Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள், நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள், நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும், என தெரிவித்துள்ளார். நீங்கள் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது, நீங்கள் உடன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் உக்ரைனிற்காக நான் உடன்பாட்டிற்கு வந்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
  2. நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2025 | 10:27 AM பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது. இருந்தாலும், பாப்பரசர் நல்ல நிலையில் உள்ளாரெனவும் "செபித்தல், ஓய்வெடுத்தல் மற்றும் பிரார்த்தனை செய்வதில்" நாளை கழித்துவருவதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. தனது உடல் நலத்திற்காக செபிக்குமாறு பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளார். பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பு பல நாட்களாக மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். திருப்பலி பூசை வேளையில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளின் போது தயாரிக்கப்பட்ட உரைகளை வாசிக்க அதிகாரிகளை நியமித்தார். இவ்வாண்டு புது வருடத்திற்கான வார இறுதியில் பல ஆராதனைகளை பாப்பரசர் பிரான்ஸிஸ் வழி நடத்தவிருந்தார். இந்த நிகழ்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நடைபெறும். இந்நிலையில், பாப்பரசர் பங்கேற்க இருந்த அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாப்பரசருக்கு அவரது 21 ஆவது வயதில் நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டமையினால் வயது முதிர்ந்த நிலையில் நுரையீரல் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பாப்பரசராக 12 ஆண்டுகள் சேவையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் 2023 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவில் மூச்சுக்குழாய் அழற்சியினால் 3 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பல தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான்
  3. 19 FEB, 2025 | 11:02 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன் சந்திப்பு
  4. Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெற்றோலிய விற்பனையின் மூலம் 2023 -2024 வரையான காலப்பகுதியில் 265.63 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வு வேளையில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023.10.22 ஆம் திகதி முதல் 2024.10.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பெற்றோலிய விற்பனையின் மூலம் 265.63 பில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோடிகள் இடம்பெற்றுள்ளதாக என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மேலதிகமாக அறவிடப்படும் 50 சதவித வரியை நீக்குவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டார். ஆனால் இந்த 50 சதவீத வரி குறைவடையாது என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 50 சதவீத வரி குறைப்பை பொய்யாக குறிப்பிட்டீர்களா அல்லது உண்மையில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்று கேள்வியெழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு இயலுமான வகையில் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மோசடி இடம்பெறுவதாகவும், மோசடியின் ஒரு தொகை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இன்றும் பழைய விநியோகஸ்த்தர்களிடமிருந்து தான் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருசில தலைவர்கள் சம்பளம் பெறுவதில்லை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள் என்று அரசாங்கம் பெருமைக்கொண்டது. மின்சார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் முன்னாள் பணிப்பாளர்களை காட்டிலும் அதிகளவில் சம்பளம் பெறுகிறார்.அவர் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுகிறார் . அமைச்சரவை பேச்சாளர் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவர் இவ்விடயத்தை அறியவில்லையா, இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை பட்டியல் எதிர்வரும் காலங்களிலும் வெளியிடப்படும்.அரசியல்வாதிகளின் மின் மற்றும் நீர்கட்டணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவோம் என்றார். எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் - நளிந்த ஜயதிஸ்ஸ
  5. சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 52 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. கராச்சி நகரில் நேஷனல் பேங்க் ஏரினா மைதானத்தில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, பலமான வேகப்பந்துவீச்சு, குறிப்பிட்ட சில பேட்டர்களின் ஃபார்ம் ஆகியவற்றை நம்பி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி? விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? 25 ஆண்டுகள் தாகம் 29ஆண்டுகளுக்குப்பின் உலக அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடர் என்பதால், அந்நாட்டு ரசிகர்களோடு சேர்ந்து பாகிஸ்தான் அணியினரும் தீவிரமாகத் தயாராகியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி களமிறங்குகிறது. அதேசமயம், 2000ம் ஆண்டுக்குப்பின் நியூசிலாந்து அணியால் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட எந்த போட்டித்தொடரிலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அந்த அணியால் ஒரு பட்டம் கூட வெல்லாமல் கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இரு அணிகளும், இன்று முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இரு அணிகளுமே முதல் போட்டியில் மோதுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலுவான வேகப்பந்துவீச்சை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியும், 8-வது வீரர் வரை பேட்டரை வைத்திருக்கும் நியூசிலாந்து அணியும் களத்தில் மோதும்போது அனல் பறக்கும். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முகமது ரிஸ்வான் இதுவரை நடந்தவை பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 53 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் 3 முறை மோதியுள்ள நியூசிலாந்து அணி அனைத்திலும் வென்றுள்ளது. இன்று போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தான் அணியும் 9 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து 31 முறையும், சேஸிங் செய்து 30 முறையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து நியூசிலாந்து அணி 26 முறையும், சேஸிங் செய்து 27 முறையும் வென்றுள்ளது. மிரட்டும் வேகப்பந்துவீச்சு இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். ஷாகின் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களும் நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். குறிப்பாக தொடக்கத்தில் ஷாகீன் அப்ரிதியும், நடுப்பகுதியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும். குறிப்பாக அப்ரிதி 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியில் முன்னணி பந்தவீச்சாளராகத் திகழ்கிறார். 2023 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் அணி உயிர்தெழுந்து விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் நியூசிலாந்திடம் தோற்றிருந்தாலும், பாகி்ஸ்தானின் பேட்டர்கள் ஃபார்முக்கு வருவதற்கு அந்தத் தொடர் உதவியாக இருந்தது. 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடியவர்களில் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், பகீம் அஸ்ரம் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் புதியவர்கள். முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். சுழற்பந்துவீச்சில் சக்லைன் முஸ்தாக், முஸ்தாக் அகமது போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தாலும், குஷ்தில் ஷா, சல்மான் அகா, கம்ரான் குலாம் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் மிகுந்த நம்பிக்கையை அளித்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை பாபர் ஆஸம் கடந்த 21 இன்னிங்ஸ்களாக ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஆனால், முத்தரப்புத் தொடரில் சிறப்பாக ஆடி இழந்த ஃபார்மை பாபர் ஆஸம் மீட்டுள்ளார். ஃபக்கர் ஜமான், முகது ரிஸ்வான் மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய , நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். நடுவரிசையில் சவுத் சகீல், சல்மான் சஹாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். உள்நாட்டில் போட்டி நடப்பது, ரசிகர்களின் ஆதரவு, கராச்சி மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் ஆகியவை பாகிஸ்தானுக்கு நிச்சயம் கைகொடுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் அணியின் பலமே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். வலுவான பேட்டிங் வரிசை நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒர் ஒற்றுமை இருக்கிறது. 2000ம் ஆண்டில் நியூசிலாந்து அணியும், 2017ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திதான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின. நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடர் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கி பெர்குஷன், பென் சீர்ஸ் இருவரும் காயத்தால் விலகியது பின்னடைவுதான். பெர்குஷனுக்குப் பதிலாக ஜேமிஸன் சேர்க்கப்பட்டாலும் கராச்சிக்கு அவர் இன்னும் வராததால் முதல் போட்டியில் ஜேமிஸன் பங்கேற்கமாட்டார். முத்தரப்புத் தொடரில் கேட்ச் பிடிக்கும்போது தலையில் பந்துபட்டு காயமடைந்து, தேறிவரும் ரச்சின் ரவீந்திராவும் முதல் ஆட்டத்தில் விளையாடாதது நியூசிலாந்துக்கு பின்னடைவுதான். இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வலுவாக இருப்பதால், பாகிஸ்தான் எச்சரிக்கையுடனே அணுக வேண்டியதிருக்கும். இதனால் டேவன் கான்வேயுடன் சேர்ந்து வில் யங் ஆட்டத்தைத் தொடங்குவார். மற்றவகையில் நியூசிலாந்து அணி வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது. கேன் வில்லியம்ஸன், டேரல் மிட்ஷெல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், பிரேஸ்வெல், சான்ட்னர் வரை பேட்டர்கள் உள்ளதால், கடைசிவரை போராடக்கூடிய பேட்டிங் வரிசை இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக மாறும். முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர், பிரேஸ்வெல் ஆகியர் மட்டுமே இருக்கிறார்கள். சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் நியூசிலாந்தின் சான்ட்னர், பிரேஸ்வெல் 4 ரன்களுக்குள்தான் விட்டுக்கொடுத்து பந்துவீசினர். ஆதலால், இருவரின் பந்துவீச்சும் நடுப்பகுதி ஓவர்களில் பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும். பகுதிநேரப் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெல், பிலிப்ஸ் இருப்பது பலம். பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது நியூசிலாந்து அணியின் டிரன்ட் போல்ட், சவுத்தி, பெர்குஷன் இல்லாதது பலவீனமாக இருந்தாலும், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில் ரூர்கே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் கரைகடக்க வேண்டும். மற்றவகையில் வலுவானபேட்டர்களை நம்பிதான் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலுவானபேட்டர்களை நம்பி களமிறங்குகிறது நியூசிலாந்து அணி ஆடுகளம் எப்படி கராச்சி ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டரை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் அடித்து ஆடலாம். சமீபத்தில் முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 352 ரன்கள் குவித்தது.. இந்த மைதானத்தில் ஓவருக்கு சராசரியாக 5.90 ரன்கள்வரை பேட்டரால் சேர்க்க முடியும், ஒரு அணி சராசரியாக 230 முதல் 250 ரன்கள் வரை அடிக்க முடியும் அதை எளிதாகவும் சேஸிங் செய்யலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் அடிப்பது பாதுகாப்பானது. அணிகள் விவரம் பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆஸம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயாப் தகிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் காந், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப், முகமது ஹஸ்னன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி நியூசிலாந்து மிட்ஷெல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரல் மிட்ஷெல், வில் ரூர்கோ, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், வில் யங், ஜேக்கப் டபி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா?
  6. 18 FEB, 2025 | 08:12 PM (எம்.நியூட்டன்) ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்கு கிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில் திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டு உணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் எமது ஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுதானியப் பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றுகையில், நெல் அரிசிச் சோற்றின் வருகையுடனேயே எமது உணவுத் தட்டுகளில் இருந்து சாமை, வரகு, கம்பு, குரக்கன், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் ஓரங்கட்டப்பட்டன. நெல் அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை அதிக நார்ச்சத்து உடையவை. அதிக அளவில் மாப்பொருளையும் புரதத்தையும் விற்றமின்களையும் கனியுப்புகளையும் கொண்டவை. மேலதிகமாக, புற்றுநோய் எதிர்ப்புச் சேர்வைகளையும் கொண்டிருக்கின்றன. இவற்றால்தான் எமது முன்னோர்கள் தேக ஆரோக்கியத்துடன் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்தார்கள். சூழலியல் நோக்கிலும் நெல்லைவிட சிறுதானியங்களே முதன்மை பெறுகின்றன. நெல் பயிரிடுவதற்கு ஈரமான தரையும் அதிகளவில் நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது. ஆனால், சிறுதானியங்கள் வறண்ட சூழலிலும் குறைந்த நீர்த்தேவையுடன் வளரக்கூடியவை. நெல் நோய்களினதும் பீடைகளினதும் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகும்போது சிறுதானியங்கள் இவற்றுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்கின்றன. காலநிலை மாற்றம் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிறுதானியங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எமது இளைய தலைமுறை பாரம்பரிய உணவுகளை நாகரிகமற்றதொன்றாகக் கருதும் மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றது. துரித உணவகங்களையே அதிகம் நாடுகிறார்கள். கொத்து ரொட்டியையும், பிஸ்ஸாவையும், ப்ரைட் றைஸ்சையுமே விரும்புகிறார்கள். மென்பான நிறுவனங்களின் விளம்பரங்களில் மயங்கி இந்த உணவுகளோடு சேர்த்து ஆபத்தான மென்பானங்களையும் அருந்தி வருகிறார்கள். தேசியம் என்பது வெறும் அரசியல் சொல்லாகியுள்ள இன்றைய சூழ்நிலையில் உணவுப் பண்பாட்டுத் தேசியம் பற்றிய புரிதலை எமது மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/207054
  7. கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,JOHN NELSON கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் ஸ்மித், நதீன் யூசூஃப், ஜார்ஜ் வைட் பதவி, பிபிசி நியூஸ் 18 பிப்ரவரி 2025, 08:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார். "பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்தனர்," என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டேபோரா பிலிண்ட் தெரிவித்தார். அவசர கால சேவைகளின்படி, ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் இந்த விபத்தில் தீவிரமான காயம் அடைந்துள்ளனர். பனிப்போர்வை போர்த்திய காடு - பிரமிக்க வைக்கும் சீன நகரம் அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா? ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி? சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட காட்சிப்பதிவுகளில் விமானம் தலை கீழாக, அதாவது விமானத்தின் மேற்கூரை பனி சூழ்ந்த தரையில் விழுந்துள்ளது. அதன் ஒரு இறக்கை காணாமலும் காட்சியளித்தது. விபத்துக்குள்ளான விமானம், மினியாபோலிசிலிருந்து கிளம்பிய டெல்டா ஏர் லைன்ஸின் விமானம் என்று டொராண்டோ பியர்சன் விமான நிலையம் தெரிவித்தது. இதில் 4 விமான பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் உட்பட மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர். மொத்தமாக பதினெட்டு பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வான் வழி ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமான ஆரஞ், மூன்று வான் வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களையும், இரண்டு தரை வழி ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீவிர காயங்கள் ஏற்பட்டவர்களில் ஒரு குழந்தை, 60களில் உள்ள ஒரு ஆண் மற்றும் தன்னுடைய 40களில் உள்ள பெண் ஒருவர் உள்ளதாக அது தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 விபத்துக்குள்ளான விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் 4819, அதன் துணை நிறுவனமான எண்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை மதியம் 2.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பயணித்தவர்களில் 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சர்வதேச பயணிகள் என்றும் பிலிண்ட் தெரிவித்தார். விபத்து ஏற்பட்ட உடனே விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாக, விமான நிலையம் தெரிவித்தது. கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்து குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் இன்னும் சில நாட்களுக்கு விசாரணைக்காக மூடி இருக்கும் என்றும் பயணிகள் விமானங்கள் சில தினங்களுக்கு தாமதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பயணிகள் கூறுவது என்ன? ''எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. அது தலைகீழாகக் கவிழ்ந்தது'' என்கிறார் அதில் பயணித்த ஜான் நெல்சன். '' பெரும்பாலோனோர் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் விமானத்திலிருந்து இறக்குகிறோம்'' என விபத்து நடந்த உடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ''தரையிறங்குவதற்கு முன்பு அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை. விமானத்திற்குள் அமர்ந்திருந்தபோது நாங்கள் ஒரு பக்கமாக சாய்ந்தோம், அதன் பிறகு நாங்கள் தலை கீழாக கவிழ்ந்தோம்.", என்று அவர் சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் கூறினார். நெல்சனைப் போலவே, ஆஷ்லி ஜூக் என்ற பயணியும் இப்படிப்பட்ட ஒரு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததை அவரால் நம்ப முடியாமல், "கடவுளே, நான் ஒரு விமான விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தேன்!" என்று சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். பயணிகள் விமானத்தில் கூரையில் இருந்து தலைகீழாக தொங்கியபடி இருந்தனர். ''நாங்கள் வௌவால்கள் போல விமானத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தோம்.'' என்கிறார் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய பீட்டர் கோவ்கோவ். "தரையிறங்கிய பின்பு உங்கள் நண்பர்களையும், நெருங்கியவர்களையும் சந்திக்கலாம் என்று ஒரு நிமிடம் ஆவலாக காத்திருப்பீர்கள், மறு நிமிடம் நீங்கள் தலை கீழாக தொங்கியபடி இருப்பீர்கள்", என்று மற்றொரு பயணி பீட் கார்ல்சன் சிபிசி செய்திகளிடம் கூறினார். '' சீட் பெல்டை அவிழ்த்து என்னால் இறங்க முடிந்தது. சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது", என்கிறார் நெல்சன். பயணிகள் விரைவாக ஒரு குழுவாகச் செயல்பட்டதாக விமானத்தில் பயணித்த கார்ல்சன் கூறினார். "நான் பார்த்தது என்னவென்றால், அந்த விமானத்திலிருந்த அனைவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது, ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் இருப்பது என நினைத்துச் செயல்பட்டனர்'' என்கிறார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், கவிழ்ந்த விமானத்திலிருந்து மக்கள் வெளியே வருவதையும், தீயணைப்பு வீரர்கள் அதன் மீது நுரை (foam) தெளிப்பதையும் காட்டுகிறது. விமானத்தின் கதவுகளிலிருந்து உள்ளே இருந்தவர்களை விமான நிலைய ஊழியர்கள் வெளியே வர உதவி செய்வதையும் காண முடிந்தது. வேறொரு விமானத்தில் பயணிக்க இருந்த டயான் பெர்ரி தனது உடைமைகளை செக்-இன் செய்யும் வரிசையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போதே இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்ததாக அவர் தெரிவித்தார். "நான் அந்த விமான நிலையத்தில்தான் இருந்தேன், ஆனால் வெளியே இப்படி ஒரு விபத்து நடந்ததாக எனக்கு தெரியவில்லை என்பது ஒரு முரணாக இருக்கிறது", என்று பிபிசியிடம் அவர் கூறினார். இந்த விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பதை இன்னும் நெல்சன் யோசித்துகொண்டிருக்கிறார். "அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலே மன அழுத்தம், பதற்றம், நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. நாங்கள் இன்னும் இங்கே உயிருடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது", என்று அவர் கூறினார். பயணி கார்ல்சனும் இவ்வாறே உணர்வதாக கூறினார். "தற்போது உயிருடன் இருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சம்பவத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் வரவில்லை", என்று அவர் கூறினார். தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES முரணான தகவல்கள் டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை தலைமை அதிகாரி டாட் அய்ட்கென், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், "ஓடுபாதை மிகவும் காய்ந்திருந்தது. விமான ஓட்டத்தின் திசைக்குப் பக்கவாட்டாக காற்று வீசவில்லை," என்று தெரிவித்திருந்தார். ஆனால் முதலில் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், பக்கவாட்டாக காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளது. டொராண்டோ பியர்சன் விமான நிலையம் கடந்த சில தினங்களாக வானிலை காரணமாக விமான தாமதங்களை சந்தித்து வருகிறது. பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ், விமானம் தரையிறங்கியபோது பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்தது. ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் பயணிகள் விமானமும் ராணுவ விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் இறந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் வான் வழி விபத்துகள் வட அமெரிக்காவில் நான்காக உயர்ந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?
  8. 18 FEB, 2025 | 05:58 PM உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும் என தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நமது பண்பாடு, நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் வைத்தியசாலையில் நடைபெற்றது. உடல் உறுப்பு தான தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினம் இந்த ஆண்டு 7ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுப் பலகைக்கு பிரதமர் தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிக்கையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உடல் உறுப்பு தான தேசிய தினத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்காக வைத்தியசாலைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்புகளை தானம் செய்து நம்பிக்கையின்றி வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு ஆறுதல். அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு மற்றுமொருவரை உயிர் வாழச்செய்ய முடியும். உயிர் வாழ கடினமாக இருக்கும் நோயாளியின் உறுப்புகளை தானம் செய்ததற்காக அந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கருணையான முடிவுகளை எடுக்கும் பலத்தினைப் பெற்ற அந்தக் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் தன்னலமற்ற செயல்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதை எண்ணி நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம். அதன் மூலம் உங்களைப் பிரிந்தவர்கள் நீண்ட காலம் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நமது பண்பாட்டின் மூலம், நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கின்றேன். இதுபோன்ற சமயங்களில் மட்டுமல்ல, ஓர் அனர்த்தம் ஏற்படும்போதும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதும், நாம் வேற்றுமைகளை எல்லாம் மறந்து, இந்த பரோபகார சிந்தை வெளிப்படுகிறது. இது பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒரு பண்பு. அதுவே “இலங்கையர்” என்ற வகையில் எமக்கு கிடைத்துள்ள பலமாகும். கடந்த சில வருடங்களில் உலகிலேயே அதிகளவு கண் தானம் செய்பவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மேலும், நம் நாட்டில் பலர் உறுப்புகள் மற்றும் ஏனைய இழையங்களை தானம் செய்கிறார்கள். இந்த செயல்முறை மேம்படுத்தப்பட வேண்டும். தேவையான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வணிகச் செயலாகச் செய்யக்கூடாது. இதனை தேசிய மட்டத்தில் பலப்படுத்தும் வகையில் எமது அமைச்சு தலையிட்டு செயற்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே, சரியான முறைமையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கான பின்னணியை தயார்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதற்காக நடவடிக்கை எடுத்த அனைத்து மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக உடல் உறுப்பு தானம் செய்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்த தன்னலமற்ற செயலுக்கு உறுதுணையாக இருந்து இன்னொருவருக்கு வாழ வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும், உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் அன்பளிப்புகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுப்பெற்றுள்ளது - பிரதமர்
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு. குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் திரளுக்கு குய்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா? பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்? இன்கன் முறையில் உள்ள முடிச்சுகளைப் போலவே, குய்பு என்பதும் ஒரு சிக்கலான பொருளாக உள்ளது. இது ஒரு நீண்ட இழை மற்றும் பல பக்கவாட்டு இழைகளால் ஆனது. இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திர மண்டலங்களின் தொகுப்புகளிலேயே மிகப் பெரியதாக விளங்கும் குய்பு, அளவில் மற்ற நட்சத்திர மண்டல தொகுப்புகளை (சூப்பர் கிளஸ்டர்களை) விஞ்சியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு arXiv இணையதளத்தில் தொடக்க நிலை ஆராய்ச்சி ஒன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ( இந்த ஆய்வு, வானியல் துறையில் உள்ள மற்ற நிபுணர்களால் முறையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படவில்லை. ஆயினும், இந்த ஆய்வு வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்) 18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது?17 பிப்ரவரி 2025 'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவுகளை வைத்து கணக்கீடுகளைச் செய்ய இன்காக்களால்( பண்டை நாகரித்தைச் சேர்ந்தவர்கள்) பயன்படுத்தப்படும் குய்புவின் விளக்கம். ஒன்றிணைக்கப்பட்ட பொருள் பிரபஞ்சம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாக அமைந்துள்ளதைப் போன்று தோற்றமளிக்கிறது . பால் வீதி விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதியாக உள்ள சூரிய மண்டலத்தில் கிரகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விண்மீன் மண்டலங்கள் ஒன்றிணைந்து குழுக்களை (கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன. அந்த குழுக்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய குழுக்களை (சூப்பர் கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன. அந்த சூப்பர் கிளஸ்டர்கள் ஒன்றிணைந்து, அதைவிட பெரிய சூப்பர் கிளஸ்டர்களை உருவாக்குகின்றன. வானியலாளர்கள் இந்த செயல்முறை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், தற்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் மூலம் அவற்றை முழுமையாகக் ஆராய இயலவில்லை. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இவை, விண்மீன் மண்டலங்களையும், அவற்றின் குழுக்களையும் (சூப்பர் கிளஸ்டர்களின்) கொண்ட மிகப் பெரிய அமைப்புகளாகும். அளவில் மிகப் பெரிய இந்த குழுக்கள், நமது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுகின்றன. வேற்று கிரக இயற்பியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஹான்ஸ் போஹ்ரிங்கர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, பூமியிலிருந்து சுமார் 425 மில்லியன் முதல் 815 மில்லியன் ஒளி ஆண்டுகள் வரை ஐந்து பெரிய அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளது. ஒரு காலத்தில், அருகிலுள்ள மிகப்பெரிய குழுவாக (சூப்பர் கிளஸ்டராக) கருதப்பட்ட ஷாப்லி சூப்பர் கிளஸ்டர்,செர்பென்ஸ்-கொரோனா பொரியாலிஸ் சூப்பர் கிளஸ்டர், ஹெர்குலஸ் சூப்பர் கிளஸ்டர், ஸ்கல்ப்டர்-பெகாசஸ் சூப்பர் கிளஸ்டர் மற்றும் இறுதியாக, குய்பு ஆகிய ஐந்து அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. "குய்பு என்று நாங்கள் பெயரிட்ட இந்த அமைப்பு, பிரபஞ்சத்தில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது" என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். "இந்த மிகப்பெரிய அமைப்பு, சுமார் 45 சதவீத விண்மீன் குழுக்களையும், 30 சதவீத விண்மீன் மண்டலங்களையும், 25 சதவீத பொருளையும் (matter), பொருளின் தொகுதி அளவில் (volume fraction) 13 சதவீதத்தையும் கொண்டு, இதுவரை அறியப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை உருவாக்குகிறது" என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். கயிறுகளில் உள்ள முடிச்சுகளில் இருந்து உருவாக்கப்படும் குய்புகள், நிறம், வரிசை மற்றும் எண் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைக் கொண்டிருக்கும். "சிறிய பக்கவாட்டு இழைகளைக் கொண்ட ஒரு நீண்ட இழை (நூல் ) போன்ற தோற்றம், அந்த பெரிய கட்டமைப்புக்கு குய்பு என்ற பெயரிட வழிவகுத்தது" என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். உலகின் ஏழ்மையான பகுதி எட்டே ஆண்டுகளில் வானுயர்ந்த கட்டடங்களுடன் பளபளப்பான நகரானது எப்படி? பிபிசி கள ஆய்வு17 பிப்ரவரி 2025 கர்நாடகா கேரட்டை 'பாலிஷ்' செய்து ஊட்டி கேரட் என விற்பதாக புகார் - நீலகிரி விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ARXIV/HANS BÖHRINGER ET AL அவர்களின் ஆராய்ச்சியில், போரிங்கரும் அவரது குழுவினரும் குய்பு மற்றும் அதனைப் போன்ற நான்கு பெரிய அமைப்புகளை 130 முதல் 250 மெகாபார்செக்குகளுக்குள் (மெகாபார்செக் - 1 மெகாபார்செக் = 3.26 மில்லியன் ஒளியாண்டுகள்) கண்டுபிடித்தனர். அவற்றை அடையாளம் காண, விஞ்ஞானிகள் எக்ஸ்-ரே கதிர்வீச்சு மற்றும் விண்மீன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சோதனைகளைப் பயன்படுத்தினர். கிளாசிக்ஸ் (Cosmic Large-Scale Structure in X-ray) கிளஸ்டர் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி இந்த பெரிய அமைப்புகளை பகுப்பாய்வு செய்தனர். எக்ஸ்-கதிர் விண்மீன் குழுக்கள், விண்வெளியில் பல்லாயிரம் நட்சத்திரங்களைக் கொண்ட பெரிய குழுக்கள் ஆகும். இக்குழுக்களில் நட்சத்திரங்களுக்கு இடையே மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வாயு உள்ளது. இன்ட்ராகிளஸ்டர் வாயு என்று அழைக்கப்படும் இந்த வாயு எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது. இந்த எக்ஸ்-கதிர்கள், பொருள் அதிகமாக திரண்டுள்ள இடங்களை காட்டுகின்றன. அதேசமயம் அடிப்படையான காஸ்மிக் வலையை (cosmic web) வெளிப்படுத்துகின்றன. அதனால், இந்த கதிர்வீச்சுகள் மிகப்பெரிய கட்டமைப்புகளை அடையாளம் காண்பதற்கான சமிக்ஞைகள் போன்றவை. பிரபஞ்சத்தில் உள்ள இதர மிகப்பெரிய கட்டமைப்புகள் குய்பு மிகப் பெரிதாகவும் இப்போது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பாகவும் கருதப்பட்டாலும், அதற்கு கடும் போட்டி தரும் விதத்தில் பல பெரிய கட்டமைப்புகள் உள்ளன. உதாரணமாக, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும். 2003இல் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்லோன் கிரேட் வால் (SGW) அமைப்பும் உள்ளது. இது 1 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு மேல் நீளமுள்ளது என்று நம்பப்படுகிறது. ஹெர்குலிஸின் கொரோனா-போரியல் கிரேட் வால் எனும் அமைப்பு தான் இதுவரை பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய அமைப்பாகும். புதிரான பொருட்களை உள்ளடக்கிய 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளம் கொண்ட இது, இதுவரை அறியப்பட்ட பிரபஞ்சத்தில் 11 சதவீதத்தை கொண்டிருக்கிறது. தற்போது குய்பு கண்டறியப்பட்ட பிறகு, இந்த அமைப்புகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் குய்பு தனது முதலிடத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளாது என்று பேராசிரியர் போரிங்கர் நம்புகிறார். "நாம் இன்னும் பெரிய விண்வெளி பரப்புகளை ஆராய்ந்தால், அதிகமான மிகப்பெரிய கட்டமைப்புகள் இருக்கலாம் ( அதற்கான சாத்தியம் அதிகம்) என்று எர்த்ஸ்கையிடம் பேராசிரியர் போரிங்கர் தெரிவித்தார். 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும். உடைந்து விழக் கூடிய பொருட்கள் ஆனால் இந்த "சூப்பர்ஜெயண்ட்களின்" (மிகப்பெரிய அமைப்புகள்) கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குய்புவின் அளவுள்ள ஒரு அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படை ஆகும். குய்பு மற்றும் அதனைப் போன்ற பெரிய கட்டமைப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வது, விண்மீன் மண்டலங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், பிரபஞ்சத்தை கண்காணிக்கவும் அளவிடவும் பயன்படுத்தப்படும் மாதிரிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த பெரிய அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படும். காலப்போக்கில் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது, குய்பு மற்றும் அதனைப் போன்ற பிற அமைப்புகள் இறுதிவரை நீடிக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "பிரபஞ்சத்தின் எதிர்காலப் பரிணாம வளர்ச்சியில், இந்த பெரிய கட்டமைப்புகள், இறுதியில் சிறுசிறு துண்டுகளாக உடைந்துவிடும். அதனால் அவை நிரந்தரமானவை அல்ல" என்று போரிங்கரும் அவரது குழுவினரும் விளக்குகின்றனர். ஆனால் "தற்போது, தனித்துவமான பௌதிக பண்புகள் மற்றும் விண்வெளிச் சூழல்களை கொண்ட சிறப்புப் பொருட்களான அவை, தனி கவனம் பெற தகுதியானவை" என்று அவர்கள் கூறுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?
  10. 18 FEB, 2025 | 05:27 PM மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மன்னார் தீவுப் பகுதி என்பது மிகவும் குறுகிய தாழ்வான நிலப்பகுதியாகும். இது, கடல் நீர் மட்டத்திலிருந்து தாழ்வான நிலப்பகுதி என்பதால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோட முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்தும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். இயற்கை அனர்த்தத்தை தாங்குதிறன் கொண்டதாக தீவுப்பகுதியின் தரைத்தோற்ற அமைவிடம் இல்லை. அதனால்தான் மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குவதில்லை. ஆகவே, இப்பகுதியில் கனியமணல் அகழ்வதென்பது மிகவும் பாரதூரமான விளைவுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையின் கீழ் 23 அரச திணைக்களங்கள் மன்னார் தீவுப் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை வழங்குவதற்குரிய ஏற்பாட்டுக்காக முன்னர் இரண்டு முறை சென்றபோதும் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக கள ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் (17) மன்னார் நீதிமன்றத்தில் போராட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொண்டு, நாளை (19) அப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொள்ளவிருக்கின்றனர். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்த மக்களுடைய விருப்பம் இல்லாமல் தனியார் காணிக்குள் அத்துமீறி உட்புகுந்து இந்த ஆய்வை மேற்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு கனியமணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதென்பது அந்த மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களுடைய விருப்பமின்றி செயற்படுத்த முடியாது. பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகவே, நாளைய கள ஆய்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் ஏனைய திணைக்களங்களும் உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்த உயரிய சபையின் ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும்
  11. AB17 வீதி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இருந்து பொன்னாலைச் சந்தி வரை புனரமைக்கப்படாதுள்ளது. காரைநகரில் வலந்தலைச்சந்தியில் இருந்து வீதி மோசமாக உள்ளது.
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் லூக்கர், லில்லி ஜமாலி பதவி, 17 பிப்ரவரி 2025 ஈலோன் மஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை. வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவும் கட்டுப்பாட்டு அறை வரை, மஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர். அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான மஸ்கை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர். மஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர் வைத்த சட்டையும் அணிந்து, ஓவல் அலுவலகத்தில், அதிபரின் மேசையின் மேல் காணப்பட்டார். கடந்த வியாழக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவரது தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, எக்ஸும் அவருடன் பிறந்த மற்ற இருவரும் மோதியுடன் பரிசுகளை பகிர்ந்துகொண்டனர். ஆப்பிள் நிறுவனம் குறித்து ஈலோன் மஸ்க் பகிர்ந்த மீமின் பின்னணி என்ன? அம்பானி vs ஈலோன் மஸ்க்: இந்திய செயற்கைக்கோள் இணையசேவை சந்தையை பிடிக்க நடக்கும் போர் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்: உலகின் மிகப்பெரிய ராக்கெட் வெடித்த பிறகும் மனஉறுதி குலையாத ஈலோன் மஸ்க் வாஷிங்டனுக்கு வருவதற்கு முன்னரும் மஸ்க் தனது குழந்தைகளுடன் காணப்பட்டுள்ளார். துருக்கி அதிபருடனான சந்திப்பு, அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக மஸ்கை அறிவித்து டைம் பத்திரிகை நடத்திய விழா போன்றவற்றில் மஸ்குடன் அவரது குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர். மஸ்கின் குழந்தைகள் அவருடன் வருவதற்கு என்ன காரணம்? "பொது இடங்களில் தோன்றும் போது குழந்தைகளை அவருடன் வைத்துக் கொள்வது, அவரை மேலும் சிறந்தவராக காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல்வாதியின் அல்லது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை, அவரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான ஒரு நடவடிக்கை," என்கிறார் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு பேராசிரியர் கர்ட் பிரடாக். குழந்தைகளை ஏன் அழைத்து வர வேண்டும்? இருந்தும், மஸ்கின் சிறு குழந்தையை ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் முடிவு வித்தியாசமானது என்கிறார் பிரடாக். 30 நிமிட செய்தியாளர் சந்திப்பின் போது எக்ஸ் சலிப்பாக காணப்பட்டதுடன் தனது தந்தையை போல் செய்து கொண்டு, தரையில் அமர்ந்திருந்த அவரை, அதிபர் அவ்வப்போது பார்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அறையில் இருந்த யாரோ ஒருவரை அமைதி காக்கும்படி எக்ஸ் சைகை செய்தது போல் தோன்றியது. குழந்தைகளை அழைத்து வருவது திட்டமிட்டது என்கிறார் பிராடாக். இது மஸ்க் மற்றும் டிரம்ப் இருவருக்குமே பலனளிப்பதுதான். "சில விஷயங்களுக்கு கவனத்தை ஈர்த்து, பல விஷயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவது என இதில் ஒரு திட்டமிருப்பதாக நான் கருதுகிறேன்." மக்கள் தொடர்பு திட்டமிடல் ஆலோசகரக இருக்கும் ஜான் ஹாபர் 5 அதிபர் தேர்தல் பரப்புரைகளில் பணியாற்றியுள்ளதுடன் ஹார்வர்டில் பயிற்றுவிக்கிறார். மஸ்கின் குழந்தைகள் அவ்வப்போது தோன்றி, வைரலாகும் தருணங்களை உருவாக்குவது டிரம்புக்கு உதவிகரமாக இருப்பதாக ஜான் ஹாபர் சொல்கிறார். டிரம்பை பொருத்தவரை, மேலும்மேலும் குழப்பம் ஏற்படுத்தினால் , மற்றவர்கள் ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துவது குறைகிறது. குழப்பம் அவருக்கு பலனளிக்கிறது." என்கிறார் ஹாபர். மஸ்கின் முன்னாள் காதலியும் எக்ஸின் தாயுமான கிரைம்ஸ், தனது மகன் அதிபர் அலுவலகத்தில் தோன்றியதை விமர்சிக்கிறார். "அவன் பொது வெளியில் இவ்விதம் இருக்கக் கூடாது," என எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார். "நான் இதை பார்க்கவில்லை.. ஆனால் அவன் கண்ணியமாக இருந்தது மகிழ்ச்சியளிகிறது." என்று அவர் குறிப்பிட்டார். தனது மகன் வெளிச்ச வட்டத்தில் இருப்பதை தான் ரசிக்கவில்லை என 2022 வேனிட்டி ஃபேர் கட்டுரை ஒன்றில் கிரைம்ஸ் தெரிவித்திருந்தார். "குடும்பத்தில் என்ன நடந்தாலும், குழந்தைகள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் எக்ஸ் அங்கே வெளியே இருக்கிறான். அவன் தனது பாதுகாப்பில் இருப்பதாக ஈலோன் பார்க்கிறார் என நினைக்கிறேன். அதனால அவனை எல்லாப் பக்கமும் அழைத்துச் செல்கிறார். எக்ஸ் அங்கே இருக்கிறான். அவன் சூழ்நிலை அப்படி, ஆனால், எனக்கு சொல்ல தெரியவில்லை." என்கிறார் கிரைம்ஸ். யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஸ்கின் முன்னாள் காதலியும் எக்ஸின் தாயுமான கிரைம்ஸ் அவருடைய மகன் இப்படி பொதுவெளியில் இருப்பதை விரும்பவில்லை மஸ்க்கும் அவரது குழந்தைகளும் அரசியலுக்கு வருவதற்கு வெகு காலதிற்கு முன்னரே மஸ்க் தனது குழந்தைகளை தம்முடன் வர அனுமதித்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மீது கவனத்தை ஈர்க்கும் ஆர்வத்துடனிருந்த துவக்க காலத்திலும், அவரது குழந்தைகளை நிகழ்ச்சிகளில் பார்ப்பது அபூர்வமானதாக இருக்கவில்லை. 2015-ல் சிலிகான் பள்ளத்தாக்கில் டெஸ்லா தொழிற்சாலையில் புதிய வாகனம் ஒன்றின் அறிமுகத்திற்காக செய்தியாளர்களும். ஆய்வாளர்களும் காத்திருந்த போது, அவருடைய ஐந்து குழந்தைகள் சத்தமாக சிரித்துக் கொண்டு, நடைபாதைகளில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், மஸ்கின் குழந்தைகள் அங்கிருந்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இறுக்கத்தை தளர்த்தி, ஒரு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. பிற நிறுவனங்களால் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் உத்யோகப்பூர்வமாக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து இது வேறுபட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் ஒரு அதிகாரியின் மிக சிறு வயது குழந்தைகளை பார்ப்பது வித்தியாசமானதாக இருந்திருக்கும். மஸ்க் மூன்று பெண்கள் மூலம் 12 குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார். அவரது அதிகம் அறியப்பட்ட மகன், X Æ A-12?, "லில் எக்ஸ்" என அழைக்கப்படுகிறார். இது சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கிய போது அதன் பெயரை மாற்ற மஸ்க் பயன்படுத்திய அதே எழுத்துதான். நான்கு வயதான அவரை " உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை தரும் மனிதன்" என மஸ்க் விவரித்துள்ளார். மஸ்க் தம்மை தனது குழந்தைகளுக்கு "முழுமையாக அர்ப்பணித்திருப்பதாகவும்" அவர்கள் மீது அதீத அக்கறை கொண்டிருப்பதாகவும்", மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாக்சன் டைரி ஆஃப் ஏ சீஇஓ பாட்காஸ்டில் தெரிவித்திருந்தார். "அவர் செய்வது எல்லாவற்றிலும் ஊறியிருக்கும் தீவிரம், அவரது சொந்த குழுந்தைகள், காதலிகள், அவரது மனைவிகளிடமும் உண்டு," என்கிறார் ஐசாக்சன். "தன்னைச் சுற்றி எப்போதும் சில குழந்தைகள் இருப்பதை அவர் விரும்புகிறார். ஒரு துணைவர் இருப்பதை அவர் எப்போதும் விரும்புகிறார். அதற்காக அவர் அமைதியை விரும்புகிறார் என பொருளில்லை." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?
  13. எங்கள் அம்மாவும் 2 ஆண் பிள்ளைகள் என்று மகிழ்வாய் இருந்தவ, நாங்கள் தசைபலவீனமாதல்(Muscular Dystrophy) எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் ஆறாத துயரமடைந்துள்ளார். எனினும் நாங்கள் அம்மாவிற்கு ஆறுதலாக இருப்பதோடு அவவின் பொழுதுபோக்க யுரியூப் காணொளிகளை கணனியில் போட்டுக் காட்டுவோம். அண்மையில் வழுக்கி விழுந்து கையில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது மெதுவாக நலமாகி வருகிறார்.
  14. 25 ஆம் ஆண்டு அண்ணை. பெரும்பாலும் தந்தைகள் தம்வலி காட்டாது வாழ்ந்தவர்களே. 1907 இல் பிறந்த உங்கள் தந்தைக்கான கவிதை 1904 இல் பிறந்து 1997இல் மறைந்த எங்கள் அப்புவின்(அம்மப்பா) நினைவுகளை கிளறிவிட்டது. மடியில் வைத்து பல கதைகள் சொல்வார். எள்ளிலும் சின்னி கதை இப்போதும் நல்ல ஞாபகம். தம்மட மகளைத் தாயார் தின்ன நமக்கென்ன பாடு டும்டும் என்று எள்ளிலும் சின்னி பாடுவதாக அப்பு சொன்னது இன்றும் காதுகளில் கேட்கிறது! மாலுமியாய் எமக்கு வழி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது ஏனோ?
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 18 பிப்ரவரி 2025, 07:46 GMT மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுத்துவருகிறது. இந்த நிதியை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிவருகிறது. தமிழ்நாட்டில் குழந்தை மணம் 55% அதிகரிப்பு: முதல் 10 இடங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் - என்ன காரணம்? பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்தாகிறது - பாஜக அரசு முடிவின் பின்னணி 'உனக்கு ஏதும் குறை இருக்கிறதா? - இந்தியாவில் 40 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இந்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது'' எனத் தெரிவித்தார். "புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழக அரசுடன்) இருக்கின்றன.'' ''அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்று கேள்வியெழுப்பினார் தர்மேந்திர பிரதான். சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 அவரது இந்தப் பேட்டி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். செவ்வாய்க் கிழமையன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிப்பிடும்போது, 1930களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமுமே பொதுவாக பேசப்பட்டாலும் தமிழ்நாட்டில் பல தருணங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் அன்மைந்துள்ள தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலை. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை பரவலாக்கும் முயற்சிகள் 1918ல் துவங்கின. சென்னை மாகாணத்திலும் தென்னிந்தியாவில் இருந்த சமஸ்தானங்களான பங்கனப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், மைசூர், புதுக்கோட்டை, சந்தூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளிலும் இந்தியை பரப்பும் நோக்கத்தோடு சென்னை நகரத்தில் தக்ஷிண பாரத இந்தி பிரசார சபா 1918ல் மகாத்மா காந்தியின் முயற்சியில் துவங்கப்பட்டது. 1927ல் இதன் தலைவரான மகாத்மா காந்தி, இறுதிவரை அந்தப் பதவியில் நீடித்தார். 1935வாக்கில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் மாணவர்கள் அங்கு இந்தி கற்றுக்கொண்டிருந்தனர் என்கிறது பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய Struggle for Freedom of Languages in India நூல். அந்தத் தருணத்தில் தென்மாநிலங்களில் மாணவர்கள் தாமாக முன்வந்து இவ்வளவு பரவலாக இந்தியை கற்றுக்கொள்வது பிரச்னையாகவில்லை. பட மூலாதாரம்,DMK 1935 இந்திய சட்டத்தின் கீழ், 1937ல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 159 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றது. சி. ராஜகோபாலச்சாரியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூலை 14ஆம் தேதி அவர் பதவியேற்றுக்கொண்டார். இதற்குப் பிறகு ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், பள்ளிக்கூடங்களில் இந்தி படிப்பது கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் சில இதழ்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்குப் பிறகு நடந்த போராட்டங்களை விரிவாக விவரிக்கிறது Struggle for Freedom of Languages in India நூல். இந்நிலையில், திருச்சி துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய சி.என். அண்ணாதுரை, இதனைக் கண்டித்தார். அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. அதே நாளில் கட்டாய இந்தியை எதிர்ப்பது குறித்து கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. செப்டம்பர் ஐந்தாம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்திலும் கட்டாய இந்தியை எதிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார் அண்ணா. அக்டோபர் 4ஆம் தேதி கோகலே ஹாலில் நடந்த கூட்டத்தில் பேசிய மறைமலை அடிகள், தமிழின் இலக்கியச் சிறப்பையும் இந்தியையும் ஒப்பிட்டு, தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு மாநாடுகள் நடத்தப்பட்டு இந்தியை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 கர்நாடகா கேரட்டை 'பாலிஷ்' செய்து ஊட்டி கேரட் என விற்பதாக புகார் - நீலகிரி விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார் ராஜாஜி. ஆனாலும் இந்தியை கட்டாயமாக்கும் திசையில் தொடர்ந்து செயல்பட்டார் ராஜாஜி. 1938-39ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 125 மேல்நிலை பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சட்டமன்றத்தில் இருந்த நீதிக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தாலும் 20,000 ரூபாய் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மெட்ராஸ் அரசு வெளியிட்ட ஆணையில், மேல்நிலைப்பள்ளியின் முதல் மூன்று வகுப்புகளில் (6,7,8) ஹிந்துஸ்தானி கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்பட்டது. கன்னடம் பேசும் பகுதிகளில் 4 பள்ளிகள், மலையாளம் பேசும் பகுதிகளில் 7, தெலுங்கு பேசும் பகுதிகளில் 54, தமிழ் பேசும் பகுதிகளில் 60 பள்ளிகள் என 125 பள்ளிகள் இதற்கென தேர்வுசெய்யப்பட்டன. இதையடுத்து, இந்தப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்காமல் வேறு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென பெற்றோருக்கு இந்தி எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மே மாத இறுதியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை மாகாண இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் கி.ஆ.பெ. விசுவநாதம், பெரியார், உமா மகேஸ்வரன், டபிள்யு.பி.ஆர். சௌந்தரபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1938ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி, ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் முதல்வரின் இல்லத்தின் முன்பாக உண்ணாவிரதத்தைத் துவங்கினார். ஜூன் 1ஆம் தேதி ஈழத்து சிவானந்த அடிகள் தலைமையில் தி. நகரிலிருந்து முதல்வரின் இல்லம் வரை ஊர்வலமாகச் சென்று, அங்கே போராட்டம் நடத்தினர். பல்லடம் பொன்னுச்சாமியும் அன்று உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இதற்குப் பிறகு கட்டாய இந்தி தொடர்பாக மாகாண அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அந்த விளக்கத்தில் "இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் நமது மாகாணத்திற்கு உரிய இடத்தைப் பெற, நம்முடைய படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியை அறிந்திருப்பது அவசியம். அதனால்தான் பள்ளிகளில் இந்துஸ்தானி அறிமுகப்படுத்தப்பட்டது" என அந்த விளக்கம் கூறியது. இருந்தபோதும் இந்தி கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. இதில் கலந்துகொண்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ராஜாஜி செல்லுமிடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM பல இடங்களிலும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்துவந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சி.என். அண்ணாதுரை கைதுசெய்யப்பட்டு அவருக்கு நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் பெரியார் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு ஒன்றரை மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த நடராசன் என்பவரது உடல்நிலை மோசமடைந்து, 1939 ஜனவரி 15ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார். மார்ச் மாதம் இதேபோல தாளமுத்து என்பவரும் காலமானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த முதல் இருவர் இவர்கள்தான். 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மேலும் 100 பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கப்போவதாக அறிவித்தது மாகாண அரசு. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன. அக்டோபர் 30ஆம் தேதி ராஜாஜியும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 1939 நவம்பரில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 100 பள்ளிகளில் கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நவம்பர் 27ல் சென்னை மாகாண ஆளுநர் ரத்துசெய்தார். ஆனால், ஏற்கனவே இந்தியைக் கற்பித்துவந்த 125 பள்ளிகளில் அது தொடர்ந்ததால், போராட்டங்களும் தொடர்ந்தன. பிறகு, ஒரு கட்டத்தில் கட்டாய இந்தி கற்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் வைசிராய் ஒப்புக்கொண்டார். 1940 பிப்ரவரி 21ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டாய இந்தி ரத்து செய்யப்படுவதாகவும் விரும்பியவர்கள் வேண்டுமானால் படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு மத்திய மற்றும் மாகண சட்டமன்றங்களுக்கு 1946ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது. முதல்வராக பதவியேற்ற டி. பிரகாசம் ஓர் ஆண்டிற்குள்ளேயே பதவி விலகினார். இதற்கடுத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தார். 1948ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பிப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது மாகாண அரசு. ஆனால் இந்த முறை, தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை மனதில் கொண்டு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, சென்னை மாகாணத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழகப் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் இந்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கின. இந்த முறை போராட்டத்தின் தலைமை நிர்வாகியாக சி.என். அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். பெரியாரை அழைத்து, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பேசினார். ஆனால், அதில் பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. பெரியார், அண்ணா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முதல்வர் ஓமந்தூரார், கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் ஆகியோருக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. 1948 செப்டம்பர் 14ஆம் தேதி ஹைதராபாத் மீது இந்திய அரசு போலீஸ் நடவடிக்கையை தொடங்கியபோது சென்னை மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அக்டோபரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தொடர முடிவுசெய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, இது தொடர்பான போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தாலும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடுவது நீடித்துவந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் ஒரு கருத்தை வெளியிட்டார். "பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து" என்றார் அவர். இந்நிலையில், 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓமந்தூரார் பதவி விலகினார். இதையடுத்து, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டமும் முடிவுக்கு வந்தது. இந்தியைக் கட்டாயமாக்கும் மூன்றாவது முயற்சி ஓமந்தூராருக்குப் பிறகு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வரானார். அவரது அமைச்சரவையில் மாதவ மேனன் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். 1950 மே இரண்டாம் தேதி, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முறையும் சி.என். அண்ணாதுரை இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், விரைவிலேயே காங்கிரஸ் அரசு இந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவை ஜூலை 27ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு நடந்த முயற்சிகள் இதோடு முடிவுக்கு வந்தன. இதற்குப் பிறகு ஆட்சி மொழியாக இந்தியை இந்திய அரசு முன்வைத்தபோது, மீண்டும் 'இந்தி திணிப்புக்கு எதிரான' போராட்டம் வெடித்தது. அரசமைப்புச் சட்டத்தை மையமாக வைத்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன. டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதை எதிர்த்த போராட்டம் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஆங்கில வடிவத்தை அதிகாரபூர்வமான அரசியலமைப்பு சட்டமாக வைக்காமல், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக்க முயற்சிகள் நடந்ததை கிரான்வில் ஆஸ்டின் எழுதிய The Indian Constitution: Corner Stone of a Nation நூல் விவரிக்கிறது. அந்த நூலில் உள்ள தகவல்களின்படி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்த்து, அதனையே அடிப்படையான அரசமைப்புச் சட்டமாக வைத்துக்கொள்ளும் திட்டத்தை முன்மொழிந்தார் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத். 1948ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தி மொழிபெயர்ப்பு நேருவிடம் அளிக்கப்பட்டது. "அதிலிருக்கும் ஒரு வார்த்தையும் எனக்குப் புரியவில்லை" என ராஜேந்திர பிரசாத்துக்கு கடிதம் எழுதினார் நேரு. முழுக்க முழுக்க சமஸ்கிருதமயமாக்கியதால்தான் அது யாருக்கும் புரியவில்லையென இந்தி ஆதரவாளர்கள் பிறகு குற்றம்சாட்டினார்கள். இருந்தாலும் இந்தி அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமாக்கும் முயற்சிகள் தொடரவே செய்தன. ஒரு கட்டத்தில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ''தென்னிந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இது உதவிகரமாக மாறிவிடும்'' என்றார் விரைவிலேயே இந்த விவகாரம் ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் பிறகு இந்தியில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமானதாக இருக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார் ராஜேந்திர பிரசாத். ஆனால் இது ஏற்கப்படவில்லை. ஆங்கில வடிவமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு நடுவில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்த பிரச்னை அரசமைப்பு அவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்தியை தேசிய மொழியாகவும் தேவநகரியை தேசிய எழுத்தாகவும் அங்கீகரிக்க வேண்டும் என இந்தியின் ஆதரவாளர்கள் கூறினார்கள். ஆனால், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். முடிவில், இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய 'காதல் சின்னம்' பற்றி தெரியுமா?14 பிப்ரவரி 2025 பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் புதிய அரசமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆகவே அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொண்டபடி 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, 1965க்குப் பிறகும் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கச் செய்வதற்கான சட்டம் ஒன்று 1963ல் அறிமுகப்படுத்தப்பட்டது. The Official Languages Act, 1963 என்ற இந்தச் சட்டம், 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரலாம் எனக் குறிப்பிட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.என். அண்ணாதுரை, 'தொடரலாம்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 'தொடரும்' (may என்பதற்குப் பதிலாக Shall) எனக் குறிப்பிட வேண்டும் என்றார். இருந்தபோதும் அந்தச் சட்டம் 1963ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நிறைவேறியது. இந்தச் சட்டத்தில் திருப்தியடையாத தி.மு.க., இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமானது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17ஐ எரிக்கும் போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்தது. தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டார்கள். அண்ணாவும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் திருச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக சின்னச்சாமி என்பவர் 'தமிழ் வாழ்க, இந்தி ஒழிக' என்று கூறியபடி தீக்குளித்து உயிரிழந்தார். 1964ஆம் வருடம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. 1964ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி, "அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டபடி ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி, இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாகும். இந்தியுடன் ஆங்கிலமும் தொடர 1963ஆம் ஆண்டின் சட்டம் வழிசெய்தாலும், 1965 ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தின் எல்லா அலுவல்களுக்கும் இந்தியே பயன்படுத்தப்படும்" என்றது அந்த அறிவிப்பு. இதையடுத்து அந்த தினத்தை துக்க தினமாக கடைபிடிக்கப்போவதாக அறிவித்தது தி.மு.க. ஜனவரி 25ஆம் தேதி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார் அண்ணா. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னைக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேப்பியர் பூங்காவுக்கு அருகில் திரண்டு, முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தைச் சந்திக்க புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், அவர் மாணவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் மாலையில் மெரீனாவில் திரண்டு இந்தி புத்தகங்களை எரித்தனர். மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கினர். விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா?12 பிப்ரவரி 2025 கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,UNKNOWN படக்குறிப்பு,1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சி. டி.எம். சிவலிங்கம் என்பவர் கோடம்பாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன் என பலரும் தற்கொலை செய்துகொண்டனர். ஜனவரி 27ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சி. சுப்பிரமணியமும் ஓ.வி. அளகேசனும் ஆங்கிலமே தொடர வேணடுமெனக் கூறி ராஜினாமா செய்தனர். மாணவர்களின் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துவந்த நிலையில், அதனை நிறுத்த முடிவுசெய்தார் அண்ணா. மாணவர் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். முதலில் அதனை ஏற்காத மாணவர்கள், பிறகு அரை மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த கட்டத்தில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இறங்கிவந்தார். பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரையாற்றிய பிரதமர், "மக்கள் எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலத்திற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்று மொழியாக வைத்திருக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்திருக்கும் முடிவை நான் இந்தி பேசும் மக்களிடம் விடாமல், இந்தி பேசாத மக்களிடம் விடப்போகிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த உறுதி மொழியையடுத்து போராட்டம் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. பிப்ரவரி 12ஆம் தேதி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர். ஓ.வி. அளகேசனும் சி. சுப்பிரமணியமும் தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றனர். மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. 1986ஆம் ஆண்டு போராட்டம் 1986ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன்படி நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. நவம்பர் 17ஆம் தேதி அரசமைப்பு சட்டத்தின் 17வது பிரிவை தி.மு.கவினர் எரித்தனர். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார் ராஜீவ் காந்தி. இதற்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கவேபடவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு தமிழ்நாடும் இந்தி எதிர்ப்பும்: ஒரு நூற்றாண்டு பயணத்தின் வரலாற்றுப் பின்னணி
  16. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 18 FEB, 2025 | 01:06 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது கையடக்கத் தொலைபேசியின் கட்டணத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை, அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
  17. 18 FEB, 2025 | 12:33 PM மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றைய தினம் மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார். இதன்போது, பாடசாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
  18. 18 FEB, 2025 | 10:28 AM போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்போது, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசா போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளன. சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்கவில் கைது
  19. Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 10:47 AM சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும். நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம், உங்களுடனேயே எங்களது உடன்படிக்கை உள்ளது. அனைவருக்கும் சமமான, அனைவரையும் அங்கீகரிக்கும், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய நாட்டை நாம் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம். நாம் ஒற்றுமையாக இருக்கும் போது நாம் வலுவாக இருக்கிறோம், எவராலும் எங்களைப் பிரிக்க முடியாது. நீங்கள் இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த மாற்றத்தை வேறு திசையில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம். சட்டத்தை தாம் விரும்பியவாறு கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதுவரை இந்நாட்டின் அபிவிருத்தி எல்லாப் பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியாக இடம்பெறவில்லை. முழு நாட்டையும் மையமாகக் கொண்ட ஒரு அபிவிருத்தி முறைமையை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அஸ்வெசும நிவாரண உதவி பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் போன்றே 300க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு ரூபா 6,000/= வவுச்சரை வழங்கியுள்ளோம். 2026 இல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாடசாலை கல்வியை முடித்து சமூகத்திற்குச் செல்லும் பிள்ளைக்கு எதிர்கால பாதையை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்வது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் எளிதானது அல்ல, ஆனால் அதை எப்படியாவது செய்தாக வேண்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்". அனைவருக்கும் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதற்காக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்தார். https://www.virakesari.lk/article/206975
  20. பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நலக் குறைவு காரணமாக பிரதான மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் அண்மைக்காலமாக விலகியிருந்தார். இதேவேளை, கடந்த 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சத்திர சிகிச்சைகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lkபாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம்அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போ...
  21. காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்! Published By: DIGITAL DESK 7 18 FEB, 2025 | 09:08 AM காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும். www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206970
  22. மின்தடைக்கான காரணம் வெளியானது கடந்த 9ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/315310
  23. 18 FEB, 2025 | 10:59 AM காரைக்கால் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இலங்கை அரசின் தொடர் துப்பாக்கிச்சூடு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் பெண்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி ரயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய அரசுக்கு எதிராக காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!
  24. Published By: VISHNU 17 FEB, 2025 | 07:39 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தால். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிப்பதற்காக பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (14) கூடியது. இதன்போது சபாநாயகர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் ' சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் குழாமில் பெரும்பான்மையினராகிய இரண்டு நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நீதியரசர் குழாமில் மீதமுள்ள ஒரு நீதியரசர், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்ற முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று பி.ப.2 மணிமுதல் பி.ப 7 மணி வரை நடைபெற்றது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்கெடுப்பு கோரினார். இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு கோரப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டு ஏகமனதாக திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் : 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றம்
  25. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:45 PM இரண்டாவது உலக தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்ட வியட்நாம் நாட்டில் உள்ள டனாங் (Da Nang) நகரில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தமிழர் நடுவம், வியட்நாம் தமிழ் சங்கம், தமிழ் சாம்பர் ஒஃப் காமர்ஸ் ஆகிய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் 'வியட்நாம் உலக தமிழர் மாநாடு 2025' நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், இலங்கை பிரதமரின் தனிச் செயலர் சிறி பகவான் வினிதா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றுகிறார்கள். மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். இரண்டாம் உலக தமிழர் மாநாடு குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவரான திருத்தணிகாசலம் கூறுகையில், ''இரண்டாம் நூற்றாண்டிலேயே கடல் வணிகத்தில் சோழ, பல்லவ, பாண்டிய பேரரசர்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்துள்ளனர். பண்டைய பட்டுப்பாதை எனப்படும் கடல் வணிக பாதை என்பது சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாமல்லபுரம், நாகப்பட்டினம், தொண்டி வழியாக இலங்கையை தொட்டு, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்கு கடல் வணிகம் நடைபெற்றுள்ளது. வியட்நாமில் உள்ள டனாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் மைசன் எனும் இடத்தில் சைவ மற்றும் வைணவ கோயில்கள் இருக்கின்றன. முக லிங்கம் என்பது உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தில் சிவனின் முகம் இருக்கும். இத்தகைய முக லிங்கம் வியட்நாமின் மைசன் நகரத்தில் இருக்கிறது. இங்கு சிவன் கோயில், முருகன் கோயில் உள்ளன. அத்துடன் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மீசை இருப்பதும் தனித்துவமானது. இதை போன்ற முக லிங்கம் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள பரமக்குடி எனுமிடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி வியட்நாம் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் சாம்பா பேரரசு சாம் எனும் புதிய மொழியை தமிழிலிருந்து தோற்றுவித்தது. பண்டைய சாம் மொழியில் தான் கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் சாம் மொழியும் தமிழ் எழுத்துக்கள் போலவே க, ஞ, ச, ன, ய , ர, ல, வ, ழ, ள என முடிகிறது. டனாங் நகரில் சாம்பா அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சிவன், பார்வதி, முருகன், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இவ்வாறு தமிழர்களுடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளையும் பண்பாட்டு தொடர்புகளையும் கொண்டிருக்கும் வியட்நாமில் உள்ள டனாங் நகரில் தான் உலக தமிழர் மாநாடு பெப்ரவரி 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. உலக தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், தமிழர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், வணிகர்கள் என பலரும் பங்குபற்றுகிறார்கள். மேலும், இந்த மாநாட்டில் இரண்டாவது நாளில் உலக தமிழர்களின் வணிகம் சார்பான மாநாடும் நடைபெறுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்குள் வணிக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும், உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்'' என்றார். இதனிடையே பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டின் கம்போடியா நாட்டில் உள்ள சியாம்ரீப் எனும் நகரில் முதலாவது உலக தமிழர் மாநாடு நடைபெற்றமை என்பதும், இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கு பற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.