Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வீட்டுத்திட்டம் சம்பந்தமான ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை @குமாரசாமிஅண்ணைக்கு வட்சப்பில் அனுப்பி உள்ளேன். விரைவில் புதிய படங்கள், காணொளியை எடுத்து பகிர்கிறேன். மலசலகூடம் அரைவாசி கட்டியபடி பிற் வெட்ட போதிய நிதி வசதி இல்லாததால் பூரணப்படுத்த காத்திருக்கிறார்கள்.
  2. தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை! 05 Jan, 2026 | 05:36 PM தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களைப் பதற்றத்துக்குள்ளாக்கும் எதிர்வுகூறல் அல்ல என்பதுடன் மக்களை விழிப்பூட்டித் தயார்ப்படுத்தும் எதிர்வுகூறல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே (நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும். வடக்கு மாகாணத்திற்கான மிகக் கனமழையும் வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கையும். இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும். ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகனமழையும் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும். உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகக்கனமழை பெய்யும் என்பதனாலும் யாழ்ப்பாணம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி (மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு (மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா (மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம் (மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் (மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது. இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம். தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235293
  3. அத தெரண கருத்துப்படம்.
  4. அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா Published By: Digital Desk 3 05 Jan, 2026 | 03:19 PM வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார். அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், “வெனிசுவேலாவில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் ” குறித்து அவர் சுட்டிக்காட்டினார். “சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் சீனாவின் தலைமைத் தூதுவர் வலியுறுத்தினார். அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 63 வயதான மதுரோ கண்கட்டி, கைகட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சனிக்கிழமை வெளியாகி வெனிசுவேலா மக்களை அதிர்ச்சியடையச் செய்ததைத் தொடர்ந்து, வாங் யி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும். நிக்கோலாஸ் மதுரோ தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நியூயோர்க்கில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். உலகளாவிய தூதரக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை பீஜிங் கொண்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான எதிர்பாராத நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நோக்கத்தை சீனா தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, “உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றுவோம்” என சீனா உறுதியளித்திருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக மோதித் தன்னை நிலைநாட்டிய அனுபவம், சீனாவின் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். “இது சீனாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெனிசுவேலாவுக்கு நம்பகமான நண்பராக தங்களை காட்ட விரும்பினோம்,” என்று மதுரோ கைது செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவ்சியுடன் (Qiu Xiaoqi) அவர் நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்திருந்த சீன அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மதுரோவின் மகன் 2016ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்ற சீனாவின் முன்னணி பெக்கிங் பல்கலைக்கழகத்தை ((Peking University) 2024ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பாக தூதரக ஈடுபாடுகள் இருந்தபோதும், அவர் மீண்டும் சீனாவுக்கு திரும்புவாரா என்பது குறித்து உறுதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடைகளை கடுமையாக்கியதிலிருந்து வெனிசுவேலாவுக்கு பொருளாதார ஆதரவாக இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் சமீபத்திய முழு ஆண்டுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனா சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வெனிசுவேலாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. சீனாவின் மொத்த கொள்முதல்களில் கிட்டத்தட்ட பாதி மசகு எண்ணெயாகும். மேலும், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் (American Enterprise Institute) என்ற சிந்தனைக் குழு வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டுக்குள் வெனிசுவேலாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன. https://www.virakesari.lk/article/235255
  5. மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் Jan 5, 2026 - 06:17 PM பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார். புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இங்கு இருக்கின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி இலாபம் அடையலாம் என யோசித்து இங்கு வந்து தொழில் நிறுவனங்களை அமைக்கின்றனர். ஆனால் எமது புலம்பெயர்ந்த உறவுகள் கோடிக்கணக்கில் காணிகளை வாங்கி விட்டு அதில் மேல்மாடிகளை கட்டிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவ்வாறான முதலீடுகள் செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை வழங்கி எமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk15op2b03jmo29nhbphh488
  6. 400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி விளையாடி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தினர். செரெண்டிப் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக அமைந்தது. போட்டியின் முதல் 18 நிமிடங்கள் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் வீண் போயின. அதன் பின்னர் இரண்டு அணியினரதும் பந்துபரிமாற்றங்கள் மோசமாக இருந்ததால் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடப்படவில்லை. இடைவேளைக்குப் பின்னர் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய இரண்டிலும் திறமையை வெள்ளிப்படுத்திய செரெண்டிப் கழகம அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியே சென்றன. இவ்வாறு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட செரெண்டிப் கழகம் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கழகத்தின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் விளையாடியது. இதன் பலனாக உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் பரிமாறிய பந்தை ஆறு யார் கட்டத்துக்கு அருகிலிருந்தவாறு அபிஷான் பலமாக உதைத்து கோலாக்கி, செரெண்டிப் கழகத்திற்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அபிஷான், 'இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததால் நானும் எனது மூத்த சகோதரனும் யாழ்ப்பாணத்திலேயே பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஏனைய செரெண்டிப் வீரர்களுடன் எங்களுக்கு பயிற்சிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், செரெண்டிப் கழக முகாமைத்துவம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முழு நேரமும் விளையாடவைத்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்காக அணி முகாமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஏனைய வீரர்களுடன் நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியில் செரெண்டிப் கழகத்தை நான் வெற்றிபெறச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என தூய தமிழ் மொயில் தெரிவித்தார். பெலிக்கன்ஸ் கழகத்திடமும் பொலிஸ் கழகம் தோல்வி இதே மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி குழு போட்டியில் பொலிஸ் கழத்தை எதிர்த்தாடிய குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பொலிஸ் கழகம் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தோல்வியைத் தழுவியது. பெலிக்கன்ஸ் கழகம் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோஜோ அனோக்யே 25 யார் தூரத்திலிருந்து தாழ்வாக உதைத்த பந்தை நோக்கி இடதுபுறமாகத் தாவிய பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனினால் தடுக்க முடியாமல் போனது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்த பொலிஸ் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீண்போயின. ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் கழக வீரர் கயான் ரிவால்டோ பலமாக உதைத்த பந்தை பெலிக்கன்ஸ் கோல்காப்பாளர் ரங்கன ஜயசேகர வேகமாக செயல்பட்டு திசை திருப்பினார். அவரது திறமையான கோல் தடுப்பும் பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. https://www.virakesari.lk/article/235242
  7. எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு Jan 5, 2026 - 04:46 PM எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmk12eqyd03jeo29nqci0xzap 9, 10 ஆம் திகதிகளில் கடும் மழைக்கான வாய்ப்புள்ளதாக தரவுகள் எச்சரிக்கின்றன.
  8. ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்! 05 Jan, 2026 | 03:31 PM பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது. இம் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பேரவைக்கான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களால் டிசம்பர் 30ம் திகதி நீதி அமைச்சின் அலுவலகத்தில் நீதியமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் ஜனநாயக விரோத, மனித உரிமைகுக்கு எதிரான அபாயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்புக்காவல் உத்தரவுகலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அதேவேளை , தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகலின் கீழ் நீதிமன்ற நடைமுறை மூலம் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் இயலுமாநதாக இருக்குப் போதே, தற்போதைய அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் புதிய சட்டங்களை கொண்டு வர முனைகிறது எனபதும் வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/235262
  9. ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை Jan 5, 2026 - 12:30 PM முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அந்தச் சம்பவம் தொடர்பில், அப்போதைய அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, அவர் இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk0t9x0h03iso29njj76o0uk
  10. முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு என்று எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த செயற்பாட்டறிக்கையிலும் குறிப்பிடலாம் அல்லது தனியாகவே முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என செயற்பாட்டறிக்கை வரவு செலவு விபரம் தயாரிக்கலாம். எல்லோருடைய கருத்தையும் பெற்று செயற்படுவோம். @குமாரசாமி அண்ணையும் யாழில் இருந்து புலர் அறக்கட்டளைக்கு உதவும் நல்லுள்ளம். அவரையும் எமது மூடப்பட்ட(எல்லோரும் தகவல் பரிமாற முடியாது, அட்மின் மட்டும் விபரங்களை போடுவார்) whatsapp குழுவில் ஏற்கனவே நான் இணைத்துள்ளேன். அது போல Telegram ல் ஒரு குழுவை(Mobile number தெரியாமல் பெயர் மட்டும் இருக்கும்) உருவாக்கி தகவல்களை பரிமாறலாம். whatsapp business இலும் நம்பர் தெரியாது குழு உருவாக்கலாம் என நினைக்கிறேன். தொழிநுட்பம் தெரிந்த யாழ் உறவுகள் விளங்கப்படுத்துங்கோ.
  11. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 05 Jan, 2026 | 08:35 AM தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார். அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235232
  12. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை Jan 5, 2026 - 09:49 AM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைதானார். அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk0nj1jj03ilo29nxi2h1ips
  13. வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு பட மூலாதாரம்,US government படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் மற்றும் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர் வாஷிங்டனில் இருந்து வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பார்வையிட்டனர். கட்டுரை தகவல் ஆண்டனி ஸூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் வெனிசுவேலாவில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் ரகமான ஒரு இரவு நேரத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயலில் இறங்குவது போல் தெரிகிறது. சனிக்கிழமை காலை தனது மார்-ஏ-லகோ ஓய்வு விடுதியில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாளர் சந்திப்பில், கராகஸில் இரவு நேர நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பிடித்ததாக அதிபர் அறிவித்தார். அதன்பிறகு, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் உள்ளிட்ட குழுவினர், வெனிசுவேலா மக்களுடன் இணைந்து, சிக்கலில் தவிக்கும் அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பார்கள் என்று டிரம்ப் கூறினார். "ஒரு பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றத்தைச் செய்யும் வரை நாங்கள் அந்த நாட்டை நிர்வகிப்போம்," என்று அவர் கூறினார். "நாட்டை நிர்வகிப்பது" என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வாக்குறுதி அதிபரின் போக்கில் முரண்பாடுகளும் அச்சுறுத்தும் தடைகளும் நிறைந்த ஒரு திடீர் மாற்றத்தைக் காட்டுகிறது "முடிவில்லாப் போர்களுக்கு" எதிராகப் பிரசாரம் செய்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்த மற்றும் "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதாக உறுதியளித்த ஒரு அதிபர், இப்போது தனது அதிபர் பதவியையே பொருளாதாரம் சீர்குலைந்துள்ள மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பல தசாப்த கால சர்வாதிகாரத்தால் சிதைக்கப்பட்டுள்ள ஒரு தென் அமெரிக்க நாட்டை மறுசீரமைப்பதில் பணயம் வைத்துள்ளார். இருப்பினும் டிரம்ப் இடைவிடாத நம்பிக்கையுடன் இருந்தார். தனது நிர்வாகம் "வெற்றி பெறுவதில் ஒரு சரியான சாதனை தடத்தை கொண்டுள்ளது" என்றும் - இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார். வெனிசுவேலாவின் சிதைந்து வரும் தொழில்முறை உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் ஈடுபடும் என்று அவர் உறுதியளித்தார். இது அமெரிக்காவின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதி வழங்கும் மற்றும் வெனிசுவேலா மக்களுக்குப் பயனளிக்கும் என்றார் அவர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல் பற்றி ரஷ்யா, சீனா, கியூபா கூறியது என்ன? குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்? கிரிக்கெட் நடுவராவது எப்படி? தகுதி, தேர்வு முறை, ஊதியம் மற்றும் சலுகைகள் விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது இந்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்க வீரர்களை வெனிசுவேலாவிற்கு அனுப்பும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. "நாங்கள் தரைப்படையைப் பயன்படுத்த அஞ்சவில்லை... நேற்றிரவு எங்கள் வீரர்கள் அங்கே இருந்தார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,Getty Images இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், இப்போது இராக் போரை வடிவமைத்தவர்களில் ஒருவரான வெளியுறவுத்துறை செயலாளர் காலின் பவலின் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியிருக்கும்: "நீங்கள் ஒன்றை உடைத்தால், அதற்கு நீங்களே உரிமையாளர்" நன்மையோ, தீமையோ அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு அமைதியை நிலைநாட்டுபவராக இருப்பேன் என கூறி டிரம்ப் பதவியேற்றார். ஆனால் உலகம் முழுவதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பதை கடந்த ஒரு ஆண்டில் அவர் நிரூபித்துள்ளார். கடந்த வாரத்தில், சிரியா மற்றும் நைஜீரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 2025-இல் அவர் இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், கரீபியனில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள், ஏமனில் உள்ள கிளர்ச்சிப் படைகள், சோமாலியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களைத் தாக்க உத்தரவிட்டார். கடந்தகால நடவடிக்கைகள் பெரும்பாலும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை உள்ளடக்கியவை, அவை அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைத்தன. ஆனால் டிரம்பின் வெனிசுவேலா தாக்குதல் - மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது உறுதிப்பாடுகள் - குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை. அவரது குறிக்கோள், வெனிசுவேலாவை "மீண்டும் சிறந்ததாக்குவது" (Make Venezuela great again) என்று அவர் தனது செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். டிரம்பின் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" என்ற முழக்கத்தின் இந்த தாக்கம், டிரம்பின் சில ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். பட மூலாதாரம்,TRUTH SOCIAL படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ டிரம்ப் ஆதரவாளராக இருந்து, அவர் தனது அரசியல் தளத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரிடமிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபரின் நடவடிக்கைகளைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக பதிவிட்டார். "முடிவே இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்கான நமது அரசின் ஆதரவு மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் வெறுப்பு நியாயமானது; ஏனெனில் அதற்குப் பணம் செலுத்த நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இரு தரப்புமே வாஷிங்டனின் ராணுவ இயந்திரத்திற்கு எப்போதும் நிதி வழங்கி அதனைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார். "இதனை முடிவுக்குக் கொண்டு வரத்தான் தாங்கள் வாக்களித்ததாக பல MAGA ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தவறாக கணித்துவிட்டோம்." டிரம்பின் மற்றொரு முக்கிய விமர்சகரான கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி, மதுரோ மீது ஆயுதங்கள் மற்றும் கோகெயின் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையும், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க எண்ணெயை மீட்டெடுப்பது மற்றும் ஃபென்டானில் உற்பத்தியை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டு விமர்சித்தார். பெரும்பாலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர். சபாநாயகர் மைக் ஜான்சன், ஒரு "குற்றவியல் ஆட்சிக்கு" எதிரான இந்த ராணுவ நடவடிக்கையை "தீர்க்கமானது மற்றும் நியாயமானது" என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது, வெனிசுவேலா நடவடிக்கை தனது "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாக டிரம்ப் கூறினார். ஏனெனில் இது அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எண்ணெய்க்கான நிலையான ஆதாரத்தையும் வழங்கும் என்பது அவரது கருத்து. மேற்கத்திய அரைக்கோளம் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்கள்) ஐரோப்பிய சக்திகளின் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்தும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையான 'மன்றோ கோட்பாட்டை' அவர் மீண்டும் கையில் எடுத்து, அதற்கு "டான்ரோ கோட்பாடு" என்று டிரம்ப் புதிய பெயரிட்டார். பட மூலாதாரம்,Jeenah Moon/Reuters படக்குறிப்பு,மதுரோவை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் ஹெலிகாப்டர் மன்ஹாட்டனில் தரையிறங்கிய போது எடுத்த படம் வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, "மேற்கத்திய அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது" என்பதைக் காட்டுகிறது என்று டிரம்ப் கூறினார். புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தியின் குறிக்கோள், "நமது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமாக விளங்கும் வர்த்தகம், நிலப்பரப்பு மற்றும் வளங்களைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் கூறினார். அவர் மேற்கத்திய அரைக்கோளத்தை அமெரிக்காவின் "சொந்த பிராந்தியம்" என்று வர்ணித்தார். மதுரோவை சிறைபிடிக்க டிரம்ப் எடுத்த முடிவு, உலகளாவிய அரசியலில் பெரிய கவலைகளை எழுப்பும். உலகின் பிற முக்கிய ராணுவ வல்லரசுகளுடனான அமெரிக்காவின் உறவுகளையும் பாதிக்கும். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற தாக்குதலுக்கு அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பைடன் நிர்வாகத்தின் போது, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா இதேபோன்ற கண்டனங்களைத் தெரிவித்தது. இப்போது டிரம்ப் நிர்வாகம் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பல நேரங்களில் ரஷ்ய தரப்பிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரியும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ டிரம்பை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர் இன்னும் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். "அமெரிக்கா எந்தக் காரணத்திற்காகவும் மற்ற நாடுகளை நிர்வகிக்க கூடாது," என்று செனட் வெளியுறவு குழுவில் இடம்பெற்றுள்ள ஹவாயைச் சேர்ந்த பிரையன் ஷாட்ஸ் கூறினார். "அமெரிக்கர்களுக்குப் பேரழிவைத் தரும் விளைவுகளைக் கொண்ட முடிவில்லா போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் இந்நேரம் கற்றிருக்க வேண்டும்." நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால் சபாநாயகராக வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், "மதுரோ ஒரு குற்றவாளி மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்த சர்வாதிகாரி" என்றார். ஆனால் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காத டிரம்பின் முடிவைக் கண்டித்தார். "டொனால்ட் டிரம்ப் சட்டத்தைப் பின்பற்றவும், அமெரிக்காவில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளார்," என்று அவர் கூறினார். "அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அதுவே தேவை." தாக்குதலுக்கு முன்னதாகவே நடவடிக்கை விவரம் "கசியவிடப்படலாம்" என்ற கவலையாலேயே நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அந்த ராணுவ நடவடிக்கை ஒரு வெற்றியாக அமைந்தது - அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை மற்றும் அமெரிக்க உபகரணங்களுக்குச் சேதம் குறைவாகவே ஏற்பட்டது. டிரம்ப் தனது வழக்கமான பாணியில், இந்த நடவடிக்கையை ஒரு "அற்புதமான தாக்குதல்" என்றும், "அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவ பலம் மற்றும் திறமையின் மிகவும் ஆச்சரியப்படுத்தும், பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று இது" என்றும் விவரித்தார். இப்போது அவர் அந்த வெற்றி தொடரும் என்பதில் தனது அதிபர் பதவியையே பணயம் வைத்துள்ளார். வெனிசுவேலாவை நிர்வகிப்பதையும் புனரமைப்பதையும் ஏற்பதாக அமெரிக்கா கூறுகிறது அதன் உண்மையான பொருள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. டிரம்பும் அவரது குழுவினரும் பல தசாப்தங்களாகக் குழப்பத்தில் இருந்த ஒரு தேசத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று எண்ணும் ஒரு பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2xmd7klrlo
  14. இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார் Published By: Vishnu 05 Jan, 2026 | 03:57 AM இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர் இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்தர தலைவர்களோடு சந்தித்து பன்முக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற இருதரப்பு பணிகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும். இந்த விஜயம், இந்தியா – இலங்கை பாதுகாப்பு மற்றும் இராணுவத் திறன் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235226
  15. அராலிப்பகுதியில் இருந்து முதலாவது வேண்டுகோள் கடிதம். உண்மையில் 10 இலட்சம் ரூபாவில் வீடு கட்டுவது சாத்தியமில்லாத ஒன்று, இவர்களுக்கு மலசல கூடத்தை முழுமைப்படுத்தி வழங்கினால் வீடு கட்ட மலசல கூடத்திற்கு செலவாகும் (1.5 இலட்சம் பிற் வெட்டி, கட்டி முடிக்க) பணம் பயன்படும். (இக் கருத்தை காரைநகர் பிரதேச செயலகர் தன்னுடைய பிரதேச செயலக கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.} "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" குழுவினருக்கு வேண்டுகோள் என இனிவரும் கடிதங்களில் குறிப்பிடவா என கூறுங்கள்.
  16. அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்தை மீளப்பெற நிர்வாகிகளை (அதிபர், ஆசிரியர்) தொந்தரவு செய்யவேண்டும். அதனால் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று தர விரும்பினேன். இது சிரமம் என்றால் ஒரு வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன், அதனை "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இணைய வங்கிச்சேவை, குறுஞ்செய்தி வசதி, வங்கி வரவு, செலவு அறிக்கை என்பவற்றை பெறக்கூடிய வகையிலும் செயற்படுத்தி தருவேன். மாதம் மாதம் வங்கி அறிக்கையை இங்கே வெளிப்படையாக பகிர்கிறேன். அரசு கண்காணிப்பு(ஒரு தடவையில் 10 இலட்சத்திற்கு மேல் அனுப்புவது) இருப்பதால் கவனமாக நிதியை கையாளவேண்டும்.
  17. நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.
  18. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சுப் ராணா பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா? குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், "குளிர் காலத்தில் நமது தாகம் கணிசமாகக் குறைகிறது. நமக்கு குறைவாகவே வியர்க்கும், அதனால் உடலுக்குக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதைப் போல நாம் உணர்கிறோம்," என்று விளக்கினார். "பலர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள், அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து, வேண்டுமென்றே தண்ணீரை குறைவாகக் குடிக்கிறார்கள்" என்றார். மேலும், "கோடைக் காலத்தைப் போலவே குளிர் காலத்திலும் உடலுக்கு அதே அளவிலான தண்ணீர் தேவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஹீட்டர்கள், டிரையர்கள் மற்றும் உட்புற வெப்பமூட்டும் அமைப்புகள் காற்றை மிகவும் வறண்டதாக மாற்றுகின்றன. இது நீர் இழப்பை மேலும் அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images அமெரிக்க இதய சங்கத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, நீண்ட காலம் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. "குளிர் அதிகரிக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க புற ரத்த நாளங்களை உடல் சுருக்குகிறது" என்று மெட்டாமார்போசிஸ் (ஒரு ஆரோக்கியம் சார்ந்த தளம்) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் மற்றும் உணவு நிபுணருமான திவ்யா பிரகாஷ் கூறுகிறார். "இதனால் உடலின் மையப் பகுதிகளில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடல் எல்லாம் சரியாக இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் உணர்கிறது. இதன் காரணமாக, தாகம் எடுக்கும் உணர்வு 40% வரை குறையலாம். ஆனால் உடலின் அடிப்படைத் தண்ணீர் தேவையில் வானிலை சூழல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அந்தத் தேவை எப்போதுமே சுமார் 2.5 முதல் 3.5 லிட்டர் வரை இருக்கும்." என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் நமது உடலில் சுமார் 60% நீர் உள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புலின் குமார் குப்தா, "இந்த நீர் ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தின் மூலமாகத்தான் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் முழு உடலின் செல்களுக்கும் சென்றடைகின்றன," என்கிறார். "நீரின் அளவு குறையும்போது, ரத்தம் அடர்த்தியாகிறது. இது மூளை செயலிழப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அபாயம் குறிப்பாக குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். அடர்த்தியான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதற்கு இதயம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது." உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, மூளை ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது என்றார் அவர். மருத்துவர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து, மலச் சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேலும், நீண்ட காலம் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தோல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் உணவு நிபுணரும், 'ஒன் டயட் டுடே' அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் இது தொடர்பாகப் பேசும்போது, "அதிகப்படியான மந்தநிலை, பலவீனம், சோர்வு, அதிகரித்த மன அழுத்தம், பதற்றம் (நீர்ச்சத்துக் குறைபாடு கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது), தலைச்சுற்றல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற உணர்வுகள் என நீர்ச்சத்துக் குறைபாட்டை உணர்த்தும் சில சமிக்ஞைகளை நம் உடல் வெளியிடுகிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் உடல் செல்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதைக் குறிக்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெருப்பால் உடலை சூடுபடுத்துவது உடலிலுள்ள நீரின் அளவை குறைக்கிறது. யாருக்கு அதிக ஆபத்து உள்ளது? முதியவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் அனு அகர்வால். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் விளைவுகள் வெவ்வேறு வயதுப் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என்றும் மருத்துவர் அனு அகர்வால் விளக்குகிறார். ''இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடைய (40 வயது வரை) பெண்களுக்கு ஏற்கெனவே உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு உடலில் நீர்ச்சத்து குறைய வழிவகுக்கிறது. இதனால் மாதவிடாய் வலி அதிகரிக்கிறது, மேலும் வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.'' தொடர்ந்து பேசிய அவர், "குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது, நச்சுகள் உடலில் தங்கி கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது" என்றார். பட மூலாதாரம்,Getty Images தண்ணீர் குடிக்க சரியான வழி என்ன? தண்ணீர் குடிக்க உகந்த வழி குறித்தும் மருத்துவர் அனு அகர்வால் விவரித்தார் குளிர்காலத்தில், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த 2-3 மணிநேரத்திற்குள் 2-4 கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் குடிக்கவும். உங்கள் தூக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மாலை 5 மணிக்குள் உங்கள் தினசரி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மாலைக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கம் கலைவதற்கும் வழிவகுக்கும். மேலும், "குளிர் காலத்தில் மக்கள் தண்ணீருக்குப் பதிலாகத் தேநீர், காபி, சூப் அல்லது மிக அதிக சூடான தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஆனால் மிக அதிக சூடான தண்ணீரைக் (50-60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் நமது உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ். இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே சரியான வழியாகும். இது உடலுக்குச் சிறந்தது மற்றும் எளிதில் உறிஞ்சப்படும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy1xn7j2jyo
  19. பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 04 Jan, 2026 | 07:18 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/235214
  20. "வகுப்புவாத அழுத்தம்" - டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 17 இயக்குநர்கள் அடங்கிய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்ப உள்ளது. மேலும், வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் அபதீன் ஃபஹீம் கூறினார். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. வங்கதேசத்தின் முதல் போட்டி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை முன்னதாக, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படும் அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார். 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர்ரஹ்மான் நீக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த அவர், "வங்கதேச கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றார். ஆசிஃப் நஸ்ருல் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வகுப்புவாதக் குழுக்களின் அழுத்தத்தின் கீழ் பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது," என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த முழு விவகாரத்தையும் ஐசிசி-க்கு விளக்கி கடிதம் எழுதுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார். ஆசிஃப் நஸ்ருல் அவரது பதிவில், "ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட முடியாதபோது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்வது பாதுகாப்பானது என்று உணர முடியாது என்பதை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று எழுதினார். இத்துடன், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கருத்து என்ன? டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், பிசிசிஐ உத்தரவின் காரணமாக கேகேஆர் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டியிருந்தது. இந்த விவகாரம் குறித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான், "அவர்கள் என்னை விடுவித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியிருந்தார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தவிர, வங்கதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தபிஷ் அவலும் ஐபிஎல்-லிருந்து முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டதற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை அவரது கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தது, ஆனால் "அரசியல் தலையீடு காரணமாக அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார். 'மக்களை ஒன்றிணைக்கவும், பிளவுகளைக் குறைக்கவும் விளையாட்டுக்கு ஒரு அசாதாரண சக்தி உள்ளது' என்று அவர் கூறினார். 'பிளவுகளை உருவாக்க அல்லாமல், பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் வளர்க்க விளையாட்டு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23r8xle38ro
  21. வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது Published By: Vishnu 04 Jan, 2026 | 06:48 PM வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது. குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழமை அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் இப்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235212
  22. உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு Jan 4, 2026 - 06:21 PM எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w
  23. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல் 04 Jan, 2026 | 02:21 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது. அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235179
  24. 2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு Jan 4, 2026 - 08:50 AM 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjz5z4m303hko29ny8bybbd3
  25. 2024 ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய 7 வீரர்கள் தென் ஆபிரிக்காவின் 2026 குழாத்திலும் இடம்பெறுகின்றனர் Published By: Vishnu 02 Jan, 2026 | 09:56 PM (நெவில் அன்தனி) இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்ட ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் தென் ஆபிரிக்கா சார்பாக விளையாடிய 7 வீரர்கள், இந்த வருடத்துக்கான ரி20 உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறுகின்றனர். வழமையான ரி20 அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், குவின்டன் டி கொக், டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ், மார்க்கோ ஜென்சன், கெகிசோ ரபாடா, அன்றிச் நோக்யா ஆகிய எழுவரே தென் ஆபிரிக்காவின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் மீண்டும் இடம்பெறுகின்றனர். உபாதை காரணமாக இரண்டரை மாதங்கஞக்கு மேல் ஓய்வுபெற்றுவந்த கெகிசோ ரபாடா வேக்கப்பந்து வீச்சில் முன்னணி வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவருடன் அன்றிச் நோக்யா, மார்க்கோ ஜென்சன், கோபின் பொஷ், லுங்கி நிகிடி, க்வேனா மபாக்கா ஆகியோர் மற்றைய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர். அவர்களில் மார்க்கோ ஜென்சென் சிறந்த சகலதுறை வீரராவார். மபாக்கா, பொஷ் ஆகியோருடன் துடுப்பாட்ட வீரர்களான டிவோல்ட் ப்ரெவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜேசன் ஸ்மித், ஜோர்ஜ் லிண்டே, டொனவன் பெரெய்ரா ஆகியோர் முதல் தடவையாக ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளனர். இடதுகை சுழல்பந்துவீச்சாளர்களான கேஷவ் மஹாராஜ், ஜோர்ஜ் லிண்டே ஆகிய இருவரும் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதுடன் அணித் தலைவர் மார்க்ராம், பெரெய்ரா ஆகிய இருவரும் வலதுகை பந்துவீச்சாளர்களாக விளையாடுவர். பெரெய்ரா விக்கெட் காப்பாளராகவும் விளையாடக் கூடியவர். தென் ஆபிரிக்க குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் இந்த மாதம் SA20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளனளர். அதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுடன் தனது சொந்த நாட்டில் ரி20 தொடரில் தென் ஆபிரிக்கா விளையாடும். குழு டியில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவின் போட்டி விபரங்கள் பெப்ரவரி 9: எதிர் கனடா (அஹமதாபாத்) பெப்ரவரி 11: எதிர் ஆப்கானிஸ்தான் (அஹமதாபாத்) பெப்ரவரி 14: எதிர் நியூஸிலாந்து (அஹமதாபாத்) பெப்ரவரி 18: எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்ஹி) ரி20 உலகக் கிண்ண தென் ஆபிரிக்க குழாம் ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரெவிஸ், குவின்டன் டி கொக், டோனி டி ஸோர்ஸி, டொனவன் பெரெய்ரா, மார்க்கோ ஜென்சன், ஜோர்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், க்வேனா மபாக்கா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்றிச் நோக்யா, கெகிசோ ரபாடா, ஜேசன் ஸ்மித். https://www.virakesari.lk/article/235078

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.