Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20287
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. கால்நடைகளின் கண்களை குறி வைக்கும் எறும்புகள்: அச்சத்தில் திணறும் திண்டுக்கல் கிராமம் - கள ஆய்வு பிரசன்னா வெங்கடேஷ் & க.சுபகுணம் ㅤㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOPALA KRISHNAN படக்குறிப்பு, தனது கூட்டின் முட்டைகளைச் சுமந்து செல்லும் யெல்லோ கிரேஸி எறும்புகள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட கிராமத்தினரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவத் தொடங்கின. ஆண்டுகள் செல்லச் செல்ல மலையின் மேல் பகுதியிலிருந்த எறும்புகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கிராமங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் கால்நடைகள் கண் பார்வையை இழந்து உயிரிழந்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காட்டுப்பகுதிகளில் இருக்கக்கூடிய காட்டெருது, பாம்பு, முயல் உள்ளிட்ட பல காட்டுயிர்களும் இந்த எறும்புகளின் தாக்குதலால் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் கிராம மக்களுக்கு தோள்கள் சிவந்து போகுதல், தோல் வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால் மேற்கண்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினம் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜனிடம் இந்த எறும்பு வகை குறித்துக் கேட்டோம். தாயைப் பிரிந்த தேவாங்கு குட்டி: காப்பாற்றிய வனத்துறை அடுத்து என்ன செய்தது? மான் வேட்டை, தொடரும் மரணங்கள் - யார் காரணம்? சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது? சிவிங்கிப் புலிகள்: ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியக் காடுகளுக்கு பாய்ந்து வரப்போகின்றனவா? "இந்த எறும்புகளின் பெயர் யெல்லோ கிரேஸி ஆன்ட்ஸ் (Yellow Crazy Ants). இவை எதற்குமே அஞ்சாது. இந்த எறும்புகள், மனிதர்கள் இல்லாத நிலப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை அதிகமாகப் பெருகுகின்றன. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இது உள்ளது," என்றார். சுமார் 20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை அடிவாரம் முழுவதும் தற்போது இந்த எறும்புகள் பரவியுள்ளன. இதனால் கரந்தமலை காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கால்நடைத் துறை கிராம மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தற்போது மலை அடிவாரத்தில் கால்நடைகளை வைத்துப் பராமரித்து வந்த சிலர் இந்த எறும்புகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்து காலி செய்து ஊருக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை தங்களது விளைநிலங்களில் மணிக்கு ஒரு முறை தெளித்து வந்தவண்ணம் இருக்கிறார்கள். தற்போது மலமலவெனப் பரவி வரும் இந்த எறும்புகளுக்கு காட்டுயிர்கள் மற்றும் கால்நடைகள் பலியாவதால், இந்த எறும்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறை மற்றும் கால்நடை துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த எறும்புகளால் காட்டு எல்லையிலுள்ள எங்களது தோட்டத்திற்குச் சென்று எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்கிறார் பாதிக்கப்பட்ட விவசாயி செல்வம். இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது, "தற்போது எனக்கு 55 வயதாகிறது. இந்த மாதிரியான எறும்பை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆடு, மாடு, கோழி, கோழிக்குஞ்சுகள் என்று எதையும் இந்த எறும்புகள் விட்டு வைக்கவில்லை. இந்த எறும்புகளால் எங்கள் அனைத்து கால்நடைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றாலே கால் முழுவதும் இந்த எறும்புகள் மேலேறி ஊருகின்றன. இதனால் மிகுந்த எரிச்சலுடன் அங்கங்கே கொப்பளம் ஏற்படுகிறது. தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் தண்ணீர் முழுவதும் இந்த எறும்புகள் நிரம்பியிருக்கின்றன. என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை," என்றார். யெல்லோ கிரேஸி எறும்புகள் "இந்த எறும்புகள் மனித நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் பெரும்பாலும் பெருகுகின்றன. ஒரு தோட்டத்து வீடு இருக்கிறதென்றால், அது பூட்டப்பட்டே இருக்கும்போது அங்கு இந்த எறும்புகள் பெரியளவில் காணப்படாது. ஆனால், எப்போது மனித நடமாட்டம் அங்கு தொடங்குகிறதோ அப்போது அவையும் அங்கு வரத் தொடங்குகின்றன," என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன். "சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) இந்த எறும்பு வகையை உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (Most notorious invasive species) பட்டியலில் பெயரிட்டுள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்த வகை எறும்புகள் அனைத்து வகையான உயிரினங்களையும் உணவாகக் கொள்கின்றன. மற்ற வகையைச் சேர்ந்த எறும்புகளைக் கூட இவை கொல்லுகின்றன. ஏதேனும் இறந்த உயிரினங்களின் சடலங்களைப் பார்த்தால் அவற்றையும் சாப்பிடும். நம் கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், அந்தக் காயங்களிலும் இந்தப் பூச்சிகள் வந்து அரித்துச் சாப்பிடத் தொடங்கும். இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு என்று எதுவுமே கிடையாது. ஆங்காங்கே அவற்றின் போக்கில் உலவும்," என்று கூறுகிறார். மேலும், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சி வகையோடு இவை இணைத்திற உறவு (Symbiotic relationship) கொண்டுள்ளன என்று கூறிய பிரியதர்ஷன் தர்மராஜன், "அஃபிட்ஸ் பூச்சிகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்தப் பூச்சிகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடியவை. இவற்றை அதிகளவில் கொண்டு வந்து செடிகளின் மீது எறும்புகள் வைத்து உணவளிப்பது, பாதுகாப்பு கொடுப்பது போன்றவற்றை எறும்புகள் செய்கின்றன. இந்த யெல்லோ கிரேஸி எறும்புகள் (Yellow Crazy Ants) எதற்குமே அஞ்சாது. அதனால் தான் இவற்றுக்கு கிரேஸி என்ற பெயர் அளிக்கப்பட்டது. இவை ஃபார்மிக் அமிலத்தை கக்குகின்றன. கூட்டம் கூட்டமாக வந்து இரையைத் தாக்குவது இவற்றின் வழக்கம்," என்றார். பட மூலாதாரம்,GOPALA KRISHNAN இந்த எறும்புகள் பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், புதர் காடுகள், நதியோரங்கள், விவசாய நிலங்கள், தோட்டங்களில் காணப்படுகின்றன என்று ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் சார் வாழ்வியல், மரம்சார் வாழ்வியல் என்று இரண்டிலுமே அவை அபாரமான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த எறும்புகளின் காலனி மிகப்பெரிய அளவில் இருக்கும். ஒரு காலனியில் ஆயிரக்கணக்கான எறும்புகள் இருக்கக்கூடும் என்பதால், அவற்றின் வாழ்விடப் பரப்பும் மிகப்பெரிதாக இருக்கும். அந்தப் பகுதியை அவை மிகுந்த ஆக்ரோஷத்தோடு இவை பாதுகாக்கின்றன. தங்களுடைய வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த எறும்புகளில் ஒரு பகுதி பகல் மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் செயல்படுகின்றன. 6.5 முதல் 7மிமீ வரையிலான நீளத்தில் இருக்கக்கூடிய இவை மிக வேகமாகச் செயல்படக் கூடியதாகவும் மிக ஆபத்தானவையாகவும் அறியப்படுவதாக ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு உயிரினமாக அறியப்படும் இவை, மேற்குத்தொடர்ச்சி மலையில் மனித நடமாட்டம் உள்ள பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. மனித நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய காட்டு நிலங்களின் எல்லையோரங்களில் இவை அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. ஆட்டுக்குட்டிகள் கண் பார்வையை இழந்துவிட்டன கரந்தமலை காட்டுப்பகுதிக்குள் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் கரந்தமலை கிராமத்தைச் சார்ந்த விவசாயி அழகு. "கரந்தமலை காட்டுப்பகுதியில் உள்ள காட்டெருது, முயல், பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த எறும்பு எங்களின் கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை மட்டுமே குறி வைத்துக் கடிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பார்வை பறிபோய், அதனால் நீர், உணவு உட்கொள்ள முடியாமல் பரிதாபமாக இறந்து விடுகின்றன. வனத்துறை அதிகாரிகள் இதுவரை எங்கள் பகுதியில் நேரடியாக வந்து முறையாக ஆய்வு மேற்கொண்டு எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அழகு. படக்குறிப்பு, யெல்லோ கிரேஸி எறும்புகள் தங்களுடைய கால்நடைகளின் கண்களைத் தாக்குவதாக கிராம மக்கள் கூறுகின்றனர் பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட அனைத்து காட்டுப்பகுதிகளிலும் இந்த எறும்பு பரவியுள்ளதாகக் கூறுகிறார் நாகம்மாள். "வேலாயுதம்பட்டி மலை அடிவாரத்தில் நான் வசித்து வந்தேன். இந்த எறும்புகளால் என்னுடைய ஆடுகள் இறந்து விட்டன. மேலும் மூன்று ஆட்டு குட்டிகளுக்குத் தற்போது கண் பார்வை பறிபோய்விட்டது. என்னுடைய வீடு முழுவதுமே இந்த எறும்புகள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் வீட்டைக் காலி செய்துவிட்டு ஊருக்குள் குடி வந்திருக்கிறேன். இந்த எறும்புகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாளுக்கு நாள் இந்த எறும்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே வனத்துறையினர் உடனடியாக இதைக் கவனத்தில் கொண்டு எறும்புகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார். காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன? பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா? மக்களுக்கு தோல்வீக்கம், அரிப்பு, கொப்பளங்கள் மனிதர்களை இந்த எறும்புகள் கடித்தால், தோல்வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது என்கிறார் கல்லூரி மாணவி ஆஷிகா. பிபிசி தமிழிடம் பேசிய ஆஷிகா, "சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டின் மேல் பகுதியில் இருந்த இந்த எறும்புகள் இப்போது காடு முழுவதும் பரவி மலை அடிவாரத்திற்கும் படையெடுத்துள்ளன. வெயில் அடிக்கும்போது இந்த எறும்புகளின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. ஆனால், மழைக்காலத்தில் ஊர் முழுவதுமே பரவி விடுகிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் மக்களின் கால்களைக் கடிக்கும் இந்த எறும்புகளால் தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எறும்புகளை முற்றிலும் கட்டுப்படுத்த வனத்துறையும் கால்நடை துறையும் இங்கு சிறப்பு முகாம் அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார். இந்த எறும்புகள் சாதாரண எறும்புகள் போலத்தான் தெரிகின்றன என்றும் இந்த எறும்புகளால் தான் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நத்தம் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், "20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை முழுவதுமே இந்த எறும்புகள் தற்போது பரவியுள்ளன. எதனால் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவியுள்ளன என்பது குறித்துத் தெரியவில்லை. மேலும் இந்த எறும்புகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் புரியவில்லை. படக்குறிப்பு, பாம்பு ஒன்றை மொய்த்துக் கொண்டிருக்கும் எறும்புகள் ஆனால் இந்த எறும்புகளின் தாக்குதல் காரணமாகத்தான் காட்டுயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது," என்றவர், தற்போதைய சூழலில் காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று அனைத்து கிராம மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். வனத்துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இதுகுறித்து விளக்கமளிக்க முடியும் என்று பிபிசி தமிழிடம் பேசிய சிறுமலை வன அலுவலர் பிரபு தெரிவித்தார். காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் இந்தப் பிரச்னை இவ்வளவு தீவிரமானதற்கு, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பயமாதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன். அவர், "பூச்சிகள் உடலில் வெப்பத்தை உருவாக்க முடியாத உயிரின வகைப்பாட்டைச் சேர்ந்தவை. ஆகவே அவற்றின் உடல் வெப்பநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவை வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். உடல்வெப்பநிலை அதிகரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றங்களும் அதிகரிக்கின்றன," என்கிறார். வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும்போது அவை மிகத் தீவிரமாக அதிகளவில் சாப்பிடுகின்றன. இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் இதை உறுதி செய்வதற்கு நம்மிடம் போதுமான தரவுகள் இப்போது இல்லை. சமீபத்திய பருவநிலைகள் அவற்றின் இந்தப் பெருக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும். இந்த எறும்புகள் பெரும் படையெடுப்பைச் செய்திருக்ககூடிய பகுதியின் பருவநிலை குறித்த தரவுகளைச் சேகரித்து விரிவாகப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும் என்கிறார் பிரியதர்ஷன் தர்மராஜன். https://www.bbc.com/tamil/india-62554041
  2. யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதலே இந்தியா நிவாரண பொருட்கள், பொருளாதார தொகுப்புதவி உள்பட பல்வேறு உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. ஆனால், அத்தகைய உதவிகளை சீனா இலங்கைக்கு வழங்காதிருந்தது. இந்த நிலையில், பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வழங்காவிட்டாலும், இலங்கை மீது தொடர்ந்து தமது நன்மதிப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே யுவான் வாங் 5 கப்பலை சீனா அனுப்பி இருக்கிறது என்று பிபிசி தமிழிடம் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதன் கூறினார். சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் - 5 கப்பலானது, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு திட்டமிட்டிருந்தது. கடந்த மாத நடுப்பகுதியில் சீனாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய இந்த கப்பல், வழியில் எந்தவொரு துறைமுகத்திலும் நங்கூரமிடாமல், நேரடியாகவே இலங்கையை நோக்கி பயணித்தது. இலங்கை திடீர் கோரிக்கை ஆனால், கப்பல் பாதி வழியில் வந்து கொண்டிருந்த தருணத்தில், இலங்கைக்குள் இந்த கப்பல் அனுமதிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இதையடுத்து, சீன கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. எனினும், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த நேரத்தில் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை கடல் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறைப்படி அனுமதி கிடைக்கப் பெறும் வரை, இலங்கையிலிருந்து சுமார் 600 கடல் மைல் தூரத்திலேயே இந்த கப்பல் மிகவும் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இவ்வாறான பின்னணியில், சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. இந்தப் பின்னணியில், இலங்கை அரசாங்கம் சீனாவின் கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவித்தது. இதன்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 எரிபொருள், உணவு உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கைக்கு வந்தது சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம் சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? பரிசு கொடுத்த இந்தியா இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட்டப்படும் வரை, இலங்கை கடல் பகுதிக்குள் அந்த கப்பல் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அதேவேளை, சுதந்திர தினத்தன்று, இந்தியாவால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டது. யுவான் வாங் 5 கப்பல் வருவதற்கு முந்தைய தினத்தில், இவ்வாறு சமுத்திர கண்காணிப்பு விமானமொன்று இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டமையும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறான சர்ச்சைகள் தொடர்பில் பிபிசி தமிழ், மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதனிடம் வினவியது. இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கப்பல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அவர் விவரித்தார். ''இலங்கை ராஜதந்திரத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை இது. உண்மையில் ஜீ.எல்.பீரிஸ் தான் சீன கப்பல் வருகைக்கு அனுமதி கொடுத்துக் கையெழுத்திட்டார். 9ஆம் தேதி ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு போகிறார். ஜீ.எல்.பீரிஸ் 12ஆம் தேதி இதற்கு கையெழுத்திட்டிருக்கிறார். பிறகு 14ஆம் தேதி ஜனாதிபதி பதவி விலகுகிறார். இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் தான் அனுமதிக்கான கையெழுத்து இடப்பட்டது. கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்தது. நாங்கள் எங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, கப்பலை அனுப்பி விட்டோம். கட்டாயம் வந்து தான் ஆக வேண்டும் என சீனா கூறியது. வேறு வழியில்லாமல் தான் இவர்களுக்கு இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் இந்தியா ஒரு அறிக்கை விட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கவில்லை என அவர்கள் கூறினார்கள். இந்து - பசுபிக் உடன்படிக்கையின் படி, சர்வதேச நாடொன்று எங்களின் நாட்டிற்குள் வர விரும்பினால், அதற்கு நாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தென்னிந்தியாவுக்கு பாதிப்பா? படக்குறிப்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் - 5 பாதுகாப்பு ரீதியாக பார்த்தால், இந்த உளவு பார்க்கும் கப்பல் ஒன்று. சுமார் 750 கிலோமீற்றர் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அது நேரடியாக எங்களுக்கான பாதிப்பை விடவும், இந்தியாவிற்கு வந்து, அதுவும் தென்னிந்தியாவிற்கு பெரிய பாதிப்பு. அவர்கள் கண்காணிக்கும் தன்மை இருக்கும். இந்த நெருக்கடியை இந்தியாவுடன் இலங்கை எவ்வாறு கையாள போகின்றது என்பதில் தான் இருக்கின்றது. என்னை பொறுத்த வரை இந்தியாவை ஓரளவிற்கு இலங்கை திருப்திப்படுத்தியுள்ளது. அதனாலேயே, இலங்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என இந்தியா அறிவித்ததற்கு காரணம் அது தான்" என ஏ.பி.மதன் தெரிவித்தார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே ஒரு முறுகல் நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலைமையில் இந்த கப்பல் இலங்கைக்கு வந்ததை அடுத்து, இந்து சமுத்திரத்திற்குள் ஒரு அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதா? ''இல்லை. அப்படி நடக்காது. ஏனென்றால், இந்தியா தன்னை ஒரு வல்லரசாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றது. வல்லரசாக இருக்கும் போது, தான் இறங்கி சென்று, அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரும்பாது. இல்லையென்றால், தாங்கள் வல்லரசு இல்லை என்பதை ஒத்துக்கொண்ட மாதிரி ஆகிவி;டும். அப்படியொரு நிலைக்கு இந்தியா போக விரும்பாது." என அவர் கூறுகின்றார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நேற்று. சுதந்திர தினத்தை கொண்டாடியதற்கு பின்னரே, சீன கப்பலுக்கு இலங்கைக்குள் வருகைத் தர அனுமதி வழங்கப்படுகின்றது. அதேபோன்று, இந்தியாவின் சமுத்திர கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டதன் பின்னரே, இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன? படக்குறிப்பு, ஏ.பி. மதன் ''இல்லை. இந்த கப்பலுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நானும் உதவுகின்றேன் என இந்தியா இதனை வழங்கியுள்ளது. இரண்டு விடயங்கள் உள்ளன. சீனா இலங்கைக்கு கடன் வழங்குகின்றது. இந்திய உதவி செய்கின்றது. இது தான் இரண்டு வித்தியாசங்கள். உதவியை பெற்றுக்கொள்வதா? கடனை பெற்றுக்கொள்வதா? என்பதில் தான் இருக்கின்றது. இந்தியா கடனுக்கு அப்பால், உதவியை தான் செய்துக்கொண்டிருக்கின்றார்கள். சீனா அப்படி இல்லை. சீனா கடனை கொடுத்து, இலங்கை கஷ்டத்தில் சிக்குவதற்கு பார்க்கின்றது. அந்த நிலைமை தான் இதில் இருக்கின்றது" சீனாவுடனான ராஜீய உறவு எப்படி இருக்கும்? இந்த கப்பல் வருகைத் தருவதற்கு முன்னதாகவே, இந்தியாவினால் வழங்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. இது ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? ''சில வேளை இருக்கும். அதுவும் உளவு பார்க்கும் விமானம் தான். இந்தியா தமது விமானத்தை நேரடியாக இலங்கைக்கு அனுப்பி, கண்காணிப்பதை விட, இலங்கைக்கு விமானத்தை வழங்கி, இலங்கை விமானப்படை அதை பயன்படுத்தினால், இவர்களுக்கு ஒன்றும் கூற முடியாது தானே. விமானத்தை பறக்க வைத்து கண்காணிக்க போவதில்லை. ராடார் மூலம் பறக்காமலே கண்காணிக்க முடியும்." என அவர் குறிப்பிடுகின்றார். இந்த கப்பல் விவகாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியா, சீனா இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இனிவரும் காலங்களில் ராஜதந்திர உறவு எவ்வாறு இருக்கும்? ''இந்த பிரச்சினை ஓய்வும் பிரச்சினை இல்லை. இந்து சமுத்திரத்தில் வல்லாதிக்க நாடு எது என்ற போட்டி, காலகாலமாக தொடரும். அது இருக்க தான் போகின்றது. இந்த கப்பல் வந்தாலும் இருக்கும். இந்த கப்பல் வாராவிட்டாலும் இருக்கும். சீனா தாய்வானை விட்டு கொடுத்த தயாராக இல்லை. அதேமாதிரி இலங்கையை விட்டு கொடுப்பதற்கு இந்தியா தயார் இல்லை. இந்தியா எந்தவொரு காலத்திலும், நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழீழ விடுதலை போராட்டத்தில் இந்தியா உதவிகளை வழங்கி இருந்தாலும் கூட, நாடு பிரிந்து வரும் என்ற நிலை வரும் போது, இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்கியது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 அப்படி பிரிந்து போவதற்கு இந்தியா விடவில்லை. இப்படியாகவே இந்தியாவின் ஆதிக்கம் இருக்கின்றது. சீனாவை பொறுத்த வரை, கடனை கொடுத்து, சிக்க வைக்கின்றனர். வட்டிக்கு கடனை கொடுப்பதை போல. அப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது. இப்படியான நிலைமையை இங்குள்ள ஆட்சியாளர்கள் சரியாக கையாள தெரிந்துக்கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ சீனாவிடம் கடனை பெற்றுக்கொண்டுள்ளனர். உடனே இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து, சீனாவை பகைத்துக்கொள்ள இயலாது. அதுக்காக சீனாவிடம் மீண்டும் கடனை வாங்கிக் கொண்டு, இந்தியாவை பகைத்துக்கொள்ளவும் முடியாது. இது ராஜதந்திர சிக்கல்." என மூத்த ஊடகவியலாளர் ஏ.பி.மதன் தெரிவிக்கின்றார். இந்த கப்பல் இந்த நேரத்தில் இலங்கைக்குள் வருவதற்கான நோக்கம் என்ன? ''நான் வந்து காட்டுகின்றேன் என்பதை காண்பிக்கவாக இருக்கும். கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் சீனா இலங்கைக்கு எதுவும் செய்யவில்லை. இந்தியா உடனடியாக உதவி செய்தது. அதற்காக தான், உண்மை விடவும் நான் ஆதிக்கம் உள்ளவன் என்பதை சீனாவிற்கு காட்ட வேண்டும். இலங்கையில் எனக்கும் அதிகாரம் இருக்கின்றது. எனக்கும் உரிமை இருக்கு என்பதை சீனா காட்ட வேண்டும். அதற்கு ஒரு துரும்பாக பயன்படுத்திக் கொண்டது தான் இந்த விவகாரம். இது யுத்த கப்பல் கிடையாது. இது உளவு கப்பல். இதுவொரு கண்காணிப்பு தான். யுத்த கப்பல் வந்திருக்கும் பட்சத்தில், அது வேறு விதத்தில் சென்றிருக்கும்" என அவர் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதன் கூறுகின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-62562479
  3. தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@LMKMOVIEMANIAC / TWITTER படக்குறிப்பு, கௌசிக் எல்.எம் பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 35. இளம் வயதில் மாரடைப்பு காரணமாக கௌசிக் உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் படித்த இவர், சினிமா மீதான ஆர்வத்தால் சினிமா விமர்சகராக பணிபுரிந்து வந்தார். இணையத்தில் பிரபலமான இன்ப்ளூயன்சராகவும் இருந்தார். கௌசிக் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். கௌசிக் இளம் வயதில் மரணம் அடைந்திருப்பது குறித்து அதிர்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு கூட, ஊடக சந்திப்பு ஒன்றில் கௌசிக்கை சந்தித்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு கௌசிக்குடன் தான் பேசியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 நடிகர் துல்கர் சல்மான் தன் ட்விட்டர் பக்கத்தில், "இச்செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என விரும்புகிறேன். வாழ்க்கை மிகவும் சிறியது. உங்களின் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் நல்ல சினிமாவின் பக்கம் நின்றிருக்கிறீர்கள். இதனை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. என்னை இது தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது" என பதிவிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இதேபோன்று, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் ராகவா லாரன்ஸ், ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக கூட, துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள சீதாராமம் படத்தின் வசூல் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார் கௌசிக். இளம் வயதில் உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் - வேறுபாடு என்ன? இதயத்தை பாதிக்கும் இரவுப்பணி - எப்படி சமாளிப்பது? உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவரின் விளக்கம் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுமா, அதனை தடுப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் மூத்த இதயநல மருத்துவர் சொக்கலிங்கம். தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? இது திடீரென நிகழுமா அல்லது படிநிலைகள் உள்ளதா? மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம் எல்லாவற்றிலும் இந்தியா தலைநகரமாக மாறிவிட்டது. இந்தியாவில் 20-30 சதவீதத்தினர் மாரடைப்பால் 30 வயதுக்குள்ளாக இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 90 பேர் ஒவ்வொரு மணிநேரமும் மாரடைப்பால் இறக்கின்றனர். இந்த உயிர்க்கொல்லி நோய் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை வாழ்க்கை முறைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக உள்ளது. உறக்கத்தில் ஏற்படும் இந்த மாரடைப்பை 'சைலண்ட் அட்டாக்' (Silent Attack) என்கிறோம். இவர்கள் பெரும்பாலும் மன உளைச்சல், கவலை, ஏமாற்றம், கோபம், பதற்றம், அனைத்திலும் அவசரம் உள்ளிட்ட உணர்வுகளுடனேயே இருப்பார்கள். இந்த உணர்வுகளால், அட்ரினலின், கார்ட்டிசால் உள்ளிட்ட இரு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்போது உணர் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு இந்த இரு ஹார்மோன்களின் சுரப்பும் அதிகமாகி ரத்தத்தில் கலந்துவிடும். இதனால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் உள்ளிட்டவை அதிகமாகும். 2-3 விட்டம் கொண்டது இதய ரத்தக் குழாய். இந்த ரத்தக்குழாய்தான் இதயத்திற்கு தேவையான ரத்தத்தைக் கொடுக்கும். தேவையான ரத்தத்தை இது இதயதசைகளுக்குக் கொடுக்கவில்லை என்றால், ரத்த ஓட்டம் குறைவதன் ஆரம்பகட்டத்தை அஞ்ஜைனா Angina) என்கிறோம். அதன் முதிர்வான நிலைதான் மாரடைப்பு. ரத்தத்தில் கொலஸ்டிரால் இருப்பதால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை எடுத்துவிட்டால் அடுத்த நொடியே நம் உயிர் பிரிந்துவிடும். ஆனால், இந்த இரு ஹார்மோன்களும் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பிரித்து ரத்தக் குழாயில் சென்று படிகிறது. இந்த நிலைதான் அத்ரோ ஸ்கிளிரோசிஸ். ரத்தக்குழாயில் கொலஸ்டிரால் படிவதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு கொலஸ்டிரால் 70 சதவீதம் படிய வேண்டும். அந்த நிலையில்தான் நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும். பட மூலாதாரம்,BOONCHAI WEDMAKAWAND / GETTY IMAGES ஆனால், அந்த அடைப்பில் உள்ள எண்டோதீலியத்தில் அரிப்பு மாதிரி உண்டாகி அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதனால், அடைப்பு சிறிதளவில் இருந்தாலும், ரத்தம் உறைவதால், ரத்தக் குழாய் சுருங்குவது என மூன்றும் நிகழ்வது, உடனடியாக உயிரிழப்பு ஏற்படும் வகையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இந்த உடனடியாக நிகழக்கூடிய 'சைலண்ட் அட்டாக்' ஏன் உறக்கத்திலேயே வருகிறது? 'சைலண்ட் அட்டாக்' பெரும்பாலும் நாம் உணர்வில் இருக்கும்போதுதான் வரும். சிலருக்கு ஏன் தூக்கத்தில் வருகிறதென்றால், அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு உடனே உறங்குவது, பதட்டத்துடன் உறங்குவது, நிம்மதியற்ற தூக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனாலும் அட்ரினலின் அதிகமாகி இறப்பு நிகழ்கிறது. இதனால்தான் சைலண்ட் அட்டாக் வருகிறது. 'சைலண்ட் அட்டாக்' யாருக்கெல்லாம் வரும்? இது 70-80 வயதை தாண்டியவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும். ஆனால், இப்போது 30-35 வயதுடையவர்களுக்கும் வருகிறது. மனநலனை காப்பதே இதற்கு சிறந்த வழி. நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 20 வயதைக் கடந்தவர்கள் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம், நீரிழிவு, ஈசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். பரிசோதனைகள் முடிவின்படி உடல்நிலையை சரிசெய்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம் கொண்டவர்களுக்கும் இது ஏற்படுவது ஏன்? உடல் எடையை குறைக்க வேண்டும், ஜிம்முக்கு சென்று உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இளைஞர்கள் பதட்டத்துடன் தான் செய்கின்றனர். சீரான உணவுப்பழக்கம், சீரான உடற்பயிற்ச்சி, நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மூன்றையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடும்போது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். உறங்குவதற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். பரம்பரையாக வருவது குறிஅந்த சதவீதமே, தடுப்பு வழிமுறைகளை எடுத்துக்கொண்டாலே இவற்றை தடுக்கலாம். கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன? என்ன செய்ய வேண்டும்? முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா? உங்கள் இதயத்தை பாதுகாப்பது எப்படி - 6 முக்கிய கேள்வி பதில்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கணேசன். நான் 160 பேருக்கு ரேண்டமாக Lipid Profile பரிசோதனைகளை செய்தேன். அவர்களுள் 152 பேருக்கு Lipid Profile அசாதாரணமாக இருந்தது. அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் கிடையாது. இவர்களுக்கு கொலஸ்டிராலை குறைக்கும் மாத்திரைகளை 30 நாட்களுக்கு நான் பரிந்துரைத்தேன். அதன் பிறகு மீண்டும் பரிசோதித்ததில், அந்த அளவுகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. coagulation Profile, Lipid profile, electrolyte profile உள்ளிட்ட பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் உள்ளிட்டவை ரத்தத்தில் ஒரு அளவுகோலில் இருக்கும். இவற்றில் மாற்றங்கள் ஏற்படும்போதும் மாரடைப்பு ஏற்படுகிறது. 30 வயதைத் தாண்டினால் எகோஸ்பிரின் மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. பட மூலாதாரம்,GETTY IMAGES திடீரென ஏற்படும் மாரடைப்பை முன்பே கண்டறிய ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? வழக்கத்திற்கு அதிகமாக வியர்வை வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறையும், காலில் வீக்கம் ஏற்படும். முதுகு வலி, இடதுப்புற தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம், நொறுக்குத் திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய்யுடன் கூடிய உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். உடல் எடையை சரியான அளவில் தொடர வேண்டும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் கொலஸ்டிரால் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கழுத்து வலி, தோள்பட்டை வலியை வாயுத்தொல்லை என அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய 'சைலண்ட் அட்டாக்' யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். https://www.bbc.com/tamil/science-62558439
  4. உயரும் விலைவாசியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் வழிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்களின் கையில் உள்ள பணம் குறைவதோடு, பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி ஏற்பட்டது, இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு மிக வேகமானதாகவும் அதிகமானதாகவும் இருக்கிறது. என்ன காரணம்? மில்டன் ஃப்ரைட்மேன் என ஒருவர் இருந்தார். அவர்தான் பருவினப் பொருளியலில் (Macro Economics) பணவீக்கத்தைப் பற்றி ஆய்வுசெய்தார். பணவீக்கம் என்பது எப்போதுமே ரொக்கம் சார்ந்த ஒரு சூழல் என்று குறிப்பிட்டார். நாம் விலை கொடுத்து வாங்குவதில் பொருட்கள், சேவைகள் என இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. பொருட்களையும் சேவைகளையும் சேர்த்துத்தான் நாம் பயன்படுத்துகிறோம். பொருட்களின் உற்பத்தியையோ, சேவைகளின் அளவையோ திடீரென மிகப் பெரிய அளவுக்கு உயர்த்த முடியாது. இரண்டு சதவீதம், ஐந்து சதவீதம் என்றுதான் உயர்த்த முடியும். மற்றொரு பக்கம் இந்தப் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதற்கான பணம் இருக்கிறது. நினைத்தால் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் அரசால் அடிக்க இயலும். இப்போது அச்சடிக்கக்கூட தேவையில்லை. கணக்கில் அதிகரித்துக்கொண்டாலே போதும். இந்த கோவிட் காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருவாய் வரவில்லை. இதனால், ரிசர்வ் வங்கியே பாண்ட்களை வாங்கி, பணத்தை கடனாகக் கொடுக்கச் சொன்னது. அதேபோல ரிசர்வ் வங்கியும் செய்தது. இதனால், சந்தையில் பணம் அதிகரித்தது. எளிய பொருளாதார விதிப்படி, எது குறைவாக இருக்கிறதோ அதன் மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது பணம் அதிகமாகவும் பொருட்களும் சேவைகளும் குறைவாகவும் இருக்கின்றன. இதனால்தான் விலைவாசி உயர்கிறது. உங்கள் பணத்தை எப்படி, எதில் முதலீடு செய்வது? - ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் டிப்ஸ் செலவுகளைச் சமாளிப்பது எப்படி?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை என்ன? உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை மற்றொரு பக்கம் பெட்ரோலின் விலை ஒரு பீப்பாய் 70 டாலரிலிருந்து 25 டாலர் வரை வந்தது. பிற நாடுகளில் எல்லாம் பெட்ரோலின் விலையைக் குறைத்து, மக்களுக்கே விலை குறைப்பின் பயனை அளித்தார்கள். ஆனால், இந்தியாவில் சிறப்பு வரிகள் விதிக்கப்பட்டு 26 லட்சம் கோடி மக்களிடமிருந்து பெறப்பட்டது. மக்களிடம் புழக்கத்தில் இருந்த 26 லட்சம் கோடி ரூபாய், இப்போது இல்லாமல் போய்விட்டது. ஒரு பக்கம் மக்களின் புழக்கத்தில் இருந்த பணம் எடுக்கப்பட்டது. மற்றொரு பக்கம் அதிக அளவில் பணம் அச்சிடப்பட்டது. ஆகவே, பணத்தின் மதிப்புக் குறைந்ததோடு மக்களிடம் பணமும் இல்லாமல்போனது. எரிபொருள் விலை அதிகரித்தால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவு அதிகரித்தால் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். விலைவாசி எங்கே அதிகரித்திருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் மட்டும்தான் கேட்கிறார். மற்றவர்கள் எல்லோருமே விலைவாசி உயர்ந்திருப்பதை உணர்கிறார்கள். இதற்கடுத்ததாக ரஷ்ய - யுக்ரைன் யுத்தம். இதனால், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெயின் விலை அதீதமாக உயர்ந்தது. ஏனென்றால், ரஷ்யாவும் யுக்ரைனும்தான் மிகப் பெரிய அளவில் சூரியகாந்தி எண்ணையை உற்பத்தி செய்கிறார்கள். சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தோனேஷியாவில் உற்பத்தியாகும் பனை எண்ணெயின் விலையும் உயர்ந்தது. இந்த இரு எண்ணெய்களின் விலையும் உயர்ந்ததால், மற்ற சமையல் எண்ணெய்களின் விலையும் உயர ஆரம்பித்தது. இதுதான் பணவீக்கத்தின் துவக்கம். இதெல்லாம் எந்த காலகட்டத்தில் நடந்தது? பணம் அடிப்பதைப் பொறுத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இனிமேல் பணம் அடிக்கப்போவதில்லையென இப்போதுதான் சொல்லியிருக்கிறார். பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி என்பது கோவிட் காலகட்டத்திலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய் விலை உயர்வு என்பது கடந்த ஏழு மாதமாக நடக்கிறது. இதுதவிர வருவாய் குறையும்போது ஜி.எஸ்.டி. வரி அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால், அரசின் வருவாய் உயரத்தான் செய்யும். அதைவைத்து வளர்ச்சியிருப்பதாக சொல்ல முடியாது. ஆக மக்களுக்கு பணமும் கொடுக்க மாட்டார்கள், விலையும் உயரும் என்றால் எப்படி? இந்தச் சூழலை சமாளிப்பது மிகவும் கடினம். பட மூலாதாரம்,GETTY IMAGES சராசரியான மாத சம்பளம் வாங்கக்கூடிய ஒருவருக்கு, விலைவாசி இப்படிக் கடுமையாக அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்ள என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? மிகவும் கடினம். சில ஆண்டுகளுக்கு முன்பாக 400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இப்போது 1000 ரூபாய்க்கு விற்கிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றுபவர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போதுதான் மீண்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் வாங்கி சமாளித்திருப்பார்கள். அதற்கான வட்டியைக் கட்ட வேண்டும். நான் பணம் சேமிக்க வேண்டும் என்று சொல்வதற்காக என்னைப் பற்றி நிறைய மீம்ஸ்களைப் போடுகிறார்கள். நான் சொன்னதுபோல சேமித்து வைத்திருந்தால் இன்றைக்கு சிரமப்பட்டிருக்க மாட்டார்கள். மாத வருமானம் 40,000 ரூபாய் இல்லாவிட்டால் சென்னை போன்ற இடங்களில் வாழ்வதற்கே கஷ்டப்பட வேண்டும் என்று சொன்னதைக் கேலி செய்கிறார்கள். நான் நல்ல எண்ணத்தில்தான் சொன்னேன். ஒரு நல்ல இடத்தில் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் வேண்டும். இல்லாவிட்டால் ஊருக்கு வெளியில்தான் செல்ல வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மாதம் 4-5 ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். எரிவாயு சிலிண்டர் ஆயிரம் ரூபாய். மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. ஆகவே 40,000 ரூபாய் இல்லாவிட்டால், கணவன் - மனைவி, இரண்டு குழந்தைகள் சென்னையில் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம். ரேஷனில் பொருள் வாங்கினால்கூட இருப்பது கடினம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்படியானால், சாதாரணமான, கீழ் மத்தியதர வர்க்கத்தினருக்கு உங்களுடைய ஆலோசனை என்ன? அடுத்த ஒரு வருடம் மிகக் கடினமாகத்தான் இருக்கப் போகிறது. ரஷ்ய - யுக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது. பெட்ரோல் - டீசல் விலை குறைந்தாலும் அதன் பலன் நமக்குக் கிடைக்காது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, கச்சா எண்ணையின் விலை குளிர்காலம் நெருங்கும்போது இன்னும் உயரப்போகிறது. அரசு விதிக்கும் வரிகளைப் பொறுத்தவரை இருவகையான வரிகள் இருக்கின்றன. ஒன்று நேரடி வரி. மற்றொன்று மறைமுக வரி. 2017ல் இருந்து நேரடி வரிகள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அப்படியானால், வசதியாக இருப்பவர்கள் வரி செலுத்தவேண்டாம். சாமானியன் வரி செலுத்த வேண்டும். இதை மாற்றி வசதியாக இருப்பவர்கள் வரி அதிகம் செலுத்தும் வகையில் நேரடி வரி விதிப்பை அதிகரித்தால், இந்தப் பிரச்னை ஓரளவுக்குத் தீரும். 35,000 - 40,000 வரை சம்பளம் வாங்கக்கூடியவர்கள், எந்தெந்த விஷயங்களைச் செய்வதன் மூலம் இந்த விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும்? முதலில் சமூக ரீதியில் தங்களை மற்றவர்களுடன் ஒத்துப்போக பழகிக்கொள்ள வேண்டும். கூட்டுக் குடும்பமாக வாழப் பழகலாம். ஒரு சிறு குடும்பத்தை இந்தச் செலவைக் குறையுங்கள், அந்தச் செலவைக் குறையுங்கள் என்று சொல்வதைவிட, ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு பேர் சம்பாதிப்பது செலவுகளைச் சமாளிக்க உதவும். பெற்றோரோ, குழந்தைகளோ தனியாக வசித்தால் சேர்ந்து வாழலாம். இதனால் இரட்டைச் செலவுகளைக் குறைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES செலவுகளைக் குறைக்க வேறு என்ன யோசனைகள் இருக்கின்றன? நீங்கள் ஏற்கனவே தங்கத்தைச் சேர்த்து வைத்திருந்தால், அந்தத் தங்கத்தை அடகு வைத்து பணம் திரட்டி, வாடகை வீட்டிலிருந்து வேறு வீட்டை ஒத்திக்கு எடுத்துச் செல்லலாம். ஏனென்றால், வாடகை வீட்டில் குடியிருப்போரின் பெரிய செலவு வாடகையாகத்தான் இருக்கும். அதனை இந்த முறையில் குறைக்கலாம். பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு - 'அசையா சொத்துகள் ஏதும் இல்லை' சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கான சேமிப்பு - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்? சுயதொழில் செய்வோரின் வருவாய் இந்த காலகட்டத்தில் உயர்ந்திருக்குமா? அவர்களால் சமாளிக்க முடியுமா? அவர்கள் வருவாய் எப்படி உயர்ந்திருக்கும்? சிறு, குறு தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளாக எந்த ஆர்டரும் இல்லாமல் இருந்தார்களே.. கடைகள் எல்லாம் மூடிதானே இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி, கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைத்தது. மற்றவர்களுக்கு? கடன்தான் ஏறியிருக்கும். அதற்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும். வட்டி வேறு மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ப. சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அதில், இந்தியாவில் நடுத்தர வருவாய் என்பது 15 ஆயிரம் ரூபாய். மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் மேலே உள்ள பத்து சதவீதம் பேர். அதாவது, மாதம் வெறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலே, இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் 10 சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். தமிழ்நாட்டில் இந்தத் தொகை 40 ஆயிரமாக இருக்கலாம். மாதம் 1,20,000 சம்பாதித்தால் அதிகம் சம்பாதிக்கும் 3 சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். மூன்று லட்சத்திற்கு மேல் வாங்கினால், அதிகம் சம்பாதிக்கும் ஒரு சதவீதம் பேருக்குள் வந்துவிடுவீர்கள். அப்படியானால், பணக்காரர்கள் என்பவர்கள், இந்த ஒரு சதவீதத்திலும் ஒரு சதவீதம் இருப்பார்கள். ஆகவே, 97 சதவீதத்திற்கு குறைவான மக்கள் தொகையினர் தங்கள் வாழ்வை நடத்தப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது அரசாங்கத்திற்குப் புரிய வேண்டும். ஆனால், அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் மேலே உள்ள ஒரு சதவீதம் பேருக்குத்தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிப்பதில் ஒரு வசதி இருக்கிறது. இங்கு வரும் எல்லா அரசுகளுமே அரிசியை இலவசமாக அளிக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அளிப்பதால், தமிழ்நாட்டில் பசி பட்டினி இருக்காது என்பது என் நம்பிக்கை. இந்தியா முழுக்க இது போல செய்ய வேண்டும். விரைவில் காலை உணவும் அளிக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கிறார். இதனால், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடோடு இருப்பது தடுக்கப்படும். ஆகவே, இங்கு அரசு முடிந்ததைச் செய்கிறது. இதைவிடக் கூடுதலாகச் செய்ய வேண்டுமானால், அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். நேரடி வரியை உயர்த்தி, மறைமுக வரியை குறைக்க வேண்டும். கர்நாடகம் போன்ற மாநிலங்களில் விலைவாசியைச் சமாளிக்க முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரச்னை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், அந்தப் பிரச்னை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். விலைவாசியை கணிப்பதில் இரண்டு புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒன்று மொத்த விலை குறியீட்டு எண். மற்றொன்று சில்லரை விலை குறியீட்டு எண். ஆனால், மொத்த விலை குறியீட்டைவிட சில்லரை விலை குறியீடு குறைவாக இருப்பதாக அரசு சொல்கிறது. இது நம்புவதைப் போல இருக்கிறதா? மொத்த விலை 17 சதவீதம் அதிகரித்திருக்கிறது; ஆனால், சில்லரை விலை 7 சதவீதம்தான் அதிகரித்திருக்கிறது என்றால், எப்படி நம்ப முடியும்? ஆனால், இந்த 7 சதவீத உயர்வே மக்களால் தாங்க முடியாத ஒன்று. இதில் நாம் அதிகம் பேசாத ஒன்று, இந்த அரசின் நடவடிக்கைகள் மக்களின் சேமிக்கும் பழக்கத்தையே நீக்கி வருகின்றன. இப்போது வைப்பு நிதிக்கு ஐந்தரை சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பாக வெறும் ஐந்து சதவீத வட்டிதான் தரப்பட்டது. அந்த வட்டி வருவாயிலும் 10 சதவீதம் வரி பிடிக்கப்படும். சரியாகப் பார்த்தால் நான்கரை சதவீதம்தான் கிடைக்கும். என் பணம் கரையும் விகிதம் ஏழரை சதவீதம். ஆனால், வங்கிகளில் அளிப்பது நான்கரை சதவீதம். இதனால்தான் கூடுதல் வட்டி கிடைக்குமென, தவறான இடங்களில் முதலீடு செய்து மக்கள் பணத்தை இழக்கிறார்கள். அடுத்த ஓராண்டு கடினமாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் தற்போது விழித்துக்கொண்டுவிட்டார்கள். வட்டி விகிதம் இரண்டு முறை முக்கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, மேலும் முக்கால் சதவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இது செப்டம்பரில் நடக்கலாம். இந்திய அரசும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். வட இந்தியாவில் பருவ மழை பொய்த்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் கோதுமை விளைச்சலும் அரிசி விளைச்சலும் குறையும். அரிசி விளைச்சல் 13 சதவீதம் குறைந்திருக்கிறது. அதனால், அரிசியின் மொத்த விலை கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோதுமை விளையும் உயர்ந்து வருகிறது. பருவ மழைக்காலத்தில் பாதியைக் கடந்துவிட்டோம். இதே போல நிலைமை தொடர்ந்தால், அரசி, கோதுமை விலை மேலும் உயரும். https://www.bbc.com/tamil/india-62553656
  5. அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட் இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 15 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND "சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட். அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் தனது அமெரிக்க கூட்டாளி படைக்கு எதிரான நிலையை எடுத்தார். அதுநாள்வரை தான் இயக்கி வந்த ஹெலிகாப்டரை தனது முன்னாள் எதிரிகளான தாலிபன்களிடம் ஒப்படைக்க தனது சொந்த கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்தார். "ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பாதுகாப்பதே எனது நோக்கம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். இது நடந்த ஒரு வருடம் கழித்து, அவர் தனது முடிவு குறித்து விளக்கினார். பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND படக்குறிப்பு, அமெரிக்காவால் பயிற்சி பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராக மொமண்ட் இருந்தார். மொமண்ட் 2009இல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். வெஸ்ட் பாயின்ட் எனப்படும் அமெரிக்க ராணுவ பயிற்சி மையத்தில் நான்கு ஆண்டுகள் நடந்த கடுமையான பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்கா சென்றார். ஆரம்பத்தில், அவர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் ரஷ்யா உருவாக்கிய எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இயக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஒரு இடைவெளி கிடைத்தது. "2018ஆம் ஆண்டின் இறுதியில், பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு சமீபத்திய விமானப்படை தொழில்நுட்பத்தைப் படித்த இளம் விமானிகளின் ஒரு சிறிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து நான் பிளாக் ஹாக்ஸில் பறக்கத் தொடங்கினேன்," என்கிறார் மொமண்ட். பிளாக் ஹாக்ஸ் ஹெலிகாப்டர், சரக்கு மற்றும் படையினர் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. படை விலக்கலை அறிவித்த பைடன் 2021 ஆம் ஆண்டில், செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா மீதான தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நிறைவிற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் தாயகத்துக்கு அழைத்துக் கொள்ளும் தனது விருப்பத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அப்போது மொமணம்ட், மசார்-இ-ஷரீப்பில் இருந்தார். அதே ஆண்டு ஜூலையில் படையினர் ஆப்கனில் இருந்து வெளியேறும் தேதி ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டது. தாலிபன்கள் நாட்டை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் மீண்டும் வருவதை முழுமையாக தடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பல பில்லியன் டாலர்களை ஆப்கானிய ராணுவத்தின் பயிற்சிக்காகவும் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவும் செலவிட்டன. பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND. படக்குறிப்பு, எப்போதும் சரக்கு ஹெலிகளை இயக்கியதாகவும் போர் விமானங்களை இயக்கியதில்லை என்றும் கூறுகிறார் மொமண்ட். அந்த நம்பிக்கை ஒரு கனவாக மாறியது. ஆப்கானிஸ்தான் ராணுவம் அசுர வேகத்தில் தாலிபன்களிடம் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. தாலிபன் போராளிகள் ஜூலை மாதம் ஆப்கனின் பெரும்பாலான கிராமப்புறங்களைச் சூழ்ந்தனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் மாகாண தலைநகரம் தாலிபன் வசம் வந்தது. பெரும்பாலான மாகாணங்களைப் பாதுகாத்த பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் எவ்வித தடையின்றி காபூலை கைப்பற்றினர். இஸ்லாமியவாத போராளிகள் குழு, செப்டம்பர் 7ஆம் தேதி தலைநகரின் வடக்கே பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த எதிர்ப்பின் கடைசி பகுதிகளை முறியடித்தது. வெளியேற உத்தரவு அந்த சமயத்தில் நாடு குழப்பத்தில் மூழ்கிய நிலையில், மசார்-இ-ஷரீப்பில் மொமண்டின் ஆறு மாத கால பணி ஜூலையில் முடிவடைந்தது. அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி காபூல் விமானப்படை தளத்திற்குத் திரும்பினார். உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்வதாக வதந்திகள் பரவின. இதனால் நிலைமை பதற்றமாக இருந்தது. தாலிபன்கள் காபூலின் நுழைவாயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அங்குள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அது எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகமாக இருந்தது. "எங்கள் விமானப் படை தளபதி அனைத்து விமானிகளையும் அவரவர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் நாட்டை விட்டு வெளியே பறக்க உத்தரவிட்டார். உஸ்பெகிஸ்தானுக்குச் செல்லும்படி அவர் கூறினார்" என்று மொமண்ட் பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND. படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் விமானப்படையில் மொமண்ட் பல்வேறு ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். அந்த உத்தரவால் மொமண்ட் கோபமடைந்தார். அதற்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று முடிவு செய்தார். "என் நாட்டுக்கு துரோகம் செய்யும்படி என் தளபதி என்னை வற்புறுத்தினார், நான் ஏன் அத்தகைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்? தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பது மிக மோசமான குற்றம். அதனால்தான் நான் அந்த உத்தரவுக்கு கீழ்படியவில்லை," என்று மொமண்ட் விளக்குகிறார். அவர் தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். குறிப்பாக அவரது அப்பா வலிமையானவர். "நான் தாய்நாட்டை விட்டு வெளியேறினால் என்னை மன்னிக்க மாட்டேன் என்று எனது அப்பா எச்சரித்தார்." "இந்த ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமானது. அது நாட்டை விட்டு போகக்கூடாது," என்று தன் அப்பா கூறியதாக மொமண்ட் தெரிவித்தார். படைக்குழுவை ஏமாற்றிய செயல் அந்த நேரத்தில் மொமண்டின் மாகாணம் ஏற்கெனவே தலிபான் வசம் வந்திருந்தது. அவரது அப்பா உள்ளூர் ஆளுநரிடம் பேசினார். ஹெலிகாப்டரை அங்கு பறக்க அனுமதித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதியளித்தார். பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் ஏழு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே செயல்படுவதாக மொமண்ட் கூறுகிறார் மொமண்ட் ஒரு தப்பிக்கும் திட்டத்தை தயாரித்தார். ஆனால் அதற்கு முதலில் அவர் ஹெலிகாப்டர் பயணம் செய்யும் பாதையில் ஏற்படும் ஒரு பெரிய தடங்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. "ஒவ்வொரு பிளாக் ஹாக்கிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். எனது திட்டத்தால் அவர்களை நம்ப வைக்க முடியாது என்று எனக்குத் தெரியும்." "அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினேன். அவர்கள் என் உயிருக்கு ஆபத்தாகவும் ஹெலிகாப்டரின் அழிவுக்கு கூட காரணமாக இருப்பார்கள் என கருதினேன்," என்று மொமண்ட் கூறினார். எனவே உடன் பணியாற்றிய படையினரை ஏமாற்ற மொமண்ட் ஒரு தந்திரம் செய்தார். "ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளது. என்னால் புறப்பட முடியவில்லை என்று விமானப்படை தளபதியிடம் கூறி விட்டேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதைக் கேட்ட மூன்று படையினரும் உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு ஹெலிகாப்டரில் ஏறினர்." பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND. படக்குறிப்பு, தனது கிராமத்திற்கு பறந்த பிறகு ஹெலிகாப்டரை தலிபான்களிடம் மொமண்ட் ஒப்படைத்தார். குனாருக்கு தப்பிய நிமிடங்கள் மற்ற அனைத்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்ட பிறகு, 30 நிமிட பயணத்தில் குனாருக்கு தனியாக தனது ஹெலிகாப்டரை இயக்கினார் மொமண்ட். "அந்த நேரத்தில் அமெரிக்கர்கள் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால், நான் உஸ்பெகிஸ்தானுக்குப் புறப்படுகிறேன் என்று ரேடியோவில் சொன்னேன். விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு நான் எனது ரேடார் சாதனத்தை அணைத்து விட்டு நேராக குனாருக்குச் சென்றேன்." "நான் எனது வீட்டுக்கு அருகிலுள்ள எனது கிராமத்தில் தரையிறங்கினேன். தாலிபன்களிடமிருந்து உத்தரவாதம் கிடைத்ததும், கடந்த காலங்களில் ஹெலிகாப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப தரையிறங்கும் இடத்திற்கு கொண்டு சென்றேன்," என்கிறார் மொமண்ட் எனது முடிவை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் முழுமையாக ஆதரித்தனர் என்கிறார் மொமண்ட். மொமண்ட் தனது செயல்களுக்காக வருத்தப்படவில்லை என்று கூறுகிறார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பிய போதும் தாய்நாட்டிலேயே தொடர்ந்து தங்க முடிவு செய்ததாக கூறினார். பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND படக்குறிப்பு, தனது தளபதியின் கட்டளைகளை மீறியதற்காக வருத்தப்படவில்லை என்கிறார் மொமண்ட் "அமெரிக்க ஆலோசகர்கள் எனக்கு மூன்று முறை தகவல் அனுப்பினர். ஹெலிகாப்டரை கொண்டு வர முடியாவிட்டாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சாலை வழியாக வந்து வெளியேறுங்கள் என்று கூறினர். ஆனால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை," என்கிறார் மொமண்ட் ஆப்கானிஸ்தான் விமானப்படையின் பலம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உட்பட 167 விமானங்களை ஆப்கானிஸ்தான் விமானப்படை இயக்கியது என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிகார்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் சில மொமண்டின் சக படையினரால் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டன. ஆகஸ்ட் 16ஆம் தேதி உஸ்பெகிஸ்தானின் டெர்மேஸ் விமான நிலையத்தின் செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வின்படி எம்ஐ-17, எம்ஐ-25, பிளாக் ஹாக்ஸ் மற்றும் பல ஏ-29 இலகு ரக தாக்குதல் ரக விமானங்கள் C-208 விமானங்கள் உட்பட இரண்டு டஜன் ஹெலிகாப்டர்கள் உஸ்பெக்கில் இருந்தன. சேதப்படுத்திய அமெரிக்க படையினர் காபூலில் விடப்பட்ட பெரும்பாலான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயங்க முடியாத அளவுக்கு அமெரிக்க துருப்புக்கள் சேதப்படுத்திச் சென்றனர். இன்று ஆப்கானிஸ்தானில் எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. "எங்களிடம் இப்போது பயன்படுத்தக்கூடிய ஏழு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. குறைந்த வளங்களைக் கொண்ட ஆப்கானிய பொறியாளர்களால் அவற்றைப் பழுதுபார்க்க முடிந்தது. படிப்படியாக மற்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவோம்," என்கிறார் மொமண்ட். நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் தனது சகாக்களைக் குற்றம் சாட்டினார். "உஸ்பெகிஸ்தானுக்கு தங்கள் ஹெலிகாப்டருடன் பறந்து சென்றவர்கள் உண்மையில் தாய்நாட்டுக்கு துரோகம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் எங்கள் நாட்டிற்கு சொந்தமானவை. அவை மிகவும் விலை உயர்ந்த ஹெலிகாப்டர்கள். அந்த ஹெலிகாப்டர்களை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் மொமண்ட். தொடர்ந்து சேவை செய்வேன் பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND படக்குறிப்பு, சாகும் நாள் வரை தனது நாட்டுக்கு சேவை செய்வேன் என்று மொமண்ட் கூறுகிறார் ஹெலிகாப்டர் பைலட்டுக்கு பயிற்சி அளிக்க 6 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அமெரிக்காவில் பயிற்சியின் போது மொமண்டிடம் கூறப்பட்டது. எனவே அந்த வாய்ப்பை மதிக்கிறார் அவர். அமெரிக்காவில் தனது முதல் ஹெலிகாப்டர் இயக்கத்தை இன்னும் அவர் நினைவுகூர்கிறார். "அந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு நாள் வரும் என்று என்னால் நம்ப முடியவில்லை," என்கிறார் அவர். நான்கு வருட பயிற்சியின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்காமல் அமெரிக்காவிலேயே மொமண்ட் தங்கியிருந்தார். தாலிபன்களை எதிர்த்துப் போராட பயிற்சி பெற்ற மொமண்ட், இப்போது அதே தாலிபன்களால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்திற்காக பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்குகிறார். இதில் அவர் எந்த முரண்பாட்டையும் பார்க்கவில்லை. "அரசாங்கங்கள் எப்போதும் மாறுகின்றன. எங்களைப் போன்றவர்கள் தேசத்தை மதிப்பவர்கள். தேசத்திற்கு சேவை செய்கிறோம். ராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது. நாடு என்னைப் போன்றவர்களுக்காக நிறைய முதலீடு செய்துள்ளது," என்கிறார் அவர். தாலிபன்கள் ஒரு வருடமாக நாட்டை ஆண்டாலும், எந்த நாடும் அவர்களை முறையான ஆட்சியாளர்களாக அங்கீகரிக்கவில்லை. இருந்தபோதிலும், மொமண்ட் உறுதியாக இருக்கிறார். "என் வாழ்வின் கடைசி நாள் வரை எனது தேசத்திற்கு சேவை செய்வதற்காக எனது துறையில் தொடர்ந்து இருப்பேன்," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/global-62556011
  6. ஆசிரியர் தாக்கியதால் தலித் சிறுவன் உயிரிழப்பா? ராஜஸ்தானில் என்ன நடந்தது? மோஹர் சிங் மீனா ஜெய்பூர், பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் ஒன்பது வயது தலித் சிறுவன் இறந்ததையடுத்து, சடலத்துடன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த மாணவரின் உறவினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் யோசனையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான முன்மொழிவை அனுப்பவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குழந்தையின் உடல் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததால் தலித் சிறுவன் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி ஆசிரியர் அடித்ததால் காயமுற்ற சிறுவனுக்கு, வெவ்வேறு மருத்துவமனைகளில் 23 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆமதாபாதில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆசிரியர் அவனை அடித்தார் என்ற விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உள்ளூர் காவல்துறை கூறுகிறது. மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி அம்பேத்கர் பூமியில் அவரது பெயர் தொடர்பாக நடந்த பயங்கர சாதி கலவரம் ஜெயஸ்ரீ கொலை: பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஏற்பட காரணமான வழக்கு பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC என்ன நடந்தது? ஜலோர் சட்டப்பேரவை தொகுதியில் வரும் சைலா தாலுகாவின் சுரானா கிராமத்தில் சரஸ்வதி வித்யாலயா உள்ளது. ஒன்பது வயது தலித் மாணவர் இந்தர் குமார் மேக்வால் இந்த தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பில், படித்து வந்தார். ஜூலை 20ஆம் தேதி, பள்ளியின் இயக்குநரும் ஆசிரியருமான சைல் சிங் மூன்றாம் வகுப்பு மாணவர் இந்தர் குமார் மேக்வாலை அடித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 40 வயதான சைல்சிங் அடித்ததில் 9 வயது இந்தர் குமார் மேக்வாலுக்கு, காது மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது. "இந்திரகுமார் மேக்வால், வழக்கம்போல் ஜூலை 20-ம் தேதி பள்ளிக்கு சென்றார். சுமார் 11 மணியளவில் தாகம் எடுத்ததால் பானையில் இருந்து தண்ணீர் குடித்தார். மேல்சாதி ஆசிரியர் சைல் சிங்குக்கு தனியாக இந்தப் பானை வைக்கப்பட்டுள்ளது என்று சிறுவனுக்குத்தெரியாது. தாழ்ந்த சாதியை சேர்ந்த நீ எப்படி என் பானையில் இருந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்று கேட்டு சைல் சிங் சிறுவனை அடித்துள்ளார். இதன் காரணமாக இந்தர் குமாரின் வலது காது மற்றும் கண்ணில் காயங்கள் ஏற்பட்டன," என்று சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த எழுத்துபூர்வ புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, குடும்பத்தினர் இந்தர் குமாரை 23 நாட்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இறுதியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆமதாபாதுக்கு மாணவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சேர்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி இறந்தார். அவரது குடும்பத்தில் மூன்று உடன்பிறந்த சகோதரர்களில் இந்திரகுமார் இளையவர். இந்த நிலையில், குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இந்த மரணத்திற்கு சரஸ்வதி வித்யாலயா ஆசிரியர் சைல்சிங்தான் காரணம் என்று குற்றம்சாட்டத் தொடங்கின. அவரது குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்கு தண்டனையா? "தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் சைல் சிங் தன்னை அடித்ததாக சிறுவன் கூறினான்," என்று தொலைபேசி மூலம் பிபிசியிடம் பேசிய இந்தர் குமாரின் மாமா மீட்டாலால் மேக்வால் கூறினார். அதே நேரத்தில், ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "பானையில் இருந்து தண்ணீர் குடித்த விஷயம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நானே சம்பவ இடத்திற்கு (பள்ளி) சென்றேன். வகுப்பறைக்கு வெளியே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் குடிநீர் குழாய்கள் உள்ளன. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகளிடம் நான் பேசினேன். ஆனால் பானை இல்லை என்று குழந்தைகள் சொன்னார்கள். விஷயம் இப்போது விசாரணையின் கீழ் உள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம்."என்று தெரிவித்தார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். "குழந்தை வகுப்பில் குறும்பு செய்ததால் அவரை அறைந்ததாக இதுவரை நடந்த விசாரணையில் சைல் சிங் கூறியுள்ளார்.ஆனால் தண்ணீர் தொடர்பான விஷயத்தை ஆசிரியர் மறுத்துள்ளார்,"என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலா மேலும் கூறினார். மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது? சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு வழக்குகள் – தீர்வு என்ன? கன்னத்தில் அறைந்ததால் குழந்தையின் நிலை எப்படி இவ்வளவு மோசமாகும் என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலாவிடம் வினவப்பட்டபோது, "குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார். இருப்பினும், உள்ளூர் பத்திரிகையாளர் ஓம் பிரகாஷ், மாணவர் பானையில் இருந்து தண்ணீரைக் குடித்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார். இந்தர் குமாரின் தந்தைக்கும் ஆசிரியர் சைல் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப்பும் வெளிவந்துள்ளது. அதில் அவர் சிகிச்சைக்கு உதவுவது குறித்தும் பேசியிருக்கிறார். எனினும், இந்த உரையாடலில் இருந்து தாக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா. வீடியோவில் கவலைக்கிடமாக தெரியும் மாணவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலையில் குழந்தையின் இரண்டு வீடியோக்கள் வெளிவந்தன. குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. குடும்பத்தினர் மாணவரிடம் பேச முயன்றும் அவரால் எதுவும் கூற முடியவில்லை. மாணவர் கண்களை மூடிக்கொண்டு வலியில் புலம்புகிறார். மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஆம்புலன்சில் இருந்த குடும்பத்தினர் இந்த வீடியோ எடுத்துள்ளனர். மாணவரின் மூக்கில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. வலது கண் வீங்கியிருக்கிறது. குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் பேச முயல்கிறார்கள், ஆனால் ஒன்பது வயது மாணவர் வலியால் துடிக்கிறார், அவரால் எதுவும் பேச முடியவில்லை. மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மாணவரிடம் அவரை அடித்தது யார் என்று கேட்கிறார்கள். இந்த வீடியோவிலும் மாணவர் கண்களை மூடியபடி படுத்துள்ளார். படுக்கையில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் அடித்தது யார், அறைந்தது யார் என்று குடும்பத்தினர் கேட்கின்றனர். மாணவர் அதற்கு பதில் சொல்லவில்லை. பலரது பெயர்களை சொல்லி அடித்தது யார் என்று கேட்கின்றனர். சைல் சிங் மாஸ்டர் அறைந்தாரா, யார் அடித்தது என்று உறவினர்கள் கேட்க, மாணவன் லேசாக கழுத்தை மட்டும் அசைக்கிறான். எங்கே அடித்தார் என்று உறவினர்கள் கேட்டபோது, மாணவன் கண்களை மூடிய நிலையிலேயே தன் விரல்களால் காதின் பின்புறத்தைக் காட்டுகிறான். மாணவர் இந்தர் குமார் மேக்வாலின் தாய்வழி மாமா மீட்டாலால் மேக்வால், குழந்தையின் காதில் வலி இருப்பதாக பிபிசியிடம் கூறினார். சிகிச்சைக்காக சிறுவன் பகோடா, பீன்மால், டீசா, மெஹ்சானா, உதய்பூர் மற்றும் இறுதியாக அகமதாபாத்திற்கும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 13 அன்று சிறுவன் காலமானான். பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியர் சைல்சிங் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கொலை வழக்கு ஜூலை 20 ஆம் தேதி சம்பவம் நடந்து 23 நாட்களுக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில் சைலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர் சைல் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்த தகவலை அளித்த ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஹர்ஷ் வர்தன் அகர்வாலா, "குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகக் கடுமையான பிரிவுகள் விதிக்கப்பட்டுள்ளன. IPC மற்றும் SC ST சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் FIR பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார். "இந்த சம்பவம் ஜூலை 20-ம் தேதி நடந்துள்ளது. குழந்தை ஆகஸ்ட் 13-ம் தேதி இறந்தது. இந்த விஷயம் ஆகஸ்ட் 11-ம் தேதி எங்களுக்குத் தெரிந்தது. குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவில்லை. சாயலா எஸ்.ஹெச்.ஓ. தான் புகார் அளிப்பதாக அகமதாபாத் மருத்துவமனையில் இருந்த சிறுவனின் தந்தையிடம் கூறினார். அப்போது தானே சென்று புகார் செய்வதாக சிறுவனின் தந்தை சொன்னார்." என்று அவர் மேலும் தெரிவித்தார். மாணவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 8 மணி முதல் இணையதள சேவையை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மனு அளிக்கப்படும். இந்த சம்பவத்திற்கு முதல்வர் அஷோக் கெய்லாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இதை' கேஸ் ஆஃபீசர் திட்டத்தின்' கீழ் எடுத்துக்கொள்வதற்கு முதல்வர் கெலாட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வேகமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை விரைவில் தண்டிக்க இது வகை செய்யும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். "ராஜஸ்தானில் இதுபோன்ற வேதனையளிக்கும் சாதிவெறி சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார். "ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, குறிப்பாக தலித்துகள், பழங்குடியினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கத் தவறிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார். ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராஜஸ்தானில் தலித் வன்கொடுமை சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகின்றன. அரசும், முதல்வரும் பலவீனமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன," என்று கூறியுள்ளார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ், இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். "இது மனிதாபிமானத்திற்கு ஒரு களங்கம். ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்,"என்று அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-62546215
  7. சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய டோனியர் விமானம் 19 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன், அதில் முதலாவது விமானமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் கையளிக்கப்பட்ட இந்த விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு படைகளில் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த டோனியர் ரக விமானத்தின் மூலம், இலத்திரனியல் போர் நடவடிக்கைகள், சமுத்திர கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கான பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. சீன கப்பல் வருகைக்கு முன்பே வந்த விமானம் பட மூலாதாரம்,PMD குறுகிய தூரத்திலேயே ஏற்ற முடியும் என்பதுடன், அவசரமாக தரையிறக்கக்கூடிய வசதிகளும் இந்த விமானத்தில் காணப்படுகின்றன. புதுடில்லியில் 2018ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விமானத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முதலில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியா அதனை நிராகரித்திருந்ததுடன், சீன கப்பல் வருகைத் தருவதற்கு ஒரு நாள் எஞ்சியிருக்கக்கூடிய நிலையில், சமுத்திர கண்காணிப்பு தொடர்பிலான விசேட விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PMD இந்த விமானம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து வெளியிட்டுள்ளது. ''இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்." என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ''பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்" என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். டோனியர் விமானத்தின் வசதிகள் என்ன? இரண்டு டர்போபாப் எஞ்சின்களை இரண்டு இறக்கைகளிலும் கொண்டுள்ளது டோனியர் ஆர்288 ரக விமானம். குறைந்த எரிபொருள் பயன்பாடு, குறுகிய தூரத்திலேயே மேலெழும்பும் வசதி, தரையிறங்கும் திறனை இது பெற்றுள்ளது. பகுதியளவு தயாரான ஓடுபாதையில் கூட இந்த விமானத்தால் தரையிறங்கி மேலெழும்ப முடியும். இந்த விமானத்தில் இரு விமானிகள் பயணம் செய்யலாம். அதே சமயம், அதன் கட்டுப்பாட்டை தனியாகவும் ஒருவரால் மேற்கொள்ள முடியும். எனினும், பொதுவாக இதை இருவர் இயக்குவதே வழக்கில் உள்ளது. இதன் மேலெழும்பும் எடை 6,400 கிலோவாகும், அதேபோல தரையிறங்கும்போது 5,900 கிலோ எடையாக இருக்கும். இரு பக்க இறக்கைகளிலும் 2 நான்கு முனை பிளேடுகள் அதன் ப்ரொப்பெல்லர்களில் உள்ளன. ஒவ்வொரு இறக்கையிலும் மூன்று ஒருங்கிணைந்த எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்த எரிபொருள் தாங்கு திறன் 2,850 லிட்டர்கள் ஆகும். இரண்டு இறக்கைகளில் உள்ள எரிபொருள் கலன்களும் இணைக்கும் வகையில் இதன் வடிவம் உள்ளது. இந்த விமானத்தின் மொத்த நீளம் 54 அடி 4 அங்குலம். உயரம் 15 அடி 11 அங்குலம். இதன் தரையிறங்கும் கியர்கள், ஹைட்ராலிக் முறையிலானது. 28 வோல்ட் மின்சாரமும் 300 ஆம்புகள் டிசி மின்சாரமும் இதன் இயக்கத்துக்கு தேவைப்படும். அதிகபட்ச வெப்பநிலை +55 டிகிரியிலும் குறைந்தபட்சம் -40 டிகிரியிலும் இந்த விமானம் எந்த பிரச்னையுமின்றி இயங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்திய கடற்படை டோனியர் (INDO - 228), இலகு ரக விமானம் ஆகும். இது 1981ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. ஜெர்மனியின் டோனியர் ஜிஎம்பிஹெச் நிறுவனம் தான் இந்த ரக விமானத்தை முதலில் தயாரித்தது. அந்த நிறுவனம் 1981-1998 வரையிலான காலகட்டத்தில் 245 விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கிடையே, 1993இல் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், டோனியர் ஜிஎம்பிஹெச் உரிமத்தின் கீழ், டோனியர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியது. https://www.bbc.com/tamil/sri-lanka-62553540
  8. சென்னை வங்கி நகை கொள்ளையில் முக்கிய சந்தேக நபர் கைது - 18 கிலோ நகை மீட்பு 14 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் கிளையில் சனிக்கிழமை 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபரான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டதால், 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள முருகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 15 நபர்களிடம் நான்கு தனிப்படையினர் விசாரணை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை, சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியரான முருகன், தன்னுடன் இரு நபர்களை அழைத்து வந்து வங்கி மேலாளர் மற்றும் பிற அலுவலர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர். நகைகளை களவாட முருகன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டதாகவும் இதற்காக வங்கியின் பாதுகாவலருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அவர் மயங்கியதும் பிற ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் வங்கிக் கிளையில் தங்களுடைய நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அந்த வங்கியை முற்றுகையிட்டு தங்களுடைய நகையின் நிலையை கேட்டறிய வந்திருந்தனர். வங்கி நிர்வாகம் உறுதி இந்த நிலையில், நகைகடன் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவிகாட்சிகள் கண்டறியப்பட்டுள்ளதால், நகை மீட்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெடரல் வங்கியில் பணிபுரிந்த ஊழியரான முருகன் என்பவர் தன்னுடன் இரு நபர்களை அழைத்துவந்து வங்கி மேலாளர், பிற அலுவலர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நகைகளை களவாட திட்டமிட்ட முருகன் மற்றும் நண்பர்கள், வங்கியின் பாதுகாவலருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துவிட்டு, அவர் மயங்கியதும், பிற ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, அவர்களை கட்டிப்போட்டு நகைகளை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, நகை ருட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் முருகன் பற்றிய முழுவிவரங்களை சேகரித்துள்ளதாக கூறினார். "நைட் கிளப்பில் ஆபாச நடனமாட வற்புறுத்தினார்கள்," - துபாய் வேலைக்கு சென்ற பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம் விவாகரத்து ஆனதை டிக்டாக்கில் வெளியிட்ட பெண்ணை சுட்டுக் கொன்ற கணவன் 'நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். நகைகளை அடமானத்தில் வைத்த வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். முருகனின் உறவினரான பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகிறோம். அத்துடன், கொள்ளை அடித்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற இடங்களில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்து, அவர்களை கைது செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பட மூலாதாரம்,ANI அதனால், கொள்ளைபோன நகைகள் மீட்கப்படும், கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம்,''என்றார்.நகை கொள்ளை தொடர்பாக இதுவரை 15 நபர்கள் மீது விசாரணை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசாக தரப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். கொள்ளை போன நகைக்கு வங்கியே பொறுப்பு கொள்ளை போன நகைகளின் பாதுகாப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், ''வங்கியில் வைக்கப்படும் நகைகளுக்கு வங்கிதான் பொறுப்பு. வங்கியின் அலட்சியத்தால் வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கிகள் பணம் செலுத்தவேண்டும். இந்தத் தொகை வங்கி லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்குக்கு சமமாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதோடு, வங்கியில் சிசிடிவி காட்சிகள் 180 நாட்களுக்கு வைத்திருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது,''என்கிறார். மேலும் இதுபோன்ற நகை கொள்ளையால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்காக, வங்கிகள் பெரும்பாலும் நகைகளை மீட்பது அல்லது அதற்கான பணத்தை பெற்று தருவதில் முழுகவனம் செலுத்துவார்கள் என்கிறார். https://www.bbc.com/tamil/india-62542459
  9. இலங்கையின் கடல் கண்காணிப்புக்கு அவசியமானது போல. சிலவேளை பழைய உரிமையாளருக்கும் ஏதும் தகவல்களை வழங்குமோ தெரியல?
  10. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 14 ஆகஸ்ட் 2022 "குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஏரிகளும் கால்வாய்களின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக மற்றொரு ஏரிக்குத் தண்ணீர் போகும். அந்த ஏரியும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் செல்லும். அதைத் தொடர்ந்து ஆறுகள், குளங்கள் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டிருந்தன. அந்த வகையில் கீழ் பாலாறு வடிநில கோட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அடையாறு ஆறுகளில் மட்டும் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி? ஜான்சன் & ஜான்சன் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவிப்பு - முழு விவரம் அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் அடையாறில் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 381 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு 2,122 ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 528 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 14,842 ஆக உள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 16 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 4,500 ஆக உள்ளது. அடையாறில் மட்டும் 34 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அடையாறு நதி கடந்து செல்லும் நீர்வழிப் பாதையில் மட்டும் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. நான்கு கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு நதி, செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்னை மாவட்டத்தில், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பட்டினப்பாக்கம் வரை சுமார் 42 கி.மீ தூரம் பயணிக்கிறது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை மனிதத் தவறுதலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பிறகு அடையாறு செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு கட்டங்களாகப் பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் 1019 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் மட்டும் 1060 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருக்கின்றன. மூன்றாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கநல்லூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் 5320 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட நடவடிக்கையில் ஆலந்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் 9769 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மொத்தமாக அடையாறு நதி செல்லும் நீர் வழியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் நீர்வரத்து பாதைகள் என 17,168 இடங்கள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுப்பணித் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள் இதேபோல் கொற்றலை ஆறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட மாதாவரம் ஏரி, புத்தகரம் ஏரி, சடையன் குப்பம் ஏரி, மஞ்சம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொளத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரிகளில் மொத்தம் 1252 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் பெற்றுள்ளார். துணை போன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் இன்று சென்னையில் பெரும்பாலான ஏரிகளைக் காணவில்லை. அவற்றோடு இணைந்திருந்த கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. சிங்கார சென்னையின் பெரும் வளர்ச்சிக்கும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஏற்ப விவசாய நிலம் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன்பே காணாமல் போனவை நீர்நிலைகள் தான்," என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன். இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஒரு ஏரியின் கரைகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பிறகு தொடர்ச்சியாக நகரத்தின் பெரும்பகுதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான். எனவே ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இனி வரும் காலங்களில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும்," என்றார். படக்குறிப்பு, "இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான்" என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் அதோடு, "முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள கொளத்தூர் ஏரியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கின்றது என்கின்ற விவரங்களை அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்," என்கிறார் காசிமாயன். குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அரசு அகற்ற முன்வருமா என்று கேள்வியெழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் குடிசைகளால் மட்டுமே பெரும் வெள்ளம் வருவது கிடையாது. நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது. ஆறும் கடலும் ஒன்று சேரும் இடத்தில் 4000 ஏக்கருக்கு மேல் அரசு நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கின்றன. இவற்றை அகற்ற அரசு முன்வருமா?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், "சென்னையின் நதியோரங்களில் வசித்து வந்த ஏழை மக்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தி செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடியமர்த்தினார்கள். அந்த இடங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சார்ந்த இடங்கள். ஒரு நீர்நிலையில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி மற்றொரு நீர்நிலையில் குடியமர்த்துகிறார்கள். மேலும் வளர்ச்சி என்ற பெயரில் எவ்வளவு ஏரிகளை அரசே திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதை நினைவு கூற வேண்டும். ஏழைகளாக இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். அதுவே அரசாக இருந்தால் ஒன்றும் செய்யக்கூடாது என்கிற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். படக்குறிப்பு, "நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது," என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் வளர்ச்சி என்கின்ற பெயரில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாய் மண் இருந்த இடங்கள் தற்போது கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மழைத்துளி மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதில்லை. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாய் மாறுகிறது. ஆற்றின் கொள்ளளவு தாண்டி நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சூழ்ந்து விடுகிறது. இனி வரும் காலங்களில் வெள்ளத்தோடு தான் நம் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது சென்னைக்கு உண்டான பிரச்னை மட்டுமல்லாது ஏரிகள் எங்கெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் மூடப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பிரச்னை இருக்கிறது," என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் பார்க்கவேண்டும் "நல்ல வீட்டுமனையைத் தேர்வுசெய்ய கீழ்கண்டவற்றை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்," என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் வெற்றிவேல். மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து, வீட்டுமனைக்கான பத்திரம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இடத்தின் மீது குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுமனையின் உரிமையாளர் சட்டப்படி சரியான நபர்தானா என்பதை எப்போதும் உறுதிசெய்ய வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால் அந்தப் பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதை வழக்குரைஞர் மூலம் சரிபார்க்க வேண்டும். நேரடியாக சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலரையே தொடர்புகொண்டு வீட்டுமனை இருக்கும் நிலத்தின் தன்மை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அரசு இணையதளங்கள் வாயிலாக வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அப்ரூவல் உள்ளதாக என உறுதிப்படுத்தலாம். அதில், காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா, சர்வே எண் சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை பலமுறை தொடர்புகொண்டும் பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை பகுதிவாரியாகப் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விரைவில் நீர் நிலைகளில் இருக்கக்கூடிய அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62539340
  11. அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) கட்டுரையின் தலைப்பை பார்த்ததும் நீங்கள் யோசிக்க தொடங்கி இருக்கக்கூடும். ஆனால், 320 ஆண்டுகளுக்கு மேலாக பூமியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அறிவியலின் 'ஆன்மா' டி.என்.ஏவின் வியப்பளிக்கும் கதையை சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளுடன் அலசுகிறது இந்த கட்டுரை. கருமுட்டையும் விந்தணுவும் நம் உடல் கோடான கோடி செல்களால் ஆனது. செல்கள் தண்ணிரில் முறையாக அடுக்கப்பட்ட DNA (DeoxyriboNucleic Acid), RNA (RiboNucleic Acid), புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்களாலானது. ஒரு செல் வளர்ந்து இரண்டாவதைச் செல்பிரிதல் (Cell cycle/mitosis) என்று அழைக்கப்படுகிறது. இந்த செல்பிரிதலில் பல நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையாகப் பயணித்து ஒரு செல் இரண்டாகிறது. பிரிந்த செல்கள் கிடைக்கிற உணவைப் பயன்படுத்தி முதலில் தன்னை வளர்த்துக் கொள்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவதாக தன் உட்கருவிலுள்ள (Nucleus) மரபணுவான DNA முழுவதையும் நகலெடுக்க ஆரம்பிக்கிறது. இந்த DNA ஒரு இரட்டை இழை சங்கிலித் தொடராகும். இவற்றில் சுமார் 320 கோடி ஜோடி சங்கிலி இணைப்புகள் (Nucleotides) உள்ளன. இவை நான்கு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் நகலெடுக்கப்படுகின்றன. அதாவது ஒரு வினாடிக்கு சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் இணைப்புகள் உருவாக்கப்படுகின்றன! நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் செல்களும் சுறுசுறுப்பானவை. இவை குதூகலத்துடன் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் இந்த வேலையைச் செய்து முடிக்கின்றது! இந்த பிரபஞ்சத்திலுள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. கருவளர்ச்சியின் போது இதன் வேகம் இன்னும் அதிகமாகி சில நிமிடங்களிலேயே இந்த வேலை செய்து முடிக்கப்படுகிறது என்றால் நினைத்துப் பாருங்கள் அதன் வேகத்தை… DNA உற்பத்தி செய்யப்பட்ட பின் உட்கருவில் 96 துண்டுகளாக இந்த DNA இருக்கிறது. இவற்றை ஒன்றிணைத்தால் இந்த DNAவின் நீளம் சுமார் இரண்டு மீட்டருக்கும் மேலிருக்கும்! அதாவது ஒரு தாவணியின் நீளம் இது. ஆனால் இந்த DNAவின் அகலம் வெறும் 20 நானோ மீட்டர்தான். 1,000 நானோ மீட்டர் ஒரு மைக்ரானாகும். மூன்று மைக்ரான் அளவிலுள்ள உட்கருவில் இரண்டு மீட்டர் நீளமுள்ள DNA திணித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு யானையைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைப்பதற்குச் சமமாகும்! இந்த DNA இழைகள் நூற்கண்டில் முறையாகச் சுற்றப்பட்ட நூலிழை போல் பக்குவமாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ளதால்தான் இது சாத்தியமாகிறது. இறுதியாக இந்த DNA நகல்கள் சரிபாதியாகப் பிரித்தெடுக்கப்பட்டு இரண்டு செல்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் தந்தையின் விந்தணுவில் உள்ள DNA தாயின் கருமுட்டையிலுள்ள DNAவுடன் இணைவதால் குழந்தையாக உருவாகிறது. பின்னர் இந்த DNAதான் குழந்தைகளையும் இயக்குகிறது. இவ்வாறாக DNA எண்ணற்ற தலைமுறைக்குத்தாவும் வல்லமை படைத்தது. பூமியில் 320 நூறு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக DNA இந்தப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாகவே பூமியில் எண்ணற்ற வகையான உயிரினங்கள் தோன்றின. பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒருதாய் மக்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. நவீன தொழில்நுட்பம் விளக்குவது என்னவென்றால், மனிதனின் DNA எந்த மற்ற உயிரின் உடலிலும் நிலைத்திருக்கும் வல்லமை படைத்தது. அதே மாதிரி எந்த உயிரின் DNAவும் மனித உடலில் நிலைத்திருக்கவும் முடியும். மேலும் உடலுக்கு வெளியேவும் இந்த DNA நிலைத்திருக்கும் சக்தியுடையது. இந்த DNAவுக்கு அழிவில்லை! மேற்கண்ட இந்த காரணங்களால், DNA உயிரிகளின் ஆன்மா எனலாம். உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள் - அசர வைக்கும் தகவல்கள் வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது? டி.என்.ஏ எவரெஸ்ட் சிகரத்தை விட வலிமையானதா? உலகின் உயரமான எவரேஸ்ட் சிகரத்தை விட DNA பலவழிகளில் வலிமையானது. எவரேஸ்ட் தோன்றி வெறும் 2 கோடி ஆண்டுகள் மட்டுமேயாகிறது. ஒரு வலிமையான பூகம்பத்தால் இந்த சிகரம் எந்நேரமும் அழிக்கப்படலாம். மேலும் பூமியின் மையவிலக்கு விசையினால் (Centrifugal Force) இந்த சிகரம் மேற்கொண்டு வளரவும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த DNA நாளுக்கு நாள் மென்மேலும் வலுவடைந்து கொண்டேதானிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதனால் இமயத்தை விட ஆன்மாவான DNA வலிமை மிக்கது எனலாம். DNAவின் இத்தகைய வலிமைக்கு செல் பிரிதலிலுள்ள தலைசிறந்த கட்டுப்பாட்டுகளும் சட்டதிட்டங்களும்தான். ஆம், கட்டுப்பாட்டுகள் மற்றும் சட்டதிட்டங்களின்களின் படியே இந்த செல் பிரிதல் நடக்கிறது; நம் செல்களும் இயங்குகின்றன. இந்த செல்களின் இயக்கங்களே நம் இயக்கம். கடந்த நாற்பது ஆண்டு காலமாக ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பால் செல்களில் உள்ள சட்டதிட்டங்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. பல வேதிப்பொருட்கள் நம் DNAவை உடைத்தெறியும் சக்தியைப் பெற்றுள்ளன. அவைகளில் உணவில் பயன்படுத்தும் சாயப்பொருட்களும், மாசடைந்த நீரில் உள்ள பல வேதிப்பொருட்களும், வாகனங்களின் மற்றும் பல தொழிற்சாலைகளின் புகையில் உள்ள வேதிப்பொருட்களும் அடக்கம். மேலும் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் மற்றும் ஏனைய கதிர்வீச்சுகளும் DNAவை சேதமடையச் செய்யும் சக்தி படைத்தவை. நன்றாக வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு போதிய உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் இவ்வகையான பல நச்சுப்பொருட்கள் தானாகவே நம் உடலில் உருவாகின்றன. இவையும் DNAவை அப்பளமாக‌ நொறுக்கும் சக்தி படைத்தது. தண்டவாளம் இரண்டு நெடிய நீளக் கம்பிகளால் ஆனது போல் இந்த DNAவும் இரண்டு நெடுநீள இழைகளால் ஆனதுதான். தண்டவாளத்தில் ஒரு ரயில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். இதனை ரயிலை இயக்குபவருக்கு ஏதாவது ஒருவழியில் தெரிந்தால் ரயிலை நிறுத்திவிடுவார். எல்லோரும் தப்பித்துக் கொள்ளலாம். பின்னர், பொறியாளர்கள் விரைவாக வரவழைக்கப்படுவார்கள், அவர்கள் தண்டவாளத்தில் உள்ள விரிசலைச் சரி செய்வார்கள். இரயில் பயணம் சில மணிநேரம் தாமதமாகும் அவ்வளவுதான். ரயிலை இயக்குபவருக்கு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தெரியவில்லை என்றால் ரயில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கும். பயணிகள் மோசமாகக் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ வாய்ப்புகள் அதிகமுண்டு. இத்தனைக்கும் காரணம் உடைந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாக ஓடியதேயாகும். இப்போது DNAவை ரயில் தண்டவாளமாகவும், வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ரயிலை அதிவேகமாகப் பிரிதலுக்குப் பயணிக்கும் ஒரு செல்லாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். ரயில் தண்டவாளம் உடைந்தது போல், DNA உடைந்தால் செல்பிரிதல் என்ற பயணம் நிறுத்தப்படவேண்டும். காரணம் DNAதான் நம் உடல் கட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் தகவல்களைத் தாங்கியுள்ள திட்ட வரைபடமாகும் (Blue print). RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் சேதமடைந்தால் பெரிதாக ஒன்றும் பிரச்னை வந்துவிடாது. காரணம் இவற்றைத் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு DNAல் உள்ளது. அதனால் DNAல் உள்ள செய்முறை குறிப்பின் அடிப்படையில் நம் செல்கள் அவைகளை எளிதில் தயாரித்துக் கொள்ளும். ஆனால் இந்த DNA பாதிக்கப்பட்டால் இந்த தகவல்கள் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் மாற்றத்தை திடீர் மாற்றம் (Mutation) என அழைக்கப்படுகிறது. "போய் படி" என்ற வாக்கியம் "போய் கடி" என்று மாற்றி எழுதுவது மாதிரி தவறுதலான கட்டளை DNAவில் பதிவாகிவிடும். செல்லில் அந்தக் கட்டளை அப்படியே நிறைவேற்றப்படும். அதாவது தவறான RNA, புரதம், மாவு மற்றும் கொழுப்புப் பொருட்கள் தயாரிக்கப்படும்! பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த மாற்றங்கள் ஆறுக்குமேல் ஒரு செல்லில் ஏற்பட்டால் அது புற்றுநோய் செல்லாக மாற்றமடையும்! மாற்றமடைந்த இந்த செல்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான சட்ட திட்டத்திற்குக் கீழ்ப்படியாது. தன்போக்கில் செயல்படும். இருக்கிற உணவை இதுவே அபகரித்துக் கொள்ளும். அதனால் அதிவேகமாக வளரும். இதனால் அருகில் உள்ள மற்ற செல்களையும் இயங்கவிடாது! இந்த நிலையில் நம் உடலில் DNA உடைந்தால் இதனைக் கண்டறியப் பல புரதங்கள் (DNA damage Sensors) உள்ளன. இவை DNA உடைப்பு அல்லது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனே செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும் புரதக் கூட்டத்திற்கு தகவலனுப்பும். அவசர அவசரமாக இவைகள் செல்பிரிதல் பயணத்தை நிறுத்தும். DNA உடைந்தால் செல்பிரிதல் பயணத்தை நிறுத்தக்கூடிய புரதங்கள் பல. அவற்றில் p53, RB, BRCA1 போன்ற புரதங்கள் முக்கியமானவை. இந்த வரிசையில் Cep164 என்ற புரதமும் ஒன்று. இதனைக் கண்டறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது . மேலும் இந்த துறையில் மட்டும் அமெரிக்காவில் ஏழு வருடகாலம் ஆராய்ச்சி செய்தேன். உடலுக்குள் நடக்கும் பழுதுப் பார்ப்பும் கொலைகளும் நீண்ட முடிகளை கொண்ட பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அதனை வாரிய பின்னர் நன்கு பின்னி இரட்டைச் சடை போட்டுக் கொள்வார்கள். அதுமாதிரி செல்லில் இந்த நீண்ட DNA இழைகள் நன்கு சுற்றப்பட்ட நூற்கண்டு போல் இருக்கும். உடைந்த DNAவை சரி செய்ய நூற்கண்டில் சுற்றப்பட்ட நூல் பிரிக்கப்படுவது போல் DNA இழைகள் பிரிக்கப்படும். அடுத்து DNAவில் எந்தமாதிரியான சேதம் ஏற்பட்டுள்ளது என அறியப்படும். DNAவில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரி செய்யத் தேவையான கருவிகளும் இயந்திரங்களும் கொண்டுவரப்படும். அந்த கருவிகளும் இயந்திரங்களும் இரும்பால் ஆனது என நினைத்துவிடாதீர்கள். இவை அனைத்தும் DNA சேதத்தைச் சரி செய்யவல்ல புரதங்கள்தான்! இவைகளின் தயவால் முறையாக DNA பழுதுபார்க்கப்படும். பின்னர் இந்த DNAவின் தரம் சரிப்பார்க்கப்படும். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தால் DNA இழைகள் மறுபடியும் நூற்கண்டுகளில் சுற்றப்பட்டது போல் சுற்றப்படும். பின்னர்தான் இந்த செல்கள் தங்கள் பயணத்தைத் தொடரும்! இதுமாதிரி நம் உடலில் ஒரு நாளைக்கு ஒரு செல்லில் மட்டும் 10 லட்சம் பழுதுபார்ப்பு பணிகள் நடக்கின்றன! அப்படியெனில் கோடானுக்கோடி செல்கள் உள்ள நம் உடலின் எத்தனை பழுதுப் பார்ப்பு பணிகள் நடக்குமென கணக்கிட்டுக்கொள்ளுங்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவேளை உடைந்த DNAவை சரி செய்ய முடியவில்லை என்றால் அல்லது சரி செய்ய முடியாத அளவிற்கு உடைந்தால், DNA உடைப்பைக் கண்காணிக்கும் புரதக்கூட்டம் அந்த செல்லைக் கொல்ல வல்ல புரதக்கூட்டத்திற்கு ஆணையிடும். அந்தக் கொலைகார புரதக்கூட்டம் அந்த செல்லை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும். இதனை ஆங்கிலத்தில் Apoptosis என அழைப்பார்கள். சாவு என்ற சொல்லை நாம் விரும்ப மாட்டோம் ஆனால் மேற்கண்ட வழிமுறைகளில் நம் உடலில் தினம்தினம் எண்ணற்ற செல்கள் சாவை சந்திக்கின்றன. இதனால்தான் நாம் புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது! அதாவது நம் உடலில் DNA உடைப்பு சரி செய்யப்படாமல் செல்பிரிதல் என்ற பயணம் தொடர்ந்தால் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி? ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை தொடரும் மோசடிகள் - தப்பிப்பது எப்படி? ஆக… நம் உடலுக்குள் நடக்கும் சாவும் எவ்வளவு நல்ல செய்தி என்று எண்ணிப் பாருங்கள்! ஒரு கவிஞன் "எல்லோருக்கும் நல்லவன் தன்னையிழந்தான்" எனப் பாடி கேட்டிருக்கிறேன். இதனை நாம் கடைபிடிக்கின்றோமோ இல்லையோ? நம் செல்கள் மிக உறுதியாகக் கடைபிடிக்கின்றன. மேலும் இது எனக்கு, "தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்" என்ற திருக்குறளையும் நினைவுப்படுத்துகிறது. மனிதர்களுக்குப் புற்றுநோய் என்பது அரிதான நோயாகும். சுமார் ஐந்நூறு பேர்களில் ஒருவருக்குப் புற்றுநோய் வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. DNAவை பாதுகாக்கும் மேற்கண்ட முக்கிய புரதங்களில் ஒன்று வேலை பார்க்கவில்லை என்றால் நமக்கு 30 வயதுக்குள் புற்றுநோய் வந்துவிடும். வயதான பின் வரும் புற்றுநோய்கள் நம் வாழ்ந்தமுறை, உண்ட உணவு, குடித்த தண்ணீரில், சுவாசித்த காற்றிலிருந்த வேதிப்பொருட்களின் விளைவின் கூட்டுத் தொகையே எனக் கொள்ளலாம். இந்த வகைச் செல்நிறுத்தத்தை ஆங்கிலத்தில் Cell cycle checkpoint என அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய பங்கு நம்மைப் புற்றுநோயிலிருந்து காப்பது மட்டுமில்லை, குறைபாடுள்ள குழந்தைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்துவதும் இந்த செல் நிறுத்தங்களே இன்றி வேறில்லை! குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் எனக்குப் பொன்னிறத்தில் மொறுமொறு என மெல்லிய பத்து தோசை வேண்டும். அதுவும் கிழியாமல் அழகாக வேண்டும். ஒரே முயற்சியில் ஒன்றுக்கூட கிழியாமல் உங்களால் பத்து தோசை சுட முடியுமா? உணவகத்தில் பல ஆண்டுகள் வேலை பார்க்கும் திறமையான சமையல் கலைஞர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். தமிழ்நாட்டில் 2017ல் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு கணக்கெடுக்கப்பட்டது. அதில் இருநூறு குழந்தைகளில் சுமார் மூன்று குறைபாடுள்ளவை எனக் கண்டறியப்பட்டது (4). நம் உடலில் 78 உறுப்புகளும் 206 எலும்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சரியாக உருவாக்கப்பட்டால்தான் அந்த குழந்தை ஆராக்கியமான குழந்தையாகக் கருதப்படும். தோசையின் வடிவமைப்பு அப்படி அல்ல. மிகவும் எளிதானது. கிழியாமல் 10 தோசையை வார்த்து எடுப்பது நமக்குக் கடினமாக உள்ளது. இந்த நிலையில் 200 மகப்பேற்றில் மூன்று மட்டுமே குறைபாடுள்ள குழந்தை என்ற இமாலயச் சாதனைக்கு செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள்தான் முக்கிய காரணமாகும்! இது எப்படி நடக்கிறது என்றால் உடைந்த மற்றும் இயற்கைக்கு மாறான மரபணுக்கள் நிறைந்த கருவின் வளர்ச்சியைச் செல்பிரிதலை செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள் நிறுத்துகின்றன. பின் இவை கருச்சிதைவைத் தூண்டுகிறது. இந்த மாதிரியான கருச்சிதைவு முதல் மூன்று மாதகாலத்தில்தான் அதிகமாக நடக்கிறது. அதனால்தான் குறைபாடுகளுள்ள குழந்தை பிறப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த செல்நிறுத்தக் கட்டுப்பாடுகள் பல வகையானது. இதுவரை DNA உடைவதால் ஏற்படும் 5 முக்கிய செல்சுழற்சி நிறுத்தங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளை G0, G1, S phase, G2/M மற்றும் spindle செல் நிறுத்தங்கள் என அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் 2017ல் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு கணக்கெடுக்கப்பட்டது. மேலும் கருவறையில் வளரும் கருவின் செல்கள் அதிவேகத்தில் பல்கிப் பெருக காரணம், மேல் கூறிய இந்த செல்நிறுத்தங்கள் கருவில் முதல் ஓரிரு மாதங்களுக்கு சரியாக வேலை பார்ப்பதில்லை என நம்பப்படுகிறது. எந்த கட்டுப்பாடு தடைகளும் இல்லாமல் வளரும் கருவில் செல்கள் தானாக வளர்ந்து பல்கிப் பெருகும். பின்னர் இந்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக அங்குள்ள செல்களில் அறிமுகப்படுத்தப்படும். அப்போது மரபணுவான DNAவின் தரம் சோதிக்கப்படும். கருவின் செல்களில் உள்ள DNA துண்டுகள் ஒன்றிரண்டு இல்லாமல் இருப்பது அல்லது கூடுதல் எண்ணிக்கையில் இருப்பது மற்றும் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருப்பது ஆகியவை கண்டறியப்பட்டால் இந்த புரதங்கள் கருச்சிதைவைத் தூண்டும். முன்னரே குறிப்பிடப்பட்டதை போன்று, இவ்வகை கருச்சிதைவுதான் முதல் மூன்று மாதங்களில் அதிகம் நடைபெறுகிறது. இத்தகைய சேதமடைந்த DNAக்களைக் கொண்ட கரு மேற்கொண்டு வளர்ந்தால் அது கடுமையான குறைபாடுள்ள குழந்தையாகவே இருக்கும். பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதம் குறைபாடுள்ளவை எனில் ஒரு பத்து தலைமுறையில் மனித இனம் முற்றிலும் காணாமல் போய்விடும்! மாறாக கருவில் இந்த கட்டுப்பாடுகளில்லாமல் முழு சுதந்திரத்துடன் பல்கிப் பெருகிய செல்களில் மரபணு 100% தரத்துடன் இருந்தால், பல கட்டுப்பாடுகளின் மத்தியில் பல வகையான DNA பாதிப்பைச் சரி செய்ய வல்ல புரதக் கூட்டங்களின் உதவியுடன் இந்த செல்கள் முழு குழந்தையைத் தவறில்லாமல் உருவாக்க முடியும்! மேலும் பிறந்த குழந்தை எல்லா நச்சு வேதிப்பொருட்களையும் சமாளித்து இவ்வுலகில் வாழவும் முடியும்! நாம் நம் கடமைகளையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் சரியாகக் கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ? நம் உடலிலுள்ள கோடானுக்கோடி செல்கள் தங்கள் சட்டத்திட்டங்களை மதித்து சற்றும் தளர்வில்லாமல் நடப்பதால்தான் நாம் நோயின்றி நிம்மதியாக வாழ முடிகிறது. மனிதகுலத்தில் மட்டும் அல்ல, அனைத்து உயிரினங்களிலும் DNAவை பாதுகாக்கும் இந்த சட்டதிட்டங்கள்தான் உள்ளன. இதனாலேயே பூமில் எண்ணற்ற உயிரினங்கள் தழைத்தோங்குகிறது! இதனால் DNA என்ற ஆன்மா சுமார் 320 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் ஆட்சி செய்து வருகிறது. (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் சுதாகர் சிவசுப்பிரமணியம், 1999இல் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராவும் செயல்படுகிறார். மண்புழுவைக் கொண்டு உறுப்புக்களின் மறுஉருவாக்கம் மற்றும் வயதாவது சம்பந்தப்பட்ட நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இவர் மண்புழுக்களின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்தவர்.) தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ் https://www.bbc.com/tamil/science-62540482
  12. Breastfeeding: பாலூட்டுதல் குறித்து அவசியம் அறியவேண்டியவை I Everything about Lactation
  13. சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன? 15 ஆகஸ்ட் 2022, 02:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஐந்து உறுதிமொழிகள்: முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது என பிரதமர் தெரிவித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 மேலும் தனது சுதந்திர தின உரையில், "இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. உலகின் எல்லா பகுதிகளிலும் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. ஆருடம் அனைத்தையும் தகர்த்து தேசியக்கொடி பறக்கிறது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது" என குறிப்பிட்டார் மோதி. மேலும், அம்பேத்கர், மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுலா கான், ராம் பிரசாத் பிஸ்மில் உள்ளிட்டோரை பிரதமர் மோதி நினைவுகூர்ந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த பெண்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, ஜான்சி ராணி லஷ்மிபாய், ஜல்கரி பாய், சென்னம்மா, மேகம் அஸ்ரத் மஹால் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்தார். இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? மாநிலத்தின் போராட்ட வரலாறு 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன? இந்திய சுதந்திரம்: தமிழ் சினிமாவில் ஒலித்த விடுதலைக் குரல்கள் மேலும், "டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், எஸ்.பி.முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, தீனதயாள் உபாத்யாயா, ஜே.பி.நாராயண், ஆர்.எம்.லோஹியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளின் முன் நாம் தலைவணங்கும் தினம் இது" என அவர் குறிப்பிட்டார். "சுதந்திர போராட்டம் குறித்து நாம் பேசும்போது, பழங்குடி சமூகம் குறித்து நாம் மறக்கக்கூடாது. பகவான் பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜூ, கோவிந்த் குரு என சுதந்திர போராட்டத்தின் குரலாக மாறிய எண்ணற்றோர் உள்ளனர். ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்" என பிரதமர் தெரிவித்தார். மேலும், "நாம் சுதந்திரம் அடைந்தபோது நமது வளர்ச்சிப் பாதையில் பலருக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் விசேஷமானது என்பது அவர்களுக்குத் தெரியாது" என அவர் கூறினார். "நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 75 ஆண்டுகளை கடந்த சுதந்திரம் நாட்டின் புதிய தொடக்கம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவன் என்றாலும் தியாகங்களை உணர்ந்துள்ளேன். பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொணர்வோம். உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான். நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக்கொண்டனர். சுதந்திரம் பெற்ற இந்த 75 ஆண்டுகளில் மக்கள் பல இன்னல்களை சகித்துக்கொண்டனர். கடுமையான போராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சிப் பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை. கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு." என்றும் அவர் கூறினார். மேலும், "ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்" என அவர் தெரிவித்தார். நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூர் 200 கோடி டோஸ்களை தாண்டியுள்ளது எனவும் பிரதமர் மோதி கூறினார். சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளும் பங்கேறுள்ளனர். செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பட்டம், ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டைக்கு செல்வதற்கு முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோதி மரியாதை பிரதமர் மோதி 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றுவது குறிப்பிடத்தக்கது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ட்விட்டரில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் தங்கள் இல்லங்களில் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோதி முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார். https://www.bbc.com/tamil/india-62545045
  14. மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்? ஷாபாஸ் அன்வர் பிபிசி இந்திக்காக 14 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள். "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீனம் மற்றும் பல பிரச்னைகள் இருக்கும். இந்த அட்டவணையை நான் வீட்டிற்குள் வைத்ததால், என் மாதவிடாய் எப்போது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நானே கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறதா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது," என்று அல்ஃபிஷான் பிபிசியிடம் தெரிவித்தார். மீரட்டில் வசிக்கும் ஆலிமாவும் அத்தகைய ஓர் அட்டவணையை தனது அறையின் கதவில் ஒட்டியுள்ளார். ஆலிமாவின் வீட்டில் அண்ணன், தங்கை, அப்பா என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர். தற்போது ஆலிமாவின் மாதவிடாய் தேதி, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிகிறது. "நான் ஓர் ஆசிரியை. நான் வீட்டிற்கு வெளியே சென்று பணிபுரிகிறேன். அதனால் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நான் அறிவேன். மாதவிடாய் அட்டவணையை ஒட்டியபிறகு குறைந்த பட்சம் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் மாதவிடாய் தேதி தெரிவதால், அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இது மிகவும் வசதியானதாகவும், இனிமையாகவும் உள்ளது,"என்று ஆலிமா கூறுகிறார். பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC இயக்கத்தால் ஏற்பட்ட மாற்றமா? இன்றைய காலகட்டத்தில் மீரட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 65 முதல் 70 வீடுகளில் பீரியட் சார்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் எப்படி திடீரென்று சாத்தியமானது, திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இந்த அட்டவணையை தங்கள் வீடுகளின் பொது இடங்களில் எப்படி வைக்க துணிகிறார்கள்?. இந்த கேள்விக்கு 'செல்ஃபி வித் டாட்டர் அறக்கட்டளை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுனில் ஜக்லான் பதிலளிக்கிறார். "எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பெண்களின் நலன்களுக்காக நாங்கள் பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் மாதவிடாய் அட்டவணையைப் பொருத்தவரை 2020 ஆம் ஆண்டு முதல் நாங்கள் வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய இடங்களில் செயலில் உள்ளோம்." என்று அவர் கூறினார். "எங்கள் அமைப்பு மகளிருக்கு கல்வி, சுகாதாரம், உரிமைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான சுதந்திரத்திற்காக பாடுபடுகிறது," என்று அவர் குறிப்பிட்டார். " மாதவிடாய் காலகட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். வீட்டில் இருக்கும் பெண் உறுப்பினர்களின் பிரச்சனைகளை நான் பார்த்திருக்கிறேன். எனவே இதற்காக நாம் ஏன் சிறப்பாக எதையாவது செய்யக்கூடாது என்று மனதில் தோன்றியது. அதன்பிறகுதான் சில சக மருத்துவர்களிடம் பேசி ஆலோசனை பெற்ற பிறகு பீரியட் சார்ட் இயக்கம் தொடங்கப்பட்டது,"என்று சுனில் ஜக்லான் தெரிவித்தார். பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC 250 அட்டவணைகளில் 180 கிழிக்கப்பட்டன மீரட்டில் பீரியட் அட்டவணையின் பிரசாரம், 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் உரையாடல் நடத்தப்பட்டது. "2021 டிசம்பரில் மீரட்டில் இந்த இயக்கத்தை தொடங்கினோம். பல மாநிலங்களிலும் பணிபுரிந்த 30-35 பெண்கள் எங்கள் குழுவில் இருந்தனர். நாங்கள் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளைத் தொடர்புகொண்டோம். லாடோ பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் சிறுமிகளை வரவழைத்தோம். வீடு, வீடாகவும் சென்றோம். அவர்களது மொபைல் எண்களை பெற்று வாட்ஸ்அப் குரூப்களையும் உருவாக்கினோம். பல இடங்களில் ஆண்களும் எங்களுக்கு உதவ முன்வந்தனர்,"என்று சுனில் ஜக்லான் கூறினார். பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC "நாங்கள் ஆரம்பத்தில் 250 பீரியட் அட்டவணைகளை வீடுகளில் உள்ள பெண்களுக்கு விநியோகித்தோம். ஆனால் எங்கள் குழு உறுப்பினர்கள் பின்னர் வீடுகளில் சுற்றிப் பார்த்தபோது, இந்த அட்டவணைகளை 65 முதல் 70 வீடுகளில் மட்டுமே பார்க்கமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் இந்த அட்டவணைகள் கிழிக்கப்பட்டன அல்லது அவற்றை மாட்ட சிறுமிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சில வீடுகளில் பெண்களின் மாதவிடாய் தேதிகளை அந்த வீட்டின் உறுப்பினர்கள் அறிந்திருப்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். அந்த பெண்களுக்கு அங்கு உதவி கிடைக்கிறது என்று நம்புகிறேன். விழிப்புணர்வு அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்." இந்த பீரியட் அட்டவணைகளுக்கு எல்லா பிரிவு மக்களிடையேயும் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது என்றார் அவர். மாதவிடாய் அட்டவணையால் மகள்கள் ஆரோக்கியமாக இருப்பார்களா? பீரியட் சார்ட் இயக்கத்தின் நோக்கம் பெண்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது ஆகும் என்று சுனில் ஜாகான் குறிப்பிடுகிறார். "பெண்களுக்கு மாதவிடாய் வரும் போது, அந்த நேரத்தில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எரிச்சல், பலவீனம், சோர்வு மற்றும் உடல்வலி மற்றும் வேறு சில அறிகுறிகள் உள்ளன. அந்த நேரத்தில் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் உதவி அவர்களுக்கு தேவை. அவர்களின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.பல பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதில்லை. இந்த அட்டவணை மூலம் அது பற்றியும் தெரிய வருகிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார். முதல் உறவில் 'கன்னித் திரையை' தேடும் கணவர்கள்: கொதிக்கும் பெண்கள் இந்தியாவில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகிறது? மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள் "அட்டவணையில் மாதவிடாய் தேதியைக் குறிப்பிடும் பெண்களிடமிருந்து முழு ஆண்டுக்கான அட்டவணை பெறப்படும். மாதவிடாய் தேதிகளில் ஏதேனும் சீரற்றதன்மை கண்டறியப்பட்டால், அவர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும். இதன் மூலம், ஆஷா சகோதரிகள் மற்றும் ஆங்கன்வாடி பணியாளர்களின் உதவியுடன் அத்தகைய பெண்கள் சிகிச்சை பெற முடியும்." பல இடங்களில் எதிர்ப்பு, பெண்கள் பற்றி அநாகரீகமான கருத்துக்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் அட்டவணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைன் லாடோ பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பத்து நேரடி பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டன. இவை தவிர மேலும் பல பஞ்சாயத்துகள் ஆன்லைனில் செய்யப்பட்டன. பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC "பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது. பெண்கள், சிறுமிகள் குறித்து அநாகரீகமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன. இது தொடர்பாக எல்லா மதத்தலைவர்களின் உதவியும் நாடப்பட்டது. அவர்களில் பலர் முழு ஆதரவையும் அளித்தனர்,"என்றார் அவர். "ஆரம்பத்தில் தைரியம் இருக்கவில்லை, இப்போது பழகிவிட்டது" வீடுகளுக்குள் பொது இடங்களில் மாதவிடாய் அட்டவணைகள் போடப்பட்டபோது பல பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் சங்கடமாக உணர்ந்தனர். "நான் ஒரு இல்லத்தரசி. என் கணவரைத் தவிர, வீட்டில் மைத்துனர், மாமனார் மற்றும் பல ஆண் உறவினர்கள் அடிக்கடி வந்துபோவார்கள். பீரியட் சார்ட் பற்றித்தெரிந்தபோது ஆரம்பத்தில் அது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். இதை என் கணவரிடம் விவாதித்த போது அவர் எனக்கு தைரியம் அளித்தார். அதன் பிறகு மாமியாரிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார்,"என்று மீரட்டைச் சேர்ந்த திருமணமான பெண் ஆலியா பிபிசியிடம் தெரிவித்தார். பீரியட் சார்ட்டை பகிரங்கப்படுத்த்திய பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று அவரிடம் வினவப்பட்டது. "ஆமாம். அதைப் பற்றி தெரியாதபோது அவர்கள் என்னைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. இப்போது என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்," என்று பதிலளித்தார். இது குறித்துப்பேசிய மற்றொரு பெண் மனீஷா, "இது நமது உடல் நலம் சம்பந்தப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பெண்கள் உடல் உபாதைகள் காரணமாக சண்டையிடுவார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சிடுசிடுப்பு ஏற்படும் என்று தெரியவரும்போது சுற்றி உள்ளவர்கள் அவர்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள். அவர்களின் கடுமையான தொனியை புறக்கணிப்பார்கள்," என்றார். 'நான் என் மனைவியிடம் சொன்னேன், அட்டவணையை கதவில் மாட்டு' மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் ஃஜுபைர் அகமது, மாதவிடாய் அட்டவணையை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.அவர் சலூன் கடை நடத்தி வருகிறார். " மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பெண்கள் நினைக்கக்கூடாது. யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்கத்தானே வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC "தயக்கம் ஏதுமின்றி வீட்டின் எந்த கதவிலும் மாதவிடாய் தேதி அட்டவணையை வைக்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன். பல நண்பர்களையும் இதில் நான் இணைத்திருக்கிறேன்." ஹிமாச்சல பிரதேசத்தின் ரிஷ்தா, 'பீரியட் அட்டவணையின் தூதர்' மாதவிடாய் அட்டவணையைப் பற்றி ஒரு குறும்படமும் எடுக்கப்பட்டுள்ளது. படச் செலவுகளை 'செல்ஃபி வித் டாட்டர்' அமைப்பின் இயக்குநர் சுனில் ஜக்லான் ஏற்றுக்கொண்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷ்தா இந்தப் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். " பீரியட் சார்ட் பற்றிய ஒரு குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு. 2021 ஏப்ரலில் எனக்குக் கிடைத்தது. நான் ஒப்புக்கொண்டேன். நான் ஸ்கிரிப்டைப் படித்தபோது அது என்னை மேலும் கவர்ந்தது. நான் சுனில் ஜக்லானுடன் இது பற்றி உரையாடினேன். இந்த பிரச்சாரத்தில் என்னையும் இணைத்த அவர் இந்த இயக்கத்தின் தூதராக என்னை ஆக்கினார். இப்போது இது தொடர்பாக பல மாநிலங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்துப்பேசுகிறேன்," என்று ரிஷ்தா பிபிசியிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62534945
  15. இலங்கையில் ஆறு தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது அரசின் தந்திரமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. ஆனால், இது இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. இதன்படி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. 316 பேரில் ஒரே பெயரை கொண்ட 7 பேரின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்" - உறவினர்கள் புகார் நிரந்தர விசா இல்லாமல் தவிக்கும் கோட்டாபய, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் குடியேற்றம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், புதிதாக 55 பேரையும் 3 அமைப்புக்களையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இலங்கைக்குள் 316 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 அமைப்புக்களுக்கு நாட்டிற்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்குகின்றது. அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மீதான தடையும் அமலில் உள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச ரீதியிலுள்ள தமிழர்களின் பங்களிப்பு அவசியம் என கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம், ரணிலின் ஒரு தந்திர நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், ''ஏற்கனவே இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. 2015, 2019ம் ஆண்டு காலப் பகுதிகளில் ரணில் - மைத்திரி அரசாங்கத்தினால் இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அதே தடை விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கின்றார். தடை இருந்த காலத்திலேயே மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் 2003ம் ஆண்டு சிங்கப்பூரிலும், 2015 மற்றும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பிலும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் பேசியிருக்கின்றார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு, கனடா மக்கள் அவை, ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற மக்கள் அவைகளும், அதாவது புலம்பெயர் நாடுகளில் மக்கள் பலமுள்ள அமைப்புக்கள் இன்றும் தடை பட்டியலுக்குள் தான் இருக்கின்றது. 100 வீதமான தடையும் விதிக்கப்பட்டதாகவே இருக்கின்றது. இந்த தடை நீக்குகின்றமையினால், ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. ஆனால் வெளிநாடுகளிலுள்ள 65 முதல் 70 சதவீத மக்களின் செல்வாக்கை கொண்ட கனடா மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் ஒன்றியம், சுவிஸ் ஒன்றியம் போன்ற மக்களின் செல்வாக்கை கொண்ட அமைப்புக்கள் இப்போதும் தடையில் தான் இருக்கின்றது. பட மூலாதாரம்,SHIRIDARAN இந்த தடை நீக்கமானது, ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கியதாக கருதப்படாது. தமிழீழத்தை கைவிட்டோம் என்று கூறுவோரின் மீதான தடையையே அரசாங்கம் நீக்கியுள்ளது. இது வெளிப்படையான தார்மீகமான தடை நீக்கம் என்று கருத முடியாது. இதுவொரு சரியான தடை நீக்கம் என்றால், நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட அனைத்து அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டும். உலக நாடுகளிடம் ஏமாற்று வித்தையொன்றை காண்பிக்கும் இலங்கை அரசாங்கத்தின் வழமையான ஏமாற்று நாடகத்தின் ஒரு கட்டம், ரணிலுடைய தந்திரத்தின் ஒரு பாதையே இது. ஆகவே இந்த தடை நீக்கத்தை மகிழ்ச்சி அடையகூடிய ஒன்றாக பார்க்கவில்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62539335
  16. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு - பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்தவர் 14 ஆகஸ்ட் 2022, 06:28 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகேஷ் ஜுஞ்சுன்வாலா இந்திய தொழிலதிபரும், பிரபல பங்குச்சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று மும்பையில் காலமானார். அவர் இறப்புக்கான காரணம் இதுவரை அலுவல் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிபிசிக்கு கிடைத்த தகவல்களின்படி, அவர் சிறுநீரக செயலிழப்பால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்தியாவின் 'வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தி 1991ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றத்தால் பலன்பெற்ற முதலீட்டாளர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார் . Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 எப்படி பணம் சம்பாதித்தார்? வருமான வரித்துறை அதிகாரியின் மகனான, ஜுன்ஜுன்வாலா, தன் சிறுவயதில் தந்தையைப் பார்த்து முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டார். 1985 ஆம் ஆண்டு, தன் 25ஆவது வயதில் பங்குச் சந்தையில் முதன்முதலாக முதலீடு செய்யத் தொடங்கினார். அதுவும் கூட அவரது உறவினரிடம் கடன் வாங்கிய 100 அமெரிக்க டாலர்கள் மூலம் தொடங்கினார் என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அவர் ராரே நிறுவனத்தை தொடங்கினார். தனது பெயரின் முதல் இரு எழுத்துகள், தன் மனைவி ரேகாவின் பெயரிலிருந்து இரு எழுத்துகள் சேர்த்து (RaRe) இந்த பெயர் உருவாக்கப்பட்டது. பரிட்சார்த்த முயற்சிகளை எடுப்பதில் வல்லவர் என்று பெயரெடுத்த இவருக்கு, பல முயற்சிகள் நல்ல பலனையே கொடுத்தன. ஜுன்ஜுன்வாலா "வெற்றி பெற்ற கூடிய பங்குகளை தேர்ந்தெடுத்து 'மிடாஸ் டச்' அதாவது தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயரை பெற்றார் என 2021ஆம் ஆண்டு இவரை பற்றி ஃபோர்ப்ஸ் சஞ்சிகை எழுதியது. அதே நேரத்தில், தனது தனிப்பட்ட பங்கு முதலீடுகள் பலனளிக்கத் தொடங்கியதையும் கண்டார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் வாரன் பஃபெட்" என்று அழைக்கப்படுவது பிடிக்கவில்லை என்று கூறினார், மேலும் " பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவரை விட "நன்கு முன்னேறி" இருப்பதாகவும் கூறினார். அத்துடன் "நான் யாருடைய பிரதியும் அல்ல. நான் ராகேஷ் ஜுஞ்சுன்வாலா," என்றும் அவர் கூறியிருந்தார். இந்தியா மீதான நம்பிக்கை மூத்த பங்குச்சந்தை நிபுணரான, அஜய் பாக்கா, "இந்திய பங்குச்சந்தையின் முகமாக அவர் தன்னை மாற்றிக்கொண்டார்" என்று ஜுன்ஜுன்வாலா குறித்து குறிப்பிட்டார். ஒரு இளம் சிறுவனாக தொடங்கி இப்படி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவும் அளவுக்கு இந்திய நிதிச்சந்தையில் தன் வளர்ச்சிக்கு தளம் அமைத்துக்கொண்டார். ஜுன்ஜுன்வாலா "இந்தியா மீது பெரும் நம்பிக்கை கொண்டவராக" இருந்தார். அந்த நம்பிக்கை எளிதில் இன்னொருவருக்கும் பரவிவிடும் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த நம்பிக்கை அவரது இன்னொரு செல்லப்பெயரிலும் எதிரொலித்தது. அதுதான் 'தலால் வீதியின் பெரும் புள்ளி' என்பது. (மும்பை பங்குச்சந்தையைக் குறிக்கும் அடையாளச் சொல்) கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கையுடனேயே தொடர்ந்தார். அவரது இறப்புக்கு ஒரு வாரம் முன்பு சிஎன்பிசி-டிவி18க்கு அவர் அளித்த பேட்டியின்போது, "உலக பொருளாதார சூழல் எப்படி இருந்தாலும் இந்தியாவின் சந்தை உயரும். ஆனால், மெதுவாக" என்று தெரிவித்திருந்தார். மோதியுடன் புகைப்படம் பட மூலாதாரம்,RAKESH JHUNJUNWALA கடந்த வருடம் ஜுன்ஜுன்வாலா தனது மனைவியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த பிறகு பிரதமர் மோதி அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிரதமர் மோதி ஜுன்ஜுன்வாலாவின் முன் முன் கைக்கட்டி நிற்பதாக சமூக ஊடகத்தில் பலர் விமர்சித்தனர். அப்போது ஜுன் ஜுன்வாலா யார் என்றும் பரவலாக விவாதிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில், பிரதமர் மோதி நின்ற நிலையில், தமது இரு கைகளையும் பிடித்தபடி இருப்பது போலவும், அவரது அருகே ரேகா ஜுன்ஜுன்வாலா நின்றிருக்க, அவர்களின் எதிரே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இருந்தது. அதை பார்க்கும்போது ஜுன்ஜுனாவாலா ஏதோ பேச, அதை பிரதமர் மோதி கேட்பது போல இருந்தது. பின்னர் மருத்துவ காரணங்களுக்காக ஜுன்ஜுன்வாலா அமர்ந்த நிலையில் பேசியது தெரியவந்தது. https://www.bbc.com/tamil/india-62538590
  17. ராஜஸ்தான்: பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இன்று (14.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார் என்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். சிறுவன், கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார். திமுக விளம்பரத்துக்கு மோதியின் பணமா? கோவையில் திமுக - பாஜக 'போஸ்டர் யுத்தம்' பிடிஆர்: "பிண அரசியல் செய்யும் நபர்களுக்கு பதில் தர விரும்பவில்லை" கோவை சிவன் கோயிலை 'அகற்ற' வழக்குத் தொடர்ந்தவரை முன்னாள் காவல் அதிகாரி தாக்கியதாக புகார் ஆசிரியரின் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவன் சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.bbc.com/tamil/global-62537897
  18. பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, புத்தன் அண்ணை. வாழ்க வளத்துடன்.
  19. சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SHIPINFO சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை சனிக்கிழமை அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் தேதி வரை 'யுவான் வாங் - 5' கப்பல் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீன கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புப்படை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சீனாவின் செயற்கைக்கோள் கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவலாம் என்ற தங்களுடைய கவலையை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும்வரை தங்களுடைய கடல் பகுதிக்குள் வர வேண்டாம் என்று சீன கப்பலை இலங்கை கேட்டுக் கொண்டது. ஆனால், இந்தியாவின் அழுத்தத்தை அர்த்தமற்றது என்று கூறி சீன வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியது. மேலும், யுவான் வாங் 5 கப்பலின் பயணத்தை தொடர்ந்து இலங்கை நோக்கிச் செல்லவும் சீனா நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், திட்டமிட்ட வருகை அட்டவணையை விட ஐந்து நாட்கள் தாமதமாக, ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று யுவான் வாங் சீன கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? இதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை வெளியுறவுத்துறை சீன கப்பல் வருகைக்கு நிபந்தனைகளுக்கு உள்பட்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலுக்கு வழக்கமாக அமலில் உள்ள நடைமுறைப்படியே ராஜீய அனுமதி வழங்கும் கோரிக்கை ஏற்கப்பட்டது. அது தொடர்பாக பாதுகாப்புத்துறை, கடற்படை, இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் கேட்கப்பட்டது. பாதுகாப்புத்துறை போட்ட நிபந்தனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கழுகுப்பார்வையில் யுவான் வாங் 5 கப்பல் குறிப்பிட்ட நாட்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயன்பாட்டுக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக பாதுகாப்புத்துறையிடம் இருந்தும் அலைவரிசை இடைமறிப்பற்ற மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் அல்லாத தேவைக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஆணையத்திடம் இருந்தும் பதில்கள் பெறப்பட்டன. அவை குறித்து சீன தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், சீன கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும்போது அதற்கு சில நிபந்தனைகளை விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத்துறை கூறியது. அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்; இலங்கை கடல் பகுதிக்குள் எவ்வித அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளும் செய்யக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை எழுப்பிய சில கவலைகள், சீன தூதரகத்திடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை வெளியுறவுத்துறை அனுப்பிய குறிப்புரை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மறுஆலோசனை செய்யப்படும்வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திட்டத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. "ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது" இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா? அதன் பிறகு மிக உயரிய ராஜீய அளவில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் நடத்தியது. நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, உறுதியான பேச்சுவார்த்தை, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரின் நலன்கள், நாடுகளின் சமமான இறையாண்மை கோட்பாடு என அனைத்து அம்சங்களின்படியும் பிரச்னையை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சீன தரப்பிடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி சீன தூதரகம் அளித்த பதிலில், யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி வர திட்டமிட்டுள்ளதாகவும், புதிய தேதியில் அதாவது ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதிவரை எரிபொருள் நிரப்பும் தேவைக்காக அந்த கப்பல் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொண்டு, சீன கப்பல் ஆகஸ்ட் 16 முதல் 22வரை ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 13ஆம் தேதி அனுமதி வழங்கியிருக்கிறது. அனைத்து நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்த இலங்கை வெளியுறவுத்துறை விரும்புகிறது. அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமது சர்வதேச கடமைகளுக்கு ஏதுவாக அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பது இலங்கையின் நோக்கமாகும். குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், இலங்கை மக்களின் நலனை உறுதிப்படுத்தும் பல உள்நாட்டு செயல்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் அனைத்து நாடுகளின் ஆதரவு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை இலங்கை அரசாங்கம் ஆழமாகப் பாராட்டுகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியா நிலை என்ன? பட மூலாதாரம்,MEA INDIA படக்குறிப்பு, அரிந்தம் பக்ஷி, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முன்னதாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு யுவான் வாங் 5 கப்பலின் திட்டமிட்ட பயணத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதுபோன்ற விஷயங்களில் பாதுகாப்பு கவலைகளின் அடிப்படையிலேயே இந்தியா முடிவுகளை எடுக்கும்," என்று வலியுறுத்தினார். "இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அது தமது சொந்த முடிவுகளை சுயமாக எடுக்கும். அந்நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தருவதாக வெளிவரும் கூற்றை நிராகரிக்கிறோம். இலங்கைக்கு அசாதாரமான வகையில் 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக நிதியுதவி செய்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய உரிமைகள் உண்டு. பரஸ்பர மரியாதை, நலன்கள், உணர்வுகள், எல்லை பாதுகாப்பு போன்றவை மீது அந்தந்த நாடுகள் அவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அவற்றை உள்ளடக்கிய நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமாக கொண்டிருக்கும். அந்த வகையில் இந்தியாவும் இந்த விஷயத்தில் ஒரு நிலையைக் கடைப்பிடிக்கிறது," என்றும் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62534384
  20. இந்திய சுதந்திர தினம்: பணக்காரர்கள் பெருகும் நாட்டில், ஏழைகள் துயரப்படுவதன் 'ரகசியம்' என்ன? ஜி எஸ் ராம்மோகன் ஆசிரியர், பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தைப் பற்றிய பெரும்பாலான பகுப்பாய்வுகள், கடந்த 30 ஆண்டுகளைச் சுற்றியே உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா எப்படி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்துள்ளது என்பதை அவை வலியுறுத்துகின்றன. லேண்ட்லைன் இணைப்புக்காக ஒருவர் தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எப்படி நடையாக நடக்கவேண்டும், எரிவாயு இணைப்பைப் பெற ஒருவர் எப்படி பல மாதங்கள் காத்திருக்க வேண்டும், தங்கள் சொந்தபந்தம் மற்றும் அன்புக்குரியவர்களிடம் பேசுவதற்காக பொது தொலைபேசி பூத்துகளுக்கு வெளியில் எப்படி மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பலர் தங்கள் எழுத்துகளில் நினைவுபடுத்துகிறார்கள். 1990கள் மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இவை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முந்தைய தலைமுறைகள் நிதர்சனமாகக் கண்ட உண்மைகள் இவை. ஸ்கூட்டர் வாங்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையிலிருந்து இன்று இருக்கும் நிலைக்கு நாம் எப்படி மாறியிருக்கிறோம் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியும் உண்மைகள். தொழில்நுட்ப நுகர்வு, விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல், உரிமம் வழங்கும் செயல்முறையில் சீர்திருத்தங்கள் ஆகியவை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. சேவைத் துறையிலும் அன்றாடப் பணிகளிலும் தனிமனித விருப்பு வெறுப்பு, பெருமளவு முடிவுக்கு வந்தது. இது நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் எளிதாக்கியது. 90களில் பொருளாதார சீர்திருத்தங்கள் முழு வீச்சில் தொடங்கப்பட்டன. அதன் பிறகு பல மாற்றங்கள் மிகவும் தெளிவாகத் தெரியத் தொடங்கின. சீர்திருத்தங்களால் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு விநியோகச் சங்கிலிகளில் மேம்பாடு லைசென்ஸ் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், சேவைத் துறையில் மிகவும் வெளிப்படையாகக் காணப்படும் இந்த மாற்றங்களைத் தவிர வேறு சில அடிப்படைப் பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. முதலில் இரண்டு முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். வறுமை குறைந்துள்ளதையும், சமத்துவமின்மை அதிகரித்து வருவதையும் நாம் அலசுவோம். 75 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு முக்கிய மாற்றங்கள், வறுமையில் சரிவு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு. வறுமை குறைந்திருக்கிறதா? 1994 மற்றும் 2011ஆம் ஆண்டுக்கு இடையே இந்தியாவால் வறுமையை மிக வேகமாகக் குறைக்க முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் 45%இல் இருந்து 21.9% ஆகக் குறைக்கப்பட்டது. எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், 13 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். 2011க்குப் பிந்தைய காலத்திற்கான தரவு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. "தேநீர், பிரியாணி, எல்லை கடந்த அன்பு" - பாகிஸ்தான் தோழி குறித்து இந்திய பெண் நெகிழ்ச்சி ஆசையைத் தூண்டி ஏமாற்றும் நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? கோவை நிதி மோசடி கூறும் பாடம் 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன? கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையின் சதவீதம் 10.2% ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஊரக இந்தியா இதில் சிறந்து விளங்கியது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகான புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. வறுமையில் வாடும் மக்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க 75 ஆண்டுகள் ஆனது என்பதையும் 30 ஆண்டுக்கால பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அதில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர், அதாவது சுமார் 45% 30 ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 10% ஆக உள்ளது. இது ஓர் அற்புதமான மாற்றம். இந்த 30 ஆண்டுகளில் கரீபி ஹட்டாவ் (வறுமையை ஒழிப்போம்) என்ற முழக்கத்தைச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு அதேநேரம், சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. கோடீஸ்வரர்களின் சொத்து விண்ணைத் தொட்டுள்ளது. தேசிய சொத்து மதிப்பில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் பங்கு குறைந்து வருகிறது. உலகின் பெரிய செல்வந்தர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 90களில் இந்தியாவிலிருந்து யாரும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. 2017இல் இது 119 ஆக இருந்தது. 2022 இல் இந்த எண்ணிக்கை 166 ஆக உள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மகாகோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) உள்ளனர். 2017ஆம் ஆண்டின் ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, தேசிய செல்வத்தில் 77%, முதல் 10 சதவீதத்தினரிடையே குவிந்துள்ளது. முதல் 1% பேர் தேசிய செல்வத்தில் 58 சதவீதத்தை வைத்துள்ளனர். வருமானத்தைப் பார்த்தால், 1990இல் தேசிய வருமானத்தில் 34.4 சதவீதத்தை முதல் 10% பேர் பெற்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50% பேர் 20.3% வருமானத்தைப் பெற்றனர். 2018க்குள் இது முதல் 10% பேருக்கு 57.1% ஆகவும், கீழ்மட்டத்தில் உள்ள 50% பேருக்கு 13.1% ஆகவும் குறைந்தது. அதன்பிறகு, கோவிட் நெருக்கடி காலங்களில் கூட, உயர்மட்டத்தினர் தங்கள் வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்க முடிந்தது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 20 மாதங்களில் 23 லட்சம் கோடி 2017 ஆம் ஆண்டில், முதல் 10% பேர், தேசிய செல்வத்தில் 77 சதவீதத்தை வைத்திருந்தனர். முதல் 1% பேரிடம் தேசிய செல்வத்தின் 58% இருந்தது. 2021இல் முதல் 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 57.3 லட்சம் கோடி ரூபாய். கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தில் (2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரை) இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து 23.14 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. (ஆதாரம்: ஆக்ஸ்பாம்) இந்தியாவின் வெற்றி/வளர்ச்சிக் கதையைப் பார்க்கும்போது வறுமை குறைப்பு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு ஆகிய இரண்டு மாறுபட்ட உண்மைகள் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமைப்பு சார்ந்த துறையிலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது போதிய ஊதியம் இல்லாமை ஊதிய இடைவெளி பணி நிலைமைகள் உள்ளடக்காத வளர்ச்சி மேற்கூறிய எல்லா பிரச்னைகளும் இந்தியாவிற்குப் பெரும் சவால்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தனது அறிக்கை ஒன்றில் கூறுகிறது. ILO உடன், அசீம் பிரேம்ஜி அறக்கட்டளையும் தங்கள் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. சில நிறுவனங்களில் சிஇஓக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், மாதம் 15000 ரூபாய் என்ற குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். சில தனியார் நிறுவனங்களில் ஊதிய இடைவெளி 1000%க்கும் அதிகமாக உள்ளது. பெரிய நாடுகளை நாம் கருத்தில் கொண்டால், ஊதிய இடைவெளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது சமத்துவமின்மையின் வளர்ச்சியை மேலும் தூண்டுகிறது. முதலாளித்துவம் அதிகரிக்கும்போது சிறப்புத் திறன் ஆழமடைவதை வரலாறு காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் நுகர்வு மற்றும் திறமையானவர்களுக்கும் திறமையற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. திறமையான ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் பணம் ஊதிய இடைவெளியை அதிகரிக்கிறது. மேற்கூறிய காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஊதிய இடைவெளி அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல, செல்வப்பகிர்மானத்தின்(wealth distribution) அளவுகோலாகக் கருதப்படும் Gini Co-efficient ஐ எடுத்துக் கொண்டால், 2011ல் 35.7 ஆக இருந்தது. 2018இல், இது 47.9 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரிய சந்தைகளில் தீவிர சமத்துவமின்மைக்கு வரும்போது, முழு உலகின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி (WID), பின்வரும் வரைபடம் 1995 முதல் 2021 வரை பொருளாதாரரீதியாக மேல்மட்டத்திலுள்ள 1% மற்றும் கீழ்மட்டத்திலுள்ள 50% மக்களுக்கு இடையே அதிகரித்து வரும் செல்வ இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக் கோடு மேல் 1% மற்றும் நீலக் கோடு கீழ் 50% ஐக் குறிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், மேல் 1% மற்றும் கீழ் 50% இடையே அதிகரித்து வரும் வருமான சமத்துவமின்மையை மேலே உள்ள வரைபடம் காட்டுகிறது. 1922 முதல் 2021 வரையிலான கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மையைப் பின்வரும் வரைபடம் சித்தரிக்கிறது. சிவப்புக் கோடு மேல் 1% மற்றும் நீலக் கோடு கீழே 50% ஐக் குறிக்கிறது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி, இந்தியாவில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்து ஆழமாக விவாதித்தார். உயர்மட்ட 10% மக்களின் வருமானத்தை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது, 2015இல் ரஷ்யா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது. இந்தியாவில் செல்வ செறிவு அதிகமாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. வறுமையைப் போலவே சமத்துவமின்மையும் ஒரு சமூகக் கேடு. இந்தியாவில் செல்வத்துடன் கூடவே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ளன என்றும் அவற்றுக்கிடையே பிரிக்க முடியாத உறவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப புள்ளிவிவரங்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பார்வையை முன்னிலைப்படுத்தி, மற்ற சிக்கல்களைத் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். மேலும் சிலர் சாமர்த்தியமாக, அந்தப் பிரச்னைகள் வெளியே தெரியவராமல் பார்த்துக் கொள்கின்றனர். அரசு விவாதித்து வருகிறது... ஆனால், இன்னும்... நான்காவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இருந்து 2020-21 பொருளாதார ஆய்வு வரை, ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைப் பற்றி சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்திய அரசு விவாதித்து வருகிறது. ''தனி நபர்களுக்கு நன்மை செய்வது வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் அல்ல. வளர்ச்சிப் பயணம் சமத்துவத்தை நோக்கி இருக்க வேண்டும்''. 1969-74ல் நான்காவது ஐந்தாண்டு திட்டம் இவ்வாறு அறிவித்தது. 2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை, "வறுமையே புரட்சி மற்றும் குற்றங்களின் பெற்றோர்" என்ற அரிஸ்டாட்டிலின் வரியுடன் தொடங்குகிறது. இந்த அறிக்கை ஏற்றத்தாழ்வு குறித்துப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான தாமஸ் பிகெட்டியின் பணியை விரிவாக விவாதித்தது. இருப்பினும், அதிகரிக்கும் செல்வத்துடன் வறுமை குறைவதால், இந்தக் கட்டத்தில் செல்வத்தை அதிகரிப்பது சமத்துவமின்மையை விட முக்கியமானது என்ற வரிகளுடன் அறிக்கை முடிந்தது. இது இந்திய அரசு செல்லும் திசையைக் காட்டுகிறது. தற்போது போதுமான செல்வம் இல்லாததால், அதை மறுபகிர்வு செய்வது என்பது வறுமையை மறுபகிர்வு செய்வதையே குறிக்கும், எனவே, செல்வத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல் ஐந்தாண்டுத் திட்டம் கூறியது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் டாப்-10 பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள இந்த சூழலிலும் இந்திய அரசு இன்னும் அதே கொள்கையை பின்பற்றுகிறது. 1936-ம் ஆண்டு மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா முன்மொழிந்த தொழில் கொள்கை முதல் 2020-21 பொருளாதார ஆய்வறிக்கை வரையிலான இந்தியாவின் தொழில்துறை பயணத்தைப் பார்த்தால், இவை அனைத்தும் செல்வச் செறிவுக்கு மட்டுமே வழிவகுத்தது. சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன? 20 வருடங்களுக்கு முன்பு தொலைந்த இந்திய பெண் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு தீவிர வறுமையைக் குறைப்பது, கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தூண்டுவது, அவர்களை தொழில்துறை பொருட்களின் நுகர்வோராக மாற்றுவது ஆகியன பயணத்தின் மறுபக்கமாக இருந்தது. 90கள் வரை எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், போட்டி இல்லாததால், கடந்த காலத்தில் இந்தியா பாதிக்கப்பட்டது என்று பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சோஷியலிச மாதிரியால் இந்தியா ஒரு விளிம்பு சக்தியாகவே இருந்தது என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள். முக்கியமாக நேரு மற்றும் இந்திரா காந்தியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுத்ததாகவும் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் காரணமாக இந்தியா அந்தத் தளைகளிலிருந்து வெளியே வர முடிந்தது என்றும் இன்று நாம் காணும் செல்வம் அவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டதுதான் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் சீர்திருத்தங்களைத் தூண்டிய இன்ஜின்கள் என்பது உண்மைதான். இருப்பினும் நாம் அதைக் கடந்து சென்று இதைப் பார்க்க வேண்டும். சீர்திருத்தங்களைத் தொடங்க அவர்களைத் தூண்டிய ஒரு வரலாற்று பரிணாமம் இருந்தது. அந்தக் காலத்து தொழிலதிபர்கள்தான் போட்டி வேண்டாம் என்று சொன்னார்கள் இந்தியாவின் தொழிலதிபர்கள் தான் முதலில் போட்டியை எதிர்த்தார்கள் மற்றும் உள்நாட்டு தொழில்களைப் பாதுகாக்க அரசை வலியுறுத்தினார்கள். அரசின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு தொழில்களிடமிருந்து போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் ஆரம்ப கட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். அது நேருவின் சுயகற்பனை அல்ல. நாம் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தபோது, ஜே.ஆர்.டி.டாடாவின் தலைமையில் 9 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழு 1944-45ல் பம்பாய் திட்டத்தை வகுத்தது. அந்த நேரத்தில் தொழிலதிபர்களின் சிந்தனை எப்படியிருந்தது என்பதை இந்தத் திட்டம் சொல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வளங்கள், நுகர்வோர் பொருட்கள், தொலைபேசி, ஸ்கூட்டர்கள் அல்லது எதுவாக இருந்தாலும், எல்லாமே ஏதோ ஒருவரின் ஏகபோகமாக இருந்தது போட்டித்தன்மை: வெளிநாட்டுப் போட்டியைத் தாங்கும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்றும், கட்டுப்பாடுகளும் முறைப்படுத்தல்களும் இருக்க வேண்டும் என்றும் அப்போது தொழில்துறையினர் வலியுறுத்தினர். அரசு முதலீடுகள்: வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்ததோடு கூடவே உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காக அரசு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பாம்பே குழுமம் கூறியது. இருப்பினும் உரிமம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கொள்கைகள் ஏகபோகத்தை விளைவித்தன. ஏகபோக விசாரணைக் குழுவே அதைப்பற்றி குறிப்பிட்டது. ஏகபோகத்தின் காரணமாக திறன் விரிவாக்கம் இல்லை மற்றும் நுகர்வோர் பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வளங்கள், நுகர்வோர் பொருட்கள், தொலைபேசி, ஸ்கூட்டர்கள் அல்லது எதுவாக இருந்தாலும், எல்லாமே ஏதோ ஒருவரின் ஏகபோகமாக இருந்தது. முதலாளித்துவத்தை உருவாக்கிய அரசு முதலாளித்துவத்தை அரசுப் பணம் மூலம் ஊக்குவிப்பது சுதந்திர இந்தியாவின் வரலாறு முழுவதும் இருந்து வருகிறது. 1955-56ல் நாடாளுமன்றத்தில் நேரு ஆற்றிய உரை இந்தத் தொழில் கொள்கையைச் சுற்றியே இருந்தது. ரஷ்யா மற்றும் சீனாவைப் போலவே, இங்கும், எஃகு உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டது. நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. மூலதன விரிவாக்கத்திற்கு அரசு மிகவும் முக்கியமானது என்பதும் அரசுதான் முதலீட்டாளராக இருந்தது என்றும் முதலாளித்துவத்தை உருவாக்கியது என்றும் ஆரம்பத்திலேயே உணரப்பட்டது. 'பெரிய தொழிற்சாலைகளை நிறுவும் செலவை தனியார் துறையால் தாங்க முடியாவிட்டால், அரசே பொறுப்பேற்கும்' என்று இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கூறப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில்துறை அந்த இடத்தைப் பிடித்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், உணவு தானியங்களை இறக்குமதி செய்வதன் அவசியத்தை முறியடித்து, உபரி நிலைக்கு வளர்ச்சியடைவதே இலக்கு என்று அறிவித்தது. இத்தகைய உபரி, புதிய மூலதனத்தையும் முதலாளித்துவத்தையும் உருவாக்குகிறது என்று உலகளாவிய செயல்முறைகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இதுவே நடந்தது. அம்பானி vs அதானி: 5ஜி உரிமத்துக்கு போட்டி போடும் பெரு முதலாளிகள் இந்திய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் - விதிகள் சொல்வது என்ன? வீட்டில் கொடியேற்றும் முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய 10 தகவல்கள் சமூக மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் 1980களில் உணவு தானிய பற்றாக்குறையை இந்தியா முறியடித்தது. இன்று உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நாடு உள்ளது. இந்த மாற்றத்தில் பசுமைப் புரட்சி முக்கியப் பங்கு வகித்தது. அதன் மூலம், விவசாயத்தில் ஈடுபடும் சாதியினரிடையே ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவானது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த கம்மாக்களும் ரெட்டிகளும் அத்தகைய ஓர் உதாரணம். ஹரியானா மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஜாட்கள் மற்றும் சீக்கியர்கள் (சீக்கியர்களிடையே கூட ஜாட்கள் அதிகமாக உள்ளனர்) வணிகர்களாக ஆனார்கள். எனவே, இந்த வளர்ச்சி சில சாதிகளுக்கு அதிக செல்வத்தை மறுபகிர்வு செய்தது. சமூக சமத்துவமின்மை இங்கே உள்ளது. நகரத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியின் காரணமாக, பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தொழில்மயமாக்கலில் பின்தங்கியுள்ளன. அதே நேரத்தில், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் முன்னேறிச் சென்றுள்ளன. சுதந்திரத்தின் போது பிகாரும் மேற்கு வங்கமும் பம்பாய்க்கு சமமாக தொழில்துறையில் விளங்கின. ஆனால், இன்று அவை பின்தங்கியுள்ளன. இது பொருளாதார மற்றும் சமூகத் துறைகளிலும் காணக்கூடிய மாற்றம். மேற்கு வங்கத்தில் கொல்கத்தா போன்ற ஒரு பெருநகரம் இருந்தாலும், நிலச் சீர்திருத்தங்களைக் கடுமையாக அமல்படுத்தியது மற்றும் விவசாய உபரிகளை தனியார் மூலதனமாகக் குவிக்காதது போன்றவை தொழில்துறையில் பின்தங்கிய அதன் தற்போதைய நிலைக்குக் காரணம் என்று ஒரு வாதம் உள்ளது. அதே நேரத்தில், இடதுசாரி ஆட்சியின் போது வேலை கலாசாரம் பாதிக்கப்பட்டது என்ற வாதமும் உள்ளது. மறுபுறம், மேற்கு வங்கம் போன்ற ஓரிடத்தில், நல்ல பணி நிலைமைகள் மற்றும் சிறந்த ஊதியம் போன்ற உரிமைகள் பற்றிய உணர்வு மக்களிடையே ஊடுருவி இருப்பதால், முதலாளிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். மேற்கு வங்கம் இன்று பலரின் ஆய்வுப் பொருளாக உள்ளது. பற்றாக்குறையில் இருந்து உபரி 1960களில், நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவிலிருந்து உணவுதானிய இறக்குமதியைச் சார்ந்திருந்தது. உபரியான உணவு தானியங்களை என்ன செய்வது என்று தெரியாத நிலை இன்று உள்ளது. பசுமைப் புரட்சியும் அதற்குப் பிறகான செயல்முறைகளும் இதற்குக் காரணம். மூலதனம் விவசாய உபரியில் இருந்து வெளிவருகிறது என்பதை அறிந்திருந்தும், தேவையான சாதகமான சூழலை வழங்குவதற்கு ஆரம்பக் கட்டத்தில் அரசு தவறிவிட்டது. விவசாயத்தில் பின்தங்கிய சாகுபடி முறைகள் காரணமாக அதிக மகசூல் இல்லாதது பெரிய தடையாக மாறியது. இன்று பயிரிடப்படும் நிலம் குறைந்தாலும் விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதுவொரு முக்கியமான மாற்றம். பசுமைப் புரட்சி, லால் பகதூர் சாஸ்திரியால் தொடங்கப்பட்டு, இந்திரா காந்தியால் தொடரப்பட்டது. அதன் உத்வேகத்தால் ஏற்பட்ட விவசாயத் தொழில்நுட்ப மாற்றங்கள் இன்று நாம் கண்டுவரும் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அதே நேரத்தில், தொலைநோக்குப் பார்வை கொண்ட நேருவால் தொடங்கப்பட்ட அணைகள் கட்டுமானம் கை கொடுத்தன. பொருளாதார அமைப்பு முறை, நிதிப் பற்றாக்குறையிலிருந்து உபரியாக மாற்றப்பட்டது. குறிப்பாக பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகள் மற்றும் சாதிகள் மத்தியில் புதிய முதலாளிகள் களத்தில் நுழைந்தனர். ஆந்திராவில் மருந்துத் துறை, சினிமா, ஊடகம் எனப் பெரும்பாலான துறைகள் பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகளிலிருந்து வந்த மக்களுக்குச் சொந்தமானது என்பது தற்செயல் நிகழ்வல்ல. இது ஆந்திராவில் மட்டுமல்லாமல் ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு அல்லது கங்கை சமவெளிகள் என்று எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பசுமைப் புரட்சியால் பயனடைந்த எல்லா இடங்களிலும் இந்த நிகழ்வைக் காண முடிகிறது. தொழில்துறை மூலதனம் மற்றும் தொழிலதிபர்கள் விவசாய உபரியிலிருந்து வெளிப்படுவது ஓர் உலகளாவிய நிகழ்வு. ஆயினும் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய விவசாய உபரி வளர்ச்சிக்காக இந்தியா நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் வங்கிகளின் அதிகரித்த ஊடுருவல், வைப்புத்தொகை வடிவில் ஏராளமான பணத்தைக் கொண்டுவந்தது. மேலும் வரிகள் மூலமான வருவாயும் தொழிலதிபர்களுக்கு அரசு தாராளமாகக் கடன்களை வழங்க உதவியது. இந்தச் செயல்பாட்டின்போது பெரும் கடன்களைப் பெற்று, அவற்றைத் திருப்பிச் செலுத்தாத பழக்கம் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகள் மற்றும் சாதிகள் மத்தியில் புதிய முதலாளிகள் களத்தில் நுழைந்தனர் சீனாவுடன் ஒப்பிடும் போது 12 ஆண்டுகள் தாமதம் சீனாவில் சீர்திருத்தங்கள் 1978இல் தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் அதுபற்றிய சிந்தனையே அந்த நேரத்தில் தான் தொடங்கியது. இந்திரா காந்தி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இருப்பினும், அவரது திடீர் மரணத்த்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி அதை முன்னெடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அந்த தசாப்தத்தில் அரசியல் குழப்பம் காரணமாக அவருடைய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒருவகையில், இந்தியாவில் சீர்திருத்தங்கள் 12 ஆண்டுகள் தாமதமாயின என்று சொல்லலாம். 1991இல் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடியின் போது தங்கத்தை அடமானம் வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சீர்திருத்தங்களைத் தவிர்க்க முடியாததாக மாற்றியது. இதையடுத்து, பி.வி. நரசிம்மராவ் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சீர்திருத்தங்களைத் தொடங்கினார். திறமையான பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் தலைமையில் அவை வேகமாகச் செயல்படுத்தப்பட்டன. தொழில்மயமாக்கலின் மூன்று கட்டங்கள் பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங்கின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் அதேநேரம் இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பின்னால் ஒரு வரலாற்று செயல்முறை இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் தொழில் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த கட்டத்தில் இது அரசு-தனியார் கூட்டாளித்துவமாக மாறியது கடைசி கட்டத்தில் அதாவது, தற்போதைய கட்டத்தில், தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது இந்திய தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயணத்தில் இந்த மூன்று கட்டங்களையும் தெளிவாகக் காணலாம். இந்த மூன்று கட்டங்களும் காலவரிசைப்படி நடந்தன என்பதும் தனியார் முதலாளிகளை உருவாக்கிய பிறகு அரசு பல துறைகளில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, சீர்திருத்தங்கள் கொண்டு வந்த முன்னேற்றத்தையும் இந்த முன்னேற்றம் உருவாக்கிய செல்வத்தையும் அங்கீகரிக்கும் அதே வேளையில், வறுமையைக் குறைத்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். அதே சமயம், சமத்துவமின்மை மிக அதிகளவில், அபாயகரமான வேகத்தில் உயர்ந்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. 'வறுமையே புரட்சிக்கும் குற்றங்களுக்கும் பெற்றோர்' என்று அரசு அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது. எனவே ஏற்றத்தாழ்வுகளின் எழுச்சியைத் தடுக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். https://www.bbc.com/tamil/india-62524776
  21. தூரநோக்கமும் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் வேணும். குறுகிய இடங்களில் மைதானத்தை அமைத்துவிட்டு விரிவாக்கம் செய்ய இடமில்லாது போய்விடும். சர்வதேச தரத்திற்கு போதிய இடவசதி வேண்டும். வடமாகாணத்திற்கு மத்தியில் இருப்பதாலும் போதிய இடவசதியை கொண்டிருப்பதாலும் மாங்குளம் பகுதி பொருத்தமாக இருக்கும். யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பயிற்சி பெற, பயிற்சி ஆட்டங்களுக்குமான மைதானங்களை அமைக்கலாம்.
  22. திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, கரந்தமலையைச் சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் பரவின. நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அவை பரவின. இப்போது கிராமப்பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இவை கண்களை மட்டுமே பதம் பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் காட்டிலுள்ள பாம்பு, முயல் போன்ற காட்டுயிர்கள் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்களின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுடைய கன்றுகளையும் இவை கொல்வதாகவும் எறும்புகள் பரவியுள்ள மலையடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்வதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. "இது புதுவகையான எறும்பாக உள்ளது. இதுபோன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை. இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால், காட்டுயிர்கள் அழிகின்றன" என்று கரந்தமலை வனத்துறை வனவர் முத்துச்சாமி கூறியதாகவும் தினமலர் குறிப்பிட்டுளது. முதல் உறவில் 'கன்னித் திரையை' தேடும் கணவர்கள்: கொதிக்கும் பெண்கள் யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாவது ஏன்? சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து - பேச முடியாத நிலையில் வென்டிலேட்டரில் இருப்பதாக தகவல் நத்தம் கால்நடை மருத்துவர் சங்கமுத்து "இப்படியொரு எறும்பு இருப்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்" என்று கூறியதாக தினமலர் செய்தி கூறுகிறது. இந்த எறும்புகளின் மீதான அச்சத்தில், அடிவாரத்தில் விவசாயம் செய்து வாரும் பல குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகவும் தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி குறித்த விவாதம் எப்போது? - காங்கிரஸ் கேள்வி தேர்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளுக்காக பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ள காங்கிரஸ், 'பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரி குறைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பது எப்போது?' என்று கேள்வியெழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, தேர்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது என்று பிரதமர் மோதி கடந்த மாதம் தெரிவித்தார். அதோடு பல்வேறு தருணங்களில் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக அவர் பேசி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் வெள்ளிக்கிழமையன்று, "கடந்த 5 ஆண்டுகளில் 9.92 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் 7.27 லட்சம் கோடி. இந்த கடனில் 1.03 லட்சம் கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20% வரை மீட்கப்படலாம் என்றாலும், 5.8 லட்சம் கோடி வாராக்கடன் மீட்கப்படாமல் தான் இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த வகையில், பெருநிறுவனங்களுக்கு வங்கிகள் 'இலவசமாக' வழங்கியுள்ள 5.8 லட்சம் கோடி ரூபாய் குறித்து எப்போது விவாதிப்பது? பெருநிறுவன வரி குறைப்பால் 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து எப்போது விவாதிக்கலாம்? உங்களுடைய பணக்கார நண்பர்களுக்கு வரி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்ற 'இலவசங்கள்' வழங்கப்படும்போது, ஏழை மக்களுக்குக் குறைந்த மதிப்பிலான நிதி அல்லது இதர உதவிகள் இலவசமாக வழங்கப்படக்கூடாதா? 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், புல்லட் ரயில் இயக்கம், நாட்டின் பொருளாதார மதிப்பு 398 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பிரதமர் மோதி தலைமையிலான அரசு ஏற்கெனவே அளித்திருந்தது. இந்தப் பொய் வாக்குறுதிகள் கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும்?" எனக் கேள்வியெழுப்பினார். நண்பரின் கருணைக் கொலையைத் தடுக்க நீதிமன்றத்தை நாடிய தோழி தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று அவருடைய தோழி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளார். ஆனால், அவர் ஸ்விட்சர்லாந்தில் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்ளவே செல்கிறார் எனக் கூறி அவருடைய தோழி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் அந்த மனுவில், "எனது நண்பருக்கு மையால்ஜிக் என்செஃபாலோமயலிட்டிஸ் என்ற நோய் பாதிப்புள்ளது. இந்த நோய் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் படுக்கை நோயாளியாக மாறியுள்ளார். அவரால் வீட்டிற்குள் கூட சில அடிகள் மட்டுமே நடக்க முடியும். இதனால் விரக்தியில் உள்ள என் நண்பர், ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக பயணப்படத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், இங்கு தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். என் நண்பருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்கள் மகனின் முடிவை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். என் நண்பர் கொரோனாவுக்கு முன்பு வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை செலவுகளை மேற்கொள்வதில் எவ்வித பண நெருக்கடியும் இல்லை. ஆகையால், அவர் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டு, உடல்நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று பெற்றோர், நண்பர்கள் விரும்புகிறோம். ஆகையால், அவரது விசாவுக்கு குடியேற்று அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனக் கோருகிறேன்," என்று கோரியுள்ளார். https://www.bbc.com/tamil/india-62531044
  23. சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? 13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது. ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதன் தலைப்பை சாத்தானின் வசனங்கள் என்று கூறலாம். இது அதற்கு முன்பு எந்தப் புத்தகமும் சந்திக்காத எதிப்பைச் சந்தித்தது. இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது. ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவர் தலைமறைவாகவே வாழ நேரிட்டது. பிரிட்டிஷ் அரசு அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது. சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு இரானின் உச்சபட்ச மதத் தலைவராக இருந்த அயதுல்லா ருஹோல்லா கோமேனி, ஃபத்வா என்படும் மதக்கட்டளையை 1989ஆம் ஆண்டு பிறப்பித்தார். இந்தப் பிரச்னைக்காக இரானும் பிரிட்டனும் தங்களது அரசுமுறை ராஜ்ஜீய உறவுகளை முறித்துக் கொண்டன. இஸ்லாமியர்களின் தீவிரமான எதிர்வினையால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கண்டித்தனர். இஸ்லாம் மற்றும் முகமது நபிகள் குறித்து இந்தியாவுக்கு அறிவுரை கூறினாரா புதின்? இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு சல்மான் ருஷ்டி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அப்போதைய பம்பாயில் பிறந்தார். 14 வயதில் அவர் இங்கிலாந்துக்கு படிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாத்தானின் வசனங்கள் புத்தகம் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைத்தது. தனது இஸ்லாமிய மத நம்பிக்கைகளைத் துறந்தார். சில காலம் ஒரு நடிகராவும் இருந்தார். அதன் பிறகு நாவல்களை எழுதத் தொடங்கினார். அவரது முதல் புத்தகமான 'க்ரிமஸ்' பெரிதாக வெற்றியடைவில்லை. ஆனால் அவருக்குத் திறமை இருப்பதை எழுத்துலகம் புரிந்து கொள்ள அது அவருக்கு உதவியது. தனது இரண்டாவது புத்தகமான மிட்நைட்ஸ் சில்ட்ரனை எழுத ருஷ்டிக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. இது பரவலாகப் பாராட்டப்பட்டது. 5 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. மிட்நைட்ஸ் சில்ட்ரன் இந்தியாவைப் பற்றி பேசியது. 1983இல் வெளியான அடுத்த நாவலான 'ஷேம்' பாகிஸ்தானைப் பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருஷ்டி நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய 'தி ஜாகுவார் ஸ்மைல்' நாவலை எழுதினார். செப்டம்பர் 1988ஆம் ஆண்டு அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சாத்தானிக் வெர்சஸ் நாவல் வெளியிடப்பட்டது. இந்த பின்-நவீனத்துவ நாவல் முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் தங்களது மதத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1989-ஆம் ஆண்டு பாரிஸில் சல்மான் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது இதற்குத் தடை விதித்த முதல் நாடு இந்தியா. அதன் பிறகு பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் இந்தியாவைப் பின்பற்றி ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்தன. ஆயினும் எழுத்துலகில் இந்த நாவல் பாரட்டப்பட்டது. நாவல்களுக்கு வழங்கப்படும் விட்பிரெட் பரிசைப் பெற்றது. ஆனால் நாவல் பிரபலமாகும் போதே அதற்கான எதிர்ப்பும் கடுமையாக அதிகரித்தது. ஏராளமானோர் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். சில முஸ்லிம்கள் இந்த நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கருதினர். கதையில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல அம்சங்களை முஸ்லிம்கள் கண்டித்தனர். சாத்தானின் வசனங்கள் என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறது. அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நம்பியதாகக் கருதப்படுகிறது. 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் முஸ்லிம்கள் புத்தகத்தின் நகலை எரித்தனர். செய்தித்தாள் முகவர்கள் அவரது புத்தகங்களைக் காட்சிப் படுத்துவதை நிறுத்தினர். ஆனால் தன் மீதான மத நிந்தனை குற்றச்சாட்டுகளை ருஷ்டி நிராகரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது. ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பிரிட்டனின் சில முஸ்லிம் தலைவர்கள் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் மற்றவர்கள் இரானின் உச்சபட்ச மதத் தலைவரை ஆதரித்தனர். ருஷ்டி மீதான கொலை மிரட்டல்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதன் பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் போலீஸ் பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஆனாலும் இரானின் உச்சபட்ச மதத் தலைவரான கோமேனி, ருஷ்டிக்கு எதிரான பத்வாவை மீண்டும் பிறப்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ருஷ்டியை போலவே அதை விற்பனை செய்தவர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. அதே நேரத்தில் அந்தப் புத்தகம் அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறம் உள்ள நாடுகளிலும் பரபரப்பாக விற்பனையாகியது. பிரிட்டனை போலவே ஐரோப்பிய நாடுகள் ருஷ்டியை ஆதரித்தன். பெரும்பாலான நாடுகள் தெஹ்ரானில் இருந்து தூதர்களைத் திரும்பப் பெற்றன. இதனிடையே 1991ஆம் ஆண்டு ஜூலையில் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த ஹிடோஷி என்பவர் டோக்கியோவில் கொல்லப்பட்டார். உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். அதே மாதத் தொடக்கத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ, மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார். எனினும் அவர் உயிர் பிழைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 1998ஆம் ஆண்டில் இரான் அரசு மனம் மாறியது. ருஷ்டிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பத்வாவுக்கான தனது அதிகாரபூர்வமாக ஆதரவை விலக்கிக் கொண்டது. சாத்தானின் வசனங்கள் புத்தகத்துக்குப் பிறகும் பல புத்தகங்களை ருஷ்டி எழுதியுள்ளார். ஹாரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரிஸ் (1990), இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ் (1991), தி மூர்ஸ் லாஸ்ட் சை (1995), தி கிரவுண்ட் உள்ளிட்டவை அடங்கும். ருஷ்டி நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இலக்கியத்திற்கான அவரது சேவைகளுக்காக 2007ஆம் ஆண்டில் அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில், சாத்தானின் வசனங்கள் பற்றிய சர்ச்சையை ஒட்டிய தனது வாழ்க்கையின் நினைவுகளைப் புத்தகமாக வெளியிட்டார். https://www.bbc.com/tamil/global-62530835
  24. நேதாஜி படையின் சிவகாமி அம்மாள்: 'குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றினோம்' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள் இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள். பிபிசி தமிழுக்காக தன்னுடைய சுதந்திர போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சிவகாமி அம்மாளுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம். ஊரில் கடன் அதிகமாகவே, ஒன்றரை வயதாக இருந்த சிவகாமி அம்மாள் மற்றும் 6 வயதான அவருடைய அண்ணனை அழைத்துக் கொண்டு மலேசியாவின் பினாங் நகருக்குச் சென்றுள்ளார் அவர்களின் தந்தை. அங்கு சிறிது காலம் தங்கியிருந்த பிறகு, கோலாலம்பூரில் நேதாஜியின் இந்திய சுதந்திர லீக் (Indian Independent League) படைப்பிரிவு குறித்து அறிந்து அங்கு போய் குடும்பத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் சிவகாமி அம்மாளின் தந்தை. பட மூலாதாரம்,SIVAKAMI AMMAL இதனால் சிறுவயதிலேயே சிவகாமி அம்மாளுக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் எண்ணம் வந்திருக்கிறது. தன்னுடைய 10 வயதில் நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் நாடகங்களில் நடித்து சுதந்திர போராட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பணியில் சிவகாமி அம்மாள் ஈடுபட்டிருந்தார். அதிலும் நாடகங்களில் ஜான்சி ராணி வேடத்தில் இவர் நடித்தால் கைத்தட்டல் விண்ணைப் பிளக்குமாம். "நான் வெள்ளையனே வெளியேறு என்ற நாடகத்தில் ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கும்போது, என் நடிப்பைப் பார்க்கும் மக்கள் தாங்களும் இந்திய சுதந்திர லீக் படைப் பிரிவில் சேர வேண்டும் என்றும் எங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்வார்கள். சுதந்திரப் போராட்டத்திற்காக மக்கள் எதையும் இழக்கத் தயாராக இருந்தார்கள். நான் புரட்சி நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நேதாஜி சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் மற்றும் ஜான்சி ராணி படையைத் தயார் செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் கோலாலம்பூருக்கு வந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்த நாடகத்தை, பாதி நாடகம் முடிந்திருந்த நிலையில் வந்து பார்த்தார். காணொளிக் குறிப்பு, நேதாஜி படையில் இருந்த அனுபவத்தைப் பகிரும் 90 வயது பாட்டி நாடகத்தை முடித்துவிட்டுச் செல்லும் போது, நாளை நான் வந்த பிறகு தான் நாடகத்தைத் தொடங்க வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாள், நான் நடித்த நாடகத்தில், வெள்ளைக்காரன் ஒருவனை அடிக்கும் சண்டைக் காட்சியில் அவனை வீழ்த்தி விட்டு பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மார்பிலிருந்த கொடியை இறக்கி விட்டு நம் தேசியக் கொடியை ஏற்றுவேன். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு சிலிர்த்துப் போன நேதாஜி தொடர்ந்து கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தார்," என்கிறார் சிவகாமி அம்மாள். இந்தத் தகவல் கர்னல் அழகப்பா மூலம் சிவகாமி அம்மாளுக்குத் தெரிய வந்துள்ளது. அதற்குக் காரணம் அங்கு தகவல் பரிமாற்றம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடக்கும். அந்தத் தகவல்களை தமிழ் மொழியில் சிவகாமி அம்மாள் உள்ளிட்டவர்களுக்கு தெரிவிப்பவர் கர்னல் அழகப்பா தான். பட மூலாதாரம்,SIVAKAMI AMMAL பர்மாவுக்கு அழைத்த நேதாஜி சிங்கப்பூரில் ஒரு மிகப் பெரிய திரைப்படக் கொட்டகை வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் பர்மாவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கத் தயார் நிலையில் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் சிவகாமி அம்மாளின் நாடகத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறார் நேதாஜி. "ஆயிரக்கணக்காணோர் மத்தியில் வீர எழுச்சியுடன் ஜான்சி ராணி வேடமிட்டு நடித்தேன். நாடகம் முடிந்ததும் என் அருகே வந்த நேதாஜி, என் தோளில் தட்டி, அடுத்த முறை நான் இங்கே வரும்போது நீங்கள் என்னுடன் பர்மா வந்துவிடுங்கள் என்று சொன்னார். நான் அச்சா என்று ஹிந்தியில் சொன்னேன். உடனே நேதாஜி, ஓ உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? பர்மா வாருங்கள் நான் அனைத்தும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். ஆனால் என்னால் போக முடியவில்லை. இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவேன். இதுவரை எனக்கு வாழ்க்கையில் உற்சாகத்தைக் கொடுத்து வருவது நேதாஜியின் வார்த்தைகள் தான். அவர் சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் எங்கு சென்றாலும் என்னால் தைரியமாக பேச முடிகிறது. எனக்கு 90 வயதானாலும் என் மனது இன்னும் தளரவில்லை. பொறுமையாக இருங்கள், வீரத்துடன் சண்டையிட்டு வெள்ளைக்காரர்களை விரட்டுங்கள் என்று நேதாஜி முழங்குவார். பட மூலாதாரம்,SIVAKAMI AMMAL படக்குறிப்பு, நேதாஜியின் வார்த்தைகள் இன்றும் காதில் கேட்பதாகச் சொல்கிறார் சிவகாமி அம்மாள் அது இன்றுவரை காதில் கேட்கிறது," என்று சொல்லும்போது சிவகாமி அம்மாளின் உறுதி, அவரின் வார்த்தைகளைத் தாண்டி கண்களில் தெரிகிறது. ராஸ்பிகாரி போஸ், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்திருக்கிறார் சிவகாமி அம்மாள். நேருவுடன் நடந்த சந்திப்பின் போது, இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க உங்களின் சேவை தொடர வேண்டும் என்று நேரு இவரிடம் சொல்லியிருக்கிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் சிவகாமி அம்மாளுக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. எதிர்பட்ட எல்லா மனிதர்களிடத்திலும் தன் அன்பையும் தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். 1949ஆம் ஆண்டு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண பத்திரிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அச்சடிக்கப்பட்டது. ஆனால் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே கணவர் இறந்துவிட்டார். இன்று வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார் சிவகாமி அம்மாள். தன்னுடைய பென்ஷன் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்கிறார். அவர் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். "நாங்கள் கஷ்டப்பட்டு பெற்றுத் தந்த சுதந்திரத்தைக் காக்கும் விதமாக நல்ல எண்ணங்களோடு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை," என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் சிவகாமி அம்மாள். https://www.bbc.com/tamil/india-62524041
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.