Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுக்கு சர்வதேச மாநாட்டில் பாராட்டு! “மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த கலந்துக்கொண்டார்.எதிர்வரும் மூன்று வருடங்களில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இன்னும் 23 சதுர கிலோமீற்றர்கள் மாத்திரமே அகற்றப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்காக ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இலங்கை இராணுவம் இந்த பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/300932
  2. இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.
  3. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 01:45 PM காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. லண்டனிலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு சென்ற மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம் அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி தடைவிதித்துள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பிரலில் மருத்துவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மனியின் இந்த நடவடிக்கை காரணமாக மருத்துவர் ஷெங்கன் நாடுகளிற்கு பயணம் செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது. நான் பிரான்ஸ் செனெட்டில் உரையாற்றவேண்டும் ஆனால் என்னை பிரான்சிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182737
  4. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல் தொடர்கிறது - வேர்ஜினீயாவில் 25 பேர் கைது Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 01:31 PM அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பொலிஸார் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக தயாராகயிருக்கும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திர பாலஸ்தீனம் என கோசம் எழுப்பினர்.' அந்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடல் இடம்பெறுவதாக காவல்துறையினர் சமூக ஊடகங்களில் எச்சரித்தனர். இதன் பின்னர் பொலிஸார் உள்ளே நுழைந்தவேளை மாணவர்கள் இழுத்து நிலத்தில் விழுத்தப்பட்டனர் இழுக்கப்பட்டனர் அவர் கண்கணில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவம் தூவப்பட்டது என மாணவர்களிற்கு உதவிபுரிந்த ஆங்கில பேராசிரியர் ஒருவர் வோசிங்டன் போஸ்டிக்கு தெரிவித்துள்ளார். மாணவர்கள் குறித்தே எங்கள் கரிசனைகள் காணப்படுகின்றன மாணவர்கள் பாதுகாப்பாகயில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைகழகத்தின் கொள்கைக்கு விரோதமாக கூடாரங்களை மாணவர்கள் அமைத்துள்ளனர் என மாணவர்களிற்கு தெரியப்படுத்தினோம் அவற்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டோம் பொலிஸாரின் உதவியை நாடினோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் கடந்த வாரம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள்இடம்பெற்றுள்ளதுடன் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டும் காசா யுத்தத்திற்கு ஆதரவாக செயற்படுவதை கைவிடவேண்டும் என கோரி பல்கலைகழக வளாகங்களில் கூடாரங்களை அமைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182734
  5. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 11:33 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். கத்திக்குத்திற்கு இலக்கான 18 வயது இளைஞனின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள் வன்முறையில் ஈடுபடப்போகின்றோம் என காவல்துறையினரை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தெரிவித்தார். இதன் பின்னர் வாகனத்தரிப்பிடமொன்றில் கத்தியுடன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கின்றார் என தகவல் வந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் 16 வயது இளைஞன் மீது டேசர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் அந்த இளைஞன் வாளுடன் தொடர்ந்தும் முன்னோக்கி சென்றதால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182725
  6. நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை 05 MAY, 2024 | 04:25 PM இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை மே 13ஆம் திகதி ஆரம்பமாகலாம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது : இந்த கப்பல் சேவையை தனியார் நிறுவனமே இயக்கவுள்ளது. இந்தியாவின் ஷிப்பிங் கோர்ப்பரேசனும் இலங்கை அரசாங்கமும் இணைந்து இந்த நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளன. இந்த சேவையை மலிவானதாகவும் பொதுமக்களுக்கு ஏற்ற விதத்திலும் வழங்குவதற்காக ஒரு வருடகாலத்துக்கு மாதத்துக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் பொருந்தும் இயக்கச் செலவை இந்திய அரசாங்கம் ஏற்க முடிவு செய்துள்ளது. பயணிகள் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு இலங்கை அரசாஙகம் தீர்மானித்துள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் 63.35 மில்லியன் டொலர்களை உதவித்தொகையாக வழங்க தீர்மானித்துள்ளது. முன்னர் இந்த நிதியை கடனாக வழங்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் செழிப்புக்கான அதன் பயணத்துக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஜூலை 2023இல் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு ஆவணத்தின் முக்கிய அங்கமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துதல் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவது இந்திய அரசின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை உறுதிப்படுத்துவதாகும். ஒக்டோபர் 2023இல் இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது கருத்துக்களில் இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல, நாடுகளையும் அதன் மக்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதாகும். 2023 செப்டெம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பு20 உச்சிமாநாட்டின்போது ஆரம்பிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலம் இலங்கை மக்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182742
  7. 05 MAY, 2024 | 01:59 PM வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளன என மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளது. இந்த மாநாடு சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் ஒரு கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ.எஸ். சத்யானந்த மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கைக்கான சர்வதேச மாநாட்டின்படி கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம், செயல்முறையை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் பெற்ற அனுபவம், அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் பணியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 வருடங்களில் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்படவிருக்கிறது எனவும் இந்த மாநாட்டில் சத்யானந்த சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இலங்கை இராணுவம் Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்ஸர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருகின்றன. வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற இலங்கை எடுத்துவரும் வேலைத்திட்டம் குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சத்யானந்த தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182741
  8. 05 MAY, 2024 | 05:27 AM (நெவில் அன்தனி) லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர் உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில் காணக்கிடைத்தது. லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில் உள்ளூர் கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் முதலாவது அரை இறுதியில் மோதவுள்ளன. சிட்டி புட்போல் திடலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் களுத்தற எவ்.சி. அணியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட ஜெவ்னா எவ்.சி. அணி கடைசிக் கட்டத்தில் அன்தனி டிலக்சன் போட்ட கோலின் உதவியுடன் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு களுத்தற எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். சற்று நேரத்திற்குப் பின்னர் களுத்தற வீரர் மோஹமத் ரஹுமான் கோல் போட எடுத்த முயற்சி வீண்போனது. இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஹஸ்மீரின் மற்றொரு முயற்சி கைகூடாமல் போனதுடன் அடுத்த நிமிடமே மறுபுறத்தில் அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி. சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார். இடைவேளை முடிந்த பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெவ்னா எவ்.சி. கோல்காப்பாளரின் கவனக்குறைவைப் பயன்படுத்தி மொஹமத் அஸ்மீர் கோல் நிலையை 2 - 2 என களுத்தற சார்பாக சமப்படுத்தினார். எவ்வாறாயினும் முழு நேரத்திற்கு ஒரு நிமிடம் இருந்தபோது அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யின் வெற்றியை உறுதிசெய்தார். வெற்றிபெற்ற ஜெவ்னா எவ்.சி. அணியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் (தலைவர்), அவரது மூத்த சகோதரர் செபமாலைநாயகம் ஞானரூபன், அன்தனி ஜெரின்சன், அன்தனி டிலக்சன், தர்மகுலநாதன் கஜகோபன், தியாகமூர்த்தி ஆர்த்திகன், பரமேஸ்வரன் பகலவன், விக்ணேஸ்வரராஜா கஜநாதன், நேசராசா அன்தனி ரமேஷ், சிவநேசன் மதிவதனன், ஜெயராசா தில்லைக்காந்தன், செலஸ்டீன் சிந்துஜன், அமலேஸ்வரன் அருள் ஜோசப், விஜயகுமார் விக்னேஷ், செபமாலைராசா ஜெயராஜ், வின்சன் கீதன் ஆகியோர் இடம்பெற்றனர். பயிற்றுநர்: ரட்னம் ஜஸ்மின். கண்டி எவ்.சி. கோல் மழை பொழிந்து நிகம்போ எவ்.சி.யை வீழ்த்தியது கிட்டத்தட்ட தேசிய அணியாகக் காட்சி கொடுத்த கண்டி எவ்.சி. இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்து 9 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ எவ்.சி.யை துவம்சம் செய்தது. அசிக்கூர் ரஹ்மானை தலைவராகக் கொண்ட கண்டி எவ்.சி. அணியில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் தேசிய வீரர்களாவர். கண்டி எவ்.சி. அணியின் பலத்திற்கு ஈடுகொடுப்பதில் நிகம்போ எவ்.சி. சிரமத்தை எதிர்கொண்டது. போதாக்குறைக்கு 32ஆவது நிமிடத்திலிருந்து நிகம்போ எவ்.சி. 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது, இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி எவ்.சி. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஜிமோ போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது. போட்டியின் 32ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான என்.ஜே. பெர்னாண்டோ சிவப்பு அட்டையுடன் களம் விட்டகன்றார். அவர் ஒரு பெனல்டியை வழங்கிவிட்டே வேளியேறினார். அந்தப் பெனல்டியை மொஹமத் ஆக்கிப் பைஸர் கோல் ஆக்கினார். இடைவேளையின்போது கண்டி எவ்.சி. 2 - 0 என முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் சீரான இடைவெளியில் கண்டி எவ்.சி. கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது. மொஹமத் பஸால் (52 நி.), ஷெனால் சந்தேஷ் (59 நி.), ஆக்கிப் பைஸர் (64 நி.), இப்ராஹிம் ஜிமோ (81 நி.), அசிக்கூர் ரஹுமான் (82 நி., 90+6 நி.), மொஹமத் ரினாஸ் (90 நி.) ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். https://www.virakesari.lk/article/182705
  9. வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை - தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு 05 MAY, 2024 | 10:42 AM பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜதவின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா (66) கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல், பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த 2,976 ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் இடம்பெற்று உள்ள பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். மேலும் அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தங்களது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/182717
  10. இஸ்ரேலினால் கைதுசெய்யப்பட்ட காசா மருத்துவர் சிறையில் மரணம் Published By: RAJEEBAN 04 MAY, 2024 | 11:44 AM இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் உயிரிழந்துள்ளார் என பாலஸ்தீன சிறைக்கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணங்களிற்காக ஒவெர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவர் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் என இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை உறுதி செய்துள்ளது. உயிரிழப்பிற்கான காரணங்களை வெளியிடாத இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் பல தடவைகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்சிபா மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்தார். காசாவின் வடபகுதியில் உள்ள அல்அவாட மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலிய படையினர் அவரை கைதுசெய்தனர். இந்த மரணச்செய்தி மனித ஆன்மாவினால் தாங்க முடியாதது என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அபு சாடா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182649
  11. யாழில் கண்டுபிடிக்கப்பட்ட கொல்களம் : 21 மாடுகள், 4 ஆடுகள் உயிருடன் மீட்பு, ஒரு தொகை இறைச்சியும் கைப்பற்றல் 05 MAY, 2024 | 05:38 AM யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொல்களம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். அதன்போது குறித்த கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடாரி , கத்திகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்பபாணத்தில் பல இடங்களில் ஆடு , மாடுகள் கடத்தப்படுவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ள நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட ஆடுகள், மாடுகள் களவாடப்பட்டவையா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/182707
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது. தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம். இ-விசா சலுகை பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம். சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது. அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES குறைந்த பயண செலவு தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும். சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார். விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர். ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன். மற்ற செலவுகள் எப்படி இருக்கும்? இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார். “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி. தவறவிடக்கூடாத இடங்கள் பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும். இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம். காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும். இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும். இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம். https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo
  13. 04 MAY, 2024 | 08:19 PM தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு சனிக்கிழமை(04) நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன். அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நட்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம். தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம். 30 வருடங்களாக் நான் சொல்லி வந்தவிடையம் அவைரும் அறிந்ததே. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் மிக நீண்ட காலமாக சொல்லி வந்தேன். அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை. ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அவ்வகையிலாவது அது நல்லவிடையமாகும். யாரும் இவற்றை எதிர்க்கும்போதும், அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள். இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொ வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும். புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரழ்வததான் சரியானது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182689
  14. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சனிக்கிழமை மாலை பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்த இந்திய விமானப்படை, சனிக்கிழமையன்று, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாசிதார் அருகே தீவிரவாதிகளால் ஒரு ராணுவ வாகனம் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. பிடிஐ செய்தி முகமையின்படி, "மாலை 6:15 மணியளவில், வீரர்கள் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்." சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ராணுவம் உறுதி செய்தது. உயிரிழந்த வான் படை வீரர் ஒரு மணிநேரம் கழித்து, இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், "பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், விமானப்படை வீரர்கள் துணிச்சலாகப் போராடினர்" என்று கூறியது. இந்தத் தாக்குதலில், ஐந்து இந்திய வான் படை வீரர்கள் சுடப்பட்டனர், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல், பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. தலைவர்கள் கண்டனம் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பூஞ்ச் தாக்குதலை கோழைத்தனம் என விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாஜக தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கோழைத்தனமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், “பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப் படையின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் நான்கு துணிச்சலான விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். இந்த வெறுக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மூன்று வாரங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பூஞ்ச், அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி. அங்கு மே 25ஆம் தேதி ஆறாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c29683w00zko
  15. RCB vs GT: குஜராத்தை வெளியேற்றிய ஆர்சிபி - ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டா? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்தும் காலம் கடந்து நடக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றாலும் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது விவாதப் பொருள்தான். தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ‘ஹாட்ரிக் வெற்றி’யை பதிவு செய்துள்ளது. பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த சீசனில் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் வென்றது. ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா? பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.049 எனக் குறைந்துள்ளது. ஆர்சிபி அணி தனக்கு இருக்கும் அடுத்த 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 14 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்தப் புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கக்கூட போதாது. ஆனாலும், தற்போது வரை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து ஆர்சிபி வெளியேறவில்லை என்பதுதான் நிதர்சனம். கணித அடிப்படையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதற்கு இவையெல்லாம் நடந்தால் சாத்தியம். முதலில் ஆர்சிபி அணி மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்ல வேண்டும், அதேநேரம் லக்னெள அணி அல்லது சன்ரைசர்ஸ் அணி தனக்கு மீதமிருக்கும் ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று மற்ற ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது 14 புள்ளிகளோடு முடிக்கும்போது நிகர ரன்ரேட் பார்க்கப்படும். இரண்டாவதாக சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் தங்களுக்கு இருக்கும் 4 ஆட்டங்களில் இரு வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இரு போட்டிகளில் தோற்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் தனக்கிருக்கும் 4 ஆட்டங்களில் 3 போட்டிகளுக்கு மேல் வெல்லக்கூடாது, ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் 14 புள்ளிகளுடன் 6 அணிகளும் இடம்பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். மூன்றாவதாக ஆர்சிபி அணி ஒருவேளை 12 புள்ளிகளுடன் முடித்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாம். எப்படியென்றால் மேலே கூறப்பட்ட 5 அணிகளில் சிஎஸ்கே, டெல்லி, ஒரு வெற்றிக்கு மேல் பெறக்கூடாது, லக்னெள அல்லது சன்ரைசர்ஸ் அணி இனிமேல் வெல்லவே கூடாது, பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இவ்வாறு நடந்தால் 6 அணிகளும் 12 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும். இவை நடப்பது சாத்தியமென்றால், ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்று செல்வதும் சாத்தியமே. குஜராத் அணி வெளியேறுகிறது பட மூலாதாரம்,SPORTZPICS முன்னாள் சாம்பியன், கடந்த சீசனில் 2வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் லீக் போட்டிகளோடு இந்த சீசனில் வெளியேற உள்ளது. குஜராத் அணி இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் குஜராத் அணி வென்றாலும்கூட14 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமான புள்ளிகளாக இருக்காது. ஒருவேளை கணித அடிப்படையில் குஜராத் அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினாலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.320 என்று மோசமாக இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் நல்ல ரன்ரேட்டை பெற முடியும். ஆதலால், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை, ஆர்சிபி, குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறுகின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகள் மட்டுமே தற்போது ரேஸில் உள்ளன. ஆர்சிபி அணி வெற்றிக்கு அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், கேப்டன் டூப்ளெஸ்ஸி, விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கும்தான் காரணம். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, கேப்டன் கில் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியது குஜராத் அணியை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது. டுப்ளெஸ்ஸியின் பதற்றம் ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “கடந்த சில போட்டிகளாக நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகச் செயல்படுகிறோம். பேட்டிங்கில் ஆக்ரோஷம், ஃபீல்டிங்கில் நம்ப முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸர் இருந்ததை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டாலும், ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம். 180 முதல் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர். நாங்கள் ஸ்கோர் போர்டை பார்ப்பதில்லை, ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை விளையாடுகிறோம். திடீரென வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தவுடன் நான் பதற்றமடைந்தேன். இந்த வெற்றி போதாது, நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்," எனத் தெரிவித்தார். ஆர்சிபியின் சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS பேட்டிங்கை பொறுத்தவரை பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கிய டுப்ளெஸ்ஸி, கோலி, ஆர்சிபி அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அதேநேரம், குஜராத் அணி பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள்தான் சேர்த்திருந்தது. குஜராத் அணியின் பவர்ப்ளே ஸ்கோருக்கும், ஆர்சிபி பவர்ப்ளே ஸ்கோருக்கும் இடையே 69 ரன்கள் இடைவெளி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஸ்கோரில் இதுபோன்று மிகப்பெரிய வேறுபாடு இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடந்த 2017இல் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தநிலையில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய வேறுபாடாக இருந்தது. குஜாரத் அணி பவர்ப்ளேவில் சேர்த்த 23 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அந்த அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் 30 ரன்கள் சேர்த்திருந்தது. ஆர்சிபி அணி பவர்ப்ளேவில் 92 ரன்கள் என்பது எந்த அணிக்கும் எதிராக பவர்ப்ளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் 79 ரன்களும், 2011இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததுதான் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணிக்கும் எதிராக அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை படைத்தது. இதற்குமுன் கொல்கத்தா அணி 34 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது. குஜராத் மீது ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 26 ஓவர்களில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சில் 20 ஓவர்களும் ஆர்சிபியின் கட்டுப்பாட்டிலும், சேஸிங்கின்போது பவர்ப்ளேவில் 6 ஓவர்களும் ஆர்சிபி வீர்ரகள்தான் கோலோச்சினர். நடுப்பகுதியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்சிபி படபடவென இழந்தாலும், சுதாரித்து வெற்றியை அடைந்தது. தினேஷ் கார்த்திக்(21), ஸ்வப்னில் சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் சேர்த்த அதே ஆடுகளத்தில்தான் நேற்றைய ஆட்டமும் நடந்தது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன் சிறிது மழை பெய்ததால் விக்கெட்டின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் செய்ய நன்கு ஒத்துழைத்ததால், அதை சிராஜ், யாஷ் தயால் நன்கு பயன்படுத்திக் கொண்டு குஜராத் பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் சஹாவை(1) வெளியேற்றினார். இதுவரை 6 இன்னிங்ஸில் சஹாவை 4 முறை சிராஜ் ஆட்டமிழக்க வைத்துள்ளார். சிராஜ் தனது 2வது ஓவரில் கில்(2) விக்கெட்டை வீழ்த்தி குஜராத் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் சாய் சுத்ரசன்(6) விக்கெட்டை கேமரூன் கிரீன் வீழ்த்த குஜராத் அணி ஆழ்ந்த சிக்கலுக்குச் சென்றது. அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான்(37), மில்லர்(30), திவேட்டியா(35) ஆகியோர் குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் களமிறங்கிய கடைசி வரிசை பேட்டர்களுக்கு பவுன்ஸர்களையும், ஷார்ட் பந்துகளையும் வீசி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறடிக்கவே, குஜராத் அணி 147 ரன்களுக்கு வீழ்ந்தது. குஜராத் அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 16 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிலும் வியாசக் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை குஜராத் இழந்தது. மிரட்டலான சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஆடுகளத்தில் 148 ரன்கள் இலக்கை விரைவாக அடைய வேண்டுமெனில் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கக் கூடாது என்பதை உணர்ந்து டூப்ளெஸ்ஸி, கோலி அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே கோலி ஓவர் கவர் திசை, மிட்விக்கெட்டில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஜோஸ் லிட்டில் வீசிய 2வது ஓவரில் டூப்ளெஸ்ஸி சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசினார். மனவ் சத்தார், மோகித் ஓவரை டூப்ளெஸ்ஸி வெளுக்கவே, ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. மனவ் சத்தார் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை கோலி பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய டூப்ளெஸ்ஸி 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆர்சிபி அணிக்காக 2வது அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டூப்ளெஸ்ஸி பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். பவர்ப்ளேவில் ஆர்சிபி அணி 92 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேவில் 92 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஏறக்குறைய ஆட்டம் முடிந்துவிட்டது, ஆர்சிபி வெற்றி உறுதியானது. லிட்டில் வீசிய ஓவரில் டூப்ளெஸ்ஸி 64 ரன்கள்(23 பந்துகள், 10 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் டூப்ளெஸ்ஸி பெற்றார். அதன்பின் ஆர்சிபி அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. நூர் முகமது பந்துவீச வந்ததும், அவரின் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் நோக்கி நகர்ந்த விராட் கோலி 42 ரன்னில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,SPORTZPICS லிட்டில் வீசிய 8வது ஓவரில் பட்டிதார்(2), மேக்ஸ்வெல்(4) ரன்னில் விக்கெட்டைஇழந்தனர். இந்த சீசன் முழுவதும் இதுவரை மேக்ஸ்வெல் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் வரை இருந்த ஆர்சிபி அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 25 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது. சின்னச்சாமி அரங்கமே மௌனமானது. 7வது விக்கெட்டுக்கு வந்த தினேஷ் கார்த்திக், ஸ்வப்னிங் சிங் அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து, வெற்றி பெற வைத்தனர். டிகே(21), ஸ்வப்னில்(15) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். காபி குடிப்பதற்குள் ஆட்டம் மாறியது ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “டூப்ளெஸ்ஸி, கோலி ஆட்டத்தைப் பார்த்தபோது, நான் களமிறங்க வேண்டிய தேவை இருக்காது என நினைத்து ரிலாக்ஸாக ஒரு காபி குடிக்கத் தொடங்கினேன். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் நான் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. எனக்குரிய வேலையைச் செய்துவிட்டேன். விக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது, லேசான ஈரப்பதம் இருந்தது. டாஸை வென்றோம், போட்டியையும் வென்றோம்,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3g9r054xkpo
  16. ஆசியாவில் கடும் வெப்பம் அலை Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 11:54 AM ’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட '5 டிகிரி செல்சியஸ்' வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது. அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/182645
  17. அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்? பட மூலாதாரம்,OREGON LOTTERY 37 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய புற்றுநோயாளி ஒருவர் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது அமெரிக்க வரலாற்றில் நான்காவது பெரிய லாட்டரி தொகை ஆகும். லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட செங் சைஃபன், பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றார். இந்திய மதிப்பில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். பல இரவுகள், தலையணைக்கு அடியில் லாட்டரி காகிதங்களை வைத்துக்கொண்டு தூங்கியதாக செங் சைஃபன் கூறுகிறார். பவர்பால் லாட்டரியை வெல்வதற்கான கணக்கீடுகள் கொண்ட காகித தாள்கள் அவரின் தலையணையின் கீழ் வாரக்கணக்கில் இருந்தன. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கும் சைஃபன் தனது வாழ்க்கையில் கடினமான நாட்களை நினைவு கூர்ந்தார், "நான் கடவுளிடம் உதவிக்காக கெஞ்சினேன். என் பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். என் உடல்நிலை சரியில்லை" என்று வேண்டியதாக அவர் கூறினார். சைஃபனின் லாட்டரி சீட்டில் இருந்த எண் வரிசைக்கு ஏப்ரல் 7ம் தேதி 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகை உறுதியானது. கடந்த திங்கள்கிழமை சைஃபனுக்கு லாட்டரி அமைப்பாளர்கள் பரிசுத் தொகையை வழங்கினர். இந்த லாட்டரி மூலம், சைஃபனின் மனைவி மட்டுமின்றி நண்பர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சைஃபன் வழக்கமாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குவார். அவ்வாறு வாங்கிய ஒரு சீட்டு இம்முறை அவருக்கு பெரும் பரிசுத்தொகையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் தான் லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை தனது மனைவி டுவான்பெனுக்கும், 50 சதவீதத்தை தனது தோழி லைசா சோவுக்கும் தருவதாக கூறியுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் சைஃபன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். 'எனக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்று தெரியவில்லை' "என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் கடவுளிடம் மட்டும் தான் உதவி கேட்டேன். அதன் பின்னர் எல்லாம் நடந்தது. இப்போது நான் என் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். எனக்கு ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியும். லாட்டரி பரிசுத் தொகையில் இருந்து கொஞ்சம் பணத்தை செலவழித்து வீடு வாங்க விரும்புகிறேன். " என்று சிபிஎஸ் ஊடகத்திடம் சைஃபன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES லாட்டரி பரிசுத் தொகைக்கான காசோலையை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைஃபன், "இந்தப் பணத்தை செலவழிக்க இன்னும் எத்தனை காலத்துக்கு என் உடல் நலம் ஒத்துழைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் வாழ்வேன் என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார். தனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது தெரிந்ததும், சைஃபன் அதை தன் மனைவி மற்றும் தோழியிடம் சொல்ல மிகவும் உற்சாகமாக இருந்தார். "என் மனைவியிடம் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன். நான் வேலைக்குப் போகிறேன் என்று பதிலளித்தாள். இனி வேலைக்குப் போகத் தேவையில்லை என்றேன்'' என்றார் சைஃபன். அமெரிக்காவின் மிகப் பெரிய லாட்டரி பரிசுத் தொகை 2.04 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளில் தரப்படும் பரிசுத் தொகை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை பெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 2022 ல் ஒருவர் 2.04 பில்லியன் டாலர்களை (சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்) வென்றார். இன்றுவரை இந்த தொகை தான் அதிகபட்ச பரிசுத்தொகை. லாட்டரி வெல்லும் வாய்ப்பை மேலும் கடுமையாக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் $292.2 மில்லியன் டாலர் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன. தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்குவேன் என்று கூறும் சைஃபன், "நான் மீண்டும் லாட்டரியை வெல்லக்கூடும், நான் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c97zq0r9pr7o
  18. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300881
  19. கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கஞ்சா சோதனைகள் தேவையற்றது கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார். இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர்களை தேடி கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ganja-gives-motivation-and-strength-1714808794?itm_source=parsely-api
  20. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன? கலவரத்தில் நடந்தது என்ன? சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, "ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது. இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். ‘இருதரப்பிலும் பாதிப்பு’ நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன. நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன. தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, "இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்," என அன்று நடந்தது குறித்து விவரித்தார். அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர். சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம். ‘கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால் தான் பிரச்னை’ படக்குறிப்பு,'எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார் தங்காய். இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய். ‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம். ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார். ‘போலீசார் எங்களை மட்டுமே தாக்கினார்கள்’ படக்குறிப்பு,'போலீசார் தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்', என்கிறார் வீரம்மா. கலவரம் முடிந்ததும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாக தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார் வீரம்மா. ‘‘நான் அன்று வீட்டில்தான் இருந்தேன். திடீரென பிரச்னை எனத் தெரிந்ததும் சென்று பார்த்தபோது, அங்கு எங்கள் பகுதி இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர். கலவரம் முடிவதற்குள் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் பகுதிக்கு வந்த போலீசார் எங்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அவர்களின் தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்,’’ என்கிறார் வீரம்மா. ‘நான் வேலைக்கு போயிட்டு வந்தேன், என்னையும் அடித்தார்கள்’ படக்குறிப்பு,கலவரம் நடந்த அன்று கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தன்னை போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் பசுபதி. வீரம்மாவின் கூற்றையே பசுபதியும் கூறுகிறார். காலில் காயமடைந்து படுக்கையில் இருந்தபடி நம்மிடம் பேசிய பசுபதி, ‘‘அன்று கலவரம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நான் வீட்டுக்கு வந்தபோது திடீரென வீட்டிற்குள் வந்த போலீசார் என்னை லத்தியால் கடுமையாக அடித்தார்கள். எதற்காக அடிக்கிறீர்கள் என நான் கேட்டபோது என்னைத் திட்டியதுடன், கலவரம் செய்கிறாயா? எனக் கூறி அடித்தார்கள்,’’ என்கிறார். மேலும் தனது காயத்தைக் காண்பித்து, இரு நாட்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், தனக்கு ஏற்கெனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் போலீஸார் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பசுபதி. ஆனால், போலீசார் தாக்கியதாக பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன். பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘நாங்கள் கலவரத்தில் ஈடுபட்டோரைத்தான் கைது செய்தோம். அப்போது, ஆதாரத்திற்காக நாங்கள் வீடியோ எடுத்துதான் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம். பட்டியலின மக்கள் புகார் தெரிவித்தால், வீடியோவை ஆய்வு செய்து தவறு இருந்தால் அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகளைக் கேட்டறிய தீவட்டிப்பட்டி கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் திருவிழாக் கோலத்தில் அலங்காரம், விளக்குகளுடன் காட்சி அளித்தாலும், கலவரத்தால் திருவிழா தடைபட்டுள்ளதால் கோவிலே வெறிச்சோடி வெறும் போலீசாருடன் காணப்பட்டது. ‘பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது’ படக்குறிப்பு,மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா கோபிநாத். அந்தக் கோவிலைக் கடந்து சென்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எனவும் இது தங்கள் பாரம்பரியம் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். நம்மிடம் பேசிய கோவிலின் தர்மகர்த்தாவான கோபிநாத், ‘‘பல தலைமுறையாக நாங்கள் இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம். இதை எங்கள் சாதி உள்பட ஐந்து சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறோம். அவர்கள் (பட்டியலின மக்கள்) கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்வார்கள், பல தலைமுறையாக அப்படித்தான் கடைபிடிக்கிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிப்போம், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை எங்கள் கோவிலுக்கு அவர்கள் வர வேண்டாம்,’’ என்று கூறினார் அவர். "இது அனைவருக்கும் பொதுவான கோவில்தானே? பிறகு ஏன் பட்டியலின மக்கள் வர வேண்டாம் என்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தான் எங்கள் பாரம்பரியம், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறோம், விட்டுத் தரமாட்டோம்,’’ என்றார். ‘வெளியில் நின்றுதான் வழிபடுவார்கள்’ படக்குறிப்பு,'எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறியதால் கலவரம் நடந்துள்ளது,' என்கிறார் பாவையம்மாள். கோவிலுக்கு வெளியில் நின்றுதான் இத்தனை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபட்டார்கள் என்கிறார் பாவையம்மாள். ‘‘பல தலைமுறைகளாக கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் (பட்டியலின மக்கள்) வழிபடுவார்கள், தீர்த்தம் வாங்குவார்கள். அவர்கள் உள்ளே வந்து வழிபட்டது இல்லை, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான் கோவிலுக்குள் வர வேண்டும், எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறினார். அதனால்தான் கலவரம் நடந்துள்ளது,’’ என்கிறார் அவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சார்பாக நம்மிடம் பேசிய கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேனாதிபதியும், பாவையம்மாள் கருத்தைத்தான் எதிரொலித்தனர். கலவரம் தொடர்பாகவும், பட்டியலின மக்களின் கோரிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைப்பாடு குறித்தும், பிபிசி தமிழ் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது. ‘சமூக நீதியை உறுதிசெய்வோம்’ – மாவட்ட ஆட்சியர் படக்குறிப்பு,போலீசார் தாக்கியதில் காயமடைந்த பெண். பிபிசி தமிழ் விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது, செல்போன் வாயிலாகப் பதிலளித்த ஆட்சியர் பிருந்தா தேவி, ‘‘கலவரம் ஏற்படுவதற்கு முன்பு இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை நடத்த ஒருநாள் அவகாசம் கேட்டனர். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடித்த அன்றே ஏன் கலவரம் செய்தார்கள் எனத் தெரியவில்லை," என்றார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கண்காணிப்பில் நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். "பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்து, சமூக நீதியை உறுதிப்படுத்துவோம்,’’ என விளக்கம் அளித்துள்ளார். ‘மீண்டும் சுமூகமாக திருவிழா நடத்த திட்டம்’ – காவல் கண்காணிப்பாளர் படக்குறிப்பு,பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார் போலீசார் வேண்டுமென்றே வீடு புகுந்து தாக்கியதாக பட்டியல் சாதியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, செல்போன் வாயிலாக பதிலளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘1972 முதல் அந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பட்டியலின சாதியினரை உள்ளே நுழையக்கூடாது என ஆதிக்க சாதியினர் கூறியதால், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடைகளுக்குத் தீ வைத்தவர்களைத் தேடி வருகிறோம். இருதரப்பையும் கைது செய்யும்போது நாங்கள் ஆதாரத்திற்காக வீடியோவும் எடுத்துள்ளோம். போலீசார் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில் எங்கள் வீடியோக்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் திருவிழாவை சுமூகமாக நடத்த இருதரப்பிடமும் பேச்சவார்த்தை நடத்துவோம்,’’ என விளக்கம் அளித்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன? "அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதில் சிக்கல் என்ன?" என்று இந்து சமய அறநிலையத்துறை காடையம்பட்டி ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபோது, ‘‘இதுவரை அந்தக் கோவிலில் இதுபோன்ற பிரச்னை, கலவரம் வந்தது இல்லை. பட்டியல் சாதியினர் சார்பில் எந்தப் புகாரும் வரவில்லை. அரசு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்வது தனிமனித உரிமை. இதை உறுதிப்படுத்த இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை விரைவில் சரி செய்வோம்,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/c1vw66yn2evo
  21. 04 MAY, 2024 | 06:42 PM (நா.தனுஜா) ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது: ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம். இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன். அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம். அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம். மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182696
  22. 04 MAY, 2024 | 06:11 PM (நா.தனுஜா) கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர். அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி செயற்றிட்டம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார். அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்றிட்டம் குறித்தும், நுண்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு பொருளாதாரத்திலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182692
  23. உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருடனான இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மையான முறையில் அடையப்படுவது அவசியம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் 04 MAY, 2024 | 05:18 PM (நா.தனுஜா) 'நண்பன் என்ற ரீதியில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஜப்பான் தொடர்ந்து வழங்கும்' என்ற செய்தியைக் கூறுவதற்காகவே தான் இலங்கைக்கு வருகைதந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் யொகோ கமிகவா மேலும் கூறியதாவது: எனது பிறப்பிடமான ஷிஸுவோகா 'க்ரீன் டீ'க்கு பெயர்போன இடமாகும். எனவே, 'க்ரீன் டீ' விளையும் மண்ணில் இருந்து முதன்முறையாக 'சிலோன் டீ' விளையும் மண்ணுக்கு வருகைதருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஊக்கமும், சமாதானத்தைக் கட்டியெழுப்பல், புனர்வாழ்வளித்தல் மற்றும் மீள்கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இலங்கையின் முயற்சிகளுக்கு யஸுஷி அகாஷி தலைமையில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவும் இரு நாட்டு மக்களினதும் நினைவலைகளில் இருக்குமென நம்புகிறேன். கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், இலங்கை எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியது. அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜப்பான் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கியது. அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் ஜப்பான், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமைதாங்குகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன மீளுறுதிப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த இந்து - பசுபிக் பிராந்தியத்தினதும் உறுதிப்பாடு மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இன்றியமையாததாகும். 'நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்' என்ற செய்தியை கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை செயற்திறன் மிக்க வகையில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கடன் நெருக்கடி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலங்கை உரியவாறு கையாள்கிறது. அந்த வகையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் அனைத்துக் கடன்வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடானது வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடையப்படவேண்டும். மேலும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும். இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட மறுசீரமைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாதவையாகும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/182677
  24. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக செவிலியர்களை சந்தேகப்பட வைத்தது. எனவே செவிலியர் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இவர் நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக கூறியிருக்கிறார். இதனால் இவர் இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்திருக்கின்றனர். மேலும் செவிலியர் ஹீதர் பிரஸ்டீ மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் எப்போதும் கோபமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இவர் பல நோயாளிகளை கடுமையாக காயப்படுத்தியதாகவும், இரவு நேர ஷிப்டுகளின் போது நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த செவிலியர் ஹீதர் பிரஸ்டீ கடந்த பிப்ரவரி மாத விசாரணையின் போது, தனது வழக்கறிஞர்களிடம் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். எனவே பிட்ஸ்பர்க்கிலிருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது செவிலியர் பணியை தொடங்கிய ஹீதர் பிரஸ்டீ, 2022 முதல் மே 2023 க்கு இடையில் தனது அம்மாவிற்கு பல கடிதங்களை அனுப்பினார், அதில் அவர் பல்வேறு நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றி விவாதித்துள்ளார், மேலும் தான் மிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/300874
  25. 04 MAY, 2024 | 04:20 PM ஒன்மேக்ஸ் டிடி (OnmaxDT) பிரமிட் திட்டத்தின் ஊடாக பணமோசடி செய்த ஆறு பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182666

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.