Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தது குறித்து வருத்தமடையவில்லை – ரணில் 22 AUG, 2024 | 08:48 PM 2023 இல் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை குறித்து தான் கவலைப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் என்கின்ற போதிலும், நான் அதற்காக கவலைப்படவில்லை, ஏனென்றால் அந்த நேரம் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பதற்கான உரிமை வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191738
  2. புதினின் சேதியை யுக்ரேன் அதிபரிடம் சேர்க்கிறாரா? மோதி பயணம் பற்றி புதிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் மோதி- யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்விட்லானா டோரோஷ் பதவி, பிபிசி யுக்ரேன் 22 ஆகஸ்ட் 2024, 13:51 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசியக் கொடி நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அங்கு தரையிறங்குகிறார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புதினை மோதி சந்தித்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இது நிகழ்கிறது. அங்கு அவர் தனது நாடு எப்போதும் போருக்கு அமைதியான தீர்வை வலியுறுத்துவதாக கூறினார். மேலும் அமைதிக்கான பேச்சுவார்த்தை முயற்சியில் உதவத் தயாராக இருப்பதாகவும் மோதி குறிப்பிட்டார். யுக்ரேனில் போர் தொடங்கிய பத்து ஆண்டுகளில், இந்தியத் தலைவர்கள் யாரும் ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை. ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, மோதி புதினை "நண்பர்" என்று குறிப்பிட்டார். ரஷ்யா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் போது என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு செய்தியை கடத்த அவர் தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மோதியின் இந்த யுக்ரேன் பயணத்தில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது? யுக்ரேன் போரும் மோதியும் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, மோதி புதினை நண்பர் என்று குறிப்பிட்டார் மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். 2019 க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம் இது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் சர்வதேச பயணம் இது. யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். ஜூலை 8 அன்று கீவ்வில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் யுக்ரேனில் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது. இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின் போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார். ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. "இது மிகப் பெரிய ஏமாற்றம். அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடி. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் (மோதி) அத்தகைய நாளில் மாஸ்கோவில் உலகின் கொடிய குற்றவாளியை ஆரத் தழுவுகிறார்" என்று ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதே நேரத்தில், ரஷ்யாவில் நரேந்திர மோதி ராணுவ மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். "துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் போர்க்களத்தில் மோதல்களைத் தீர்க்க முடியாது என்பதை உங்கள் நண்பராக நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தில் கவனம் செலுத்துகிறோம்" என்று மோதி புதினிடம் கூறினார். "போர், மோதல், பயங்கரவாத தாக்குதல் என எதுவாக இருந்தாலும், மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் உயிர்கள் பலியாகும் போது, குறிப்பாக அப்பாவி குழந்தைகள் இறக்கும் போது அந்த வலியை உணர்வார்கள். அது உங்கள் இதயத்தில் ரத்தம் கசியும் உணர்வை கொடுக்கும், அந்த வலி தாங்க முடியாதது" என்றும் மோதி கூறினார். பேச்சுவார்த்தையால் ஏற்படும் முன்னேற்றத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், ராணுவ மோதலுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண எந்த வடிவத்திலும் ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் மோதி கூறினார். இருப்பினும், 2014 இல் மோதி இந்தியாவில் பதவியேற்றதிலிருந்து, ரஷ்யா தொடர்பான விஷயங்களில் இந்தியா நடுநிலையை கடைபிடித்தது. யுக்ரேனின் டான்பாஸில் போர் தொடங்கியபோதும், கிரிமியா இணைக்கப்பட்டபோதிலும் இந்தியா நடுநிலையைக் கடைப்பிடித்தது. ரஷ்யாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை. ரஷ்யாவை சார்ந்திருக்கும் இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் முழு அளவிலான போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, ரஷ்யா இந்தியாவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான எண்ணெயை குறைந்த விலையில் விற்கத் தொடங்கியது. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. "இந்தியா தனது சொந்த நலன்களில் அதிக கவனம் செலுத்துகிறது. நாட்டிற்கு பயனளிக்கும் இடங்களில் ஒத்துழைக்கும் என்ற தர்க்கத்துடன் இந்தியா செயல்படுகிறது" என்று யுக்ரேனிய ப்ரிஸம் மையத்தின் நிபுணர் ஓல்கா வோரோஜ்பைட் பிபிசி யுக்ரேன் சேவையிடம் கூறினார். "அதனால்தான் அவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதை அறமற்ற செயலாகப் பார்க்கவில்லை. அதிக சதவீத ஏழை மக்களை கொண்ட ஒரு நாட்டிற்கு ரஷ்யாவிடம் இந்திய ரூபாய் மதிப்பில் எண்ணெய் வாங்குவது நன்மை பயக்கும்" என்று அவர் விளக்கினார். அதே சமயம் உலகின் மிகப் பெரிய படைகளைக் கொண்ட இந்தியா, ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது. யுக்ரேனுக்கு எதிரான போருக்காக ரஷ்யா பாரிய ராணுவச் செலவினங்களைச் செய்த போதிலும், அது இந்தியாவின் முக்கிய ஆயுத விநியோகஸ்தராக உள்ளது. இந்தியா கருத்தில் கொள்ளும் மற்றொரு முக்கியமான விஷயம் சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள். சீனாவுடன் நெருக்கமான உறவுகளை நோக்கி ரஷ்யா குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்னைகளை கொண்டுள்ளது. எனவே ரஷ்யா-சீனா ஒத்துழைப்பை இந்தியா கவனிக்காமல் இருக்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனுக்கான பேச்சுவார்த்தைகள் இத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? ரஷ்யப் பயணத்திற்கு பிறகு மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்வது, ரஷ்யா சென்றபோது அவர் மீது எழுந்த விமர்சனங்களை மாற்றும் நோக்கம் கொண்டது என்று நிபுணர்கள் ஊகிக்கின்றனர். சமீபத்தில் வாஷிங்டனில் நடைபெற்ற `நேட்டோ’ உச்சி மாநாட்டில் பல நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கடுமையாகக் கண்டித்தன. "மாஸ்கோவில் நடந்த மோதி - புதின் சந்திப்பு குறித்து இந்தியாவிற்கு வெளியே மட்டுமல்ல, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது மோதி யுக்ரேன் செல்வது இந்த விமர்சனங்கள் உந்துதலாக இருந்திருக்கலாம்" என்கிறார் ஓல்கா வோரோஜ்பைட். மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து உலகளாவிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ப்ளூம்பெர்க் செய்தி தனது தகவல்களை மேற்கோள்காட்டி,'போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தர் பங்கு வகிக்க இந்திய தலைமை நிராகரித்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளது. 'இருப்பினும், ரஷ்யா மற்றும் யுக்ரேன் அதிபர்களுக்கு இடையே செய்திகளை கடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது' என்று ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது இதுபோன்ற விஷயங்கள் தற்போதைய மோதியின் பயணத்தின் பகுதியாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ''யுக்ரேனின் தேசியக் கொடி தினமான ஆகஸ்ட் 23 அன்று மோதியின் வருகை, யுக்ரேனின் இறையாண்மையை இந்தியா ஆதரிக்கிறது என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இதன் மூலம் புதினுக்கு ஒரு முக்கிய சமிக்ஞையை இந்தியா அனுப்புகிறது” என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான விட்டலி போர்ட்னிகோவ் நம்புகிறார். "இது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். அதே சமயம் புதினுக்கு ஒரு வகையான அரசியல் பழிவாங்கும் சம்பவமாகவும் இருக்கும்" என்று போர்ட்னிகோவ் கூறுகிறார் "மோதி ரஷ்யா சென்றது அவருக்கு விமர்சனத்தை தேடி தந்தது. இப்போது, யுக்ரேனின் ஆயுதப் படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு புதின் முயற்சிக்கும் தருணத்தில், இந்தியப் பிரதமர் மோதி யுக்ரேனின் தலைமையைச் சந்திக்கிறார்." ''இந்த சுற்றுப்பயணம் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளை நோக்கிய இந்தியாவின் போக்கை உறுதிப்படுத்தும்'' என்று போர்ட்னிகோவ் கூறுகிறார் யுக்ரேன் அதிபரின் அலுவலகம் ஜெலென்ஸ்கி மற்றும் நரேந்திர மோதி இடையே நிகழவுள்ளப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நோக்கம் குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும் எந்த துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்று இன்னும் தெரியவில்லை. ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின் போது, இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் பற்றி விவாதித்தனர். தாக்குதலில் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை புனரமைக்கவும், யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஓல்கா வோரோஜ்பைட்டின் கூற்றுப்படி, ''பிரதமர் மோதி போர் விஷயத்தில் தனது நடுநிலை நிலைப்பாட்டை மாற்றுவது சாத்தியமில்லை, எனவே இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து எதிர்பார்க்கக்கூடியது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.'' என்கிறார் " ஐரோப்பாவில் நடக்கும் பல்வேறு மோதல்கள் தொடர்பாக வரலாற்று ரீதியாக இந்தியா எப்போதும் நடுநிலையுடன் இருக்க முயற்சிக்கிறது. எனவே, யுக்ரேன் விஷயத்திலும் பெரும்பாலும், இதுதான் நடக்கும்" என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/clyw7ygqk7ro
  3. வடக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு 22 AUG, 2024 | 05:26 PM கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, Skavita Humanitarian Assistance and Relief (SHARP)இன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய மற்றும் Delvon Assistance for Social Harmony (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருடன் இணைந்து இன்று (22) கைச்சாத்திட்டார். இலங்கையின் வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் 1,007,194 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா. 300 மில்லியன்) வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு பிரதான நன்கொடையாளராக உள்ளதுடன், மொத்த உதவித் தொகை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. SHARP மற்றும் DASHஇன் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 6,304 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியானது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் முன்னணி நன்கொடையாளராக ஜப்பான் அரசாங்கம் தனது பங்களிப்பை ஆற்றி வருவதாகவும், கண்ணிவெடி பாதிப்பு இல்லாத இலங்கையை அடைவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் MIZUKOSHI உறுதியாக வலியுறுத்தினார். இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து SHARPஇன் பணிப்பாளர் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய கருத்து தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இன்று வரை SHARP மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக ஜப்பானிய தூதரகத்துக்கு SHARP மிகவும் நன்றியுள்ளதாகவும் ஆழ்ந்த பாராட்டுதலுடனும் உள்ளது. 2024 ஜூலை நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, SHARP மொத்தம் 2,846,650m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்து மற்றும் 11,889 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 169 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 4,666 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 57,773க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் 3,318க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளன. SHARP நிறுவனத்தால் துப்புரவு செய்யப்பட்ட மொத்த நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜப்பானின் உதவியாகும். கண்ணியத்துடன், வினைத்திறனான வகையில் ஜப்பானிய தூதரகத்தின் முழு ஆதரவுடன் தமது செயற்பாடுகளை SHARP முன்னெடுக்கும். வழங்கப்படும் நிதிக்கு முழுமையாக பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தி, எமது அனுசரணையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவோம். SHARPஇன் அங்கத்தவர்களின் மனமார்ந்த நன்றியை ஜப்பானிய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். முக்கியமாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் ஜப்பானிய தூதரகத்தின் செயற்பாடுகளுக்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை காண்பிக்கின்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார். இந்த நன்கொடையை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆனந்த சந்திரசிறி குறிப்பிடுகையில், 7 தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பான் இலங்கைக்கு அரிய உதவிகளை வழங்கிவந்துள்ளது. 2002ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜப்பான் பிரதான ஆதரவாளராக இருந்து வந்துள்ளதுடன், ஜப்பானின் நிதி உதவியுடன் எமது நிறுவனமான DASH 2010ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஜப்பானுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். 2024 ஆகஸ்ட் நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, DASH மொத்தம் 7,546,16m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றிவிடுவித்து மற்றும் 55,907 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 113 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 14,073 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 77,004க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 110,842 பேர் பயனடைந்துள்ளனர். 1983ஆம் ஆண்டு முதல் இலங்கையின் 26 ஆண்டுகால நீண்டகால உள்நாட்டு மோதலின் விளைவாக அதிகம் அறியப்படாத ஒரு சோகம் வடக்கு பகுதிகளில் காணப்படும் கண்ணிவெடி மற்றும் போரின் வெடிக்கும் எச்சங்கள் (Explosive Remnants of War - ERW) ஆகும். அதன் பெரும்பகுதி தற்போது அகற்றப்பட்டிருந்தாலும், இலங்கையை கண்ணிவெடி மற்றும் ERW இல்லாத நாடாக மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஜப்பான் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட DASHஇன் கருத்திட்டங்கள், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான பாதுகாப்புக்கும் நிலையான பொருளாதாரத்தை மீள ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வலுவாக பங்களிப்பு செய்துள்ளது’’ என்றார். https://www.virakesari.lk/article/191725
  4. கெஹலிய உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு 22 AUG, 2024 | 04:27 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191723
  5. இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இதுவிடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/308248
  6. மன்னாரில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்; வைத்தியர் பணியிடை நீக்கம் Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 04:14 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான பெண் அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளார். குறித்த வைத்தியருக்கான பணியிடை நீக்கம் தொடர்பாக கடிதம் புதன்கிழமை(21) தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளமையினால் அவருக்கான பணியிடை நீக்கம் தொடர்பான கடிதம் அவரிடம் சமர்ப்பிக்கவில்லை. எனினும், குறித்த கடிதம் அவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி பதிவுத் தபால் மூலம் குறித்த வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/191722
  7. 'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், அதற்குத் தன்னையே நொந்துகொள்ளும் அவர், இதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறுகிறார். குழந்தையின் பொருட்டு தன்னைத் தானே குறை சொல்லி, ‘குற்ற உணர்வு’க்குள் மூழ்குவதற்கு அவரிடம் பல காரணங்கள் உள்ளன. குழந்தையைச் சரியான நேரத்திற்குள் குளிக்க வைக்க முடியாதது முதல் குழந்தைக்கு வரும் காய்ச்சல் வரை அவரது குற்ற உணர்வுக்கான பட்டியல் நீள்கிறது. சுயாதீன (ஃப்ரீலான்ஸ்) கிராஃபிக்ஸ் டிசைனரான கனிமொழி, தனது குழந்தையைக் கவனித்துக்கொண்டே வீடு மற்றும் அலுவல்ரீதியான பணிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்சமயம், அவர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார். “என் வேலையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏதேனும் ஒரு பணியை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் குழந்தை அழும்போது உடனே பால் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். குழந்தை அழுத களைப்பிலேயே உறங்கிவிடும். இதனால் குழந்தையின் வயிறு ஒட்டிப் போயிருக்கும். அப்போது, என்னால்தானே குழந்தைக்கு இந்த நிலை என்று எனக்குத் தோன்றும்” என்கிறார் கனிமொழி. கனிமொழி காதல் திருமணம் செய்துகொண்டதால், இரு வீட்டாரின் துணையுமின்றி குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒருசமயம், நள்ளிரவு 12 மணியையும் கடந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில், அசதியில் அவர் தூங்கிவிட்டதால், குழந்தைக்கு ஒரு மணிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதனால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. “கொஞ்சம் விழித்திருந்து நான் மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்னால்தானே குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் முழுமையாக நான்தான் குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்பதால், இதற்கு என் கனவரும் என்னைக் கடிந்துகொண்டார்” எனக் கூறும் கனிமொழி, ஏழு ஆண்டு காத்திருப்பிற்குப் பின் பிறந்த குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுத்துகிறோமோ என்ற “குற்ற உணர்வில்” சிக்கி உழல்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய சமூகத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருக்கிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தைக்கு ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை, சரிவர குளிப்பாட்டாத காரணத்தால் குழந்தைக்கு மூக்கு, தலை போன்றவற்றின் வடிவம் சரியாக இல்லை என்று பெரியவர்கள் கூறும் ‘குறைகளும்’ அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னால் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாததால், குழந்தை என்னிடம் நெருக்கமாக இல்லையோ என்றுகூட எனக்குத் தோன்றும். என் கணவரை கண்டால் குழந்தை ‘குஷி’யாகிவிடும். என்னிடம் ஒட்டாது.” 'வேலையை விட்டுவிடலாமா?' இந்தக் குற்ற உணர்வு கனிமொழிக்கு மட்டுமல்ல; குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்ற வருத்தத்தில் வேலையைக்கூட விட்டுவிடலாமா என்ற எண்ணம் தனக்கு அடிக்கடி தோன்றுவதாகக் கூறுகிறார், சென்னையில் ரெப்கோ வங்கியில் பணிபுரியும் கார்த்திகா. வங்கிப் பணி என்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் தனக்கு இல்லை எனக் கூறும் அவரது குழந்தைக்கு நான்கரை வயதாகிறது. “இப்போதுகூட எனது மகனுக்கு ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. இந்த நேரத்தில் அவனுடன் இல்லாதபோது, ‘நாம் எதற்காக வேலை செய்யவேண்டும்’, ‘வேலையை விட்டுவிடலாமா’ என்றுகூடத் தோன்றும். ஆனால், பொருளாதாரச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” என்கிறார் கார்த்திகா. “நான் இருந்தால்தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன் என்று என் மகன் அடம்பிடிப்பான். அதனாலேயே அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அவனுக்குப் பள்ளி விடுமுறை என்றால், எனக்கும் விடுமுறை என நினைத்து ஏமாந்து போவான்.” இது தனிப்பட்ட கார்த்திகா, கனிமொழியின் கதைகள் மட்டுமல்ல. தம் குழந்தைகளுக்கு நேரும் எல்லா பிரச்னைகளுக்கும் தாங்கள்தான் காரணம், வேலைக்குச் செல்வதுதான் காரணம் என நினைக்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். பணிச் சந்தையிலிருந்து வெளியேறும் பெண்கள் தாய்மார்களுக்கு ஏற்படும் இத்தகைய ‘குற்ற உணர்வு’ உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்திய சமூகத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடத்திலேயே உள்ளது. இதனால், குழந்தை வளர்ப்பு - வேலை என்ற இரண்டு விஷயங்களுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். இது இந்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிலும் (Periodic Labour Force Survey) பிரதிபலித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீட்டிலிருந்து வேலை அல்லது அலுவலகத்திற்குச் சென்று வேலை என்றாலும் இத்தகைய குற்ற உணர்வு இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தை வளர்ப்பு பொறுப்பு காரணமாகப் பணிச் சந்தையில் பங்குகொள்ள முடியவில்லை என 43.4% இந்திய பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக, பணிச் சந்தையில் இருந்து வெளியேறியதாகச் சுமார் 90% பெண்கள் தெரிவித்துள்ளனர். திரைப் பிரபலங்கள்கூட தாங்கள் இத்தகைய குற்ற உணர்வில் சிக்கியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். நடிகைகள் காஜல் அகர்வால், சோனம் கபூர், நேஹா தூபியா எனப் பலரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். பட மூலாதாரம்,KAJALAGGARWALOFFICIAL/INSTAGRAM படக்குறிப்பு, குழந்தை பிறந்த ஆரம்பக் காலத்தில் தன்னை 'குற்ற உணர்வு' ஆட்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். இக்கட்டுரைக்காக சில இளம் தாய்மார்களிடம் நான் பேசியபோது, சில பதின்பருவ பிள்ளைகளின் அம்மாக்களும் இத்தகைய ‘குற்ற உணர்வில்’ சிக்கியிருப்பதை அறிய முடிந்தது. குழந்தைகளின் வயது வித்தியாசமின்றி இத்தகைய குற்ற உணர்வு பெரும்பாலான தாய்மார்களைத் தாக்கும் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து உணர முடிந்தது. முன்னணி ஆங்கில ஊடகமொன்றில் பணிபுரியும் 40 வயதைத் தாண்டிய பத்திரிகையாளர் ஒருவர், “எனது மகனுக்கு 18 வயதாகிறது. அவன் பள்ளியில் படிக்கும்போது பொதுத் தேர்வில் அவன் கல்வி முன்னேற்றத்திற்காக நேரம் செலவழிக்க முடியாதது, என்னை இன்னும் குற்ற உணர்வில் ஆழ்த்துகிறது. இளம் தாய்மார்களோ அல்லது வளர்ந்த பிள்ளைகளின் அம்மாக்களோ இந்தக் குற்ற உணர்வு எப்போதும் மறையாது” என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளின் உடல்நிலை, கல்வி, நடத்தை எனப் பலவற்றுக்கும் அம்மாக்கள் மீதே பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அம்மாக்களும் தங்கள் மீதே குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிகிறது. குற்ற உணர்வின் தீவிரம் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ரம்யா - வெங்கடேஷ் என்ற தம்பதியின் ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராதவிதமாக நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலானது. அதற்கு அடுத்த மாதமே, அக்குழந்தையின் தாய் ரம்யா தற்கொலை செய்துகொண்டார். குழந்தை விழுந்ததற்கு அதன் “தாயைக் குற்றம் சாட்டி வெறுப்புக் கருத்துகள் பரப்பப்பட்டதே அவருடைய தற்கொலைக்குக் காரணம்” எனக் கூறப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய அந்த நேரத்தில் பிபிசி தமிழ் முயன்றது. அப்போது, ரம்யா மகப்பேறுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழித் தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. ‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல் இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,” என்று ரம்யாவின் தந்தையே கூறியிருந்தார். ஏன் பெண்களுக்கு மட்டும்? குழந்தைகளுடைய நலனின்பால் தாய்க்கு மட்டும் அதீத குற்ற உணர்வு ஏற்படுவது ஏன்? “குழந்தைகளை வளர்ப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தத்துவமோ அல்லது யோசனையோ (thumb rule) இல்லை. குறிப்பாக, இந்திய சமூகத்தில் காலம் காலமாக ஒரு பெண் தன் குழந்தையுடன் அவரது அம்மா வீட்டில்தான் முதல் முக்கியமான சில மாதங்களைக் கழிக்கிறார். தன் அம்மா எப்படி வளர்க்கிறார் என்பதைப் பார்த்துதான் குழந்தையை வளர்க்கிறார். தாய்ப்பால் ஊட்டுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களுக்காக குழந்தை வளர்ப்பின் பெரும்பாலான பொறுப்புகள் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன” என்கிறார், மனநல ஆலோசகர் சில்வினா மேரி. அதிலும், முந்தைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பில் தந்தை பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாததை ஒரு ‘கலாசாரமாகவே’ பின்பற்றி வருகின்றனர், அதனால் பெரும் அழுத்தம் இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இளம்தாய்மார்கள் தங்களுக்கெனச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்" என்கிறார் மனநல ஆலோசகர் மேரி. “குழந்தை வளர்ப்பு என்பது தாய்-தந்தை இருவரின் பொறுப்பும்தான். ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு தாயைக் குறை சொல்வது கூடாது. பரிச்சார்த்த முயற்சியில்தான் குழந்தை வளர்ப்பு என்பது சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பிக்கும்” என்கிறார் மேரி. குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பதைப் பொறுத்தவரை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருப்பதாக மேரி குறிப்பிடுகிறார். “குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, இந்தப் பெரும் பொறுப்புகள் நம்மை விட்டு விலகும் வரைகூட இந்தக் குற்ற உணர்வு சிலருக்கு நீடிக்கலாம்” என்கிறார் அவர். தங்கள் பிள்ளைகள் சொந்தமாக வாழ்வது அல்லது உயர்கல்வி பெறுவது என, வீட்டைவிட்டு வெளியேறும்போதுகூட ‘தனிமையின் உணர்வை’ அதிகமாக அம்மாக்கள் உணர்வார்கள் என்கிறார் மேரி. இதை மருத்துவ மொழியில் “எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ என்கின்றனர். என்ன செய்ய வேண்டும்? இத்தகைய குற்ற உணர்விலிருந்து வெளியே வருவதற்கான சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இளம் தாய்மார்கள் தங்களுக்காக 15-20 நிமிடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்தி, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நேரம் ஒதுக்கி சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரமாவது வெளியே சென்றுவர வேண்டும். எங்காவது அவர் வெளியே சென்றால், வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும். குழந்தை அழுதால் எல்லா நேரத்திலும் அம்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. குழந்தை அழுதால் அம்மாவை குறை சொல்லக்கூடாது, தான் சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை அழுவதாக அம்மாக்களும் நினைக்கக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் கற்றுக்கொள்கின்றனர் என்பதை உடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற குழந்தைகளின் குணநலன்களுடன் ஒப்பிட்டுத் தன்மீது குறை சுமத்திக் கொள்ளக்கூடாது. எப்போது மனநல ஆலோசகரை அணுக வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES “இதனால் மிகவும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்போது குடும்பத்தினரின் உதவியை முதலில் நாடுங்கள்" என்றும், அப்போது, "எல்லோருக்கும் இது சகஜம்தான்” என குடும்பத்தினர் புறம்தள்ளக் கூடாது என்றும் மேரி வலியுறுத்துகிறார். அடுத்தகட்டமாக இது சரியாகவில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே ஆலோசித்து வரும் மகளிரியல் மருத்துவர் அல்லது குழந்தைநல மருத்துவரிடம் பேசலாம். அவர்கள் "சில எதார்த்தமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அப்போதும் இதில் முன்னேற்றம் ஏற்படாமல், தூக்கம், பசி ஆகியவை பாதிக்கும்போது மனநல ஆலோசகரை நிச்சயம் அணுக வேண்டும்,” என்றார் மனநல ஆலோசகர் மேரி. முக்கியக் குறிப்பு மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன) மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820 தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000 https://www.bbc.com/tamil/articles/cpd93rlzmp7o
  8. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம் - வஜிர அபேவர்தன உறுதி 22 AUG, 2024 | 05:29 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தேர்தல் வாக்குறுதி அல்ல. மாறாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் உள்வாங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும். ரணில் விக்ரமசிங்க சொல்வதைச் செய்யும் தலைவர். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கியே ஆகுவோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுஎமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு வீழ்ச்சியடைந்த நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துச் சென்றது. என்றாலும் தற்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். அதனால் மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். தொழில் முயற்சியாளர்களை அதிகரித்து அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வாழ்க்கைச்செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவகையில் நாளாந்த சம்பளத்துக்குத் தொழில் செய்பவர்கள் தங்களின் நாட்சம்பளத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும். மேலும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளார். அதனால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/191724
  9. யூடியூப் செனல் ஆரம்பித்த ரொனால்டோ, 90 நிமிடங்களில் 1 மில்லியன் Subscriber-களை பெற்று சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது. தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார். UR christiano என்ற பெயரில் சேனல் தொடங்கிய அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றினார். இந்நிலையில் அவர் சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் அவரை ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன் மூலம் சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யுடியூபின் கோல்டன் பட்டனை அவர் பெற்றுள்ளார். அதன் பின்னர் 12 மணி நேரத்தில் அவர் சேனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. https://thinakkural.lk/article/308245
  10. இலங்கை இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் - நிலங்களை விடுவிக்கவேண்டும் - ஐநா Published By: RAJEEBAN 22 AUG, 2024 | 02:50 PM இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்;றுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல், வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்துதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரைம் விடுதல செய்தல், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதையும் குற்றச்செயல்களில் இருந்து நீக்கி, அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும். https://www.virakesari.lk/article/191712
  11. 22 AUG, 2024 | 03:15 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale ' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பல் 155.3 மீட்டர் நீளமுடையதாகும். லாரன் ஜான்சன் இதன் கட்டளை அதிகாரியாக செயற்படுகின்றார். விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/191711
  12. 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மல்லல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட உள்ளிட்ட ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308232
  13. நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் கொலைசெய்து புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஒருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட பெண் அக்ரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் கோணப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொலைசெய்து புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்படி நேற்று வலப்பனை நீதவான் சியபத் விக்கிரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அவரை கைது செய்ய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/308202
  14. இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது. . மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப் பட்டுள்ள நிலையில், இந்த பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308237
  15. Published By: VISHNU 22 AUG, 2024 | 02:59 AM தன்னையும் தனது குழுவில் உள்ளவர்களையும் வைன் ஸ்டோர்களையும், மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், சலுகைகளையும் வரப்பிரசாதனங்களையும் காட்டி விலைக்கு வாங்க முடியாது. பணத்துக்கும் பதவிகளுக்கும் எனது சுய கௌரவத்தை காட்டி கொடுத்து ஏலத்தில் செல்வதும் இல்லை. தான் இந்த நாட்டை விற்கவோ, ஏலத்தில் விடவோ, இந்த மக்களை காட்டிக் கொடுக்கவோ ஒருபோதும் முற்படுவதில்லை. எனவே என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் எட்டாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்டுநாயக்க நகரில் புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் பல ஹோட்டல்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் இதுவரையும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. இதற்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள் தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றியுள்ளார். அதற்குப் பின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடித்தளத்தில் பயணித்து இந்த தாக்குதலின் உண்மைத்தன்மை வெளிப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றிக்குப் பின்னர் இந்தத் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிக் கொணர்வதற்காக உள்நாட்டு வெளிநாட்டு அங்கத்தவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதாக அண்மையில் கார்டினல் அவர்களை சந்தித்தபோது தெரிவித்ததாக இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அதனை புனரமைப்பு செய்வதற்கு தாம் உள்ளிட்ட குழுவினரே செயற்பட்டுள்ளோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வாழ்வாதார வழிகளை அமைத்துக் கொடுத்தாலும், எம்மை விட்டுப் போன உயிர்களை மீளப்பெற முடியாது. இந்த தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அதனைத் தடுத்தார்கள். எதனைச் செய்தாலும் அந்தப் பெருமதியான உயிர்களை மீட்டெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாம் திருடர்களையும் தீவிரவாதிகளையும் பாதுகாப்பதில்லை. ரணசிங்க பிரேமதாசவின் நாமத்தைக் கொண்டு இதன் அந்தரங்கத்தை மூலக்கூறு வரை ஆராய்ந்து, உண்மையை வெளிப்படுத்தி, இதனோடு தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார். தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமக்கான வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்போம். அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவோம். தொழில் அமைச்சின் கீழ் இளைஞர் படையணியை உருவாக்கி அந்த மத்திய நிலையத்தோடு வேலை திட்டத்தை முன்னெடுத்து, அதனை செயல்படுத்துவோம். சிறந்த தொழில்நுட்ப அறிவையும், நல்ல ஞானத்தையும் வழங்கி சிறந்த பிரஜைகள் உள்ள சமூகத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களையும் தொழில் முனைவோர்களையும் கட்டியெழுப்புவதற்கு புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வீழ்ச்சி அடைந்துள்ள இந்த வர்த்தகங்களை கட்டியெழுப்ப மூலதனங்கள் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஊழல் மோசடிகள் இல்லாது செய்து, திருட்டையும் ஒழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார. 52 நாள் காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தின் போதும் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அது ஜனநாயக விரோத செயற்பாடு என்பதால் அதனைச் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் திருடர்களை பாதுகாத்து நாட்டை வங்குரோத்து அடையச் செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை தன்மையை மறைத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி இருந்திருக்கும். அதனை இட்டு இந்த சந்தர்ப்பத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். மக்களின் ஆசீர்வாதம் இன்றி நான் அதிகாரத்தை பொறுப்பேற்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நாட்டை வங்கரோத்து அடையச் செய்து, திருடிய பணத்தையும் வளங்களையும் மீள பெற்று அவற்றை நாட்டின் நன்மைக்காக பயன்படுத்துவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/191673
  16. அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய 21 AUG, 2024 | 06:59 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியோ வெறும் ஜனரஞ்சக வார்த்தையோ அல்ல. இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற கலால் வரி கட்டளைச் சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80.000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான நடவடிக்கைகள். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மேற்கொண்டார். நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது. முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம். நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கான சக்தியை பெற்றுக் கொடுப்பது அவசியம். அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர். அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரையை அதில் உள்ளடக்கியுள்ளது. அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் திறைசேரி 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கி அதனை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. திறைசேரியின் செயலாளரும் அமர்ந்திருந்த குழுவிலேயே இந்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பு அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளே தவிர ஜனரஞ்சக வார்த்தைகள் அல்ல என்றார். https://www.virakesari.lk/article/191659
  17. 21 AUG, 2024 | 06:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்திட்டத்திற்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அதேவேளை, ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். பாராளுமன்றத்தில் வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் பெரும்பாலாக காணப்படுகின்றனர். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களில் நூற்றுக்கு 45 வீதத்துக்கும் அதிகமானோர் இரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகி யுள்ளனர். அதனால் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்திட்டத்திற்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். அதேபோன்று வயது முதிர்ந்தவர்களில் நூற்றுக்கு 24 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுநீரக பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றார். https://www.virakesari.lk/article/191653
  18. Published By: DIGITAL DESK 7 21 AUG, 2024 | 06:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான் ) உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 1680 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன. மதுவரி திணைக்களம் பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் அறிக்கையை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச வருவாயை ஈட்டிக் கொள்வதற்கு பல யோசனைகைள முன்வைத்துள்ளோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகிய மூன்று அரச நிறுவனங்கள் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 1680.4 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளன. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரி விலக்களித்ததால் 978 பில்லியன் ரூபா இழக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் 900 வங்கி கணக்குகளை முடக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் பேருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (டின் இலக்கம்) வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரைத்தோம். இதற்கமைய 5 மில்லியன் பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியாளர்களிடமிருந்து வரி அறவிடல் குறித்து சிக்கல் காணப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை குழுவின் ஊடாக வழங்கியிருந்தோம். இதற்கமைய பிரதான தங்க இறக்குமதியாளர்களில் 17 பேரில் 6 பேர் வரி செலுத்தியுள்ளனர். அத்துடன் தண்டப்பணம் அறவிடல் கூடாக மாத்திரம் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபாவை மேலதிகமாக திரட்டியுள்ளது. மதுவரி திணைக்களம் அறவிட வேண்டிய 7.9 பில்லியன் ரூபா வரி இன்றும் நிலுவையில் உள்ளது. வரி செலுத்தாத பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மதுவரி திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினோம். அனுமதி பத்திரத்தை இடை நிறுத்துவது குறித்து நிதியமைச்சு உரிய ஆலோசனைகளை வழங்காத காரணத்தால் உரிய தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்று மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரிகளை அறவிட்டால் மக்கள் மீது வரி சுமைகளை திணிக்க வேண்டியதில்லை என்றார். https://www.virakesari.lk/article/191614
  19. மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நடிகைகள் - ஹேமா அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மலையாள சினிமாவில் "தாங்கள் நினைத்ததைவிட இந்தப் பிரச்னை மோசமாக உள்ளதாக" கூறுகிறார் பீனா பால். கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம், மலையாள திரையுலகில் “பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியில் பெண்கள் பயன்படுத்தப்படுவதை (காஸ்டிங் கவுச்)” உறுதி செய்துள்ளது மற்றும் அதன் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. “சமரசம்” மற்றும் “ஒத்துப்போகுதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. “தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம். திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன. நீதிபதி கே.ஹேமா தலைமையிலான ஆணையம் இது தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கையை நான்கரை ஆண்டுகள் கழித்து கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 290 பக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதால், அதுதொடர்பான 54 பக்கங்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை. அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக்கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,” இவ்விவகாரத்தின் அலட்சியப் போக்கை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம். அந்த அறிக்கையில், “அச்சம்பவம் பயங்கரமானதாக இருந்தது. படப்பிடிப்பின்போது அப்பெண்ணுக்கு என்ன செய்தார்கள் என்பது, அதனால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் அவருடைய முகத்தில் பிரதிபலித்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சினிமா துறைக்கு வரும் பெண்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்கள், அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் இணங்குவார்கள் என்ற பொதுவான அனுமானம் இருக்கிறது. ஆனால், கலை மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தாலேயே பெண்கள் நடிக்க வருகின்றனர் என்பதை சினிமா துறையில் உள்ள ஆண்களால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. ஆனால், பெண்கள் புகழுக்காகவும் பணத்துக்காகவுமே இத்துறைக்கு வருகிறார்கள், எனவே பட வாய்ப்புக்காக அவர்கள் எந்தவொரு ஆணுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது. புகழ்பெற்ற நடிகை ஒருவர் சில ஆண்களால் தன்னுடைய காரில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பான வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) அமைப்பினர் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மூத்த நடிகை டி.சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி. வல்சலாகுமாரி ஆகியோர் இடம்பெற்றனர். 'தி கோட்' விஜய் போல படங்களில் நடிகர்களை டீ-ஏஜிங் மூலம் இளமையாக காட்டுவது எப்படி?20 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடிகைகளுக்கு அற்ப ஊதியம் வழங்கப்படுவதும் மலையாள திரையுலகில் நடந்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வுமென் இன் சினிமா கலெக்டிவ், சினிமா துறையில் ஆதரவு மற்றும் கொள்கை மாற்றம் வாயிலாகப் பெண்களுக்கான பாலின சமத்துவத்தை நோக்கிப் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பில் மலையாள சினிமாவை சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தங்களுடைய கவலைகள் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். “இந்தத் துறையில் அமைப்பு ரீதியான பிரச்னை இருப்பதாக, நாங்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல் அத்தகைய பிரச்னைகளுள் ஒன்றுதான். இந்தப் பிரச்னைகளை எழுப்பும்போதெல்லாம் எங்களை பிரச்னைகளை உருவாக்குபவர்கள் என்றனர்." "ஆனால், நாங்கள் நினைத்ததைவிட இந்தப் பிரச்னை மோசமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது” என விருது பெற்ற மலையாள படத் தொகுப்பாளரும் WCC உறுப்பினருமான பீனா பால் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். ‘மாஃபியா'வாக செயல்படும் குழு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நான்கரை ஆண்டுகள் கழித்து கேரள அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பன்மொழி கொண்ட இந்திய திரைத்துறையில், இதுவே பெண்களின் பணிச்சூழல் குறித்து வெளிவரும் முதல் அறிக்கை. “இதன்முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின்படி”, பாலியல் துன்புறுத்தல் இத்துறையில் அதிர்ச்சிகரமான விதத்தில் பரவலாக உள்ளது. மேலும், “அவை கண்காணிக்கப்படவோ கட்டுப்படுத்தப்படவோ இல்லை” என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. “ஆண்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிக்கப் பலரும் வீடியோ, ஆடியோ பதிவுகள், ஸ்க்ரீன்ஷாட்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.” மலையாள திரையுலகில் வலுவான கூட்டம் ஒன்று “மாஃபியா” போலச் செயல்பட்டு வருவதாகவும், முக்கியமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் மீது அக்குழு தடை விதிக்கும் என்றும் அந்த ஆணையத்திடம் “முக்கிய நடிகர்” ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், “அப்படி தடை செய்வது சட்ட விரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது.” வாய்வழி மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அந்த ஆணையம், “சில ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது இயக்குநர்கள் பெரும் புகழ் மற்றும் பணத்தைச் சம்பாதித்து, மலையாள திரையுலகைத் தற்போது தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்." "இத்துறையில் உள்ள பல ஆண்கள் தங்கள் ஆணையம் முன்பு, பிரபலமான நடிகர்கள் உட்படத் தனிப்பட்ட நபர்கள் பலர் சினிமாவில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக அழுத்தமாகத் தெரிவித்தனர். அவர்களின் பெயர்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாட்டிலுள்ள பல மொழி திரைத்துறையில் மலையாள திரையுலகம் சிறிய திரைத்துறைகளுள் ஒன்றாக உள்ளது. ஆனால், இழிவான பெயரெடுத்த துறையாகவும் இது உள்ளது. பெண்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பெரிய மாஃபியா இத்துறையில் உள்ளது,” என சினிமா வரலாற்று எழுத்தாளர் ஓ.கே.ஜானி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருவனந்தபுரத்தின் சாலையோரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் மலையாள திரைப்பட போஸ்டர்கள் நடிகைகளுக்கு அற்ப ஊதியம் வழங்கப்படுவது மற்றும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகாத காரணத்தால், அதை யாரும் கேள்வி கேட்க முடியாதது அல்லது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாததை ஆணையம் மேற்கொண்ட பல வழக்குகளின் ஆய்வுகள் மூலம் ஜானியின் கருத்து ஆதாரபூர்வமாகியுள்ளது. சில இயக்குநர்கள், நடிகைகளிடம் நிர்வாண காட்சிகள் அல்லது உடலை வெளிப்படுத்தி நடிக்கும் காட்சிகள் குறித்து முன்பே சொல்லாமல் அவர்களைப் புறக்கணித்ததாக அந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்கள் படங்களில் இருந்து வெளியேறிய பின்னர், மூன்று மாதங்கள் வரை நடித்திருந்தாலும் எந்த ஊதியமும் வழங்கப்படாமல் இருந்துள்ளது. படப்பிடிப்பின்போது ஹோட்டல்களில் தங்குவதும் பாதுகாப்பற்றது எனப் பெண்கள் தெரிவித்துள்ளனர். “(மதுபோதையில் உள்ள ஆண்கள்) கதவை பல நேரங்களில் வலுவாகத் தட்டுவார்கள். அப்போது அந்த கதவை உடைத்துவிட்டு, அவர்கள் அறைக்குள் வந்துவிடுவார்கள் என்பது போலத் தோன்றும்,” என நடிகைகள் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. அடிமைகளாகப் பயன்படுத்தப்படும் துணை நடிகர்கள் ஹேமா அறிக்கைப்படி, துணை நடிகர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்ககளின் நிலைமை இன்னும் மோசமானது. “துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.” படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்கு கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுவதாக ஹேமா அறிக்கை கூறுகிறது. சில விதிவிலக்குகள் இருந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக் கலைஞர்களின் சங்கங்கள் பணிச்சூழல் மற்றும் ஊதியம் தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்பாததால், அவற்றைப் புறக்கணிக்க நினைக்கின்றனர். எனவே, சில உறுப்பினர்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளனர்,” என்று பீனா பால் தெரிவித்தார். திரைத்துறையை நிர்வகிப்பதற்கென சட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் ஆகியவற்றை அமைக்க வேண்டுமென அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அரசாங்கத்தைச் சாடும் எதிர்க்கட்சிகள் இந்த அறிக்கை வெளியான உடனேயே, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை, இந்த அறிக்கையை வெளியிடுவதைத் தாமதித்ததாகவும் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதலமைச்சர் பினராயி விஜயன் முதலமைச்சர் பினராயி விஜயன், அந்த ஆணையத்தின் சில பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். எந்தப் பெண்ணும் காவல் துறையில் புகார் அளித்தால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார். மலையாளம் திரைப்பட நடிகைர்கள் சங்கமான ‘அம்மா’, இந்த அறிக்கையில் உள்ளவை குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. பதில் தெரிவிப்பதற்கு முன்பாக அந்த அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டுமென அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். கேரளாவில் நிகழ்ந்தது எப்படி? திரைப்படங்களுக்காக விமர்சகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெறும் கேரளாவில் இது எப்படி நடந்தது என பிபிசி கேட்டது. புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் மலையாள சினிமா துறை குறித்து விரிவாகச் செய்தி சேகரித்து வருபவருமான ஆனா எம்.எம். வெட்டிகாட் இதுகுறித்து விளக்கினார். “தீவிரமான முற்போக்கு தன்மை மற்றும் தீவிரமான ஆணாதிக்கம் இரண்டுமே உள்ள கேரள மாநிலத்தின் நுண் உலகமாக மலையாள சினிமா திகழ்கிறது. இது மலையாளம் சினிமாவிலும் பிரதிபலித்துள்ளது. ஆணாதிக்கத்தை ஆய்வு செய்யும் சிறந்த இந்திய திரைப்படங்கள் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதே மலையாள சினிமாவில் பிற்போக்கான படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படியான சூழலில், படைப்புத் துறையில் பெண் வெறுப்பாளர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பெண்களைச் சுரண்டுவது ஆச்சர்யம் அளிக்கவில்லை. அதேநேரம், இதே துறையில் சமத்துவத்திற்காகப் பெரியளவிலான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார். மாற்றம் நிகழுமா? ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபி பிபிசி இந்தியிடம் கூறுகையில், “சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், பாலினம் காரணமாக அவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அதைத் தீர்ப்பதற்கான சரியான நேரம் இது. அதற்கு திரைத்துறை ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார். “ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறானது” என்பதில் உறுதியாக இருக்கிறார் பீனா பால். “மனோபாவத்தில் முதலில் மாற்றம் வரவேண்டும், அது மெதுவாகத்தான் நிகழும். ஆனால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், மற்றவர்களை இந்தத் தொழிலில் நுழைய ஊக்குவிக்கவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம்’’ என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'ஹேமா ஆணையத்தின் அறிக்கை நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும்' என ஆனா எம்.எம். வெட்டிகாட் கூறுகிறார். பிபிசி ஹிந்தியிடம் ஆனா எம்.எம். வெட்டிகாட் கூறுகையில், “மலையாளத் திரையுலகில் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துபவர்கள், பெண்கள் உரிமை இயக்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கடுமையாக முயன்றனர். ஆனால் WCC நம்ப முடியாத எதிர்ப்பைக் காட்டியதோடு கணிசமான மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. அதனால்தான் ஹேமா ஆணையத்தின் அறிக்கை நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நம்புவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார். அவர் கூறுகையில், “சமூக மற்றும் நிறுவன முன்னேற்றம் ஒருபோதும் ஒரே இரவில் நடக்காது, அதற்கான பாதை இன்னும் நீண்டது. ஆனால் இத்துறையைச் சேர்ந்த சிலரின் பதில்களில் உள்ள தற்காப்புத்தன்மை மற்றும் இந்த வாரம் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட பிறரின் எதிர்வினைகள் அவர்கள் மாற்றத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்களின் அசௌகரியம் ஒரு நேர்மறையான அறிகுறி” என்றார். https://www.bbc.com/tamil/articles/c5y52j11gvzo
  20. Published By: VISHNU 22 AUG, 2024 | 02:29 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புதன்கிழமை (21) அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து குறுகிய காலத்தில் நாட்டை பல்வேறு துறைகளில் முன்னேற்றினார். 2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாட்டை கையளித்தோம். 2019 ஆம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்றார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்துக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க கேள்வி எழுந்த போது மக்களின் உயிரையே பாதுகாத்தோம். பொருளாதார பாதிப்பினை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் எமது அரசாங்கத்தை வீழ்த்தினார்கள். அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்யவில்லை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்தை கையளித்து நிலைமைகளை சீர் செய்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம். நாட்டின் தேசியத்துக்கும், இராணுவத்தினருக்கும் எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க முடியாது. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவும், குறுகிய நோக்கங்களுக்காக செயற்படவும் நாங்கள் தயாராகவில்லை என்பதால் தனித்து தீர்மானங்களை எடுத்துள்ளோம். சவால்களை கண்டு நாங்கள் அச்சமடையவில்லை. சவால்களை நான் விரும்புகிறேன். எவர் மீதும் சேறு பூசவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். தேசிய உற்பத்திகளை நிச்சயம் மேம்படுத்துவோம். விவசாயத்துறையில் இருந்து எமது தேசிய உற்பத்தி எழுச்சியை முன்னெடுப்போம். விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். கடன் பெற்று உணவு வழங்குவது சிறந்த பொருளாதார கொள்கையல்ல, விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம். இலங்கை ஒற்றையாட்சி நாடு. நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே வீரர்கள் போரிட்டார்கள். நாங்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லை கிராமங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்க போவதில்லை. இந்த பௌத்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை மற்றும் கௌரமளிக்க தயார். அதனை செய்வோம். அதேபோல் மாகாண சபைக்குள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம். தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன்,முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவோம். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம் என்றார். https://www.virakesari.lk/article/191667
  21. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள பணிப்பாளர் அமெல் கோஜ்லிகா தெரிவித்துள்ளார். இதுபற்றி மேயர் பரீஸ் ஹசன்பெகோவிச் கூறும்போது, இந்த சம்பவம் நடந்ததற்கான காரணம் பற்றி அறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதுபற்றி கூறுவதற்கோ அல்லது இதனை நியாயப்படுத்துவதற்கோ எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறியுள்ளார். அந்த பள்ளியிலுள்ள பணியாளர்கள் சிலர் கூறும்போது, ஒரு தூய்மை பணியாளராக உகாலிக், அவருடைய பணியில் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/191680
  22. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய் பட மூலாதாரம்,TVK HQ 22 ஆகஸ்ட் 2024, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று சென்னையி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உறுதி மொழி ஏற்ற கட்சியினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்." பட மூலாதாரம்,TVK HQ "மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்" என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். த.வெ.க. கட்சிக் கொடியின் முக்கிய அம்சங்கள் என்ன? கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன. நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ளது விஜயின் கட்சி. நடிகர் விஜய் என்ன பேசினார்? பட மூலாதாரம்,@ACTORVIJAY/X படக்குறிப்பு,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் (கோப்பு புகைப்படம்) கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒரு தேதியை, கட்சியின் மாநாட்டு தேதியை, விரைவில் அறிவிப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய். கூடிய விரைவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்க இருப்பதாகக் கூறினார். முறையான அனுமதியைப் பெற்று அந்த மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்த விஜய், இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை அடைந்ததாகவும் கூறினார். கட்சி மாநாடு எப்போது? பட மூலாதாரம்,TVK HQ "இன்று நம் அனைவருக்குமே ஒரு சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கி, அதன் தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றைய நாளில் இருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நம் முதல் மாநில மாநாடு," என்று தனது பேச்சைத் தொடங்கினார் நடிகர் விஜய். இன்று கொடியை அறிமுகம் செய்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்பும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்பும் இந்தக் கொடியை அறிமுகப்படுத்துவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் காலங்களில் ஒரு கட்சியாக நம்மைத் தயார் செய்துகொண்டு, தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்," என்று கூறினார். மேலும், "ஒரு புயலுக்கு பின் அமைதி, ஆர்பரிப்பு, ஆராவாரம் இருப்பதைப் போல் நம்முடைய கட்சிக் கொடிக்குப் பின்னும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதை நீங்கள் அனைவரும் காத்திருக்கும் அந்த நாளில், கட்சியின் கொள்கைகள், செயல் திட்டம் மட்டுமின்றி கொடிக்குப் பின்னால் இருக்கும் விளக்கத்தையும் கூறுகிறோம்," என்றும் தெரிவித்தார் நடிகர் விஜய். அதோடு, "நான் இதை வெறும் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறையினரின் வெற்றிக்கான கொடியாகத்தான் பார்க்கிறேன்," என்றும் விஜய் தெரிவித்தார். இதற்கு முன்பு நடைபெற்ற கட்சி விழாக்களில் உரையாடுவது போல் நீண்டநேரம் எடுத்துக் கொள்ளாமல் கட்சி மாநாடு குறித்த தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு அவர் வெளியேனார். தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார். ‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,@VIJAYFC/X அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில்,"விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது," என்று தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது? கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால் தலையைப் பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது. கடந்த 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது. முன்னதாக பிபிசியிடம் பேசிய மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம், நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது கூறினார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/ckg24x1e9rzo
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தை சல்மானும் அதில் ஒருவர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் ரக்மேன் பதவி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் 20 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 21 ஆகஸ்ட் 2024 ஜனவரி 2015, சௌதி அரேபியாவின் 90 வயதான மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், மன்னராகப் போகிறார். சல்மானுக்கு மிகவும் நெருக்கமான மகன், முகமது பின் சல்மான், அதிகாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இளவரசர் முகமது பின் சல்மான் 'MBS’ என்ற அவரது முதலெழுத்துக்களால் அனைவராலும் அறியப்பட்டவர். 29 வயதான அவர் ராஜ்யத்திற்கான பெரிய திட்டங்களை வைத்திருந்தார். சௌதி வரலாற்றில் மிகப்பெரிய திட்டங்கள் அவை. ஆனால் தனது சொந்த அரச குடும்பத்தில் உள்ள சதிகாரர்களால் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று அவர் அஞ்சினார். எனவே அந்த மாதத்தில் ஒரு நாள் நள்ளிரவு, அவர் விசுவாசத்தை வென்றெடுக்கும் உறுதியுடன் இருந்த ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரியை அரண்மனைக்கு அழைத்தார். அதிகாரி சாத் அல்-ஜாப்ரியை, அவரது மொபைல் போனை வெளியே ஒரு மேஜையில் வைக்கச் சொன்னார். எம்பிஎஸும் அதையே செய்தார். இரண்டு பேரும் இப்போது தனியாக இருந்தனர். இளவரசர் அரண்மனை உளவாளிகளுக்கு மிகவும் பயந்ததால், சுவரில் இருந்து சாக்கெட்டை இழுத்து, இருந்த ஒரே லேண்ட்லைன் தொலைப்பேசியை துண்டித்தார். ஜாப்ரியின் கூற்றுப்படி, எம்பிஎஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தனது ராஜ்யத்தை எவ்வாறு எழுப்புவது என்பது பற்றி பேசினார், அது உலக அரங்கில் அதன் சரியான இடத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். உலகின் மிகவும் லாபகரமான அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவின் (Aramco) பங்குகளை விற்பதன் மூலம், அவர் சௌதி பொருளாதாரம் எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைப்பார். டாக்ஸி நிறுவனமான உபெர் உள்ளிட்ட சிலிக்கான் வேலி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் அவர் பில்லியன்களை முதலீடு செய்வார். பின்னர், சௌதி பெண்களுக்கு வேலையில் சேர சுதந்திரம் அளிப்பதன் மூலம், அவர் ஆறு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவார். இவைதான் இளவரசர் சொன்ன திட்டங்கள். ஆச்சரியமடைந்த ஜாப்ரி இளவரசரிடம் அவரின் லட்சியத்தின் அளவீடு பற்றிக் கேட்டார். "அலெக்சாண்டர் தி கிரேட் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று ஒரு எளிமையான பதிலை சொன்னார் எம்பிஎஸ். அவர் அதோடு உரையாடலை முடித்தார். அரை மணி நேரம் நடக்க இருந்த அந்த நள்ளிரவு சந்திப்பு மூன்று மணி நேரம் நடந்தது. ஜாப்ரி அறையை விட்டு வெளியேறினார். ஜாப்ரி நீண்ட நேரமாக காணாமல் போனதைப் பற்றி கவலைப்பட்ட அரசாங்க சகாக்களிடம் இருந்து அவரது மொபைலுக்கு பல மிஸ்டு கால்கள் வந்திருந்தன. கடந்த ஒரு வருடமாக, எங்கள் ஆவணப்பட குழு சௌதி நண்பர்கள் மற்றும் எம்பிஎஸ்- இன் எதிர்ப்பாளர்கள், மூத்த மேற்கத்திய உளவாளிகள், தூதர்கள் ஆகியோரிடம் பேசி வருகிறது. பிபிசியின் காணொளிகளிலும் இந்தக் கட்டுரையிலும் கூறப்பட்ட கூற்றுகளுக்கு விளக்கமளிக்க சௌதி அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேச முன்வரவில்லை. சாத் அல்-ஜாப்ரி சௌதி பாதுகாப்பு அமைப்பில் மிகவும் உயர்மட்டத் தலைவர். அவர் சிஐஏ மற்றும் எம்.ஐ-6 தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். சௌதி அரசாங்கம் ஜாப்ரியை மதிப்பிழந்த முன்னாள் அதிகாரி என்று அழைத்தாலும், பட்டத்து இளவரசர் சௌதி அரேபியாவை எப்படி ஆட்சி செய்கிறார் என்பதைப் பற்றி பேசத் துணிந்தார். மேலும் அவர் அளித்த அரிய பேட்டியில் பகிரப்பட்ட விவரங்கள் வியக்க வைக்கிறது. இளவரசரை தனிப்பட்ட முறையில் அறிந்த பலரை அணுகியதன் மூலம், எம்பிஎஸ் மோசமான செயல்பாடுகளில் ஈடுபட காரணம் என்ன என்பது ஓரளவுக்கு புரிந்தது. 2018-ஆம் ஆண்டு சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை மற்றும் ஏமனில் பேரழிவு தரும் போரைத் தொடங்குதல் உட்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் என்ன? அவரது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக பலவீனமாக இருப்பதால், 38 வயதான எம்பிஎஸ் இப்போது இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் இருக்கும் தேசத்துக்கு பொறுப்பேற்றுள்ளார். அன்று நள்ளிரவு சாத் அல்-ஜாப்ரிக்கு விவரித்த பல அற்புதமான திட்டங்களை அவர் செயல்படுத்தத் தொடங்கினார் - அதே நேரத்தில் பேச்சு சுதந்திரத்தை தடுத்தல், மரண தண்டனையை பரவலாகப் பயன்படுத்துதல் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களை சிறையில் அடைத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஒரு மோசமான துவக்கம் சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். எம்பிஎஸ்-இன் தந்தை சல்மானும் அதில் ஒருவர். அரச கிரீடம் பாரம்பரியமாக இந்த மகன்களுக்கு இடையே வழங்கப்பட்டது. அவர்களில் இருவர் 2011 மற்றும் 2012 இல் திடீரென இறந்தபோதுதான் சல்மான் வாரிசு வரிசையில் உயர்த்தப்பட்டார். சௌதியின் அடுத்த மன்னர் யார் என்பதை யூகிக்க, மேற்கத்திய உளவு முகமைகள் பல ஆய்வுகளில் ஈடுபடுவதை தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்த கட்டத்தில், எம்பிஎஸ் மிகவும் இளமையாக இருந்தார். அடுத்த மன்னருக்கான போட்டியில் அவர் இருந்தாரா என்பது கூட தெரியவில்லை. 2014 வரை எம்.ஐ6-இன் தலைவராக இருந்த சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், "அவர் ஒப்பீட்டளவில் தெளிவற்ற நிலையில் வளர்ந்தார். அவர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கில் வளர்க்கப்படவில்லை." ஆனால் எம்பிஎஸ் அரண்மனையில்தான் வளர்ந்தார். அங்கு தவறான நடத்தைகள் மிக குறைவு, அப்படி ஏதேனும் தவறு நடந்தால் சில மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகளை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கும் அவரது மோசமான போக்கை அந்த நிகழ்வுகள் விளக்க உதவும். எம்பிஎஸ் முதன்முதலில் ரியாத்தில் தனது பதின்ம வயதின் பிற்பகுதியில் மோசமான ஒரு செயலின் காரணமாக பிரபலமடைந்தார், அப்போது அவர் "அபு ரசாசா" அல்லது "புல்லட்டின் தந்தை" என்று செல்லப் பெயரில் அழைக்கப்பட்டார். சொத்து தகராறில் அவருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு ஒரு புல்லட்டை அனுப்பியதாக வெளியான தகவலால் அவரை அந்த பெயர்களில் அழைத்தனர். அவர் இரக்கமற்ற தன்மையைக் கொண்டிருந்தார் என்று சர் ஜான் சாவர்ஸ் விவரிக்கிறார். "அவர் தவறாக நடத்தப்படுவதை விரும்பவில்லை. இருப்பினும், வேறு எந்த சௌதி தலைவராலும் செய்ய முடியாத சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பதையும் இது குறிக்கிறது” "மிகவும் வரவேற்கத்தக்க மாற்றங்களில் ஒன்று, இஸ்லாமிய ஜிஹாதிசத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு மசூதிகள் மற்றும் மத பள்ளிகளுக்கு சௌதி நிதியுதவியைக் குறைத்தது. இது மேற்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு நன்மையாக கருதப்பட்டது,” என்று அவர் விளக்கினார். எம்பிஎஸ்ஸின் தாயார் ஃபஹ்தா ஒரு பெடோயின் பழங்குடிப் பெண். எம்பிஎஸ் தந்தையின் நான்கு மனைவிகளில் அவருக்கு பிடித்தமானவர். வாஸ்குலர் டிமென்ஷியாவால் மன்னர் பல ஆண்டுகளாக அவதிப்பட்டதாக மேற்கத்திய இராஜதந்திரிகள் நம்புகிறார்கள். மன்னருக்கு தனக்கு உதவ தன் மகன் எம்பிஎஸ்-ஐ தான் தேர்ந்தெடுத்தார். பல இராஜதந்திரிகள் எம்பிஎஸ் மற்றும் அவரது தந்தையுடனான சந்திப்புகளை எங்களுக்காக நினைவு கூர்ந்தனர். இளவரசர் ஒரு ஐபாடில் குறிப்புகளை எழுதுவார், பின்னர் அவற்றை தனது தந்தையின் ஐபாடிற்கு அனுப்புவார். "தவிர்க்க முடியாமல் எம்பிஎஸ் தன் தந்தைக்காக தனது வரிகளைத் டைப் செய்கிறாரா என்று நான் ஆச்சரியப்பட்டேன்" என்று லார்ட் கிம் டாரோச் நினைவு கூர்ந்தார். இவர் டேவிட் கேமரூன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். இளவரசர் சல்மான் தனது தந்தை மன்னராக வர வேண்டும் என்பதற்காக ஆர்வமாக இருந்தார், 2014-இல், ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட விஷம் கலந்த மோதிரத்தைக் கொண்டு அப்போதைய மன்னர் அப்துல்லாவை அதாவது அவரது மாமாவைக் கொல்லுமாறு அவர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. "அவர் தற்பெருமை பேசுகிறாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டோம்" என்று ஜாப்ரி கூறுகிறார். முன்னாள் மூத்த பாதுகாப்பு அதிகாரியான ஜாப்ரி, எம்பிஎஸ் இந்த யோசனையைப் பற்றி பேசும் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு வீடியோவைதான் பார்த்ததாகக் கூறுகிறார். அதன் பின்னர் மன்னர் இயற்கையான காரணங்களால் இறந்தார், 2015 இல் அவரது சகோதரரான சல்மான் அரியணையை ஏற்றார். எம்பிஎஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனவே போர் அறிவிப்புக்கு நேரம் கடத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட விஷம் கலந்த மோதிரத்தைக் கொண்டு அப்போதைய மன்னர் அப்துல்லாவை அதாவது அவரது மாமாவைக் கொல்லுமாறு இளவரசர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஏமனில் போர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இளவரசர் எம்பிஎஸ் ஹூதி இயக்கத்திற்கு எதிரான போரில் வளைகுடா கூட்டணியை வழிநடத்தினார், இது மேற்கு ஏமனின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. சௌதி அரேபியாவின் பிராந்திய போட்டியாளரான இரானின் ஆதரவு பெற்ற அமைப்பாக ஹூதி யை கருதினார். இது ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டியது, மில்லியன் கணக்கானவர்கள் பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டனர். போர் தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் தூதராக இருந்த சர் ஜான் ஜென்கின்ஸ், "இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல" என்றார். இந்த ராணுவ நடவடிக்கை அதிகம் அறியப்படாத இந்த இளவரசரை சௌதியின் தேசிய நாயகனாக மாற்ற உதவியது. இருப்பினும், இந்த நடவடிக்கையில் பல பெரிய தவறுகள் இருப்பதாக அவரது நண்பர்கள் கூட நம்பினர். இப்படி நடப்பது இதுவே முதல்முறை. அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான நடத்தை முறை வெளிப்பட்டது. சௌதி அரசாங்கத்தின் பாரம்பரியமாக கருதப்படும் சிந்தித்து முடிவெடுக்கும் செயல் முறையை அவர் தவிர்த்தார். எதிர்பாராத விதமாக அல்லது தூண்டுதலின் பேரில் செயல்பட விரும்பினார். அமெரிக்காவிற்கு இணங்க மறுத்தார். ஜாப்ரி மேலும் அதிர்ச்சியான விஷயங்கள் பகிர்ந்தார். எம்பிஎஸ் தனது தந்தையின் அரசாணைக்காக அரசரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். ஏமன் போர் தொடங்கும் முன் வெள்ளை மாளிகையில் அது பற்றி விவாதித்ததாக ஜாப்ரி கூறுகிறார். அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், அமெரிக்கா விமான தாக்குதலை மட்டுமே ஆதரிக்கும் என்று எச்சரித்தார். இருப்பினும், ஏமனில் முன்னேறி நடவடிக்கை எடுப்பதில் எம்பிஎஸ் மிகவும் உறுதியாக இருந்ததால், அவர் அமெரிக்கர்களைப் புறக்கணித்தார் என்று ஜாப்ரி கூறுகிறார். "போரில் தலையீடுகளை அனுமதிக்க அரச ஆணை இருந்ததால் நாங்கள் ஆச்சரியப்பட்டோம்" என்று ஜாப்ரி கூறுகிறார். "அந்த அரசாணைக்கு அவர் தனது அப்பாவின் கையெழுத்தை போலியாகப் போட்டார். அந்த சமயத்தில் மன்னரின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை மோசமடைந்து கொண்டிருந்தது.''என்கிறார் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் குறிப்பிடும் அவரது ஆதாரம் "நம்பகமானது,உண்மையானது" என்கிறார். அவர் தலைமை அதிகாரியாக இருந்த உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரம் சொன்ன தகவல் என்று ஜாப்ரி கூறுகிறார். ரியாத்தில் உள்ள சிஐஏ நிலையத் தலைவர் தன்னிடம் எம்பிஎஸ் அமெரிக்கர்களைப் புறக்கணித்ததற்காக அவர் எவ்வளவு கோபமாக இருந்தார் என்று கூறிய நிகழ்வை ஜாப்ரி நினைவு கூர்ந்தார், மேலும் ஏமன் மீதான படையெடுப்பு ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்றும் கூறினார். முன்னாள் எம்ஐ6 தலைவர் சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், ''எம்பிஎஸ் இந்த ஆவணங்களை போலியாக உருவாக்கினாரா என்பது தனக்குத் தெரியாது. ஏமனில் ராணுவ ரீதியாக தலையிட எம்பிஎஸ் தனித்து எடுத்த முடிவு இது என்பது தெளிவாகிறது. இது அவரது தந்தையின் முடிவு அல்ல, இருப்பினும் அவரது தந்தை பெயரும் இதில் இழுக்கப்படுகிறது.''என்கிறார் எம்பிஎஸ் தன்னை ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய விதிகளைத் தவிர வேறு யாருடைய விதிகளையும் ஏற்க மறுப்பவராக இருந்ததை நாம் கண்டறிந்தோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எம்.பி.எஸ் 2017 ஆம் ஆண்டில் சல்வேட்டர் முண்டி ஓவியத்தை வாங்க $450 மில்லியன் செலவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன சொந்த விதிகளை உருவாக்கும் போக்கு 2017-ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான ஓவியத்தை எம்பிஎஸ் வாங்கினார். அது அவரை பற்றிய பல விஷயங்களை நன்கு புரிய வைத்தது. அவர் நினைக்கும் விதம், வாய்ப்புகளைப் பெறுவதற்கான அவரது தயார் நிலை மற்றும் அவர் ஆளும் மத மரபுவழி கலாசாரத்தை மீறுவதில் அவரது அச்சமின்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதிக்கச் செயல்கள் மூலம் மேற்கத்திய நாடுகளை விஞ்சுவதில் அவரின் உறுதி ஆகியவை புலப்பட்டன. எம்.பி.எஸ் 2017 ஆம் ஆண்டில் சல்வேட்டர் முண்டி ஓவியத்தை வாங்க $450 மில்லியன் செலவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. இது இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த கலைப்படைப்பாகும். லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை வானத்திற்கும் பூமிக்கும் எஜமானராகவும், உலகின் மீட்பராகவும் சித்தரிக்கிறது. ஏலத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இது காணப்படவில்லை. இளவரசரின் நண்பரும், பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியருமான பெர்னார்ட் ஹெய்கல், இளவரசரின் படகு அல்லது அரண்மனையில் அது ஓவியம் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவினாலும், அந்த ஓவியம் உண்மையில் ஜெனீவாவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எம்பிஎஸ் அதை சௌதி அருங்காட்சியகத்தில் வைக்க விரும்புவதாகவும் கூறுகிறார். சௌதி தலைநகரில் அருங்காட்சியகம் இன்னும் கட்டப்படவில்லை. "நான் ரியாத்தில் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை கட்ட விரும்புகிறேன்," என்று எம்பிஎஸ் கூறியதாக ஹைகல் மேற்கோள் காட்டுகிறார். இதேபோல், விளையாட்டுப் பிரிவிலும் அவரது நோக்கங்கள் மிகவும் லட்சியம் கொண்ட மற்றும் தற்போதைய நிலையை சீர்குலைக்க பயப்படாத ஒருவராக பிரதிபலிக்கின்றன. விளையாட்டில் சௌதி அரேபியா நம்பமுடியாத அளவில் செலவு செய்கிறது . இது 2034 இல் ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்துவதற்கான ஏலத்தில் உள்ளது. மேலும் டென்னிஸ் மற்றும் கோல்ஃப் போட்டிகளை நடத்துவதில் பல மில்லியன் டாலர் முதலீடுகளை செய்துள்ளது ஆனால், மேற்குலகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தலைவர் என்று சொல்வதை விட, தன்னையும் சௌதி அரேபியாவையும் பெரியதாக மாற்ற வேண்டும் என்ற பெயரில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவரைச் சந்தித்த எம்ஐ6 இன் முன்னாள் தலைவரான சர் ஜான் சாவர்ஸ் கூறுகையில், "எம்பிஎஸ் ஒரு தலைவராக தனது சொந்த சக்தியைக் கட்டியெழுப்புவதில் ஆர்வம் காட்டுகிறார். அதை நிரூபிக்கக் கூடிய ஒரே வழி, தனது நாட்டின் சக்தியைக் கட்டியெழுப்புவதுதான். அதுதான் அவரை இயக்குகிறது." 40 ஆண்டுகளாக சௌதி அரேபிய அதிகாரியாக இருந்த ஜாப்ரியின் வாழ்க்கை எம்பிஎஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் முடிந்தது. முன்னாள் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயீப்பின் தலைமை அதிகாரியான அவர், தனக்கு ஆபத்து இருப்பதாக வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் எம்பிஎஸ் ஆட்சியை பிடித்ததால் நாட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், ஜாப்ரி, எம்பிஎஸ் தனக்குத் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மீண்டும் தன்னை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறுகிறார். "அது ஒரு தூண்டில். நான் சிக்கவில்லை” என்று ஜாப்ரி கூறுகிறார், அவர் திரும்பி வந்திருந்தால் அவர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பார், சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் அல்லது கொல்லப்பட்டிருப்பார். அது போலவே, அவரது பதின்வயது பிள்ளைகளான ஓமர் மற்றும் சாரா, பணமோசடி குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். "என்னை கொல்ல அவர் திட்டமிட்டார்," என்று ஜாப்ரி கூறுகிறார். "நான் இறந்துவிட்டதைப் பார்க்கும் வரை அவர் ஓய்வெடுக்க மாட்டார், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை." என்கிறார். ஜாப்ரியை கனடாவில் இருந்து நாடு கடத்த சௌதி அதிகாரிகள் இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை. அவர் உள்துறை அமைச்சகத்தில் இருந்த காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் செய்ததற்காக தேடப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவருக்கு மேஜர்-ஜெனரல் பதவி வழங்கப்பட்டது மற்றும் அல்-கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க உதவியதற்காக சிஐஏ மற்றும் எம்.ஐ-6 ஆகியவற்றால் பாராட்டப்பட்டார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கஷோகியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கஷோகியின் கொலை இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் 2018 இல் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் எம்பிஎஸ் தலையீடு இருந்தது மறுக்க முடியாத ஒரு நிகழ்வு. கொலையில் ஈடுபட்ட 15 பேர் கொண்ட குழு, ராஜதந்திர கடவுச்சீட்டில் பயணித்தனர். அதில் எம்பிஎஸ்- இன் சொந்த மெய்க்காப்பாளர்கள் பலரும் இருந்தனர். கஷோகியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடல் ரம்பம் மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பேராசிரியர் ஹெய்கல் கொலை நடந்த சிறிது நேரத்திலேயே எம்பிஎஸ் உடன் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டார். "இது எப்படி நடந்தது?" என்று நான் கேட்டேன்," என்று ஹெய்கல் நினைவு கூர்ந்தார். "அவர் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். இதற்கான எதிர்வினை ஆழமாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை.'' என்கிறார் டென்னிஸ் ரோஸ் சிறிது காலத்திற்குப் பிறகு எம்பிஎஸ் சந்தித்தார். "அவர் அதைச் செய்யவில்லை என்றும் அது ஒரு மிகப் பெரிய தவறு என்றும் கூறினார்" என்று ரோஸ் கூறுகிறார். "நான் நிச்சயமாக அவரை நம்ப விரும்பினேன், ஏனென்றால் அவர் அத்தகைய கொலையை அங்கீகரிக்க முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை." எம்பிஎஸ் கொலை சம்பவத்தில் சதி திட்டம் தீட்டவில்லை என்பதை எப்போதும் மறுத்துள்ளார், இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் அவர் "பொறுப்பை" ஏற்றுக்கொண்டார், ஏனெனில் குற்றம் அவரது கண்காணிப்பில் நடந்தது. பிப்ரவரி 2021 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கஷோகியின் கொலைக்கு உடந்தையாக அவர் இருந்ததாக உறுதிப்படுத்தியது. தனிப்பட்ட முறையில் எம்பிஎஸ்-ஐ தெரிந்தவர்களிடம் கேட்டேன், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டாரா என்று; அல்லது கஷோகி விவகாரத்தில் இருந்து தப்பியிருந்தாலும், அது உண்மையில் அவருக்கு தைரியத்தை அளித்ததா என்று கேட்டேன். "அவர் கடினமான வழியில் பாடங்களைக் கற்றுக் கொண்டார்," என்று பேராசிரியர் ஹெய்கல் கூறுகிறார். ''எம்பிஎஸ் தனக்கும் அவரது நாட்டிற்கும் எதிரான வழக்கை வஞ்சகமாகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார், ஆனால் கஷோகியை போன்ற ஒருவரின் கொலை மீண்டும் நடக்காது என்று கூறுகிறார்.''என்கிறார் ஹெய்கல் சர் ஜான் சாவர்ஸ் இந்த கொலை ஒரு திருப்புமுனை என்று எச்சரிக்கையுடன் ஒப்புக்கொள்கிறார். "அவர் சில பாடங்களைக் கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவரின் ஆளுமை அப்படியே உள்ளது." அவரது தந்தை மன்னர் சல்மானுக்கு தற்போது வயது 88. அவர் இறக்கும் போது எம்பிஎஸ் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சௌதி அரேபியாவை ஆட்சி செய்யலாம். இருப்பினும், சௌதி-இஸ்ரேல் உறவுகளை சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, படுகொலை செய்யப்படுவோம் என்று அஞ்சுவதாக அவர் சமீபத்தில் ஒப்புக்கொண்டார். "அவரைக் கொல்ல விரும்பும் பலர் இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்று பேராசிரியர் ஹெய்கல் கூறுகிறார். "அவருக்கும் அது தெரியும்." அதீத விழிப்புணர்வுதான் எம்பிஎஸ் போன்ற மனிதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இளவரசர் ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் சாத் அல்-ஜாப்ரி தனது அரண்மனையில் அவருடன் பேசுவதற்கு முன்பு சுவரில் இருந்து தொலைபேசி சாக்கெட்டை வெளியே எடுத்தபோது அதைக் கவனித்தார். எம்பிஎஸ் இன்னும் தனது நாட்டை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார், அவருடைய முன்னோர்கள் இப்படி செய்ய ஒருபோதும் துணிந்திருக்க மாட்டார்கள். எவ்வாறாயினும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவர் தொடர்ந்து தவறு செய்வதைத் தடுக்கத் துணியாத அளவுக்கு மோசமானவராக மாறுவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ளும் சர்வாதிகாரி அவர் அல்ல. https://www.bbc.com/tamil/articles/c5y5llezlplo
  24. 21 AUG, 2024 | 05:44 PM புத்தளத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எரந்த கமகே இன்று (21) தெரிவித்தார். அதன்படி, புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, புத்தளம், வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் வீடொன்றிற்கு பின்புறத்தில் உள்ள காணியொன்றில் மின்சாரம் தாக்கி 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த காணியின் உரிமையாளர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது காணியில் மின்சாரத்தை பொருத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த காணியின் உரிமையாளருக்கு எதிராக ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/191655

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.