Everything posted by ஏராளன்
-
viber_image_2024-12-03_21-59-30-664.jpg
From the album: புலர் அறக்கட்டளை
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2024 பகுதி 1 "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்" நிகழ்வை சிறப்பாகச் செயல்படுத்த உதவி செய்த அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரங்கத்தைப் பொருள் படுத்திய சிறப்பான பேச்சாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள், அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. முக்கியமாக, இன்று வருகை தந்த மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கும், அவர்களை ஆதரித்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியை உரத்து சொல்கிறேன். இத்தகைய நாள் வழக்கமாக நினைவில் கொள்ளப்பட்டு, பலருக்கும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டு வரத் தகுந்த நிகழ்வாக அமைய வேண்டும். எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றிய வட்டு இந்துக் கல்லூரி உப அதிபர் திரு கோகிலராஜன் அவர்களுக்கும் NIST கல்வி நிறுவன நிர்வாகிகள் திரு சிவராஜா(பொறியியலாளர்), நல்ல பல கருத்துகளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். திருமதி சி.சுகுணதேவி அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இயற்கைப் பண்ணையாளர் திரு ரவிசங்கர் அவர்களுக்கும் தாதிய உத்தியோகத்தர் திரு கிருஸ்ணகுமரன்(கிரி) அவர்களுக்கும் உளமார நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவறூபன்(விசேட தேவைப் பிரிவு), சிறப்புரையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜீவானந்தம், சுழிபுரம் கிழக்கு கிராமசேவகர் திரு ராஜ்கண்ணா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சிறப்புரையாற்றிய எமது புலர் அறக்கட்டளை நிர்வாகி கிராமசேவகர் திரு சிவறூபன், வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் கு.பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய உபசெயலாளர் திரு சிறிதரன் அவர்களுக்கும் எமது நிர்வாக உறுப்பினரும் யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர் திருமதி அபிராமி அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய செயலாளர் திரு பரணீதரனுக்கு சிறப்பு நன்றிகள். வருகை தந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். நான்காவது ஆண்டாகவும் இலவசமாக மண்டபம், ஒலிபெருக்கி மற்றும் தளபாடங்களைத் தந்துதவிய வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் தோள் கொடுத்த உறவுகள், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாள் சாத்தியமாகியிருக்காது. பரிசுப் பொருட்கள் வாங்க உதவிய திரு பரணீதரன் அவர்களுக்கும் உளமார நன்றி கூறிக்கொள்கிறோம். வீடியோ பதிவில் உதவிய செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், திருமதி வனஜா அவர்களுக்கும் மேலும் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் (பணிச்சுமை காரணமாக) தன்னுடைய மனப்பூர்வ ஆதரவை வழங்கிய வர்களான, வடமாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களுக்கும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் Dr. R.சுரேந்திரகுமாரன் அவர்களுக்கும், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களுக்கும், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு பாலறூபன் அவர்களுக்கும், பல்மேரா றிசோட் நிறுவனர் திரு சுகந்தன் அவர்களுக்கும் எமது நன்றிகள். இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வசிக்கும் 110 கருணை உள்ளங் கொண்ட நன்கொடையாளர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய நன்கொடைகள் மூலமாகவே எமது அமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. உங்கள் எல்லோரினதும் ஆதரவினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்(5kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2சோயாமீற் அடங்கிய முப்பது பொதிகள்), போர்வைகள் மற்றும் சிற்றுண்டிகள், தேநீர் ஆகியவற்றை இன்று வழங்கியுள்ளோம். சிற்றுண்டி வழங்கல் தேநீர் வழங்கல் மற்றும் பொதிகள் வழங்கலில் ஈடுபட்ட திரு கோபிக்குமரன், திரு அறிவுக்குமரன், செல்வன் ரேனுஜன், செல்வன் பிவிசன் ஆகியோருக்கும் தேநீர் தயாரித்து வழங்கிய திரு கிருபா அண்ணா, திரு மோகன், திரு சீலன் ஆகியோருக்கும் பெயர் தெரியாது உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாகட்டும். எஞ்சியிருந்த மரக்கன்றுகள் மேலும் சிலருக்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது - எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? ஃபெஞ்சல் புயல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. மேற்கு - தென்மேற்கு திசையில் புயல் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், 6 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து வந்து கரையை கடந்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்றும் இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணியளவில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை எங்கு அதிக மழை? இன்று காலை 7 மணி நிலவரப்படி, ''கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன'' என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். ''புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என பாலச்சந்திரன் கூறியுள்ளார். படக்குறிப்பு, புயல் கரையை கடந்தாலும், புதுச்சேரியை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள் புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது. ''மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம் படக்குறிப்பு, புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் சாலையில் விழுந்துகிடக்கும் மரம் இன்று என்ன நிலை? இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. புதுவையில் கடும் பாதிப்பு புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் கூறுகிறார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ராணுவம் வந்துள்ளதாக பிபிசி தமிழ் செய்தியாளர் கூறுகிறார். '' மழையின் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்வட்ட சாலைகளில் முழுங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்'' என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த். படக்குறிப்பு,புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் ''இந்த நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுதான் வரலாறு காணாத மழை.இந்த அளவுக்கு மழையை நான் பார்த்ததில்லை. வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது'' என்கிறார் ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் நாராயணசாமி. ''வீடு முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை'' என்றார் ஜெனனி என்பவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ரமேஷ் குமார்,'' நாங்கள் படகுகளை கொண்டு வந்துள்ளோம். 20-30 பேரை மீட்டுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே எங்களது முதன்மை பணி'' என கூறுகிறார். படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் சென்னையில் மீண்டும் விமான சேவை மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. 226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது. புதுச்சேரியில் 4 பேர் உயிரிழப்பு புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது. ரெய்ன்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2l9lyjv79eo
-
வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் நா.வேதநாயகன்
01 DEC, 2024 | 08:25 PM வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை 29.11.2024 மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் மிக நீண்ட காலமாக பயன்பாடில்லாது இருக்கும் தளத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என வணிகர் கழப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். யாழ். மாநகர சபையுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை முன்னெடுக்க பலர் ஆர்வமாக உள்ளபோதும் அவர்களுக்கான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான இடங்களையும், அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக வணிகர் கழக பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அதற்குப் பொருத்தமான இடங்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒதுக்கினால் அவற்றை குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே கூரையில் அலுவலர்களை ஒழுங்குபடுத்தினால் இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பிரதேச செயலர் பிரிவுகளில் இடங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் அதற்கான தடைகள் இருக்காது என நம்புவதாகவும் அவற்றைச் செய்ய முடியும் எனவும் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கக் கூடிய இடங்களை அடையாளப்படுத்திய பின்னர் வருடத்தில் ஒரு தடவையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் அனுகூலமான பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என வணிகர் கழகப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். விரைவில் அவற்றை ஆரம்பிப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். சத்திரசந்தையை புனரமைக்குமாறும் கடந்த காலத்தில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து செயற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனவும் யாழ் வணிகர் கழகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் கவனமெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் நிலவும் மணல் பிரச்சினைக்கு தெற்கிலிருந்து இங்கு மணலைக் கொண்டு வரும் யோசனையும், கடலிலிருந்து மணலைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார். பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய வணிகர் கழத்தினர் தீவகப் பகுதிகளின் பொருட்கள் போக்குவரத்து landing craft mechanism பயன்படுத்துவதன் அவசியத்தையும் முன்வைத்தனர். இவற்றுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பதிலளித்தார். வடக்கில் நலிவுற்றவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு சிறந்த பொறிமுறையை உருவாக்குமாறும் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/200184
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி வரை அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்( Jaffna) நீதவான் நீதிமன்றம் இன்று(1) உத்தரவிட்டுள்ளது. பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றையதினம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/prabakaran-photo-post-youth-remanded-till-dec-4-1733058231
-
அநுரவை பாராட்டிய ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும். ஹோட்டல் திறப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/312935
-
நாட்டில் சீரற்ற வானிலையால் 17 பேர் பலி
01 DEC, 2024 | 04:29 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 934 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 100 வீடுகள் முழுமையாகவும் 2379 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் 135 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 745 குடும்பங்களைச் சேர்ந்த15 ஆயிரத்து 464 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/200162
-
காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்
காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய நகரங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மத்திய தரத்தில் காணப்படுகின்றது. சாதாரணமாக காற்றின் தரம் 50 புள்ளிகளுக்கு குறைவாகக் காணப்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. எனினும், யாழ். மாவட்டத்தில் காற்றின் தரம் 130 புள்ளிகளாகவும் கொழும்பு நகரில் காற்றின் தரம் 120 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலைமையின் காரணமாக சுவாசக் கோளாறுகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/312951
-
வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!
01 DEC, 2024 | 07:47 PM வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/200183
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அந்நிய மண்ணில் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து : சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது 01 DEC, 2024 | 04:45 PM (நெவில் அன்தனி) அந்நிய மண்ணில் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த நியூஸிலாந்து, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. இங்கிலாந்தின் வெற்றியில் ஹெரி குக் குவித்த சதம், ப்றைடன் கார்ஸின் 10 விக்கெட் குவியல் என்பன முக்கிய பங்காற்றின. இந்தப் போட்டி முடிவை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நியூஸிலாந்தின் வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நான்கு நாட்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்ற இப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஜேக்கப் பெத்தெல் 50 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பென் டக்கட் 27 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். முன்னதாக போட்டியின் நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களிலிருந்து மிகவும் இக்கட்டான நிலையில் தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதலாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 348 ஓட்டங்களையும் இங்கிலாந்து 499 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/200164
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
தொடர்ந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் - அலப்போவிலிருந்து வெளியேறியது சிரிய இராணுவம் 01 DEC, 2024 | 11:29 AM கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதை தொடர்ந்து சிரிவின் அலப்போ நகரிலிருந்து சிரிய இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே சிரிய படையினர் பின்வாங்கியுள்ளனர். நகரின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் எனினும் அந்த நகரை மீள கைப்பற்றுவதற்காக பதில் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை தங்கள் நடவடிக்கையை ஆரம்பித்தது முதல் 20 பொதுமக்கள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை சிரிய ஜனாதிபதி தனது நாட்டின் ஸ்திரதன்மை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு அதன் நண்பர்கள் சகாக்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் திறன் உள்ளது என சிரிய ஜனாதிபதி அசாத் தெரிவித்தார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹயட் டஹ்ரிர் அல்சாம் என்ற அமைப்பே தற்போதைய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த அமைப்புடன் துருக்கி ஆதரவுபெற்ற குழுவும் இணைந்து செயற்படுகின்றது. இவர்கள் அலப்போவின் விமானநிலையம் உட்பட பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/200121
-
மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!
01 DEC, 2024 | 04:51 PM கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் மரக்கறிகளும் அழிவடைந்துள்ளன. இந்நிலையில், நுவரெலியாவில் மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1200 முதல் 1300 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது. ஏனைய மரக்கறி வகைகளின் விலை அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதால் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமானவர்கள் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன், நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரிகள் வியாபாரமின்றியும் அதிலும் பல மரக்கறிகள் இரண்டு, மூன்று நாட்களின் பின் பழுதடைந்து கழிவுகள் ஏற்படுவதாகவும் இதனால் பாரிய நட்டம் ஏற்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதுடன் சீரற்ற வானிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் விளைச்சல் இல்லாததால் காய்கறி விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/200161
-
இலங்கை - சீன உறவுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் - சீன ஜனாதிபதி
01 DEC, 2024 | 02:31 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவும் இலங்கையும் நெருக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களைப் பராமரித்து, பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்புகளை முன்னெடுத்து வருகிறது. ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சியின் ஊடாக இலங்கை பல்வேறு வகையிலும் பயனடைகிறது என தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங், இத்தகைய இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளின் ஊடாக சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் இலங்கையுடன் சிறந்த ஒருங்கிணைப்பை சீனா எப்போதும் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஷீ ஜிங்பிங்கின் விசேட வாழ்த்துச் செய்தியை இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிறந்த தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சீனாவும் இலங்கையும் அண்மைய ஆண்டுகளில் நெருக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களைப் பராமரித்து, பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்புகளை முன்னெடுத்து வருகிறது. ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சியின் ஊடாக இலங்கை பல்வேறு வகையிலும் பயனடைகிறது. இத்தகைய இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளின் ஊடாக சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் இலங்கையுடன் சிறந்த ஒருங்கிணைப்பை சீனா எப்போதும் பேணி வருகிறது. மறுபுறம் இலங்கையின் அபிவிருத்தியிலும், சீன - இலங்கை உறவுகளின் வளர்ச்சியிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இருதரப்பு உறுவுகளை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரையும் சந்தித்திருந்தார். இந்திய விஜயத்திற்கு முன்னர் கொழும்பில் சீன உயர்மட்ட அதிகாரியொருவர் முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டமை குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் புவிசார் அரசியல் சமநிலையைப் பேணுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை அமுல்படுத்துவதில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு விசேட அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுத்தப்படாமல் அனைத்து நாடுகளுக்கும் சமமாகச் செயற்படுமாறு சீன தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமமான வெளிவிவகார கொள்கையை இலங்கை பின்பற்றும் வரை சீனா இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்பில் இருக்கும் என துணை அமைச்சர் சன் ஹையன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதுடன், சீன விஜயத்திற்கான அழைப்பும் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200130
-
இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்
01 DEC, 2024 | 11:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார். சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுப்படுத்துகையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகிறது. எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுகின்றது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். நடைமுறையில் உள்ள பழைமைவாய்ந்த அரசியலமைப்பிற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கம். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது என்றார். https://www.virakesari.lk/article/200125
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
கொழும்பு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்ற தமிழர் கைது - பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேர்த்ததாக குற்றச்சாட்டு 01 DEC, 2024 | 10:43 AM பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/200124
-
கடற்றொழில் அமைச்சரை புதனன்று சந்திக்கிறார் இந்திய உயர்ஸ்தானிகர்
01 DEC, 2024 | 10:05 AM ஆர்.ராம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது. விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அமைச்சர் சந்திரசேகரும், அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சந்திரசேகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200117
-
யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்திடம் நிதி உதவி கோரிக்கை!
சுவிற்ஸர்லாந்தின் குடிப்பெயர்வு செயலக அதிகாரிகள் வட, கிழக்கில் கள ஆய்வு; சிறிதரன், பவானந்தராஜா உட்பட பலருடன் சந்திப்பு 01 DEC, 2024 | 02:32 PM ஆர்.ராம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி மற்றும் பொலிஸ் பெடரல் திணைக்களத்தின் கீழ் செயற்படும் குடிப்பெயர்வுக்கான இராஜங்கச் செயலகத்தின் அதிகாரிகளான மெய்ன்ரட் லிண்ட், ஆண்ட்ரியாஸ் ஷ்மிட் மற்றும் ஜீனைன் மைர் உட்பட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் டோரிஸ் மேனர் மற்றும் சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்ததோடு அங்குள்ள சிவில் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளனர். அத்துடன், மாவீரர்கள் நாளன்று நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னுள்ள சூழல்களையும் கவனத்தில் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்துக்குச் சென்றவர்கள் அங்கும் சிவில் தரப்பினர், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போது சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும் குடியேற்றக்கோரிக்கைகளில் 40சதவீதமானவை இலங்கையிலிருந்து கிடைக்கின்றன என்றும் அவற்றில் 20 முதல் 30சதவீதமானவை வடக்கு இளையோரிடமிருந்தே வருவதாகவும் குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அச்சமயத்தில்ரூபவ் அரசியல் ரீதியாக காணப்படுகின்ற நிச்சயமற்ற நிலையும் , தொழில்வாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட விடயங்கள் காரணமாகவும் அவ்விதமான நிலைமைகள் ஏற்படுவதாக சிவில் சமூகத் தரப்பினர் குறிப்பிட்டதோடுரூபவ் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும் இளையோருக்கான அச்சமான வாழ்க்கைக்கு காரணமாக அமைக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவாந்தராஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200115
-
முல்லைத்தீவில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில்!; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் - ரவிகரன் எம்.பி
01 DEC, 2024 | 09:56 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன. அங்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. வயல் நிலங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கிறதா என்பதை அவதானித்தே, பாதிப்பு நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும். தற்போது மழைவீழ்ச்சி அளவு குறைந்திருப்பதால் வயல்நிலங்களை மூடியிருக்கின்ற வெள்ள நீர் படிப்படியாக குறைவடைகின்றபோது, தற்போது எதிர்பார்க்கப்படுகின்ற பாதிப்பு நிலைமையை விட, பாதிப்பு நிலைமைகள் குறையக்கூடும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு குறிப்பிட்டளவு நாட்கள் தேவை என திணைக்கள அதிகாரிகள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், கூடிய விரைவில் விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200111
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு புதுச்சேரியை புரட்டிபோட்ட மழை - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு, புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடல் மழை நீரை உள் வாங்காததால் தண்ணீர் தேங்கியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது படக்குறிப்பு, புதுச்சேரியின் கிருஷ்ணா நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர் பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு, புதுச்சேரியில் சாலையில் ஓடிய வெள்ளத்தில் முழ்கிய ஒரு இருசக்கர வாகனம் பட மூலாதாரம்,DEFENCE PRO பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரியில் அரசு பேருந்து நிறுத்துமிடத்தில் சூழ்ந்துள்ள தண்ணீர். பட மூலாதாரம்,X/@NDRFHQ படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீட்டில் இருந்து மூதாட்டி ஒருவரை பாதுகாப்பாக அழைத்து வரும் மீட்பு படை வீரர் பட மூலாதாரம்,DEFENCE PRO படக்குறிப்பு, வட தமிழகத்தின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,X/ADG PI - INDIAN ARMY படக்குறிப்பு, மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மீனவ படகுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது படக்குறிப்பு, திருவண்ணாமலையில் சாலையில் ஓடிய வெள்ளம் காரணமாக, ஒரு பக்க சாலை மூடப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgj7jeqj82lo
-
கடந்த 300 ஆண்டுகால வரலாற்றில் கணிக்கமுடியாமல்போன பெரும்புயல்
கடந்த 300 ஆண்டுகால வரலாற்றில் தற்போது உருவாகியுள்ள பெங்கால் புயல் கணிக்க முடியாத வேகத்திலும் கணிக்க முடியாத திசை நோக்கியும் காணப்பட்டது. வங்களா விரிகுடாவில் தோற்றம் பெறும் சூறாவளிகள் ஒருபோதும் வடகிழக்கு திசை நோக்கி நகர்வது கிடையாது. கடந்த 300 ஆண்டுகால வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயலில் தற்போது ஏற்பட்ட புயலே வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. பொதுவாகவே புயல் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தால் அது தன்னை பலப்படுத்தி கொள்வதாக அர்த்தப்படும். இவ்வாறு தெரிவித்தார் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா. ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிகக்கு இன்று (30) அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இந்த புயலின் தாக்கம் அனாலேற்பட்டுள்ள பாதிப்பு, எதிர்காலத்தில் இவ்வாறான புயல்கள் ஏற்பட்டால் ஏற்படப்போகும் அழிவுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில் https://ibctamil.com/article/the-worst-storm-in-300-years-1732979332
-
நிலத்தடியில் மூன்று மாதம் தங்க வைக்கப்படும் தொழிலாளர்கள் - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அனுமதி எழுதியவர், நோம்சா மசெகோவ் பதவி, பிபிசி செய்திகள் தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய "நகரத்தில்" சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார். இந்த நகரம் முழுவதும் சந்தைகளும், பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளும் இருக்கும். மேலும் இங்கு தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தின் உள்ளே இந்த நகரம் இருக்கிறது. தங்கச் சுரங்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, 'ஜமா ஜமா' என்று அழைக்கப்படும் ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் பணிபுரியும் ஒரு சட்டவிரோத கும்பலுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியதாக இந்தூமிசோ பிபிசியிடம் தெரிவித்தார். அவர் விலை மதிப்புமிக்க உலோகங்களை இங்கு தோண்டி எடுப்பார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுரங்கத்தில் இருந்து வெளிவந்து சந்தைகளில் தனக்குக் கிடைத்த உலோகங்களை சட்டவிரோதமாக பெரிய லாபத்திற்கு விற்றுவிடுவார். இதில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான லாபம் இருந்தாலும், ஆபத்துகளும் அதிகமாக உள்ளது. “இந்தப் பாதாள உலகம் மிகவும் இரக்கமற்றது. பலர் இதிலிருந்து உயிரோடு வெளிவர மாட்டார்கள்,” என்று பெயர்கூற விரும்பாத 52 வயதாகும் நபர் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்தச் சுரங்கத்தின் ஒரு தளத்தில் உடல்களும் எலும்புகளும் இருக்கும். இதை ஜமா ஜமா மயானம் என்று அழைப்போம்,” என்றார் அவர். ஆனால் இந்தக் கடும் சவால்களையும் தாண்டி இந்தூமிசோவை போல பிழைத்துக் கொண்டால், இந்தச் தொழில் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். சட்டவிரோத சுரங்கத் தொழில், வெளியேற்றத் துடிக்கும் அரசு நிலத்தடி சுரங்கத்தில் கடுமையாக உழைக்கும் இந்தூமிசோ, மணல் மூட்டைகளில் படுத்து உறங்குகிறார். ஆனால் அவரது குடும்பமோ ஜோஹேனஸ்பர்க்கில் அவர் வாங்கிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு 130,000 ரேண்ட் (சுமார் 6 லட்சம் ரூபாய்) ரொக்கமாகச் சேர்த்தியுள்ளார், இப்போது அவர் மேலும் மூன்று படுக்கையறைகளைச் சேர்த்துத் தனது வீட்டை நீட்டித்துள்ளதாகக் கூறினார். எட்டு ஆண்டுகளாக சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் பணிபுரிந்து வரும், இந்தூமிசோ அவரது மூன்று குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார். அதில் ஒருவர் தற்போது பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். "எனது மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை," என்றார் அவர். மேலும் பல ஆண்டுகளாக நல்ல வேலை தேடிய பின்னர் கார் கடத்தல், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக இந்தச் சுரங்கத்தில் பணிபுரிவதே மேலானது என்று முடிவு செய்ததாக அவர் கூறினார். அவர் தற்போது பணியாற்றி வரும் சுரங்கமானது ஜோஹேனஸ்பர்க்கில் இருந்து தென் மேற்குத் திசையில், சுமார் 144 கி.மீ. தொலைவில் ஸ்டில்ஃபோன்டைனில் உள்ள ஒரு சுரங்கத்தில் உள்ளது. இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்றுவதாக அங்கிருந்த அமைச்சர் கும்புட்ஸோ இன்ட்ஷாவேனி என்பவர் தெரிவித்த பின்னர் இந்தப் பகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்ற, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுவதைப் பாதுகாப்புப் படையினர் தடுக்கின்றனர். “குற்றவாளிகளுக்கு உதவி செய்யக்கூடாது. அவர்கள் துன்புறுத்தப்படவேண்டும்,” என்று அமைச்சர் தெரிவித்தார். நமது அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான சமூகம் (The Society for the Protection of Our Constitution) என்ற பிரசாரக் குழு, 2 கி.மீ ஆழத்தில் உள்ள சுரங்கத்தை அணுகக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் என்று நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது. காவல்துறையுடன் சமரசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் பொருளாதார மையமான கௌடெங் மாகாணத்தில் மட்டும் சுமார் 36,000 சுரங்கத் தொழிலாளர்கள் இருப்பதாக வான் விக் கூறுகிறார். சுரங்கத்தின் வேறு தளத்தில் இருந்த இந்தூமிசோ கடந்த மாதம், தற்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கிற்கு முன்பாக வெளிவந்தார். மீண்டும் அங்கு திரும்பும் முடிவை எடுக்கும் முன்பாக , நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய அவர் காத்திருக்கிறார். மாஃபியா போன்ற சட்டவிரோதக் குழுக்களால் அரசாங்கத்தின் கட்டுக்குள் இல்லாமல் நடத்தப்படும் இந்தச் சுரங்க நிறுவனங்களை முடக்க அரசு எடுத்த முடிவால் இதுபோன்ற ஒரு சூழல் நிலவுகிறது. "தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக சட்டவிரோத சுரங்க விஷயத்தில் போராடி வருகிறது. மேலும் சுரங்க சமூகங்கள் பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் பொது உள்கட்டமைப்பைச் சேதப்படுத்துதல் போன்ற பிற குற்றச் செயல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கனிம வளங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மிகாடெகோ மஹ்லாலே தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா, இந்தச் சுரங்கம் "குற்றங்கள் நடக்கும் இடம்", காவல்துறையினர் சுரங்கத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகி, அவர்களைக் கைது செய்யாமல், சுரங்கத் தொழிலாளர்கள் தரப்பில் இருப்பதாக அவர் கூறினார். "சில சுரங்கத் தொழிலாளர்கள் அதிக அளவில் ஆயுதம் ஏந்தியிருக்கலாம், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் குற்றக் கும்பல்களால் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் மற்றும் பரந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஆட்சிக் குழுவின் (syndicates) ஒரு பகுதியாக உள்ளனர் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தகவல், சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் சுரங்கத் தொழில் சரிவைக் கண்டதால், லெசோதோ போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் - பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களில் இந்தூமிசோவும் ஒருவர் - பலர் கைவிடப்பட்ட சுரங்கங்களில் "ஜமா ஜமாக்களாக" மாறிவிட்டனர். 'கடினமான, ஆபத்தான வேலை' பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னாப்பிரிக்காவின் பெஞ்சுமார்க் அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் டேவிட் வான் விக், இந்தத் துறையை ஆய்வு செய்தவர். இந்த நாட்டில் சுமார் 6,000 கைவிடப்பட்ட சுரங்கங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். "பெரிய அளவிலான தொழில்துறை சுரங்கங்களுக்கு அவை லாபகரமானதாக இல்லை என்றாலும், சிறிய அளவிலான சுரங்கத்திற்கு அவை லாபகரமானவை" என்று அவர் பிபிசி ஃபோகஸ் ஆன் ஆப்ரிக்கா போட்காஸ்டிடம் கூறியுள்ளார். கடந்த 1996இல் பணிநீக்கம் செய்யப்படும் வரை தங்கச் சுரங்க நிறுவனத்தில் டிரில் இயக்குபவராகப் பணிபுரிந்து, மாதம் $220க்கும் (இந்திய மதிப்பில் சுமார் 19,000 ரூபாய்) குறைவாகச் சம்பாதித்தாக இந்தூமிசோ தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால், அடுத்த 20 வருடங்கள் முழுநேர வேலை தேடுவதற்குப் போராடிய பிறகு, தான் ஒரு சட்டவிரோத சுரங்கத் தொழிலாளியாக மாற முடிவு செய்ததாகக் கூறுகிறார். தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளனர், 19ஆம் நூற்றாண்டில் தங்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் பொருளாதார மையமான கௌடெங் மாகாணத்தில் மட்டும் சுரங்கத் தொழிலாளர்கள் சுமார் 36,000 பேர் இருப்பதாக வான் விக் கூறுகிறார். "ஜமா ஜமாக்கள் பல மாதங்கள் நிலத்தடியில் இருந்து வெளிவராமல், உணவு மற்றும் இதர தேவைகளுக்கு வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவைப் பெரிதும் சார்ந்து இருப்பார்கள். இது கடினமான மற்றும் ஆபத்தான வேலை" என்று ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய பிரசாரக் குழுவின் (Global Initiative Against Transnational Organised Crime) அறிக்கை கூறுகிறது. "சிலர் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள் மற்றும் அரை-தானியங்கி ஆயுதங்களைச் சுரங்கத் தொழிலாளர்களின் போட்டி கும்பலிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இந்தூமிசோவும் துப்பாக்கி வைத்திருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். அதோடு 8 டாலர்களை மாத ‘பாதுகாப்பு கட்டணமாக’ தன்னுடைய குழுவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். குழுவின் அதிக ஆயுதம் ஏந்திய காவலர்கள் அச்சுறுத்தல்களை, குறிப்பாக லெசோதோ கும்பல்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கிறார்கள், அவர்களிடம் கொடிய ஆபத்தான சுடும் சக்தி இருப்பதாக அவர் கூறினார். சுரங்கத்தில் தங்கியிருக்கும் மூன்று மாதங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கும்பலின் 24 மணிநேரப் பாதுகாப்பின் கீழ், அவர் பாறை வெடிப்பிற்காக டைனமைட்டை பயன்படுத்தியதாகவும், தங்கத்தைக் கண்டுபிடிப்பதற்காக பிக் கோடாரி, மண்வெட்டி மற்றும் உளி போன்ற அடிப்படைக் கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் இந்தூமிசோ கூறினார். அவர் கண்டறிவதில் பெரும்பகுதி, கும்பல் தலைவரிடம் கொடுக்கிறார். அவர் ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் $1,100 (இந்திய ரூபாய் மதிப்பில் 93,000 ரூபாய்) கொடுக்கிறார். அவர் தனது வருமானத்தை அதிகரிக்க கறுப்புச் சந்தையில் விற்கும் சில தங்கத்தைத் தன்னால் வைத்திருக்க முடிந்தது என்றார். அத்தகைய ஏற்பாட்டைப் பெற்ற அதிர்ஷ்டசாலியான சுரங்கத் தொழிலாளர்களில் அவரும் ஒருவர், என்று அவர் கூறினார். மேலும், இதை விளக்கும்போது, மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு அடிமைகளைப் போல வேலை செய்வதற்காகச் சுரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், பணம் அல்லது தங்கம் எதுவும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்றும் விளக்கினார். இந்தூமிசோ, பொதுவாக ஒரு நேரத்தில் சுமார் மூன்று மாதங்கள் சுரங்கத்தில் தங்கி, பின்னர் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு, மீண்டும் ஆழமான சுரங்கத்திற்குச் செல்வதற்கு முன் தனது தங்கத்தை விற்பதாகத் தெரிவித்தார். "நான் எனது படுக்கையில் தூங்குவதற்கும், வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்கும் ஆவலுடன் காத்திருப்பேன். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது ஓர் அற்புதமான சக்தி வாய்ந்த உணர்வு" என்கிறார் அவர். இந்தூமிசோ ஒருவேளை தான் தோண்டிய இடத்தை இழந்தால் அடிக்கடி வெளியே வருவதில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகமாகச் சுரங்கத்தில் இருக்கவும் முடியாது. "சூரிய ஒளியை நான் எதிர்கொள்ள முடியாமல் இருந்தேன், அதனால் நான் குருடாகிவிட்டேன் என்று நினைத்தேன்" என்று ஒருமுறை அவர் சுரங்கத்தில் இருந்து நிலப்பரப்பை அடைந்தபோது ஏற்பட்ட உணர்வை நினைவு கூர்ந்தார். அவரது தோலும் மிகவும் வெளிறிப் போனதால், அவரது மனைவி அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்: "நான் வசிக்கும் இடத்தைப் பற்றி மருத்துவரிடம் நான் நேர்மையாகக் கூறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை, எனக்கு சிகிச்சை அளித்தார். அவர் எனக்கு வைட்டமின்கள் கொடுத்தார்." சுரங்கத்தில் இருந்து வெளியே நிலப்பரப்பில் இந்தூமிசோ ஓய்வெடுப்பதில்லை. அவர் மற்ற சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களுடன் வேலை செய்கிறார், ஏனெனில் கீழே இருந்து கொண்டு வரப்பட்ட தாதுக்களின் பாறைகள் நுண்ணிய துகள்களாக நசுக்கப்படுகின்றன. இது பாதரசம் மற்றும் சோடியம் சயனைடு போன்ற ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்தித் தங்கத்தைப் பிரிக்க ஒரு தற்காலிக ஆலையில் அவரது குழுவால் "கழுவப்படுகிறது". இந்தூமிசோ தனது தங்கத்தின் பங்கை, ஒரு கிராம் $55-கு (இந்திய ரூபாய் மதிப்பில் 4,500) விற்கிறார். அது, அதிகாரப்பூர்வ விலையான $77 (இந்திய ரூபாய் மதிப்பில் 6,500) விடக் குறைவு. தன்னிடம் வாங்குபவர் தயாராக இருப்பதாகவும், அவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். தென்னாப்பிரிக்காவின் பொருளாதார நெருக்கடி பட மூலாதாரம்,REUTERS "நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது நான் அவரை நம்பவில்லை, அதனால் நான் அவரை ஒரு காவல் நிலையத்தின் கார் நிறுத்தத்தில் சந்திக்கச் சொன்னேன். நான் அங்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும்." "இப்போது நாங்கள் எந்த கார் நிறுத்தத்திலும் சந்திப்போம். எங்களிடம் ஒரு தராசு உள்ளது. நாங்கள் தங்கத்தை அந்த இடத்திலேயே எடை போடுகிறோம். நான் அதை அவரிடம் ஒப்படைக்கிறேன், அவர் எனக்குப் பணத்தைக் கொடுக்கிறார்," என்று அவர் இந்திய ரூபாய் மதிப்பில் 3,20,000 மற்றும் 4,70,000-க்கு இடையில் அவர்கள் உடன்படுவதாகச் சுட்டிக்காட்டினார் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அவர் இந்தத் தொகையைப் பெறுகிறார். அதாவது அவரது சராசரி ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் முதல் 18 லட்சம் வரை. சட்டப்பூர்வமாக வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளியாக அவர் சம்பாதித்த 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைவிட மிக அதிகம். அவரது கும்பலின் தலைவர்கள் அதிகம் சம்பாதித்ததாகவும், ஆனால் எவ்வளவு என்று தனக்குத் தெரியாது என்றும் இந்தூமிசோ கூறினார். தனது தங்கத்தை வாங்குபவரைப் பொறுத்தவரை, இந்தூமிசோ, பல்வேறு இனங்கள் மற்றும் வகுப்பினரை உள்ளடக்கிய ஒரு சட்டவிரோத நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஒரு வெள்ளையர் என்பதைத் தவிர, அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார். இது குற்ற வலையில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்குகிறது. அரசாங்கம் சுரங்கத் தொழிலாளர்களைக் குறி வைப்பதாகக் கூறினார். ஆனால் "ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுனின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் பெரிய தலைவர்களை" அல்ல, என்று வான் விக் தெரிவித்தார். ரமபோசா கூறுகையில், "சட்டவிரோத சுரங்கத்தால் நமது பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் ராண்டுகள் ஏற்றுமதி வருமானம், உரிமத் தொகை மற்றும் வரி" இழப்பு ஏற்படுகிறது. மேலும் "செயல்படாத சுரங்கங்களைப் புனரமைப்பதற்கு அல்லது மூடுவதற்கு அரசாங்கம் சுரங்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும்" என்றார். வான் விக் பிபிசி ஃபோகஸ் ஆன் ஆப்பிரிக்கா போட்காஸ்டிடம், தென்னாப்பிரிக்காவின் பொருளாதார நெருக்கடி, அரசாங்கம் "ஜமா ஜமாக்களை" கட்டுப்படுத்தினால் மோசமாகிவிடும் என்று கூறினார். இந்தூமிசோ பணிபுரிய மீண்டும் சுரங்கத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் "சந்தைகளில்" அதிக விலை கொடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பதிவு செய்யப்பட்ட உணவுப் பெட்டிகளைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். உணவைத் தவிர, அடிப்படைப் பொருட்கள் சிகரெட், டார்ச்கள், பேட்டரிகள் மற்றும் சுரங்கக் கருவிகள் அங்கு விற்கப்பட்டன, என்றார். ஒரு சமூகம் - அல்லது ஒரு சிறிய நகரம் - பல ஆண்டுகளாக நிலத்தடியில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. இந்தூமிசோ பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகூட அங்கு இருப்பதாகக் கூறினார், பாலியல் தொழிலாளர்கள் சட்டவிரோத கும்பல்களால் சுரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்தூமிசோ அவர் பணிபுரிந்த சுரங்கம் பல நிலைகளால் ஆனது என்றும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுரங்கங்களின் தளம் என்றும் கூறினார். "அவை நெடுஞ்சாலைகளைப் போன்றவை, வெவ்வேறு இடங்கள் மற்றும் நிலைகளுக்கு வழிகாட்டும் வண்ணம் வரையப்பட்ட அடையாளங்கள் - நாம் கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலை அல்லது ஜமா-ஜமா கல்லறை என்று அழைக்கும் நிலை போன்றவை" என்று அவர் கூறினார். "சிலர் போட்டி கும்பல் உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்; மற்றவர்கள் பாறைகள் விழும்போது இறக்கிறார்கள் மற்றும் மிகப் பெரிய பாறைகளால் நசுக்கப்படுகிறார்கள். தனது தங்கத்தைக் கொள்ளையடித்து தலையில் சுடப்பட்ட பிறகு நான் ஒரு நண்பரை இழந்தேன்." சுரங்க வாழ்க்கை ஆபத்தானது என்றாலும், வேலையின்மை விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் ஏழையாக வாழ்ந்து இறப்பதே இதற்கு மாற்று என்பதால், இதற்கு இந்தூமிசோ போன்ற ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9n9l0x1pvo
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஆகியோர் விமர்சித்திருந்தனர். அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். இனவாதக் கருத்துக்கள் ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது. நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது. நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின் கடமையாகும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/anura-gov-responds-to-weerawansa-and-gammanpila-1733009767#google_vignette
-
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லை - பாதுகாப்புச் செயலாளர்
01 DEC, 2024 | 09:54 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் கடந்த 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து தென்னிலங்கையில் அநுர குமார அரசாங்கம் இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அளித்துள்ள சுதந்திரமான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தீவிரமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம். அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். அதனால் எமக்கு ஏந்தப்படவில்லை. ஆனால், தென்னிலங்கையில் அந்த விடயங்களை வெவ்வேறு அரசியல் சுய இலாபத்துக்காக சிலர் பயன்படுத்த முனைகின்றனர் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமது அரசியல் மீள்பிரவேசத்துக்காக வழக்கம்போலவே இனவாத்தினை திணிக்கப்பார்க்கின்றார்கள். அனால் அவர்களின் நோக்கங்களை மக்கள் அறிவார்கள். அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்கின்றார்கள். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கும். வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதம், மதவாதம் தோல்வி கண்டுவிட்டது. மீண்டும் அதற்கு இடமளிப்பதன் ஊடாக நாட்டுக்கு எதிர்மறையான நிலைமைகளே ஏற்படும். ஆகவே மக்கள் அத்தகையவர்களுக்கு இடமளிக்காது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவிதமான நடவக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை தமக்குச் சாதகமாக பயன்படுத்தவே போலிப்பிரசாரம் செய்கின்றார்கள். இது உண்மையில் தேசிய நல்லிணக்கத்தையும்ரூபவ் சகவாழ்வையும் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக்கூடாது. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தினை ஆதரித்து அதனை முன்னிலைப்படுத்துபவர்கள் சம்பந்தமாகவும் நாம் தீவிரமான கவனம் செலுத்தியிருந்தோம். அதுதொடர்பில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/200113
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது. அநுர அரசின் அனுமதி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது. மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பினர்களை நினைவேந்த அனுமதி வழங்குவதா, தமிழ் மக்களுக்கு அநுர அரசு செய்யும் நன்றிக் கடன்? தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்." என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://ibctamil.com/article/maveerar-day-commemorated-people-should-be-arrest-1732979225
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
தென் ஆபிரிக்காவுடனான தோல்வியை அடுத்து டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது இலங்கை 30 NOV, 2024 | 10:27 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவிடம் டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் முதல் தடவையாக தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டது. அப் போட்டியில் 233 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா 3 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தை அடைந்துள்ளதுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது. இலங்கைக்கு அதிர்ஷ்டகரமான விளையாட்டரங்கு என கருதப்பட்ட கிங்ஸ்மீட் மைதானத்தில் இதற்கு முன்னர் 3 போட்டிகளில் விளையாடிய இலங்கை 2 வெற்றிகளை ஈட்டியிருந்ததுடன் ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது. ஆனால், இந்த மைதானத்தில் இம்முறை இலங்கைக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. தென் ஆபிரிக்காவின் வெற்றியில் மாக்கோ ஜென்செனின் 11 விக்கெட் குவியல், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகியோர் குவித்த சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 516 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கைக்கு நிர்ணயித்த தென் ஆபிரிக்கா 3ஆம் நாளன்று 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்ததால் நான்காம் நாள் வேளையோடு வெற்றியை ஈட்டிவிடலாம் என எண்ணியிருக்கக்கூடும். ஆனால், முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், சமகால அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் குசல் மெண்டிஸின் நிதானமான துடுப்பாட்டமும் தென் ஆபிரிக்காவின் வெற்றியை தாமதம் அடையச் செய்தன. போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 174 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 83 ஓட்டங்களைப் பெற்றார். சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 81 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தனஞ்சய ஆட்டம் இழந்த பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 76 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகளுடன் 48 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 73 ஓட்ங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஜெரால்ட் கோயெட்ஸீ, கேஷவ் மஹாராஜ் ஆகிய இருவரும் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே விதமான பந்துவீச்சுப் பெறுதிகளைப் பதிவுசெய்தனர். இந்தப் போட்டியில் மொத்தமாக 86 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றிய மாக்கோ ஜென்சென் தனது அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றெடுத்தார். தென் ஆபிரிக்க அணியில் வியான் முல்டர் உபாதைக்குள்ளானதால் 5ஆவது பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாட நேரிட்டது. கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 191 ஓட்டங்களையும் இலங்கை 42 ஓட்டங்களையும் பெற்றன. தென் ஆபிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. இந்தப் போட்டி முடிவை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளை பின்தள்ளிய தென் ஆபிரிக்கா 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு தாவியுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதியைப் பெறுவதற்கான தனது வாய்ப்பை தென் ஆபிரிக்கா சற்று அதிகரித்துக்கொண்டது. இலங்கையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது. எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 191 (டெம்பா பவுமா 70, கேஷவ் மஹாராஜ் 24, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 16, அசித்த பெர்னாண்டோ 44 - 3 விக்., லஹிரு குமார 70 - 3 விக்., ப்ராபத் ஜயசூரிய 24 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 35 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 42 (கமிந்து மெண்டிஸ் 13, லஹிரு குமார 10 ஆ.இ., மாக்கோ ஜென்சென் 13 - 7 விக்., ஜெரால்ட் கோயெட்ஸீ 18 - 2 விக்., கெகிசோ ரபாடோ 10 - 1 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 366 - 5 விக். டிக்ளயாட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 122, டெம்பா பவுமா 113, ஏய்டன் மார்க்ராம் 47, டேவிட் பெடிங்ஹாம் 21 ஆ.இ., உதிரிகள் 31, விஷ்வா பெர்னாண்டோ 64 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 132 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 282 (தினேஷ் சந்திமால் 83, தனஞ்சய டி சில்வா 59, குசல் மெண்டிஸ் 48, ஏஞ்சலோ மெத்யூஸ் 25, மாக்கோ ஜென்சென் 73 - 4 விக்., கெகிசோ ரபாடா 65 - 2 விக்., ஜெரால்ட் கோயெட்ஸீ 67 - 2 விக்., கேஷவ் மஹாராஜ் 67 - 2 விக்.) https://www.virakesari.lk/article/200106