Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (20) இடம் பெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196171
  2. உயர்தர பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196173
  3. அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார். https://thinakkural.lk/article/312391
  4. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 நிறுவனத்திற்கு, முன்னாள் செயலாளர் அசாத் மவ்லானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார். சனல்4 காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312408
  5. தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் ‘மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாகவும், காற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ. வரை சென்றதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு அதிகளவில் இல்லாமல் போனாலும், காற்றின் வேகம் அசுரத்தனமாக இருந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விவரஙக்ள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இதன் காரணமாக, கடலில் அலைகள் சுமார் 7 மீட்டர் (23 அடி) உயரத்துக்கு ராட்சஷ அலைகளாக எழும்பியதால் கடற்கரைப் பகுதிகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டன. ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பேர், சுமார் 80,000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், ஞாயிற்றுக்கிழமை வட மேற்கு திசையில் நகர்ந்து, லூஸான் பகுதியை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312371
  6. மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - சுகாதார அமைச்சர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர். இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199215
  7. மோகன் அண்ணை Views காட்டுதில்லை! குறிப்பாக ஊர்ப்புதினத்தை அவதானித்த வகையில், கொஞ்சம் கவனியுங்க.
  8. இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுககளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் – நல்ல நிலையில் உள்ள படகுகளையே கடற்படையினரிடம் கையளிக்குமாறு கடற்றொரில் நீரியல்வளத் துறை பணிப்பாளர் பணித்துள்ளார். கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எல்.ஜி.ஆர்.இசுராணி ஒப்பமிட்டு இந்த உத்தரவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கமைய மன்னாரில் இருந்து 5 படகுகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகளும் என மொத்தம் 13 படகுகள் கடற்படையினரின் பாவனைக்காக வழங்கப்படவுள்ளன. https://thinakkural.lk/article/312406
  9. யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், ஏற்கனவே கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 புலம்பெயர் தொழிலாளர் சங்கங்கள் காணப்படுவதாகவும், அதன் வெளிப்பாடாக மாவட்ட மட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா். மேலும் அவர், தற்போது வெளிநாடுகளுக்குச் செல்வோா் அதிகமாக காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தல் குறைவாகவே உள்ளதெனவும் இதன் நோக்கத்தை சரியான முறையில் அடையாளப்படுத்தி நலன்சாா் விடயங்களை செயற்படுத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அதேவேளை, புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தாா். இந்த கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோத்தர், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள், வெளிநாடு செல்லவிருப்போர் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199218
  10. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின் உடலை கூட பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312416
  11. "கிரிக்கெட் பந்து கண்ணில் பட்ட காயத்தினால் கண்பார்வையை இழந்தேன்" - இலங்கையின் முதலாவது விழிப்புலன் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணில் சிறிது காயம் ஏற்பட்டால் கூட அதனை அலட்சியம் செய்யவேண்டாம் என இலங்கை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது விழிப்புலன் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தான் கண்பார்வை இழந்த கதையை ஊடகமொன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன், 11 வயதில் கிரிக்கெட் விளையாடும்போது பந்து கண்ணில் பட்டதால் தான் கண்பார்வையை இழந்ததாக தெரிவித்துள்ளார். பந்தை பிடிப்பதற்கு எனது கரங்களை பயன்படுத்தாதது என் முதல் தவறு. இரண்டாவது தவறு என் காயங்களை குடும்பத்தவருக்கு மறைத்தது என தெரிவித்துள்ள அவர், இதுவே நான் கண்பார்வையை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார். உங்கள் கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்பதே எனது அறிவுரை. இந்த காயங்கள் நாங்கள் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கண்பார்வை இழந்தவர்களின் வாழ்க்கை மிகவும் சவாலானது; கடினமானது. இவ்வாறான கண்காயங்களை புறக்கணித்தால் மக்களால் அதிலிருந்து மீள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி இவரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199208
  12. தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு எடுத்துள்ளார்கள்; யாழில் சீனத் தூதுவர் கருத்து அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது. வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர – சகோதரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று இருந்தது. உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது. தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகின்றேன். நான் வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட் கால கட்டத்திலேயே வந்திருந்தேன். அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருந்தது. அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது. இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகள் பாவிக்கப்பட்டன. இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள எங்களுடைய சகோதர – சகோதரிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கியதைத் தொடர்ந்து இங்குள்ளவர்களுக்கு எங்களுடைய பல்வேறு உதவிகளைச் செய்தோம். அதனடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினோம். அந்த ஆண்டின் முதல் அரைநாண்டு காலத்தில் சீன அரசால் பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வடக்கு மாகாணத்துக்கு மட்டும் வழங்கியிருக்கின்றோம். இதற்கமைய வீட்டுத் திட்டம், அரிசி, மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை வழங்கினோம். இவற்றில் அரிசியை முழுமையாக வழங்கியுள்ளோம். ஆனாலும், வீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். சீன அரசு வழங்கிய உதவிகளின் பட்டியல் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டவைதான். அந்தப் பட்டியலுக்கமைய எமது உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனாவினுடைய நீண்டகால நண்பனாக இலங்கை இருக்கின்றது. ஆகையினால் இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சீன அரசும் மதிக்கும். இலங்கை அரசுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு இணக்கப்பாட்டுக்கு முன்னேற்பாடான ஒரு ஒப்பந்தத்தை முதன் முதலில் சீனாதான் எழுதியது. அதனைக் கடந்த ஆண்டு செய்திருக்கின்றோம். இதில் இருந்து நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளக் கூடியது என்னவெனில் சீன அரசு ஒரு முன்னுதாரணமாக இந்த விடயங்களைச் செய்து வருகின்றது என்பதைப் பார்க்கலாம். இலங்கையினுடைய மிக நெருக்கமான அயல்நாடாக இந்தியா இருக்கின்றது. அதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலப்படுவதையும், பொருளாதார ரீதியான நெருக்கம் பலப்படுவதையும் நாங்களும் விரும்புகின்றோம். இவ்வாறான நிலைமையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் கூறியிருக்கின்றார். இது மிகவும் சந்தோசமான விடயம். அவ்வாறு அவர்கள் விஜயம் செய்வதை நாங்கள் விரும்புகின்றோம். அதன் பிற்பாடு இலங்கை ஜனாதிபதி அவருக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நேரத்தில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளலாம். ஏனெனில் சீனாவுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் பொருளாதார மேம்பாடுகளும் பரிமாற்றங்களும் வளர்ந்து வர வேண்டுமென்றே நாங்களும் விரும்புகின்றோம். சீனாவுக்கு வடக்கு மக்களுடன் செய்ய வேண்டிய கலாசார மற்றும் கல்வி ரீதியான இரு தரப்பு பரிமாற்றங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. சீன அரசு இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்குகின்ற ஒரு நாடாகவே இருந்து வருகின்றது. ஏனென்றால் சீனாவைப் பொறுத்த வரையில் இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக உள்ளது. எனக்குத் தெரிந்தவரைக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனாசார் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன. நான் அறிந்த வரையில் சீன புலமையாளர் யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ். பல்கலைக்கழகப் புலமையாளர்கள் சீனப் பல்கலைக்கழகத்திலும் தங்களுடைய கற்கை நெறிகளைக் கற்று வருகின்றார்கள். எனக்கு குழப்பகரமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது என்னவெனில் என்னுடைய சக உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு விரும்புகின்றதால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது அவர்களால் உரிய முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில்லை என்பது குழப்பகரமான உணர்வைத் தருகின்றது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. இதனூடாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட்டு ஒளிமயமான எதிர்காலம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கான ஒரு குறியீடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.” – என்றார். https://thinakkural.lk/article/312419
  13. பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312434
  14. மோகன் அண்ணா மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.
  15. எனக்கு ஏறத்தாழ 24 மணித்தியாலம் யாழ் வேலை செய்யவில்லை. உடனடியாக 2 நிர்வாகிகளிடம் கேட்டபோது வழங்கி மாற்றம் என சொன்னார்கள். நிர்வாகம் ஒரு ரெலிகிறாம்(இலக்கம் தெரியாது பெயர் மட்டும் காட்டும்) குழுவை அமைத்தால் எதிர்பாராத விதமாக இயங்காத போது அதனூடாக நிலவரங்களை அறியலாம்.
  16. 20 NOV, 2024 | 07:16 PM தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பருத்தித்துளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஜே/403 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199269
  17. வவுனியா வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்தவாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் அன்றையதினம் மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்றையதினம் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இதற்கு முன்னரும் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் குறித்த பாடசாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/199144
  18. 'அமெரிக்கா, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கும்' - இந்திய ஹைபர்சோனிக் ஏவுகணையின் சிறப்பு என்ன? பட மூலாதாரம்,EPA எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர் இந்தியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை மிகப்பெரிய சாதனை மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார். நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் என எப்பகுதியில் இருந்தும் எதிரியை தாக்கலாம். இந்தியாவின் `பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) நீண்ட காலமாக இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டில், டிஆர்டிஓ ஒரு `ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டட் வாகனத்தை’ (HSTDV) வெற்றிகரமாக சோதித்தது . தற்போது இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்தியா இத்தகைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? இந்த ஏவுகணை காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தாக்கும் திறன் கொண்டது இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணம் செய்து இலக்கைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது. அதேசமயம், சப்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட வேகமாக கடக்க முடியாது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மட்டுமே வேகமாகப் பயணிக்க முடியும். பிபிசியிடம் பேசிய பாதுகாப்பு நிபுணரான, ஓய்வு பெற்ற ஏர் கமாண்டர் அஷ்மிந்தர் சிங் பாஹ்ல் கூறுகையில், ``ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதலில் வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் வரை செல்கிறது, அதாவது அது முதலில் பூமியின் வளிமண்டலத்தை கடக்கிறது. பின்னர், விண்வெளியில் இருந்து மீண்டும் புவியின் வளிமண்டலத்தை அடைந்து தன் இலக்கை நோக்கி அது பயணம் செய்கிறது" என்று விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை (nuclear warhead) சுமந்தும் செல்லும் திறனுடையதா என்பதே தற்போதைய கேள்வி! இதற்கு பதிலளித்த பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை நிறுவ முடியும் என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்," 1700 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தக் கூடிய திறனுடையது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஏவுகணையாகக் கருதப்படுகிறது." என்றார். "ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்தியாவிற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்” என்றும் அவர் கூறினார். அவர் கூறுகையில், "ஒரு காரை உருவாக்குவது போல, முதலில் ஒரு முன்மாதிரி உருவாக்கப்படும், அதன் பின்னர் அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு, அது உற்பத்திக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே இந்தியாவில் இந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வர கால அவகாசம் எடுக்கும்." என்று விளக்கினார். பட மூலாதாரம்,@RAJNATHSINGH ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன? ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிக வேகமாக செல்லும் என்பதால், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இதனை கண்டறிந்து தடுப்பது கடினம். இந்த ஏவுகணை ஒலியை விட வேகமாக பயணம் செய்வதால் மட்டும் இந்த சிறப்பம்சத்தை பெறவில்லை. பிபிசி உடனான கலந்துரையாடலில் பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, இது மிக நவீன ஏவுகணைத் தொழில்நுட்பம் என்றார். அவர் கூறுகையில், "இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிகவும் வேகமாக அதன் இலக்கை நோக்கி பறந்து செல்லக் கூடியது, இதனை ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால், கண்டறிய முடியாது." என்றார். அதே நேரம் பாதுகாப்பு வல்லுநர் பாஹல், “ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பாலிஸ்டிக் ஏவுகணைப் போல் இல்லாமல், அவை பயணம் செய்யும் பாதை அல்லது எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படுத்தாது. இதனால் இதன் இலக்கைக் கணிப்பது மிகக் கடினம்” என்கிறார். அமெரிக்கா உருவாக்கிய உயர் பாதுகாப்பு முனையங்கள் (The'Terminal High Altitude Area Defense' -THAAD) மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான ‘அயர்ன் டோம்’ ஆகியவற்றால் கூட இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்கிறார். "ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அவர்கள் கண்டறிந்தாலும், அதனை சுட்டு வீழ்த்துவது கடினம். ஏனெனில் இதற்கு இணையான வேகத்தில் பயணம் செய்யும் வகையிலான மற்றொரு ஏவுகணை தேவை. இதற்கு ஒரு நாடு, ஏரோ வெப்பன் சிஸ்டம் Arrow Weapon System (AWS) வைத்திருக்க வேண்டும். இதன் வரம்பு 2,500 கிலோ மீட்டர்" என பாஹல் தெரிவித்தார். எந்தெந்த நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது? சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. வல்லுநர்கள் இதைப்பற்றி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தற்போது சீனா மற்றும் ரஷ்யா வைத்துள்ளன. அதேசமயம் அமெரிக்காவும் இந்தியாவைப் போல நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வல்லுநர் பாஹல் தெரிவித்தார். மேலும், “ சில நாடுகள் தாங்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்துள்ளதாக கூறுகின்றன. ஆனால் அதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. அத்தகைய சூழலில், இந்த நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது நாடாக இருக்கும்” என்றார் . பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி கூறுகையில், "ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவைத் தவிர்த்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாக நம்பப்படுகிறது. இதைத் தவிர்த்து இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES "யுக்ரேன் உடனான போரில் ரஷ்யா கிஞ்சால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியது. ஏனெனில் அவற்றைப் தடுப்பது மிகக் கடினம்," என ராகுல் பேடி கூறினார். 2022 மார்ச்சில், யுக்ரேனின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை கொண்டு தாக்கியதாக ரஷ்யா கூறியது. சில வல்லுநர்கள் இஸ்ரேல் மீது இரான் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக கருதுகின்றனர். பாலிஸ்டிக் மற்றும் குரூயிஸ் ஆகிய இரு ரகங்களிலும் ஃபதா ஹைபர்சோனிக் ஏவுகணையை அறிமுகப்படுத்திய முதல் நாடு தாங்கள்தான் என்றும் இரான் கூறுகிறது. அல்-பதாஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் வரை தாக்கக் கூடியது என்றும், எதிர்ப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி இலக்கை தாக்கக் கூடியது என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது. 2021-ஆம் ஆண்டு, வடகொரியா அதன் உச்ச தலைவர் கிம் ஜாங்-உன் முன்னிலையில் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது. தாங்கள் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை "துல்லியமாக" தாக்கியதாக வடக்கொரியா கூறியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7v3qgyyg0zo
  19. மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு: 5,000 துணை ராணுவ வீரர்கள் விரைவு - நடப்பது என்ன? வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன் முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத் தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ் வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண் டும் அதிகரித்துள்ளதால், பாது காப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல், உள்துறை செயலர் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக் குநர் தபன்டிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு கூடுதல் படையினரை + அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்து மாறும் அமித் ஷா அறிவுறுத்தினார். மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர் கள்அடங்கியதுணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்பு படை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம் பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் மணிப்பூர் செல்கின்றனர். வன்முறைக்கு ஒருவர் பலி: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். "அவரை சுட்டது யார் என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞ ரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாது காப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது" என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர். பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவி அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல மாவட் டங் களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமை யிலான பாஜக அரசு, அமைதியைநிலை நாட்டவும், பிரச்சினை களுக்கு தீர்வு காணவும் தவறிவிட்டதாக கூறி தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 17-ம் தேதி வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப் பூர் சட்டப்பேரவையில் என்பிபி கட் சிக்கு 7 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள னர். பாஜகவுக்கு பெரும்பான்மையாக 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதுதவிர, நாகா மக்கள் முன்னணியின் 5 எம்எல்ஏக் கள், ஐக்கியஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக் களும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரி வித்து வருகின்றனர். எனவே, என்பிபி த னது ஆதரவை விலக்கிக் கொண் டாலும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக விவாதிக்க ஆளும் தேசிய ஜனநாயக கூட் டணியின் எம்எல் ஏக்கள், அமைச் சர்கள் கூட்டத்துக்கு மாநில அரசு நேற்று அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/199122
  20. இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக இந்திய வம்சாவளி மலையக பெண்கள் 3 பேர் தேர்வு பட மூலாதாரம்,HARINI AMARASURIYA FB படக்குறிப்பு, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய, இந்தத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண் வேட்பாளராகவும் திகழ்கின்றார் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவிலான பெண் உறுப்பினர்கள் தெரிவான தேர்தலாக இந்த முறை நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளில் பிரகாரம், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு 21 பெண்கள் தெரிவாகியுள்ளனர். இவ்வாறு தெரிவான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்கள், இந்த முறை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்த பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு பதுளை மாவட்டத்திலிருந்து அம்பிகா சாமுவேல், நுவரெலியா மாவட்டத்திலிருந்து கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் மாத்தறை மாவட்டத்திலிருந்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் மலையகத்திலிருந்து தெரிவாகியுள்ளனர். இலங்கை அரசு சபை 1931-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, முதல் பெண் பிரதிநிதியாக அடெலின் மொலமுரே தெரிவானார். பின்னர் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தெரிவானார். இலங்கை வரலாற்றில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றமை தற்போது படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெண் பிரதிநிதித்துவத்தில், 1989-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சற்று அதிகரிப்பு காணப்பட்டாலும், இந்த முறை நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டு, தற்போது பிரதமராக பதவி வகித்து வருவதுடன், இம்முறை தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண் வேட்பாளராகவும் அவர் திகழ்கின்றார். அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண்ணாகவும் ஹரினி அமரசூரிய வரலாற்றில் பதிவாகியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்த முறை தெரிவான பெண் பிரதிநிதிகளின் விபரங்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலிருந்து ஹேமாலி குணசேகர தெரிவாகியுள்ளார். களுத்துறை மாவட்டத்திலிருந்து நிலந்தி கொட்டஹச்சி, ஓஷானி உமங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். கண்டி மாவட்டத்திலிருந்து சமிந்திராணி கிரியெல்ல, துஷாரி ஜயசிங்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். மேலும், மாத்தளை மாவட்டத்திலிருந்து தீப்தி வாசலகே, ரோஹிணி குமாரி கவிரத்ன ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்திலிருந்து அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன, கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். காலி மாவட்டத்தில போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நிலுஷா லக்மாலி மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து சாகரிக்கா கங்காணி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். அத்துடன், தேசிய பட்டியல் ஊடாக தேசிய மக்கள் சக்தி சார்பில் லக்மாலி காஞ்சனா ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,AMBIKA SAMUVEL FB படக்குறிப்பு, பதுளை மாவட்டத்திலிருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அம்பிகா சாமுவேல் ‘மலையக தோட்டத் தொழிலாளியின் மகள்’ இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்ணான கிருஸ்ணன் கலைச்செல்வி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''நான் மலையகத்தில் பிறந்த தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்ற ரீதியில், மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற பாரிய பிரச்னைகள் இருக்கின்றது. மலையக மக்கள் இந்த நாட்டில் மனிதர்களாக உள்வாங்கப்படாத நிலைமையே இவ்வளவு நாளும் இருந்தது. இந்த நாட்டிற்கு உழைத்து கொடுக்கும் மக்களாக மாத்திரமே எங்களை அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.” என்று கூறுகிறார் கலைச்செல்வி. தொடர்ந்து பேசிய அவர், “பெரிய சவால் ஒன்று இருக்கின்றது. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இலகுவான காரியம் அல்ல. மிகவும் கடினமான காரியம். அதை கட்டாயமாக நாங்கள் செய்வோம். சவால் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கட்டாய தேவை இருக்கின்றது.” என்கிறார். இந்த மக்களின் பிரச்னையை தான் தனியாக தீர்க்க போவதில்லை என்று கூறும் கலைச்செல்வி, “எங்களுடைய அமைப்பினால் இந்த மக்களின் பிரச்னையை நாங்கள் தீர்ப்போம். மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது" எனக் கூறுகின்றார். மலையகத்தில் முதல் தடவையாக பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கிருஸ்ணன் கலைச்செல்வி பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''பெண்கள் மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள ஆண்கள், இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. மலையகத்தில் படித்த இளைஞர், யுவுதிகள் தகுதியான வேலை வாய்ப்பின்றி, புடவை கடைகள், இரும்பு கடைகளில் வேலை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.” கல்வி, சமூக, கலாசார, சுகாதார உள்ளிட்ட சகல பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கானவே நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். என்று கூறும் கலைச்செல்வி, ''பெண்களுக்கு உழைப்பு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். வேலைகள் செய்வதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சமூக ரீதியாகவும். பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்ற பெண்களை பாதுகாக்க வேண்டும். இதற்கான அனைத்து திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்." என்று கூறுகின்றார். சிங்கள பெரும்பான்மை மாவட்டத்திற்கு முதல்முறையாக தமிழ் பிரதிநிதி பட மூலாதாரம்,SAROJA POLLRAJ FB படக்குறிப்பு, சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் இதேவேளை, பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் வாழ்கின்ற மாத்தறை மாவட்டத்தில் இந்த முறை முதல் தடவையாக தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ் பெண்ணான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மாத்தறை மாவட்டத்தில் தெரிவான முதலாவது தமிழ் மக்கள் பிரதிநிதியாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். அதுமட்டுமல்லாது, சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக, தனது திட்டங்கள் குறித்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிபிசி தமிழுக்கு எடுத்துரைத்தார். ''பெண் பாதுகாப்புடைய சமுதாயம் என்ற வகையில், பாலியல் ரீதியான விடயங்களிலிருந்தான பாதுகாப்பு மாத்திரம் அல்ல. ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டால், அவரை பொருளாதாரத்தில் பலப்படுத்த வேண்டும். பொருளாதார பாதுகாப்பு இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார் சரோஜா. மேலும், “சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சமூக பாதுகாப்பும் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் உள்ள சமுதாயம் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே பாலியல் ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இல்லாவிட்டால், இந்த பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்.” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மை காரணத்தினால் மாத்திரமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார் சரோஜா பாதுகாப்பு இல்லாத சமூகமும், பொருளாதாரத்தில் பாதுகாப்பு இல்லாத தன்மை காரணமாகவும் வேறொருரை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் சரோஜா, “பெண்கள் சமுகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், பொருளாதார உரிமைகளை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார். பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மை காரணத்தினால் மாத்திரமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார் சரோஜா. “எல்லா தனிப்பட்ட நபர்களுமே ஒரு சுயாதீன நபர்களாக இருக்கும் போது, திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா, தனியாக வாழ முடியுமா இல்லையா, தன்னுடைய கல்வியை தீர்மானிக்க முடியுமா? நாங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வோமா? இல்லையா? இதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு தான் இருக்கின்றது.” என்கிறார் அவர். “அதனை தீர்மானிக்கும் உரிமையை இன்னொருவருக்கு வழங்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட காரணம் பொருளாதார ரீதியில் சுயாதீனமாக இல்லாததால்தான், எனவே அதை வழங்க வேண்டியுள்ளது." என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2l3we2yno
  21. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199138
  22. இராஜாங்க அமைச்சர்கள் இனி இல்லை முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக 26-28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவர் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில அமைச்சரவை பதவிகளுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது அனைவருக்கும் நியமிக்கப்படுவார்களா என கேட்டபோது, அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். https://thinakkural.lk/article/312385
  23. பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் பலி இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. மக்கள் நெரிசலாக வாழும் ரஸ் அல் நபா பகுதியில் பாத் அரசியல் கட்சியின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதை லெபனானின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட ஊடக பிரிவு தலைவர் கடந்த திங்கட்கிழமை பெய்ரூட்டில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். இந்த தாக்குதலில் சிரியாவின் பாத் கட்சியின் லெபனான் கிளையின் அலுவலகம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/199075
  24. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்புகளும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/199135
  25. கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன - விமல்வீரவன்ச கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என அவர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத ஆதரவு தமிழ்தேசியகூட்டமைப்பு போன்றவற்றை தெரிவுசெய்வதற்கு பதில் தமிழ் மக்கள் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளனர் இதன் மூலம் பிரிவினைவாதம் இனவாதத்தை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே கனடா தமிழ் அமைப்புகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கு பதில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் அபிலாசைகளை சமமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் ஆணை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளாhர். https://www.virakesari.lk/article/199128

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.