Everything posted by ஏராளன்
-
இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் 10 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதனையைக் குறைத்துள்ளது. துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் வெற்றிக் களிப்பு - புகைப்படத் தொகுப்பு கோலி, ரோஹித் இருவரும் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிக்க முடியுமா? முன்னுள்ள சவால்கள் என்ன? இந்தியா சாம்பியன்: பரபரப்பான இறுதிப் போட்டியின் திருப்புமுனை தருணங்களும் வரலாற்றுச் சாதனைகளும் மறக்க முடியாத 2000: பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா? இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதல் இந்த தொடரில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆடிய போட்டிகள் ஒரு கண்காட்சி போல இருந்தன. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற்றன. ஒரே இடத்தில் ஆடிய, இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்திய வீரர்களின் பெயர் பொறித்த ஆடை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றன. ஹர்திக் பாண்டியா துபையில் இருந்த போது "குங்-ஃபூ பாண்ட்-யா!" என்று காதைப் பிளக்கும் கூச்சலுடன் களம் கண்டார். இதே போன்று லாகூரில் ஓர் அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்குமா? துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். இது தெளிவுபடுத்தப்பட வேண்டும், இங்கே இதற்கு எளிதான பதில்கள் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு கிடைத்த சாதகம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யப்போவதில்லை என்று இந்தியா அறிவித்தது. அப்போது முதலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் போட்டியை நடத்துவதா? ஐ.சி.சி. வருமானத்தில் இந்திய சந்தை கணிசமான பகுதியை கொண்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள பாகிஸ்தானிடமிருந்து கடைசி நிமிடத்தில் அதனைப் பறிப்பதா? அதுவும் சாத்தியம் இல்லை. இதன் விளைவாக இந்தியா ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து ஒரே நகரத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடியது. இந்திய அணிக்கு கிடைத்த இந்த சாதகங்கள் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. நியூசிலாந்து அணி 7,000 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ஓர் இந்திய வீரர் அதிகபட்சம் பயணிக்க வேண்டிய தூரம் வெகு சொற்பமே. அதாவது நடந்தே கடக்க வேண்டிய தூரம் மட்டுமே. உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா?9 மார்ச் 2025 மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 ஒரே மைதானத்தில் விளையாடியது "நிச்சயமாக" தங்களுக்கு உதவியது என்று அரையிறுதிக்குப் பிறகு முகமது ஷமி கூறும் வரை, இந்தியா அதனை மறுத்தே வந்தது. இந்தியாவுக்கு சாதகமான சூழல் உள்ளதாக கூறுபவர்கள் இன்னும் "வளர வேண்டும்" என்றே இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதற்கு முன்பு வரை கூறி வந்தார். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஆதரிக்கப் போவதாக கூறும் வரை மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுங்கள், இந்தியா வைத்திருக்கும் அதிகாரம் தெரியும். இதுதான் சர்வதேச கிரிக்கெட் செல்லும் பாதை. 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் கடைசி நிமிடத்தில் அரையிறுதி ஆடுகளம் மாற்றப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. எட்டு மாதங்களுக்கு முன்பு, கயானாவில் நடந்த டி20 அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. ரோஹித் சர்மா மட்டுமே புறப்படுவதற்கு முன்பு தனது அணியின் போட்டிகள் எங்கு விளையாடப்படும் என்பதை அறிந்திருந்தார். இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி நேரலையை கண்டு களிக்க ஏற்றவாறு காலை 10:30 மணிக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை இந்தியாவின் கடைசி லீக் போட்டி ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடப்பட்டது. அது இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகமாக உள்ள நேரம். இதனால் தென்னாப்பிரிக்கா துபைக்கு பறந்து வர வேண்டியிருந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பாகிஸ்தானுக்குத் மீண்டும் திரும்ப வேண்டிய கேலிக்கூத்தான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு போட்டி நடத்துவதால், அந்த போட்டியை நடத்தும் நாட்டுக்கு சாதகமான விசயங்கள் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் உங்கள் எதிராளிகள் நடத்தும் ஒரு தொடரிலும் அதேபோன்ற நன்மைகளை நீங்கள் பெறுவது முற்றிலும் மாறுபட்டது. நிச்சயமாக, இது எதுவும் இந்திய வீரர்களின் தவறு அல்ல. பாகிஸ்தான் ஆட்சியாளரை அகற்ற போராடி இந்தியா வந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் - நேரு கூறியது என்ன?9 மார்ச் 2025 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?9 மார்ச் 2025 இந்த வாரம் இறுதிப் போட்டிக்கு முந்தைய கேப்டன்களின் நேர்காணலுக்கு துணை கேப்டன் சுப்மன் கில்லை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திய ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் 50 ஓவர் விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள். நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கான ரன்னை எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் வெகு தொலைவில் இல்லை. வாய்ப்பு வழங்கப்பட்டால் கில்லும் அந்த இடத்ற்கு வரக்கூடும். இந்த போட்டி எங்கு விளையாடப்பட்டிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்ற அளவுக்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிசி போட்டிகள் சலிப்பு தருகின்றனவா ? பணம் கொழிக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு எதிர்வினையாக ஐசிசி ஆண்கள் போட்டிகள் கருதப்படுகின்றன. வருகிற 2031-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் டிராபி, டி20 அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் என்கிற அளவுக்கு ஐசிசி போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், இந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுவதாலும், ஒரே மாதிரியான வடிவத்தைப் பின்பற்றுவதாலும், சலிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை. இங்கிலாந்து அணி தொடரில் இருந்து மோசமாக வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற நாடுகளில்? இந்த போட்டியைப் பற்றி குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வந்திருக்கும் தகவல்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த போட்டியின் ஏற்பாடு குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு 57 நாட்களுக்கு முன்புதான் அதன் அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது. கயானா அரையிறுதியை எந்த ஆங்கில ஊடகங்களாலும் பார்க்க முடியவில்லை. கடைசி நேரத்தில் விமான பயணங்களை முடிவு செய்ய இயலவில்லை, விமானங்கள் குறைவாக இருந்தன. பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க அதிகாரிகளால் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கப்பட்ட நாடுகளில் கயானாவும் ஒன்றாகும். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?9 மார்ச் 2025 இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?8 மார்ச் 2025 அடுத்தடுத்த போட்டிகளிலும் குழப்பங்கள் தொடரும் அடுத்த இரண்டு போட்டிகளில் - இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2026 -ல் நடைபெறும் ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விஷயங்கள் எளிதாக இருக்காது. இரண்டுமே இந்தியாவில் நடைபெறும். டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுடன் இலங்கையும் கூட்டாக நடத்துகிறது. அதாவது பாகிஸ்தான் தகுதி பெற்றால் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். இந்தியாவுக்கு இருந்த அதே நன்மைகள் பாகிஸ்தானுக்கு கிடைக்கலாம். ஆனால், இரு இடங்கள் இறுதிப் போட்டிக்காக தேவைப்படுவது போன்ற நிச்சயமற்ற தன்மைகள் எதுவும் அந்த தொடரிலும் மாற போவதில்லை. இதன் அர்த்தம் நம்பிக்கை போய்விட்டது என்பதல்ல. சர்வதேச கிரிக்கெட்டிற்கான அச்சுறுத்தல் என்ன? இரண்டு வாஷ் அவுட்கள் மற்றும் பல ஒருதலைப்பட்ச ஆட்டங்கள் இருந்த போதிலும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் வலுவாக உள்ளது என்பதை சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நிரூபித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸின் சதம் எப்போதும் நிலைத்து நிற்கும். ரவீந்திரா விளையாட்டின் அடுத்த நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்சாய் விரும்பக்கூடிய வீரர்களில் ஒருவராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தரம் அல்ல, மாறாக அக்கறையின்மைதான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gepllrgp5o
-
வடக்கில் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறதா? தேசிய மக்கள் சக்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த கட்சிகளின் சுயநல அரசியல் போக்கின் மீதான வெறுப்பும், அனுரகுமார திசாநாயக்கா என்ற தனிமனித ஆளுமை மீதான ஈர்ப்புமே வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் “குருட்டு”த்தனமான நம்பிக்கை வைப்பதற்குப் போதுமான காரணிகளாக இருந்தன. தேசிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள் எவரும் தமிழ் மக்களுக்காக எதையும் சாதித்தவர்களல்லர். தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர்கள் கூட இல்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தங்கள் சுயலாபப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கோடு, “கண்ணை மூடிக் கொண்டு” கட்சிக்குப் போட்ட வாக்குகள் யார், யாரையோ எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கியிருக்கின்றன. ஆனாலும், இந்த உண்மை தெரியாமல் தேசிய மக்கள் சக்தி இப்போது வடக்கில் நடந்து கொள்ளும் விதம், தங்கள் சொந்தக் கட்சிகள் மீது வைத்திருந்த வெறுப்பை விட பல மடக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றது என்ற கசப்பான உண்மையை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். “ஒரு ஐந்து வருடத்துக்குத் தானே?” என்று தங்கள் சொந்த அபிலாசைகளை அடகுவைத்து மக்கள் கொடுத்த ஆணையைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில், சொந்தக் காசில் சூனியம் வைப்பதைப் போன்று இந்த வெற்றியை தாரைவார்க்கும் வகையில் அந்தக் கட்சி செயற்படுகின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கின்றோம் என்ற பெயரில் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுத்தவர்களால் திட்டமிட்டு தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி சரிவடையச் செய்யப்படுகின்றதா? போன்ற பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லிதல் வடக்கு மாகாணத்தின் யாழ்.தேர்தல் மாவட்டத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் மூன்றாம் இடத்தையே அநுரகுமார திஸாநாயக்கவால் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதுவும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வடக்கில் தோல்வியை எதிர்கொண்டிருந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதுவும், தமிழ்த் தேசியக் கட்சிகளை எல்லாம் தூக்கி விழுங்கி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இதற்கு காரணம் என்ன? திடீர் வாக்கு வங்கி அதிகரிப்பின் பின்னணி என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது காலத்தின் தேவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடத்தில் துளிர்விட்டிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி அநுர மேற்கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த – நேர்மையான நிர்வாகி என்று பெயர் எடுத்த வேதநாயகன், சலுகைகளுக்காக விலைபோகாத ஒருவர். அத்துடன் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தில் வந்த ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை வடக்கின் ஆளுநராக ஜனாதிபதி அநுரகுமார நியமித்ததன் மூலம், வடக்கு மக்களின் மனங்களில் தன் மீதான நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தினார். இதனை,யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா கூட வேதநாயகனை ஆளுநராக நியமித்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி வடக்கில் தனது வாக்கு வங்கியை சடுதியாக அதிகரித்தது என்று பலமுறை தனது மேடைப் பேச்சுகளில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கட்சிகள் நவக்கிரகங்கள் போல ஆளுக்கொரு திசையில் நின்றமையும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கிச் சரிவில் செல்வாக்குச் செலுத்தியது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கைவிட்டு அரசியல் தீர்வு என்ற ஒற்றைப் புள்ளியை மையப்படுத்தி தங்கள் பரப்புரை வியூகங்களை வகுக்க, அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி பேசிய மருத்துவர் அர்ச்சுனாவும், தேசிய மக்கள் சக்தியினரும் இலகுவாக வெற்றியைப் பெற்றுக் கொண்டனர். சமகாலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய சிறீதரன் – சுமந்திரன் பனிப்போரும் தாக்கத்தை செலுத்தியதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதற்கு மேலதிகமாக, கடந்த காலங்களில் சிங்களத் தேசியக் கட்சிகளின் முகவர்களாக களமிறங்கிய டக்ளஸ், அங்கஜன் போன்றவர்களை ஆதரித்த தமிழ் மக்களும் இம்முறை தேசிய மக்கள் சக்தியினரை – ஆளும் கட்சியினரை நேரடியாக ஆதரிக்க முடிவு செய்தமையும் செல்வாக்கைச் செலுத்தியது எனலாம். இப்படிப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து முகம் அறியாத தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை நாடாளுமன்றம் அனுப்பியது. இந்த வெற்றிகளின் பின்னால் மறைமுக காரணி ஒன்றும் இழையோடுகின்றது. அதாவது வடக்கின் அரசாங்க உத்தியோகத்தர்களின் தீர்மானம், மக்களிடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது. எந்தவொரு தேர்தலிலும், அரசாங்கப் பணியாளர்கள் யாரை ஆதரிக்கின்றனரோ அதே தரப்பையே மக்கள் ஆதரித்திருந்தனர் என்பது வரலாறு. வடக்கில் நடந்த எந்தத் தேர்தலும் இதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. ஊழல் – அரசியல் தலையீடு – தவறிழைத்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வு என கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு ‘கூஜா’ தூக்கியவர்கள் மீதான வெறுப்புணர்வால், கணிசமான அரசாங்க அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தது மாத்திரமல்லாது, மக்களையும் ஆதரிக்கத் தூண்டியுமிருந்தனர். வெற்றி பெறுவதைவிட அதை தக்க வைப்பது முக்கியம். இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்தி சறுகத் தொடங்குகின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றது. முன்னொருபோதும் சாத்தியப்படாத வெற்றியை வடக்கு மக்கள் வழங்கியபோதும், அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடிப்பதானது, வெற்றியை கொடுத்த வேகத்தில் மக்கள் பிடுங்கி எடுத்துவிடுவார்கள் என்ற அபாயத்தை உணராத செயற்பாடாகவே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வலி. வடக்கில் மக்களின் கோரிக்கையாக இருந்த 1.5 கிலோ மீற்றர் நீளமான பாதை பயன்பாட்டுக்கு மாத்திரம் விடுவிக்கப்பட்டது. இது மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. எதிர்காலத்தில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் ஒரு துரும்புகூட நகராத நிலையில், மற்றைய சிங்கள ஆட்சியாளர்களைப் போல் தான் தேசிய மக்கள் சக்தியினரும் என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக, தங்கள் பதவிகளுக்காக சிறிதர் தியேட்டருக்கும், நல்லூர் கோவில் பின்வீதிக்கும் அலைந்து திரிந்தவர்கள், அவர்களுக்காக எதையும் செய்தவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியினருடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தியேட்டரிலிருந்தும், நல்லூர் கோவில் பின் வீதியிலிருந்தும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு உதவிகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களை நடுத்தெருவில் விட்ட உயர் அரச அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியினரின் வாலைப் பிடித்துக்கொண்டு இப்போது தொங்குகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு இது தெரியாது விட்டாலும், மக்களுக்கு இப்படியானவர்கள் யார் என்பது தெரியும். காலத்துக்குக் காலம் கட்சி தாவும் நேர்மையற்ற இத்தகைய நபர்கள் மீதான அதிருப்தி தான் தேசிய மக்கள் சக்தி மீதான விருப்பாக மாறியிருந்தது. ஏனெனில், இப்படியானவர்கள் தங்கள் வயிற்றை வளர்ப்பதையும், தாங்கள் அதிகாரத்தை வைத்திருக்கவுமே விரும்பினர். அவர்கள் எத்தகைய பிழையான விடயங்களையும் செய்யத் தயாராக இருந்தனர். குறிப்பாக அரச நிர்வாகத்தில் வடக்கில் இன்னமும் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மாவட்ட உயர்நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் உள்ள அதிகாரிகள் தொடர்பில் மக்களிடத்தே நிறைய அதிருப்திகள் வெளிப்படையாகவே உண்டு. கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, காணிகள் பிடித்தமை, அரச அபிவிருத்தித் திட்டங்களில் தரகுப் பணம் பெற்றமை, மக்களுக்கான நிவாரணங்களில் ‘டீல்’ பேசி கோடிக்கணக்கான பணம் சுருட்டியமை என்று இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. இப்படியாக ஊழல் செய்தவர்களும், மோசடி செய்தவர்களும் இன்னமும் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகக் குறைந்தது அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒட்டி உறவாடுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினரும் அவர்களை அரவணைத்துச் செல்கின்றனர் என்பதை நேரடியாகக் காணும் போது மக்களுக்குக் கட்சியின் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இது வடக்கில் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த அரசாங்கப் பணியாளர்களிடத்தில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. விரக்திக்கு அப்பால் அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும் என நேர்மையாக விரும்பிய – அதற்காக மக்களை ஆதரிக்கத் தூண்டிய அரசாங்க அதிகாரிகள் இன்று தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்டுள்ளனர் என்று எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடந்த தேர்தல்களின் போது பணியாற்றியவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தூக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த அரசாங்கப் பணியாளர்கள் எதிர்வரும் தேர்தல்களில், ‘யூ- ரேன்’ எடுப்பதற்கே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அது நிச்சயமாக மக்களிடத்திலும் எதிரொலிக்கும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தியோடு தற்போதுள்ள எந்தவொரு அரசாங்க உயர் அதிகாரிக்கும், மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை. மாறாக மக்களிடத்தே அதிருப்திதான் உண்டு. அப்படிப்பட்டவர்களை கூட வைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது என்பது தேசிய மக்கள் சக்திக்கு விஷப் பரீட்சைதான். ஒட்டுமொத்த நாடும் தேசிய மக்கள் சக்தியோடு நிற்கின்ற தோற்றம் உருவாகுவதற்கு வடக்கு மக்களே பிரதான காரணம். கடந்த காலத் தேர்தல்களிலும் தெற்கு மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளோடு நின்றாலும் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு நின்றிருந்தனர். அந்த வரைபடத்தை மாற்றியமைத்த தேசிய மக்கள் சக்தி சிறிது காலத்திலேயே அதை இழக்கப் போகின்றதா? இல்லை ‘கிளீன் சிறிலங்காவின்’ கீழ் தம்மோடு ஒட்டியுள்ள ‘ஒட்டுண்ணிகளை’ கழற்றிவிட்டு வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைக்கப்போகின்றதா?. வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருப்போம். https://thinakkural.lk/article/315834
-
கடந்த அரசாங்கத்தால் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள் தாய், தந்தையற்ற பிள்ளைகள் போன்றுள்ளன - ரோஹித அபேகுணவர்தன
10 MAR, 2025 | 08:27 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்தப் பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ளதா அல்லது மாகாண சபையின் கீழ் உள்ளதா என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு - செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். கல்வி மறுசீரமைப்பை ஆசிரியர் பயிற்சி, பௌதீக வளங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார். அதனையும் வரவேற்கின்றோம். கல்வி மறுசீரமைப்பின்போது கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் 9ஆம் தரத்துக்காக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்தப்போவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். அவ்வாறு அந்த வகுப்புக்கு புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்துவதென்றால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? அது நீக்கப்படுமா, அதேபோன்று சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என்பதனையும் கூறுங்கள். அது நல்ல விடயமென்றால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைகளின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தில் இருந்தாலும் அந்த தீர்மானம் தொடர்பில் நான் திருப்தியாக இருக்கவில்லை. அந்த பாடசாலையின் பெயர் பலகைக்கு 10 இலட்சம் ரூபாவும் இணையத்தளத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்களும் பிள்ளைகளும் தேசிய பாடசாலை என்ற மகிழ்ச்சியில் இருந்ததுடன், இப்போதும் தேசிய பாடசாலை என்றே கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் போகின்றன. ஆனால், அவ்வாறு பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த பெயர் நீக்கப்பட்டது. இப்போது அந்தப் பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பாடசாலைகள் போன்று ஆகிவிட்டது. இப்போது யார் இதற்கு பொறுப்பு என்று தெரியாமல் இருக்கிறது. இதனால் இந்த பாடசாலைகள் தொடர்பில் சரியான முறைமையொன்றை தயாரிக்குமாறு கோருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/208837
-
பிரிட்டன் அருகே நடுக்கடலில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் கப்பல்கள் - என்ன நடக்கிறது?
படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Play video, "வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ", கால அளவு 0,32 00:32 காணொளிக் குறிப்பு,வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ இரு கப்பல்களில் இருந்த 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார். இப்போது அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார். கப்பலில் இருந்தவர்களைத் தேடும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரை காணவில்லை என்பதை எச்.எம். கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது. காணாமல் போனவர் சோலாங் கப்பலின் ஊழியர் ஆவார். ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்த ஜெட் எரிபொருள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது. அமெரிக்க அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது. டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன. அதிவேகமாக வந்து மோதிய கப்பல் இம்மாகுலேட் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பிபிசியிடம் சிய போது, சோலாங் கப்பல் சுமார் 16 நாட்ஸ் வேகத்தில் வந்து மோதியதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு உயிர் காக்கும் படகுகளில் ஏறி தப்பியதாகவும் கூறினார். சுற்றுச்சூழலில் இந்த மோதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இம்மாகுலேட் கப்பலில் இருந்து ஜெட் எரிபொருள் கடலில் கலந்திருப்பதாகவும் ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. படக்குறிப்பு,கப்பல்கள் மோதல் நிகழ்ந்த இடம் கப்பல்கள் பற்றிய விவரங்களைக் கண்காணிக்கும் மேரைன் டிராஃபிக்கின் தரவுகளின்படி, ஸ்டெனா இம்மாகுலேட் 183 மீட்டர் நீளம் (600 அடி) கொண்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பல் ஆகும். ஸ்டெனா இம்மாகுலேட் கிரேக்க துறைமுகமான அகியோய் தியோடோராய் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனில் உள்ள ஹல்லுக்கு செல்ல இருந்தது. மார்டைம் ஆப்டிமா வலைத்தளத்தின்படி, இந்தக் கப்பல் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் அதன் எடை கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆகும். சோலாங் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கன்டேய்னர் கப்பல் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, மேலும் 9,500 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று மரைன் ஆப்டிமா வலைத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சோலாங் கண்டேய்னர் கப்பல், ஸ்காட்லாந்து துறைமுகமான கிரேன்ஜ்மவுத் என்ற இடத்திலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாமிற்கு சென்றுக்கொண்டிருந்தது மேரைன் டிராஃபிக்கின் தரவுகள், விபத்து நடந்தபோது ஒரு கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததையும், ஒன்று கிட்டத்தட்ட நிலையாக இருந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8x41kjx5xxo
-
வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபா : சாதாரண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபா சம்பளம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
10 MAR, 2025 | 08:17 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே இதனைக் கருத வேண்டிவரும். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலைமை. இதை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்வியாளர்கள் மீது எனக்கு சிறந்த மரியாதை உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களின் எதிர்பார்பது தமக்கு கீழுள்ள மாணவர்கள் சமூகத்தில் மிளிர வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் அதிகமாக நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டிய துறையாக இது இருக்கின்றது. மாணவர்களுக்கு உயரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆசிரிய சேவையின் சம்பளம் குறைவானதாகவே இருக்கின்றது. சம்பள அதிகரிப்புக்காக அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய மூன்று கட்டங்களாக சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கப்பட்ட போதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு போன்றவற்றுக்கு அதிகளவில் ஒதுக்காது அவற்றை கல்விக்காக ஒதுக்கலாம். இதேவேளை முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் படையினரால் நடத்தப்பபடுபவற்றில் 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. இதனால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே கருத வேண்டி வரும். இது ஏன் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடக்கின்றது. இதனை மாற்ற வேண்டும். வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட சில கருத்திட்டங்களை நிறைவு செய்ய 2 பில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. இது தொடர்பில் பிரதமரும் கல்வி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் அங்கு கல்வித்துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.கல்வி திணைக்களம் என்பது நாட்டின் இருதயமாகும். இங்கே பிரச்சினை ஏற்பட்டால் அனைத்து பகுதிகளிலும் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் காணப்படுகின்றது. வாழ்க்கையில் எதனையாவது அடைய வேண்டும் என்றே இவர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். இதன்மூலம் சிறந்த தொழிற்படையை நாங்கள் இழக்கின்றோம். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/208843
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாமிடம் பெற்ற @வீரப் பையன்26 இரண்டாமிடம் பெற்ற @செம்பாட்டான்மூன்றாம் இடம்பெற்ற @Eppothum Thamizhanசகோதரர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களுக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். ஐபிஎல் போட்டியிலயாவது அதிட்டம் அடிக்குமோ பார்ப்பம்! 😃
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான கொள்கை மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுங்கள் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசிடம் வலியுறுத்தல்
Published By: VISHNU 10 MAR, 2025 | 08:45 PM (நா.தனுஜா) பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதனை இலக்காகக்கொண்ட சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகளாவிய ரீதியில் பெண்களின் அடைவுகள், சமூக முன்னேற்றத்தில் அவர்களது பங்களிப்பு, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அவற்றிலிருந்து மீண்டெழும் ஆற்றல் மற்றும் சமத்துவத்துக்கான அவர்களது தொடர் போராட்டம் என்பவற்றுக்கான அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் வருடாந்தம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இவற்றில் எத்தகைய முன்னேற்றங்கள் அடையப்பட்டாலும், பாலின சமத்துவம் என்பது இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை. பெரும் எண்ணிக்கையான பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் முகங்கொடுத்துவருவதுடன் அவர்களுக்கான சமவாய்ப்புக்களும், சட்ட ரீதியான பாதுகாப்பும் மறுக்கப்படுகின்றன. பல பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றது. பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையினால் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பினும், சவால்கள் இன்னமும் தொடர்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமாக உள்ள பெண்கள் தலைமைத்துவப்பொறுப்பில் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்வாங்கப்படுகின்றனர். பெரும் எண்ணிக்கையான பெண்கள் வறுமையினாலும், பாலின அடிப்படையிலான வன்முறைகளினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அவர்கள் நீதியை நாடுவதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் பெண்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்துகின்றோம். அதேபோன்று பெண்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் அசமத்துவம் மற்றும் அநீதிகளை முற்றாகக் களையவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம். அத்தோடு இதுசார்ந்த சட்ட, கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208852
-
அரச வைத்திசாலைகளுக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் - சுகாதார அமைச்சர்
Published By: VISHNU 10 MAR, 2025 | 06:36 PM (செ.சுபதர்ஷனி) அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பிலும் தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், அதன் விளைவுகள் தொடர்பில் ஆராய்வதும் அவசியமானதாகும். இதன் மூலம் மருந்து விநியோகச் சங்கிலியை தொடர்ச்சியாக பராமரிக்க முடியும். சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் சவலான நிலைமைகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். எனினும் பொதுமக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும், என்ற எமது முதன்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதில் எவ்வாறான சவால்கள் எழுந்தாலும், அவற்றுக்கு சரியாகவும் நேர்மையாகவும் முகம் கொடுப்பதன் மூலம் வெற்றிகரமாக முறியடிக்க முடியும். மருந்துத் துறையில் நிலவிவரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அத்தோடு எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்றில் சுகாதார துறைக்காக, இவ்வாண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திலேயே மிகப்பெரிய தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணத்தை முறையாகவும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்தி, இந்த நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சுக்கு தலைமை தாங்கி செயற்படுவேன் என்றார். https://www.virakesari.lk/article/208847
-
விபத்தை சாதுரியமாக தவிர்த்த புகையிரத சாரதி; சமிக்ஞைகளை இயக்கும் இரு பணியாளர்கள் பணி இடைநீக்கம்
Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 06:27 PM கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக் கையாளும் கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் புகையிரத சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, புகையிரத சாரதியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்களின் கவனக்குறைவினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்தள்ளது. இந்நிலையில், புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/208838
-
தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பமாட்டோம்; தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்
Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 05:38 PM தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை (10) பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போதும் காலை பதினொரு மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் எவரும் வருகை தந்து பதில் ஏதும் வழங்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் வருகை தந்திருந்தார். வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் பாடசாலை பெற்றோர்களில் இருந்து ஐவரை பாடசாலைக்குள்ளே கலந்துரையாட வருகை தருமாறு அழைத்ததன் அடிப்படையில் பெற்றோர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது தமது கோரிக்கைகளுக்கு சரியான பதிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் தரவில்லை எனவும் அவர் பிரச்சினையை சமாளிப்பதாக இருந்ததாகவும் வலயத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து தீர்வை பெற்று தருமாறு கோரிய போதும் உரிய வகையில் தமக்கான பதில் வழங்கப்படாத நிலையில் அவருடைய பதில்கள் திருப்தியற்ற நிலையிலும் இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்து பாடசாலையில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் தமக்கான உரிய பதிலை உரிய தரப்புகள் வழங்காத நிலையில் தீர்வு கிடைக்கும் வரை தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/208831
-
ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் கிருஷ்ணா பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
யூடியூப்பர் உட்பட நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்! Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 05:55 PM யூடியூப்பர் உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூப்பர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்தார். அவர் ஒரு வீட்டிற்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் ஞாயிற்றுக்கிழமை (09) அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/208839
-
கச்சதீவு திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு
கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வருகை தருவோருக்கு யாழ். மாவட்ட செயலரின் முக்கிய அறிவிப்பு 10 MAR, 2025 | 05:08 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வருகை தருவோர் தமது முழுமையான விபரங்கள் தொடர்பான பிரதிகளை கொண்டுவருமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் - யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் - யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2025.03.14 மற்றும் 2025.03.15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பாக கீழ் குறிப்பிடப்படும் தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தங்களது பத்திரிகையில் செய்தியாக பிரசுரித்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளிமாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவுக்கு செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2025.03.14ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு 14.03.2025ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15.03.2025 காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/208825
-
கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி!
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்க் கார்னி கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிக்கா முர்ஃபி பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான வர்த்தகப் போரில் கனடாவை வெற்றிபெறச் செய்யப் போவதாக மார்க் உறுதி அளித்துள்ளார். கனடாவின் மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் தலைவராக மார்க் கார்னி இருந்துள்ளார். லிபரல் கட்சியிலிருந்து அடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த மூன்று பேரை பின்னுக்குத்தள்ளி அவர் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா மீது விதித்த வரிகளையும், அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை மற்ற விரும்புவதாக கூறியதையும் பிரதமர் பதவிக்காக போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆற்றிய உரையில் மார்க் கார்னி கடுமையாக விமர்சித்தார். "ஹாக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடாதான் வெற்றி பெரும்", என்று அவர் கூறினார். அடுத்து வரும் நாட்களில் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை இவர்தான் வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக தேர்வாகியுள்ள கார்னி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்ததில்லை. கனடாவில் விலைவாசி உயர்ந்ததாலும் வீட்டு வசதி சார்ந்த பிரச்னைகளாலும் அந்நாட்டு மக்களிடையே ட்ரூடோ மீதான ஆதரவு சரிந்தது. இதன் விளைவாக பதவியில் இருந்து விலகும் படி ட்ரூடோவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது. இதனால் கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம், லிபரல் கட்சியில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை வீழ்த்தி, மார்க் கார்னி 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் சுமார் 1,600 கட்சி ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே கார்னிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் வாக்களித்ததாக லிபரல் கட்சி தெரிவித்திருந்தது. கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசை வழிநடத்த இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டி தேர்தலை அறிவிப்பை வெளியிடலாம் அல்லது இந்த மாத இறுதியிலே எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளலாம். ட்ரூடோ பதவியில் இருந்து விலகியதிலிருந்து லிபரல் கட்சி பல்வேறு திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி மற்றும் நாடு இணைப்பு மிரட்டல்களால் கனடா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் பியர் பாலிவ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியை விட 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு லிபரல் கட்சி நல்ல முன்னேற்றம் கண்டது. சில கணக்கெடுப்புகளில் இரு கட்சிகளும் கிட்டதட்ட ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றிருந்தன. மத்திய கல்வி அமைச்சரின் 'நாகரீகமற்றவர்கள்' விமர்சனத்தால் நாடாளுமன்றத்தில் அமளி- என்ன நடந்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?10 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக கனடா இருக்கிறது. இந்நிலையில் கனடா மீது டிரம்ப் விதித்த வரிகளை ''நியாமற்ற வரி'' என மார்க் கார்னி கூறினார் கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவின் 25% வரி அமலுக்கு வந்தது. ஆனால் சில தினங்களிலே ஏற்கனவே கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்த பொருட்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. கனடாவின் பொருளாதாரத்தை சீர்க்குலைக்க டிரம்ப் முயற்சிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தது. "கனடா பணியாளர்கள், குடும்பங்கள் மற்றும் தொழில்கள் மீது டிரம்ப் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் அவரை வெற்றியடைய விடமாட்டோம்", என்று பிரதமராக தேர்வான பின்பு தனது வெற்றி உரையில் கார்னி தெரிவித்தார். ''அமெரிக்கா எங்களுக்கு மரியாதை காட்டும் வரை" தனது அரசாங்கம் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைத் தொடரும் என்று அவர் கூறினார். கனடாவின் பொருளாதாரம் பெரும்பான்மையாக அமெரிக்காவைச் சார்ந்தவையாக இருப்பதால், டிரம்பின் இறக்குமதி வரிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், கனடா பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளது. "இது கனடாவின் இருண்ட நாட்கள். இதற்கு காரணமாக இருந்த நாட்டை நாம் இனி நம்ப முடியாது," என்றார் கார்னி. "இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீண்டு வருகிறோம், ஆனால் இதிலிருந்து கற்ற பாடங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. வரவிருக்கும் கடினமான நாட்களில் நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்", என்றார் மார்க் கார்னி. சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? நாசா புதிய அறிவிப்பு9 மார்ச் 2025 ஜென் Z, ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தன?9 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கன்சர்வேட்டிவ் கட்சியைப் பற்றி பேசிய கார்னி, "பியர் பாலிவின் கொள்கைத் திட்டங்கள் நம்மை பிரித்து, நமது நாட்டை வேறொருவர் கைப்பற்ற வழிவகுக்கும்," என்று தெரிவித்தார். "ஏனென்றால் அவர் டொனால்ட் டிரம்பை வணங்குபவர், அவரை எதிர்த்து நிர்ப்பவர் இல்லை". கார்னி மேடை ஏறும் முன்னர், 12 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் தலைவராக இருந்த ட்ரூடோ தனது அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருக்கமான உரையுடன் விடைபெற்றார். டிரம்பின் ஆட்சியில் கனடா ''இருப்பு சார்ந்த சவால்களை'' எதிர்கொண்டதாக அவர் கூறினார் கார்னி மற்றொரு ஜஸ்டின் ட்ரூடோவைப் போன்றவர் தானே தவிர ஒரு மாற்றத்திற்கான நபர் அல்ல என்று கன்சர்வேட்டிவ் கட்சியினர் குற்றம்சாட்டினார். தலைவரை மட்டும் மாற்றியமைத்து நான்காவது முறை ஆட்சி அமைக்க லிபரல் கட்சி முற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மெண்ட் எனப்படும் முதலீடு சார்ந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டொரோண்டோவிலிருந்து நியூயோர்க்கிற்கு மாற்றுவதில் தனது பங்கு தொடர்பாக பொய் கூறியதாக கார்னி மீது கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம்சாட்டியது. நிறுவனத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவை, தான் அந்த நிறுவனத்தின் போர்டில் இருந்து வெளியேறியப் பிறகு பங்குதாரர்கள் மேற்கொண்டார்கள் என்று கார்னி தெரிவித்திருந்த நிலையில் இடமாற்றம் தொடர்பான முடிவை கடந்த டிசம்பர் மாதமே அவர் பரிந்துரைத்தது தொடர்பான கடிதம் ஒன்று வெளிவந்தது. நாடாளுமன்றத்தில் 120 இடங்களை கொண்டிருக்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, 33 இடங்களுடன் இருக்கும் பிளாக் கேபேக்வா, 24 இடங்களைக் கொண்ட நியூ டெமாக்ரட்ஸ் ஆகிய கட்சிகளை வரும் தேர்தலில் லிபரல் கட்சி எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் அவசியம் காண வேண்டிய உலகின் தனித்துவமான 10 இடங்கள்10 மார்ச் 2025 கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக - என்ன பிரச்னை?3 மணி நேரங்களுக்கு முன்னர் கார்னியின் முக்கிய கொள்கைகள் லிபரல் கட்சியை இடது சாரியாக மாற்றியமைத்த ட்ரூடோவிடம் இருந்து மாறுபட்டு, இவர் மையவாத கருத்துக்களைக் கொண்டவராக இருக்கின்றார். சமீப ஆண்டுகளில் பல அரசியல் தடங்கலை சந்தித்த எரிவாயு குழாய் திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். வீட்டு வசதி மற்றும் மாசு ஏற்படுத்தாத எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடு திட்டங்கள் அதிகரிக்கப்படும், கனடாவின் மாகணங்களுக்குள் இருக்கும் தடைகளை நீக்கி தாராளமயமாக வர்த்தகம் செய்யவும், அமெரிக்காவிடம் இருந்து விலகி புதிய பொருளாதாரத்தை அமைக்கவும் வழிவகை செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். ட்ரூடோவின் கீழ் 40% விரிவடைந்த மத்திய அரசாங்கத்தின் அளவை கட்டுப்படுத்தபோவதாக பிரதமர் பதவிக்கான போட்டியின்போது, கார்னி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gepdmlmyvo
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம் மாநில அரசிடம் தானே அண்ணை அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளை கண்காணித்து பிடித்தாலே போதுமே! தமிழக மீன்பிடி படகு முதலாளிகள் அரசியல்வாதிகள் எனில் அவர்கள் எப்போதும் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது வழமை தானே!
-
40% வேலைகளை பாதிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு - அதிக பாதிப்பு யாருக்கு? புதிய ஆய்வு கூறும் தகவல்
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் தொழில் வாய்ப்புக்களை பறிக்குமா? 09 MAR, 2025 | 11:02 AM கேணல் ரமணி ஹரிஹரன் ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது அதிகம் பேசு பொருளாகிவிட்டது. எளிதாக விளக்கம் கூறினால் ஏ.ஐ. என்பது இயந்திரங்கள் மனிதர்களைப் போல கற்றுக் கொள்ளவும், பகுத்தறிந்து செயல்படவும் அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். ஏ.ஐ. அமைப்புகளால் தரவைச் செயலாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், அவற்றின் நடத்தையை மாற்றியமைக்கவும் முடியும். ஏ.ஐ உபயோகம். ஏற்கனவே அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால் அதனால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று அறிவதில் எல்லா நாடுகளும் நாட்டம் காட்டி வருகின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ட்ரஸ்ட் (TRUST) என்று கூறப்படும் “மூலோபாயத் தொழில் நுட்பத்தை பயன்டுத்தி உறவை மாற்றுதல்” ஒப்பந்தமாகும். இதன்படி இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன. அதன் செயலாக்கம் பாதுகாப்பு, எரி சக்தி, விண்வெளி ஆகிய துறைகளைத் தவிர உயர் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் செயல்முறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதனால் தற்போதைய வேலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உலக அளவில் வேலை வாய்ப்பில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அனுமானிக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வேலைகளின் எதிர்கால அறிக்கை: 2025 (Future of Jobs report 2025) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகில் உள்ள 22 தொழில்கள் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்த பிறகு தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் குறைந்து வரும் வேலைத் துறைகளின் பட்டியல்கள் உள்ளன. இவை வரும் ஆண்டுகளில் உலக சந்தையின் பல்வேறு தொழில்களில் வேலைகளின் போக்குகள் மற்றும் அவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் விவரிக்கின்றன. மக்கள்தொகை மாற்றங்கள், புவிசார் அரசியல் மோதல்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வரும் ஆண்டுகளில் எந்தெந்த தொழில்கள் ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. உலக பொருளாதார மன்ற அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் முதலாவதாக, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை கணித்துள்ளது. இருப்பினும், இதே கால அளவில், தோராயமாக 92 மில்லியன் பேர் வேலை இழக்க வாய்ப்புண்டு. கூட்டி கழித்துப் பார்த்தால், உலகில் 78 மில்லியன் நிகர புதிய வேலைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். இவற்றில் ஐந்து வேலைகளில் ஆள்களுக்கான தேவைகள் சிறப்பான வளர்ச்சியைக் காணும். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இலகுரக டிரக் அல்லது விநியோக சேவை ஓட்டுநர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குனர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் கடை விற்பனையாளர்கள் ஆகியவை அடங்கும். பல நாடுகள் மிகவும் நிலையான எதிர்காலத்திற்காக எடுத்துவரும் பசுமை முயற்சிகளால் விவசாயத் துறையில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இவற்றைத் தொடர்ந்து உணவு பதப்படுத்துதல் மற்றும் அதில் தொடர்புடைய தொழிலாளர்கள் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நர்சிங் நிபுணர்கள் உணவு மற்றும் பான சேவை ஊழியர்கள் செயல்பாட்டு மேலாளர்கள்; சமூகப் பணி மற்றும் ஆலோசனை நிபுணர்கள் திட்ட மேலாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர்கள் இவர்களின் தேவை அதிகரிக்கும். பின்வரும் வேலைகள் அடுத்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளரும் என்று அறிக்கை கூறுகிறது: செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவுப் (Big data) புரட்சி இதன் பின்னணியில் இருக்கும். பெருந்தரவு நிபுணர்கள், நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள், இயந்திர கற்றல் நிபுணர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நிபுணர்கள் ஆகிய ஐந்து வேலைவாய்ப்புகள் வளரும். அதிக சம்பளம் பெறுகிறவர்களாக இவர்கள் மாறுவர். இதற்கு மாறாக, பல பாரம்பரிய ஆபீஸ் வேலைகள் வேகமாக குறைந்து வரும் வேலைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தபால் சேவை ஊழியர்கள், வங்கி காசாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தரவு உள்ளீட்டு செயல்முறை ஆக்குநர், நிர்வாக உதவியாளர்கள் மற்றும் நிர்வாக செயலாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள். இந்த வீழ்ச்சியடைந்து வரும் போக்கால் மிகவும் பாதிக்கப்படும் மற்றொரு வேலை கிராஃபிக் டிசைனர். ஏ.ஐ உபயோகம் ஒவ்வொரு நாளும் அதன் மாயாஜாலத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துவதால், இந்த படைப்பு நிபுணர்களின் வேலை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. வேலையில் தேவைப்படும் திறன்களில் கிட்டத்தட்ட 40 சதவீத மாற்றம் ஏற்பட உள்ளது. ஏற்கனவே, 63 சதவீத முதலாளிகள் அதை தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாக குறிப்பிடுகின்றனர். ஏ.ஐ. நம் வாழ்க்கையை இருண்டதாக மாற்றிவிடும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில், எதிர்காலத்தில் தேவையான மற்றும் விரும்பத்தக்கதாகக் கருதப்படும் திறன்களின் பட்டியலில், முன்னணியில் இருப்பவை மனிதர்களுக்கே உரிய பின்வரும் திறன்களாகும். அதில் பகுப்பாய்வு சிந்தனை முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மீள்தன்மை(resilience), நெகிழ்வுத்தன்மை(flexibility), சுறுசுறுப்பு(agility) ஆகியவை வரும் ஆண்டுகளில் தேவைப்படும் சில முக்கிய திறன்களாகும். மேலும் தலைமைத்துவம் மற்றும் சமூக செல்வாக்கு, படைப்பு சிந்தனை, ஊக்கம் மற்றும் சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல், தொழில்நுட்ப கல்வியறிவு, பச்சாதாபம் காட்டுதல், ஆர்வம், வாழ்நாள் முழுவதும் கற்றல், திறமை மேலாண்மை, சேவை நோக்குநிலை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை முக்கிய திறன்களாகும். எனவே, வரும் ஆண்டுகளில் உலகளாவிய வேலை சந்தைப் புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது தான் ஒரே வழியாகும். பீதி தேவையில்லை. எல்லோரும் சொல்வது போல், ஏ.ஐ உங்கள் வேலையை எடுத்துக் கொள்ளாது, ஆனால், எவ்வாறு ஏ.ஐ-யை பயன்படுத்துவது என்று தெரிந்த ஒருவர் உங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம். (கேணல் ஹரிஹரன், தெற்காசிய பாதுகாப்பு விவகார வல்லுநர், சென்னை) https://www.virakesari.lk/article/208671
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா மூன்றாவது தடவையாக சுவீகரித்தது; இந்தியாவுக்கு 2ஆவது தொடர்ச்சியான ஐசிசி கிண்ணம் Published By: VISHNU 09 MAR, 2025 | 10:20 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வெற்றி கொண்டு இந்தியா சம்பியனானது. இந்தியா வென்றெடுத்த இரண்டாவது தொடர்ச்சியான ஐசிசி கிண்ணம் இதுவாகும். ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தை இந்தியா கடந்த வருடம் வென்றிருந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சம்பியனானது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2002இல் இலங்கையுடன் இணைச் சம்பியனான இந்தியா, 2013இல் மீண்டும் சம்பியனாகி இருந்தது அத்துடன் 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்த வருடம் இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. முந்தைய சம்பியன் பட்டங்களைவிட இந்த சம்பியன் பட்டம் இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், இம்முறை தோல்வி அடையாத அணியாக இந்தியா சம்பியனானதுடன் லீக் சுற்றிலோ, நொக் அவுட் சுற்றிலோ எந்த ஒரு அணியிடமும் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளவில்லை. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது. அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், ஷுப்மான் கில் (31), விராத் கோஹ்லி (1), ரோஹித் ஷர்மா ஆகியோர் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது. ரோஹித் ஷர்மா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை. இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (203 - 5 விக்.) ஷ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 29 ஓட்டங்களுடனும் வெளியேறினர். கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹார்திக் பாண்டியா 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (241 - 6 விக்.) ஆனால், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். கே.எல். ராகுல் 34 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து சிரமத்திற்கு மத்தியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 38 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 12 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைந்தது. ஆரம்ப ஜோடியினரான வில் யங் (15), ரச்சின் ரவிந்த்ரா (37) ஆகிய இருவரும் 49 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், வில் யங், ரச்சின் ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன் (11) ஆகிய மூவரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததும் ஓட்ட வேகம் குறைந்தது. தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது டொம் லெதம் (14) ஆட்டம் இழந்தார். டெரில் மிச்செலும் க்லென் பிலிப்ஸும் 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்லென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் அணித் தலைவர் மைக்கல் ப்றேஸ்வெல்லுடன் 6ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்த டெரில் மிச்செல் 63 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். மறுபக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கல் ப்றேஸ்வெல் 40 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரோஹித் ஷர்மா, தொடர் நாயகன் ரச்சின் ரவிந்த்ரா https://www.virakesari.lk/article/208741
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்!
காசாவிலிருந்து மக்களை வெளியேற்றாமல் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும்திட்டம் - ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவு Published By: RAJEEBAN 09 MAR, 2025 | 12:39 PM காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றாமல் அவர்களிற்கு 53 பில்லியன் டொலர் செலவில் வீடுகளை கட்டித்தரும் அராபிய நாடுகளிள் திட்டத்திற்கு ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவளித்துள்ளனர். எகிப்தினால் உருவாக்கப்பட்ட திட்டத்தினை அராபிய நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய தலைவர்கள் இதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். சனிக்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமை அராபிய நாடுகளின் இந்த திட்டத்திற்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். ஐந்து வருட திட்டத்தினை யதார்த்தபூர்வமானது என ஐரோப்பிய தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த திட்டம் காசா மக்களிற்கு பேரழிவை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளில் இருந்து நிலையான மற்றும் விரைவான முன்னேற்றத்தை வழங்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு பதில் காசாவில் இரண்டுலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. 53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள் காணப்படும் காசாவை காண்பிக்கும் படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது. காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது. இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காத வெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும் இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக கொள்கலன்களில் குடியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/208692
-
வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதமோதலின் பின்னர் நபர் ஒருவர் மீது இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகம்
Published By: RAJEEBAN 09 MAR, 2025 | 08:56 PM வெள்ளை மாளிகைக்கு வெளியே இனந்தெரியாத நபர் ஒருவர் மீது இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமோதலின் பின்னரே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இந்தியானாவிலிருந்து வோசிங்டனிற்கு நபர் ஒருவர் பயணம் செய்வது குறித்து தகவல் கிடைத்ததாகவும், அந்த நபரை பாதுகாப்பு பிரிவினர் நெருங்கியபோது அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாவும், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இடம்பெற்றவேளை டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/208738
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
அல்ஜசீரா ஊடகத்துக்கு ரணில் குறிப்பிட்ட விடயங்களுக்கு முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க Published By: VISHNU 09 MAR, 2025 | 07:06 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது பயனற்றது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த கால அரசாங்ககளின் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டியல்களை வெளியிடுகிறது. ஆனால் அதற்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 75 ஆண்டுகால அரசியலையும், அரசியல்வாதிளையும் ஊழல்மோசடியாளர்கள் என்று வாய்க்கு வந்ததை போல் குற்றஞ்சாட்டினார்கள்.இதனால் நாட்டுக்கு சேவையாற்றிய சிறந்த அரசியல்வாதிகளும் அவமதிக்கப்பட்டார்கள். கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட நபர்களின் பெயர்கள் இதுவரையில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றதை போன்ற சித்தரிப்பையே மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்துள்ளார்கள் என்று அரசாங்கம் பொதுவாக குறிப்பிடுகிறது. அவர்கள் யார் என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பரீட்சை பெறுபேற்றை அறிவிப்பதை போன்று செயற்பட்டுக் கொண்டிருந்தால் ஏதும் மாற்றமடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தேசிய மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும், சர்வதேச மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208736
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் யார்?!
-
சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், இயன் ஐக்மேன் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியாவில் பாதுகாப்பு படைக்கும், அலவைட் மத சிறுபான்மையினருக்கும் இடையே பல நாட்களாக நடந்து வரும் மோதலில், நூற்றுக்கணக்கான அலவைட் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் தலைவர் அகமது ஷாரா அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அலவைட் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட சுமார் 30 "படுகொலைகளில்" சுமார் 745 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு செயல்படும் 'சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்' (SOHR) தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. "நாம் முடிந்தவரை தேசிய ஒற்றுமையையும் சிவில் அமைதியையும் பாதுகாக்க வேண்டும். மேலும் கடவுளின் அருளால், இந்த இந்த நாட்டில் நாம் ஒன்றாக வாழ முடியும்" என்று அகமது ஷாரா கூறினார். இப்போது சிரியாவில் நடப்பவை, பஷர்-அல்-அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு "எதிர்பார்க்கப்பட்ட சாவால்களின்" ஒரு பகுதியாகும் என்று இடைக்கால அதிபர் அகமது ஷாரா, காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சிரியாவின் அதிபர் பதவியில் இருந்து பஷர்-அல்-அசத் அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவு அளித்த முக்கிய கடலோர மாகாணங்களான லடாகியா மற்றும் டார்டஸில் இருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பஷர்-அல்-அசத், அலவைட் மதப்பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படைகளை சேர்ந்தவர்களையும் கணக்கிட்டால், கடந்த 4 நாட்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. மோதலில் அரசின் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 125 பேரும், அசத்துக்கு ஆதரவான படையை சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிளர்ச்சியாளர்கள் அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து சிரியாவில் நடந்த மிக மோசமான மோதல்களில் இது ஒன்றாகும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைட்டுகள், சிரியாவின் மக்கள் தொகையில் சுமார் 10% இருக்கின்றனர். சிரியாவில் சுன்னி இஸ்லாமியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?9 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சிரியாவின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான ''சதி தாக்குதல்களுக்கு'' பிறகு, அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்நாட்டின் சனா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறியதாக கூறப்படும் இந்த மோதல் அலவைட் மக்களை "திகிலூட்டும் நிலையில்" ஆழ்த்தியுள்ளது என்று சிரியா ஆர்வலர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார், லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ரஷ்ய ராணுவ தளத்தில் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் பகிர்ந்த வீடியோ காட்சிகள், அந்த ராணுவ தளத்துக்கு வெளியே டஜன் கணக்கான மக்கள், "அனைத்து மக்களும் ரஷ்யாவின் பாதுகாப்பை விரும்புகிறார்கள்" என்று கோஷமிடுவதைக் காட்டியது. இதற்கிடையில், டஜன் கணக்கான குடும்பங்கள் அண்டை நாடான லெபனானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் கடலோர பகுதிகளில் "பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த மிகவும் கவலையளிக்கும் செய்திகளால்", தான் "மிகுந்த அச்சத்தில்" இருப்பதாக சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கெய்ர் பெடர்சன் கூறினார். சிரியாவை "ஸ்திரதன்மை நோக்கிக்கொண்டு செல்ல" மற்றும் "நம்பகமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மாற்றத்துக்கு", ஆபத்து விளைவிக்கும் செயல்களில் இருந்து அனைத்து தரப்பினரும் விலகி இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yxpvwd9d4o
-
விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?
'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்பர்லூப் (Hyperloop) என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை 2013இல் முன்மொழிந்தார் ஈலோன் மஸ்க். இதுதொடர்பாக 'ஹைப்பர்லூப் ஆல்பா' என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார். அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா? டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா? 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று மஸ்கின் ஆய்வறிக்கை கூறியது. இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வரவேண்டும் என்றும் அப்போது ஈலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள். பட மூலாதாரம்,Boringcompany ஹைப்பர்லூப் என்றால் என்ன? இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறுவியுள்ளது, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது. எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்கள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம். "ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல" என்கிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியரும் ஹைப்பர்லூப் குழுவுக்கான ஆலோசகருமான சத்ய சக்கரவர்த்தி. "இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்" என்றும் சத்ய சக்கரவர்த்தி கூறுகிறார். திருப்பதி கோவில் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை கோரிய தேவஸ்தானம் - மத்திய அரசு கூறியது என்ன?9 மார்ச் 2025 தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?7 மார்ச் 2025 பட மூலாதாரம்,IIT-Madras படக்குறிப்பு,இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். உதாரணமாக சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில், உலகின் 'அதிவேக ரயில் சேவைகளில்' ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது. ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும் என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. இருப்பினும், மாக்லேவ் ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பயணிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும்" என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில் ஹைப்பர்லூப் திட்டத்தில் இருக்கும் சவால்கள் என்ன? நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட 'வெற்றிடக் குழாய் அமைப்பை' உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று. "நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்," என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. ஹைப்பர்லூப்பில் இருக்கும் மற்றொரு சவால், அதன் அதீத வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பயணிகள் பாதுகாப்புக்கு என எவ்வித விதிமுறைகளும், மத்திய அல்லது மாநில அரசுகளால் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. "ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கு என புதிய விதிகளை அரசு கொண்டுவரும்" என்கிறார் அவர். ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன?8 மார்ச் 2025 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இவர்கள் ஆபத்தான காட்டுவழிப் பயணம் மேற்கொள்வது யாருக்காக?9 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் ஹைப்பர்லூப் என்பது காற்றுப் புகாத, சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக அதிவேகத்தில் செல்லும் ஒரு போக்குவரத்து அமைப்பு எனும்போது, அவசர காலத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுவது இயற்கையே. "அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும். மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று அவர் கூறுகிறார். "இங்கே 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்" என்றும் அவர் கூறுகிறார். மற்றொரு முக்கியமான கேள்வி, ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்தால், அதில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்? சாமானிய மக்களால் பயணிக்க முடியுமா? "நிச்சயமாக முடியும். கட்டணம் குறித்த முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், ரயில் பயணத்திற்கு இணையான கட்டணத்தை நிர்ணயிப்பதே இலக்கு" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்?8 மார்ச் 2025 பெண்கள் இதுவரை எத்தனை நாடுகளில் ஆட்சிக்கு தலைமையேற்றுள்ளனர்?8 மார்ச் 2025 உலகில் இதற்கு முன் செய்யப்பட்ட ஹைப்பர்லூப் சோதனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829இல் வரையப்பட்ட ஓவியம் ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தவர் ஈலோன் மஸ்க் தான் என்றாலும், ஒரு குழாய் வழியாக மக்கள் பயணிப்பது என்ற யோசனை மிகவும் பழமையானது. வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829-இல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று, வங்கத்தில் இருந்து (இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த போது) லண்டனுக்கு ஹைப்பர்லூப் போன்ற ஒரு அமைப்பில் மக்கள் பயணம் செய்வதைச் சித்தரித்தது. ஆனால் அது, எதிர்காலத்தில் இத்தகைய போக்குவரத்து அமைப்புகள் இருக்கலாம் என்ற யோசனையை பகடி செய்து, கற்பனையின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு ஓவியமே. 2013இல் ஈலோன் மஸ்க் வெளியிட்ட 'ஹைப்பர்லூப் ஆல்பா' ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது 'தி போரிங் கம்பெனி' என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் சோதனையில் ஈடுபட்டது. இதற்காக 2016இல், கலிபோர்னியாவில் அந்நிறுவனம் 1287 மீட்டருக்கு ஒரு சோதனை ட்ராக்கையும் வடிவமைத்தது. சில சோதனைகள் நடைபெற்று, ஹைப்பர்லூப் பாட்கள் மணிக்கு 463 கிமீ என்ற வேகத்தை எட்டின என்று அந்நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. ஆனால், தற்போது வரை அதன் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரவில்லை. நகரங்களில் ஹைப்பர்லூப் அமைப்பை கொண்டுவருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் இணையதளம் கூறுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?8 மார்ச் 2025 இளையராஜா இன்று வெளியிடும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 பட மூலாதாரம்,Virginhyperloop படக்குறிப்பு,'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்? 2020இல் 'ஹைப்பர்லூப் ஒன்' எனும் நிறுவனம் (2022 வரை விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற பெயரில் இயங்கியது), தனது இரு ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, உலகின் முதல் ஹைப்பர்லூப் சோதனையை நடத்தியது. அமெரிக்காவின், நெவெடா பாலைவனத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரேத்யேக 500 மீட்டர் நீள பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது. ஆனாலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து, உலகின் அதிவேக மாக்லேவ் ரயில்களை விட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என அந்த நிறுவனம் கூறியது. அதன் பின்னர் 2022இல் பயணிகளுக்காக அல்லாமல், ஹைப்பர்லூப் மூலம் பொருட்களை (Cargo) கொண்டுசெல்வதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பிறகு, 2023 டிசம்பரில் பல்வேறு காரணங்களுக்காக 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனம் மூடப்பட்டது. ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி ஒப்புக்கொள்கிறார். "இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும்," என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93k0wll19po
-
சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சிரியாவில் அரச படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களிற்கும் இடையில் மோதல் - சிறுபான்மை மதப்பிரிவை சேர்ந்த 750 பேர் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை Published By: Rajeeban 09 Mar, 2025 | 11:00 AM தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர் சிரிய பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் மோதல் 750 பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனிதஉரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கொலைகளும் பழிவாங்கும் கொலைகளும் இடம்பெறுவதாக சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 745 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட புள்ளி விபரங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் லட்டாக்கியா மாகாணத்தில் உள்ள ஜப்லேயில் வியாழக்கிழமை அசாத் அரசாங்கத்திற்கு சார்பான ஆயுதகுழுவினர் அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே இந்த மோதல் மூண்டது. மூன்று மாதத்திற்கு முன்னர் பசார் அல் அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றிய ஹயட் தஹ்ரிர் அல்சாம் என்ற இஸ்லாமிய அமைப்பு எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் என கார்டியன் தெரிவித்துள்ளது. பசார் அல் அசாத் சார்பு குழுவின் கிளர்ச்சியை முறியடிப்பதற்காக சிரிய அரசாங்கம் அந்த பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்பியது. ஆயிரக்கணக்கானஅரசாங்க சார்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு தனிபட்ட நபர்களின் நடவடிக்கைகளே காரணம் எனதெரிவித்துள்ள சிரிய அரசாஙகம்,பெருமளவு ஆயுதமேந்திய நபர்கள் அந்த பகுதிக்கு சென்றதால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளது. பொதுமக்களிற்கு தீங்குவிளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். முக்தரியா நகரில் பெருமளவு பொதுமக்களின் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நகரில் ஒருசம்பவத்தில் மாத்திரம் வன்முறைகளில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினரின் சீருடை அணிந்தவர்கள் பொதுமக்களை நெற்றிப்பொட்டில் சுடுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை. அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர். எனினும் இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கியாவின் ஸ்னோபார் பகுதியை சேர்ந்த ஒருவர் அரிஸ் குடும்பத்தை சேர்ந்த தனது அயலவர்களான 15 பேர் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விபரித்துள்ளார். தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். தந்தையையும் மகன்களையும் கொலை செய்த பின்னர் தாயார் அணிந்திருந்த தங்கநகைகளை தருமாறும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரடடினார்கள். என அந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208679
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யாழில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைந்த யூடியூப்பர் 09 Mar, 2025 | 03:47 PM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரிடம் இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர். இந்நிலையில், மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றில் சனிக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் குறித்த சம்பவத்திற்கு சபையில் கண்டனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208688
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பு ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் வட்டாரத்தில் 10 சதவீதமானோரை பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/election-commisson-sri-lanka-1741494774