Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. DMK Alliance-ல் VCK-க்கு மீண்டும் 2 தனித் தொகுதிகள் - Thirumavalavan Reaction என்ன? திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது என்ன?
  2. தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தரவை கால்நடை மருத்துவர்கள் மறுப்பு நாட்டிலுள்ள தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த பிரகடனம் அடிப்படை ஆதாரமற்றது எனவும், அது தொடர்பில் சரியான தரவுகள் இன்றி இராஜாங்க அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் விலங்கு மக்கள்தொகையின் மனிதநேய முகாமைத்துவ ஆலோசரான வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், இந்த நிலைமை சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் மூன்று மில்லியன் குரங்குகள் இருப்பதாக சமூகத்திற்குள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும், தவறான புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி, குரங்குகளின் எண்ணிக்கை குறித்து முன்னர் தவறான அறிக்கைகள் பரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கால்நடை மருத்துவர்களாகிய நாங்கள் கடந்த 24 ஆண்டுகளாக இந்த நாய்களின் எண்ணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 2007 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மூன்று மில்லியன் நாய்கள் இருந்தன. பின்னர், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கருத்தடை அறுவை சிகிச்சைத் திட்டங்கள் அரசு மற்றும் விலங்குகள் நலச் சங்கங்களால் நடத்தப்பட்டன,” இந்த திட்டங்களின் விளைவாக நாட்டில் தற்போதைய நாய்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்றார். “ஆனால் நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார். இருப்பினும், நாட்டில் தெருநாய்கள் குறைவாகவே உள்ளன. நாய்கள் தெருநாய்களாகக் கருதப்பட்டாலும், பெரும்பாலான நாய்கள் சுதந்திரமாக வாழ்ந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் உள்ளனர். பொதுவாக மத வழிபாட்டுத் தலங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் கடைகளுக்கு அருகில் வாழும் நாய்கள் சமூக நாய்களாகக் கருதப்படுகின்றன” என வைத்தியர் தெரிவித்துள்ளார். “எங்கள் கணக்கீடுகளின்படி, நாட்டில் 2.1 மில்லியன் நாய்கள் உள்ளன, அவற்றில் மூன்று சதவிகிதம் தெருநாய்களாக கருதப்படலாம்,” என்றார். எனவே, இராஜாங்க அமைச்சர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு, நாட்டில் தற்போதுள்ள நாய் இனத்தின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார். “சிகிரியா போன்ற சுற்றுலாப் பிரதேசங்களில் பாரியளவில் நாய்கள் பெருகுவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். கடந்த ஆறு வருடங்களாக நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்தி தடுப்பூசிகள் போடப்பட்ட இடமே சீகிரியா. நாய்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து, பாராளுமன்றத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது” “நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், கருத்தடை அறுவைச் சிகிச்சைத் திட்டங்களைத் தொடரவும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சைத் திட்டங்களைத் தொடர்வதற்கான உபகரஎன்று அவர் கூறினார். . பல விலங்குகள் நல அமைப்புகள் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 35,000 முதல் 40,000 விலங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையில் ஈடுபடுகின்றன. சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் இந்த அமைப்புகளில் இணைவதற்கு கூட உடன்படவில்லை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/294931
  3. கோட்டாபய மக்களால் வெளியேற்றப்பட்டார்; ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை மக்கள் ஏற்கப்போவதில்லை - சம்பிக்க 08 MAR, 2024 | 05:41 PM (இராஜதுரை ஹஷான்) கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை. அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன. கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்வதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது. கோட்டாவை பதவியில் இருந்து வெளியேற்ற எவரும் சதி செய்யவில்லை.ஏனெனில் சதி ஊடாகவே அவர் பதவிக்கு வந்தார். கோட்டபய ராஜபக்ஷவின் முட்டாள்தனமான நிர்வாகத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்ட எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகியவற்றை பார்த்துக்கொண்டு மக்கள் கைகட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள். நெருக்கடிகளை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் வெளியேற்றப்பட்டால் என்பதே உண்மை. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனெனில், கொவிட் பெருந்தொற்று இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை விட பொருளாதார பின்னடைவில் இருந்த நாடுகள் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தன. கொவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையை கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தோற்றுவித்தது. கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு தாமதப்படுத்தப்பட்டு தம்மிக்க பாணிக்கு முன்னுரிமை வழங்கியமை, கொவிட் மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். கோட்டபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே கடந்த காலம் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ புத்தகம் எழுதுவது பயனற்றது என்றார். https://www.virakesari.lk/article/178253
  4. நாட்டில் நிலவும் கடும் வெப்பத்தால் மனநலம் பாதிக்கும் அபாயம்! வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலை மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/294989
  5. Published By: VISHNU 08 MAR, 2024 | 09:23 PM வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை ஏற்பட்டது. அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளி்ட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178290
  6. Published By: DIGITAL DESK 3 08 MAR, 2024 | 02:44 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178254
  7. கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசம் : வானிலை அவதான நிலையம்! 08 MAR, 2024 | 01:49 PM கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண் 158 (பி.எம்.2.5) எனவும் சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178248
  8. இரண்டாவது ரி20இல் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் தொடரை சமப்படுத்தியது Published By: VISHNU 06 MAR, 2024 | 11:39 PM (நெவில் அன்தனி) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (06) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்தியது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 16.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எனினும் இந்தப் போட்டியில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்று இலங்கைக்கு பாதகமாக அமைந்தது. போட்டியின் 4ஆவது ஓவரில் பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்தில் சௌம்ய சர்க்கார், விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்ததாக கள மத்தியஸ்தர் ஷர்புதவ்லா தீர்பளித்தார். ஆனால், 14 ஓட்டங்களைப் பெற்றிருந்த சௌம்யா சர்க்கார் உடனடியாக அந்தத் தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்தினார். அதனை மூன்றாவது மத்தியஸ்தர் மீளாய்வு செய்தபோது மைதானத்தில் உள்ள அகலத்திரையில் பந்து துடுப்பைக் கடந்தபோது கூரிய உராய்வுக்கான கோடுகள் தெளிவாக வீழ்ந்தன. இதனை அடுத்து சௌம்ய சர்க்கார் மைதானத்தை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தார்.\ ஆனால், என்னே ஆச்சரியம், மூன்றாவது மத்தியஸ்தர் ரஹ்மான், ஓசை வேறு எங்கிருந்தோ வந்ததாக நம்பினார் போலும். துடுப்புக்கும் பந்துக்கும் இடையில் தெளிவான இடைவெளி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி, சர்க்கார் ஆட்டம் இழக்கவில்லை என கள மத்தியஸ்தரிடம் தீர்ப்பை மாற்றுமாறு அறிவித்தார். இதனை அடுத்து சர்க்கார் ஆட்டம் இழந்ததாக தான் வழங்கிய முன்னைய தீர்ப்பை கள மத்தியஸ்தர் மாற்றி வழங்கினார். இதனால் இலங்கை அணியினர் பெரும் ஆச்சரியத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகினர். ஆனால், வெறு வழியின்றி மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு தலைவணங்கி ஆட்டத்தைத் தொடர்ந்தனர். லிட்டன் தாஸ், சௌம்ய சர்க்கார் ஆகிய இருவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சௌம்ய சர்க்கார் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஒன்பதாவது ஓவரின் கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கை 83 ஓட்டங்களாக இருந்தபோது லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந் நிலையில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் தௌஹித் ரிதோயும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ 24 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடனும் தௌஹித் ரிதோய் 25 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மதீஷ பத்திரண 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆனால், அவர் தனது கடைசி ஓவரை வீசியபோது 4ஆவது பந்துடன் இடதுகாலின் பின் தொடையில் ஏற்பட்ட உபாதையுடன் ஓய்வறைக்கு திரும்பினார். அவரது ஓவரை ஏஞ்சலோ மெத்யூஸ் பூர்த்திசெய்தார். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியில் கவனக்குறைவான ஆட்டத் தெரிவின் மூலம் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். முதல் போட்டியிலும் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. குசல் மெண்டிஸும் கமிந்து மெண்டிஸும் ஜோடி சேர்ந்து 42 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட முயற்சித்தனர். குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (67 - 2 விக்) மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (92 - 4 விக்.) அணித் தலைவர் சரித் அசலன்க 14 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ஆனால், அந்த மொத்த எண்ணிக்கை வெற்றிபெறுவதற்கு போதுமானதாக அமையவில்லை. ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டறியுடன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத், மஹெதி ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், சௌம்யா சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/178121
  9. மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை படக்குறிப்பு, சாதனைப் பெண் ரூபா. கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார். இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின் மீது இருந்த பற்று மற்றும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபாடு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த வாழ்க்கையில் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று பல நேரம் நினைத்து வருந்தியிருக்கிறேன். இன்னும் படித்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். இனி அவ்வளவு தான் நம் வாழ்க்கை நினைத்திருந்த நேரத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கான போசியோ போட்டியில் நான் தங்கப்பதக்கம் வென்றேன். அந்த நொடி மீதம் இருக்கும் வாழ்வை வாழ்வதற்கான உந்து சக்தியை கொடுத்திருக்கிறது “ என புன்னகைக்கிறார் ரூபா வைரபிரகாஷ். படக்குறிப்பு, ரூபாவின் குடும்பத்தில் பிறந்த 5 பெண்களில் ஐந்தாவதாக பிறந்தவர் ரூபா. ரூபாவின் குடும்பம் ரூபாவின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண்கள். அவர் தான் ஐந்தாவது பெண். இவருக்கு இரண்டு அண்ணன்களும் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே இந்த உயரம் குறைபாடு இருக்கின்றது . ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்த குறைபாட்டை நினைத்து அவர் வருந்தி விடக் கூடாது என்று கவனமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ரூபா. “சிறுவயதிலிருந்தே நான் என்ன கேட்டாலும் என்னுடைய வீட்டில் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள். நான் எங்கும் செல்ல முடியவில்லை என்று என்னை அவர்கள் நினைக்க வைத்ததில்லை. அதனால் பெரிதாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் தான் என்னுடைய பள்ளிப்பருவம் கழிந்தது. நான் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன். எனக்கு அப்போது படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் வரவில்லை. ஏனென்றால் நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் இல்லை. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எதுவும் பள்ளியில் ஏற்படுத்தாத காரணத்தினால் அதற்கு பிறகு என்னால் படிக்க முடியவில்லை” என்று தனது மழையை நினைவு கூர்கிறார் அவர். ஆனால் “இன்று நான் கல்வியின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறேன். என் உறவினர்கள் என் உறவினர் வீட்டு பிள்ளைகள் அவர்களுடைய வீட்டுப்பாடத்தை எழுதும் போது நானும் அவர்களுடன் இருந்து கவனித்தேன். அதனால் எனக்கு இருந்த அறிவை வைத்து சிறு சிறு எழுத்துக்களை நான் எழுதப் படிக்க தெரிந்து கொண்டேன்” என்கிறார் ரூபா. படக்குறிப்பு, இணையம் வழியாக பல்வேறு விஷயங்களை தெரிந்துக்கொண்டுள்ளார் ரூபா. தானாகவே கற்றுக்கொண்ட ரூபா ரூபா பள்ளிக்கு சென்று ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணத்தினால் கதைகள் கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுத்துக்கூட்டி படித்திருக்கிறார். கணிப்பொறியின் மீது அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இணையம் வந்த புதிதில் கணிப்பொறியை எப்படி இயக்குவது என தன்னுடைய நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு தனக்கு தேவையான தகவல்களை கூகுளில் சிறு சிறு வார்த்தைகளாக டைப் செய்து அதன் மூலமாக எழுத படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எனக்கு இணையம் மிகவும் உதவிகரமாக இருந்தது. எனக்கு உயரம் குறைவாக இருப்பதின் காரணமாக என்னால் மற்றவரின் உதவி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. என்னுடைய கைகளும் கால்களும் உயரம் மிக குறைவாக இருப்பதால் எனக்கு நேராக கைபேசி மற்றும் கணிப்பொறி இருந்தால் மட்டுமே என்னால் அவற்றை இயக்க முடியும். அதனால் எப்போதும் எனக்கு ஒருவரின் துணை இருக்க வேண்டி இருந்தது.” “இணையம் வந்த புதிதில் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கூகுளை பயன்படுத்த தொடங்கினேன். அதற்கு பிறகு தொடர்ந்து எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட சிறு சிறு வார்த்தைகள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கினேன். அதிலிருந்து பல்வேறு தகவல்களையும் நான் தெரிந்து கொள்ள தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தை மிகவும் உபயோகமாக மாற்றியது. கூகுள் மூலம் ஷேர் மார்க்கெட் எப்படி இயங்குகிறது என்பதை கற்றுக்கொண்டு அதையும் நான் ஒரு முறை முயன்று பார்த்திருக்கிறேன். பணத்தையும் அதில் முதலீடு செய்து இருக்கிறேன்” என்கிறார் ரூபா. படக்குறிப்பு, 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரூபா தானாகவே பல புத்தகங்களையும் படிக்க கற்றுக்கொண்டுள்ளார். வாழ்க்கைப் பாதையை மாற்றிய சந்திப்பு தான் உயரம் குறைவாக பிறந்து விட்டாலும் இந்த உலகில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று ரூபா பலமுறை எண்ணியிருக்கிறார். அப்படி அவர் நினைத்திருக்கும் நேரத்தில் தான் அவருடைய நண்பராக இருந்த மோகன் என்பவரை சந்தித்திருக்கிறார் .அவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான். இருவரும் சேர்ந்து தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது பற்றிய விழிப்புணர்வை தங்களுடைய அறக்கட்டளையின் மூலம் ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது தொடர்பான மருத்துவ முகாமையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். “இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராக அழைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சவாலாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை நான் எப்படி சந்தித்து என்னுடைய வாழ்க்கையையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்பதை நான் செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் உணர்த்தி இருக்கின்றேன். பலரும் உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது என்றும், எங்களுடைய வாழ்க்கைக்கு அது வழிகாட்டுதலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ரூபா. தன்னம்பிக்கை அளிக்கும் ரூபா “பல நேரங்களில் எனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் கூறிவிட்டு இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் வழி கேட்பார்கள். நானும் எனக்கு தெரிந்தவற்றை சொல்லுவேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் நான் ஒரு காலகட்டம் முன்பாக வரை என்னால் முடியுமா என்று இருந்த நிலை மாறி இன்றைக்கு என்னை பார்த்து பல பேர் நம்பிக்கையோடு தங்களுடைய வாழ்க்கையில் செயல்படுவதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்கிறார் ரூபா. படக்குறிப்பு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் ரூபாவின் அணி தங்கம் வென்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் தங்கப் பதக்கம் எப்போதும் தேடலை மட்டுமே துணையாக கொண்ட ரூபா அதன் பலனையும் அடைந்துள்ளார். உயரம் குறைவாக இருப்பதினால் நடக்க முடியாது ஓட முடியாது என்பதை மாற்றி மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அவர் முடிவு செய்தார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இறுதிப்போட்டியில் அவருடைய அணி தங்கப் பதக்கம் வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ரூபாவிற்கு கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பேசுகையில் “மாற்றுத் திறனாளியான நீ என்ன செய்ய முடியும் , உன்னால் என்ன சாதிக்க முடியும் இறுதி வரை நான்கு சுவருக்குள் தான் உன்னுடைய வாழ்க்கை கழியும் என பல பேர் என்னை பற்றி நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் தகர்த்தெறிய விரும்பினேன். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா போட்டியில் பங்கேற்க முடிவு செய்து அதற்கான தொடர்ந்து பயிற்சியை எடுத்தேன். பயிற்சியின் விளைவாக 2019 ஆம் ஆண்டு என்னுடைய அணி தங்கப் பதக்கம் வென்றது” என்கிறார் ரூபா. இப்போதும் கூட தனக்கு பல ஆசைகள் இருப்பதாக கூறும் அவர், நிறைய இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும், அதிக மக்களை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதற்காக ஒவ்வொரு அடியாக நிதானமாக, அதேசமயம் பலமாக எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். https://www.virakesari.lk/article/178121
  10. 08 MAR, 2024 | 10:50 AM வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணத்தை திருடி தப்பிச் சென்றவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ,பாதிக்கப்பட்டவர் அதிகளவில் மதுபானம் அருந்தி இருந்ததால் அவர் சிறிது நேரத்தில் போதையில் உறங்கியுள்ளார். இதன்போது சந்தேக நபர் , உறக்கத்தில் இருந்த தனது நண்பனின் பையில் இருந்த 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/178229
  11. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் சிவத்திரு மதிமுகராசா கைது - அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம் Published By: DIGITAL DESK 3 08 MAR, 2024 | 09:38 AM வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அக் கண்டன அறிக்கை வருமாறு, உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் வன்னி சிவப் பிராந்தியத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலின் மகா சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்ற பூசகர் மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டமையையும் பக்தர்களின் வழிபாடுகளிற்கு ஆலய பரிபாலன சபையினரின் பூசை ஏற்பாடுகளுக்கு பலத்த இடையூறு விளைவிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டமை சைவசமயிகளிற்கு தாங்கொணாத வலியை ஏற்படுத்தி உள்ளது. இது இலங்கையின் சைவசமயிகளின் வழிபாட்டு உரிமைக்கு விடுவிக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலும் அதே நேரம் சைவ சமய மதகுருவை மோசமாக நடாத்தி கைது செய்தமை மன்னிக்க முடியாத பாரதூரமான சம்பவமாகும். உடனடியாக பூசகர் சிவத்திரு மதிமுகராசாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதுடன் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்ட நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் மீது அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி நிற்கின்றோம். அதேநேரம் இன்றைய மகா சிவராத்திரி வழிபாடுகளிற்கு எந்தவித இடையூறுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை தழுவிய சைவசமயிகள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தி நிற்கின்றது. மிகுந்த இன்னல்களை தொடர்ச்சியாக சந்தித்து எமது பூர்வீக வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்காத அதற்காக இத்துணை தியாகங்களை செய்து வரும் வெடுக்குநாறி மலை ஆதி சிவனின் தமிழ்ச்சைவக் குடிகளிற்கு தலைமைப் பூசகர் மற்றும் பரிபாலன சபைக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்த உன்னத சைவர்களின் வழிபாட்டு மகா சிவராத்திரி தினத்திலே ஏற்பட்டுள்ள அனைத்து துன்பங்களையும் தீர்த்து அருள் புரிய முழுமுதற் பரம்பொருள் ஆதி சிவனை மனமுருகிப் பிராத்திக்கின்றோம். அகில இலங்கை சைவ மகா சபை https://www.virakesari.lk/article/178221
  12. 100 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டம் - அமைச்சர் காஞ்சன 07 MAR, 2024 | 09:29 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய களத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்திற்கமைய வீட்டுப்பாவனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான கட்டணம் 23.4 சதவீதத்தினாலும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும், பொது சேவைகளுக்கான கட்டணம் 22.3 சதவீதத்தினாலும், மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 32.6 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கான கட்டண அதிகரிப்பு 12 - 18 சதவீதமாகவே காணப்பட்டது. எனவே அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாகவே கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்குமாறு கூறியதோடு, தாம் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் பொது மக்கள் அவ்வாறு கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்கவில்லை. அதற்கு நன்றி கூறுகின்றோம். எரிபொருள், நிலக்கரி, நீர் மின் உற்பத்திகளுக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பொலிஸ், இராணுவ முகாம்கள் என்பவற்றில் சூரிய களத்தின் ஊடாக 9000 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று சூரிய மற்றும் காற்றாலை ஊடான 10 மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலைமனுக்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படவுள்ளன. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான விலைமனு கோரல் அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதைப் போன்று மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் காலத்திலேயே எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ஊடகங்களில் வெளியிடுவதற்கும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நாம் தயார். அதேபோன்று 50 ரூபாவிற்கு ஒரு மின் அலகினைக் கொள்வனவு செய்வதற்கு அதானி நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் உண்மைக்கு புறம்பானதாகும். அவ்வாறு எந்தவொரு யோசனையும் இருதரப்பிலும் முன்வைக்கப்படவில்லை. மாறாக 30 - 31 ரூபாவுக்கு மின் அலகொன்றை கொள்வனவு செய்வதற்கான யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/178180
  13. Published By: VISHNU 08 MAR, 2024 | 01:37 AM கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் இந்த நூல் வௌியிடப்பட்டது. இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியமை குறித்து பெருமையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அரசாங்கம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், ஒரு நாடாக நாம் இக்கட்டான காலத்தின் கடைசி பகுதியில் இருக்கிறோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இக்கட்டான காலத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த, இந்தக் கேலிச்சித்திர படைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய படைபாளிகள் அனைருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 9 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக 2021 ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, மே 2023 வரையிலான அவரது பயணம் குறித்து, நாளிதழ்களில் வெளியான 618 கேலிச்சித்திரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார். அத்துடன் 40 கேலிச்சித்திர கலைஞர்கள் மற்றும் 20 ஊடகவியலாளர்கள் இந்த படைப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவற்றை தொலைக்காட்சியின் ஊடாக வௌியிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞர் நள பொன்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ரொஹான் நெட்டசிங்கவால் நூல் பற்றிய விமர்சன விரிவுரையை நிகழ்த்தப்பட்டது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "இந்த கேலிச்சித்திரங்களின் தொகுப்பு ஒரு பாரம்பரிய பணியை நிறைவேற்றியுள்ளது. ஜே.ஆர் ஜயவர்த்தன, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் வீடுகளில் இவ்வாறான தொகுப்புக்களைக் கண்டிருக்கிறேன். அதனால் இன்று வஜீரவும் அவ்வாறான சம்பிரதாயபூர்வமான பணியை நிறைவேற்றியுள்ளார். இந்த தொகுப்பில் குறிப்பிடப்படும் 2021-2023 காலகட்டத்தை இப்போது மறந்துவிட்டோம். நான் பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சி இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். அந்த நேரத்தில் சத்தியப்பிரமானம் செய்ய இடமிருக்கவில்லை. அரச அலுவலகங்களில் செய்தால் அதற்கு தீ மூட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காணப்பட்டது. பின்னர் பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு வாலுக்காராமய விகாரையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். அப்போது நாட்டின் நிலைமை அவ்வாறானதாக இருந்தது. வன்முறைக் கும்பல் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. மேலும், நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மாத்திரம் 2000 கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. நாம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தியிருந்தால் அத்தகைய படைப்புகள் பிறந்திருக்காது. இவ்வாறான படைப்புக்கள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும். அவதூறு சட்டத்தில் இருந்து விடுபட முடிந்ததில் பெருமை கொள்கிறேன். இன்று புத்தகங்கள் எழுதலாம். தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த வகையிலும் படைப்புக்களை உருவாக்கலாம். அந்த சுதந்திரம் இருக்கிறது. 1931 இல் இந்த நாட்டில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த நாட்டில் ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளைத் தடை செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஒரு தேர்தலுக்குப் பிறகு முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆட்சியை விட்டு வெளியேறினர். ஆசியாவிலேயே இப்படி நடந்த ஒரே நாடு இலங்கைதான். நம்மிடையே எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஜனநாயகத்தை மதிக்கிறோம். இந்த கார்ட்டூன்கள் அனைத்தும் நாட்டில் உள்ள சுதந்திரத்தைக் காட்டுகின்றன. இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் போதும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் குறையப்போதவில்லை. மாறாக அவை அதிகரிக்கும். இந்த ஜனநாயக சுதந்திரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நான் மிகவும் கடினமான நேரத்தில் நாட்டைக் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாட்டின் அரசியல் சரிவடைந்து கிடந்தது. ஆனால், எம்மால் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டோம். அந்த ஜனநாயகத்தையே இந்த சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன. இந்தக் காலப்பகுதியில் நாம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்தது. நாம் எதிர்கொள்ளும் கடினமான காலத்தின் கடைசிப் பகுதி இதுவாகும். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். நாங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டனர். எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் குழுவின் தீர்மானங்களுக்கமைய, தனியார் கடன் வழங்குநர்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தின் கடன் தொடர்பான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அதன்படி, அந்த யோசனைகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து அவர்களின் இறுதி முடிவின்படி செயல்பட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட முடியும். எனவே, அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன். இந்த இக்கட்டான காலங்களில் இந்த கேலிச்சித்திரங்கள் எமக்கு நிவாரணமாக அமைந்தன. அதனால் வாழ்க்கையை எளிதாகப் பார்க்க முடிந்தது. இப்போது நாம் அனைவரும் நிலையான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் கேலிச்சித்திரக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்திய கேலிச்சித்திர கலைஞர் நல பொன்னப்பா கருத்து தெரிவிக்கையில் ''இந்நூலில் ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் மிகச் சிறப்பாகச் காண்பித்துள்ளனர். அரசியல்வாதிகளும் மனிதர்களே! எனவே உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் எது சிறந்தது என்பதை அறிவார்கள். கேலிச்சித்திர கலைஞர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகபட்ச சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதற்கேற்ப தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். இங்கு கூடியிருப்போரைப் பார்க்கும்போது, ஜனநாயகம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகம் நாடவாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் கேலிச்சித்திர வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த சவாலான காலகட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணம் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் நூறு கேலிச்சித்திரக் கலைஞர்களின் பார்வைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட 618 கேலிச் சித்திரங்கள் உள்ளன. இந்நூல் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அதேபோல் கேலிச்சித்திரங்களை வரைந்திருக்கும் கலைஞர்கள் மிகவும் சாதகமான முறையில் எதிர்கால சந்ததிக்காக அவர்களின் பணிகளை செய்துள்ளனர்.'' என்று அவர் தெரிவித்தார். பேராசிரியர் ரொஹான் நெத்சிங்க, ''இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முதல் பெண்மணி என்ற முறையில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது நன்றாகவே தெரியும். கேலிச்சித்திர கலைஞர்கள் முதுகெலும்பு உள்ளவர்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று யாருக்காவது தெரிந்திருந்தால், இன்று போன்ற ஒரு நாளில் எங்களை இங்கு அழைத்திருக்க மாட்டார்கள். இந்த அழைப்பை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது என்றார்கள். ஆனால் அதற்கு மாறான விடயமே நடந்தது. உங்கள் திறமையாலேயே இந்த பணிகளை செய்துள்ளீர்கள் என்பதை ஜனாதிபதி நன்கறிவார். அதனாலேயே உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில நேரங்களில் இந்த கேலிச்சித்திர கலைஞர்கள் செய்யும் கடுமையான விமர்சனங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆனால் நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஜனாதிபதி தனது அறிவையும் திறமையையும் கூர்மைப்படுத்தியவர். அதுவே இன்று அவருக்கு வலுவாக அமைந்துள்ளது. உங்களின் தலைமைத்துவத்திற்கும், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பிரார்த்திப்பதோடு நல்வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.'' என்று தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாக்களும் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/178216
  14. அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: பைடன் - டிரம்ப் வார்த்தைப் போர், நிக்கி ஹேலி விலகல் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2024 இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார். அமெரிக்க அதிபராகும் அவரது கனவு வேட்பாளராகும் முன்பே தகர்ந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் இருந்து விலக நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் அவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சவால் விடுத்தார், ஆனால் அவரால் அதில் வெல்ல முடியவில்லை. ஹேலி விலகியது 2024ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலின் துவக்கமாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகள் முன்பு நடந்தது போலவே, முன்னாள் அதிபர் டிரம்புக்கும், இந்நாள் அதிபர் ஜோ பைடனுக்கும் இடையே போட்டி நிகழவிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் பிரிவினர், டிரம்பை எதிர்ப்பதற்காக மட்டுமே நிக்கி ஹேலியை ஆதரித்ததாகக் கூறுகின்றனர். நிக்கி ஹேலியின் ஆதரவாளர்கள் டிரம்பை ஆதரிப்பார்களா? நிக்கி ஹேலி திரட்டியிருந்த டிரம்ப் எதிர்ப்பாளர்களின் கூட்டணியால் டிரம்பின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ‘சூப்பர் செவ்வாய்’ என்றழைக்கப்படும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த முதல்கட்ட வாக்குப் பதிவுகளில் டிரம்ப் வென்றதையடுத்து அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நிக்கி ஹேலியை ஆதரித்தவர்களை மூன்று வகையில் பிரிக்கலாம்: டிரம்ப் எதிர்ப்பாளர்கள், சார்பற்றவர்கள், குடியரசுக் கட்சி விசுவாசிகள். இதில் முதல் பிரிவினர், டிரம்பை எதிர்ப்பதற்காக மட்டுமே நிக்கி ஹேலியை ஆதரித்ததாகக் கூறுகின்றனர். இதுபோன்ற வாக்காளர்கள், தங்கள் பக்கம் திரும்புவர் என்று ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். சில மாகாணங்களில் நடந்த முதல்கட்டத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஹேலியின் ஆதரவாளர்களில் 21% பேர்தான், அவரது விலகலுக்குப் பின் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் இந்த வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் நிக்கி ஹேலியின் மீது அந்தரங்கத் தாக்குதல்களை மட்டுமே செய்து வருகின்றனர். நிக்கி ஹேலி போட்டியிலிருந்து விலகியதும்கூட டிரம்ப் முதலில் அவரைத் தாக்கித்தான் பேசினார். அதன் பின்னரே ஹேலியின் ஆதரவாளர்களைத் தன்னை ஆதரிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். டிரம்பிற்கு எதிராக இருக்கும் சவால்கள் என்ன? படக்குறிப்பு, டிரம்பின் மீது இருக்கும் வழக்குகளும் அவருக்கு பின்னடைவாக அமையக்கூடும் ஆனால் ஒரு கருத்துக்கணிப்பின்படி, 19% அமெரிக்க வாக்காளர்கள் டிரம்ப், பைடன் ஆகிய இருவரையும் வெறுக்கின்றனர். இதனால், இவர்கள் வாக்களிக்காமலே இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கப் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்கள், யுக்ரேன், காஸா ஆகிய இடங்களில் நிகழும் சம்பவங்கள், அல்லது டிரம்ப், பைடன் ஆகியோர் சங்கடப்படும் வகையில் செய்யும் குளறுபடிகள் ஆகியவை எப்பக்கமும் சார்பற்ற வாக்காளர்களின் முடிவை மாற்றக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும், டிரம்பின் மீது இருக்கும் வழக்குகளும் அவருக்குப் பின்னடைவாக அமையக்கூடும். அவருக்கு எதிராக இருக்கும் நான்கு குற்ற வழக்குகளில் ஏதேனும் ஒன்றில்கூட அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் வாக்குகளை இழப்பார், என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். பைடன் – டிரம்ப் இடையே முற்றும் வார்த்தைப் போர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் தேர்தல் பிரசாரக் குழு, டிரம்ப் விளம்பரத்திற்காகவே பேசி வருவதாகக் கூறியிருக்கிறது. இந்நிலையில் டிரம்ப், ஜோ பைடனை தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். ‘எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும்’ பைடனோடு விவாதிக்கத் தயார் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் நலனுக்காக அவர் இந்த விவாதத்திற்கு பைடனை அழைப்பதாகக் கூறியுள்ளார். அத்தோடு, 81 வயதான பைடன், மிகவும் வயதானவர் என்றும், மறதியால் அவதிப்படுபவர் என்றும், அதனால் அவரால் தன்னோடு விவாதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார். பதிலுக்கு, 77 வயதான டிரம்ப் முதுமையால் மனச்சிதைவு அடைந்துவிட்டதாக பைடன் கூறியுள்ளார். பைடனின் தேர்தல் பிரசாரக் குழு, டிரம்ப் விளம்பரத்திற்காகவே இதையெல்லாம் செய்து வருவதாகக் கூறியிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cml7e7r07kxo
  15. சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது - சுகாஷ் அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 08 MAR, 2024 | 10:38 AM சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். போராடினால் மட்டுமே இனம் வாழும். போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம். இனத்துக்காக இறுதிவரை விடிவுவரை போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178230
  16. கனடா: இலங்கைப் பெண், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கொடூரக் கொலை - உடன் வசித்த மாணவரே கொன்றதாகக் குற்றச்சாட்டு - ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி பட மூலாதாரம்,REUTERS 26 நிமிடங்களுக்கு முன்னர் கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு சிறார்கள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா போலீஸார் தெரிவிக்கின்றனர். கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதை கொண்ட சிசுவொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குடும்பத்துடன் வசித்த வந்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞன் ஒருவனே இந்த கொலையை செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ''இது முழுமையாக அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்" என ஒட்டாவாவின் உயர் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இரண்டு மாத குழந்தையும் கொலை ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியிலிருந்து அந்த நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 22:52க்கு அவசர அழைப்பொன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சந்தேக நபரை விரைவாக கைது செய்துள்ளதாக ஒட்டாவா போலீஸ் தலைமை அதிகாரியான எரிக் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். உயிரிழந்த நிலையில், தாய், நான்கு குழந்தைகள் மற்றும் அந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். 35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதான குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத குழந்தை கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 19 வயது மாணவர் மீது குற்றச்சாட்டு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா என போலீஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் மீது 6 கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டப்ஸ் கூறுகின்றார். ஒட்டாவாவில் அண்மை காலத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கொலை சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''உண்மையில் சோகமான சம்பவம். இது நாட்டின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" எனவும் அவர் கூறியுள்ளார். “இப்பகுதியினர் மீதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சம்பவம் நடந்த இடத்திலிருந்து இப்பகுதியினர் விலகியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி இந்த சம்பவமானது முதலில் துப்பாக்கி சூடு என கூறப்பட்ட போதிலும், பின்னர் அது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட கொலை என கண்டறியப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவத்தைக் “கொடூரமான வன்முறை” என்று குறிப்பிட்ட கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஒட்டாவா நகரின் மேயர் மார்க் சட்க்லிஃப் “நகரின் வரலாற்றில் நிகழ்ந்த மிக அதிர்ச்சிகரமான வன்முறை சம்பவம்” என்று தெரிவித்தார். “பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வது குறித்து பெருமை கொள்கிறோன். ஆனால் இந்த சம்பவம் ஒட்டாவா நகர மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார். “இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, விசாரணையை நடத்தி வரும் அவசர கால ஊழியர்களுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://www.bbc.com/tamil/articles/c3gm1zpeymjo
  17. சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர். ஏன் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். பட மூலாதாரம்,CORBIS / HULTON DEUTSCH படக்குறிப்பு, கிளாரா ஜெட்கின் 1910இல் சர்வதேச மகளிர் தினத்தை முதல் முறையாக அறிவித்தார். மகளிர் தினம் எப்போது தொடங்கியது? சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது. 1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது. 1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். 1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும். சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது. அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022இல் மெக்சிகோவின் டோலுகாவில் பாலின வன்முறைக்கு எதிரான சர்வதேச மகளிர் தின ஆர்ப்பாட்டத்தில் பெண் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர் மார்ச் 8 ஏன் தேர்வானது? சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை. 1917இல் ரஷ்ய பெண்கள் "உணவும் அமைதியும்" என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை - அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஊதா நிறம் பெரும்பாலும் ஐடபிள்யூடி உடன் தொடர்புடையது. இந்த நிறம், 'நீதி மற்றும் கண்ணியத்தை' குறிக்கிறது. மகளிர் தினத்தில் மக்கள் ஏன் ஊதா நிற ஆடையை அணிகிறார்கள்? ஊதா, பச்சை, வெள்ளை ஆகியவை ஐடபிள்யூடி நிறங்கள் என்று சர்வதேச மகளிர் தின இணையதளம் தெரிவித்துள்ளது. "ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை தூய்மையை பிரதிபலிக்கிறது. ஒரு சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் நிறங்கள் 1908இல் பிரிட்டனில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (டபிள்யூஎஸ்பியு) உருவானது," என்று அவர்கள் கூறுகிறார்கள். சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா? உண்மையில், ஆண்களுக்கான தினம், நவம்பர் 19 என இருக்கவே செய்கிறது. ஆனால் இது 1990களில் இருந்து மட்டுமே குறிக்கப்பட்டது. இந்த தினத்தை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இதை கொண்டாடுகிறார்கள். ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, "ஆண்கள் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பை" இந்த தினம் கொண்டாடுகிறது. மேலும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின உறவுகளை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று யுக்ரேனில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹங்கேரிக்கு வந்தடைந்தபோது, அவர்கள் மலர்களால் வரவேற்கப்பட்டனர். மகளிர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? சர்வதேச மகளிர் தினம் என்பது ரஷ்யா உட்பட பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. அங்கு மார்ச் 8ஆம் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களில் பூ விற்பனை இரட்டிப்பாகும். சீனாவில், மாநில கவுன்சில் அறிவுறுத்தியபடி, பல பெண்களுக்கு மார்ச் 8 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம், அல்லது லா ஃபெஸ்டா டெல்லா டோனா, மிமோசா மலர்களைக் கொடுப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால் இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரோமில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவில், மார்ச் மாதம் பெண்களின் வரலாற்று மாதமாகும். இந்த நாளில் நாட்டின் அதிபர் வெளியிடும் அறிவிப்பு அமெரிக்க பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சம ஊதியத்திற்காக அமெரிக்க மகளிர் கால்பந்து அணி வெற்றிகரமாக போராடியது 2024 மகளிர் தின கருப்பொருள் என்ன? ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை 'பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்று குறிப்பிட்டுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் 'அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்' என்பதாகும். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த பரப்புரையின் மூலம், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமைக்காக பெண்கள் போராடி வருகின்றனர் நமக்கு ஏன் அவசியம்? கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், இரான், யுக்ரேன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் அந்தந்த நாடுகளில் போர், வன்முறை மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக போராடினர். ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள் எழுச்சி மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இப்போது பெண்களுக்கு உயர்கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே பெரும்பாலான வேலைகளில் ஈடுபட கட்டுப்பாடு, ஆண் துணை இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய தடை மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது. பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY படக்குறிப்பு, மாசா அமினி தாக்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகளின் புகார்களை இரான் போலீசார் மறுத்தனர் இரானில், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப்பால் மறைக்க வேண்டும் என்ற அந்நாட்டு ஆளுகையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது. அப்போதிருந்து, பல இரானியர்கள், பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்பதே போராட்டங்களின் முழக்கமாகும். அதிகாரிகள் அவற்றை "கலவரங்கள்" என்று சித்தரித்து, வலிமையுடன் எதிர்வினையாற்றிய நடவடிக்கையில். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2022ஆம் தேதி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படைகள் யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, போரால் தூண்டப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக யுக்ரேனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றில் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cj7ym13gke9o
  18. காஸா யுத்தத்துக்கு 5 மாதங்கள் பூர்த்தி: நாகரிகத்துக்கு அவமானம் என்கிறது சீனா Published By: SETHU 07 MAR, 2024 | 12:52 PM காஸாவில் நடைபெறும் யுத்தமானது நாகரிகத்துக்கு ஓர் அவமானம் என சீனா விமர்சித்துள்ளதுடன், உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான யுத்தத்துக்கு இன்றுடன் 5 மாதங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பெய்ஜிங்கில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் காஸா யுத்தம் குறித்து கூறுகையில், இது மனித குலத்துக்கு ஒரு துயரம் என்பதுடன், இன்றைய நாகரிகத்துக்கு அவமானமாகும் எனக் கூறினார். சுர்வதேச சமூகம் அவசரமாக செயற்பட்டு காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவசர மனிதாபிமான உதவிகளை உறுதிப்படுத்துவது தார்மீக பொறுப்பாகும் எனவும் அவர் கூறினார். கடந்த ஒக்டோபர் முதல் காஸாவில் யுத்த்தினால் 30700 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காஸாவில் ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெறுகின்றன. போர்நிறுத்த நிபந்தனைகளை தரப்பினரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மத்தியஸ்தர்கள் திணறுகின்றனர். https://www.virakesari.lk/article/178153
  19. அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 39 நிமிடங்களுக்கு முன்னர் “ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.” இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதனையான செயல்தான். பேட்டராக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் 100 போட்டிகளிலும் திறமையில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினால்தான் தன் இருப்பை அணியில் வெளிப்படுத்த முடியும். தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது பேட் செய்த எத்தனையோ வீரர்கள் 50 டெஸ்ட் போட்டிகளைக்கூட கடக்க முடியாமல் ஓய்வை அறிவித்துச் சென்ற கதைகள் உண்டு. ஆனால், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டிப் பிடிக்க, முதல் போட்டியில் அறிமுகமாகும்போது இருந்த உற்சாகத்தை 100வது போட்டிவரை கடத்தி வந்தால்தான் இத்தகைய மைல்கல்லை அடைய முடியும். கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்டர் கோலின் கோவ்ட்ரே இந்த மைல்கல்லை முதலில் எட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று உலகளவில் பல வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துவிட்டார். தரம்சாலாவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவில் இதுவரை 313 டெஸ்ட் வீரர்கள் வந்துள்ள நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதுவரை அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 93.21 , எகானமி ரேட் 2.79 , ஸ்ட்ரைக் ரேட் 51.3 என அஸ்வின் வைத்துள்ளார். உள்நாட்டில் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 விக்கெட்டுகளில் 358 விக்கெட்டுகள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. இந்திய அணியைச் சேர்ந்த இதுவரை எந்த பந்துவீச்சாளரும் எட்ட முடியாத உயரத்தை அஸ்வின் எட்டியுள்ளார். அதாவது ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்நாட்டில்(350) விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங்(265), கபில் தேவ்(219) விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அஸ்வின் 350 விக்கெட்டுகளையும் கடந்து பயணித்து வருகிறார். அஸ்வினின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டால் சேனா நாடுகளுக்கு எதிராக சுமாராகவும், ஆசிய நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாகவும் வைத்துள்ளார். சேனா(SENA) நாடுகளில் சறுக்கல் வேகப்பந்துவீச்ச மைதானங்கள் அதிகம் இருக்கும் சேனா நாடுகளில் சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எளிதான காரியம் அல்ல. அங்கு அஸ்வின் தனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினாலும், சேனா நாடு அணிகளுக்கு எதிராக பெரிதாக விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சேனா நாடுகளின் மைதானங்களில் நடந்த போட்டிகளிலும் அஸ்வினின் 71 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, சராசரி 39.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 83.7 ஆகவும் வைத்துள்ளார். அதுவே, கரீபியன் நாடுகளின் மைதானங்களில் அஸ்வின் சராசரி 19.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.4 ஆகவும் இருக்கிறது. இலங்கையில் அஸ்வினின் சராசரி 21.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.1 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி 21.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 46.6 ஆகவும் இருக்கிறது. வேகப்பந்துவீச்சு மைதானங்களாகப் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனம் பட மூலாதாரம்,GETTY IMAGES இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது உண்மைதான். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சௌத்பா எனப்படும் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 254(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 டெஸ்ட் விக்கெட்டுகளில் 254 விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 49.7% ஆக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. ஆனால், அஸ்வின் இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் உலகில் திகழ்ந்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லேயான் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை இரையாக்கியுள்ளார். அடுத்தாற்போல் டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டார் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என இடதுகை பேட்டர்கள் பெயர் பட்டியல் நீள்கிறது. சர்வதேச அளவிலான இடதுகை பேட்டர்கள் 15 பேரில் ஆன்டர்சன், நேதன் லேயான், மோர்க்கல் ஆகியோர் மட்டுமே டெய்லெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் பந்துவீச வருகிறார் என்றாலே இடதுகை பேட்டர்களுக்கு தொடை நடுங்கும் என்று கூறலாம். ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 பந்துவீச்சாளர்கள் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். ஒரு பந்துவீச்சாளரின் ஸ்ட்ரைக் ரேட்தான், அவர் எத்தகைய திறமையான பந்துவீச்சாளர் என்பதை அறிய முடியும். பொதுவாக ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்களைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களில் சிறப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். முதல் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். இது முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் ஸ்ட்ரைக் ரேட்டைவிட அதிகம். வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்ன் 54.7 ஸ்ட்ரைக் ரேட்டையும், வேகப்பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின் 45.5 ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக வைத்துள்ளனர். அஸ்வின் இவர்களைவிட சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 62.1 ஆக இருக்கிறது. அதாவது 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துகிறார். உள்நாட்டில் தவிர்க்க முடியாத வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES நூறு டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் விளையாடுகிறார் என்றால், அவரின் ‘டிராக் ரெக்கார்டு’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு டெஸ்ட் போட்டி அல்லது வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் என்றாலே தானாகவே ‘ப்ளேயிங் லெவனில்’ இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத வீரராக அமைய வேண்டும். அந்த வகையில் அஸ்வின் இந்திய அணிக்குள் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் போட்டி என்றாலே தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டும் அல்ல, எப்போதுமே இந்திய அணியின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம். அதற்கு சேனா(SENA) நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளும், சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் ஆசிய நாடுகளுக்கு எதிராக அஸ்வினின் முத்தாய்ப்பான விக்கெட்டுகளுமே சாட்சி. ஆனால், இந்தியாவுக்கு வரும் சேனா நாடு அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினால், சேனா நாடுகளில் நடந்த போட்டிகளில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் அவர் திறமையின் மீது தொக்கி நிற்கும் கேள்வி. நுட்பமான பந்துவீச்சாளர் அஸ்வின் இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களான குலாம் அகமது முதல் எர்ரபள்ளி பிரசன்னா வரை, ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராகவன் முதல் ஹர்பஜன் சிங் வரை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டில் நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், டாஸ் செய்வது, நக்குல் பால் என ஒரு ஒவரில் 6 பந்துகளையும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வீசக்கூடிய திறமை படைத்தவர், அஸ்வின் என்று கூற முடியும். இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனித்து நிற்கக் காரணம், அவரின் பந்துவீச்சில் செய்யும் பரிசோதனை முயற்சி, தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சைச் சிறப்பாக மாற்றச் செய்யும் முயற்சி, போராட்ட குணம், ஒவ்வொரு பந்திலும் விக்கெட் வீழ்த்த வேண்டும், பேட்டரை ஷாட் அடிக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நுட்பத்துடன் பந்துவீசும் உத்வேகம்தான் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டும் அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சேனா நாடுகளின் ஆடுகளங்களில் பெரிதாக அஸ்வினால் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அஸ்வினுக்கு குருநாதராகக் கருதப்படும் அனில் கும்ப்ளே சேனா நாடுகளிலும் தனது பந்துவீச்சால் கோலோச்சியுள்ளார் என்பது அவரின் பந்துவீச்சு தரத்துக்குச் சான்று. அஸ்வின் பந்துவீச்சு என்பது கடினமான, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மெல்போர்ன், வான்டரர்ஸ், சிட்னி, நியூசிலாந்து மைதானங்களுக்கு சரிவராது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த மைதானங்களில்கூட நேதன் லேயான், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே போன்ற பந்துவீச்சாளர்கள் பந்தை பம்பரம்போல் சுழலவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அஸ்வின் திறமையான பந்துவீச்சாளர்தான், ஆனால் சிறந்த பந்துவீச்சாளரா என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கும் கேள்வி. "தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தமிழர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது போன்றவை என்றென்றும் பெருமைக்குரியது. ஆனால், இவை அனைத்தும் சிறந்த பந்துவீச்சாளராக அவரை உருவகப்படுத்திவிடுமா?" என்று விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளரான ஆர். முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். பெருமைக்குரிய விஷயம் பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும் அவர் கூறுகையில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. சிவராமகிருஷ்ணன், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் எனப் பல ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடினாலும் யாரும் 100 டெஸ்ட் விளையாடியதில்லை. இதை அஸ்வின் செய்திருப்பது மகத்தான சாதனை. இந்திய ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் இல்லாமல் இந்திய அணி வெல்வது என்பதை கடந்த காலங்களில் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பந்தை டர்ன் செய்வதில் சிறந்த பந்துவீச்சாளர் என்று அஸ்வினை குறிப்பிட முடியாது," என்கிறார் அவர். முரளிதரன், நேதன் லேயன் போன்று பந்தை டர்ன் செய்யும் வீரர் அஸ்வின் என்று கூற முடியாது எனும் ஆர். முத்துக்குமார் "அரவுண்ட் தி விக்கெட்டில் அஸ்வின் பந்துவீசி வலது கை பேட்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறந்தவர்தான். ஆனால், அஸ்வினிடம் சிறந்த விஷயம் என்னவென்றால், கற்றுக்கொண்டே இருப்பார், புதிது புதிதாக நுட்பங்களைப் பயன்படுத்துவார். நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வினால், முறையான ஆஃப் ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை," என்றார். மேலும் அவர், "ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் அந்த ஆஃப் ஸ்பின்னை எந்த அளவுக்கு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும் என்பதில் இருக்கிறது. அனில் கும்ப்ளே மாதிரி துல்லியம், லைன் லென்த்தில் பந்தைச் சிதறவிடாமல் அஸ்வின் பந்துவீசுவது சிறப்பு. இதனால், அஸ்வின் பந்துவீச்சை பேட்டர் கவனமாகக் கையாள வேண்டும், சிறிது கவனக் குறைவாக விளையாடினால்கூட பேட்டர் விக்கெட்டை இழக்க நேரிடும். இதுதான் அஸ்வினின் சிறப்பு,” எனத் தெரிவித்தார். பந்தை டர்ன் செய்யாமலே சாதிக்கும் வீரராக அஸ்வின் இருப்பதுதான் அவருக்குரிய தனிச்சிறப்பு என்று முத்துக்குமார் தெரிவித்தார். அவர் அதுகுறித்துக் கூறுகையில், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிம்மசொப்பனம்தான் என்பதை மறுக்கவில்லை. இடதுகை பேட்டர்களை ஆட்டமிழக்க வைக்க லேசான டர்ன் பந்தில் இருந்தால் போதும், அதைத்தான் அஸ்வின் செய்கிறார். மற்ற வகையில் நல்ல டர்ன் செய்யக்கூடிய பந்துகளை வீசவில்லை,” எனத் தெரிவித்தார். சேனா நாடுகளில் சோதனை பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ஆடுகளங்களின் உதவியுடன்தான் 500 விக்கெட்டுகளை அஸ்வினால் தொட முடிந்தது என்று முத்துக்குமார் விமர்சனம் வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஆடுகளின் தன்மையால்தான் அஸ்வின் 350 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அஸ்வின் சாதனைக்கு இந்திய ஆடுகளங்கள் உதவியுள்ளன. ஆனால், சேனா நாடுகளில் சென்று அஸ்வினால் பெரிதாக விக்கெட்டுகளை ஏன் வீழ்த்தமுடியவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார். கும்ப்ளே முதலில் இந்திய ஆடுகளங்களில் மட்டும்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மெல்போர்னில் முதல் டெஸ்ட் முதல் நாளிலேயே கும்ப்ளே 5 விக்கெட்டை வீழ்த்தினார். கும்ப்ளே பந்துவீச்சைப் பார்த்து ஷேன் வார்னே பாராட்டினார். ஆனால், "அஸ்வின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகாமல் இருப்பதால்தான் அவரால் சேனா நாடுகளின் அணிகளுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை. அஸ்வின் தன்னுடைய ஆஃப் ஸ்பின்னை வளர்த்தெடுக்காமல், ஓவருக்கு 6 பந்துகளையும் பலவிதமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தினார். அஸ்வின் நல்ல வீரர். ஆனால், சிறந்த வீரர் என்று ஏற்க முடியாது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/crgv609x1l3o
  20. “நன்கொடையா? இரு வேட்பாளர்களுக்குமே இல்லை” – மஸ்க் இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார். தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/294798
  21. Published By: SETHU 06 MAR, 2024 | 05:08 PM சந்திரனில் அணு உலையொன்றை அமைப்பது குறித்து சீனாவும் ரஷ்யாவும் ஆராய்கின்றன. 2033 -2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சந்திரனில் அணுஉலை அமைப்பதற்கு இவ்விரு நாடுகளும் விரும்புவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸின் தலைவர் யூரி பொரிசோவ் தெரிவித்துள்ளார். 'இப்போது நாம் இத்திட்டத்தை தீவிரமாக ஆராய்கிறோம் என அவர் கூறினார். சந்திரனில் அணுசக்தி ஆனது. எதிர்க்கால சந்திரமண்டல குடியிருப்புகளுக்கான மின்சக்தியை அளிக்கும். சூரியத் தகடுகள் போதுமான அளவு மின்சாரத்தை வழங்க மாட்டாது என அவர் கூறினார். இத்திட்டம் மிக சவாலானது. மனிதர்களின் பிரசன்னமின்றி, தன்னியக்க முறையில் இது செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பொரிசோவ் கூறினார். https://www.virakesari.lk/article/178094
  22. மன்னார் காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஆராய நடவடிக்கை – வனஜீவராசிகள் அமைச்சர் மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரதேவி வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உத்தேச காற்றாலை மின் திட்டம் மன்னாரில் உள்ள பறவைகள் வழித்தடத்தை தடை செய்யக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் பகுதியில் பறவைகள் வழித்தடம் உள்ளதா என தெரியவில்லை. விடயம் தொடர்பில் பேராசிரியருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் இடத்தை மாற்ற வேண்டும்,.இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காப்பாற்றப்படும் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/294875
  23. தலைமன்னார் சிறுமி கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மன்னார் நீதவான் சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சான்றுப்பொருட்களின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்காகவும், சிறுமியின் மரண விசாரணை முடிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியலும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, தலைமன்னார் ஊர்மனை கிராம மக்களும், ஆலய பங்குத் தந்தையும் பிரசன்னமாகியிருந்தனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த மாதம்15 ஆம் திகதி மாலை காணாமற்போன 10 வயது சிறுமியின் சடலம், மறுநாள் தென்னந்தோப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த 52 வயதான ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். https://thinakkural.lk/article/294867
  24. Published By: VISHNU 07 MAR, 2024 | 07:49 PM கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தலங்கம நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178205
  25. நிதியமைச்சின் புதிய தீர்மானம்! மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை செலுத்தப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294787

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.