Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அண்ணை, தேடிப்பார்க்கிறேன், ரிக்ரொக்கில வந்த காணொளி பழுவேட்டரையர் என்பவரின் குரலில் கேட்டது.
  2. வடக்கு-கிழக்கிலிருந்து 4 வைத்தியர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு 2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் இளையதம்பி சிறிநாத், வவுனியாவைச் சேர்ந்த டாக்டர் ப.சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிறி பவானந்தராஜா, சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தெரிவாகியுள்ளார்கள். அதேபோல், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 19 வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். https://thinakkural.lk/article/312246
  3. முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். முதன் முறையாக வைத்தியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுநர்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துறைசார் வல்லுநர்கள் அதன்படி, தேசிய மக்கள் சக்தியில் இருந்து 15 வைத்தியர்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர். அந்த வகையில், வைத்தியர். நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியர். நிஹால் அபேசிங்க, வைத்தியர். ரிஸ்வி சாலிஹ், வைத்தியர்.பிரசன்ன குணசேன, வைத்தியர். நாமல் சுதர்ஷன, வைத்தியர். நிஷாந்த சமரவீர, வைத்தியர்.தம்மிகா படபெந்தி, வைத்தியர்.சுசில் ரணசிங்க, வைத்தியர்.ஹன்சக விஜேமுனி, வைத்தியர்.எஸ். திலகநாதன், வைத்தியர்.மதுர செனவிரத்ன, வைத்தியர்.ஜனக சேனாரத்ன, வைத்தியர்.சண்டருவன் மதரசிங்க, வைத்தியர்.ஜகத் விக்கிரமரத்ன, வைத்தியர்.ஜகத் குணவர்தன. அத்துடன், தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட அதிபர்கள் 21 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர். அந்த வகையில், சாந்த பத்மகுமார, மஞ்சுள சுரவீர ஆராச்சி, பத்மசிறி பண்டார, ரத்னசிறி சுனில், சுஜீவ திசாநாயக்க, சந்தன தென்னகோன், சஞ்சீவ ரணசிங்க, நந்த பண்டார, மஞ்சுளா ரத்நாயக்க, ருவன் விஜேவீர, சதுரி கங்கானி, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ரொஷான் அக்மீமன, முனீர் முலாஃபர், ஹேமாலி வீரசேகர, உபுல் கித்சிறி, டி.கே ஜெயசுந்தர, எஸ்.பிரதீப், அரவிந்த செனரத், ருவன் மாபலகம. மேலும், தேசிய மக்கள் சக்தியில் இருந்து 16 வழக்கறிஞர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர். அந்த வகையில், சுனில் வதகல, ஹர்ஷன நாணயக்கார, சுசந்த தொடவத்த, நிலாந்தி கோட்டஹச்சி, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஹசர கம்மன லியனகே, உபுல் அபேவிக்ரம, அனுஷ்கா தர்ஷனி, கீதா ஹேரத், சாகரிகா அத்தாவுடா, பாக்ய ஸ்ரீ ஹேரத், துஷாரி ஜயசிங்க, பிரியந்த விஜேரத்ன, சரத் குமார, நிலுஷா கமகே, ஹிருனி விஜேசிங்க. இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/new-sri-lankan-parliament-mps-are-educated-1731851634
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்? நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல் 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள். 2015ல் நடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன, இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கவில்லை. மேலும், 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளும் மக்களிடம் பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தன. இந்தப் பின்னணியில்தான், 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பின் (Sri Lanka People's Freedom Alliance) சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ 69,24,255 வாக்குகளைப் பெற்று மகத்தான ஒரு வெற்றியைப் பெற்றார். அதற்கடுத்து 2020ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டமைப்பிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 68,53,690 வாக்குகளும் 145 இடங்களும் கூட்டமைப்பிற்குக் கிடைத்தன. இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வெறும் 4,18,553 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தது. அதையொட்டி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு நான்காவது இடமே கிடைத்தது. நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்று இடங்களே கிடைத்தன. ஆனால், நான்கே ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதோடு, இப்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி மாறாக ராஜபக்ஸக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. 225 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில், மக்களால் தேர்வுசெய்யப்படும் தொகுதிகளில் இரண்டும் தேசியப் பட்டியலில் ஒன்றுமாக மொத்தம் 3 இடங்களையே இக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 3,50,000 வாக்குகளே கிடைத்துள்ளன. இந்த நிலையில்தான், ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் அவர்களது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. "பொதுஜன பெரமுன மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. குறைந்தது 15 - 20 ஆண்டுகள் ஆகலாம். தற்போது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நல்ல பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், ராஜபக்ஸக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை, முறைகேடுகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடும். அப்படியான சூழலில் ராஜபக்ஸக்கள் மீதான அதிருப்தி மேலும் அதிகரிக்கலாம். அப்படி நடந்தால் அவர்கள் வெளியில் வந்து அரசியல் செய்வது மிகவும் கடினம். ஒருவேளை தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டால்கூட, அந்த அதிருப்தி இவர்களுக்கான ஆதரவாக உருமாறுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்‌ஸக்களின் பங்கு இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1936லேயே இலங்கையில் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ ராஜபக்ஸ. இவர் விரைவிலேயே காலமாகிவிட, இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்ஸ அரசியலில் களமிறங்கினார். 1947ல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்றார் டான் ஆல்வின். இந்த டான் ஆல்வினுக்கு சமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இவர்களில் மூன்றாவது குழந்தையான மஹிந்தவும் ஐந்தாவது குழந்தையான கோட்டாபயவும் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியானார்கள். தன் தந்தை இறந்தவுடன் 21 வயதிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார் மஹிந்த. படிப்படியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார் அவர். அவரது சகோதரர் கோட்டாபய, பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, இந்த சகோதரர்களின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. அதற்கு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இந்தத் தருணத்தில், இலங்கையின் மிக சக்தி வாய்ந்த குடும்பமாக மஹிந்தவின் குடும்பம் உருவெடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த. மீண்டு வந்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் தோல்வி ஆனால், 2015ல் அவரது செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது. இந்தத் தருணத்தில்தான், தான் சார்ந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியிருந்தார் மஹிந்த. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தாலும் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். விரைவிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த. அந்த நியமனம் நீடிக்கவில்லையென்றாலும்கூட, அரசியலில் அவரது மறுவருகை தொடங்கிவிட்டதை இந்த நிகழ்வு உணர்த்தியது. 2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி கிடைக்க, தம்பி ஜனாதிபதியாக இருக்க அண்ணன் மஹிந்த பிரதமரானார். ஆனால், அதைத் தொடர்ந்த கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, அதையொட்டி கோட்டாபய எடுத்த சில அதிரடி முடிவுகள் நாட்டை மிகப் பெரிய நெருக்கடிக்கு தள்ளியது. இதையடுத்து உருவான மாபெரும் மக்கள் போராட்டத்தையடுத்து, மஹிந்தவும் கோட்டபயவும் பதவிவிலக நேர்ந்தது. இவர்களது செல்வாக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, அன்றைய ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது மோசமான ஆட்சியே காரணம் "இப்போது ராஜபக்ஸ என்ற பெயரே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்குரிய பெயராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் சொந்தத் தொகுதியான முள்கிரிகல தொகுதியிலேயே அவர்களது கட்சி படுதோல்வி அடைந்தது. இவர்களுடைய செல்வாக்கு இந்த அளவுக்கு சரிய, கோட்டாவின் ஆட்சிக்காலம்தான் மிக முக்கியக் காரணம். நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் அவர். ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்பட்டார். உதாரணமாக, ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்த விவசாயிகளை நிர்பந்திக்கும் முடிவை யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்தார். அதேபோல, அரிசி ஆலை அதிபர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றார். இது நடக்கவில்லை. அங்கேதான் இந்தச் சரிவு ஆரம்பித்தது. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப் போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை. அதற்குப் பிறகு இப்போதுவரை மக்களை அவரால் நேரடியாக சந்திக்க முடியவில்லை. மக்கள் அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார்கள். அதிலிருந்து இவர்கள் மீள்வதற்கான சாத்தியமே இல்லை" என்கிறார் சிவராஜா. கொரோனா பரவலை அடுத்து சுற்றுலா வருவாய் குறைந்து இலங்கையின் அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ரசாயன உரங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தார் அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய. இது விவசாயத்தைக் கடுமையாகப் பாதித்தது. உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இதனால், அந்நியச் செலாவணி மேலும் குறைய ஒரு கட்டத்தில் எரிபொருள் வாங்கக்கூட டாலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்க கோட்டாபய ராஜபக்ஸவும் மஹிந்தவும் பதவியிலிருந்து விலகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் கோட்டபாய. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப்போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை. "பாரம்பரிய தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பு குறைவு" இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவால் ஓரளவுக்கு நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்றாலும் பொருளாதார நெருக்கடியின் போது உயர்ந்த விலைவாசி அப்படியே நீடித்தது. வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது. இந்த நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல பாரம்பரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவர்களுக்கும் இனி அரசியல் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதவில்லை என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியரான அகிலன் கதிர்காமர். "ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல, கொழும்பிலுள்ள மேட்டுக்குடி அரசியலிலேயே மொத்தமாக ஒரு பெரிய குழப்பம் வந்திருக்கிறது. இனி பழைய பாணியில் இவர்கள் மக்கள் அணுகுவது கடினமாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லாவிட்டாலும்கூட, கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளுக்கு மீண்டும் ஆதரவு கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. புதிதாக ஒரு வலதுசாரி சக்தி உருவாகலாம் என்றுதான் நினைக்கிறேன்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? "ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தினர் மீதும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவை நிரூபிக்கப்பட்டால், அவர்களது அரசியல் எதிர்காலம் பெரும் ஆபத்தில் சிக்கும். 2029ஆம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மூலம் தனது மகன் நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென நினைத்தார் மஹிந்த. ஆனால், இந்தத் தேர்தலில் அவர்கள் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், இது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. அநுரவின் ஆட்சியும் பொருளாதார நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தால், பொதுஜன பெரமுனவின் அரசியலும் ராஜபக்ஸவின் குடும்ப அரசியலும் இல்லாமல் போகலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆ. நிக்ஸன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவது என்ன? ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூற்றுகளையெல்லாம் புறந்தள்ளுகின்றனர். "நாங்கள் இப்படி ஒரு பின்னடைவைச் சந்திப்பது இது முதல்முறையல்ல. 2015லும் இதே போன்ற பின்னடைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் பல தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால், நாங்கள் மிக வலுவாகத் திரும்பிவந்தோம். மேலும் இந்தப் பின்னடைவு எங்களுக்கு மட்டும் ஏற்பட்டதைப் போல சொல்வது சரியல்ல. எல்லா பழைய, பாரம்பரிய கட்சிகளுமே தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை அநுரவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். வாக்குகள் அப்படியே இடம் மாறியிருக்கின்றன. இலங்கையின் அரசியல் கலாசாரம் மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. அதனை தேசிய மக்கள் சக்தி விரைவிலேயே புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டனர். அதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம்" என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரான மிலிந்த ராஜபக்ஸ. இந்த தேர்தல் தோல்வியால் ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலைவிட்டு விலகிவிட மாட்டார்கள் எனக் குறிப்பிடும் மிலிந்த, மஹிந்த ராஜபக்ஸவும் சமல் ராஜபக்ஸவும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் நாமல் ராஜபக்ஸ கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்கிறார். மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசியல் என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடப்பதைவிட, வெளியில்தான் அதிகம் இருக்கும். அதுவே இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8d220v8neo
  5. ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவில் பல உயிர்களை காப்பாற்றிய பொழுதுபோக்கு வானொலி சாதனம் பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, வாக்கி டாக்கி போன்ற சிறிய ஹாம் ரேடியோ கருவி கொண்டு களத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஹாம் ரேடியோ அமைப்பினர் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் ஜூலை 30, 2024. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்தனர். அங்குள்ள வீடுகள், கடைகள் எனப் பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கியவர்களை காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மீட்டனர். கடும் வானிலையால் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு வகை வானொலியைப் பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்புப் பணி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன. அதுதான் ஹாம் ரேடியோ. வயநாட்டில் சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் (Sultan Bathery DX Association) உறுப்பினர்கள் சேர்ந்து ஹாம் ரேடியோ கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல்கள் தெரிவித்தனர். தகவல் தொடர்பு எப்படி இருந்தது? வயநாட்டில் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் காலையில்தான் மீட்புப் பணிகள் தொடங்கின. "பேரிடர்க் காலத்தில் மின்சாரம், செல்ஃபோன் நெட்வொர்க் என எதுவும் இருக்காது. அதனால் முதல்கட்ட தகவல் தொடர்புக்கு மிகவும் எளிதான ஹாம் ரேடியோ முறையைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அது தக்க உதவியாகவும் இருந்தது," என்று கல்பேட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி அருண் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். “ஜூலை 30ஆம் தேதியன்று காலையில் எங்கள் அமைப்பிற்கு கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மீட்புப் பணியில் உதவுமாறு அழைப்பு வந்தது. உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் அங்கு சென்று கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் மிகவும் விரைவாக ஹாம் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை அமைத்தனர்” என்று பிபிசி தமிழிடம் பேசிய சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் தலைவர் சாபு மேத்யூ தெரிவித்தார். சூரல்மலை, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பு ஹாம் ரேடியோ நிலையங்களை அமைத்தனர். “மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆன்டெனா கொண்ட நிலையங்கள் அமைத்து எங்கள் குழுவினர் வாக்கி டாக்கி போல இருக்கும் சிறிய ஹாம் ரேடியோ கருவிகளைக் கொண்டு மீட்புக் குழுவினரோடு களத்திற்குச் செல்வோம், அதில் எப்போதும் ஃபோன் பேசுவது போலவே நாம் பேச இயலும்” என்றார். களத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பற்றிய தகவல்கள் ஹாம் ரேடியோ நிலையங்களுக்குப் பரிமாற்றப்பட்டு, அதிகாரிகள் அதற்கு ஏற்றது போல மீட்பு வசதிகள் செய்து மக்களைக் காப்பாற்றியதாகவும் விவரித்தார். வயநாடு பகுதியில் ஏற்கெனவே தகவல் தொடர்புக்கு வி.ஹெச்.எஃப் ரிபீட்டர் (VHF repeater) என்னும் ஆன்டெனா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது மலைகள் நிறைந்த பகுதி என்பதால் அது ஒன்றை மட்டும் பயன்படுத்தி நீண்டதூரம் தொடர்புகொள்ள முடியாது. இதனால் பல இடங்களில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். இந்தக் குழுவினர் வயநாடு நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் 7 நாட்கள் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 'வாழ்நாளில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு' பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, களத்தில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைத்து தகவல் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது “இயல்பாகவே வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகவல் தொடர்பு செய்வது சற்றுக் கடினமாகவே இருக்கும். ஆனால் அந்த மழையில், தகவல் தொடர்பு முற்றிலுமாகத் தூண்டிக்கப்பட்டு நாங்கள் மீட்புப் பணிகளைச் செய்வது மிகவும் கஷ்டமான நிலை இருந்தது. பல மணிநேரம் மக்கள் மண்ணுக்குள் சிக்கிய நிலையில் இருந்தனர். அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் பணிகளைத் தொடங்கினோம்” என்று இந்த ஹாம் ரேடியோ அமைப்பைச் சேர்ந்தவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவருமான நிதீஷ் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “முண்டக்கையில் ஹாம் ரேடியோ நிலையம் அமைத்தபோது இரண்டு மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து இருந்ததைக் கண்டோம்” என்றார். “அந்த மசூதியின் தலைவரின் உடலை மீட்க ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹாம் ரேடியோ கொண்டு தகவல் தெரிவித்தோம். மீட்புப் படையினர் அவரது உடலை மண்ணுக்குள் இருந்து எடுக்க வந்தபோது, நிலச்சரிவு பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மசூதியில் தஞ்சம் புகுந்த ஏராளமான மக்களின் சடலங்களை மண்ணுக்குள் இருந்து எடுத்தனர்” என்று நிதீஷ் கனத்த குரலுடன் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் பல மணிநேரம் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்ததாகவும், இது அவரது வாழ்நாளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார். இது நடந்த பின்னரே, மசூதி அமைந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மக்களை மண்ணுக்குள் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றியதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். நிலச்சரிவு நடந்த சில நாட்களுக்குப் பிறகு தகவல் தொடர்புக்காக அரசுத் தரப்பில் இருந்து செல்போன் டவர் வைக்கப்பட்டதாகவும் அதுவரை ஹாம் ரேடியோ கொண்டு மட்டுமே தகவல் தொடர்பு நடந்ததாகவும் நிதீஷ் கூறினார். ஹாம் ரேடியோ என்றால் என்ன? பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஹாம் ரேடியோ நிலையம் அமெச்சூர் ரேடியோ அல்லது ஹாம் ரேடியோ என்பது லாபம் ஈட்டும் நோக்கமின்றி பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு வானொலி சேவை. “தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மக்கள் வானொலி சேவைகளைத் தானே கற்று, ஆராய்ந்து அதில் புதுமைகளைக் கண்டுபிக்க ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம். ஆனால் முறையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஹாம் ரேடியோவை இயக்க முடியும். இவர்கள் ‘ஹாம்ஸ்’ என்று அழைக்கப்படுவர்” என்கிறார் சென்னை பல்கலைகழக்கத்தின் இதழியல் துறை பேராசிரியரும், ஹாம் ரேடியோ ஆர்வலருமான முனைவர் ஜெய் சக்திவேல். இந்தியாவில் 12 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சம் இதற்காக நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று ஹாம் ரேடியோ இயக்குவதற்கான உரிமத்தைப் பெறலாம். உரிமம் பெற்ற அனைவருக்கும் ‘Call sign’ எனப்படும் தனித்துவமான ஒரு பெயர் வழங்கப்படும். அழைப்பு தொடங்கப்படுவதற்கு முன் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கான ‘Call sign’-ஐ சொல்லியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வர். அமெச்சூர் வானொலியின் தேசிய நிறுவனத் தரவுகளின் படி, உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹாம் ரேடியோவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் 15,000 ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் உள்ளனர். ஹாம் ரேடியோ எவ்வாறு இயங்குகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹாம் ரேடியோ கருவிகள் “பொதுவாக வானொலியில் ஒரு வழித் தொடர்பு மட்டுமே நடத்த இயலும். ஆனால் ஹாம் ரேடியோவில் ஒரு தொலைபேசி அழைப்பு போல அனுப்புநர், பெறுநர் என இருவரும் தொடர்புகொள்ளலாம். ஹாம் ரேடியோ கொண்டு உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுடனும் தொடர்பு கொள்ளலாம்” என்று முனைவர் ஜெய் சக்திவேல் தெரிவித்தார். இரண்டாயிரம் ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கருவிகள் உள்ளன. ஒரு பேட்டரி கொண்டு மட்டுமே இந்த ஹாம் ரேடியோ பல மணிநேரங்கள் வரை இயங்க முடியும். முன்பு ஹாம் ரேடியோவில் ‘மோர்ஸ் கோட்’ (morse code) எனப்படும் பிரத்யேக குறியீடு கொண்டு தகவல் பரிமாற்றம் நடக்கும். ஆனால் தற்போது தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக செல்போனில் பேசுவது போலத் தொடர்புகொள்ள முடியும். மொழி தெரியாதவர்களுடன் பேசுவதற்காக மட்டுமே மோர்ஸ் கோட் பயன்படுத்தப்படுகிறது. “இதனால் உலகம் முழுவதும் மொழி தடையாக இல்லாமல் மக்கள் கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளலாம். ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட பொழுபோக்குகளுள் (hobbies) ஹாம்ரேடியோ ஒன்றாகும்” என்றும் அவர் தெரிவித்தார். “ஆனால் ஹாம் ரேடியோ பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே மக்களுக்கு இதன் பயன்பாடு பற்றித் தெரிய வருகிறது” என்கிறார் முனைவர் ஜெய்சக்திவேல். கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2015 சென்னை வெள்ளம், 2018 கேரளா வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் ஹாம் ரேடியோ தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj9j9y9jvm3o
  6. 120 ஏவுகணைகள் 90 ஆளில்லா விமானங்கள் - உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்பின் மீது ரஸ்யா தாக்குதல் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஸ்யா கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்களின் கட்டிடங்களும் தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் அனைத்து பிராந்தியங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு தாக்குதலின் போது 120 ஏவுகணைகளையும் 90 ஆளில்லா விமானங்களையும் ரஸ்யா பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் தனது நாட்டின் மேற்குபகுதிவரை ஏவுகணைகள் சென்றன என குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய தனியார் வலுசக்தி நிறுவனம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வலுச்சக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல் காரணமாக சில பகுதிகள் தொடர்ந்தும் மின்சாரம் அற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/199018
  7. சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால் என்ன ஆகும்? அடுத்த திட்டம்? பட மூலாதாரம்,NEVILLE HOPWOOD/GETTY IMAGES பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவின் வருகை குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, இதற்கான கோப்பை சுற்றுப் பயணமும் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) கோப்பை சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் நகருக்குக் கொண்டு செல்வதாக அறிவித்தது, ஆனால் ஐசிசி அதற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலை பிசிபிக்கு ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பையைப் போன்று ஹைபிரிட் வடிவில், அதாவது சில போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவுடனான போட்டிகள் மட்டும் வேறு சில நாடுகளிலும் நடத்தப்படும் வகையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. முன்பு ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. ஆகவே இலங்கையில் இந்தியாவின் போட்டிகளை ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இந்த முறை அத்தகைய அணுகுமுறைக்கு பிசிபி தயாராக இல்லை என்று பாகிஸ்தானில் கூறப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூறுவது என்ன? பிடிஐ செய்தி முகமை, ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்ட செய்தி ஒன்றில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், "இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று ஐசிசியிடம் பிசிசிஐ கூறியதாக," குறிப்பிட்டிருந்தது. இந்த வாரம், பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் சுக்லா, "அரசு எங்களிடம் என்ன கூறுகிறதோ, எந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறதோ அதை நாங்கள் ஏற்று நடப்போம். அதையேதான் நாங்கள் ஐசிசி-யிடமும் கூறினோம்," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வெள்ளிக்கிழமை ஐசிசியிடம் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருந்தது. நவம்பர் 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஹ்சின் நக்வி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்பதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்று ஏதாவது நடப்பதாக இருந்தாலோ அல்லது யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தாலோ, முறைப்படி எழுத்துப்பூர்வமாக அதை எங்களுக்குத் தெரிவிக்கவும்," என்று கூறியிருந்தார். கடைசியாக இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றது. நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு குறித்துப் பல கவலைகளை எழுப்பியது. போட்டிகளுக்கு வெறும் 100 நாட்கள்கூட இல்லாத நிலையில் அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பத் தயாராக இல்லை என்று பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவுக்குப் பிறகு போட்டிகளில் சில பாகிஸ்தானிலும், சில வெளிநாடுகளிலும் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக, லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த 2021ஆம் ஆண்டு அடுத்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை, 2025ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்தது. முன்னாள் பிசிபி தலைவர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி இதுகுறித்துக் கூறுகையில், ஐசிசிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும், இரண்டாவது வாய்ப்பு ஹைப்ரிட் வடிவில் விளையாட வேண்டும். இவையிரண்டுமே ஏற்கப்படவில்லை என்றால், மூன்றாவதாக முழு தொடரும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தானின் தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியா இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அவர்கள் வரப் போவதில்லை. கபடி அணியையும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியையும் அனுப்பவில்லை. முன்பு டேவிஸ் கோப்பைக்காக டென்னிஸ் வீரர்கள் விளையாட வருவார்கள். இப்போது அவர்களும்கூட வருவதில்லை,” என்றார். நஜாம் சேத்தி, ”நம் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது வாய்ப்பான, போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்வது மட்டுமே மீதமுள்ளது. ஆனால் ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்யலாம்” என்றார். பாகிஸ்தானுக்கு இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்கிறார் அவர். "பாகிஸ்தான் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், உள்நாட்டில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் தலைகுனிய வேண்டியிருந்ததாகப் பேசப்படும்" எனக் கருதுகிறார் நஜாம் சேத்தி. ஐசிசி எப்போதும் பிசிசிஐ பக்கமே இருக்கும் என்கிறார் அவர். அதேவேளையில், “இந்தப் போட்டியை இலங்கை அல்லது துபாய்க்கு மாற்றி, அதில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் நஷ்டம் ஏற்படும். போட்டி வருவாயில் பெரும் பகுதி இந்தியாவுக்கும், சிறிய பகுதி பாகிஸ்தானுக்கும் செல்கிறது,” என்றார். பட மூலாதாரம்,KIERAN GALVIN/NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பாதிக்காது எனக் கூறும் அவர், பிசிசிஐ பணக்கார வாரியம் என்பதே அதற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலை அப்படியல்ல, அதை அதிகம் பாதிக்கும் என்றும், வெளிநாட்டிலும் விளையாடாவிட்டால், அது பண இழப்பை ஏற்படுத்தும் எனவும் அது பிரச்னையாக மாறும் எனவும் கூறுகிறார் நஜாம் சேத்தி. அவரது கூற்றுப்படி, ஒருவேளை பாகிஸ்தான் அத்தகைய முடிவை எடுத்து, தன்னை ஐசிசியில் இருந்து ஒதுக்கிக் கொண்டால், ஏற்கெனவே குறைவாக இருக்கும் அதன் வருமானம் மேலும் பெருமளவு குறையும். சாம்பியன்ஸ் கோப்பை முஸாஃபராபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்படாதது ஏன்? வழக்கமாக சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் அந்தக் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். இஸ்லமாபாத்தில் சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் சுற்றுப் பயணம் ஆரம்பமானது. இந்தக் கோப்பை வரும் நாட்களில் பாகிஸ்தானில் 8 இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் இந்தக் கோப்பையின் சுற்றுப்பயணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முசாஃபராபாத்திலும் கோப்பை வைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பட்டியலில் இருந்து அந்நகரம் நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நகரம் அமைந்துள்ளதால், இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குள்ளான பகுதியாக அது அறியப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது என்ன? பட மூலாதாரம்,@THEREALPCB/X படக்குறிப்பு,இறுதியாக பாகிஸ்தான் செல்வதற்கு முன், இறுதியாக கோப்பை இந்தியாவுக்கு வரும் நவம்பர் 14ஆம் தேதியன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தக் கோப்பையைப் பல்வேறு அழகான இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தது. கார்து மற்றும் ஹன்சா பள்ளத்தாக்கு (கில்ஜித், பல்டிஸ்தான்), முரி (ராவல்பிண்டி), முசாஃபராபாத் நகரங்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பாகிஸ்தானின் இந்தக் கோப்பை சுற்றுப்பயண திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ தலைவரான ஜெய் ஷா வெள்ளிக்கிழமை அன்று ஐ.சி.சி. அதிகாரிகளுடன் பேசியதாகவும், பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக, பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ முகமையிடம் பேசியபோது, "ஜெய் ஷா ஐசிசி அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்வது தொடர்பான பாகிஸ்தானின் முடிவை விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டார்," என்று கூறியுள்ளார். "பிசிசிஐ செயலாளர், கோப்பையை இஸ்லமாத்திற்கு கொண்டு செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், ஆனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கோப்பை செல்லக்கூடாது என்றும் கூறியதாக" அந்த அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார். "இது தங்களின் தனிப்பட்ட முடிவல்ல. ஏற்கெனவே ஐசிசியுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக ஐசிசி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பிசிபி தலைவர் மோஹ்சின் நக்வி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கோப்பையின் சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்தக் கோப்பை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குச் செல்லும். அதற்கு முன்பாக, சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணம் இஸ்லாமாபாத்தில் இருந்து நவம்பர் 16 அன்று தொடங்கியது. இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்துச் செல்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. கோப்பை சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை சேர்ப்பது குறித்து நஜாம் சேத்தி கூறுகையில், "பிசிபி சொந்தமாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்க வேண்டும். முன்னதாக, எந்தக் கோப்பைகள் வந்தாலும், அவை மூன்று அல்லது நான்கு பாகிஸ்தான் நகரங்களுக்கே எடுத்துச் செல்லப்படும்,” என்றார். அதோடு, கில்ஜிட், பால்டிஸ்தான் போன்ற பகுதிகள் கோப்பை சுற்றுப் பயணத்தில் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகக் கூறுகிறார் நஜாம் சேத்தி. இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் இது பிசிபியின் முடிவு அல்ல என்றும் அவர் கூறினார். இந்த முடிவை எடுக்கும்போது, இப்படி ஒரு எதிர்வினை வரும் என்பதும் பிசிபிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். மேலும், “பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதைச் சாத்தியப்படுத்த தூதரக பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்,” என்றார் நஜாம் சேத்தி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wql248g2wo
  8. முடிவாக, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் வருமாறு. 1. முதலாவது பேருண்மை. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசத்தைத் திரட்டத் தவறினால்,தென்னிலங்கை மையக் கட்சிகள் வாக்குகளைக் கவர்ந்து சென்று விடும். 2. இரண்டாவது பேருண்மை, சமஸ்ரியை தேர்தல்மூலம் அடைய முடியாது. தேர்தல்களின் மூலம் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது. 3. மூன்றாவது பேருண்மை, சமஸ்ரியை அடைவதாக இருந்தால் ஈழத் தமிழர்கள் நாட்டுக்கு வெளியே அணிகளையும் கூட்டுக்களையும் உருவாக்க வேண்டும். அந்த அணிகளின் மூலம் தீர்வுக்கான பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழலைக் கனியச்செய்ய வேண்டும். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் அதற்கு முதல் இங்கு தாயகத்தில் தேசத்தைத் திரட்ட வேண்டும். தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளை ஒரு பெருந்திரளாக்க வேண்டும். தேசத்தைத் திரட்டினால்தான் உலகத்தைத் திரட்டலாம். அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறினால் தென்னிலங்கையை மையக் கட்சிகள் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் படிப்படியாக அரித்துத் தின்று விடும். இதெல்லாம் நடக்குமா?!
  9. தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்ட நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மன வலிமையோடு எமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்க நினைத்திருந்த மக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானாந்தா அலைகள் அடித்தாலும், கார்முகில்கள் சூழ்ந்தாலும் எமது கடும் பயணம் ஒருபோதும் நிற்பதில்லை என்றும் எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199017
  10. மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேற்படி 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு 'டிக் டாக்' மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசி அலசலில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199015
  11. மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும் அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் உட்பட நாட்டின் சகல பிராந்தியங்களையும் தழுவியதாக அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் பரந்தளவிலான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாக அமைகிறது. ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன, மத பிளவுகளை இணைத்திருப்பதன் ஒரு அறிகுறியாக இதை தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது. முன்னென்றும் இல்லாத வகையிலான இந்த நல்லெண்ணத்தின் பின்புலத்தில், நாட்டின் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தேசிய சமாதானப் பேரவை கேட்டுக்கொள்கிறது. தேசிய மக்கள் சக்தி உண்மையான ஒரு தேசிய நோக்கையும் அணுகுமுறையையும் அடைந்திருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த அம்சத்தை நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதன் மூலமாக வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு சொந்தமான நிலங்களை திருப்பிக் கையளிப்பது, அதிகாரங்களை பகிர்வது, பரவலாக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமய நீக்கத்தைச் செய்வது, காணாமல்போனவர்களினதும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களினதும் விவகாரங்களை கையாள்வது என்று பல்வேறு பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. நாட்டின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தில் அரசாங்கம் பிரவேசிக்கும் நிலையில், பொருளாதாரச் சவால்களை கையாள்வதுடன் சகல குடிமக்களுக்குமான நீதியையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடைவதில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை விரும்புகிறது. நிலைபேறான ஒரு அரசியல் தீர்வுக்கு சிவில் சமூகத்தின் பங்கேற்பும் சகல சமூகங்களினதும் இணக்கமும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பரந்தளவு ஆதரவுடனான அத்தகைய ஒரு தீர்வு நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவிருக்கும் சந்ததிகளுக்கு உறுதிசெய்யும். https://www.virakesari.lk/article/199004
  12. மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார். இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. https://globaltamilnews.net/2024/208356/
  13. தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள். இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றைமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம். தேர்தலில் தோற்றுபோனவன் என பலர் எள்ளி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பவில்லை. கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறவில்லை. ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும். பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள். அதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் ஈகோ மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208342/
  14. எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம். இந்த பிரதேசத்தில் வேறுவகையான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதையும் கருத்தில் கொண்டே ஒரு ஒத்த முடிவிற்கு வந்துள்ளோம். அத்துடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் அதிக கரிசனையும் விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது. எனது தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட அந்த ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறேன். எனவே நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம். நான் தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர். நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன். அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/199019
  15. கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு கண்டியில் (Kandy) தொடர்ந்து பல சொகுசு வாகனங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்தநிலையில் மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டுபடிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது நேற்று (16) கண்டி தலைமையக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி முறைப்பாடு பதில் காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 ஆம் திகதி தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/luxury-vehicle-seized-in-kandy-1731826577#google_vignette
  16. அமெரிக்காவின்(United States) - கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும். புராண நம்பிக்கை ஜப்பானிய புராணக்கதையின் படி, இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் (Oarfish) கரை ஒதுங்கியுள்ளது. குளிர்ச்சியான உயிரினம் சுமார் 9 முதல் 10 அடி நீளம் கொண்ட இந்த குளிர்ச்சியான உயிரினம், ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியுள்ளது. வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த உயிரினம், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழுகின்றனவையாகும். அழிவு நாள் மீன்கள் சில புராணக்கதைகள் இந்த மீன் இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்கால பூகம்பங்களை முன்னறிவிக்கும் என்று நம்புகின்றன. ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தின்(The Scripps Institution) கூற்றுப்படி, 1901 முதல் கலிபோர்னியா கட்டுரையில் 21 அழிவு நாள் மீன்கள் தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர் பென் ஃப்ரேபிள்(Ben Frable), இந்த மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. எனினும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பு. கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார். இதேவேளை, கடந்த முறை சான் டியாகோ (San Diego) நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட அழிவு நாள் மீன்(Oarfish)தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/doomsday-fish-found-on-california-beach-1731836529#google_vignette
  17. (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம். ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும். எவ்வாறாயினும், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/198978
  18. அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு! அநுர (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கத்தில் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் (Sri Lanka) 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு புதிய சாதனையை படைத்தது. புதிய சாதனை இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அமைச்சரவையின் அமைச்சர்கள் நாளையதினம் (1811.2024) பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வில் தற்போது பிரதமராக இருக்கும் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி மேலும் விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கப் போவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவை இருபத்தைந்து பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://ibctamil.com/article/new-ministers-will-be-sworn-in-tomorrow-1731820500#google_vignette
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது எழுதியவர், நடாலி ஷெர்மன் மற்றும் டியர்பெயில் ஜோர்டான் பதவி, பிபிசி வணிக நிருபர்கள் ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல தரப்பட்ட தலைப்புகளில் தனக்கு இருக்கும் கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்துபவர். அவர் தனது நிறுவனமான நியூராலிங்க் மூலம் மனித மூளையில் பொருத்தக்கூடிய சிப் குறித்த சோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ் தளத்தை ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக (Super App) மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறார். செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று முன்னர் அவர் எச்சரித்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உலகில் தனது இருப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் (2024) டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது. மஸ்க் இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான, ஆனால் அதேசமயம் சர்ச்சைக்குரிய ஒரு வகையில் பங்காற்றினார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தனது நிர்வாகத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் மேம்பாட்டுத் துறையை (Department of Government Efficiency- Doge) வழிநடத்த ஈலோன் மஸ்க்கையே தேர்ந்தெடுத்துள்ளார். ‘அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் வீணான செலவுகளைக் குறைக்கவும், கூட்டாட்சி முகமைகளை மறுசீரமைக்கவும்’, அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்த துறை (Doge) உதவும்’ என்று டிரம்ப் கூறினார். இந்த விஷயத்தில் ஈலோன் மஸ்குக்கு ஏற்கனவே அனுபவம் உண்டு, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) தளத்தை வாங்கிய பிறகு, அவர் பலரை வேலையை விட்டு நீக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு படிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட மஸ்க், குறுகிய காலத்திலேயே அங்கிருந்து வெளியேறினார் ஈலோன் மஸ்க் எங்கு பிறந்தார்? இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ உலகிற்குள் நுழைந்ததில் இருந்தே, 53 வயதான ஈலோன் மஸ்க், தனது வணிக செயல்களால் பொதுமக்களை வசீகரித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த ஈலோன் மஸ்க், தனது சகோதரருடன் வீடுவீடாகச் சென்று ‘வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் ஈஸ்டர் முட்டைகளை’ விற்றவர். 12 வயதில் தனது முதல் கணினி விளையாட்டை உருவாக்கினார். அவரது பெற்றோரின் விவாகரத்து, பள்ளியில் பிற மாணவர்களால் வம்புக்கு இழுக்கப்பட்டது (Bullying), ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் (Asperger Syndrom) காரணமாக சமூகத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இருந்த சிரமம், என தான் குழந்தைப் பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் விவரித்தார். அவர் இளம் பருவத்தில், கல்லூரி படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறி, கனடாவிற்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் சென்றார். அங்கு அவர் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் படித்தார். 2010-ம் ஆண்டு மேரி கிளேர் என்ற இதழில் எழுதிய கட்டுரையில், “பணக்காரராக ஆவதற்கு முன்பே, ‘இல்லை’ எனும் பதிலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதராகவே மஸ்க் இருந்தார்” என்று அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்த போது இவரை சந்தித்து காதல் வயப்பட்ட ஈலோன் மஸ்க், 2000-வது ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். "போட்டி மனப்பான்மையும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வமும் தான் வணிகத்தில் அவர் மிகப்பெரிய வெற்றி பெற காரணம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படித்தான். எங்களது திருமண நிகழ்வில் நடனமாடும் போது கூட ‘இந்த உறவில் நான்தான் ஆல்பா’ (Alpha- அதிகாரம் செலுத்தக் கூடியவர்) என அவர் என்னிடம் கூறினார்" என்று ஜஸ்டின் நினைவுகூர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஸ்க்கின் மிக சமீபத்திய வணிக முயற்சிகளில், அக்டோபர் 2022இல் சமூக ஊடக தளமான ட்விட்டரை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தியது அடங்கும் ஈலோன் மஸ்க் உலகின் முதல் பணக்காரரானது எப்படி? ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு படிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட ஈலோன் மஸ்க், குறுகிய காலத்திலேயே அங்கிருந்து வெளியேறினார். பிறகு 1990களில் இணையம் தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சியின் (Dotcom Boom) போது இரண்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை நிறுவினார். இவற்றில் ஒன்று வலை மென்பொருள் நிறுவனம், மற்றொன்று ஆன்லைன் நிதி நிறுவனம். அந்த நிதி நிறுவனம் தான் PayPal என்றானது. பின்னர் இது 2002இல் ஈபேக்கு (eBay) நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. அவர் தனது பணத்தை ஒரு புதிய ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இல் முதலீடு செய்தார். குறைவான செலவை முதன்மையாகக் கொண்டு, நாசாவுக்கு மாற்றாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை எடுத்துச் செல்வதே அவரது லட்சியமாக இருந்தது. ஒரு புதிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவிலும் தனது பணத்தை முதலீடு செய்தார், 2008இல் அதன் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார். இரண்டு நிறுவனங்களும் சில சமயங்களில் நிதிச் சரிவை சந்தித்த போதும், தங்கள் தொழில்களை மேம்படுத்தியதற்காக பெயர்போனவை. அவரது மிக சமீபத்திய வணிக முயற்சிகளில், அக்டோபர் 2022இல் சமூக ஊடக தளமான ட்விட்டரை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தியதும் அடங்கும். தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழுவின் ஊழியர் எண்ணிக்கையை குறைத்தது உட்பட, அவர் மேற்கொண்ட ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின. பிறகு நிறுவனத்திற்கு ‘எக்ஸ்’ (X) என புதிய பெயரிட்டார். புதிய பிரீமியம் சந்தாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, அதாவது வருமானத்திற்காக விளம்பரத்தை மட்டுமே நம்பியிருக்காது அந்த தளம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மஸ்க்கின் நீண்ட கால லட்சியம் எக்ஸ் தளத்தை பலவிதமான சேவைகளை வழங்கும் ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக (Super App) மாற்ற வேண்டும் என்பது தான். இருப்பினும், இதுவரை நிறுவனத்தின் மதிப்பு அவர் முதலீடு செய்த 44 பில்லியன் டாலர்களிலிருந்து வெறும் 19 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 'உள்ளுணர்வுகளைப் பின்பற்றி நடப்பவர்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஸ்க் கடந்த பிப்ரவரி மாதத்தில், OpenAI நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்தார் அவர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையிலும் பல லட்சியங்களைக் கொண்டுள்ளார். ChatGPTஇன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளராக மஸ்க் இருந்தார். பிறகு 2023இல் ‘பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ளும்’ நோக்கத்தில், ‘xAI’ எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார். மஸ்க் கடந்த பிப்ரவரி மாதத்தில், OpenAI நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்தார். தனது உதவியால் உருவான அந்த நிறுவனம், மைக்ரோசாஃப்டில் இணைந்ததன் மூலம் அதன் இலாப நோக்கற்ற தன்மைகளை கைவிட்டதாக அவர் கூறினார். "அவர், நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே திட்டமிடக் கூடிய ஒரு நபர் கிடையாது என்பது என் கருத்து. அவர் தனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி நடப்பவர்" என்று பத்திரிகையாளர் கிறிஸ் ஸ்டோகல்-வாக்கர் கூறுகிறார். எழுத்தாளர் ஆஷ்லீ வான்ஸ், 2015ஆம் ஆண்டு, ஒரு சுயசரிதையில், “‘அதிக ஈகோ’ மற்றும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்” என்று மஸ்க்கை வர்ணித்தார். அதேசமயம், மஸ்க் ஒரு மோசமான நடனக் கலைஞர் மற்றும் பொது மேடையில் பேசுவதில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவர் என்றும் விவரித்தார். பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே என்பவரிடமிருந்து இரண்டு முறை விவாகரத்து பெற்றது உட்பட அவர் பெற்ற மூன்று விவாகரத்துகள் குறித்தும், தனது தவறுகள் பற்றியும் ஈலோன் மஸ்க் வெளிப்படையாக பேசியுள்ளார். "எனது பாவங்களை நீங்கள் பட்டியலிட்டால், நான் பூமியின் மிக மோசமான நபரைப் போல தெரிவேன். ஆனால் நான் சரியாகச் செய்த விஷயங்களோடு ஒப்பிட்டால், அந்தத் தவறுகளுக்கு பின்னால் உள்ள அர்த்தம் புரியும்." என்று மஸ்க் 2022இல் ஒரு (TED) நேர்காணலில் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்கிற்கு 12 பிள்ளைகள் உள்ளனர் ஈலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு என்ன? இந்த முரண்பாடுகள் அனைத்தும் மஸ்க்கின் குணாதிசயத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகின்றன. அது நிச்சயமாக செல்வத்தைக் குவிப்பதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. உலக கோடீஸ்வரர்களின் செல்வத்தைக் குறித்த தகவல்களை சேகரிக்கும் ப்ளூம்பெர்க்கின் குறியீட்டின்படி, மஸ்க் தான் உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஆவார். அவரது தற்போதைய நிகர மதிப்பு சுமார் 290 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 24.5 லட்சம் கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெஸ்லாவின் பங்கு விலையுடன் அவரது செல்வமும் உயர்ந்தது. இது பெரும்பாலும் டெஸ்லாவில் உள்ள அவரது பங்குகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது, அந்த நிறுவனத்தில் அவர் 13%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்து, தொடர்ச்சியான லாபத்தை வழங்கத் தொடங்கியதால், 2020ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது (சிலர் நியாயமற்ற முறையில் என்று கூறுகிறார்கள்). ஆனால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் பங்குகள் சரிந்தன, சிலர் இந்த வீழ்ச்சிக்கு ‘ட்விட்டர்’ நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியது தான் காரணம் என குற்றம் சாட்டினர். இருப்பினும் டெஸ்லாவின் பங்குகள் பின்னர் சரிவிலிருந்து மீண்டன. ஈலோன் மஸ்க் டிஜிட்டல் நாணயங்கள் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துகிறார். சுரங்கப்பாதைகள் கட்டமைக்கும் நிறுவனமான ‘தி போரிங் கம்பெனி’ மற்றும் மனித மூளை குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை செய்யும் நியூராலிங்க் உள்ளிட்ட பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். ஈலோன் மஸ்க், தான் வெறுமனே பணம் சம்பாதிப்பதற்காக வணிகத்தில் ஈடுபடவில்லை என்று அடிக்கடி கூறி வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் கையகப்படுத்திய போதும் இதை அவர் மீண்டும் தெரிவித்தார். "சமூக நலன் அல்லது மனிதநேயம் போன்ற சில காரணங்களின் அடிப்படையில், அந்த வணிகங்கள் மிக முக்கியமானவை என்று உணர்ந்தால் மட்டுமே ஈலோன் மஸ்க் அவற்றில் ஈடுபடுகிறார்." என்று அவரின் நண்பரும் டெஸ்லா முதலீட்டாளருமான ரோஸ் கெர்பர் கூறுகிறார். ஈலோன் மஸ்க் டிரம்பை ஆதரித்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவருக்கு மஸ்க் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார் மஸ்க், 2002ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார். தன் மீது அரசியலை முத்திரை குத்தும் முயற்சிகளை அவர் நீண்ட காலமாகவே எதிர்த்து வந்தார். தன்னை “‘ஒரு பாதி ஜனநாயகவாதி’ (Half Democrat), ‘பாதி குடியரசுக் கட்சிக் ஆதரவாளர்’ (half-Republican)”, ‘அரசியல் ரீதியாக மிதமான கொள்கை உடையவன்’ மற்றும் ‘சுயாதீனமானவன்’ என்று விவரித்தார். பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக அவர் கூறினார், அவர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பக்கம் சாய்ந்தார். 2024இல் டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவருக்கு மஸ்க் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார். டிரம்பின் பிரசாரத்தின் முன்னணி ஆதரவாளராகவும், அதில் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராகவும் மாறினார். பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு உட்பட பல பிரச்னைகளில் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார். ஜனநாயகக் கட்சியின் ஆட்சி மீண்டும் அமைந்தால் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள ‘பேச்சு சுதந்திரம்’ என்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் பிரசாரத்தின் முன்னணி ஆதரவாளராகவும், அதில் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராகவும் மஸ்க் இருந்தார் தேர்தலுக்கு முன்னதாக அவர் பல குடியரசுக் கட்சி பேரணிகளில் தோன்றினார். டிரம்பை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க உதவும் ‘ஒரு அரசியல் நடவடிக்கைக் குழுவுக்கு’ நிதியளிக்க மில்லியன்கணக்கான டாலர்களைத் திரட்டினார். மேலும் எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் டிரம்புக்கு ஆதரவாக அடிக்கடி குரல் கொடுத்தார். ஈலோன் மஸ்க்கின் ‘அமெரிக்கா சூப்பர் பிஏசி’ எனும் அரசியல் நடவடிக்கைக் குழு, தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரங்களில் முடிவைத் தீர்மானிக்கும் ‘ஸ்விங்’ மாகாணங்களில் வாக்காளர்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ‘1 மில்லியன் டாலர்’ நன்கொடையை வழங்கியது. ஆனாலும் இது அவரது முதல் அரசியல் சர்ச்சையுடன் ஒப்பிடும் போது, பெரிய விஷயமில்லை. பிரிட்டனில், ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்ற போது, “பிரிட்டன் ‘உள்நாட்டுப் போரின்’ விளிம்பில் இருப்பதாக அவர் கூறியது உட்பட, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் பகிர்ந்தார். மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை யுக்ரேனுக்கு வழங்கியிருந்தாலும் கூட, ரஷ்ய கடற்படையின் ஒரு பெரிய பிரிவிற்கு தாயகமாக இருக்கும் செவஸ்டபோலில் ஸ்டார்லிங்கை செயல்படுத்துவதற்கான அவசர கோரிக்கையை யுக்ரேன் விடுத்த போது, அதை அவர் நிராகரித்தார். இது விமர்சனங்களை எழுப்பியது அமெரிக்காவில், கலிபோர்னியாவின் விதிமுறைகள் மற்றும் அதிக வரிகள் குறித்து புகார் தெரிவித்த மஸ்க், டெக்சாஸுக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு தொழிற்சங்க அமைப்பாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. பிறகு 2020இல், கொரோனா பெருந்தொற்று ஊரடங்குகளை ‘பாசிச நடவடிக்கைகள்’ என்று கண்டித்தார். டெஸ்லா நிறுவனம் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய மனித குல பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதால், தனது வணிகங்களை ஒரு மனிதநேய நோக்கத்துடனே அணுகுவதாக அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்காலத்தில் உலகில் ‘போதுமான மக்கள்’ இல்லாமல் போகக்கூடும் என்று மஸ்க் கூறியுள்ளார் செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வம் செயற்கை நுண்ணறிவு துறையில் அவருக்கு பெரும் ஆர்வம் உள்ள போதிலும், அதிபுத்திசாலித்தனமான ஏஐ தொழில்நுட்பங்கள் மனித குலத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது குறித்து கவலை தெரிவிக்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் உலகில் ‘போதுமான மக்கள்’ இல்லாமல் போகக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். ஈலோன் மஸ்க்கிற்கு, அவரது முதல் மனைவி மூலமாக ஆறு குழந்தைகளும், கனடிய பாடகி கிரிம்ஸ் மூலமாக மூன்று குழந்தைகளும், ஷிவோன் ஜிலிஸ் மூலமாக மூன்று குழந்தைகளும் என 12 பிள்ளைகள் உள்ளனர். ஜிலிஸ் மூலமாக அவருக்கு இரட்டையர்கள் பிறந்ததைத் தொடர்ந்து, "மக்கள் தொகை குறைந்து வருவதைத் தடுக்க, என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்." என்று மஸ்க் ட்வீட் செய்திருந்தார். லிவ் மக்மோஹன் தந்த கூடுதல் விவரங்கள் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgmv4ldj23do
  20. தேடல் முடிந்து விட்டால் ரசனைகள் ஏது? ரசனைகள் இருக்கும் வரையில் தேடலுக்கு முடிவு ஏது?! தேடல் ரசிக்க வைக்கும் ரசித்ததை தேட வைக்கும் வாழ்க்கை ஓடும்......
  21. 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்ட மஹிந்தானந்த : அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்டதையடுத்து, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட மகிந்தானந்த அலுத்கமகேயை விட 348 வாக்குகளை அதிகமாக பெற்று அனுராத ஜயரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இத்தோல்வியை அடுத்து மஹிந்தானந்த அலுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று சனிக்கிழமை (16) தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து மத்திய மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் என்பவற்றுக்கு பல முறை தெரிவான இவர் மாகாண சபை அமைச்சராகவும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பல முறையும் தெரிவான ஒருவர். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் அலுத்கமகே குடும்பம் நீண்டகால அரசியல் செய்ததாகவும் தற்போது பொதுமக்கள் தம்மை நிராகரித்துள்ளதால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக இருந்து பாரிய அளவில் பேசப்பட்டவரும் விமர்சிக்கப்பட்டவருமான மஹிந்தானந்த அலுத்கமகே இரசாயனப் பசளை தடை தொடர்பாக அதிகளவு உருவப் பொம்மை எரிக்கப்பட்ட ஒருவராகவும் பேசப்பட்டவர் ஆவார். மேலும், கடந்த காலத்தில் இரண்டு முறை பாராளுமன்றம் சென்ற வேலுகுமாரின் வாக்கு வங்கி 7539ஆக வீழ்ச்சியடைந்து அவரும் தோல்வியடைந்தார். அதேவேளை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியாருக்கு 3442 விருப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்து அவரும் தோல்வியடைந்தார். https://www.virakesari.lk/article/198967
  22. ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும். எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/198954
  23. பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் வரலாறு காணாத அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது ஆட்சியின்போது எவ்வாறான சவால்களை எதிர்நோக்கப் போகின்றது? இலங்கை, பல்லின சமூகம் வாழும் நாடு என்ற நிலையில், இந்த ஆட்சியைத் தீர்மானிப்பதில் என்றும் இல்லாதவாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், அதாவது 1931ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது. அந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற 2020ஆம் ஆண்டு காலப் பகுதி வரை தமிழ், சிங்களம் எனப் பிரிந்த நிலையிலேயே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வந்தனர். எனினும், இலங்கை வரலாற்றில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும், மத்தியில் ஆட்சி நடத்தக் கூடிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, மத்தியில் ஆட்சியை அமைக்கக்கூடிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமை, பொருளாதாரம், மத சுதந்திரம், ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே, இந்த மக்களை வாக்களிக்கத் தூண்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்து, நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறான சவால்கள் காணப்படுகின்றன என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய மக்கள் பிரதிநிதிகள் பட மூலாதாரம்,NPP MEDIA தேசிய பட்டியல் அடங்களாக 159 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், மொத்தமாக 160 மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இந்த 160 மக்கள் பிரதிநிதிகளும், தமது பணிகளுக்குப் புதியவர்கள் என்பது மிக முக்கியமான விடயம். அநுர குமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற அனுபவம் இருந்தாலும், ஜனாதிபதி பதவிக்கு அவர் புதியவர் என்பதுடன், ஹரிணி அமரசூரியவும் பிரதமர் பதவிக்குப் புதியவராவார். அதேபோன்று, அமைச்சராகத் தற்போது பதவி வகிக்கும் விஜித்த ஹேரத் உள்ளிட்ட புதிய அமைச்சு பொறுப்புகளை ஏற்கவுள்ளவர்களும், அமைச்சுப் பதவிகளில் செயற்பட்ட அனுபவம் இல்லாதவர்கள். அத்துடன், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 95 சதவீத தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமைக்கும் புதியவர்களாவர். இந்த நிலையில், ஒட்டு மொத்த புதிய மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எவ்வாறான சவால்களை எதிர்நோக்குவார்கள்? பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சி பீடத்தில் ஏறியுள்ளமை தொடர்பில் பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் அ.நிக்சன், ''அநேகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தத் தெரிவிற்கு வந்திருக்கிறார்கள்" என்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பாரம்பரிய கட்சிகள், மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மீதான வெறுப்புகளும் இந்தத் தெரிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நிக்சன். முக்கியமாக "மக்களின் வாழ்க்கைச் சுமை பிரச்னையானது, ஊழல், மோசடி, துஷ்பிரயோகங்களால்தான் வந்தது என்பதைத் தெரிவித்தே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள்தம் வாக்குகளைக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஊழல், மோசடி, கமிஷன் போன்ற விடயங்களை இவர்கள் அம்பலப்படுத்துகின்றார்கள். இதனால், கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்துள்ளனர். நிச்சயமாக பொருளாதார நெருக்கடிதான் இதற்கான முக்கியக் காரணம். இந்தத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தனியே ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம் என நினைக்கின்றார்கள். ஆனால், அப்படியல்ல," என்று குறிப்பிட்டார் நிக்சன். பொருளாதார நிபுணர்களுடைய கருத்துகளின் பிரகாரம், போர் இடம் பெற்ற காலத்தில்தான் இந்த ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயாகம் ஆரம்பித்ததாகக் கூறும் நிக்சன், பொருளாதார நெருக்கடி என்பது யுத்தத்தால் ஏற்பட்டது என்றும் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார். ஆகவே, "சிங்கள மக்களைப் பொருத்த வரை, பொதுவாக இதைத் தங்களுடைய பொருளாதார நெருக்கடியாகவே பார்க்கின்றார்கள். உண்மையில் இன நெருக்கடிக்கான தீர்வொன்று வருமாக இருந்தால் மாத்திரமே இந்தப் பொருளாரதார நெருக்கடியைத் தீர்க்க முடியும். பொதுவாக ஊழல், மோசடி, கமிஷன், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றாலேயே இந்த நிலைமை உருவாகியது எனக் கருதி, மக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்," என்றும் தெரிவித்தார் அ.நிக்சன். ஓரளவிற்கு மக்களுடைய மாற்றம் நியாயமானதாகத் தெரிவதாகக் கூறும் நிக்சன், "ஆகவே, இன நெருக்கடிக்கான தீர்வைக் கொண்டு வந்துதான், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைக் காண முடியும். ஆனால், ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இதைக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், இன நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, எதிர் வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடி மற்றும் இன நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள்தான் காணப்படுகின்றன" என்று கூறினார். தேசிய மக்கள் சக்திக்கான தமிழர்களின் வாக்களிப்பு பட மூலாதாரம்,NIKSHAN படக்குறிப்பு, அரசியல் விமர்சகர் அ.நிக்சன் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி பல மடங்காக அதிகரித்து, நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கையும் தமிழ்க் கட்சிகளை விடவும் அதிகரித்துள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளைத் தாண்டி, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செறிந்து வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை காலம் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்தப் பிரதேசங்களில் இம்முறை மூன்று தமிழர்கள் தெரிவாகியுள்ளமை வரலாற்று சாதனை போல அவதானிக்கப்படுகின்றது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களித்ததை எவ்வாறு அவதானிக்கின்றீர்கள் என பிபிசி தமிழ், அரசியல் ஆய்வாளர் அ.நிக்சனிடம் வினவியது. ''தமிழ் மக்களைப் பொருத்த வரை அதை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுடைய பலவீனம். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், சரியான அரசியல் தலைமைத்துவம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருந்தும், 2010, 2015, 2020 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருந்தனர். ஆசனங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து இருந்தாலும், மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், இந்த முறை கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள பெரும்பான்மைக் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் தமிழர் பிரதேசங்களில் சரியான தமிழர்களை நிறுத்தியிருக்கின்றார்கள். இவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடி மற்றும் தமது வாழ்க்கைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற நோக்கம் இருந்திருக்கின்றது" என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,NPP MEDIA ''தேசிய மக்கள் சக்தியை பொருத்த வரையில் வடக்கு, கிழக்கில் வழங்கக் கூடிய வாக்கு என்பது அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை ஸ்தாபித்தல் போன்றவற்றை நிறுத்துவோம் என்பதை உள்ளக ரீதியான உறுதிமொழியாக வழங்கியுள்ளதால் கிடைத்தது. அநேகமாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் வாக்களித்துள்ளார்கள் என்று சொன்னால், ஏதோவொரு வகையில் நிம்மதியான தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு தான் வாக்களித்துள்ளார்கள்" என அவர் குறிப்பிடுகின்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையில் இந்தியாவால் இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையாக 13வது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது. இந்த 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு, 8 மாகாணங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வடகிழக்கு மாகாணங்களாக இணைந்த வகையில், இந்திய - இலங்கை உடன்படிக்கை அமைந்திருந்தது. எனினும், வடகிழக்கு மாகாணங்களைப் பிரித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என அப்போது மக்கள் விடுதலை முன்னணியாகச் செயற்பட்ட தற்போதைய தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து, வடகிழக்கு மாகாணத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகப் பிரித்திருந்தது. அத்துடன், விடுதலைப் புலிகளின் போராட்டம், மாகாண சபை முறைமை உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்துரைத்தார். ''அது நிச்சயமாக மிகத் தவறானதுதான். ஏனென்றால், மக்களைப் பொருத்த வரையில் தமிழர்களின் இன நெருக்கடித் தீர்வில் தேசிய மக்கள் சக்திக்கு அந்த நிலைப்பாடு இல்லை என்று தெரிந்தாலும், ஏதோவொரு வகையில் வாக்களித்துள்ளார்கள். வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களும், தமிழ் மக்களிடையே பிரபல்யமானவர்கள்." பட மூலாதாரம்,NPP MEDIA ஆகவே "அவர்களை நம்பி வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை என்பது இதனூடாக வெளிப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம், தமிழ் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் புரிதலை வழங்கவில்லை. அரசியல் விழிப்புணர்வு செய்யப்படவில்லை. இதுதான் பிரதானமான காரணம்," என்கிறார் நிக்சன். அடுத்ததாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற பிளவுகளைக் குறிப்பிடுகிறார் அவர். "தனிப்பட்ட மோதல்கள் போன்ற அனைத்து விதமான விரக்தியிலும் இருந்துதான் மக்கள் இப்படியொரு நிலைமைக்குப் போயிருக்கிறார்கள். என்னை பொருத்த வரையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பலவீனத்தால் ஏற்பட்ட ஒரு விளைவுதான் இது. ஆனால், இது தற்காலிகமானது. இந்தத் தொடர்ச்சியான வாக்களிப்பு அடுத்து வரும் தேர்தல்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது. சுயநிர்ணய உரிமை, போர் குற்ற விசாரணை என்று கோரிக் கொண்டிருந்த சமூகமொன்று, போருக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள கட்சிக்கு, வடகிழக்கு மாகாணத்தை பிரிப்பதற்குப் பிரதான காரணமாக இருந்த கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அந்த மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையும், மாற்றம் வரும் என்று நம்பிக்கையும்தான்," என்று கூறுகிறார். அதோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்குத் தற்போது பாரிய பொறுப்பு உள்ளதாகவும் குறைந்தது தமிழ் மக்களுக்குத் தற்போது வழங்கிய வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 'அநுரவின் பூகோள அரசியலை இந்தியாவே தீர்மானிக்கும்' பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையை மையமாகக் கொண்ட பூகோள அரசியல் விவகாரம் என்பது, இலங்கையை ஒவ்வொரு நொடியும் பாரிய சவால்களை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையில் தமது பூகோள அரசியலை நேரடியாக, பலமாகச் செய்து வருகின்றன. இந்த மூன்று நாடுகளும் இலங்கையை மையப்படுத்தி, தமது அரசியலை போட்டித்தன்மையுடன் முன்னெடுத்து வருவதை நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே அவதானித்திருந்தோம். இந்த நிலையில், ஆட்சி அனுபவமில்லாத தேசிய மக்கள் சக்தி இந்த பூகோள அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்து தெரிவித்தார். ''பூவிசார் அரசியல் மாற்றத்தை எடுத்துக் கொண்டால், அமெரரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர், இந்தியாவிற்கு தற்போது ஒரு நெருக்கடி வந்திருக்கின்றது. தெற்காசியாவில் வல்லரசாக வளரக்கூடிய இந்தியா, இப்போது ரஷ்ய - சீனாவை மையப்படுத்திய பொருளாதார கூட்டமைப்பில் இருக்கின்றது. அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பாவை மையப்படுத்தி மேற்குலக நாடுகளுடன் இந்தியா ஒரு உறவைப் பேணி வருகின்றது. வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இரட்டை தன்மையைக் கொண்டிருந்த இந்தியா, டிரம்பின் வருகைக்குப் பின்னர் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒன்று பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இருக்க வேண்டும். அல்லது அமெரிக்கா சார்ந்த மேற்குலக ஐரோப்பிய நாடுகளுடன் பயணிக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது," என்று விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆகையால், இந்தியா எடுக்கின்ற இந்த முடிவோடுதான் இலங்கை பயணிக்க வேண்டிய தேவை இருக்கும் என்றார். அதோடு, இலங்கையைப் பொருத்த வரை இந்தியாவை கடந்து ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோன்று, இந்தியாவை கடந்து சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கவும் முடியாது என்றார் நிக்சன். ஆகவே இப்போது இருக்கக்கூடிய புவிசார் அரசியல் மாற்றம் தேசிய மக்கள் சக்திக்குப் பல சவால்களைக் கொண்டிருக்கின்றது. சர்வதேச சட்டங்கள், சர்வதேச அரசியலில் அனுபவமற்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு இதை எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பது கேள்வியாக இருக்கின்றது. "நிச்சயமாக டிரம்ப் வருகைக்குப் பின்னர் உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள், இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள், இந்த நெருக்கடிகளில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வர போகின்றது, எப்படி கையாளப் போகின்றது என்பதைப் பொருத்துதான் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும். நிச்சயமாக இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்திக்கு வரக்கூடிய சவால் என்பது முக்கியமானதாக இருக்கும்," என்று குறிப்பிடுகிறார் நிக்சன். நிச்சயமாக இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாத நிலைமையொன்று வந்திருப்பதாகக் கூறும் நிக்சன், அதோடு சீனாவுடனும் அனுசரித்துப் போக வேண்டும், அமெரிக்காவுடனும் இயைந்து செல்ல வேண்டும், இந்தியாவுடனும் செல்ல வேண்டும் என்ற தேவை இலங்கைக்கு இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், "இந்தியாவின் நிலைப்பாட்டை பொருத்துதான், இலங்கையின் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் இருக்கிறது. நிச்சயமாக அநுர குமார திஸாநாயக்கவிற்கு இது பாரியதொரு சவால்" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE இவற்றோடு, ஊழல், மோசடிகளை எவ்வாறு உடனடியாக இல்லாது செய்வது, உள்நாட்டிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றுகின்றபோது பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அவர் கூறுகின்றார். அத்துடன், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்று நாடுகளுக்கு இலங்கையில் கொடுக்கப் போகின்ற இடங்கள், அந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் கொடுக்கவுள்ள இடங்கள் போன்றவற்றில் தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. முக்கியமாக நட்டமடைகின்ற அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிடிவாதமான நிபந்தனை. இதை தேசிய மக்கள் சக்தி எதிர்க்கின்றது." அவ்வாறு எதிர்த்த தேசிய மக்கள் சக்தி இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு வழங்காது, அதைக் கொண்டு நடத்த முற்பட்டால், நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடு ஏற்படும் என்று கூறுகிறார் நிக்சன். "நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் ரணில் விக்ரமசிங்கவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்ற கதை வெளிவரும். அப்போதுதான் தேசிய மக்கள் சக்தியின் முகத்தை மக்கள் கண்டு கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும். ஆகவே, இதுவொரு தேசிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாக அமையும்" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9ql573pdx7o
  24. திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. தியேட்டருக்கு எந்த சேதமும் இல்லை. மேலப்பாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், "நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளது. தேசிய சுதந்திரத்துக்காக முழங்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆசாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய 'ஜெய் பஜ்ரங்பலி' என்ற கோஷம் இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய கோஷமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்டிபிஐ கட்சியினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்க சுவருக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/198935
  25. ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது; ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதில் வரப்போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது வரப்போகின்ற முதலாவது வருடம்தான். தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும் இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டுக்கு இத்தனை வருடங்களாக தமிழ் மக்கள் ஆணை வழங்கி வந்திருக்கின்ற நிலையில் அந்த ஆணையை இனவாதம் என்று சொல்லி கொச்சைப்படுத்துகின்ற வகையில் ரில்வின் சில்வா பேசியுள்ளார். உண்மையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்ற நிலையில் அந்தத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இனவாத நிலைப்பாடாக கொச்சைப்படுத்தி இன்றைக்குத் தேர்தல் முறையில் உள்ள ஒரு சில முறைகளால் எண்ணிக்கையில் ஒரு சில ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற என்று சொல்கின்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஆபத்து என்பதை எமது மக்கள் உணர வேண்டும். அந்த வகையில்தான் தேர்தல் காலத்திலும் நாம் எமது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தோம். அதாவது இந்த அரசு தேர்தல் முடிந்த கையோடு 2015 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னோம். அந்த ஒற்றையாட்சி ஏக்கிய ராஜ்ஜியவை நிராகரித்து எங்களுடைய மக்களின் ஆணையைக் காட்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சொல்லியிருந்தோம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வினை எட்டுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம். அந்தச் செயற்பாடுகளோடு ஒத்துப்போவதற்குத் தயாராக இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் செயற்பட நாங்கள் தயாராகவும் இருக்கின்றோம். விசேடமாக ஒற்றையாட்சி அரசமைப்பின் ஏக்கிய ராஜ்ஜிய என்ற இடைக்கால அறிக்கையை வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகம் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமைதியான முறையிலும் ஐனநாயக முறையிலும் வெளிப்படுத்துவதற்கும் அதனைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் வெளிப்படுத்தி எங்களது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த நிலைப்பாட்டோடு ஒன்றிணைந்து போவதற்கு இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் இணைந்து இந்த விடயங்களைக் கையாளுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த விடயத்தில் எம்மோடு இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு அறைகூவலும் விடுக்கின்றோம். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயத்தை தமிழ் மக்கள் நிராகரிப்பார்களாக இருந்தால் அதுவே அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதோடு தேசிய மக்கள் சக்தி அரசு ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி பாதையைக் கைவிட்டு சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தக்கூடிய புதிய மேடையொன்றை உருவாக்கும். அந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏனென்றால், இன்றைக்கு இலங்கை அரசு சர்வதேச மட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை. ஆனால், இலங்கையில் இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாத வரை அந்த உதவிகள் கிடைக்காது. ஆகவே அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் அந்த அழுத்தங்களை சரியான வகையில் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியத்தோடு தாங்கள் பயணிக்கின்றதாக சொல்லக்கூடிய ஏனையவர்களோடும் சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றார். இதேவேளை, நல்லாட்சி காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டுவரப் போவதாகவும் இந்த நேரத்தில் தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாள்வார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில், "அவர் கூறுகின்றதை போன்று இந்த அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற விடயமல்ல. இன்றைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். ஆகையினால் அந்த வரைபுக்கு எதிராக அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்பு முரணானது என்ற பலமான ஒரு செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபை தயாரிப்பதற்கும் அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப்போகின்றோம். அதற்குத் தமிழ் அரசுக் கட்சியாக இருக்கலாம் ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம். அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/198961

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.