Everything posted by ஏராளன்
-
முதலில் 'ஜனாதிபதி தேர்தல்' என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி ரணில், மஹிந்த, பஷில் சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு
10 MAR, 2024 | 10:18 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமவின் புதல்வரின் திருமணத்தில் சாட்சி கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார். அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உரிய நேரத்துக்கு வருவதாக இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில், திருமண நிகழ்விலிருந்து சென்ற பின்னரே பஷில் ராஜபக்ஷ வந்துள்ளார். எனினும், அன்றைய தினம் இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார். உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் மூலங்கள் குறிப்பிட்டன. எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்ற ஐயப்பாடு அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் உள்ளன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பாராளுமன்ற கொள்கை பிரகடன உரையில் தெளிவாகவே வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்ற விடயத்தை உறுதிப்பட கூறியுள்ளார். ஆனால், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நலன்களை மையப்படுத்தி முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் பிரகாரம் ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷ மற்றும் மஹந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பிலும் தேர்தல் விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலும் அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்தப்படும் என்ற தேர்தல் கால அட்டவனையை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த விடயம் குறித்து மீண்டும் கட்சி உறுப்பினர்களுடன் பேசுவதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஏற்கனவே எடுத்துள்ளது. எனவே இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியும் அடுத்த சந்திப்பிற்கான நாட்கள் இறுதிப்படுத்தப்படாமலும் நிறைவடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/178339
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திமுக கூட்டணியில் கமல்ஹாசன் செய்த செயல்: மக்கள் நீதி மய்யம் இனி என்ன ஆகும்? பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த ஒரு ஊகத்திற்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைமை சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு மாநிலங்களவை சீட்டுடன் முடங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமீப காலமாகவே கமல்ஹாசன் காங்கிரஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பயணத்திலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கும் இடங்களில் இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம், கடந்த தேர்தல்களில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தென்சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளை கமல்ஹாசன் திமுகவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்களின் வலுவான தொகுதியான தென்சென்னையை விட்டுத்தர திமுக முன்வரவில்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது. 'தேசத்திற்காக கைகோர்த்துள்ளோம்' பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X இந்த ஒப்பந்தம் இறுதியான பின்பு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் மாறாக, இக்கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பதவிக்கானது அல்ல என்றும் தேசத்திற்காக கைகோர்த்திருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். கட்சியை பலப்படுத்த தவறிவிட்டாரா? பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X இந்நிலையில் ஒரேயொரு மாநிலங்களவை சீட்டுக்கு கமல் திமுகவுடன் கைகோர்த்தது ஏன் என்ற கேள்வியை அரசியல் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான லட்சுமணனிடம் முன்வைத்தோம். "ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அது வெற்று முழக்கமாக இல்லாமல் ஓரளவுக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால் முதலில் கட்சி கட்டமைப்பு இருக்க வேண்டும். கிராமங்கள்தோறும் கிளைகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையான விஷயங்கள் குறித்துத் துளிகூட கமல் கவலைப்படவில்லை. இதில் ஒருசதவீதத்தைக்கூட கமல் செய்யவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற சுமார் 4 சதவீத வாக்குகள், கமல் என்ற தனி மனிதரின் பிரபலத்திற்கும் அவர் முன்வைத்த புதிய முழக்கத்திற்காகவும்தான் கிடைத்தது. அதைத் தக்கவைக்க கட்சியைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் தோற்றுவிட்டது," என்றார். இந்தத் தேர்தலில் 1-2 தொகுதிகளை திமுகவிடம் கமல் கேட்டது நிஜம் என்றும் தென்சென்னை தொகுதியில் கமல் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கமல் வசிக்கும் இடம், மேல்தட்டு வகுப்பினர் பெரும்பாலானோர் உள்ள தொகுதி என்ற சாதகம் இருந்தாலும் அந்தத் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என லட்சுமணன் தெரிவித்தார். மகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவையில் அக்கட்சிக்கு தளகர்த்தர் இல்லை என்பதால், அடுத்த வாய்ப்பாக கோவையை கேட்கும் கள யதார்த்தத்தையும் கமல் இழந்துவிட்டார் என அவர் கூறினார். "இந்த யதார்த்தமான பலவீனத்தை கமல் புரிந்துகொண்டார் என எடுத்துக்கொள்ளலாம். உதயநிதி உடனான நெருக்கம் இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம். பரப்புரை செய்வதற்கு ஒரு பலன் இருக்க வேண்டும் என்பதால் ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கின்றனர். நிச்சயம் அந்த இடம் கமல்ஹாசனுக்குதான்" என்றார் லட்சுமணன். மேலும், "ஒன் மேன்' கட்சி என்றுகூட மக்கள் நீதி மய்யத்தைச் சொல்ல முடியாது. இதே நிலைமை நீடித்தால் இக்கட்சி மிக விரைவில் காணாமல் சென்றுவிடும். வளரும் ஒரு கட்சியின் எந்த நிர்வாகிக்கும் இந்த முடிவு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கமல்ஹாசனே கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார். பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X 'கிராமங்களை சென்றடையவில்லை' கட்சி கட்டமைப்பு பலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே பிபிசியிடம் பேசினார், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (ஊடகப்பிரிவு) முரளி அப்பாஸ். "கட்சியை ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும். மீண்டும் தேர்தலில் நின்று தோற்று சோர்வடைந்தால், அது தவறான முடிவாக இருக்கும். கிராமங்களில் நாங்கள் சரியாகச் சென்றடையவில்லை.அதற்காக தலைவரை அங்கு தெரியவில்லை என்பது அர்த்தம் இல்லை. ஆதரவை நிர்வாக ரீதியாக இணைக்கவில்லை. தொண்டர்கள் மட்டத்தில் சரியாக இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதால் ஏற்படும் இழப்புகளை நாங்கள் பார்த்துவிட்டோம். இந்த தேர்தலில் தேசிய அரசியலில் மாற்றம் உருவாவதுதான் முக்கியம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கும் சூழலில் திமுக இல்லை. இந்தச் சூழலில், மாற்றுக் கூட்டணிக்கு செல்ல முடியாது. கமல்ஹாசனின் வலிமையான அரசியல் குரல் விரயமாகக்கூடாது என்பதற்காக இதற்கு ஒப்புக்கொண்டோம்," என்றார் அவர். நகரங்களை மையமாக வைத்து சில தொகுதிகளைக் கேட்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் 'ஒன் மேன்' கட்சி என்பதைவிட வலிமையான தலைமை உள்ள கட்சி எனச் சொல்லலாம் என்கிறார் முரளி அப்பாஸ். முன்பு திமுகவை விமர்சித்தது குறித்துப் பேசிய அவர், "பழைய கதைகளைப் பேசக்கூடாது. இந்த அரசை மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. காழ்ப்புணர்ச்சியுடன் புறக்கணிக்கக் கூடாது. எங்களின் சுயலாபத்திற்காக இதைச் செய்யவில்லை. தேசிய நலனுக்காக தளர்த்திக்கொள்வது தாழ்ந்து போவதல்ல, அனுசரித்துப் போவது," என்றார். https://www.bbc.com/tamil/articles/crgv22pn2eno
-
700 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை குறித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் 173 ரங்களை விட்டுக் கொடுத்த ஷோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் அண்டசன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 700ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஜேம்ஸ் எண்டர்சனின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295064 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் எனும் சாதனைக்கும் உரியவராகிறார். ஜேம்ஸ் அண்டர்சனின் பந்துவீச்சு பெறுதியின் அட்டவணை.
-
ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் - சஜித் பிரேமதாச
09 MAR, 2024 | 05:46 PM (எம்.மனோசித்ரா) தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று சனிக்கிழமை (09)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 - 600 சதவீதம் வரை அதிகரித்தது. நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது. இன்று சில தரப்பினர் கோப்பு மூட்டைகளை காட்டி திருடர்களை பிடிக்க அதிகாரம் கோருகின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது. நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் 113 பேர் சுகாதாரத்துறையில் நடந்த மோசடிகளுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள தேசிய வளங்கள், மக்களின் வளங்கள், சொத்துக்கள் மற்றும் பணத்தை அபகரித்த குழுக்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. வறுமையின் காரணமாக நாட்டு மக்கள் நுண்கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வரம்பற்ற அழுத்தங்களை பிரயோகித்து. தமது தொழில் இலக்கை முதன்மைப்படுத்தி வர்த்தகர்களால் இது பெரும் கடன் பொறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கடன் சுமையில் தவிக்கும் மக்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த நுண்கடன் திட்டங்களுக்கு வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வைப்புச் சொத்துக்கள் மற்றும் வளங்களை பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடுவதற்கான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருப்பதால், ஏல நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தாலும், தனியார் நிதி நிறுவனங்கள் போட்டிக்கு ஏலங்களை நடத்தி வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/178322
-
போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
அது பெண்டிர்க்கு அண்ணோய்! இவர்கள் சிறுமிகள் எல்லோ?
-
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
அதிக வெப்பம் : கண் நோய்கள் ஏற்படும் சாத்தியம்! அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியம். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வாறு அதிக வெப்பநிலை பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295082
-
மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து ஆளுநர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஆளுநர், துறைசார் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதனால் குறித்த வர்த்தமானியை மீளப்பெற்று, மக்களுக்கான பயன்பாட்டு காணிகளை விடுவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரம் அடங்கிய அறிக்கையும் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம், ஆளுநர் இதன்போது சமர்ப்பித்தார். வடக்கு மாகாண ஆளுனரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி, ஆளுநரிடம் உறுதியளித்தார். https://thinakkural.lk/article/295069
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் 09 MAR, 2024 | 06:29 PM இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சி இன்றைய தினம் (09) ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தப்பட்டது. இந்த கண்காட்சி நாளையும் (10) காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும். இந்த கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்துக்கும், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73 ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான பூரண அனுசரணையை வட மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப்படை பெற்றுள்ளது. இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதயனீ ராஜபக்ஷவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178326
-
புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு
புதுச்சேரியில் குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? புதிய தகவல்கள் - பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமி. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 51 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் 9 வயதுக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மாநிலத்தில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது. கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன குழந்தை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பிரதேசத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழ் அந்தப் பகுதியில் கள ஆய்வு நடத்தியது. புதுச்சேரியில் நடந்தது என்ன? புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை - மார்ச் 2ஆம் தேதி - காணாமல் போனது. குழந்தையின் தாயார் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மாலையில், அவர் வேலையிலிருந்து திரும்பியதும் குழந்தையைக் காணவில்லை எனத் தேட ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். "என் குழந்தை சாப்பிட்டுவிட்டு, எங்கள் சந்தில் விளையாடிக் கொண்டிருந்தது. நண்பகல் 12 மணி வரை குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை அங்கிருந்த ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு யார் கண்ணிலும் குழந்தை படவில்லை. இதற்குப் பிறகுதான் குழந்தை கடத்தப்பட்டிருக்க வேண்டும்." என்கிறார் குழந்தையின் தாயார். படக்குறிப்பு, சிறுமிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் மூன்று நாள் தேடுதல் குழந்தையின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இவர்களது இரு குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் சென்று படித்துவிட்டு, வீடு திரும்புவது வழக்கம். அதற்குப் பிறகு, இவர்கள் வசிக்கும் தெருவுக்கு அருகில் உள்ள இன்னொரு தெருவில் இருக்கும் சரணா என்ற மையத்தில் டியூஷன் படிப்பது வழக்கம். "வேலைக்குப் போய்விட்டு நான் ஐந்து மணிக்கு திரும்பி வந்தேன். குழந்தையைக் காணவில்லையெனத் தெரிந்ததும் தேட ஆரம்பித்தோம். பிறகு ஏழேகால் மணியளவில் காவல்துறையில் புகார் கொடுத்தோம். அவர்கள் இந்தத் தெருவிலும் அடுத்த தெருவிலும் மாறி மாறி தேடினார்கள். வீட்டிற்குள் தேடினார்கள். குழந்தை கிடைக்கவில்லை." "ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை என அடுத்த மூன்று நாட்களுக்குத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. புதன்கிழமை மதியம் 2.45 மணிக்குத் குழந்தையின் சடலம் கிடைத்தது" என்கிறார் குழந்தையின் தாய். குழந்தை காணாமல் போன தினத்தன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் இல்லாத நிலையில், குழந்தை விளையாடிவந்த போதுதான் காணாமல் போனது. இரு நாட்கள் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திங்கட்கிழமையன்று பெற்றோர், உறவினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் லட்சுமி, ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டன. அதில், அந்தக் குழந்தை அந்தப் பகுதியை விட்டு வெளியேறவில்லை என்பது தெரிந்ததும், சோலை நகர் பகுதியில் இருந்த ஒவ்வொரு வீடாக காவல்துறை சோதனை நடத்தியது. கால்வாய்கள், கடற்கரை போன்ற இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கைவிடப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இந்த நிலையில், குழந்தை டியூஷன் படிக்கும் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் இருந்த கால்வாயில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்த தருணத்தில், அந்தப் பகுதியில் இருந்த சந்தேகத்திற்கிடமான சிலரை அழைத்துச் சென்று காவல்துறை விசாரித்தது. அதில் குடும்பத்தினர் ரும் இல்லாமல், மாட்டுத் தொழுவம் அருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த 59 வயதான விவேகானந்தன் என்பவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறுகிறது. அதாவது, அதே பகுதியில் வசித்துவந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் தனது இடத்தில் வைத்து குழந்தை ஒன்றுக்கு பாலியல் தொல்லை தந்துகொண்டிருந்ததை தான் பார்த்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார். படக்குறிப்பு, சிறுமியின் வீட்டின் முன் குவிந்துள்ள மக்கள் காவல்துறை விசாரணை இதையடுத்து காவல்துறை கருணாஸைப் பிடித்து விசாரித்தது. அவர், தன்னுடன் சேர்ந்து விவேகானந்தனும் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மயங்கிவிட்ட குழந்தையை இருவரும் கொலைசெய்து கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பொதுமக்கள் போராட்டம் இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பு அளித்த வாக்குறுதியை அடுத்தே அவர்கள் கலைந்துசென்றனர். குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் போதை பரவலை தடுக்க வேண்டும் என்றும் கூறி, முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. குழந்தையை கொன்றதாக கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் கஞ்சா போதையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதால், புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. "முதலில் புதுச்சேரியில் மது விற்பனை செய்யப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். சமீபத்தில் பல ரெஸ்டோ பார்களை 12 மணிக்கு மேலும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். புதுச்சேரிக்கு வரி வருவாய் வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்." என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா. "இதுபோன்ற பார்கள் சிலவற்றில், மது மட்டுமல்லாமல் எல்லாவிதமான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல வெளிமாநிலங்களில் இருந்தும் ஆட்கள் இதற்காக இங்கே வருகிறார்கள். மற்றொரு பக்கம் புதுச்சேரி முழுக்கவும் கஞ்சா சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது." "ஒரு காலத்தில் மதுவுக்குத்தான் புதுச்சேரி பிரபலம் என்பார்கள். இப்போது எல்லா போதைப் பொருட்களுக்கும் புதுச்சேரி பிரபலமான இடம் என்பதைப் போல ஆகிவிட்டது. கஞ்சா விற்பவர்களைப் பிடிக்க பல அணிகளை உருவாக்கினார்கள். அவர்கள் சிறு வியாபாரிகளைப் பிடிக்கிறார்களே தவிர, பெரிய வியாபாரிகளைப் பிடிப்பதில்லை. இப்படி கஞ்சா கிடைப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்குக் காரணம்" என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தபோது சிலர் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இருந்தபோதும் அவர் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துச் சென்றார். குற்றவாளிகளை விரைவில் விசாரித்துத் தண்டிக்க விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். "அரசியல்வாதிகளும் காவல்துறையும் நினைத்திருந்தால் கஞ்சாவை ஒழித்திருக்கலாம். புதுச்சேரியில் சின்னச்சின்ன பெட்டிக் கடைகளில்கூட கஞ்சா கிடைக்கிறது. பள்ளிக்கூடங்களில் சின்னச் சின்ன பையன்கள் கூல் லிப், போதை ஸ்டாம்பு குறித்துப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டும் பொறுப்பு இல்லை. பெற்றோர்களும் தனது ஆண் குழந்தை எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பதைக் கவனிக்கவேண்டும். நம் பிள்ளை ஒழுக்கமாக இருக்கலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கலாம். ஆனால், எல்லாத் தருணங்களிலும் உண்மையாக இருக்காது. ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும்" என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தனலக்ஷ்மி. பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 'காவலர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள்' குழந்தையின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாயை ஆறுதல் தொகையாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை மீது குற்றம்சாட்டப்படுவதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மறுக்கிறார். "இதுபோல நடக்கும்போதெல்லாம் காவல்துறை மீது குற்றம்சாட்டுவது வழக்கம்தான். காவல்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் கஞ்சாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் அப்படிச் சொல்லலாம். இந்த அரசு வந்த பிறகு கஞ்சா கடத்துபவர்கள் நிறையப் பேரைப் பிடித்திருக்கிறோம். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை அந்த மாநிலத்திலேயே சென்று பிடித்திருக்கிறோம். கஞ்சா பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இருந்தாலும் வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் வரும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து கண்காணிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தடயவியல் ரீதியான விசாரணைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 11 காவலர்களையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cy6z7pjq60po
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்குநாறி மலை சம்பவம் : வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதே வெளிப்படுகிறது ; தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? - அருட்தந்தை மா.சத்திவேல் 09 MAR, 2024 | 05:17 PM வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர். இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும். இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும். களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம். இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு. ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல. அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர். இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது. உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம். தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும். தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/178312
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
IND vs ENG: ஷுப்மன் கில், ஜெய்ஸ்வாலிடம் ரோஹித் ஷர்மா பின்பற்றும் தோனி அணுகுமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டு நிருபர், தர்மசாலாவிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்லுடன் காபி குடித்துக்கொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் பற்றிப் பேசப்பட்டது. அது ஐபிஎல் மினி ஏலத்திற்கு அடுத்த நாள், ரோஹித் தனது பழக்கமான பாணியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் கில்லுக்கு தலைமைத்துவம் குறித்து சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த செய்தியாளர் அருகில் நின்று இவற்றையெல்லாம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோஹித், ஒரு மூத்த சகோதரரைப் போல, கில்லிடம் விளக்குகிறார், "தம்பி, நீங்கள் இந்தியா அணி கேப்டனாக விரும்பினால், பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, ஐபிஎல் கேப்டன்சியிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்," எனப் பேசிக் கொண்டிருந்தார். தரம்சாலா டெஸ்டின்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் ஷுப்மான் கில்லின் மூன்றாவது டெஸ்ட் சதத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார் என்றால், அது கேப்டன் ரோஹித் சர்மாதான். ரோஹித் - கில் இடையிலான ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES உண்மையில், பல வழிகளில், தனது ஆரம்ப நாட்களில் ரோஹித் கொண்டிருந்த மிகவும் திறமையான பேட்ஸ்மேனுக்கு உரிய அம்சங்களை ஷுப்மன் கில்லிடமும் காணலாம். தற்செயலாக, கில் தனது 24வது டெஸ்டில் விளையாடி, இதுவரை மூன்று டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மேலும் ரோஹித்தும் தனது முதல் 24 டெஸ்டில் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ரோஹித்தை போலவே, கில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட சவால்களைச் சமாளிக்க நேரம் எடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் புகழ்பெற்ற கபா டெஸ்டில் 91 ரன்களில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி கில் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்ததைப் போல, ரோஹித் முதல் இரண்டு டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். ரோஹித் மிடில் ஆர்டரை விட்டு வெளியேறி, பின்னர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆனார். அவரது ஆட்டம் நிலையானதாக மாறியதால், கில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து விலகி இப்போது மிடில் ஆர்டருக்கு மாறினார், அதன் காரணமாக அவரது ஆட்டமும் சீராகி வருகிறது. கோலியின் இடத்தை நிரப்புவாரா கில்? பட மூலாதாரம்,GETTY IMAGES இதை வெறும் தற்செயல் என்று கூறலாம், நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்களை குவித்து 400 ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி போன்ற வீரர் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அதிக பொறுப்புகளை ஏற்க ரோஹித்துக்கு சவால் விடப்பட்டது. அதனால், கில் ஒரு டெஸ்ட் தொடரிலாவது தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்தார். ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வாரிசாக கில் பார்க்கப்படுகிறார். வெள்ளிக்கிழமை, இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, இருவரும் வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக கில் மிகவும் ஆக்ரோஷமாகத் தெரிந்தார், அவர் தனது கேப்டனுக்கு முன்பாகத் தனது சதத்தை நிறைவு செய்வார் எனத் தோன்றியது. அது நடக்கவில்லை. ஆனால் இந்த தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்கள் இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியை மிகவும் வலுவான நிலையில் வைத்தனர். இந்தக் காலகட்டத்தில் ரோஹித் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களை அடித்துள்ளார், இது அவரது சமகாலத்தவர்களான முரளி விஜய் (61 போட்டிகளில்) மற்றும் அஜிங்க்யா ரஹானே (85 போட்டிகளில்) ஆகியோருக்கு சமம். இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்தையும் சேர்த்தால், அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக 43 சதங்கள் அடித்துள்ளார். இது கிறிஸ் கெயிலை விடவும், டெண்டுல்கர் (45), டேவிட் வார்னர் (49) ஆகியோரை விடவும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலை பற்றிப் பேசினால், கேப்டன் ரோஹித் சர்மா தனது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் 48 சதங்களை சமன் செய்துள்ளார். இப்போது கோலி (80), டெண்டுல்கர் (100 சதங்கள்) மட்டுமே அவரைவிட முன்னிலையில் உள்ளனர். புதிய தலைமுறையினரை நம்ப வேண்டிய நேரம் இது பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் ரோஹித் ஷர்மா கில் உடன் இருப்பதைப் பார்த்தால், பஞ்சாபை சேர்ந்த இந்த வீரரை ரோஹித் மிகவும் உயர்வாக மதிப்பிடுவதை நீங்கள் உணர்வீர்கள். உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்த எழுத்தாளர் ரோஹித் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது, திறமை என்ற ஒரு வார்த்தை உங்களுக்குத் தெரிந்தால், எந்த முகம் முதலில் உங்கள் நினைவுக்கு வரும் என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார், ரோஹித் கண் இமைக்காமல் "கில்" என்று கூறினார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கோலி மற்றும் ரோஹித் போன்ற திறமையான வீரர்களின் ஆரம்பப் போராட்டங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை வைத்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலையும் அளித்த ஒரு காலம் இருந்தது. ஒருவேளை ரோஹித் இதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக, கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை வித்தியாசமாக வழிநடத்த வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதோடு, ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதையும் கண்டு ரோஹித் மகிழ்வார். இதன் காரணமாக, ஒரு காலத்தில் தோனி ரோஹித்-கோலி மீது காட்டிய அதே நம்பிக்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தலைமுறை பேட்ஸ்மேன்கள் மீதும் ரோஹித் காட்டலாம். https://www.bbc.com/tamil/articles/cj56qjq60rlo
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
வடக்கின் சமர் : சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு 39ஆவது வெற்றி 09 MAR, 2024 | 02:58 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (09) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் நிறைவுக்கு வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 117ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்களால் சென். ஜோன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது. இதன் மூலம் வடக்கின் சமரில் 39ஆவது வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி, வடக்கின் சமர் தொடரில் 39 - 28 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இதன் மூலம் கடந்த வருட தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது. துடுப்பாட்டத்தில் அபிஜோய்ஷாந்த் 10 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் அண்டசன் சச்சின் 3 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக தனது இரண்டாவது இன்னிங்ஸை போட்டியின் மூன்றாம் நாளான இன்று (09) காலை 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விசேட விருதுகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சகாதேவன் சயந்தன் (யாழ். மத்திய கல்லூரி) சிறந்த பந்துவீச்சாளர்: அருள்சீலன் கவிஷன் (சென். ஜோன்ஸ்) சிறந்த சகலதுறை வீரர்: நேசகுமார் எபநேசர் ஜெஸியால் (சென். ஜோன்ஸ்) சிறந்த விக்கெட் காப்பாளர்: சங்கீத் க்ரேம்ஸ்மித் (சென் ஜோன்ஸ்) சிறந்த களத்தடுப்பாளர்: ஜெயச்சந்திரன் அஷ்னாத் (சென். ஜோன்ஸ்) ஆட்டநாயகன்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென் ஜோன்ஸ்) எண்ணிக்கை சுருக்கம் யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 157 (சகாதேவன் சயந்தன் 55, ரஞ்சிதகுமார் நியூட்டன் 24, சதாகரன் ஸ்மில்டன் 22, அருள்சீலன் கவிஷன் 34 - 5 விக்., குகதாஸ் மாதுளன் 52 - 3 விக்.) சென். ஜோன்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 228 (நேசகுமார் ஜெய்ஸால் 53, அண்டசன் சச்சின் 40, உதயனன் அபிஜோய்ஷாந்த் 39, மகேந்திரன் கிந்துஷன் 22, முர்ஃபின் ரெண்டியோ 22, தகுதாஸ் அபிலாஷ் 24 - 5 விக்., முரளி திசோன் 64 - 4 விக்.), யாழ். மத்திய கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 149 (நிஷாந்தன் அஜய் 23, சதாகரன் சிமில்டன் 21, சுதர்ஷன் அனுஷாந்த் 20, விக்னேஸ்வரன் பாருதி 20, ஸடான்லி சம்சன் 19 - 2 விக்., கிருபானந்தன் கஜகமன் 28 - 2 விக்., ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 - 2 விக்.) சென். ஜோன்ஸ் (வெற்றி இலக்கு 79) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 81 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 50 ஆ.இ., அண்டசன் ஸ்மித் 30 ஆ.இ.) https://www.virakesari.lk/article/178315
-
போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 02:38 PM இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது. 199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும். 1990-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் தலைமுறை உருவாகும். போசணை குறைபாடு காரணமாக பிள்ளைகளிடையே என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும். நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர். அதாவது 450,000 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அதன்படி, நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள் எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. https://www.virakesari.lk/article/178307
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
மகனுடன் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்றோம்
-
2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
09 MAR, 2024 | 02:58 PM காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்றபோது கச்சேரி ஊடாக வலுக்கட்டாயமாக கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள். அந்த கடிதத்தின் ஊடாக அவர்கள் வராத பட்சத்தில் அவர்களை வீடு வீடாகச் சென்று அந்த பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கு வாகனத்தை அனுப்பி ஏற்றி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு இந்த சர்வதேசத்தையும் ஏமாற்றி எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான் இவர்கள் இந்த அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள்” என்றார். சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினம் (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுபடுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் “இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்”, “நீதி தேவதை ஏன் கண்மூடிவிட்டாய்”, “சர்வதேசமே இன்று பெண்கள் தினமா, பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?”, “முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா”, “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா”, “கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இதில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி, மகளிர் தினமான இன்றைய தினத்தை (நேற்றைய தினம்) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளில் தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை. https://www.virakesari.lk/article/178309
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ் Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 03:44 PM வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்றுகாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சிவராத்திரிதினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வாகும். இதனை முன்னிடு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்றபோது பொலிசார் தடுத்து நிறுத்து அடாவடியில் ஏடுபடுத்துயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவெ இருக்கின்றது. ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் பொலிஸார் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது? அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் பொலிசார் இவ்வாறான செயற்பாடுகளை மெற்கொள்ளாதிரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178316
-
ஈரோடு: பட்டியல் சாதி இளைஞரை ஆணவக்கொலை செய்ய முயன்ற பெண்ணின் பெற்றோர், சிறுமி பலி - என்ன நடந்தது?
பட மூலாதாரம்,TN POLICE கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மகளை திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆதிக்க சாதி பெண்ணின் தந்தை டெம்போ ஏற்றி ஆணவக்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனின் இருசக்கர வாகனத்தை டெம்போவால் இடித்துவிட்டு, உயிர் இருக்கிறதா என்பதை பெண்ணின் தந்தை இறங்கி வந்து பார்த்ததாக தாயார் மகேஷ்வரி கூறுகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் பேச முயன்றபோது குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரின் குடும்பத்தினர் பிபிசியிடம் பேச முன்வரவில்லை. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்து அவரின் தங்கை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக் கொலைக்கான காரணம் என்ன? டெம்போ ஏற்றியதில் தங்கை பலி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள எரங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ் – மகேஸ்வரி தம்பதியின் மகன் சுபாஷ் (24). பட்டியலினத்தைச் சேர்ந்த சுபாஷ் 2023 அக்டோபர் மாதம், அருகிலுள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் மகள் மஞ்சு (22) என்பவரைக் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். சாதியரீதியில் பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்த சுபாஷ், எரங்காட்டூரில் வசித்து ஆம்புலென்ஸ் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. இப்படியான நிலையில், மார்ச் 6ஆம் தேதி காலை சுபாஷ், 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது தங்கை ஹாசினியை (15) பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி மார்ச் 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மரணித்தார், சுபாஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார். முதல்கட்டமாக வெறும் விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விபத்து சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது மஞ்சுவின் தந்தை சந்திரன் என சாட்சியம் கொடுத்துள்ளனர். அதன்பின், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா உள்பட ஆறு பேரை பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் சுபாஷின் உறவினர்கள், சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து சந்திரனின் தோப்பிற்குள் இருந்த வீட்டையும், காரையும் சேதப்படுத்தியதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 'கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்று பார்த்தார்கள்' பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஹாசினியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இந்தச் சம்பவம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, ‘‘என் பெண்ணுக்கு அன்று பள்ளிக்குப் போகத் தாமதமானதால் நானே சாப்பாடு ஊட்டிவிட்டு அனுப்பினேன். என் மகன் சுபாஷும், ஹாசினியும் ஸ்கூட்டியில் புறப்பட்டிச் சென்றனர். அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்து நடந்துவிட்டதாகத் தகவல் வந்தது," என அன்று நடந்தவை குறித்துக் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதே தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, தனது மகனுக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். தனது மருமகளின் பெற்றோரான சந்திரன் - சித்ரா குடும்பத்தைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறும் மகேஷ்வரி, தனது மகள் ஹாசினியை சித்ராதான் பள்ளியிலேயே சேர்த்துவிட்டதாகவும் கூறுகிறார். இந்நிலையில், "என் மகளைப் பள்ளியில் சேர்த்த சித்ராவே அவளைக் கொலை செய்துவிட்டாரே!" என்று கூறிக் கண்ணீர்விட்டார். மஞ்சுவின் பெற்றோர் அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து கொண்டிருந்ததாகக் கூறும் அவர், "மகளைப் பெற்றவர்கள் என்பதால் கோவம் இருக்கும் என நினைத்து விட்டுவிடுவோம். ஆனால், கொலை செய்யும் அளவுக்குச் செல்வார்கள் என்று நினைக்கவே இல்லை," என்கிறார் சுபாஷின் தாய் மகேஷ்வரி. சந்திரன் டெம்போவில் வந்து ஸ்கூட்டியை இடித்துவிட்டு, தனது மகனும் மகளும் இறந்துவிட்டார்களா என்பதை இறங்கி வந்து பார்த்துவிட்டு, மனைவி சித்ராவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாகத் தெரிவித்தார் மகேஷ்வரி. "கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்பதை இறங்கி வந்து பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை என் மகன் என்னிடம் சொன்னபோது உடைந்துவிட்டேன்," என்றார் கண்ணீருடன். இந்தச் சம்பவம் குறித்துப் பேச மஞ்சுவின் பெற்றோர் தரப்பில் பேசப் பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்க முன்வரவில்லை. ஆணவக் கொலை நடந்தது எப்படி? பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஹாசினியின் உடலை சுமந்து வந்த உறவினர்கள் ஆணவக்கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரன் வாக்குமூலத்தில் என்ன கூறினார் என்பது குறித்து சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் பிபிசி தமிழிடம் விளக்கினார். பட்டியல் சாதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுபாஷ், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரனின் ஒரே மகளான மஞ்சுவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், "விவசாயம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் எனப் பல தொழில்களைச் செய்து வரும் சந்திரன், தனது மகள் மாற்று சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே சுபாஷின் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் சித்ரா தம்பதி தகராறு செய்து, சாபம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான பின் கொலை செய்ததற்கான காரணமாக இதைத்தான் வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர்," என்று கூறுகிறார் டி.எஸ்.பி சரவணன். சம்பவம் நடந்த அன்று, "கோபத்தில் இருந்த சந்திரன் தனது டெம்போவை வைத்து சுபாஷின் இருசக்கர வாகனத்தில் இடித்துக் கொலை செய்ய முயன்றதில் சுபாஷ் படுகாயமடைந்து அவரின் தங்கை ஹாசினி இறந்துள்ளார்,’’ என்றார். மேலும், தனது சாதியைச் சேர்ந்தவர்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை என்ற காரணதால் சந்திரன் கடும் கோபத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக டி.எஸ்.பி சரவணன் கூறுகிறார். இந்த நிலையில், "பல நாட்கள் காத்திருந்து, சுபாஷின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கொலை செய்ய நினைத்தவர், சுபாஷுடன் சிறுமி இருந்ததைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை எனவும்" டி.எஸ்.பி சரவணன் கூறினார். ‘கர்ப்பமாக இருக்கும் மனைவி’ பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ‘5 மாதமாகங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே, போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லையா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம். கடந்த 5 மாதங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்திருந்தபோதிலும், போலீசார் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டபோது, "பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட போதிலும், அதுதொடர்பாக சுபாஷ் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை," என்றார். மேலும் விசாரணையின்போது, சுபாஷின் மனைவி மஞ்சு கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று நம்பியதாலும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று சுபாஷ் குடும்பத்தினர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ‘அசாதாரண சூழல் ஏதும் இல்லை – கண்காணிக்கப்படுகிறது! பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பிபிசி தமிழிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், "ஆணவக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்ட சந்திரன், அவரது மனைவி சித்ரா உள்பட ஆறு பேரை உடனடியாகக் கைது செய்துள்ளோம். எந்தப் பிரச்னையுமின்றி சிறுமியின் சடலத்தை உடற்கூராய்வு செய்து ஒப்படைத்து, உடல் நல்லடக்கமும் முடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழல் ஏதும் இல்லை. இரு குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்றார். சாதி மனிதனை கொடூர ஆணவக்கொலைகளைச் செய்யும் அளவுக்குத் தூண்டுவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், "தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் உருவாக்கி, கடும் தண்டனை கொடுத்தால் ஒழிய சாதிய படுகொலைகள் குறையாது," எனவும் வலியுறுத்துகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c723xjrj12jo
-
‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும். மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 100 வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பாடசாலைக் கல்வியின் தரத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதை குறிப்பிட வேண்டும். பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்குத் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/295049
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த இந்தியா இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டொஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295021
-
அஸ்வினின் 100வது டெஸ்ட்
Ashwin 100 : இதுவரை ஒரு தமிழக வீரர் கூட இந்த மைல்கல்லை எட்டியதில்லை டெஸ்ட் கிரிக்கெட் மனவலிமை உடல் வலிமை இரண்டையும் அதிகமாகச் சோதனைக்கு உட்படுத்தும். அதனால்தான் ஆயிரக்கணக்கான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போதும் இதுவரை 76 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இந்த 76 வீரர்களில் 13 வீரர்கள்தான் இந்தியர்கள். இந்திய அணிக்காக ஆடியிருக்கும் 13 பேரிலுமே கூட அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா என மூன்று பேர்தான் முழுமையான பந்துவீச்சாளர்கள். கபில்தேவ்வையும் இதில் இணைத்துக் கொண்டால் மொத்தம் நான்கு பேர் என எடுத்துக் கொள்ளலாம். 100 டெஸ்ட் போட்டிகள் எனும் சாதனை மைல்கல்லின் முக்கியத்துவத்தை இந்த எண்களின் மூலமே புரிந்துகொள்ள முடியும். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிவிட்டார். மூன்று உலகக்கோப்பைகளில் ஆடிவிட்டார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். 100 டெஸ்ட் போட்டிகளை எட்டிவிட்டார். டோனி, கோலி, ரோஹித் என மூன்று கேப்டன்களின் கீழ் ஆடிவிட்டார். இந்திய அணியில் தற்போது இருக்கும் மூன்று, நான்கு சூப்பர் சீனியர்களுள் ஒருவர். ஆனால், இது எதுவுமே இந்திய அணியில் அவருக்கு நிலையான இடத்தை வாங்கிக் கொடுத்ததே இல்லை என்பதுதான் அஷ்வின் கரியரின் மகத்துவமும் சாபமும். அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இவர்களின் காலகட்டத்திற்கு இந்திய ஸ்பின் பாரம்பரியத்தின் கண்ணி அறுபடாமல் பார்த்துக் கொண்டவர் அஷ்வின். முன்னவர்களைப் போலவே ஒரு தசாப்தத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டவர். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலுமே பெரும் போராட்டங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. 2011 – 2015 வரை டோனி முழுமையாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் அஷ்வினின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. எந்தச் சூழலிலும் டோனியின் முழு நம்பிக்கையையும் பெற்ற வீரர்களாக சுரேஷ் ரெய்னாவும் அஷ்வினும் இருந்தனர். 2015க்குப் பிறகு டோனி மெது மெதுவாக கேப்டன் பதவிகளிலிருந்து விடைபெறுகிறார். முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டன் ஆகிறார். அவர் தனக்கான அணியைக் கட்டமைக்க முயல்கிறார். அதில் முதல் தெரிவாக அஷ்வின் இல்லை. பிரதான வீரர் எனும் இடத்திலிருந்து தேவைப்பட்டால் அழைத்துக் கொள்ளலாம் எனும் இடத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். white ball கிரிக்கெட்டில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். பிசிசிஐ அவரை முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக மட்டுமே பார்த்தது. அதிலும் ஒரு க் வைக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவில் ஆடப்படும் போட்டிகளில் மட்டுமே அஷ்வின் பிரதான தெரிவாக இருந்தார். குல்தீப் யாதவ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் அவர்தான் முதல் தெரிவாக பார்க்கப்பட்டார். “ஓவர்சீஸ் போட்டிகளில் அணியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் ஆடுகிறோம் எனில் அந்த ஒரு இடம் குல்தீப்புக்கு மட்டுமே!” என அப்போதே பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனால், அதே ரவி சாஸ்திரி 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் போது, “அஷ்வின் போன்ற வீரர்களை பிட்ச்சை மனதில் வைத்தெல்லாம் தேர்வு செய்ய முடியாது. அவர்கள் உலகின் எல்லா பிட்ச்களிலும் ஆடத் தகுதியானவர்கள்” என Taking Pitch Out of Equation தியரியை கூறினார். இந்தியா தோற்றபோதும் அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறப்பாக வீசியிருப்பார். அந்த இறுதிப்போட்டி முடிந்து ஒன்றரை மாத இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஒன்றரை மாத இடைவெளியில் மற்ற வீரர்கள் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால், அஷ்வின் கிட் பேக்கைத் தூக்கிக் கொண்டு கவுண்டி போட்டிகளுக்கு ஆடச் சென்றார். இந்த ஒன்றரை மாத இடைவெளியை வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி காலமாக பார்த்தார். சர்ரே அணிக்காக தனது மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முழு உத்வேகத்தோடும் தீர்க்கத்தோடும் இங்கிலாந்து தொடருக்கு வந்து சேர்ந்தார் அஷ்வின். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? அந்தத் தொடரின் ஒரு போட்டியில் கூட அஷ்வின் இல்லை. எல்லா போட்டிகளிலும் பெவிலியனில் ஒரு ஓரமாக அஷ்வின் அமர்ந்திருந்தார். அங்கு மட்டும்தான் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியிலுமே ப்ளேயிங் லெவனில் அஷ்வினுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. இன்னமும் பதின்ம வயதின் ஆர்வத்தோடு பந்தைச் சுழற்றிக் கொண்டு எப்போதும் தயாராக நிற்கும் இந்தியாவின் சீனியர் பௌலரின் நிலை இதுதான். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் போராட வேண்டியிருந்தது. தனக்கான இடத்தையும் முக்கியத்துவத்தையும் அணியில் பெற்றுக்கொள்ள கடுமையான சோதனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஷ்வின் இடத்தில் கொஞ்சம் மனவலிமை குன்றிய சலிப்புத்தட்டும் வீரர் வேறு யாராவது இருந்திருந்தால் எப்போதோ ஓய்வை அறிவித்துவிட்டு கமென்ட்ரி பக்கமாகச் சென்றிருப்பார். அஷ்வின் நெஞ்சுரம் மிக்கவர். போராடும் வலிமைமிக்கவர். அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். white ball கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடிவிட்டார். டி20 உலகக்கோப்பைக்கும் கம்பேக் கொடுத்துவிட்டார். டெஸ்ட்டிலும் அவரை இன்னும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைக் கடந்து சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனினும் ஒரே நாள் விடுப்பில் சென்றுவிட்டு அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத மாதிரி மீண்டும் ஓடி வந்துவிடுகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஏலத்தில் அமர்கிறார். இந்திய அணிக்காக ஆடிவிட்டு மறுநாளே சென்னையின் எதோ ஒரு கல்லூரி மைதானத்தில் டிவிஷன் போட்டிகளில் ஆடுகிறார். கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆத்மார்த்த காதல்தான் அவரை பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி ஓட வைக்கிறது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/294793
-
உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஒடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும். டுபாயில் உள்ள பிரபல சிட்டி மொலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 இலட்சம் பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், தங்கம் உடலால் உறிஞ்சப்படுவதில்லை எனவும், மற்றொரு நபர் தங்கத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? எனவும் பதிவிட்டுள்ளனர். இது முட்டாள் தனத்தின் உயரம் என ஒரு பயனரும், நம் உடலுக்கு தங்கம் தேவையில்லை, ஒரு சொட்டு தண்ணீர் இந்ததங்கத்தை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். இது போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/294815
-
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே. பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர். இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது? இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா? உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும். இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது. உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். 18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா? 16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம். குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா? கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும். ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா? ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர். காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு. இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும். காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம். உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும். நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். https://www.bbc.com/tamil/articles/c9945q5w5p8o
-
காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிகளை வீசியது அமெரிக்கா
காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 10:40 AM இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காஸாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காஸாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காஸாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காஸாவுக்கு லொறிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, காஸாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன. இந்நிலையில், காஸா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காஸா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அமெரிக்க விமானப்படை விமானங்கள் நிவாரண பொருட்களை வீசின. பரசூட் மூலம் நிவாரண பொருட்கள் காஸாவில் தரையிறங்கின. அப்போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். பரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தினத்தந்தி https://www.virakesari.lk/article/178300
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 10 ஆயிரம் ட்ரோன்களை வழங்கும் இங்கிலாந்து ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது. இந் நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ட்ரோன்களுக்காக 200 மில்லியன் பவுண் ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண் மேலதிகமாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. 10 ஆயிரம் ட்ரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் ட்ரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகள் கருங்கடலில் ரஷ்யாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் ட்ரோன் மூலம் ரஷ்யாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294960
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? குணா குகையின் அறிவியல் மர்மம் என்ன? 🤯 Guna Cave Secrets 😱 Manjummel Boys | Mr.GK