Everything posted by ஏராளன்
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமை சட்டபூர்வமானதா?
ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு உத்தியோகபூர்வமாக ஆராய்வதாக ஐ.நா. உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:14 AM நா.தனுஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகமானது உள்ளகக் கணக்காய்வு, விசாரணை, மேற்பார்வை மற்றும் சேவை மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊழியர்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும். அதன்படி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வெளியகப்பொறிமுறை குறித்து இலங்கைப் பிரஜைகள் மூவருடன் இணைந்து அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளுக்கு அப்பால் இலங்கையின் ஒப்புதல் இன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமையானது அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு என்பன பற்றிய கேள்வியைத் தோற்றுவிப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படுவதன் காரணமாக, அதன் இரகசியத்தன்மையைக் காரணங்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/229253
-
சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு
Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார். https://adaderanatamil.lk/news/cmhh597uu01c8o29ndn1dgf0s
-
வெள்ளவத்தை ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்
01 Nov, 2025 | 04:51 PM ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/229242
-
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்
Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmhh436c301c7o29ng88tb3uv
-
யாழில் சிறுவனைக் காணவில்லை!
யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்! 02 Nov, 2025 | 09:31 AM யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229260
-
கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை - ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது!
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது 01 Nov, 2025 | 02:28 PM ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன் AKEBONO தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியிலும், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்திலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர். மேலும், தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுடன், மேலும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. https://www.virakesari.lk/article/229224
-
'ஈஸ்ட் பூஞ்சை செவ்வாய் கிரகத்தில்கூட சாகாது' - விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?
பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பல சவால்களைக் கொண்டது விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman படக்குறிப்பு, செவ்வாய் கோள் மீது விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் அதிர்வுகளை உருவாக்க உதவிய ஹிஸ்டா கருவி செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒளியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார். மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார். இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, செவ்வாயின் சூழலை ஒத்த அழுத்தம் ஏற்பட்டபோது, புகைப்படத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தெரியும் ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கித் தமது எம்.ஆர்.ஏ மூலக்கூறுகளை ஈஸ்டுகள் பாதுகாத்துக் கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை உயிர் பிழைத்தது எப்படி? ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி? அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது. "அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன." இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Swati Lamba படக்குறிப்பு,முனைவர் புருஷர்த் ராஜ்யகுரு (வலது), ஆய்வாளர் ரியா காதே (இடது) அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, முனைவர் பாலமுருகன் சிவராமன் (இடது), முனைவர் அரிஜித் ராய் (வலது) செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்? இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்? ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார். செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார். ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார். விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்? விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு. இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது." மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e3dxvlylpo
-
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்
புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம் 01 Nov, 2025 | 05:23 PM முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது 30,000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார். இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229249
-
க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 01 Nov, 2025 | 02:49 PM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் காலம் நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (05) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229229
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1076 பேர் கைது! 01 Nov, 2025 | 02:45 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229230
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்!
01 Nov, 2025 | 01:00 PM அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் களத்தடுப்பு செய்ய வர முடியவில்லை. ஆரம்பத்தில் அவர் இடது கீழ் விலா எலும்புப் பகுதியில் காயமடைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், சில 'ஸ்கேன்' பரிசோதனைகளுக்குப் பிறகு, காயம் விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறலை ஏற்படுத்தி, அதனால் உள்ளுறுப்பு இரத்தக்கசிவு (Internal Bleeding) உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அணியின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் உடனடியாக இரத்தக்கசிவைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளித்தனர். தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது உடல்நிலை சீரானதையடுத்து (Condition is Stable) வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229223
-
யாழில் செம்மணி புதைகுழி உட்பட பல விடயங்களுக்கு நீதி வேண்டி கவனஈர்ப்பு போராட்டம்
01 Nov, 2025 | 04:30 PM சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, "அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்" என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/229243
-
80 வயது மூதாட்டியை தீவிலேயே விட்டு புறப்பட்ட சுற்றுலா கப்பல் - இறுதியில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. "சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார். "பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சுசான் ரீஸ் என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை. கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார். தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார். "எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Coral Expeditions ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன. தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது. "காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார். "அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்." "இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்." "அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார். ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார். "குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார். "பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno
-
கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை - ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது!
01 Nov, 2025 | 12:34 PM இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, வெள்ளிக்கிழமை (31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது. மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே மேம்பட்ட கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை பெரிதும் எளிதாக்கும், மேலும் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு கூட்டு அணுகுமுறையையும் எளிதாக்கும். https://www.virakesari.lk/article/229221
-
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 90 மில்லியன் டொலர் கடனுதவி
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கை;கான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229201
-
ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? உணவாகச் சாப்பிடுவது நல்லதா?
பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன? ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன. கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும். தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன. அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன் தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது. "பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன். மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார். அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது." பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும். அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர். இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார். மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ. மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ. அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார். "பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்." படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா? புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன். இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ. "மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு." ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார். ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும். எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!
-
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
பிரித்தானியாவிலுள்ள இலங்கை வைத்தியர்களை நாடு திரும்பக் கோரிய சுகாதார அமைச்சர் 31 Oct, 2025 | 01:32 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். தான் அண்மையில் மேற்கொண்ட பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமூக வலைத்தள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தக் கலந்துரையாடலின்போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள எமது விசேட வைத்திய நிபுணர்களை, நாடு திரும்புவது குறித்துப் பரிசீலிக்குமாறு ஒரு விசேட வேண்டுகோளை விடுத்தேன். எமது சுகாதார சேவையில் தற்போது விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. அவர்கள் இலங்கைக்குத் திரும்பிப் பணியாற்றினால், அவர்களின் அனைத்து முந்தைய சேவைப் பலன்களுடன் சேர்த்து அதே பதவிகளில் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/229132
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
இலங்கை சனத்தொகையில் எந்த மாவட்டத்தில் அதிக சனத்தொகை - முழு விபரம் Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 04:44 PM இலங்கையின் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஒவ்வொரு பத்து ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டுகிறது. இருப்பினும், 2020 ஆண்டின் போது முகங்கொடுக்க நேரிட்ட கொவிட்தொற்று மற்றும் அதற்கு பின்னர் முகங்கொடுக்க நேரிட்ட நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இத் தொகைமதிப்பானது 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பானது நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப்படும். முதலாவது கட்டம் "வரைபடம் தயாரிக்கும் கட்டம்" என அழைக்கப்படுவதுடன் அதன் போது நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் பிரிவினை அடிப்படையாக கொண்டு "தொகைமதிப்புக் கண்டம்" எனும் பெயரில் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. இரண்டாவது கட்டம் "நிரற்படுத்தும் கட்டம்” இதன்போது தொகைமதிப்புக் கண்ட வரைப்படங்களைப் அடிப்டையாக் கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள சகல கட்டடங்கள் மற்றும் அவற்றினுள் உள்ள தொகைமதிப்புக் கூறுகளை, ("வீடு","கூட்டு வசிப்பிடம்","வதிவிட நிறுவனம்", மற்றும் "வசிப்பிடம் அல்லாத கட்டடக் கூறு"என வகைப்படுத்தி) அடையாளங்கண்டு அதற்கான இலக்கம் ஒன்றினை வழங்கி நிரற்படுத்தப்பட்டது. இதன்போது அடையாளங்காணப்பட்ட சகல தொகைமதிப்புக் கூறுகளுக்கும் சிவப்பு நிறத்தினால் ஆன தொகைமதிப்பு லேபல் ஒன்று ஒட்டப்படும். மூன்றாவது கட்டம் அவ்வாறு தயாரிக்கப்பட்ட தொகைமதிப்புக் கூறுகளின் பட்டியலுக்கு ஏற்ப மூன்றாவது கட்டத்தின் போது தனி நபர் மற்றும் வீட்டுவசதிகள் தொடர்பான தகவல் சேகரிப்பானது 2024 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 2025 ஆண்டு பெப்ரவரி மாதம் வரை 19 ஆம் திகதி அல்லது (2024 டிசம்பர் 18 ஆம் திகதி அவ்வாறு சேகரிக்கப்பட்ட மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "தொகைமதிப்பு தினம்" உதயமாகும் கணம் அதாவது 00.00 மணி நள்ளிரவு 12.00) "தொகைமதிப்புக் கணம்" என கருதப்படும். தகவல்கள் தொகைமதிப்புக் கணத்தினை அடிப்படையாக கொண்டு இற்றைப்படுத்தப்படும். இறுதிக் கட்டத்தின் போது சேகரிக்கப்படும் வெளியிடப்படும். தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு லங்கையில் தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, இம் முறை தொகைமதிப்பில் தரவு சேகரிப்பு செயல்முறை கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. நபர்களின் வாழ்க்கைத் தகவல்கள், கல்வி, எழுத்தறிவு, உடல் மற்றும் மன நிலைமைகள். குடிபெயர்வு நிலை போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு நபரிடமிருந்தும் தனித்தனியாகப் பெறப்பட்டன. அதன்படி. ஒட்டுமொத்தமாக ஒரு தனிநபரின் சமூக, பொருளாதார மற்றும் மக்களியற் தகவல்களின் தொகுப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் மூலம் டிப்படையாகக் கொண்டு முதலாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிறப்பு, இறப்பு மற்றும் வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கமையத் திருத்தங்கள் இரண்டாவது சுற்றின் போது மேற்கொள்ளப்பட்டது. இது 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து 2024 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களைக்கொண்ட காலத்தினுள் மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்புத் தகவல்களுக்கு ஏற்ப இலங்கையின் சனத்தொகை மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கூறுகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக 2025.10.30 ஆம் திகதி அன்று தெகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. சனத்தொகைப் பரம்பல் மற்றும் ஆண்,பெண், பாலின அமைப்பு 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையினை நகரம், கிராமம், மற்றும் பெருந்தோட்டம் எனும் மூன்று பிரிவுகளாக பிரித்து தரவு சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், 2024 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது அவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு நகரம், கிராமம், நகரப் பெருந்தோட்டம், மற்றும் கிரமியப் பெருந்தோட்டம் என நான்கு பிரிவுகளாக தரவு சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த நான்கு பிரிவுகளும் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டன. நகரப் பெருந்தோட்டப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, 20 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட, தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் 10 அல்லது அதற்கு அதிகமானோர் பணிபுரியும் பயிர்ச் செய்கையுடன் கூடிய பிரதேசமாகும். நகரப் பிரிவு மாநகர சபை அல்லது நகர சபையின் கீழ் காணப்படுகின்ற, “நகரப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். கிராமப் பிரிவு பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்ற, “கிராமியப் பெருந்தோட்டம்” அல்லாத பிரதேசமாகும். 2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது மாநகர சபை மற்றும் நகர சபையின் மூலம் நிர்வாகிக்கப்படுகின்ற சகல பிரதேசங்களும் "நகரப் பிரிவு" என்றும், அதன்படி 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது "நகர- பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள், 2012 ஆம் ஆண்டின் போது “நகரப் பிரிவு” என்பதன் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, 2012 தொகைமதிப்பின் போது “பெருந்தோட்டம்” என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்கள் 2024 தொகைமதிப்பின் போது கிரமியப் பெருந்தோட்டப் பிரிவு என கருதப்பட்டுள்ளது. “கிராமம்” எனும் பிரிவை அடையாளங்காண்பதில் 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை. அதன் பிரகாரம் பிரிவு அடிப்படையிலான சனத்தொகையைப் போன்று மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை விபரங்கள் அட்டவணை 1 இன் மூலம் காட்டப்பட்டுள்ளது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. 2012 தொகைமதிப்பின் போது பதிவாகிய 20,359,439 சனத்தொகையை விட இம் முறை சனத்தொகையானது 1,422,361 இனால் அதிகரித்து காணப்படுகிறது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2024 ஆண்டு தொகைமதிப்பின் போது கிராமப் பிரிவின் சனத்தொகை 1,343,596 இனால் அதிகரித்தும், நகரப் பிரிவின் சனத்தொகை 114,733 இனால் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பெருந்தோட்டப் பிரிவுகளில் மாத்திரம் 35,968 சனத்தொகையில் குறைவடைந்திருப்தைக் காணலாம். சனத்தொகையின் 'பாலின அமைப்பு' என்பது பாலினத்தின்படி சனத்தொகைகுள் நபர்களின் பரவலாகும். இம்முறைத் தொகைமதிப்பிலே கணக்கிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையினை விட 757,112 இனால் அதிகமாக காணப்படுகிறது. விகிதாசாரமாகக் காட்டினால் இலங்கையின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 51.7 வீதம் பெண்களாவர் என்பதுடன் நூற்றுக்கு 48.3 வீதம் ஆண்களாவர். 2012 தொகைமதிப்புடன் ஒப்பிடும்போது, இம்முறை நகரம் மற்றும் கிராமப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் பெருந்தோட்டப் பிரிவுகளில் ஆண்களின் சதவீதம் அதிகமாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் போது, நகரப் பிரிவுகளில் பெண்களின் சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. சனத்தொகைத் தகவல்கள் இம்முறை தொகைமதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781,800 என பதிவாகியுள்ளது. அதில், 51.7 சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். நாட்டில் 15 வயதிற்கும் குறைந்தவர்களின் சனத்தொகை 2012-2024 ஆண்டிற்கான தொகைமதிப்புக் காலவரையறையினுள் 25.2 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாக 4.5 சதவீத அலகுகளில் குறைந்துள்ளது. அதேபோல், இந்த காலகட்டத்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகை 7.9 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக 4.7 சதவீத அலகுகளினால் அதிகரித்துள்ளது. ஆம் ஆண்டில் 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக காணப்படுகிறது, இது 2012 இல் 66.9 சதவீதமாக காணப்பட்டது. அதன்படி 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகைக்கான சதவீதம் 2012-2024 தொகைமதிப்பு காலவரையறையினுள் இந்த சதவீதம் 0.2 அலகுகளில் குறைந்துள்ளது. பதினைந்து வயதுக்குட்பட்ட மற்றும் அறுபத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகைக்கான கூட்டுத்தொகையைக் தங்கிவாழ்வோர் என கருதப்படும். 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பின் பிரகாரம் கணக்கெடுப்பின்படி 49.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 49.8சதவீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை சனத்தொகையின் இனப்பரம்பல் தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட இனத்தை அவர்களது இனமாக அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 74.1 சதவீதம், அல்லது சனத்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிங்களவர்கள் என்றும், 12.3 சதவீதம் பேர் இலங்கை தமிழர்கள் என்றும், 10.5 சதவீதமானோர் இலங்கைச் சோனகர்/முஸ்லிம் என்றும், 2.7 சதவீதமானோர் இந்திய தமிழர்கள்/மலையக தமிழர்கள் என்றும் பதிவாகியுள்ளன. மேலும், மீதமுள்ள சதவீதமானது சனத்தொகை சதவீதத்தில் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவாகியுள்ளது. 0.3 தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட சமயத்தை அவர்களது சமயமாக அடையாளங்காணப்படுகின்றன. நாட்டில் மொத்த சனத்தொகையில் 69.8 சதவீதம் பௌத்தர்கள் என்பதுடன் 12.6 சதவீதம் இந்துக்கள் ஆவர். 10.7 சதவீதம் இஸ்லாமியர்கள், 5.6 சதவீதம் றோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் இந்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் அந்த சதவீதம் 0.02 என்ற சிறிய எண்ணிக்கையைக் கொண்டு காணப்படுகிறது. 2024 தொகைமதிப்பில் இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் சதவீதங்களை 2012 தொகைமதிப்புடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுதல் மற்றும் 2012 - 2024 ஆம் ஆண்டுக்கான சராசரி அதிகரிப்பு விகிதம் அட்ட வணை 06 இல் காட்டப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இனரீதியான பரம்பல் வரைபடம் 04 இல் காட்டப்பட்டுள்ளது. இனத் தொகுதிகளுக்கிடையில் 2012- 2024 காலப்பகுதிக்குள் சனத்தொகையில் கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைச் சோனகர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் அவர்களின் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு 1.5 நாட்டின் மொத்த சனத் தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். அதற்கடுத்ததாக கூடிய வளர்ச்சி வேகத்தினை இலங்கைத் தமிழர் வெளிக்காட்டியுள்ளனர் என்பதுடன் 2012- 2024 காலப்பகுதியினுள் அவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 1.3 ஆகும். 2012 2024 காலப்பகுதியில் சனத்தொகையில் சிங்களவர்களின் வருடாந்த சராசரி வளர்ச்சி விகிதம் நூற்றுக்கு 0.4 ஆகும். இக்காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் நூற்றுக்கு 2.6 என்ற மிகக் குறைவான வருடாந்த வளர்ச்சி விகிதத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இலங்கையின் வேறு இனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் இக் காலப் பகுதியில் அந்தச் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அதன் வளர்ச்சி வேகம் நூற்றுக்கு - 3.1 ஆகும். இம்முறைத் தொகைமதிப்பில் (2024) மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குடிசனத் தொகைமதிப்பின் போது இனத் தொகுதிக்கு ஏற்ப சனத்தொகை வீகிதாசாரம் மாவட்ட மட்டத்தில் அட்டவணை 7 இல் காட்டப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியிலான சனத்தொகை பரம்பல் கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை (122619) மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிகமானோர் பெண்கள் என்பது முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டுத் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிலேயேகும். அதன்போது தொகைமதிப்பு முழுமையாக நடைபெற்ற 18 மாவட்டங்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 50.2 வீதமானோர் பெண்களாவர். இருப்பினும் பதிவுகளுக்கமைய 1981, 2001, 2012 மற்றும் 2024 தொகைமதிப்புகளின்போது மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட பால்நிலை விகிதாசாரம் அட்டவணை 2 இல் வழங்கப்பட்டுள்ளது. 2024 தொகைமதிப்பின் போது, நாட்டின் 25 மாவட்டங்களையும் கருத்தில் கொள்ளும்போது, சகல மாவட்டங்களிலும் பால்நிலை விகிதாசாரம் 100 விடக் குறைவான மதிப்புகளைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (1) 1981 தொகைமதிப்புத் தொடர்பாக தற்போது காணப்படும் மாவட்ட எல்லைகளுக்கமைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. (2) 2001 தொகைமதிப்புத் தொடர்பாகத் தொகைமதிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த மாவட்டங்களுக்கு மட்டும் பால்நிலை விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. இம்முறை தொகைமதிப்பின் போது அதிகூடிய பால்நிலை விகிதாசாரம் மொனராகலை மாவட்டத்தில் 97.9 சதவீதம் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த தொகைமதிப்பில் மிகக் குறைந்த பால்நிலை விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88.0 சதவீதம் பதிவாகியுள்ளது. வீட்டுவசதிகள் தொடர்பான தகவல்கள் வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்கள் நபர்கள் வசிக்கும் வீட்டுக் கூறுகளில் இருந்தே சேகரிக்கப்படும் என்பதுடன், இதன் போது வீட்டுக் கூறின் தகவல்கள் மற்றும் குடித்தனத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இலங்கையில் வசிக்கும் வீட்டுக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை 6,030,541 ஆகும். அதிகமான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (28 சதவீதம்) மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றது என்பதுடன், குறைவான வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை (51 சதவீதம்) வட மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டிலுள்ள வீட்டுக்கூறு 4.32 வகைகளினுள் 95.66 சதவீதமான வீட்டுக்கூறுகள் தனி வீடுகளாகும் என்பதுடன் இணைந்த வீடுகளாகும். எஞ்சிய வீட்டுக் கூறுகளில் 82 சதவிதம் ஏனைய வீட்டுக் கூறுகளாக பதியப்பட்டுள்ளது. இலங்கையில் வீட்டுக் கூறுகளில் 97.9 சதவீதம் மாத்திரம் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையுள்ள பொருட்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதுடன், எண்ணிக்கையில் 2.1 சதவீதமானவற்றின் சுவர்கள் நெடுவாழ்வுத் தன்மையற்ற களிமண் பலகை/ கிடுகு/பனையோலை போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வீட்டுக்கூறுகளில் 98.1 தன்மையுள்ள பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.7 சதவீதமானவற்றின் கூரைகள் சதவீதத்திலும் கூரைகள் நெடுவாழ்வுத் நெடுவாழ்வுத் தன்மையற்ற கிடுகு/ பனையோலை/ வைக்கோல் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள மொத்த வசிக்கும் வீட்டுக்கூறுகளில் காணப்படும் மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும் என்பதுடன், குடித்தனத்தின் அளவு (வழமையாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை) 3.5 ஆகும். இலங்கையில் உள்ள மொத்த குடித்தனங்களில் 38.9 சதவீதமானவர்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையிடமிருந்து விநியோகிக்கப்படுகின்ற நீர்ஆகும். நாட்டில் மொத்தக் குடித்தனங்களில் 97.4 சதவீதமானோர் வெளிச்சத்தினைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மார்க்கமாக மின்சாரம் காணப்படுகிறது . மொத்தக் குடித்தனங்களின் எண்ணிக்கையில் 92.2 சதவீதமானோர்க்கு தமது குடித்தனத்தில் தனியான பாவனைக்கு (வீட்டுக் கூறினுள் அல்லது வீட்டுக் கூறிற்கு வெளியில்) மலசலகூடம் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/229096
-
நமீபியாவில், பாலைவனச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?
இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று. அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது. "அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார். மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது. 'எல்லாமே ஒரு போராட்டம்தான்' "இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென். "இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்." காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார். மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார். நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார். 'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை' இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார். "பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார். மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார். அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்." பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார். "இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன." இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது. "ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன." பட மூலாதாரம், Griet Van Malderen படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக உள்ளன மீண்டும் கடற்கரைக்கு பயணம் 2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின. "கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது." பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது." 2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார். ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது. "இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர். இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dkp7793o
-
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, வளத்துடன் வாழ்க.
-
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் ஜொலித்த இலங்கை இராணுவ வீர வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு 31 Oct, 2025 | 11:38 AM இந்தியா ராஞ்சியில் ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் வியாழக்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர், அதில் 30 பேர் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் என்பது சிறப்பு அம்சமாகும். அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை இலங்கைக்கு வென்றுத்தந்துள்ளனர். இந்த சிறப்பான விளையாட்டு வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் இராணுவத் தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்காக ரூ. 6 மில்லியனுக்கு மேற்பட்ட சிறப்பு நிதியுதவியும் வழங்கினார். இதன்போது பதக்கம் வென்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் அடுத்த நிலைக்கான நிலை உயர்வும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229117
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, புதிய அணி உலக சம்பியனாவதை உறுதிசெய்தது 30 Oct, 2025 | 11:30 PM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா மூன்றாவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வராற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாகப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. உபாதைக்குள்ளான ப்ரத்திக்கா ராவலுக்குப் பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபால் வர்மா 10 ஓட்டங்களுடனும் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 2 விக்.) ஆனால், சிரேஷ்ட வீராங்கனைகளான ஜெமிமா ரொட்றிகஸ், ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறப்பான நிலையில் இட்டனர். அஹாமன்ப்ரீத் கோர் தசை இழுப்புக்குள்ளான சொற்ப நேரத்தில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது தீப்தி ஷர்மா அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்டை தாரைவார்த்தார். அவர் 24 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று கவனக்குறைவான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார். அவர் 4ஆவது விக்கெட்டில் ரொட்றிகஸுடன் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிகஸ் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். ஆமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது. ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த அபார சதம், எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. அவர்களின் முயற்சிகள் ஜெமிமா ரொட்றிகஸின் அபார சதத்தினால் வீணடிக்கப்பட்டுவிட்டது. உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அணித் தலைவி அலிசா ஹீலி வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி ஆகிய ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஃபோப் லிச்ஃபீல்ட் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார். பெத் மூனி 24 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 3 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 77 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஏஷ்லி கார்ட்னர் 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ் https://www.virakesari.lk/article/229089
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
30 ஆண்டுகள் கழித்து அணு ஆயுத சோதனை நடத்தவுள்ள அமெரிக்கா! - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 31 Oct, 2025 | 12:34 PM அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தற்போது அணு ஆயுத சோதனைகளில் இறங்கியிருக்கும் நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அணு ஆயுத சோதனையைத் தொடங்குவது குறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதியாக 1992ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய அமெரிக்கா, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இச்சோதனையை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு உலக நாடுகளை பதற்றமடையச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “ஏனைய நாடுகள் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் அதற்குச் சமமாக நமது அணு ஆயுதங்களை சோதிக்கத் தொடங்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். அமெரிக்கா மற்றைய நாடுகளை விட அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சீனா தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சமமான இடத்தை எட்டிவிடும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திப்பதற்கு சற்று முன்பு அவர் சமூக ஊடகத்தில் இதனை பதிவிட்டுள்ளார். சோவியத் ரஷ்யா - அமெரிக்கா இடையே 1990இல் பனிப்போர் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த போரில் சோவியத் ரஷ்யா தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை நடத்த ஐ.நா தடை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே போர் தொடங்கி நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் ரஷ்யா அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. “புரெவெஸ்ட்னிக்” (Burevestnik) என்கிற அதிநவீன அணுசக்தி ஏவுகணையை சோதித்ததோடு, நேற்று (30) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி ட்ரோனை சோதனையிட்டது. ரஷ்யாவின் இத்தகைய அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து, தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை குறிப்பிட்டார். அதில், ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத சோதனைகளைத் தொடங்குமாறு அமெரிக்க இராணுவத்துக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/229125