித்தவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அந்த வீதியின் தற்போதைய நிலைமை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டனர். இந்த வீதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள், ராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர். ''இந்த வீதி விடுவிக்கப்பட்டமைக்கு மக்களை பொருத்தவரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதேபோன்று எங்களுடைய காணிகளை சும்மா தான் வைத்திருக்கின்றார்கள். பலாலி மாத்திரமன்றி, வலிகாமம் வடக்கில் வசாவிலான், கட்டுவான், குரும்பசிட்டி, பலாலி, மயிலிட்டி, ஊரணி என்று சொல்லி ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றையும் விடுவித்து தர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.'' என வீதி திறப்பிற்காக வருகைத் தந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கின்றார். மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ''இந்த பிரதேசத்திலுள்ள ஏனைய விடயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்பட வேண்டியிருக்கின்றது. இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இவற்றோடு மக்களின் குடியிருப்பு காணிகள் இன்னும் விடுப்பட வேண்டியிருக்கின்றது, உடனடியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. படிப்படியாக இந்த தேவைகளை பூர்த்தி செய்து, மக்கள் சுபீட்சமாக சந்தோசமாக வாழ்வதற்காக ஏதுவான காரணிகளை செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்'' என இந்த இடத்திற்கு வருகைத் தந்த மதக்குரு ஒருவர் கோரிக்கை விடுத்தார். ''எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். எங்களுடைய நிலத்தில் நாங்கள் குடியேற வேண்டும். எங்களுடைய காணிகளில் நாங்கள் சாவதற்கு முன்னர் குடியேற வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக இருக்கின்றது. நான் செத்த பிறகு என்னுடைய பிள்ளைக்கு காணி தெரியாது. நான் வந்து காட்டினால் தான் காணி பிள்ளைக்கு தெரியும். எங்களுடைய காலத்தில் விடுவிக்கப்பட வேண்டும்'' என அந்த பிரதேசவாசி ஒருவர் குறிப்பிடுகின்றார். டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் ''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்ல'' இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட 'உயர் பாதுகாப்பு வலயம்' அல்ல. மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை இதனை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா? எனவும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?10 ஏப்ரல் 2025 நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,MOD SRI LANKA படக்குறிப்பு,நலின் ஹேரத் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டன - ராணுவம் பிபிசிக்கு தெரிவிப்பு யுத்தக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''ஏனைய காணிகளை நாங்கள் மீளாய்வுகளின் பின்னர் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூகோள ரீதியில் முக்கியத்துவமாக உள்ள காணிகளே விடுவிக்கப்படாது காணப்படுகின்றன. உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். முடியுமான காணிகளை நாங்கள் விரைவில் விடுவிப்போம். 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதிலுள்ள காணிகளை மீளாய்வு செய்து, ராணுவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டிய காணிகளை வைத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்து காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். '' என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy0yy4wqg2lo
  23. 12 APR, 2025 | 08:51 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர். ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் இலங்கையில் இடம்பெற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இவ்வாறானதொரு நிலையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211853
  24. மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்... இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள். பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார். "இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த வலி எனது ஆசைக்குத் தடையாக இருக்கிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விஷயத்தைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது" என்று கூறுகிறார் சூசன். மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்றதற்குப் பிறகு கழிக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹார்மோன் சுரக்கும் அளவு குறைவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்று போவதே மெனோபாஸ் எனப்படுகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு பெண்களால் குழந்தை பெற முடியாது. பெண்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதுதான் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதனால்தான் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இவர் பிரிட்டனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வியை மக்களிடையே ஊக்குவித்து வருகிறார். ஆனால் பெண்கள் உடலுறவு பற்றிப் பேசுவது இன்னும் பல கலாசாரங்களில் ஒரு தடையாக இருக்கிறது. "உடலுறவின்போது வலி ஏற்படுவது இயல்பானது என்று கருதும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் உடலுறவுகொள்ளும்போது ஓர் ஆணை மகிழ்விக்க இந்த வலியைத் தாங்கிக் கொள்வது தனது பொறுப்பு என்று நம்பும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இதுபோன்ற நம்பிக்கைகள் காரணமாகப் பல பெண்கள் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மருத்துவர்களிடம் வருவதைத் தவிர்த்து அமைதியாக அவதிப்படலாம் என்று மருத்துவர் அஸிசா கூறுகிறார். 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு8 ஏப்ரல் 2025 ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 ஹார்மோன்களும் மறைந்திருக்கும் அறிகுறிகளும் பட மூலாதாரம்,GETTY IMAGES உடலுறவு கொள்ள ஆசையைத் தூண்ட ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (இதையும் கருப்பைகள் சுரக்கின்றன) ஹார்மோன்கள் காரணமாக இருப்பதாக மருத்துவர் அஸிசா விளக்குகிறார். இந்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும்போது உடலுறவின் மீதான ஆசையில் மாற்றங்களை அனுபவிப்போம் என்கிறார் அவர். ஜெர்மனியில் வசிக்கும் ரோஸிக்கு 45 வயதாகிறது. அவரது 30 வயதில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கட்டாய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அனுபவித்த மாற்றங்கள் தீவிரமானவை என்று அவர் பிபிசியிடம் அவர் கூறினார். "எனக்கு உடலுறவு கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் திடீரென்று அந்த ஆசை போய்விட்டது. அதனால் என்னால் எந்த உடல் ரீதியான தூண்டுதலையும் அனுபவிக்க முடியவில்லை," என்றார். உடலுறவில் ஆசை குறைவது மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுவது ஆகிய இரு பிரச்னைகளுக்காகத்தான் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியாவில் மனநல மருத்துவராகவும் உடலுறவு சார்ந்த சிகிச்சையாளராகவும் பணியாற்றும் மருத்துவர் நசானின் மாலி. ''பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முடங்கிப் போகிறார்கள். பல பெண்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இல்லை. ஆனால், ஆணுறுப்பை தன்னுள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு இல்லாமல் போகிறது" என்று அவர் விவரிக்கிறார். ஆனால் பெண்ணுறுப்பில் வறட்சியோ, உடலுறவு கொள்வதில் ஆசை குறைவதோ மட்டும் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதற்குக் காரணமாக இருப்பதில்லை. பிரிட்டனில் வசிக்கும் 49 வயதான யாஸுக்கு தொடர்ந்து சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது அவருக்கு உடலுறவு மீதான ஆசை குறையக் காரணமாக இருந்தது. ''ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும், அதன் பிறகு மிகவும் வலி மிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உடலுறவு கொள்வதில் எனக்கு சுத்தமாக ஆசை இல்லை. இந்தப் பிரச்னை மெனோபாஸுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கண்டறியவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதன் விளைவாக சிறுநீர்ப் பாதையில் தோற்றுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் ஸெஸே தெரிவிக்கிறார். "ஈஸ்ட்ரோஜன் வெறும் மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த ஒன்று என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்ட்ரோஜன் என்பது நமது உடல் முழுவதும் செயல்படும் ஓர் அற்புதமான ஹார்மோன்". "பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் குழாயை வழுவழுப்புத் தன்மையுடன் வைத்திருக்க உதவுவது ஈஸ்ட்ரோஜன்தான். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது , சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள திசுக்களை மெல்லியதாகவும், வறண்டதாகவும் மாற்றி நோய்தொற்றுக்கு ஆளாக்குகிறது" என்று அவர் விவரிக்கிறார். பல கலாசாரங்களில் பெண்கள் உடலுறவு கொள்வது என்பது இனப்பெருக்கத்தோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலுறவு கொள்வது நின்றுவிடும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது. பெண்களின் இளமைக்காக அவர்களை மதிப்பது என்பது அவர்கள் வாழ்வின் இந்தக் காலகட்டத்தைக் கடினமாக்கிவிடும் என்று கூறும் மருத்துவர் மாலி, "சில பெண்களுக்கு இது கஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கலாம்" என்கிறார். ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு தங்கள் வாழ்க்கையின் சிறந்த உடலுறவை வைத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்?8 ஏப்ரல் 2025 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற பல லட்சம் ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?8 ஏப்ரல் 2025 என்ன சிகிச்சைகள் இருக்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) மாத்திரைகள், பேட்ச்கள், ஜெல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. "மெனோபாஸ் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. பெண்கள் உடலுறவு கொள்ளவும், கூடுதல் இன்பத்தை அனுபவிக்கவும் பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத தீர்வுகள் இருக்கின்றன" என்று மருத்துவர் மாலி கூறுகிறார். லண்டனில் வசிக்கும் ஹால்டிடாவுக்கு 65 வயதாகிறது. அவரது மெனோபாஸ் காலகட்டத்தை ஒட்டி அவருக்கு விவாகரத்து ஆனதால், அதன் பிறகுதான் அவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக மாறத் தொடங்கியது. "எனக்கு 43 வயதானபோது எனக்கு விவாகரத்தானது. எனது 45-46 வயதில் பெரிமெனோபாஸ் காலகட்டம் தொடங்கியது. அதன் பிறகுதான் நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளத் தொடங்கினேன். நான் சந்தோஷமாக உணர்ந்தேன். ஒருவழியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டுவதற்கான வழிமுறையைப் பற்றிப் பேசும் மருத்துவர் மாலி, "உடலுறவு குறித்த உங்களது எண்ணத்தை மறுமதிப்பீடு செய்யுங்கள்" என்று கூறுகிறார். "நம் எல்லாருக்குமே உடலுறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான உடலுறவு எப்படி இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கும். ஆனால் நம் உடலில் மாற்றம் ஏற்படும்போது, அதற்குத் தகுந்தாற்போல் நமது எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உடலுறவு என்றால் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?" என்று அவர் கூறுகிறார். ஃபோர்ப்ளே மற்றும் ஆணுறுப்பை உள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளாமல் பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் வழிகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார். "பெண்ணுறுப்பின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் உணர்திறன் குறையலாம். அதனால் வைப்ரேட்டர் போன்ற பாலியல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார். மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றால், "மருத்துவ உதவியை நாடுங்கள், தேவைப்பட்டால் மருத்துவரை மாற்றுங்கள், மனம் தளரவேண்டாம், இதைக் கண்டு கூச்சமடையவும் வேண்டாம்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) முதலில் வழங்கப்படும். அவை மாத்திரைகள், ஜெல், ஒட்டக்கூடிய பேட்ச்கள் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. சிலரால் ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை கலக்கும் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சிலருக்கு பெண்ணுறுப்பில் நேரடியாக பூசிப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளும் இருக்கின்றன" என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார். நியூசிலாந்தில் வசிக்கும் நெடா, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. "எனது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த எனக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வேண்டும் என்று கேட்டபோது பெண்ணுறுப்பில் பூசும் க்ரீம் எனக்குத் தரப்பட்டது. எனக்கு மிக மோசமான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் எனது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என்கிறார் அவர். கடைகளில் கிடைக்கும் லூப்ரிக்கன்ட்கள் மற்றும் பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் மாய்ஷரைஸர்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஸெஸே. இடுப்பு தசைகளில் (pelvic muscles) வலு குறைந்தவர்கள் அதற்காக இருக்கும் ஃபிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். ஆனால் மாதவிடாய் நின்றாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, புகை பிடிக்காமல் இருப்பது, உடல் எடையைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார். "நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை கொள்வது சுயநலமான விஷயமல்ல. உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒரு சூப்பர்வுமன் என்று நினைத்துக்கொண்டு பல விஷயங்களை நம்மீது போட்டுக்கொள்கிறோம். உதவி கேட்பதில்லை என்பதே முக்கியப் பிரச்னை. உதவி கேளுங்கள். உதவி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறொருவர் தாமாக உதவி செய்ய முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c87p15131plo
  25. Published By: VISHNU 12 APR, 2025 | 01:37 AM மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கலாசாரங்களை கொண்டுள்ளது. இதனை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பங்களிப்பை வழங்குவோம். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைத்தீவு மண்ணில் சுமார் 80 ஆயிரம் பேர் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று சுமார் 10500 பேர் மாத்திரமே வாழ்கிறார்கள். இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். சரியான வசதிகளும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக இப்பிரதேசத்தை மேம்படுத்த முடியும். ஆகவே உரிமம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நாம் வழங்குவோம். தென்பகுதியில் உள்ள மக்கள் இப்பகுதி மக்களை நேசிக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முகங்கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, சுகாதாரம்; மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய பல துறைகளில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வைப்பெற்றுக்கொடுப்போம். 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தனர். ஊழல் அற்ற அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். அதைப்போன்று பாராளுமன்ற அதிகாரத்தை முழுமையாக எமக்களித்தார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் இன, மத விடயங்களுக்கு அப்பாற்பட்டு திறமையான மற்றும் ஊழலற்;றவர்களை தெரிவு செய்ய வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். ஸ்திரமான நிலையில் இருந்து கொண்டு தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அரச சேவையானது நாட்டு மக்களுக்கு வினைத்திறனதாக அமைய வேண்டும். அதற்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரசசேவை தற்போது சுயாதீனமாக இடம்பெறுகிறது. மாகாணசபைத்தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு என்றும் முன்னுரிமையளிப்போம். இந்த மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும்; கண்டுள்ளது. அதனை ஆற்றுப்படுவதற்கான பொறுப்பு எமக்குண்டு. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என்றார். https://www.virakesari.lk/article/211850

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.