Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 04:45 PM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (12) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178545
  2. சிஎஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ஐபிஎல் 2024 ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால திட்டம் பற்றி அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பின்னர் அணியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்று காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். அடுத்த அணித்தலைவர் அதேவேளை சிஎஸ்கே அணியின் புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் சென்னை அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து தான் இதனை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார். அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை, அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக நியமித்திருந்த நிலையில் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் அணித்தலைவராக தோனியே களமிறங்கினார். ஐபிஎல் 2024 இம்மாதம் 22 ஆரம்பமாகவுள்ளதோடு அன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. https://ibctamil.com/article/replace-ms-dhoni-csk-captain-ceo-big-revelation-1710246797
  3. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 மார்ச் 2024, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 12 மார்ச் 2024, 04:31 GMT குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சட்டத்தில் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன? மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள். மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன. "இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சட்டம் மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது" என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள். "சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள்" என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்றார். இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன? காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன. இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, இது கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதாக சிவ்சேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனா. நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஆனால், அதிமுக இந்தச் சட்டமசோதவை ஆதரித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது. அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்திய குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும். இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா? நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக அரசு என்ன சொல்கிறது? குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா" என்றார். "ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்றும் அவர் அப்போது அவையில் தெரிவித்தார். "இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார். இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்தனர். https://www.bbc.com/tamil/articles/cev9g79kvgqo
  4. 1600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பொதுத்துறைக்கு அதிகாரம் அளித்து ஜப்பான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு இதன்படி, ஜப்பான் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1600 மில்லியன் (3.3 பில்லியன் ரூபா) வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணம் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி உபகரணங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. அதிபர் ரணில் முன்வைத்த யோசனை மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்துடன் பரிமாற்ற பத்திரங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://ibctamil.com/article/1600-million-yen-aid-from-japan-1710228079 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கு நிதி வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
  5. திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணம் குறித்த பூரண அறிக்கை இது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் மரணம் குறித்த பூரண அறிக்கையே இவ்வாறு திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் , மாணவனின் மரணத்திற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலை அபிவிருத்தி குழு இந்த கடித்தை அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் ஈப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/thirukkovil-hospital-development-committee-1710239822
  6. தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது எஸ்பிஐ - இதனால் பாஜகவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்? பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், உமங் பொத்தார் பதவி, பிபிசி செய்தியாளர் 12 மார்ச் 2024, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கூடுதல் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து இன்று (மார்ச் 12-ஆம் தேதி) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களை எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவான பலர் வரவேற்றுள்ளனர். தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல் வெளியான பிறகு, அரசியல் கட்சிகளின் நிதியுதவி குறித்து தெரியவரும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,X/SPOKESPERSONECI பாஜகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, எஸ்பிஐ வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும் அஞ்சலி பரத்வாஜ், “எஸ்பிஐ உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் அவர்களிடம் முழுமையான தரவு உள்ளது. தேர்தலுக்கு முன்பு இந்தத் தரவை வழங்க எஸ்பிஐ விரும்பவில்லை என்று தெரிகிறது,” என்றார். "இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்பிஐ ஏன் தரவை கொடுக்க விரும்பவில்லை, யார் தடுக்கிறார்கள், எஸ்பிஐ எதை மறைக்கிறது, யாருக்காக மறைக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். "தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளும் கட்சிகள் பெரும் பங்கைப் பெறும். தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக பாஜக பணம் பெற்றுள்ளது என்பது உறுதி. "தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2017-18 மற்றும் 2022-23-க்கு இடையில் பாஜக சுமார் ரூ.6,566 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், ரூ.9,200 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன,” என்றார். அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும் போது, நன்கொடைக்கு ஈடாக சில நன்மைக்காக அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அஞ்சலி பரத்வாஜ் கூறும்போது, “ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கும்போது, ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்துதான் கொடுக்கப்படுகிறது. நாம் பணத்தை நன்கொடையாக வழங்கினால், அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று நன்கொடையாளர் நினைக்கிறார்” என தெரிவித்தார். அவர் கூறுகையில், "இது நிறைய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். எந்த ஆதாயமும் பெறுவது ஊழலுக்கு மிகப்பெரிய காரணம், யாருடைய நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெறுகிறது? என்ன கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன? அந்தக் கொள்கைகள் சில நிறுவனங்களுக்குப் பலன் தருகிறதா? அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு பணம் கொடுத்துள்ளனவா? என்பதெல்லாம் தெரியவரும்" என்றார். அவர் கூறுகையில், "சில நிறுவனங்களுக்கு எதிராக ஏதேனும் ஒருசட்ட முகமையில் வழக்கு இருந்திருக்கிறதா? நன்கொடை வழங்கிய பிறகு அந்நிறுவனம் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனரா? இப்படி பல விஷயங்கள் வெளிவரும்” என்றார். தேர்தல் பத்திர விவகாரம் குறித்து பத்திரிகையாளர் நிதின் சேதி கூறுகையில், "நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்கள் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படும். அதாவது, இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் பாஜக தான் என்பது உறுதியாகும்," என்றார். இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன், எதிர்க்கட்சிகளும் தங்கள் சொந்த நலனுக்காக அதைப் பயன்படுத்த முயற்சிக்கும் என்று நிதின் சேதி நம்புகிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்திய வரலாற்றில் தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழலாக இருக்கப் போகிறது, இதில் ஊழல் தொழிலதிபர்களின் தொடர்பை அம்பலப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோதி அரசின் உண்மையான முகத்தை நாட்டிற்கு வெளிப்படுத்தும்" என பதிவிட்டிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, பாஜக தலைவர் பிருத்விராஜ் ஹரிசந்தன் பிடிஐ செய்தி முகமையிடம், "தேர்தல் பத்திரங்கள் அரசியல் ஊழலைக் குறைத்துள்ளதா அல்லது அதிகரித்ததா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். இதை நீதிமன்றமே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்," என்றார். நீதிமன்றத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே. எஸ்பிஐ கடந்த மார்ச் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியிருந்தது எஸ்பிஐ. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், எஸ்பிஐ தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யார் பணமாக்கினார்கள் என்பது பற்றிய தகவல்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எஸ்பிஐ தனது மனுவில், தேர்தல் பத்திரங்களை வழங்குவது மற்றும் பணமாக்குவது தொடர்பான தரவு இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ளன என்று கூறியிருந்தது. இந்த தரவுகள், தனது மைய தரவுத்தளத்தில் இல்லை என்றும் எஸ்பிஐ கூறியிருந்தது. இந்த செயல்முறை 'அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால்' கால அவகாசம் கேட்டது எஸ்பிஐ. ஒவ்வொரு பத்திரத்திலும் ஒரு தனிப்பட்ட எண் கொடுக்கப்பட்டுள்ளது, அதை புற ஊதா ஒளியில் படிக்க வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதன் பின்னரே பத்திரம் குறித்து தெரியவரும். இதைத் தவிர, அதை வாங்கியவர் யார் என்பதை அறிய வேறு எந்த அடையாளமும் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பத்திரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் ஆவணங்கள் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இரண்டையும் இணைக்க அதிக நேரம் எடுக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2019 மற்றும் பிப்ரவரி 2024-க்கு இடையில் 22,217 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன, அவற்றின் தகவல்கள் பொருந்த வேண்டும். நீதிமன்றம் என்ன கூறியுள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES எஸ்பிஐயின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த இரண்டு தகவல்களையும் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐயிடம் நீதிமன்றம் கூறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு வகையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலாவதாக, பத்திரம் எப்போது வாங்கப்பட்டது, வாங்குபவரின் பெயர் மற்றும் வாங்கிய ஒவ்வொரு பத்திரத்தின் விலை என்ன என்பதையும் இரண்டாவதாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு பத்திரங்களை பெற்றன, பத்திரங்களை பெற்ற தேதி என்ன மற்றும் பத்திரங்களின் மதிப்பு என்ன ஆகிய தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்டது. இந்த தகவல் எஸ்பிஐயிடம் உள்ளது, எனவே தாமதமின்றி தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது. எஸ்பிஐயும் இதை ஏற்றுக்கொண்டது, ஆனால் தகவலை வழங்க இன்னும் மூன்று வாரங்கள் கோரியது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஏப்ரல் 12, 2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் நன்கொடை அளிப்பவர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த பத்திரத்தின் மதிப்பு என்ன, எந்த தேதியில் எந்த கணக்கில் திரும்பப் பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் செப்டம்பர் 2023-இல் உத்தரவிடப்பட்டது. இந்தத் தகவலைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுதவிர, மார்ச் 12-ஆம் தேதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிட்டால், வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகக் கருதி எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் நீதிமன்றம் கூறியது. விசாரணையின் போது, இந்த தாமதத்திற்கு எஸ்பிஐ-யையும் நீதிமன்றம் கண்டித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 26 நாட்களில் இந்த தகவல்களை இணைப்பது தொடர்பாக எவ்வளவு வேலை செய்தீர்கள்? இதை ஏன் உங்கள் மனுவில் குறிப்பிடவில்லை? இந்த தகவல் பிரமாண பத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கேட்டார். நீதிமன்றத்தின் இந்தக் கேள்விக்கு எஸ்பிஐ வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் குறித்த தகவல்களை தகவல்களை வழங்குவதில் வங்கி தவறு செய்யாமல் இருக்க தான் கால அவகாசம் கேட்பதாக சால்வே வாதிட்டபோது, நீதிபதி சஞ்சீவ் கன்னா, "இது நாட்டின் நம்பர்-1 வங்கி, இதை எப்படி கையாள்வது என எஸ்பிஐ-க்கு தெரியும் என நம்புகிறோம்" என்றார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES வெளிப்படைத்தன்மையை ஆதரிப்பவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா ஒருமுறை தேர்தல் பத்திர வழக்கை விசாரித்தார். முடிவு வந்த பிறகு, “மார்ச் 12-ஆம் தேதி மாலைக்குள் தகவல் கொடுக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார். தகவல்களை இணைக்க வேண்டும் என்ற எஸ்பிஐயின் வாதம் முற்றிலும் அபத்தமானது என்றும், தகவல் தராமல் அதை மறைக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஜனநாயக உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் (ADR) ஜக்தீப், இது ஒரு முக்கியமான உத்தரவு என்று கூறினார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இந்த அமைப்பும் மனு தாக்கல் செய்திருந்தது. "ஒன்று நன்கொடையாளர்கள் குறித்த தகவல்கள், மற்றொன்று பத்திரங்களிலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவல்கள் என தனித்தனி பட்டியல்கள் இருக்கும். ஆனால் இது புதிய தகவல்களை வெளிப்படுத்தும்," என்று அவர் கூறினார். "தனிப்பட்ட பட்டியல்களில் தேதி போன்ற பல அடையாளம் காணும் அம்சங்கள் இருக்கும், ஏனெனில் பத்திரங்கள் 15 நாட்களுக்குள் பணமாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். எனவே, எந்த ஒரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட தொகைக்கான பத்திரத்தை மீட்டெடுத்திருந்தால், யார் எதை மீட்டெடுத்தார்கள் என்பது குறித்துத் தெரியவரும். இது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சிகளும் யாரிடம் நன்கொடை பெற்றோம், எதற்காக நன்கொடை பெற்றோம் என்பது குறித்து அக்கறை கொள்வார்கள் என அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c72eze21vnno
  7. யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது! Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 04:39 PM யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை - மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடற்படை முகாமுக்கு இன்றையதினம் சென்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கிளிநொச்சி பகுதியில் வைத்து நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி மத்தி மற்றும் அராலி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 25, 37, 32 மற்றும் 22 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/178543
  8. கடுமையான வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகலாம்! - வைத்தியர் சன்ன டி சில்வா Published By: VISHNU 12 MAR, 2024 | 06:13 PM நிலவும் வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா கூறுகிறார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலைமை அதிகரித்தால் அது வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும் என்று நிபுணர் சுட்டிக்காட்டினார். எனவே, பிள்ளைகளை வெளிநடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாயின் காலை 11.00 மணிக்கு முன்னதாகவே அவர்களது நடவடிக்கையை முடிக்க வேண்டும். பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர். இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178557
  9. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில் Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 12:53 PM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கடந்த (09) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துக்கும் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றினுள் சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/178515
  10. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 11:56 AM கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பஸ்களில் ஏற்றாது பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8 க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகள் 7.30க்கு ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர். மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/178504
  11. மோட்டார் சைக்கிளோட புதிய உறவும் தொடங்குமோ?!
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
  13. ஹெய்ட்டியின் தலைநகர் வன்முறை கும்பலின் பிடியில் - இராஜினாமாவை அறிவித்தார் சர்ச்சைக்குரிய பிரதமர் Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 10:52 AM 2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார். ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். ----------------- கடந்த ஒருவாரத்திற்கு மேல் வன்முறையில் சிக்குண்டுள்ள ஹெய்ட்டியின் பிரதமர். தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஹெய்ட்டியில் வன்முறை கும்பல் அரசகட்டிடங்களை தாக்கிவருவதன் காரணமாக சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் ஹெய்ட்டி வீழ்ச்சியடையும் நிலையில் காணப்படுகின்ற ஒரு சூழலில் பிரதமரின் ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமரின் ஆலோசகர் இதனை உறுதி செய்துள்ளதுடன் புதியபிரதமர் பதவியேற்க்கும் வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார். நிலைமாற்றுக்கால ஜனாதிபதி பேரவை அறிவிக்கப்பட்டு இடைக்கால பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியானதும் ஹெய்ட்டி பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என கயானாவின் தலைவரும் கரிபீயன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பின் தலைவருமான இர்பான் அலி தெரிவித்துள்ளார். நாட்டில் தேர்தலை நடத்துவதற்காக நிலைமாற்றுக்கால பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கரீபியன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அமைதியான அதிகார மாற்றத்திற்கான நிலைமாற்றுக்கால ஆட்சி ஏற்பாடு குறித்து நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம் என கரீபியன் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார். ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். ஹெய்டியின் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாட்டை தான் இழந்துள்ளதால் 1000 கென்யா பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹெய்ட்டிக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக ஹெய்ட்டி பிரதமர் கென்யா சென்றிருந்த தருணத்தில் கடந்த வாரம் தலைநகரில் வன்முறைகள் வெடித்தன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத கும்பல் ஒன்று சட்ட அமுலாக்கல் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். கடந்த வாரம் ஆயுத குழுக்கள் ஹெய்ட்டியின் மிகப்பெரிய சிறைமீது தாக்குதல் நடத்தி 3500 க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ததை தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது. சிறைச்சாலை மீதான தாக்குதலிற்கு உரிமை கோரிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் ஹென்றி அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்காகவே இந்த வன்முறை என தெரிவித்துள்ளார். ஏரியல் ஹென்றி பதவி விலகாவிட்டால் அவருக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் அவர்கள் எங்களை உள்நாட்டு யுத்தம் இனப்படுகொலையை நோக்கி கொண்டுசெல்வார்கள் வன்முறை கும்பலின் தலைவர் தெரிவித்துள்ளார். ஹெய்ட்டி தலைநகர் தற்போது பெருமளவிற்கு வன்முறை கும்பலின் பிடியில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநா ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் வன்முறை கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஹென்றி வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ள வன்முறை கும்பல் பிரதமர் நாட்டிற்கு திரும்புவதை தடுத்துள்ளது. இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதுவரை வன்முறைகள் காரணமாக 300000க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஹெய்ட்டியில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள அதேவேளை அரசியல் வன்முறையும் வரட்சியும் தீவிரமடைந்;துள்ளதால் சுமார் 5.5 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது. https://www.virakesari.lk/article/178500
  14. மார்க் கார்லண்ட் (58) உடன், மார்க் கார்லண்ட் (62) லண்டன் விமான நிலையத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர், ஒரே பெயருடன், ஒரே விமானத்தில் பயணிக்க வந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 58 வயதான மார்க் கார்லண்ட் என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள மார்க், தற்போது தனியாக வசித்து வருகிறார். தாய்லாந்து நாட்டிற்கு அடிக்கடி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் திகதி தாய்லாந்து செல்வதற்காக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய ஊழியர்கள், அவர் ஏற்கனவே செக் இன் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றவர் எவ்வாறு வெளியே இருக்கிறார் எனவும் குழம்பியுள்ளனர். அப்போது அதே விமானத்தில் மற்றொரு மார்க் கார்லண்ட் என்பவர் பயணிப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை வெளியே வருமாறு பணியாளர்கள் அழைத்துள்ளனர். வெளியே வந்த மார்க் கார்லாண்டை கண்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மார்க் கார்லண்ட் என அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல் இருந்ததோடு, இருவரும் தங்களது தலையை மொட்டை அடித்திருந்ததும் தெரிய வந்தது. விசாரணை நடத்திய போது, ஏற்கனவே விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற மார்க் கார்லண்ட் 62 வயதானவர் என்ற வித்தியாசம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட போது, இருவருமே லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தது தெரிய வந்தது. பல ஆண்டுகளாகவே இருவரும் தாய்லாந்துக்கு அடிக்கடி பயணித்து வந்ததும் தெரிய வந்தது. இதைவிட ஆச்சரியமாக, இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு சம்பவம், இருவருமே திருமணம் ஆகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையானதும், தற்போது மனைவியை விட்டு தனியாக வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது பாஸ்போர்ட்டுகளையும் சரிபார்த்த அதிகாரிகள் இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்தனர். இருவரும் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து தாய்லாந்துக்கு பயணம் செய்தனர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை எனவும், முதல் முறையாக இந்த குழப்பம் நேர்ந்து தாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. https://thinakkural.lk/article/295313
  15. Oscars 2024: “இப்படி ஒரு படத்தை நான் எடுத்திருக்கக்கூடாது!” “ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும்!” – 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி நடித்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதில் உக்ரைன் போரை மையப்படுத்தி எடுத்த ’20 டேஸ் இன் மரியுபோல்’ (20 Days In Mariupol) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இப்படத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய படத்தின் இயக்குநர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ், “உக்ரைனுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருது என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. அதாவது போரை மையமாக வைத்துப் படத்தை எடுக்கக்கூடிய ஒரு சூழல் வந்திருக்கக்கூடாது. இந்த விருதை ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்குப் பதிலாக ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பணயக்கைதிகள், தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள், தற்போது சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். https://thinakkural.lk/article/295297
  16. மட்டக்களப்பு - கல்லடி பூங்கா மைதானத்தில் 10,000 பெண்களுடன் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று(11.203.2024) நடைப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். விருது வழங்கும் நிகழ்வு இதன்போது கோவிட் காலப்பகுதியில் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான சுசித்ரா எல்ல ஆளுநரால் கௌரவிக்கபட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அமைச்சர் வியாழேந்திரனினால் சிறப்புரை ஆற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செய்யட் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/womens-day-event-with-10000-women-batticaloa-1710182957
  17. தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதியின் மூலம் சுமார் நான்கு பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோசடி மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்து வகையே இவ்வாறு மோசடியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் வழமையான நடைமுறைகளக்கு புறம்பான வகையில் மருந்துப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு மார்பகப் புற்று நோய்கக்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைக்கு நிகரான எனினும் தரம் குறைந்த மருந்து வகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. அப்போதைய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன, அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் லால் ஜயகொடி உள்ளிட்ட சிலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/cancer-pills-fraud-dr-rajitha-1710205394
  18. யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாள்வெட்டு தாக்குதல் உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://tamilwin.com/article/one-person-was-killed-in-a-sword-attack-in-jaffna-1710192255
  19. மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு – கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு அம்பாறை திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார். பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார். வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் வழியாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்தனர். எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/295269
  20. உஷ்ணத்தின் அளவு தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படும்! நாட்டின் பல பகுதிகளிலும் உஷ்ணத்தின் அளவு தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் உஷ்ணத்தின் அளவு உயர்வடைந்து காணப்படுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பணியிடங்களில் தொழில்புரிவோர் போதுமான அளவு நீரை அருந்த வேண்டுமெனவும் முடிந்தவரை நிழலான இடங்களில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. வீடுகளிலிருக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமெனவும் வாகனங்களுக்குள் சிறுவர்களை தனியே விட்டுச்செல்ல வேண்டாமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/295262
  21. Published By: PRIYATHARSHAN 12 MAR, 2024 | 09:59 AM தென்மாகாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக நன்கொடை உதவிகள் மற்றும் முதலீடுகள் மூலம் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். தென்மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண ஆளுநரான வில்லி கமகேவை சந்தித்து பிராந்தியத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதன் மூலம் தென் மாகாணத்திற்கு ஒரு பூரணமான விஜயத்தை மேற்கொண்ட முதல் இந்திய உயர் ஸ்தானிகர் என்ற பெருமையும் பெறுகின்றார். இந்த விஜயத்தின் அங்கமாக உயர் ஸ்தானிகர் 2024 மார்ச் 06ஆம் திகதி மாகாண ஆளுநரான வில்லி கமகேவை சந்தித்து பிராந்தியத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அத்துடன் இம்மாகாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக நன்கொடை உதவிகள் மற்றும் முதலீடுகள் மூலம் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உயர் ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்தார். இதேவேளை இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உதவித்திட்டங்களுக்காக ஆளுநர் உயர் ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ருகுண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரவீந்திரநாத் தாஹூர் கேட்போர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள ரவீந்திரநாத் தாஹூர் சிலைக்கு உயர் ஸ்தானிகர் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார். இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் 1500 பேருக்கான இருக்கை வசதிகளைக் கொண்ட ஒரேயொரு பாரிய கேட்போர் கூடம் இதுவாகும். இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கேட்போர் கூடம் 2018ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது. இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான உரையாடலின்போது, கல்வித்துறையில் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான விருப்பங்களை வெளிப்படுத்தியிருந்த உயர் ஸ்தானிகர் இப்பல்கலைக் கழகத்துக்கு மேலும் பல வழிகளில் உதவி வழங்குவதற்கான ஆர்வத்தையும் உறுதிப்படுத்தியிருந்தார். காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்வாங்கி அங்குள்ள 50 கிராமங்களின் மக்களுக்காக இரு விசேட வீட்டுத் திட்டங்களை இந்திய அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது. இந்த இரு திட்டங்களின் கீழ் வீடற்றவர்கள், காணிகளற்றவர்கள் மற்றும் குறைவான வருமானங்களை உடைய குடும்பங்களுக்காக 1200 வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு திட்டங்களினதும் முன்னேற்றகரமான செயற்பாடுகளைக் காண்பதற்காக உயர் ஸ்தானிகர் அம்பாந்தோட்டையில் உள்ள இரு கிராமங்களுக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார். உயர் ஸ்தானிகர் அவர்களது தென் மாகாண விஜயமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலைபேறான கலாசார தொடர்புகளை சுட்டிக்காட்டுகின்றது. தேவேந்திரமுனை, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமகாரம ஆகிய இடங்களிலுள்ள விகாரைகளில் வழிபட்ட உயர் ஸ்தானிகர் புத்தபெருமானின் நல்லாசிகளை வேண்டிப்பிரார்த்தித்திருந்தார். அத்துடன் இந்திய இலங்கை மக்களின் உறவுகள் மேலும் வலுவடையவும் அவர் பிரார்த்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178484
  22. தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள் தடுத்த நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் - தவத்திரு அகத்தியர் அடிகளார் Published By: VISHNU 12 MAR, 2024 | 12:29 AM (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் தடுத்த நிறுத்த அயல்நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்தார் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி, கைதுசெய்து, வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய பொலிஸாரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும், வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றிலில் திங்கட்கிழமை (11) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது இப் போராட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது் நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகிறது இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம் அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருக்கிறோம் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல அரசுக்கு ஆரோக்கியமானதல்ல எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம் இதனை அயல்நாடு, வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. காந்தி தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/178476
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ - Citizenship Amendment Act)' என்பது நாட்டின் சட்டம். இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது," என்று கூறியிருந்தார். இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2019ஆம் ஆண்டு மக்களவையில் நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு நன்றி எனவும் அப்போது பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 1955ஆம் ஆண்டில் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் 2019இல் சில மாற்றங்களைச் செய்தது மத்திய அரசு. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2019இல் இந்த சட்டத்திற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்திருந்த மத்திய அரசு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறுகின்றன. மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறினாலும், இதன் மூலம் இஸ்லாமிய மக்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன? இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான இணையதள போர்டல் விரைவில் தொடங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டம், 2019இன் விதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிடும். இதன் மூலம், சிஏஏ-2019இன் கீழ் தகுதியுள்ள எந்தவொரு நபரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்" என பதிவிட்டுள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியிலான இன்னல்கள் காரணமாக இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினரை அனுமதிக்கும் குடியுரிமை திருத்த விதிகள், 2024இன் அறிவிப்பை மோதி அரசு வெளியிட்டுள்ளது. "இந்த அறிவிப்பின் மூலம், இந்த நாடுகளில் வாழும் சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வாக்குறுதியை பிரதமர் திரு நரேந்திர மோதி நிறைவேற்றியுள்ளார். அவர்களுக்கு நீங்கள் இங்கேயே இருங்கள் உங்களுக்கான குடியுரிமை கிடைக்கும் என பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார்," என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,HINDUSTAN TIMES VIA GETTY IMAGES அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? "தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ள நேரத்தில், அதை திசைதிருப்பவே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதை அமல்படுத்துவதன் மூலம், அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது பாஜக," என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். மேலும், "நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை அமல்படுத்த மோதி அரசுக்கு நான்கு ஆண்டுகள் 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. தனது அரசு மிகவும் நேர்த்தியாகவும் சரியான நேரத்திலும் செயல்படுகிறது என்று மோதி கூறிவருகிறார். சிஏஏ அமல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் என்பது பிரதமர் மோதியின் பொய்க்கு மற்றொறு சிறந்த உதாரணம்," என்று அவர் கூறினார். "குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லவை இருந்தால் அதை ஆதரிப்போம். கெட்டவை இருந்தால் கண்டிப்பாக அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும். ரமலான் மாதம் தொடங்கும் சமயத்தில் இதை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என நான் அறிவேன். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்பக் கூடாது" என கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால் தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோதி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cxez838np93o
  24. பரபரப்பான 4ஆம் நாளில் அவுஸ்திரேலியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கேரி-மாஷ் ஜோடி Published By: VISHNU 12 MAR, 2024 | 01:37 AM (நெவில் அன்தனி) கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் மூன்றரை நாட்களில் நிறைவுக்கு வந்த, ஆனால் பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. போட்டியில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாம் நாள் பிற்பகல் ஆரம்பித்த அவுஸ்திரேலியா அன்றைய தினம் 4 முக்கிய விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது. இதன் காரணமாக எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை நான்காம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸை நான்காம் நாளான திங்கட்கிழமை (09) காலை தொடர்ந்த அவுஸ்திரேலியா, ட்ரவிஸ் ஹெட்டின் விக்கெட்டை 2ஆவது ஓவரில் இழந்து மேலும் சிக்லை எதிர்கொண்டது. ஆனால், மிச்செல் மாஷ், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர். மிச்செல் மாஷ் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். (220 - 6 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மிச்செல் ஸ்டாக் களம் விட்டகன்றார். எனினும் அலெக்ஸ் கேரியும் அணித் தலைவர் பெட் கமின்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஒட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர். அலெக்ஸ் கேரி 15 பவுண்டறிகள் உட்பட 98 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 4 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 372 ஓட்டங்களே அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்த அலெக்ஸ் கேரி, விக்கெட் காப்பாளராக 10 பிடிகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்தின் மெட் ஹென்றி 101 ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் ஆனார். இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷப் அணிகள் நிலையில இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 162 (டொம் லெதம் 38, மெட் ஹென்றி 29, டிம் சௌதீ 26, ஜொஷ் ஹேஹ்ல்வூட் 31 - 5 விக்., மிச்செல் ஸ்டாக் 59 - 3 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 256 (மானுஸ் லபுஷேன் 90, மிச்செல் ஸ்டாக் 28, கெமரன் க்றீன் 25, மெட் ஹென்றி 67 - 7 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 372 (ரச்சின் ரவிந்த்ரா 82, டொம் லெதம் 73, டெரில் மிச்செல் 58, கேன் வில்லியம்சன் 51, ஸ்கொட் குகெலீன் 44, பெட் கமின்ஸ் 62 - 4 விக்., நேதன் லயன் 49 - 3 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்) 281 - 7 விக். (அலெக்ஸ் கேரி 98 ஆ.இ., மிச்செல் மாஷ் 80, பெட் கமின்ஸ் 32 ஆஷ.இ., பென் சியஸ் 90 - 4 விக்., மெட் ஹென்றி 94 - 2 விக்.) https://www.virakesari.lk/article/178479
  25. மஞ்சும்மல் பாய்ஸ்: ஜெயமோகன் கருத்துக்கு மலையாள, தமிழ்த் திரையுலகினர் சீறுவது ஏன்? பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM 12 மார்ச் 2024, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்தும் கேரள மக்கள் குறித்தும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள வலைப்பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிதம்பரம் எஸ். பொடுவால் இயக்கிய மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இதில், சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சும்மல் எனும் ஊரை சேர்ந்த நண்பர்கள் குழு தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, நண்பர்களுள் ஒருவர் அந்த குகையில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட, அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பதே அத்திரைப்படத்தின் கதை. 2006-ல் குணா குகையில் இதேபோன்று நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவுடனும் தமிழ் ரசிகர்களுடனும் மிகவும் பொருந்திப் போகும் அம்சங்கள் இத்திரைப்படத்தில் நிறைய உள்ளன. கொடைக்கானல், ‘குணா’ குகை, ‘குணா’ திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தப்பட்ட இடம் என, தங்களுக்கு பரிச்சயமான விஷயங்கள் படத்தில் இருப்பதால் இத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இன்று வரை தமிழ் ரசிகர்கள் அத்திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர். திரைப்படங்களின் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பிரபல டிராக்கர் ஏ.பி. ஜார்ஜ் மார்ச் 10 அன்று சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில், “உலகம் முழுவதிலும் இத்திரைப்படம் 150 கோடியை வசூல் செய்துள்ளது” என தெரிவித்தார். மேலும், 200 கோடியை வசூல் செய்யும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற நிலையை நோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்து, ’வெண்முரசு’, ‘கொற்றவை’, ‘விஷ்ணுபுரம்’, ‘யானை டாக்டர்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,JEYAMOHAN /FACEBOOK ஜெயமோகன் கூறியது என்ன? ’எந்திரன் - 2’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜெயமோகன், மலையாளத்திலும் வெகுசில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் நண்பர்கள் மது அருந்துவதை விமர்சித்துள்ள அவர், ”சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி” என்று முன்விளக்கத்துடனேயே தன் பதிவை ஆரம்பிக்கிறார். அத்திரைப்படத்திற்கு வரும் “புகழ்மொழிகள்” காரணமாக அத்திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்ததாக தெரிவித்துள்ள ஜெயமோகன், தனக்கு அப்படம் “எரிச்சலூட்டுவதாகவே இருந்ததாக” கூறியுள்ளார். தமிழக சுற்றுலா தலங்களுக்கு வரும் கேரளாவை சேர்ந்த பலர் மது அருந்திவிட்டு வாந்தி எடுப்பது, அத்துமீறலில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். “ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடலூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.” என அப்பதிவில் தெரிவித்துள்ளார் ஜெயமோகன். ”பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள்.”, “யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள்” என மலையாளிகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அப்பதிவில் தெரிவித்துள்ளார். இவற்றையே அத்திரைப்படம் “எளியவர்களின் கொண்டாட்டம்” என்று காட்டி நியாயப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய நீண்ட பதிவில், மலையாளம் சினிமா குறித்து பல பொதுவான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். ”பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் பாலியல் தொழிலையும் சாதாரணமானதாக செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன” என தெரிவித்திருக்கிறார். மேலும், ” உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,LENIN BHARATHI/FACEBOOK படக்குறிப்பு, லெனின் பாரதி தமிழ் இயக்குநர்கள் எதிர்ப்பு இதற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மலையாள இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன், மக்கள் மீது வெறுப்பு காட்டுவது சரியல்ல என தெரிவித்துள்ளார். அடிப்படை மனித விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாமல் வெறுப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனக்கு தமிழ் படிக்கத் தெரியாததால், செய்திகள் வாயிலாக அறிந்துகொண்டேன். நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நம்புகிறேன். உங்கள் பணியை போற்றும் ஒரு மலையாளி என்ற முறையில், எந்த அறிவியல் அல்லது அரசியல் சம்பந்தப்பட்டிருந்தாலும் உங்கள் எழுத்தைப் பாராட்டுகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். அதன் அடிப்படையில் நாங்கள் உங்களை விமர்சிக்கவில்லை” என தெரிவித்துள்ளார். மலையாளிகள் மட்டுமல்லாமல், தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களும் ஜெயமோகன் கருத்தை விமர்சித்துள்ளனர். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ஜெயமோகனின் வார்த்தைகள் “இனவெறுப்பு மற்றும் வன்மத்தின்” வார்த்தைகள் என விமர்சித்துள்ளார். ‘மூடர் கூடம்’ திரைப்பட இயக்குநர் நவீனும் ஜெயமோகனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுக்கலாமா? தமிழ் சினிமா குறித்து எழுதிவரும் எழுத்தாளர் சுகுணா திவாகர், "ஜெயமோகனின் கருத்து மலையாளிகளையும் மலையாள திரைப்படங்களையும் பொதுவான கண்ணோட்டத்தில் இன ரீதியாக இழிவுபடுத்துவதாக உள்ளது" என தெரிவித்தார். அதேசமயம், மலையாள திரைப்படங்களில் தமிழர்களை தவறாக சித்தரிப்பதும் கடந்த காலங்களில் நிகந்திருப்பதாக குறிப்பிடும் அவர், எனினும் தற்போது பல மலையாள படங்களில் தமிழ் வசனங்கள் வைப்பது, தமிழ் நடிகர்கள் நடிப்பதும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார். மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் பாதி தமிழ் வசனங்களிலேயே வருவதை அவர் எடுத்துக்காட்டுகிறார். "மலையாளிகள் சூழலியல் சீர்கேடுகளில் ஈடுபடுவதாக குறிப்பிடும் ஜெயமோகன் ஏன், மத விழாக்களில் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து பேசுவதில்லை?" என அவர் கேள்வி எழுப்புகிறார். மேலும், கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுப்பது இன்றைய சூழலில் மிகவும் அபாயகரமானது என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,SOUBINSHAHIR/INSTAGRAM "மது அருந்தும் காட்சிகள் வைப்பது தவறா?" மற்றொரு சினிமா எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கூறுகையில், "ஜெயமோகன் 'ஒழிவுதிவசத்தே களி போன்ற திரைப்படங்களில் மது அருந்துவது குறித்தெல்லாம் விமர்சித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நான்கு நண்பர்கள் மது அருந்துவதற்கு முன்பு எப்படி இருந்தனர், போதை ஏறியவுடன் அவர்களுக்குள் இருக்கும் வன்மமும் வன்முறையும் எப்படி வெளியே வருகிறது என்பதுதான் அந்த திரைப்படம். இதுவொரு சிறிய உதாரணம்தான். மது அருந்துவதை காட்சிப்படுத்துவதாலேயே அது 'கெட்ட' சினிமாவாகிவிடாது. எங்கு, எதற்காக அந்த காட்சியை வைக்கிறோம் என்பது முக்கியம். அதேபோன்றுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தில் மது அருந்துவது அந்த படத்தின் ஒருபகுதி தான்" என்றார். மலையாள சினிமா ஏன் தமிழர்களுக்குப் பிடிக்கிறது என்பது குறித்து பேசிய அவர், "திரைக்கதை எழுத்தாளர்கள் கைகளில் மலையாள சினிமா துறை இருக்கிறது. அதனால் வெவ்வேறு கதைகள் வரும். இன்னும் கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதில்தான் பல பரிசோதனைகளை நிகழ்த்துகின்றனர். அதனால்தான் நமக்கு மலையாள சினிமா நமக்கு பிடிக்கிறது. கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லிவிட்டால் நமக்குப் பிடித்துவிடுகிறது" என்றார். அப்படியானால், தமிழ் திரைப்படங்களில் போதை கலாசாரம் தொடர்பான திரைப்படங்கள் வருவது குறித்து கேள்வியெழுப்பினார் அவர். அத்திரைப்படங்கள் போதை கலாசாரத்திற்கு எதிரானவை என சொல்லப்பட்டாலும், அவற்றில் போதைக்கு எதிரான ஒரு வசனம் கூட இருப்பதில்லை என்றார் தீபா. பட மூலாதாரம்,SOUBINSHAHIR/INSTAGRAM "நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" 'ஒழிவுதிவசத்தே களி' திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரணின் வெளிவராத 'வழக்கு' எனும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய முகில் தங்கம் இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். "எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன. மலையாள சினிமாவில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. திரைக்கதை எழுத்தாளர்களுடன் அவர்கள் பணிபுரிவது நல்ல விஷயம். பெரிய நடிகர்களை வைத்து அறிமுக இயக்குநர் எடுத்த படம் தான் ‘கும்பலங்கி நைட்ஸ்’. ஷ்யாம் புஷ்கரன் என்பவர்தான் அதற்கு திரைக்கதை எழுதினார். மிகப்பெரும் வரவேற்பு அத்திரப்படத்திற்கு கிடைத்தது. எழுத்தாளரை நம்பி அங்கு படம் எடுக்கப்படுகிறது" என்றார். ஆனால், மலையாள சினிமாவிலும் பிரச்னைகள் இருப்பதாக கூறும் முகில், "இங்கும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கின்றன. நடிகை பாவனா பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்திலிருந்து வெளியேற்றியும் பின் மீண்டும் உள்ளே வந்துவிட்டார்" என்றார். மேலும், 'மஞ்சும்மல் பாய்ஸ்' அனைவரும் கொண்டாடும் அளவுக்கான படம் அல்ல எனக்கூறும் அவர், இதுவொரு 'பாப்புலர் கல்ச்சர்' காரணமாக கொண்டாடப்படுவதாக கூறினார். அதேசமயம், "மலையாளிகளின் மதுப்பழக்கம் குறித்து பேசுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டிலும் மதுப்பழக்கம் அதிகம் இருக்கிறது. அது அவர்களின் கலாசாரமாக இருக்கலாம். அதற்கு இனவரைவியலுடன் தொடர்பு இருக்கலாம்" என தெரிவித்தார் முகில். https://www.bbc.com/tamil/articles/c720jz96x4vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.