Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் ரஷ்யாவை தோற்கடிக்க யுக்ரேனுக்கு உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஃப் - 16 போர் விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரேமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட எஃப் - 16 போர் விமானங்களை யுக்ரேன் பயன்படுத்த உள்ளது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 65 போர் விமானங்களை யுக்ரேன் பெறுகிறது. மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று யுக்ரேன் தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். சில எஃப்.16 போர் விமானங்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட சூழலில், ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் படையெடுப்பில் பெரிய மாற்றங்களை இது ஏற்படுத்தலாம் என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் எஃப் - 16 போர் விமானங்களை பெற தாமதம் ஏன்? கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, எஃப் - 16 போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை வைத்தார். ரஷ்யாவின் போர் விமானங்களை யுக்ரேனின் எல்லைக்குள் நுழைய விடாமல் கட்டுப்படுத்தவும், யுக்ரேன் படைகளுக்கு வான்வழி மேலாதிக்கத்தை வழங்கவும் இத்தகைய போர் விமானங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சில எஃப் 16 ரக போர் விமானங்களை பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து மற்றும் நார்வே என நான்கு ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இருப்பினும் யுக்ரேனுக்கு இத்தகைய நவீன, பலம் பொருந்திய போர் விமானங்களை வழங்குவது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்த போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த எஃப் - 16 ரக போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்கியிருக்கும் நான்கு நாடுகளும் தற்போது தங்களின் விமானப்படையில் அதிக திறன் வாய்ந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப் 35-ஐ பெற்றுள்ளன. முதல் தடவையாக 10 எஃப் - 16 ரக போர் விமானங்கள் ஜூலை மாத இறுதியில் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மொத்தமாக 65 போர் விமானங்களை யுக்ரேனுக்கு தருவதாக மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ளன. அவற்றில் சில இந்த வருட இறுதிக்குள்ளும், மீதமுள்ள விமானங்கள் 2025-ம் ஆண்டு இறுதிக்குள்ளும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது எஃப் 16 ரக விமானங்களின் பற்றாக்குறையால் அல்ல. போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாமல் இருந்ததே காரணம் என்று கூறுகிறார் பேராசிரியர் ஜஸ்டின் ப்ரோன்க். ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டியூட்டில் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் ராணுவ சிந்தனைக்குழுவில் இவர் பணியாற்றுகிறார். ஒரு விமானி இந்த போர் விமானத்தை இயக்க குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் பயிற்சி பெற வேண்டும். அந்த போர் விமானத்தில் உள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள பல வருடங்கள் கூட ஆகலாம் என்கிறார் ஜஸ்டின். "யுக்ரேனின் நூற்றுக்கணக்கான விமானிகளுக்கு மேற்கத்திய நாடுகள் இத்தகைய பயிற்சிகளை ஒரே நேரத்தில் வழங்கும் என்று அந்த நாடு எதிர்பார்த்தது. ஆனால் அவர்களிடம் அத்தகைய வசதிகள் இல்லை," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து, நார்வே என நான்கு நாடுகள் யுக்ரேனுக்கு எஃப் 16 ரக போர் விமானங்களை வழங்கியுள்ளன எஃப் - 16 ரக போர் விமானத்தை யுக்ரேன் எப்படி பயன்படுத்தும்? எஃப் - 16 ரக போர் விமானங்கள் 1978ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தன. ஏவுகணைகளை ஏவவும், எதிரி நாட்டு விமானங்களை தாக்கவும் இந்த போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. எதிரிகளின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி, தரையில் முன்னேறிச் செல்லும் படையினருக்கு இந்த போர் விமானங்கள் உதவுகின்றன. இருப்பினும், யுக்ரேன் தன்னுடைய பாதுகாப்புக்காக தான் இந்த போர் விமானங்களை பயன்படுத்தும் என்று தெரிவிக்கிறார் பிலிப்ஸ் ஓ பிரையான். இவர் ஸ்காட்லாந்தின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் போர் வியூக படிப்பு துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES விண்ணிலேயே ஏவுகணைகளை அழிக்கும் வகையிலும் பதில் தாக்குதல் நடத்தும் வகையிலும் எஃப் 16 போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. யுக்ரேனிய படைகள் மற்றும் பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த விமானங்களை யுக்ரேன் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார் அவர். இந்த விமானங்கள் ஏற்கனவே யுக்ரேனில் உள்ள, நிலத்தில் இருந்து வான்வெளியில் வரும் ஏவுகணைகளை தாக்கும் பாதுகாப்பு அமைப்புடன் சேர்த்து உபயோகிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்க இருக்கும் எஃப் 16 ரக போர் விமானங்கள் அதி நவீனமானவை என்று கூறுகிறார் ப்ரோன்க். "அமெரிக்காவில் உள்ள அதி நவீன போர் விமானங்கள் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் சிறப்பானவை இல்லையென்றாலும் கூட ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் வலிமை கொண்டவை இவை," என்றும் அவர் தெரிவித்தார். "எதிர் வரும் குளிர்காலத்தின் தீவிர தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இதர வெப்பமூட்டும் மையங்களை குறிவைத்து நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் பட்சத்தில் யுக்ரேனிய மக்கள் இந்த போர் விமானங்களை வரவேற்பார்கள்," என்றும் அவர் தெரிவித்தார். எஃப் 16 ரக விமானங்கள் விண்ணில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை. இவை ரஷ்யாவின் ராணுவ மையங்கள், ஆயுத விநியோக மையங்கள் போன்றவற்றை மிக தொலைவில் இருந்து தாக்க இயலும் என்றும் பேராசிரியர் ப்ரோன்க் கூறுகிறார். இருப்பினும்,"போர்க்களத்தில் யுக்ரேன் ராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் இந்த போர் விமானங்கள் பயன்படுத்த இயலாமல் போகலாம். ஏன் என்றால் ரஷ்யாவின் விமானப்படை மிகவும் வலிமையானது. யுக்ரேனியர்களால் அதனை நெருங்குவது கடினம்," என்றும் எச்சரிக்கிறார் அவர். யுக்ரேனிய துருப்புகள் மற்றும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் க்ளைட் (Glide) ரக வெடிகுண்டுகளை தடுப்பது எஃப் 16 ரக விமானங்களுக்கு சவாலான காரியம் என்று பேராசிரியர் ஓபிரையான் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் ஏவுகணைகளை தாக்க எஃப் 16 விமானங்கள் உதவக்கூடும் யுக்ரேன் ரஷ்யாவை தோற்கடிக்க எஃப்-16 போர் விமானங்கள் உதவுமா? அமெரிக்காவில் அமைந்திருக்கும் சிந்தனை குழுவான தி சென்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் அண்ட் இண்டெர்நேஷனல் ஸ்டடீஸ் (CSIS) வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த 65 போர் விமானங்களை விட அதிகமான ஆயுதங்கள் யுக்ரேனுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமின்றி எஃப் 16 ரக விமானங்கள் யுக்ரேனின் எல்லையில் இருக்கும் ரஷ்யாவின் விமானப்படைகளையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும். போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை எல்லையில் இருந்து வெளியேற்றவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஃப் 16 ரக விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு 2022ம் ஆண்டில் இருந்து யுக்ரேனிய மக்கள் அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் 12 விமானப்படைப் பிரிவுகள் இருந்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிரான போரில் தேவையான உதவிகளை யுக்ரேன் விமானப்படை வழங்க இயலும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு பிரிவுக்கு 18 போர் விமானங்கள் என மொத்தமாக யுக்ரேனுக்கு 216 எஃப் 16 போர் விமானங்கள் தேவைப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை. இருப்பினும் பேராசிரியர் ப்ரோன்க், மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே தங்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட எஃப்16 ரக போர் விமானங்களையே யுக்ரேனுக்கு வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இது வெறும் ஆரம்பம் தான். யுக்ரேனின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் எஃப் 16 ரக விமானங்களை அதன் விமானப்படையில் இணைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும்," என குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c204png313no
-
இலங்கையர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது
19 AUG, 2024 | 05:53 PM இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா , இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தின் போது, படகில் பயணித்த நான்கு பிரித்தானியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். படகிலிருந்த பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/191474
-
வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தை முதலீட்டிற்கு மாறும் இந்தியர்கள் - லாபமும் அபாயமும்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2024, 03:15 GMT “பணத்தை வீணாக செலவு செய்யாமல், வங்கியில் ஒரு கணக்கு துவங்கி அதில் போட்டுவை. எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்” முந்தைய தலைமுறைகளில், முதன் முதலாக வேலைக்குச் செல்லும் ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் பெரும்பாலான பெரியவர்கள் கூறிய நிதி சார்ந்த அறிவுரை இது. ஆனால், இப்போது பலருக்கும் கூறப்படும் அறிவுரை, “நல்ல பங்குகளாக பார்த்து வாங்கு. மாதாமாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் என்றால் நீண்ட கால முதலீடே சிறந்தது” என்பதாகும். கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் நடைபெற்ற வங்கிகள், நிதித்துறை மற்றும் காப்பீடு (Banking, financial services and insurance- பிஎப்எஸ்ஐ) உச்சி மாநாட்டில் இந்தியர்களின் மனமாற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியிருந்தார். “நீண்டகாலமாக தங்கள் சேமிப்புகளுக்காக வங்கிகளைச் சார்ந்திருந்த இந்தியக் குடும்பங்கள், இப்போது பங்குச்சந்தைகள் மற்றும் நிதிசார் இடைத்தரகர்கள் பக்கம் அதிகளவில் திரும்புகின்றனர்” என்று கூறினார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘மக்கள் வங்கிகளைத் தவிர்ப்பது’ குறித்து மீண்டும் பேசியிருந்தார் சக்திகாந்த தாஸ். பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் வங்கி சேமிப்புகளைத் தவிர்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறார்களா? நிபுணர்கள் கூறுவது என்ன? அவ்வாறு முதலீடு செய்கையில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன? அதிகரிக்கும் எஸ்ஐபி முதலீடுகள் எஸ்ஐபி (SIP) என்பது முறைசார் முதலீட்டு திட்டம் (systematic investment plan) என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதிகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறையே இந்த எஸ்ஐபி. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI- ஏஎம்எப்ஐ) என்ற அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளில், ‘2024, ஜூன் மாதத்தில் 21,262 கோடி ரூபாயாக இருந்த எஸ்ஐபி பங்களிப்பு, ஜூலை மாதத்தில் 23,332 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி கூறுகிறது. ஜூன் மாதத்தில் 8,98,66,962 ஆக இருந்த மொத்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை ஜூலையில் 9,33,96,174 ஆக இருந்தது. கடந்த 41 மாதங்களாக (மார்ச் 2021 முதல்) மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஎம்எப்ஐ என்பது, 1995இல் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற (NGO) அமைப்பாகும். இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (செபி) பதிவுசெய்யப்பட்ட 44 சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. டீமேட் கணக்குகள் அதிகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன இந்தியாவில், எஸ்ஐபி முறையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அல்லது பங்குகளை வாங்க, விற்க டீமேட் கணக்கு (Demat Account) என்பது அவசியம். முதலீட்டாளர்களுக்கும் இந்திய பங்குச் சந்தைக்கும் இடைத்தரகர்களாக செயல்படும் நிதிசார் நிறுவனங்கள் மூலம் ஒருவர் டீமேட் கணக்கு தொடங்கலாம். “ஜூன் 2024 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16.2 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் மட்டும் 42 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன” என மோதிலால் ஓஸ்வால் எனும் நிதிச் சேவை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக, கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பங்குச்சந்தை மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வம், முதலீடுகள் மீதான அதிக வருவாய், டீமேட் கணக்குகள் தொடங்குவதற்கான எளிமையான முறைகள், 2020 முதல் தொடர்ந்து அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அந்த அறிக்கை பட்டியலிடுகிறது. வங்கி சேமிப்பு vs பங்குச் சந்தை முதலீடு எது சிறந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், “சில்லறை முதலீட்டாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்வது தவிர்த்து மாற்று முதலீட்டு வழிமுறைகளில் மிகவும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.” என்று கூறினார். இது வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது என்றும், இதனால் வங்கிகள் குறுகிய கால வைப்பு தொகை மற்றும் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய வேறு வழிகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும் இதனால் வங்கிகள் உள்கட்டமைப்பு பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த அவர், இதனை உணர்ந்து புதுமையான திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலமாக வங்கிகள் சேமிப்புகளைத் (Deposit) திரட்ட வேண்டும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார். பட மூலாதாரம்,RAJESH படக்குறிப்பு,பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ் ஆனால், இவ்வாறு மக்கள் வங்கிகளைத் தவிர்த்துவிட்டு, தங்களது சேமிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ். “வங்கியின் வைப்புத் தொகையில் இருந்து 7% வருமானம் கிடைத்தாலும், அந்தாண்டு பணவீக்கம் 6% என்றால் வருமானத்தின் பெரும்பகுதி அதில் கழிந்துவிடும். ஆனால், சந்தையில் இருந்து கிடைக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் 15-18% என்பதால் பணவீக்கத்தை கழித்தாலும் கூட அதன் பயன் ஓரளவுக்கு நமக்கு கிடைக்கும்” என்று கூறுகிறார் அவர். நீண்ட கால முதலீடுகளின் பலன் பட மூலாதாரம்,GETTY IMAGES திருநெல்வேலியைச் சேர்ந்த இம்ரான் பாஷா, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர். இதை அவர் பல வருடங்களாக செய்துவருகிறார். 2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியின் மேலாளர், புதிதாக சந்தையில் அறிமுகமாகும் அந்த வங்கியின் பங்குகளை (ஐபிஓ) வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளார். “எனக்கு அப்போது அதில் பெரிய நம்பிக்கை இல்லை. 10,500 ரூபாயை மட்டும் முதலீடு செய்து ஒரு பங்கு 35 ரூபாய் என்ற வகையில், 300 பங்குகளை வாங்கினேன். பிறகு அதை மறந்துவிட்டேன். 20 வருடங்கள் கழித்து, 2022 ஜூன் மாதம், பழைய அறையைச் சுத்தம் செய்த போது அந்த பங்குகள் வாங்கியதற்கான சான்றிதழ் கிடைத்தது” என்று கூறினார். இருபது வருடங்கள் கழிந்துவிட்டதால், அது செல்லாது என நினைத்தவர் தனது மகளிடம் ஒருமுறை காண்பித்துள்ளார். “அதை என் மகள் படித்துப் பார்த்துவிட்டு, இப்போது அந்த தனியார் வங்கியின் பங்கின் விலை என்னவென்று இணையத்தில் பார்த்தாள். என்னிடம் அதைக் காட்டியபோது ஆச்சரியம் தாங்கவில்லை” என்கிறார். ரூபாய் 35 என்று 2002இல் அவர் வாங்கிய தனியார் வங்கியின் பங்கு, 2022ஆம் ஆண்டில் 350 முதல் 400 என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. உடனடியாக மகளின் உதவியோடு ஒரு டீமேட் கணக்கு தொடங்கிய அவர், பங்குகளை தன் டீமேட் கணக்கிற்கு மாற்றினார். “பின்னர் 2024 மே மாதத்தில், எனது மகளின் அறிவுரைப்படி, அந்தப் பங்கின் விலை 566 என இருந்தபோது, அவற்றை விற்று வேறு பங்குகளில் முதலீடு செய்தேன். அன்றே அந்த மேலாளர் குறைந்தது 1 லட்சம் முதலீடு செய்யுங்கள் என்றார், நான் தான் பணத்தை பங்குச் சந்தையில் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் கேட்கவில்லை.” என்கிறார் இம்ரான் பாஷா. அவர் 2002இல் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் 10,500 ரூபாய். 22 வருடங்கள் கழித்து 2024இல் அதை அவர் விற்ற போது கிடைத்தது 1,69,800 ரூபாய். அதாவது முதலீட்டின் மீதான வருமானம் என்பது 1517.14%. “இப்போதும் எனக்கு பங்குச் சந்தை மீது பயம் உள்ளது. அங்கு கிடைத்த லாபத்தை தான் அங்கேயே முதலீடு செய்துள்ளேன். ஆனால் என் மகளோ அவள் சம்பாதிக்கும் பெரும்பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறாள். நான் தடுக்கவில்லை. எனக்கு வங்கிச் சேமிப்பு கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, பங்குச் சந்தையில் கிடைப்பதில்லை” என்கிறார் இம்ரான் பாஷா. பங்குச் சந்தை - லாபமும் அபாயமும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடும் 90 சதவீத முதலீட்டாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர் என செபி (SEBI) அறிக்கை தெரிவித்திருந்தது இம்ரான் பாஷாவுக்கு கிடைத்த முதலீட்டின் மீதான வருமானத்தைப் பார்க்கும் போது, பங்குச்சந்தை குறித்த ஒரு நேர்மறையான எண்ணம் தோன்றுவது இயல்பே. அதேசமயத்தில், அதிக லாபம் என்றால் அதிக அபாயமும் பங்குச் சந்தையில் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ். “நீண்ட கால முதலீடுகளுக்கு பங்குச் சந்தை மிகச்சிறந்த இடம். அதுவும் நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். குறுகிய லாபம் பெறும் நோக்கில் பங்குகளை வாங்குவது அல்லது விலை குறைவான பங்குகளை அதிகளவில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார் அவர். “சில பங்குகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே தான் பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போட்டுள்ள நிறுவனம் உங்களது முதலீட்டை கொண்டு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதால் ஒரு நிறுவனம் கவிழ்ந்தாலும் கூட, மற்றொரு நிறுவனம் கைகொடுக்கும் போது உங்களது முதலீடு உயர்ந்துக் கொண்டே இருக்கும்” என்கிறார். தங்கள் சேமிப்புகளைக் கொண்டு, ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸில் (F&O- எஃப்&ஓ) வர்த்தகம் செய்வதைத் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். டெரிவேடிவ்ஸ் (Derivatives) வர்த்தகத்தில் ஈடுபடும் 90 சதவீத முதலீட்டாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர் என செபியின் (SEBI) சமீபத்திய அறிக்கை தெரிவித்திருந்தது. இந்த டெரிவேடிவ்ஸ் வர்த்தகப் பிரிவில் மிகவும் பிரபலமானது தான் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகம். கடந்த நிதியாண்டில் மட்டும் (2023-2024) டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் 52,000 கோடியை பங்குச்சந்தையில் இழந்துள்ளதாக செபி தனது அறிக்கையில் எச்சரித்தது. இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கிகளின் வைப்புத் திட்டம் என்பது இளைஞர்களை ஈர்ப்பதில்லை என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி “இளம்தலைமுறையினர் வங்கிகளைத் தவிர்த்துவிட்டு அதிகமாக பங்குச் சந்தை நோக்கி நகர்கிறார்கள் என்பது உண்மைதான். இதனால் வங்கிகள் பாதிக்கப்படலாம். ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி. இந்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் சேமிப்புகளிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும். அதுவே மக்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்போது, அது கடனாக இல்லாமல் நேரடியாக பெரு நிறுவனங்களுக்கு செல்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். “அதிகமான முதலீடு உள்ளே வரும்போது, பங்குகளின் விலை கூடும். சந்தை உச்சத்தை நோக்கிச் செல்லும். மக்களின் பணம் இந்திய நிதிச் சந்தையை விட்டு வெளியே செல்வதில்லை எனும்போது, பொருளாதாரம் பாதிக்கப்படாது. அதுபோக பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மூலம் மத்திய அரசுக்கு அதிகமான வரியும் கிடைக்கிறது” என்கிறார். வளரும் நாடுகளில் இளம் தலைமுறையினர் பழமையான வங்கி சேமிப்பு முறைகளைத் தவிர்த்துவிட்டு புதிய முதலீட்டு முறைகள் நோக்கி நகர்வது வழக்கமானது தான் என்றும் அவர் கூறுகிறார். “வங்கிகளின் வைப்புத் திட்டம் என்பது இளைஞர்களை ஈர்ப்பதில்லை, அவர்களுக்கு அதிக லாபம் தரும் பங்குச் சந்தை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்திலிருந்து கண்டிப்பாக இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். “மக்கள் நீண்ட கால முதலீட்டை மனதில் வைத்தே பங்குச் சந்தைக்குள் நுழைய வேண்டும். ஏனென்றால் இங்கு பணக்காரர் ஆவதற்கு குறுக்கு வழி என்பதே கிடையாது” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/c0rw1e12w79o
-
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : அக்கறையற்ற ஆசிரியர்கள்
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன. வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது. மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படையாவதும் நோக்கத்தக்கது. மீத்திறனுடைய மாணவர் மாணவர்கள் புரிந்து கொள்ளல் மற்றும் வெளிப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வகைப்படுத்தலாம். அந்த வகைப்பாட்டின் அடிப்படையில் 01) மீத்திறன் மாணவர்கள் 02) திறன் மாணவர்கள் 03) சாதாரண திறன் மாணவர்கள் 04) மெல்லக் கற்போர் என்ற நான்கு வகைப்பாட்டினை இந்த ஆய்வில் ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களிடையே கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டன. விரைவாக புரிந்து கொண்டு தங்கள் புரிதலை விரைவாக வெளிப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மீத்திறன் மாணவர்களாக கொள்ளப்படும். இவர்களிடையே அதீத நினைவாற்றல் இருப்பதும் அறிந்த தகவல்களை முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு ஒப்பிட்டு பகுப்பாய்ந்து சூழலுக்கு பொருத்தமான முடிவுகளை வெளிப்படுத்துவதில் திறமையானவர்களாக இவர்கள் இருக்கின்றனர். சுயமாக பாடப்பரப்புக்களை கற்றுக்கொள்வதிலும் கூட இவர்கள் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் பாடப்பரப்புக்களுக்கு மேலதிகமாக சமூகம் சார்ந்தும் அவர்களது சுயவிருப்பத்திற்கு ஏற்ற முறையில் புதிய துறைகள் சார்ந்து முயன்று கற்றுக்கொள்வதில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் காட்டும் அக்கறை இசைத்துறையில் இசைக்கருவிகளை பயிலல், நடனம், வரலாற்றுத் தேடல், மேம்பட்ட பொருளாதாரம், இலக்கிய ஈடுபாடு, படைப்பாற்றலை வெளிப்படுத்தல், கற்றபடி சுயமாக வருமானமீட்டல், விளையாட்டு, தற்காப்புக்கலை என அவர்களது ஈடுபாடுகள் உள்ள சில துறைகளை அவதானத்தின் அடிப்படையில் எடுத்துக்காட்ட முடியும். மீத்திறனுடைய மாணவர்கள் நேர முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு நேர்த்தியுடையவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப வடக்கின் பின்தங்கிய பாடசாலைகளில் அதிகளவான மீத்திறன் வெளிப்பாடுடைய மாணவர்களை இனம் காண முடிகின்றது.ஆயினும் அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் காட்டும் அக்கறை போதியளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திறனுடைய மாணவர்கள் திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களைப் போன்று புரிதலையும் பொருத்தப்பாடான வெளிப்படுத்தலையும் செய்வதில் சற்றுக் குறைவான திறனை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். இவர்களிடையே நினைவாற்றல் குறைந்தளவில் இருப்பதை இனம்காண முடிந்தது.இதனால் முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு இப்போது அறிந்து கொள்ளும் தகவல்களை ஒப்பிட்டுப் பகுப்பாய்வினைச் செய்து கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர். சில திறனுடைய மாணவர்களுக்கு உடன் முன் நினைவூட்டல் இருக்கும் போது அவர்கள் தங்கள் ஒப்பீட்டாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துவதனையும் அத்தகைய முன் நினைவூட்டல் கிடைக்காத போது சிறப்பான ஒப்பீட்டைச் செய்து கொள்வதில் சிரமப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலைமை அவர்களிடையே நிலவும் போசாக்கு குறைபாட்டினால் ஏற்படுவதாகவும் அது சீர் செய்யப்பட்டால் இத்தகைய மாணவர்கள் மீத்திறன் வெளிப்பாட்டுக்கு தயாராக வாய்ப்பேற்படும் எனவும் துறைசார் வைத்திய ஆலோசனை மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது. திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களாக அல்லது அரைமீத்திறன் உடைய மாணவர்களாக மாற்றம் பெற்றுக்கொள்ளச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளிடையே உள்ள மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் திறனுடைய மாணவர்களாகவே ஆசிரியர்களாலும் கல்விச் சமூகத்தினாலும் இனம் காணப்பட்டு வரும் நிலையும் இருந்து வருகின்றது.இது கவலைக்குரிய விடயமாகும். மீத்திறனுடைய மாணவர்கள் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமையினால் திறனுடைய மாணவர்களாக அல்லது அதற்கு கீழ் மட்ட திறன் நிலலைகளை வெளிப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது கண்டு கொள்ளப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படும் திட்டமான முடிவுகளில் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே திறன் வெளிப்பாடுடைய மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோரை மீத்திறன் மாணவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்ற எண்ணக்கருவும் இந்த ஆய்வின் போதன அவதானிப்புக்கள் மற்றும் அவைசார்பாக எழுப்பப்படும் வினாக்களுக்காக துறைசார் நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆலோசனைகள் மூலமும் எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. கீழ்மட்ட நிலைகள் சாதாரண திறனுடைய மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போர் என்ற கீழ்மட்ட நிலைகளில் வகைப்படுத்தப்படும் மாணவர்கள் கற்றலில் புரிதலையும் அதன்பால் பொருத்தப்பாடான வெளிப்படுத்தல்களையும் மிகக் குறைந்தளவிலேயே வெளிப்படுத்துகின்றவர்களாக உள்ளனர். இவர்கள் மீது தாக்கம் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவையாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.பொருத்தமான முதல் நிலைக் காரணியை தெளிவாக அறிந்துகொள்ள மேலும் முனைப்பான ஆய்வுகள் தேவை. கிடைத்த தகவல்களின் மூலம் போசாக்கின்மையும் ஒரு காரணி என அறிந்துகொள்ள முடிகின்றது.ஆயினும் இது மட்டுமே எல்லைப்படுத்தும் காரணியாக இருந்து விடும் என சொல்லிக்கொள்ள முடியாது. சில கிராமங்களில் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திறன் மாணவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் படிக்காதவர்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்கும் போது அவர்களது பிள்ளைகள் முனைப்பான திறன் வெளிப்பாடுகளை கொண்டுள்ளமையானது கீழ் மட்ட நிலைகளில் தரப்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவை என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்க முடியும். இவர்களிடையே மனநிலை மற்றும் வாழிடச் சூழலும் செல்வாக்குச் செலுத்தி நின்றன என்பதையும் அவதானிக்க முடிகின்றது. வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களது பாடசாலைச் சூழலும் பாரியளவிலான பங்களிப்பைச் செய்ய வேண்டியதாக இருப்பதும் அறியப்படுகிறது. நகர்ப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் பொறுப்புக்கு மேலாக பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எடுக்கப்பட்ட முயற்சிகள் பாடசாலைகளில் நடைபெறும் தேசிய பரீட்சைகளில் 100 வீத சித்தியை ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுக்கொள்வதற்காக பின்தங்கிய பாடசாலைகளிலும் அதிகமாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அவை இலக்கை அடைந்தவையாக இல்லை என்பதும் இந்த ஆய்வின் போது அறிந்து கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது சித்தியடைய முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர்களால் கருதப்படும் மாணவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய மாணவர்கள் அடுத்த வருடம் பரீட்சை எழுதப் பணிக்கப்படுகின்றனர். அல்லது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக எழுதும்படி வழிகாட்டப்படுகின்றனர் என்று ஆய்வுக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சூழலுக்கு முகம் கொடுத்த மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலை தொடர்பில் கருத்திட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். பல கிராமப்புற பாடசாலைகளில் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரீட்சை முடிவுகளில் 100 வீத சித்தியை காண்பிப்பதன் மூலம் சிறந்த கற்பித்தல் நடைபெற்றுவருவதாக காட்டபாபட்டு பாராட்டுக்களை பெற்றுக்கொளாவது கவலைக்குரிய விடயமாகும். இதனால் பல மாணவர்களது பாடசாலை இடைவிலகலுக்கு பாடசாலைகளின் மேற்படிச் செயற்பாடுகள் காரணமாவதும் நோக்கத் தக்கது. மெல்லக் கற்போருக்கான மேலதிக வகுப்புக்களை முறைசார முறையில் முன்னெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன.எனினும் இவை உரிய தொடர்ச்சியைப் பேணி இலக்கை அடைந்ததாக அவதானிக்க முடியவில்லை. மீத்திறன் மாணவர்களின் சவால் சில பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் மாணவர்கள் பாடசாலைகளிலும் மாலை நேர கல்வி நிலையங்களிலும் பாரிய சவாலை எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது. எனினும் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய ஆசிரியர்கள் கவனமெடுக்காது நடந்து கொள்கின்றனர். A தரச் சித்தியைப் பெற வேண்டிய மாணவர்களை S தரச் சித்தியைப் பெற வைப்பதற்காக முயற்சிக்கப்படுவதாக தன் கருத்துக்களை எழுத்தாளரும் ஊடகவியலாளருமாக பணியாற்றிவரும் நதுநசி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் உடைய மாணவர்களோடு மெல்லக் கற்போர் மற்றும் சாதாரண திறனுடைய மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து கற்பிக்கும் போது மெல்லக்கற்போரும் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பாடப்பரப்புக்குச் செல்லும் சூழல் இருப்பதால் மீத்திறன் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் இவ்வாறான வகுப்பறைகள் தொடர்பில் இவற்றொடு தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் இப்பாடசாலை அதிபர்களுடன் உரையாடிய போது அவர்கள் மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் அசௌகரியங்களை இனங்கண்டு கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் நிலைகளை சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் பொறுப்பான பதிலளிப்புக்களை அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை. மாணவர்களின் உணர்வுகளை அவர்களது சூழல் சார்ந்து அவதானித்து அதன்பால் சரியான முறையில் அவர்கள் வழிகாட்டப்படாது போனால் வடக்கில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் மோசமாகும் வாய்ப்புக்களை அதிகம் எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. https://tamilwin.com/article/challenge-students-north-teachers-not-action-1724050732
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம் 19 AUG, 2024 | 02:20 PM புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். இது நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகும். நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்திலேயே இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191429
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
ஹர்ஷித்தாவின் கன்னிச் சதம் வீண்போனது; இலங்கையை 15 ஓட்டங்களால் வென்ற அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது 19 AUG, 2024 | 04:03 AM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பெல்பாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க, இப்போதைக்கு அயர்லாந்து 2 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் குவித்தபோதிலும் இறுதியில் அது வீண்போனது. மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 3ஆவது வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆவார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. 31 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து 4 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால் எஞ்சிய 19 ஓவர்களில் அயர்லாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மேலும் 121 ஓட்டங்களைக் குவித்தது. அதுவே அயர்லாந்து அணியின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. முன்வரிசையில் அமி ஹன்டர் 8 பவுண்டறிகளுடன் 66 ஒட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டில் 112 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். லீ போல் 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கடினமான 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. விஷ்மி குணரட்ன (2), சமரி அத்தபத்து (22) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். (46 - 2 விக்.) எனினும், ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கவிஷா டில்ஹாரியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அப்போது இலங்கை 172 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது எஞ்சிய 98 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், அதன் பின்னர் மோசமான அடி தெரிவுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக 97 பந்துகளில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. ஒற்றைகள், இரட்டைகள் எடுக்க வேண்டிய வேளையில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்ததால் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களைத் தாரைவார்த்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷித்தா சமரவிக்ரம 11 பவுண்டறிகளுடன் 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய கவிஷா டில்ஹாரி 53 ஓட்டங்களைப் பெற்றார். நிலக்ஷிகா சில்வா கடைசிக் கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்காக போராடிய போதிலும் அவரது முயற்சி பலனளிக்காமல் போனது. அவர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஆலீன் கெலி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேன் மெகயர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: லீ போல். https://www.virakesari.lk/article/191397
-
காசாவில் கண்டறியப்பட்ட வைரஸ்: ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்
மீண்டும் போலியோ; 25 ஆண்டுகளின் பின்னர் காசாவில் அடையாளம் மத்திய காசா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத 10 மாத குழந்தைக்கே இவ்வாறு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போலியோ வைரஸ், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகின்றது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோய் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது. https://thinakkural.lk/article/308016
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அம்பலப்படுத்துவேன்; சஜித்
மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த பிரேமதாச, கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் உதவி ஆயர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர ஒரு தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்ட சஜித், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதா என்றும், உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டதா என்றும் கத்தோலிக்க சமூகம் தலைமையிலான முழு தேசமும் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/308049
-
இஸ்ரேல், யுக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவு உள்பட 10 முக்கிய பிரச்னைகளில் கமலா ஹாரிஸ் நிலைப்பாடு என்ன?
கட்டுரை தகவல் எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட் பதவி, பிபிசி நிருபர், அமெரிக்கா மற்றும் கனடா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள் மற்றும் உற்சாகமான பேரணிகளால் நேர்மறையான சூழலில் இயங்கி வருகிறார். சாதகமான சூழல் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்புள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? இதுவரை, அவர் தன் நிலைப்பாட்டை பற்றிய ஒரு விரிவான தளத்தை வெளியிடவில்லை என்றாலும், கலிபோர்னியா செனட்டர் மற்றும் வழக்கறிஞராக அவர் இருந்த காலகட்டம், 2020ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான அவரது முயற்சி மற்றும் துணை அதிபராக வெள்ளை மாளிகையில் அவரது பங்கு ஆகியவை கமலா ஹாரிஸ் பல கொள்கைகளில் எந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்பதை பிரதிபலிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் சில விஷயங்களில் அவருடைய நிலைப்பாடுகள் மாறிவிட்டன. அவர் தன் கொள்கைகளை வரையறுக்க போராடியதாக சிலர் கூறினர். அவரது `கொள்கை செயல் திட்டம்’ இப்போது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள பிபிசி முயன்றது. 2024 அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸின் சமீபத்திய பேச்சுகள் மற்றும் பொது அறிக்கைகள், துணைத் தலைவராக அவரது செயல்பாடுகள் மற்றும் 2020 அதிபர் வேட்பாளராக அவரது அரசியல் வரலாறு, கலிபோர்னியா செனட்டர் மற்றும் வழக்குரைஞராக அவரது நிலைப்பாடு ஆகியவற்றை பிபிசி ஆய்வு செய்தது. கமலா ஹாரிஸின் பிரசாரக் குழுவினர் பிபிசியிடம், அவரது சமீபத்திய கருத்துகளை உற்றுநோக்கினால் அவரது நோக்கங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் என்று கூறினர். "பிக் பார்மாவை தோற்கடித்து, கிட்டத்தட்ட 16 மில்லியன் வேலைகளை உருவாக்கி, முப்பது ஆண்டுகளில் முதல் துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் வரலாற்று கொள்கை செயல்திட்டத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னெடுத்துச் செல்வார்." என்று அவரின் பிரசார செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அமெரிக்காவின் 10 முக்கிய பிரச்னைகளில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடுகள் குறித்து பார்க்கலாம். பொருளாதாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு செனட்டராக, கமலா ஹாரிஸ், ஊதியத்துடன் கூடிய குடும்ப விடுப்பு, மலிவு விலையில் வீடுகள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச கல்வி உட்பட பல முற்போக்கான கொள்கைகளை முன்வைத்தார். துணை அதிபராக, முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார சட்டத்தை இயற்றுவதில் பைடனுடன் முக்கிய பங்களித்துள்ளார். இந்த சட்டத்தை ‘பைடனோமிக்ஸ்’ (Bidenomics) என்று குறிப்பிடுவார்கள். இதில் உள்கட்டமைப்பு மற்றும் பசுமை ஆற்றலில் முக்கிய முதலீடுகள் அடங்கும். ஆனால் பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை தொடர்ந்து பாதிப்பதால், பல வாக்காளர்கள் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. வெள்ளி அன்று, கமலா ஹாரிஸ் தனது பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டார், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அடமான உதவி, பச்சிளம் குழந்தைகளின் பெற்றோருக்கு வரிச் சுமையை குறைப்பது மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மளிகைப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவை அடங்கும். குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை போலவே, அவரும் taxing tips-க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். "அதிபர் என்ற முறையில், நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் கண்ணியத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நான் கவனம் செலுத்துவேன். ஒன்றாக இணைந்து, நாம் அனைவருக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம்," என்று அவர் வெள்ளிக்கிழமை உரையில் கூறினார். குடியேற்ற கொள்கைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் முதன்முதலில் அதிபர் பதவிக்கான பந்தயத்தில் பங்கேற்றதில் இருந்து குடியேற்றப் பிரச்னைகளில் மிகவும் முற்போக்கான நிலைப்பாடுகளை கொண்டிருந்தார். குடியேற்ற தடுப்பு மையங்களை மூடுவதாக உறுதியளித்தார். 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் குடியேற்றம் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளை மேற்பார்வையிடுமாறு கமலா ஹாரிஸிடம் பைடன் கேட்டுக்கொண்டார். பல குடியரசுக் கட்சியினர் அவரை "எல்லையின் ஜார்" (border tsar) என்று வர்ணித்துள்ளனர். ஆனால் அவரது பணி, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து குடிமக்கள் அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்கான "மூலக் காரணங்களை" நிவர்த்தி செய்வதே ஆகும். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் 2023இல் 3 பில்லியன் டாலர் திரட்டியதாக அறிவித்தார். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து இது திரட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள சமூகங்களில் முதலீடு செய்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு புலம்பெயர மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர் நம்பினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், எல்லைச் சுவர் கட்டுமானத்திற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிக்கு அவர் உதவினார். ஆனால் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்தார். பைடனின் எல்லைக் கொள்கைகள் "ஒவ்வொரு அமெரிக்க சமூகத்திலும் மரணம், அழிவு மற்றும் குழப்பத்தை" ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஹாரிஸின் பிரசாரக் குழு, அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த இருதரப்பு தீர்வுகளுக்கு உறுதியுடன் இருப்பார் என்று கூறியது. கருக்கலைப்பு உரிமை கருக்கலைப்பு விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பெண்களின் உரிமையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். நவம்பர், 2024 தேர்தலுக்கு கருக்கலைப்பு உரிமைகள் விவகாரத்தை மையப்படுத்துவதற்கான பைடன் பிரசாரக் குழுவின் முயற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் நீண்ட காலமாக கருத்தடை சம்பந்தமான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை ஆதரித்தார். அவரின் நிலைப்பாடு மாறவில்லை. ஜார்ஜியாவின் அட்லாண்டா நபரில் தனது பிரசார பேரணியில், "அமெரிக்காவின் அதிபராக, கருக்கலைப்பு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றும் போது, நான் அந்த சட்டத்தில் கையெழுத்திடுவேன்," என்று அவர் கூறினார். அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2022இல் ரோ வி. வேட் வழக்கை ரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேசுவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். தனிப்பட்ட சுதந்திரம் என்ற தலைப்பை அடிக்கடி முன்வைத்தார். கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்ற முதல் துணை அதிபர் இவர்தான். நேட்டோ மற்றும் யுக்ரேன் விவகாரம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நம்பியுள்ளார் கமலா ஹாரிஸ் அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். 2017இல் செனட்டராக வாஷிங்டனுக்குச் சென்றதிலிருந்து, அவர் உலக அரங்கில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். செனட்டராக, அவர் ஆப்கானிஸ்தான், இராக், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். துணை அதிபராக 150 உலக தலைவர்களை சந்தித்து 21 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவர் கடந்த ஆண்டு மியூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் நேட்டோவுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டார், அது தனிமைப்படுத்தலைக் கண்டித்தது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் யுக்ரேனால் கூட்டப்பட்ட "அமைதி மாநாட்டில்" கமலா ஹாரிஸ் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவரது வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள், 350 முன்னணி அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு வல்லுநர்கள், பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியினர், சர்வதேச விவகாரங்களில் நாட்டை வழிநடத்த "சிறந்த தகுதி வாய்ந்த நபர்" என்று ஒப்புதல் அளித்து ஒரு கடிதத்தை வெளியிட்டனர். இஸ்ரேல் - காஸா போர் பட மூலாதாரம்,REUTERS கமலா ஹாரிஸ் இரு நாடுகள் தீர்வுக்காக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறார். துணை ஜனாதிபதியாக, அவர் பைடனை விட இஸ்ரேல் - காஸா போரின் போது இஸ்ரேலை வெளிப்படையாக விமர்சித்தார். "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்த அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர், "பாலத்தீனர்களுக்கான மனிதாபிமான பேரழிவு" குறித்து கவலைகளை எழுப்பினார். இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார். மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். ஜூலை மாதம் வாஷிங்டனுக்கு பயணம் செய்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் "வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான அவர், காஸாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தனக்கு "அதிக கவலைகள்" இருப்பதாகவும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதம் முக்கியமானது என்றும் நெதன்யாகுவிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் நேருக்கு நேர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, "இந்தப் போர் முடிவடையும் நேரம் இது" என்று கூறினார். அமெரிக்க இடதுசாரிகள் சிலர் அழைப்பு விடுத்தது போல, இஸ்ரேல் மீதான ஆயுதத் தடையை அவர் ஆதரிக்கவில்லை. அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பில் கார்டன், எக்ஸ் தளத்தில், “அவர் தெளிவாக இருக்கிறார். இரான் மற்றும் இரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை அவர் எப்போதும் உறுதிப்படுத்துவார்" என்று கூறினார். வரிகள் 2017ஆம் ஆண்டில் செனட்டராக இருந்த போது கமலா ஹாரிஸ் பல முற்போக்கான வரித் திட்டங்களை ஆதரித்தார். முதலீடுகள் மீதான வரி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் முதியோருக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான மசோதாவை பெர்னி சாண்டர்ஸுடன் இணைந்து அறிமுகப்படுத்தினார். 2019இல் அதிபர் வேட்பாளராக முயன்ற போது, அவர் கார்ப்பரேட் வரி விகிதத்தை 21% இல் இருந்து 35% ஆக அதிகரிப்பதை ஆதரித்தார். இது அதிபர் பைடனின் முன்மொழிவை விட மிகவும் அதிகமாக இருந்தது, அவரும் 28% ஆக அதிகரிப்பதை ஆதரித்தார். அமெரிக்கர்களில், 400,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மீது வரிகளை உயர்த்தக் கூடாது என்ற அதிபர் பைடனின் முன்மொழிவை துணை அதிபர் தொடர்ந்து ஆதரிப்பார் என்று பிரசார அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். சுகாதாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக, கமலா ஹாரிஸ் மற்றும் அவரது அலுவலகம், காப்பீட்டாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் வாடிக்கையாளர் செலவுகளை உயர்த்துவதைத் தடுக்க, Anti -trust சட்டங்களைப் (antitrust laws) பயன்படுத்தியது. அவர் அமெரிக்க செனட்டராகவும் பின்னர் 2020ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளருக்கான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த போது, அவர் பைடனை விட முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார். மருத்துவ காப்பீடு மற்றும் பொது நிதியுதவி வழங்கும் சுகாதார திட்டங்களை ஆதரித்தார். `மெடிகேர்’ என்பது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள இளையவர்களை ஆதரிக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதி அளிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் ஆகும். கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டை ஆதரித்தார். இது அமெரிக்காவின் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீடு வழங்கும் திட்டமாகும். இது பைடன் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னர் பல முற்போக்கு ஜனநாயகவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அதே காலகட்டத்தில், அவர் தனியார் மருத்துவக் காப்பீட்டை அகற்றுவதை ஆதரித்தார். பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். தனது 2020 அதிபர் பிரசாரத்தின் போது ஒரு திட்டத்தை வெளியிட்டார். இது 10 ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவியுடன் கூடிய உடல்நலக் காப்பீட்டை வழங்கும். ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை முழுமையாக அகற்றாது. இனி அப்படி இல்லை. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘single-payer system’ முறையை ஆதரிக்க மாட்டார் என்று அவரது பிரசாரக் குழு பிபிசியிடம் தெரிவித்தது. அவர் துணை அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகை பரிந்துரைக்கப்பட்ட மருந்து விலைகளைக் குறைத்தது. இன்சுலின் விலையை 35 டாலராகக் குறைத்தது. குற்றச்செயல் குழந்தைகளை துன்புறுத்துபவர்கள் மற்றும் தொழிலுக்காக மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்குகள் மூலம் கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராகவும், அதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும் விகிதம் அவரது திறமையான வாதத்தால் அதிகரித்தது. ஆனால் இது முற்போக்கான இடதுசாரிகளின் விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இது சில சமயங்களில் அவரை "ஒரு போலீஸ்காரர்" என்று முத்திரை குத்தியது. இதற்கிடையில், அவர் குற்றத்திற்கு எதிராக மென்மையாக நடந்துகொள்வதாக வலதுசாரி குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வழக்கறிஞராக, அவர் ஒரு போலீஸ்காரரைக் கொன்ற ஒருவருக்கு எதிராக மரண தண்டனையை ஆதரிக்க மறுத்துவிட்டார். ஆனால் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக, அதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மாநில உரிமைக்காக அவர் போராடினார். 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது உள்பட 34 மோசடி வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்பை தனது வழக்கறிஞர் அனுபவத்தின் அடிப்படையில் கமலா ஹாரிஸ் விமர்சித்தார். காலநிலை மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் நீண்ட காலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை முன்வைத்தார். ஒரு வழக்கறிஞராக, ஹாரிஸ் கலிபோர்னியாவின் காலநிலை சட்டங்களை ஆதரித்தார் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தனது 2020 அதிபர் பிரசாரத்தின் போது "பசுமை புதிய ஒப்பந்தம்" மூலம் காலநிலை மாற்றக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். அவற்றில் சில தற்போதைய நிர்வாகத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளன. 2019 இல் சிஎன்என் அதிபர் விவாதத்தின் போது, பாறையில் இருந்து ஷேல் எரிவாயு எடுப்பதற்கான "ஃபிராக்கிங்(fracking) செயல்முறையை தடைசெய்ய ஆதரவாக இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார். துணை அதிபராக, அவர் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை நிறைவேற்ற உதவினார். இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார வாகன வரிக் கடன் மற்றும் தள்ளுபடி திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஈட்டியது. கடந்த ஆண்டு, அவர் ஒரு உரையில் "இது நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய காலநிலை முதலீடு" என்று குறிப்பிட்டார். தீவிர காலநிலை மாற்றத்திற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துப்பாக்கி சட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் துப்பாக்கி பாதுகாப்பு விதிமுறைகளை ஆதரித்து வந்துள்ளார். கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இருந்த போது, அந்த மாநிலத்தின் துப்பாக்கிச் சட்டங்களுக்கு எதிரான சட்டரீதியான சவால்களை வெற்றிகரமாக வாதிட்டு வென்றார். துணை அதிபராக, அவர் துப்பாக்கி வன்முறை தடுப்புக்கான வெள்ளை மாளிகை அலுவலகத்தை மேற்பார்வையிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தங்களுக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைக்கக் கூடியவர்களாக கருதப்படும் நபர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்கும் சட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆதார மையங்களை உருவாக்குவதாக அறிவித்தார். கூடுதலாக, பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தால் ‘நெருக்கடி தீர்வு திட்டங்களுக்கு’ ஒதுக்கப்பட்ட 750 மில்லியன் டாலர்கள் கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்துமாறு அவர் மாநிலங்களை வலியுறுத்தினார். https://www.bbc.com/tamil/articles/ckg27x7r9g8o
-
யாழ். கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2024 | 10:28 AM யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/191410
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!
மக்கள் ஏழைகளாக மாறி ஜனாதிபதியின் நண்பர்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் - சஜித் 19 AUG, 2024 | 09:33 AM ஜனாதிபதி நினைத்தபடி நாட்டில் சுற்றுப்பயணம் செல்கின்றார். அடியாட்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை வழங்கி இலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்கள் ஏழ்மைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் ஏழ்மையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற யுகத்தைச் செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/191402
-
உலகை அச்சுறுத்தும் Mpox; இலங்கை தயார் நிலையில்
அச்சுறுத்தும் எம்பொக்ஸ்; இலங்கையில் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308045
-
நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
முதல் காலாண்டில் மாத்திரம் 207 எச்.ஐ.வி.தொற்றாளர்கள்; 13 பேர் உயிரிழப்பு Published By: VISHNU 19 AUG, 2024 | 01:47 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் முதல் காலாண்டில் மாத்திரம் 207 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் 700 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 300 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 207 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. முதல் காலாண்டில் இனங்காணப்பட்ட 207 தொற்றாளர்களில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 23 ஆண்களும், 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.அத்துடன் முதல் காலாண்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5912 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவ்விடயம் குறித்து விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ குறிப்பிட்டதாவது, 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் வீதம் மொத்த சனத்தொகையில் 1 மில்லியனுக்கு 0.03 வீதமாக காணப்பட்டது.ஆனால் தற்போது அந்த வீதம் 0.1 ஆக உயர்வடைந்துள்ளது. அதாவது நூற்றுக்கு 300 சதவீதமளவில் தொற்றாளர்களின் வீதம் உயர்வடைந்துள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. வருடாந்தம் சுமார் 700 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பாலியல் தொழில்களில் ஈடுபடுபவர்களின் மத்தியில் எச்.ஐ. வி தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. மேல்மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/191395
-
தமிழினப் படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
கனடாவில் நிர்மாணிக்கப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு இலங்கை கடும் எதிர்ப்பு கனடாவின் பிராம்ப்டனில் “தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்” நிர்மாணிக்கப்படுவதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கனடிய உயர் ஸ்தானிகரை வரவழைத்து இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கடந்த வாரம் இறுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் அலி சப்ரி, கனடாவிற்குள் அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்ட “தவறான கதை” என்று விவரித்ததன் நிரந்தரமாக நினைவுச்சின்னத்தை கண்டித்ததாக வெளியுறவு அமைச்சகம் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் இனப்படுகொலை குற்றச்சாட்டு “தீங்கிழைக்கும் தவறான தகவலை” அடிப்படையாகக் கொண்டது என்றும், எந்தவொரு நம்பகமான தேசிய அல்லது சர்வதேச அதிகாரியிடமிருந்தும் சரிபார்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசாங்கம், பிரிவினையை ஊக்குவிப்பதன் மூலம் இந்த முன்முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இந்த நினைவுச்சின்னத்தை கருதுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வலியுறுத்தி, கனேடிய அரசு தலையிட்டு நினைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/308042
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்! Published By: VISHNU 18 AUG, 2024 | 11:21 PM தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியிலிருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகியது. இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/191394
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!
நான் பிரச்சினைகளைக் கண்டு தப்பியோட வில்லை - சஜித் 19 AUG, 2024 | 09:53 AM தான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்வதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கிறேன். வேறு வேட்பாளர்களைக் களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற நிலைப்பாட்டில் தான் இருக்கவில்லையென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்னும் சில தினங்களில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக, திருடர்களுடன் டீல் இல்லாத அரசியல் ஒப்பந்தங்களுக்காக மக்களைக் காட்டிக் கொடுக்காத மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை மறந்து விடாத நன்றிக் கடன் அறிந்த ஒரு யுகத்தை உருவாக்கி, அந்த யுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களைப் போஷிக்கும் சுவர்ண மயமான காலமாக மாற்றி திருடர்களைப் பிடிக்கின்ற யுகமாக மாற்றுவோம். திருடர்கள் மோசடிக்காரர்கள் ஊழல்வாதிகள் ஆகியோருடன் தமக்கு டீல் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/191403
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் Published By: VISHNU 18 AUG, 2024 | 06:25 PM ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் , செல்லம் அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் யாழ் மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/191380
-
மட்டு நகரில் பிரபல உணவகத்தை 22ஆம் திகதி வரை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
Published By: VISHNU 18 AUG, 2024 | 06:11 PM மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். குறித்த பிரபல உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிடனர் இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையை கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26 ம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) வழக்கு தாக்குல் செய்ததுடன் குறித்த உணவகத்தின் மீது கடந்த மாச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடீ சீல்வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன், கோட்டமுனை பிரிவு பொது சுகாதர பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் ஆகியோர் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு மூடி சீல் வைத்தனர். https://www.virakesari.lk/article/191377
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
ஆப்ரிக்கா தாண்டி பிற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு - இந்தியாவில் மீண்டும் பரவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்பாக்ஸ் தொற்றின் அறிகுறிகளை கண்டறிய நிபுணர்கள் முயற்சிக்கின்றனர் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முராரி ரவி கிருஷ்ணா பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கோ உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளில் எம்பாக்ஸ் (குரங்கம்மை நோய்) பரவி வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ஆகஸ்ட் 14 அன்று சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR) நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பாய்வு செய்தார். இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர்? காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்த ஆண்டு இதுவரை 15,664 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 548 பேர் இறந்துள்ளனர். இந்த நோய் புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR), கென்யா மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்த மறுநாளே (ஆகஸ்ட் 15) ஆப்பிரிக்காவுக்கு வெளியே, தங்கள் நாட்டில் எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஸ்வீடன் அறிவித்தது. இந்த வைரஸ், க்ளேட் 1-இன் திரிபு என அடையாளம் காணப்பட்டது. பாகிஸ்தானில் இதுவரை மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், கீறினால், மனிதர்களுக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்படலாம் இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் கடந்த காலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்ப இருந்துள்ளது. ஆனாலும், தற்போது இதுவரை ஒருவருக்கு கூட அதன் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு முன் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவிய போது, இந்தியாவிலும் சிலர் பாதிக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எம்பாக்ஸ் வைரஸ் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் வெளியிட்ட அறிக்கையில், 2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதிக்கு முன்பாக நாட்டில் 27 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். கேரளாவில் 12 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தியாவில் மீண்டும் குரங்கம்மை ஏற்படுமா? மூத்த ஆலோசகர் மருத்துவர் சிவராஜூ பிபிசியிடம் பேசுகையில், “உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே, அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும். நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என நிபுணர்கள் கூறுகின்றனர் “விமான நிலையங்களில், நாட்டுக்குள் வரும் பயணிகளின் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார்கள் என்பதை பதிவு செய்வது அவசியம். குறிப்பாக, இந்நோய் பரவும் நாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை ஆராய வேண்டும். விமான நிலைய சுகாதார அதிகாரிகள் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை பரிசோதிக்க வேண்டும்” என்றார். இருப்பினும், ஹைதராபாத்தில் உள்ள காய்ச்சல் மருத்துவமனை சி.எஸ்.ஆர்.எம்.ஓ., இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று கூறியுள்ளது. குரங்கம்மை என்பது என்ன? குரங்கம்மை வைரஸ் ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ். இது எம்பாக்ஸ் நோயை உண்டாக்குகிறது. இது பெரியம்மை போன்ற அறிகுறிகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதன் தீவிரம் குறைவு. 1980-ல் பெரியம்மை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை இன்னும் உள்ளது. இந்நோய் முதன்முதலில் 1958 இல் குரங்குகளில் கண்டறியப்பட்டது. பின்னர் 1970களில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தோலில் சொறி, புண் ஏற்படுவது ஆரம்ப அறிகுறியாக உள்ளது மே 2022 முதல், ஆப்பிரிக்கப் பகுதிக்கு வெளியேயும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. குரங்கம்மை வைரஸின் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை- கிளேட் I, கிளேட் II. இது பெரியம்மையுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், குரங்கம்மை பரவுவது குறைவு. அதன் தீவிரம் குறைவு. இருப்பினும், இது பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். எம்பாக்ஸின் அறிகுறிகள் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஒரு வாரத்திற்குள் எம்பாக்ஸின் அறிகுறிகள் தோன்றும். இருப்பினும், அவை ஒன்று முதல் 21 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக 2-4 வாரங்கள் நீடிக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது கூடுதல் நாட்கள் நீடிக்கலாம். எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, தசை வலி, முதுகுவலி மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு, எம்பாக்ஸ் முதலில் சொறி வடிவில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். செயலிழந்த கைகளுக்கு புத்துயிர் தரும் 'எலெக்ட்ரிக் பல்ஸ்' சிகிச்சை17 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MIKE ROEMER/GETTY IMAGES படக்குறிப்பு, கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளால் 2003ல் அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது ஒரு புண் போல் தொடங்கி திரவம் நிறைந்த கொப்புளமாக உருவாகிறது. சொறி குணமாகும் போது புண்கள் காய்ந்து கொப்புளங்கள் உதிர்ந்து விடும். புண்கள் குணமடைந்து புதிய தோல் உருவாகும் வரை, அவை மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள் எம்பாக்ஸால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எப்படி பரவுகிறது? எம்பாக்ஸ் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வாய் அல்லது பிறப்புறுப்பில் உள்ள தோல் புண்கள் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவைதவிர, பின்வரும் காரணங்களாலும் இந்நோய் பரவலாம். நேருக்கு நேர் (பேசுதல் அல்லது சுவாசித்தல்) தொடுதல் அல்லது உடலுறவு வாயிலாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் வாய்வழி உறவு அல்லது தோலில் முத்தமிடுதல் சளி, தோல் காயம் வாயிலாக இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. எம்பாக்ஸ் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கலாம். அதிக நபர்களுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், கீறினால், மனிதர்களுக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்படலாம். எம்பாக்ஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது? மற்ற நோய்த்தொற்றுகள் போல தோற்றமளிப்பதால், எம்பாக்ஸ் நோயைக் கண்டறிவது கடினம். எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க பரிசோதனை மிகவும் முக்கியமானது, இதனால் மக்கள் கூடிய விரைவில் சிகிச்சை பெற முடியும். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் வைரஸ் டிஎன்ஏவை கண்டறிவது எம்பாக்ஸ்-ஐ கண்டறிவதற்கான ஒரு சிறந்த முறையாகும். இதில் நோயறிதலுக்காக தோல், திரவம் அல்லது கொப்புளங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இருப்பினும், நோயறிதலுக்கு ரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படவில்லை. ஆன்டிபாடி கண்டறிதல் முறைகள் பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் அவை வெவ்வேறு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களை வேறுபடுத்துவதில்லை. சிகிச்சை என்ன? உலக சுகாதார நிறுவனத்தின் படி, எம்பாக்ஸ்-க்கு மூன்று தடுப்பூசிகள் உள்ளன. MBA-BN, LC16 மற்றும் OrthopoxVax என மூன்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. எம்பாக்ஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கலாம். எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வெளிப்பட்ட 4 நாட்களுக்குள் (அல்லது அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்குள்) தடுப்பூசி போடப்பட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குரங்கம்மை தொற்றாமல் தடுக்கலாம் எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள் சுகாதாரப் பணியாளர்கள், தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பது எப்படி? எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 2-4 வாரங்களுக்குள் குணமடைவார்கள். அறிகுறிகளைக் குறைக்கவும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனி அறையில் தங்க வைக்க வேண்டும். கைகளை சானிட்டைசர் அல்லது சோப்பு மூலம் அடிக்கடி கழுவ வேண்டும். புண்களைத் தொடுவதற்கு முன் அல்லது சொறி குணமாகும் வரை முகக்கவசத்தை அணிய வேண்டும் மற்றவர்கள் அருகில் இருக்கும்போது காயங்களை மறைக்க வேண்டும். உங்கள் வாயில் புண்கள் இருந்தால், உப்பு நீரில் கொப்பளிக்க வேண்டும். பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொப்புளங்களை உடைக்கவோ அல்லது புண்களை கீறவோ கூடாது கொப்புளங்களை உடைக்கவோ அல்லது புண்களை கீறவோ கூடாது, இது குணமடைவதை தாமதப்படுத்தும். உடலின் மற்ற பகுதிகளுக்கு சொறி பரவும். கொப்புளங்கள் குணமாகும் வரை அப்பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு எம்பாக்ஸ் பரவுவதைத் தடுக்க, எம்பாக்ஸ் உள்ளவர்களை நோய் குறையும் வரை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்த வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் முகக்கவசத்தை அணிந்தால் அத்தொற்று பரவாமல் தடுக்கலாம். உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம். https://www.bbc.com/tamil/articles/c23lmre7jrpo
-
வானில் பறக்கும் ஆறுகள்: கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்த வல்ல இவற்றைப் பின்தொடரும் விஞ்ஞானிகள்
Flying rivers: பேரழிவிற்கு வித்திடும் பறக்கும் நதிகள்; எப்படி உருவாகிறது?
-
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா: ஜிப்லைனில் ஆற்றைக் கடக்கும் துணிச்சல் எப்படி வந்தது?
Wayanad landslide: நிலச்சரிவு எச்சரிக்கை; zipline-ல் risk பயணம் - உதவிக்கு சென்ற TN Nurse Sabeena
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
யாழில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழ் பொது வேட்பாளர் விஜயம் 18 AUG, 2024 | 04:28 PM தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உட்பட மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று (18) காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இன்று காலை தந்தை செல்வா நினைவு சதுக்கத்துக்கு சென்ற பொது வேட்பாளர் மற்றும் குழுவினர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தும் ஆசி பெற்றனர். அத்தோடு, ஏனைய மத ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டு, மத தலைவர்களிடமும் ஆசி பெற்றனர். https://www.virakesari.lk/article/191371
-
ராஜஸ்தான்: பள்ளியில் 2 மாணவர்களின் மோதல் மிகப்பெரிய வகுப்புவாத வன்முறையாக மாறியது எப்படி?
பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, உதய்பூர் நகரின் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், மோஹர் சிங் மீனா பதவி, ஜெய்பூரிலிருந்து, பிபிசி இந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் அறியப்பட்ட கன்ஹையா லால் கொலை வழக்குக்குப் பிறகு, ராஜஸ்தானின் உதய்பூர் மீண்டும் வகுப்புவாத பதற்றத்தால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை உதய்பூர் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் பெரிதான நிலையில், அன்று மாலையில் தீ வைப்பு, கல் வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்கள் ஆகியவை நடைபெற்றன. இதனால் எழுந்த அச்சத்தின் காரணமாக அந்நகரில் உள்ள பெரும்பாலான சந்தைகள் மூடப்பட்டன. இதற்கிடையில், நீண்ட வார விடுமுறை காரணமாக, பல மாநிலங்களில் இருந்து உதய்பூர் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உதய்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். கடந்த கால வகுப்புவாத சம்பவங்களை கருத்தில்கொண்டு, நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவைகளையும் உதய்பூர் நிர்வாகம் முடக்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என, உதய்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளதுடன் வழிபாடு போன்ற மத நடவடிக்கைகளை வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் வீட்டை சட்டவிரோத கட்டுமானம் என்று கூறி, உதய்பூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை குழுவினர் புல்டோசர் மூலம் தகர்த்தனர். காவல்துறையினரின் முன்னிலையில் அம்மாணவரின் வீடு இடிக்கப்பட்டது. மாணவரின் வீட்டில் இதுதொடர்பாக நோட்டீஸ் ஒன்றையும் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். வீடு இடிக்கப்படுவதற்கு முன்பு, உள்ளே இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பிபிசியிடம் பேசிய உதய்பூர் நகர பாஜக எம்.பி. டாக்டர் மன்னா லால் ராவத், வீடு இருந்த பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது என்றார். புல்டோசர் கொண்டு வீடு இடிக்கப்பட்டது குறித்து துங்கர்பூர்-பன்ஸ்வாரா எம்.பி. ராஜ்குமார் ரோட் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்குமார் ரோட் பிபிசியிடம் கூறுகையில், "உதய்பூர் நகரில் பள்ளி மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்று 18 வயதுக்குட்பட்ட சிறுவனின் வீட்டின் மீது புல்டோசரை இயக்கி பாஜக அரசு வகுப்புவாத விஷத்தைப் பரப்பியுள்ளது” என்றார். "சாதி மற்றும் மத அடிப்படையில் புல்டோசர்களை இயக்குவது நாட்டின் எதிர்காலத்தை வெறுப்புக்குள் தள்ளுகிறது." என தெரிவித்தார். என்ன நடந்தது? உதய்பூரில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இரண்டு மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த மாணவரை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பள்ளி ஆசிரியர்கள் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், இந்து அமைப்பினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகரின் பல பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி கற்களை வீசத் தொடங்கினர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. படுகாயம் அடைந்த மாணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர். சனிக்கிழமை காலையிலும் ஏராளமானோர் மருத்துவமனை முன் திரண்டனர். 'கொல்கத்தா போல சென்னையிலும் நடக்கலாம்' - தமிழக மருத்துவ மாணவிகள் கூறுவது என்ன?18 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, கத்தியால் குத்தியதாக கூறப்படும் மாணவரின் வீட்டை நிர்வாகம் இடித்தது காயமடைந்த மாணவருக்கு வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மாணவரிடம் நலம் விசாரித்தனர். உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மாணவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஜெய்ப்பூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மருத்துவர்கள் குழு உதய்பூர் வந்தடைந்துள்ளது. நகரில் தற்போது அமைதி நிலவுகிறது." என்றார். மாணவர்கள் மோதல் ஏன்? ராஜஸ்தான் காவல்துறையின் பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், மோதலுக்கான காரணத்தை பிபிசியிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இரு மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவர்களுக்கிடையே நோட்டுப் புத்தகங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது." என்றார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி - பதவிக்கு ஆபத்தா?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது "புத்தகத்தில் ஆரம்பித்த இந்த சண்டை, பின் இருவருடைய குடும்ப பின்னணி குறித்தும் வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்கியுள்ளார்” என்றார். இரு மாணவர்களுக்கும் இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று பள்ளியில் மதிய உணவு நேரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், ஹாதிபோல், டெல்லி கேட், சேடக் சர்க்கிள் உள்ளிட்ட பல சந்தைகளை இந்து அமைப்புகள் மூடின. அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது கற்கள் வீசப்பட்டு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைக்கப்பட்ட, குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலங்களிலும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் பலர் கூட்டமாக திரண்டு கோஷங்களை எழுப்பி, பல்வேறு இடங்களை சேதப்படுத்துவதை காண முடிகிறது. இந்த சம்பவம் குறித்து உதய்பூர் மூத்த பத்திரிகையாளர் உக்ரசென் ராவ் கூறும்போது, "மாணவர்களின் சண்டை, மத வெறியர்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. இச்சம்பவம் மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். எம்பாக்ஸ் தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது, யாரை அதிகம் பாதிக்கும் - 5 முக்கிய கேள்வி பதில்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு,கட்டடங்களும் சேதப்படுத்தப்பட்டன அவர் கூறும்போது, "அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் உதய்பூருக்கு தீங்கு விளைவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவல்துறையிடம் அனைத்து சிசிடிவி காட்சிகளும் உள்ளன. பொதுமக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் யார் இதை செய்தார்களோ அவர்களுக்கு தனிப்பட்ட நலன்களோ அல்லது அரசியல் ஆதாயமோ இதில் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். உதய்பூரில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், "இந்த வன்முறையில் மக்கள் குறிவைக்கப்பட்டனர். சொத்துகள் நாசப்படுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டன" என்றார். ராஜஸ்தான் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) யு.ஆர். சாஹு பிபிசியிடம் கூறுகையில், "இப்போது நகரில் அமைதி நிலவுகிறது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. காழ்ப்புணர்ச்சி, தீ வைப்பு மற்றும் கல் வீச்சுகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். சேத விவரங்கள் இந்நகரின் அழகை காண இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். ஏரிகளின் நகரம் என்றழைக்கப்படும் உதய்பூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பண்டிகை நேரம் மற்றும் நீண்ட வார விடுமுறை காரணமாக, உதய்பூர் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். கன்ஹையா லால் கொலை வழக்குக்குப் பிறகு, அந்நகரில் காலப் போக்கில் மத நல்லிணக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த நகரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஹோட்டல் தொழிலுடன் தொடர்புடைய ககன் ஷர்மா கூறுகையில், "நீண்ட வார விடுமுறை என்பதால், அனைத்து ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இச்சம்பவத்திற்கு பிறகு ஹரியானா, குஜராத், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான வாகனங்கள் உதய்பூரில் இருந்து வெளியேறின. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் உதய்பூரை விட்டு வெளியேறினர்” என்றார். மோதியுடன் முகமது யூனுஸ் பேச்சு - வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு பற்றி என்ன சொன்னார்?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு,பல கடைகள் மூடப்பட்டுள்ளன இந்த சம்பவத்தையடுத்து நகரில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. ககன் ஷர்மா கூறும்போது, "இச்சம்பவத்தால் உணவகத் தொழில் அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. உணவகங்கள் அடுத்த சில நாட்களுக்கு மூடப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நீண்ட வார விடுமுறை நாட்களின் எதிர்பார்ப்புகள் தகர்க்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், 15 முதல் 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். மூத்த பத்திரிகையாளர் உக்ரசென் ராவும் இதுபோன்ற சம்பவங்களால் உதய்பூர் மக்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என நம்புகிறார். “உதய்பூர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த இழப்பை உதய்பூர் மக்களே ஏற்படுத்தியிருக்கின்றனர்” என்கிறார். “இதனால் சுற்றுலாத் துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு வரவிருந்தவர்கள் தங்கள் வருகையை ரத்து செய்துவிட்டனர். சந்தையிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது” என்றார் அவர். காவல்துறை கூறியது என்ன? உதய்பூர் பிரிவின் கோட்ட ஆணையர் ராஜேஷ் பட் கூறும்போது, "உதய்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகர் குறித்த நல்ல பிம்பத்துடன் வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தற்போது நகரில் அமைதி நிலவுகிறது. மேலும் சில சந்தைகளும் திறக்கப்பட்டுள்ளன." என்றார். பிபிசியிடம் பேசிய அவர், "நேற்றிரவுக்குப் பிறகு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அமைதியான சூழல் நிலவுகிறது" என்றார். ராஜேஷ் பட் கூறுகையில், “காயமடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணிநேரமும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வருகின்றன. அவரது உடல்நிலை முன்பை விட சிறப்பாக உள்ளது. மாநில அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் (சிறுநீரக மருத்துவர்) அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார். கோலார் தங்க வயல் யாரால், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? உண்மை வரலாறு17 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு,உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் மேலும் அவர் கூறுகையில், “மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரிடமும் பேசினோம். அனைத்து மதத் தலைவர்களிடமும் பேசினோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என அனைவரும் விரும்புகின்றனர்." என்றார். ராஜஸ்தான் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) யு.ஆர். சாஹு பிபிசியிடம், "அருகிலுள்ள பகுதிகளில் இருந்து போலீஸ் படைகள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கத்தியால் குத்திய மாணவர் தடுப்பு காவலில் உள்ளார், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். நாச வேலை மற்றும் தீ வைப்பு சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த சம்பவம் நடந்ததில் இருந்து உதய்பூர் பிரிவு ஐ.ஜி. அஜய் பால் லம்பா நகரின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். சனிக்கிழமை காலை அவர் மீண்டும் நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார். “தற்போது மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் அமைதி நிலவுகிறது, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் போலீசார் தடுப்புகளை அமைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? நிலைமை மோசமடைவதைக் கண்டு, மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலைக்குள் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இணையதள சேவையை நிறுத்தியது. சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரு தரப்பு மக்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் காவல் துறையினர் கூட்டம் நடத்தி அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். காயமடைந்த மாணவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஜெய்பூரில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு உதய்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கைகளுக்கு புத்துயிர் தரும் 'எலெக்ட்ரிக் பல்ஸ்' சிகிச்சை17 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு,மக்கள் பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை உதய்பூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. உதய்பூர் நகரில் 144 (புதிய திருத்தப்பட்ட சட்டப் பிரிவு 163) தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் இடைநிலைக் கல்வி இயக்குநர் ஆஷிஷ் மோதி, பள்ளிகளில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு வருவதற்குத் தடை விதித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியினர் கூறுவது என்ன? மக்கள் அமைதி காக்குமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதலமைச்சர் பஜன் லால் சர்மாவின் அறிக்கையை அவரது ஊடக குழுவைச் சேர்ந்த ஆனந்த் சர்மா பிபிசிக்கு அனுப்பினார். அந்த அறிக்கையில், "அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை உறுதி செய்யவும் உதய்பூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஐந்து ராஜஸ்தான் ஆயுதக் காவல் படைகள் (ஆர்.ஏ.சி) உதய்பூர் மாவட்டத்திற்கு விரைய காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார். பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்வதில் ஏன் தாமதம்? 3 முக்கிய காரணங்கள்16 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஜன் லால் சர்மா அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், உதய்பூர் பிரிவு ஐஜியுடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து தகவல் பெற்றார். அமைதியை நிலைநாட்டுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், "உதய்பூரில் நிலவும் வகுப்புவாத பதற்றம் காரணமாக நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அசோக் கெலாட் இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திக்காராம் ஜூலி பேசுகையில், "வதந்திகளைப் பரப்பும் தீய சக்திகளைக் கட்டுப்படுத்தி, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட அரசு மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்" என்றார். உதய்பூர் நகர எம்.பி. மன்னா லால் ராவத் பிபிசியிடம் தொலைபேசியில் கூறுகையில், "இச்சம்பவம் மிக தீவிரமானது. இரு மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அந்த மாணவர்களில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், நகரின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது” என்றார். https://www.bbc.com/tamil/articles/cpvykdk40g2o
-
இரசித்த.... புகைப்படங்கள்.
யாரோ நம்மடையாக்கள் தான் போல!
-
காதல் காவியம் பாடும் இருவாச்சி பறவைகள்
Published By: VISHNU 18 AUG, 2024 | 09:17 PM பறவை இனங்களிலேயே அரிதான, அழகான பறவை என்றால் இடத்தில் இருப்பது ‘ஹோர்ன் பில்’ என்று சொல்லக்கூடிய இருவாச்சி பறவைக் கூட்டம் தான். இருவாச்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை ஹோர்ன்பில்” (Horn bill) என அழைக்கின்றன உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி இனங்கள் இருக்கின்றன. இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. இவை பெரிதும் இந்தியாவின் நேபாளம், அந்தமான் தீவுகள் மற்றும் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள் அருணாசலப் பிரதேசம், ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இங்கு 9இனங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் 4வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. இவை ஆண் இருவாச்சி பறவை முதலில் பெண் இருவாச்சிபறவைக்கு பழம், பூச்சிகள் போன்றவற்றை வழங்கும். பெண் இருவாச்சி அதில் ஈர்க்கப்பட்டால் மட்டுமே ஆண் பறவையைத் தனது இணையாகத் தேர்வு செய்யுமாம். பின்னர் தமது காதலை வெளிப்படுத்த இரண்டுமே உயரமாகப் பறந்து வரும். இரை தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறும் வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்து செல்லுமாம். காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இரு பறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின் கூடு. இனப்பெருக்க காலங்களில் பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு முன் கூண்டிற்குள் சென்றுவிடும். பின்னர், பெண் பறவைக்கு உணவு அளிப்பதற்குச் சிறிய துவாரம் மட்டும் விட்டுவிட்டு, ஆண் பறவை மண்ணாலும் எச்சத்தாலும் கூட்டை அடைத்துவிடும். கூட்டில் இருக்கும் பெண் பறவை தனது இறகுகளை உதிர்த்து, மெத்தை போல் செய்து அடைகாக்கும். குஞ்சுகள் பறக்கும் நிலை வரும் வரை பெண் பறவை கூண்டிலேயே இருக்கும். பெண் பறவை சென்றவுடன், குஞ்சுகளை பராமரிக்கும் முழு பொறுப்பும் ஆண் பறவைதான் மேற்கொள்ளும். அவைகளுக்கு, பறக்கவும், இரை தேடவும் கற்றுக்கொடுப்பதும் ஆண் பறவையின் பணியாகும். இதில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தக்கூடிய விடயம் என்னவெனில்! அடைகாக்கும் காலத்தில், பெண் பறவைக்காக இரை தேடிச்செல்லும், ஆண் பறவை திரும்பவில்லை என்றால், பெண் பறவை உயிர்விடுவதை தவிர வேறு வழியில்லை. இவ் விடயம் காதலின் உச்சபட்ச ஈடுபாட்டை வெளிபடுத்துகிறது. திருச்செல்வம் ஜனனீ ஊடகத்துறை, யாழ். பல்கலைக்கழகம். https://www.virakesari.lk/article/191392