Everything posted by ஏராளன்
-
பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு
பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு Jan 7, 2026 - 11:41 AM 1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk3meze703mwo29nrsx9yq7y
-
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 05:35 PM அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/235377
-
அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டாம் பென்னட் 6 ஜனவரி 2026, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு "டான்றோ கோட்பாடு" என்று மறுபெயரிட்டார். சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்து கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே உள்ளது. ஆனால், டிரம்ப் அந்த முழுத்தீவையும் கைப்பற்ற விரும்புகிறார். "தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் "ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் குறிப்பிட்டார். டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவுக்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன. தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது. வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு "கற்பனை" என்று டிரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார். "இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக்கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார். கொலம்பியா வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக 'கோகைன்' கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார். போதைப்பொருள் கும்பல்கள் "செழிக்க" பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. "கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவுக்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார். கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், "அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது" என்று பதிலளித்தார். வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரான் இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது "மிகக் கடுமையான தாக்குதல்" நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். கோட்பாட்டு ரீதியாக, இரானானது "டான்றோ கோட்பாட்டின்" எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ 2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் "சுவர் எழுப்பப்படும்"என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது. 2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , "அமெரிக்க வளைகுடா" என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் "பெருக்கெடுத்து ஓடுவதாகவும்", நாம் "நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார். அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் "மிகவும் வலிமையாக" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார். கியூபா புளோரிடாவுக்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. கியூபா "வீழ்வதற்குத் தயாராக" இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார். மேலும், "அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை," என்று தெரிவித்த டிரம்ப் , "அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்," என்றும் குறிப்பிட்டார். கியூபாவுக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும்பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும். கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்"என்றார். மேலும், "அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje1952wzwvo
-
பாம்புக்கடிக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு
பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு Jan 6, 2026 - 06:51 PM கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk2mbebd03m2o29nss7x03f8
-
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி Jan 6, 2026 - 07:42 PM நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் "போதைப்பொருள் அற்ற நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது. போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். 2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmk2o5kqn03m4o29nmhhusdv5
-
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றையதினம்(05.01.2026) இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடந்த 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்றொழிலாளர் விடுவிப்பு கோரிக்கை கைது செய்யப்பட்ட பிரபு(49), நாகராஜ்(47), ரூபன்(45) ஆகிய மூன்று கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/reel/837653312421458 இந்நிலையில், கைதான பிரபு, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து எடுத்துக் கொள்பவர் என்றும், இவருக்கு கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் சிகிச்சை பெற இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது கடற்றொழிலாளர் பிரபு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உடன் இருக்கும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அவரை உயிருடன் தங்களிடம் ஒப்படைக்குமாறும் உறவினர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-nadu-demands-release-of-fisherman-1767696094
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பாதிப்பு இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது. எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு அனர்த்தம் குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும். கடல் மட்டம் வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும். ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/flooding-and-landslide-warnings-heavy-rainfall-1767692928
-
ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
புதிய ஆண்டு அந்த டூனா மீனை பிடித்தவருக்கு அதிஸ்டம் அடித்திருக்கு தானே ஐயா?!
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
தாலி கட்டிட்டு கதை விடுறாரோ?!
-
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!
'மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம்' - திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் 6 ஜனவரி 2026, 05:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதனால் தனி நீதிபதியின் உத்தரவை முன்னரே முடிக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஓராண்டில் குறிப்பிட்ட நாளில் கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசு அஞ்சுவது ஆபத்தானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இது நம்புவதற்குக் கடினமானது என்று கூறியுள்ள நீதிபதிகள், 'சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்' எனவும் தெரிவித்துள்ளனர். "நிச்சயமாக, இதுபோன்ற ஒரு குழப்பம் அந்த அரசாங்கத்தாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்த அளவுக்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டதாக லைவ் லா செய்தி கூறுகிறது. திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் எனக்கூறிய நீதிபதிகள் எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக 'லைவ் லா' இணையதள செய்தி கூறுகிறது. லைவ் லா செய்தியின்படி, சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 'அறநிலையத் துறை, கோவில் நிர்வாகமே பொறுப்பு' தீபத்தூணில் தீபமேற்ற கோரி வழக்கு தொடுத்தவர்களுள் ஒருவரான அரசுபாண்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் தீர்ப்பு குறித்து கூறுகையில், "இன்றைய தீர்ப்பில், ' மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டியது ஒரு கட்டாயம்' என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அறநிலையத் துறைக்கும் கோவில் நிர்வாகமும் தான் இதற்கு பொறுப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். எந்த காலத்திலும் என்ன காரணத்திற்காகவும் தவிர்க்கக் கூடாது என உறுதிப்படுத்தியுள்ளனர்." என கூறினார். நிர்வாகத்தின் 10 பேர் சேர்ந்து தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறுவது, அரசின் திறமையின்மையை காட்டுகிறது அல்லது அரசின் நிலைப்பாட்டை காட்டுகிறது என நீதிபதிகள் தெரிவித்ததாக அவர் கூறினார். "திருப்பரங்குன்றம் மலையில் எந்த மதத்தை சேர்ந்த நிகழ்வாக இருந்தாலும் தொல்லியல் துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால், கார்த்திகை தீபத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அதற்கு இந்த நிபந்தனை பொருந்துமா என தெரியவில்லை." என தெரிவித்தார். தர்கா தரப்பு கூறியது என்ன? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியிருப்பது குறித்து தர்கா தரப்பிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். வழக்கின் பின்னணி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பட மூலாதாரம்,hcmadras.tn.gov.in படக்குறிப்பு,தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையும் இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e5wzkkr3ro
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
காரைநகரில் இருந்து முன்னோடிக்கான இரண்டாவது வேண்டுகோள் கடிதம்.
-
மன்னார் தீவின் நுழைவாயிலில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர், ஏன் சர்ச்சை ஆனது?
இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது? பட மூலாதாரம்,SMU படக்குறிப்பு,இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்கள் ராமர் பாலம் என அழைக்கின்றனர். வேறு சிலர் ஆதாமின் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. ராமர் பாலமாக இந்துக்களால் கருதப்படும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்த அறிவிப்புப் பலகை, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர். பட மூலாதாரம்,SMU இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த பெயர்ப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் மன்னார் மறைக் கோட்ட முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபைக்கு பி. கிறிஸ்துநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து குழப்பத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெயர்ப் பலகை தொடர்பாக பொதுமக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தினமும் தமக்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மன்னாரிலுள்ள அனைத்து மத மக்களின் நன்மையையும் கருதி, இந்த பெயர் பலகையை இந்த இடத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி. கிறிஸ்துநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறார். பட மூலாதாரம்,MARAVANPULLAVU SACHCHITHANANTHAN படக்குறிப்பு,சச்சிதானந்தன் 'அகற்ற கூடாது' ஆனால், மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "ராமருக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் வந்திறங்கியது மன்னார் தீவில்தான். திரும்பி போனதும் மன்னார் தீவிலிருந்துதான். இது தொடர்பான இலக்கிய பதிவுகள் இருக்கின்றன. இலக்கிய பதிவுகளின்படி, ராமர் மன்னார் தீவில் வந்திறங்கினார். பின்னர் சீதையையும் கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனார். தமிழர்களை சமய அடிப்படையில் பிளவுபடுத்துகிற வேலையை இப்போது மன்னார் கத்தோலிக்கர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மணல் திட்டுகளின் புகைப்படம் கடிதம் எழுதியவர் என்ன சொல்கிறார்? க.சச்சிதானந்தனின் கருத்து குறித்தும் கடிதம் எழுதப்பட்டமைக்கான காரணம் குறித்தும் பி.கிறிஸ்துநாயகத்திடம் பிபிசி கேட்டபோது, "மன்னார் நகரத்திற்குள் வருகின்ற நுழைவாயிலில் இருக்கின்ற படியினால், அது சில வேளைகளில் மற்ற மதத்தவர்களை புண்படுத்தலாம். அதனால், அந்த இடத்திலிருந்து எடுங்கள் என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றது. அதை வேறு இடத்தில் வைக்கலாம். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைமன்னாரில் வைக்கலாம் அல்லது வேறு எங்கேயும் வைக்கலாம். நுழைவாயில் என்ற படியால் மாத்திரமே இந்த கடிதம் எழுதப்பட்டது. அதைவிடுத்து, ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையிலான நோக்கம் என்னிடம் இருக்கவில்லை." என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,RUWAN RANASINGHE படக்குறிப்பு,சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க அரசாங்கம் என்ன சொல்கின்றது? மன்னார் நகர் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி தமிழ், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியது. மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னை தொடர்பில் தாம் தலையீடு செய்து பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். "சமூகத்தில் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்பும் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், அந்த குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளோம். சமயத் தலைவர்கள், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்ததொரு தீர்வை எடுக்க வேண்டும். உரிய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நாங்கள் தலையீடு செய்வோம்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான பிரச்னைகள் தொடர்ச்சியாக வரும் சந்தர்ப்பத்தில் சுற்றலாத்துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''அப்படியான பிரச்னைகளுக்கு வாய்ப்பில்லை'' என்றார் ருவன் ரணசிங்க. "நாங்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இதனூடாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது. யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியாவின் சீதை அம்மன் கோவில், ராவணனின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றார்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை'' என ருவன் ரணசிங்க தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o
-
வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்
வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் 06 Jan, 2026 | 02:30 PM வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235346
-
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!
நுண்நிதி கடன் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் சமர்பிப்பு - லக்ஷ்மன் நிபுணராச்சி 06 Jan, 2026 | 12:37 PM நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்தார். நுண்நிதி கடன்கள் பெற்ற சுமார் 200 பெண்கள் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வைப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் பயன்பாடு மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் மூத்த துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஏற்கனவே விசாரணைகளைத் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235336
-
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ் Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 01:23 PM வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுவேலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அமெரிக்க இராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் மதுரோ ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வெனிசுவேலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார். ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுவேலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார். டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி உள்ளார். அவர் நிதி மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். துணை ஜனாதிபதிபொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராக இருக்கும் காரணத்தால் வெனிசுவேலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார். 1969 மே 18 அன்று வெனிசுவேலா காரக்காஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜோர்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை. https://www.virakesari.lk/article/235343
-
ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி Published By: Vishnu 06 Jan, 2026 | 05:05 AM சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13மூ மாத்திரமே செலவிட முடியும்.அதில் குறைந்தபட்சம் 4மூ மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும்.அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு.முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்று குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235325
-
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்
நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள் Published By: Vishnu 05 Jan, 2026 | 11:51 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன. மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது. முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது. இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது. இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர் ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். ஜாவா லேன் வெற்றி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார். போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார். இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார். ஜாவா லேனுக்கு இலகு வெற்றி https://www.virakesari.lk/article/235312
-
கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?
கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? Jan 6, 2026 - 10:21 AM கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். "சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன். 100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை. நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன்," என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk243gm703kno29n8ihcpciv
-
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் ஆஜர்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வரைபடம் கட்டுரை தகவல் மெடலின் ஹால்பெர்ட் நியூயார்க் நீதிமன்றத்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் "கடத்தப்பட்டதாக" கூறினார். அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார். "நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர், நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்," என்று அவர் நீதிமன்றத்தில் ஸ்பானிய மொழியில் அமைதியாக கூறினார். பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நீதிமன்றத்திற்காக அதை மொழிபெயர்த்தார். "நான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள எனது வீட்டில் வைத்து சிறைபிடிக்கப்பட்டேன்." என்றார் மதுரோ. மதுரோ பேசுகையில் விரைந்து குறுக்கிட்ட 92 வயதான நீதிபதி, "இவை அனைத்தையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் வரும்" என்று கூறினார். திங்கட்கிழமை பிற்பகல் நடந்த அந்த பரபரப்பான 40 நிமிட குற்றவியல் விசாரணையின் போது, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். "நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன்," என்று மதுரோ கூறினார். ஃபுளோரஸ் தானும் "முற்றிலும் நிரபராதி" என்று கூறினார். பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images 63 வயதான மதுரோவும் அவரது மனைவியும் சனிக்கிழமை வெனிசுவேலாவில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர், நியூயார்க் கொண்டு செல்லப்பட்டனர். இது ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களையும் கொண்ட ஒரு திடீர் இரவு நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சட்டைகள் மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்திருந்த அவர்கள், விசாரணை நேரத்தில் ஸ்பானிய மொழிபெயர்ப்பைக் கேட்பதற்காக ஹெட்ஃபோன் அணிந்திருந்தனர்; அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கறிஞர் அமர்ந்திருந்தார். மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் நுணுக்கமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். மதுரோ அறைக்குள் நுழைந்த போது, பார்வையாளர்களில் இருந்த பலரை நோக்கித் தலையசைத்து அவர்களை வாழ்த்தினார். விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் அவர் இந்த அமைதியான மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை தொடர்ந்தார். பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மதுரோ தனது குற்றங்களுக்காக "விலை கொடுக்க நேரிடும்" என்று கத்திய போதும் அவர் அதே அமைதியைக் கடைப்பிடித்தார். "நான் அதிபர் மற்றும் போர்க்கைதி," என்று அவர் பார்வையாளர்களில் இருந்த அந்த நபரை நோக்கி ஸ்பானிய மொழியில் உரக்க கூறினார். பின்னர் அந்த நபர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் உணர்ச்சிப்பூர்வமானவையாக இருந்தன. வெனிசுவேலாவைச் சேர்ந்த செய்தியாளர் மைபோர்ட் பெட்டிட், மதுரோ கைது செய்யப்பட்டபோது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபியூர்டே டியுனாவுக்கு அருகிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை சேதப்படுத்தியதாகக் கூறினார். தனது முன்னாள் தலைவர் அமெரிக்க மார்ஷல்களால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,TRUTH SOCIAL/DONALD TRUMP மதுரோவின் மனைவி ஃபுளோரஸ், வார இறுதியில் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட காயங்களுக்காக கண்கள் மற்றும் நெற்றியில் கட்டுகளுடன் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் மெதுவாகப் பேசினார், அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர்கள் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வழக்கு விசாரணையின் போது மதுரோவும் அவரது மனைவியும் பிணை கோரவில்லை. ஆனால் பின்னர் அவ்வாறு செய்யலாம். போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மதுரோவின் மனைவி, மகன் மற்றும் பலருடன் சேர்த்து அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7yq5ddzjno
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அண்ணை.
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் 160 ஓட்டங்களைக் குவித்து அசத்த, ஆஸி, சார்பாக ட்ரவிஸ் ஹெட் பதிலடி Published By: Vishnu 05 Jan, 2026 | 07:00 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐந்தாவதும் கடைசியுமான ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியல் ஜோ ரூட் அபாரம் சதம் குவித்து இங்கிலாந்தை பலப்படுத்தினார். அதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா சார்பாக ட்ரவிஸ் ஹெட் மற்றொரு அரைச் சதத்தைப் பெற்று உரிய பதிலடி கொடுத்துள்ளார். போட்டியின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு அதன் பின்னர் தொடரவில்லை. முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்தபோது இங்கிலாந்து அதன் முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோ ரூட் 72 ஓட்டங்களுடனும் ஹெரி ப்நூக் 78 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களைப் பெற்றது. 35 வயதான ஜோ ரூட் 398 நிமிடங்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 242 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகளுடன் 160 ஓட்டங்களைக் குவித்தார். 163ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் குவித்த 41ஆவது சதம் இதுவாகும். ஜோ ரூட்டும் ஹெரி ப்றூக்கும் 4ஆவது விக்கெட்டில் 169 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஹெரி ப்றூக் 6 சிக்ஸ்கள், ஒரு சிக்ஸுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜெமி ஸ்மித்துடன் 6ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்ளையும் வில் ஜெக்ஸுடன் 7ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களையும் ஜோ ரூட் பகிர்ந்தார். ஜெமி ஸ்மித் 46 ஓட்டங்களையும் பென் டக்கட், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நேசர் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டில் ஜேக் வெதரோல்டுடன் 57 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் மானுஸ் லபுஷேனுடன் 105 ஓட்டங்களையும் டர்விஸ் ஹெட் பகிர்ந்தார். ஜேக் வெதரோல்ட் 21 ஓட்டங்களையும் மானுஸ் லபுஷேன் 48 ஓட்டங்களையும் பெற்றனர். ட்ரவிஸ் ஹெட் 91 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். https://www.virakesari.lk/article/235302
-
எரிபொருள் விலைகளில் மாற்றம்
எரிபொருள் விலைகளில் மாற்றம் Jan 5, 2026 - 09:14 PM பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும். இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk1c01yy03jxo29nuenuc8gb
-
உயரும் பயணிகள் விமானங்களின் தேவை - இவற்றை இந்தியாவால் தயாரிக்க முடியுமா?
உயரும் பயணிகள் விமானங்களின் தேவை - இவற்றை இந்தியாவால் தயாரிக்க முடியுமா? பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,SJ-100 ரக விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டெல்லியும் மாஸ்கோவும் கையெழுத்திட்டுள்ளன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சந்தையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1,500 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளன; இது பயணிகளின் தேவை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த விரிவாக்கமானது உலகளாவிய விமான விநியோகத்தில் 86 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களையே சார்ந்துள்ளது; 2024-ல் இந்த நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான 'வரலாற்று ரீதியான' விநியோக நிலுவைகளை எதிர்கொண்டன. இது இந்திய ஆர்டர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது: இந்தியா தனக்கான சொந்தப் பயணிகள் விமானங்களை உருவாக்க வேண்டுமா? அக்டோபர் மாதம் இந்தியாவும் ரஷ்யாவும் மாஸ்கோவில் 'SJ-100' பயணிகள் விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது உள்நாட்டு விமானத் தயாரிப்பு குறித்த நம்பிக்கையை அதிகரித்தது. ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வாகுமா? அதன் கூட்டுத் தயாரிப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக இன்னும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது SJ-100 இரண்டு என்ஜின்களைக் கொண்ட ஒரு விமானமாகும்; இது 103 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது மற்றும் இது ஏற்கனவே பல ரஷ்ய விமான நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ளது என்று அதன் தயாரிப்பாளரான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) கூறுகிறது. இந்தியா இந்த விமானத்தை ஒரு 'கேம் சேஞ்சர்' என்று விவரித்துள்ளதுடன், இதை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், வல்லுநர்கள் இத்திட்டத்தின் செலவு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் - இவை குறித்த பல விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவில் விமான உற்பத்தியை மிக விரைவாகத் தொடங்கி, அதை ஒரு பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியுமா என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது. 2008 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 SJ-100 விமானங்களை விநியோகித்ததாக அதன் தயாரிப்பாளர் கூறுகிறார். ஆனால், 2022-ல் யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கியபோது அந்த வளர்ச்சிப் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளின் தடைகள் மிக முக்கியமான உதிரிபாகங்களின் வரவைத் துண்டித்தன; இதனால் அந்த நிறுவனம் சுமார் 40 தொழில்நுட்ப அமைப்புகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதுடன், 2023-ல் 'இறக்குமதிக்கு மாற்றாக' உருவாக்கப்பட்ட ஒரு பதிப்பை இயக்க வேண்டியிருந்தது. ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு இந்த விமானத்திற்கான சான்றிதழைத் திரும்பப் பெற்றது; இது SJ-100 மற்றும் பிற ரஷ்ய விமானங்கள் அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது. இந்தியா நீண்டகாலமாகப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது, ஆனால் அதில் மிகக் குறைந்த அளவிலான வெற்றியையே பெற்றுள்ளது. 1959-ஆம் ஆண்டில், 'சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயணிகள் விமானங்களை' உருவாக்குவதற்காக தேசிய விண்வெளி ஆய்வகத்தை (National Aerospace Laboratories) அரசாங்கம் நிறுவியது. இந்த நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட ஹன்சா மற்றும் ஐந்து இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களை உருவாக்கியுள்ளது, ஆனால் பெரிய அளவிலான பயணிகள் விமானங்களின் உருவாக்கம் இன்னமும் தொலைவிலேயே உள்ளன. 1960-களில், இந்தியா வெளிநாட்டு உரிமங்களின் கீழ் பயணிகள் விமானங்களைத் தயாரித்தது. அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பிரிட்டன் வடிவமைப்பான 'அவ்ரோ 748' ரகத்தில் பல விமானங்களைத் தயாரித்தது; இவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை வணிக ரீதியிலான விமான நிறுவனங்களாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்பட்டன. 1980-களில், 19 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானத்தைத் தயாரிப்பதற்காக ஜெர்மனியின் டோர்னியர் நிறுவனத்துடன் இந்தியா கைகோர்த்தது; அவற்றில் சில விமானங்கள் இன்றும் ராணுவத்திலும், குறிப்பிட்ட சில சிவில் பயன்பாட்டிலும் உள்ளன. இதையடுத்து, இந்தியா தனது சொந்த சிறியப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே சுயமாக வடிவமைக்கவும் முயன்றது. பட மூலாதாரம்,Hindustan Times via Getty Images படக்குறிப்பு,கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். 2000-ஆம் ஆண்டில், NAL-இன் 15 இருக்கைகள் கொண்ட சரஸ் விமானத்தைத் தயாரிப்பதற்கு உதவி கோரி ரஷ்யாவுடன் இந்தியா ஓர் ஒப்பந்தம் செய்தது. அந்த விமானம் 2004 மே மாதத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது; ஆனால் 2009-ல் அதன் இரண்டாவது முன்மாதிரி விமானம் விபத்துக்குள்ளாகி மூன்று விமான ஓட்டிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் முடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் இத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்து, 19 இருக்கைகள் கொண்ட 'சரஸ் எம்கே2' என்ற அடுத்த முன்மாதிரி விமானத்தை உருவாக்கியது; இருப்பினும், இது சான்றளிப்பிற்காக காத்திருக்கிறது. மற்றொரு திட்டமான பிராந்திய போக்குவரத்து விமானம் திட்டமும், பல ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. ரஷ்யாவின் SJ-100 விமானத்திற்கு இணையான 90 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்திற்கான அறிக்கைகள் 2011-லேயே சமர்ப்பிக்கப்பட்டன; ஆனால் அதன் பிறகு இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்தியாவில் விமானத் தயாரிப்புத் துறை நீண்டகாலமாகப் பல தடைகளைச் சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். சமீபகாலம் வரை 'உள்நாட்டில் பெரிய அளவிலான தேவை இல்லாதது', உயர் தகுதி வாய்ந்த மனிதவளப் பற்றாக்குறை மற்றும் மிகச்சிறிய அளவிலான உள்நாட்டு உற்பத்திச் சூழல் ஆகியவை இத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக NAL-இன் இயக்குனர் முனைவர் அபய் பாஷில்கர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கான தீர்வு 'இந்திய மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதுதான்' என்று அவர் மேலும் கூறுகிறார். SJ-100 திட்டம் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையுமா? தற்போதைக்கு, அது அப்படித்தான் தோன்றுகிறது. இந்தியாவின் சொந்தத் திட்டங்கள் முடிவடைவதற்கு நீண்ட தூரம் இருப்பதால், இந்தத் திட்டம் ஒரு 'நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை' வழங்குகிறது என்று HAL-இன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கோபால் சுதார் கூறுகிறார். மாஸ்கோவைப் பொறுத்தவரை, SJ-100 விமானத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைப்பது, மேற்கத்திய தொழில்நுட்பம் இல்லாமலேயே தங்களால் ஒரு பயணிகள் விமானத்தைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஒப்பந்தம் சில சமரசங்களுடனேயே வருகிறது. மேலும் இது இந்தியா விமானத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது; இருப்பினும், இந்தியாவின் 'உறுதியான ஆதரவாளராக' ரஷ்யாவின் பங்கு இப்போதும் மிக முக்கியமானது என்று சுதார் போன்ற வல்லுநர்கள் வாதிடுகின்றனர். தடைகள் சவால்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை இரு நாடுகளாலும் முன்கூட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். விமானங்கள் கிடைப்பது என்பது இந்தியாவின் விமானப் போக்குவரத்து சவால்களில் ஒரு பகுதி மட்டுமே; இத்துறையின் வேகமான விரிவாக்கம் என்பது பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பொறுத்தே அமையும். விமானிகளின் பணிப்பட்டியல் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடிகளால், இந்த மாத தொடக்கத்தில் இண்டிகோ நிறுவனம் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகளை ரத்து செய்தது; இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் ஏன் பல நாட்களாக கூட தவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24eyp1deko
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம் 05 Jan, 2026 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவுடனான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரி20 உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் அரசியல் முறுகல் நிலை ஏற்பட்டதாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்பிஸுர் ரஹ்மானை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் சபை அறிவித்ததாலும் பங்களாதேஷின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியை கோரவேண்டும் என பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் 15 வீரர்கள் கொண்ட ரி20 உலகக் கிண்ண குழாத்தை பங்களாதேஷ் அறிவித்துள்ளது. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அரை இறுதிக்கு முன்னேறாமால் இருக்கும் பங்களாதேஷ் அந்த வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சிக்க உள்ளது. ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லிட்டன் தாஸுடன் தன்ஸித் ஹசன், சய்வ் ஹசன் ஆகியோர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாகவும், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், நூருள் ஹசன் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாகவும் அணியில் இடம்பெறுகின்றனர். பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் வேகப்பந்துவீச்சாளர்களான முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், சுழல்பந்துவிச்சாளர்களான மெஹிதி ஹசன், நசும் அஹ்மத், ரிஷாத் ஹொசெய்ன் ஆகியோர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை சி குழுவில் பங்களாதேஷ் எதிர்த்தாடும். பங்களாதேஷின் போட்டிகள் பெப்ரவரி 7: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (கொல்கத்தா) பெப்ரவரி 9: எதிர் இத்தாலி (கொல்கத்தா) பெப்ரவரி 14: எதிர் இங்கிலாந்து (கொல்கத்தா) பெப்ரவரி 17: எதிர் நேபாளம் (கொல்கத்தா) பங்களாதேஷ் குழாம் லிட்டன் தாஸ் (தலைவர்), தன்ஸித் ஹசன், பர்விஸ் ஹொசெய்ன் ஈமொன், சய்வ் ஹசன், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், குவாஸி நூருள் ஹசன் சொஹான், ஷாக் மெnஹித ஹசன், ரஷாத் ஹொசெய்ன், நசும் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், தஸ்கின் அஹ்மத், ஷய்ப் உதின், ஷொரிபுல் இஸ்லாம். https://www.virakesari.lk/article/235288
-
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை!
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை! 05 Jan, 2026 | 05:04 PM அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், நோயாளிக்கு அரிசி, காய்கறிகள், ஊறுகாய், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தனித்தனியாக வழங்குவது ஆகும். உணவை ஒரு நோயாளி பார்த்தவுடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிக்க கூடிய நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த சமையலறையும் இந்த திட்டத்துடன் சேர்த்து திறக்கப்பட உள்ளது. வைத்தியசாலையின் சமையலறையின் பெயர் 'உணவு மற்றும் பானங்கள் துறை' என வழங்கப்பட்டுள்ளது. நவீன முறையில் உணவு மற்றும் பானங்களை தயாரித்து பரிமாற நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் நிர்வாகம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்திற்கு, ருஹுணு மகா கதிர்காம தேவாலயம் இலங்கை இராணுவம், லேடி ஜே நிறுவனம், ஹைட்ராமணி நிறுவனம் மற்றும் கிராண்ட் மோனார்க் ஹோட்டல் ஆகியவை தங்கள் ஆதரவினை வழங்குகின்றன. இந்தத் திட்டம் குறித்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சஜித மல்லவராச்சி தனது கருத்துக்களைத் தெரிவித்து, நோயாளிகளுக்கு சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல சிக்கல்களைக் குறைக்கும் என்றும் கூறினார். வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவுக்கு சமமான அல்லது சிறந்த, அளவு, சுவையான மற்றும் அதிக ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களைக் கொண்ட தரமான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் மேலும் கூறினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை தீவு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235270