Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் பெருமாள் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  2. சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம் Play video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,41 01:41 காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம் 12 நவம்பர் 2022, 03:05 GMT பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது. டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர். இப்போது பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது பூனை மீட்புப் பணிக்கு நிதியளிப்பதற்காக குடும்பத்தினர் தங்கள் வணிகம், கார் மற்றும் திருமண மோதிரங்களை கூட விற்றுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c72d2g7pn32o
  3. வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் விடுதலை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நளினியை கைப்பிடித்து அழைத்து வந்த அவரது சகோதரர் பாக்கியநாதன். | படம்: வி.எம்‌.மணிநாதன் சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பரோலில் இருந்து நளினியை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, அவரை விடுதலை செய்தனர். இதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் நடைமுறைகள் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் முன்னதாக, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் சற்றும் சாந்தனை வழக்கறிஞர் ராஜகுரு நேற்று சந்தித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘முருகன் விடுதலையானதும் காட்பாடியில் சில நாட்கள் தங்கியிருந்து லண்டன் செல்வது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். சாந்தன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு இலங்கை செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்” என்றார். நளினி - முருகன் முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது. மேலும், ‘‘பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நன்னடத்தை, அங்கு பயின்ற கல்வி, பரோல் விதிமுறைகள், மருத்துவ ஆவணங்கள், ஆளுநர் ஏற்படுத்திய தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் உள்ளார். சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களும் நடைமுறைகளுக்குப் பிறகு விடுவிக்கப்படவுள்ளனர். https://www.hindutamil.in/news/tamilnadu/895949-3-people-including-nalini-released-from-vellore-jail-1.html
  4. மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது By DIGITAL DESK 3 12 NOV, 2022 | 05:53 PM மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது. நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது. இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர், 1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான போட்டியில் கனடாவை பிரான்ஸ் அணி 36:0 விகிதத்தில் வென்றது. https://www.virakesari.lk/article/139831
  5. 6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் By RAJEEBAN 12 NOV, 2022 | 02:47 PM ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை கடந்த மே மாதம், 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 6 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தவறானது என்றும் கூறியுள்ளார். 6 பேர் விடுதலைக்கு எதிராக உறுதியான கருத்தை காங்கிரஸ் கொண்டிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ராமேஷ், இதனை முற்றிலும் நியாயப்படுத்த முடியாததாகவும் காங்கிரஸ் கருதுவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், 6 பேரும் நிரபராதிகள் எனக்கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவர்களின் விடுதலையை யாரும் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 6 பேரும் ஹீரோக்கள் அல்ல எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார். https://www.virakesari.lk/article/139813
  6. நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி By T. SARANYA 12 NOV, 2022 | 03:43 PM ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஆயுதப் படைகள் மற்றும் 2030 பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் ஏன் இந்தளவு கவனம் செலுத்துகிறது என சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. 'நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம். நாம் பிறந்த போது இந்து சமுத்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது இந்து சமுத்திரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை. கப்பல் போக்குவரத்தை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் ஏற்றுமதி பொருளாதாரத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முடியாது. எனவே பொருட்களைக் கொண்டு செல்வதில் தடைகள் ஏற்பட்டால் என்ன நடக்கும். 2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் சூழல் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலும், பொருட்களை கொண்டு செல்லும் திறனிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஏனைய தரப்பினரின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் அதன்போது, அரசியல் மற்றும் இராஜதந்திர திறன்களைப் போன்று இராணுவத் திறன்களையும் நாம் பயன்படுத்தி எமது குடிவரவு உரிமைகள் மற்றும் தரை மற்றும் கடல் மார்க்கமாக பயணிப்பதற்கான எமது உரிமைகள் என்பன எவ்வகையிலும் தடைபடாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணப் பல்கலைக்கழகத்தை விட சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சேர்வதையே பலரும் விரும்புகின்றனர். அதற்காக பாராட்டைத் தெரிவித்ததோடு, சமூக பாடங்களுக்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வளாகத்தை குருணாகலில் ஆரம்பிக்குமாறு நிதியமைச்சிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139820
  7. ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு: வீதிகளில் வெற்றிக் களிப்பில் யுக்ரேனிய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி,பிபிசி நியூஸ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS யுக்ரேனின் முக்கிய தெற்கு நகரமான கெர்சன் பகுதியில் இருந்து படைகளை ரஷ்யா முழுமையாக திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், யுக்ரேனிய ராணுவ வீரர்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். யுக்ரேனிய வீரர்கள் நகருக்குள் வருகை தந்த போது பொதுமக்கள் தேசியக் கொடியை அசைத்து முழக்கமிடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. சிலர் தேசபக்திப் பாடல்களைப் பாடினர். பிப்ரவரியில் தொடங்கிய படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் மட்டுமே. எனவே, இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை போரின் மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 30,000 ராணுவ வீரர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. அதேபோல, சுமார் 5,000 ராணுவ வன்பொருட்கள், ஆயுதங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. யுக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இதை வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்ட நிலையில், அமெரிக்கா அசாதாரண வெற்றி என்று பாராட்டியுள்ளது. ஆனால், யுக்ரைனின் வெளியுறவு அமைச்சர் போர் தொடர்கிறது என்று கூறியுள்ளார். கம்போடியாவில் ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிமிட்ரோ குலேபா, “நாங்கள் களத்தில் போர்களில் வெற்றி பெறுகிறோம். ஆனால் போர் தொடர்கிறது” என்று கூறினார். டினிப்ரோ ஆற்றின் மேற்குக்கரை வரை துருப்புகள் முன்னோக்கித் தள்ளப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை யுக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆற்றைக் கடக்க உதவும் முக்கிய பாலமான அன்டோனிவ்ஸ்கி பாலம் பகுதியளவு இடிந்துள்ள படங்களும் வெளியாகியுள்ளன. இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு, சேதமடைந்த பாலத்தின் செயற்கைக்கோள் படம் கெர்சனை ஆக்கிரமித்த ரஷ்ய துருப்புகள் ஆற்றின் கிழக்குப் பகுதியில் புதிய நிலைகளை எடுப்பதாகக் கருதப்படுகிறது. தெருக்களில் மக்கள் பாடி நடனமாடியபோது ஒரு கெர்சன் குடியிருப்பாளர் தன்னுடைய மகிழ்ச்சியை விவரித்தார். முன்பு தன்னை ‘ஜிம்மி’ என்று மட்டுமே குறிப்பிட்ட அவர், தற்போது அலெக்ஸி சாண்டகோவ் என்ற தன்னுடைய முழுப் பெயரையும் பிபிசியிடம் வெளிப்படுத்தினார். “கெர்சன் இப்போது சுதந்திரமாக உள்ளது, இது வேறு மாதிரியாக உள்ளது, அனைவரும் இன்று காலையிலிருந்து அழுகிறார்கள்” எனக் கூறியதோடு, நகருக்குள் வருகை தந்த யுக்ரேனிய வீரர்களை அனைவரும் கட்டியணைக்க விரும்பியதாகவும் தெரிவித்தார். சமீபத்திய மாதங்களில் யுக்ரேனின் துரிதமான எதிர்த்தாக்குதலைத் தொடர்ந்து, நகரின் இந்தக் கட்டுப்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதல்களில் கெர்சன் அருகே 41 நிலைகளை மீண்டும் கைப்பற்றியதாக யுக்ரேன் தெரிவித்திருந்தது. அதிபர் ஜெலென்ஸ்கி தனது மாலை உரையில், கெர்சன் மக்கள் காத்திருந்ததாகவும், யுக்ரைனை ஒருபோதும் அவர்கள் கைவிடவில்லை என்றும் கூறினார். யுக்ரேன் - ரஷ்யா போர்: அணுக்கழிவு வெடிகுண்டு எனப்படும் 'டர்ட்டி பாம்' என்றால் என்ன?26 அக்டோபர் 2022 ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன?19 அக்டோபர் 2022 யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா? சமீபத்தில் கிடைத்த முக்கிய தடயங்கள்16 அக்டோபர் 2022 ரஷ்ய சின்னங்கள் உட்பட தெருக்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கியதற்கான அனைத்து தடயங்களையும் அகற்ற கெர்சன் பகுதி மக்கள் பணியாற்றியதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை அவமானகரமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றை மறுத்தார். கிழக்கு மற்றும் தெற்கு யுக்ரைனின் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட மாகாணங்களில் நடத்தப்பட்ட தாமே அறிவித்துக்கொண்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கெர்சன் பகுதிகளை தனது சொந்த பிரதேசமாக ரஷ்யா கருதுகிறது. இந்த வாக்கெடுப்பு சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்பப் பெற யுக்ரைன் தனது முயற்சிகளைத் தொடர்ந்தது. கெர்சன் பகுதியில் இருந்து தன்னுடைய படைகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய படைகள் பின்வாங்கியதற்கு கடந்த வியாழக்கிழமை பெரிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட 7 கிமீ வரை தாங்கள் முன்னேறியுள்ளதாக யுக்ரேன் தெரிவித்தது. ஆனால், வெள்ளிக்கிழமை ரஷ்ய துருப்புகள் வெளியேறுவது விரைவாக நடந்தது. கெர்சன் பகுதியை ரஷ்யர்கள் கைவிட்டதாக உள்ளூர் மக்களிடம் இருந்து ஆரம்பக்கட்ட தகவல்கள் கிடைத்தன. சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் கொடியை அசைத்து, யுக்ரேன் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. இன்று இரவு யாரும் தூங்கமாட்டார்கள் என்று வெள்ளிக்கிழமை நண்பகல் அலெக்ஸி சாண்டகோவ் தெரிவித்தார். கெர்சனில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி சேவை யுக்ரேனிய ஒளிபரப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டது. கெர்சன் பகுதி கிட்டத்தட்ட முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் யுக்ரேன் அதிகாரி தெரிவித்தார். மேலும், டினிப்ரோ ஆற்றின் மேற்கே பெரும் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்ய துருப்புகளின் கண்ணி பொறிகளின் அச்சத்திற்கு மத்தியில் யுக்ரேன் துருப்புகள் கவனமாக முன்னேறியதாக பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் கூறினார். அவர் பிபிசியிடம் பேசுகையில், சில ரஷ்ய வீரர்கள் நகரத்தில் தங்கியிருப்பதாக நம்பப்படுவதாகவும், அவர்கள் சீருடைகளைக் களைந்துவிட்டு, பொதுமக்கள் போல் மாறுவேடமிட முயன்றதாகவும் கூறினார். மேலும், அவர்களை சரணடையுமாறு யூரி சாக் வலியுறுத்தினார். கெர்சன் நகரம் மீண்டும் கைப்பற்றப்பட்டதையும் அவர் பாராட்டினார். எனினும், ரஷ்ய பதிலடி குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார். 2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகள் உட்பட மேலும் சில பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றுவோம் என்றும் அவர் உறுதிகொண்டுள்ளார். கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறுவதாக கடந்த புதன்கிழமை ராணுவம் அறிவித்ததில் இருந்து தற்போதுவரை அதிபர் புதின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/c4n2ge4jgnzo
  8. மிலிந்த மொரகொட - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு By NANTHINI 12 NOV, 2022 | 08:29 PM இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் இன்று சனிக்கிழமை (நவ 12) புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/139830
  9. மேத்யூ ஹேடன்: பாகிஸ்தானின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தவர் - செய்தது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,எம். மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் திடீரென் வீறு கொண்ட பாகிஸ்தான் அணி மிக எளிதாக வென்றது. இதில் பாபர் ஆஸமும் ரிஸ்வானும் மிகச் சிறப்பாக ஆடினார்கள். சாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோர் பந்தவீச்சால் திணறடித்தார்கள். இவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள். இவர்களுக்கு இடையே மற்றொருவரும் பாகிஸ்தானின் வெற்றிக்காக முன்னிறுத்தப்படுகிறார். அவர் மேத்யூ ஹேடன். பாகிஸ்தான் அணியின் ஆலோசகர். “மேத்யூ ஹேடனின் கீழ் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல” என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. என்ன செய்தார் மேத்யூ ஹேடன்? நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் பாபர் ஆஸம் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மேத்யூ ஹேடனை கட்டித் தழுவிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அது இருந்தது. அந்த உணர்ச்சிப் பெருக்குக்கு காரணம் உண்டு. தொடர் முழுவதுமே சரியாக ஆடாமல் இருந்த பாபர் ஆஸமை நியூஸிலாந்து போட்டிக்கு முன்னதாக உற்சாகப் படுத்தும் வகையில் பேசியிருந்தார் மேத்யூ ஹேடன். டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?11 நவம்பர் 2022 டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்10 நவம்பர் 2022 டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 “பாபர் போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் நீண்ட காலம் மோசான நிலையில் இருக்க மாட்டார்கள்” என்று அப்போது அவர் கூறியிருந்தார். ரிஸ்வானும் பாபரும்தான் உலகின் நம்பர் 1 தொடக்க ஆட்டக்காரர்கள் என்றும் அப்போது அவர் கூறினார். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுடன் பாபர் ஆஸமை ஒப்பிட்ட மேத்யூ ஹேடன், 2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கில்கிறிஸ்ட் ஆடியதைப் போல வரும் போட்டிகளில் பாபர் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அதுதான் நடந்தது. ரிஸ்வானும் பாபரும் அரைச் சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். 12.4 ஓவர்களில் அவர்கள் 105 ரன்களை எடுத்தனர். அதன் பிறகுதான் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மேத்யூ ஹேடனை அவர்கள் ஆரத் தழுவினர். “மேத்யூ ஹேடன் எப்போதுமே ஒரு தலைவர். இதயத்தில் இருந்து பேசக்கூடியவர். ஏதாவது தவறாகப் பட்டால் உடனடியாக அதைச் சுட்டிக்காட்டக் கூடியவர்” என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. “அவருடைய வேட்கையும் அர்ப்பணிப்பும் தெளிவாகத் தெரியக்கூடியது” என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மேத்யூ ஹேடனின் மற்றொரு சகாவான ஆடம் கில் கிறிஸ்ட். பட மூலாதாரம்,GETTY IMAGES மேத்யூ ஹேடனுக்கு இப்போது 51 வயது. 1993-ஆம் ஆண்டில் இருந்து 2007-ஆம் ஆண்டு வரை அவர் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது. இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது. ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூஸிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள். “போராட்டத்தை விரும்புவேன்” பாகிஸ்தான் அணிக்கு நேரடியான பயிற்சியாளராக மேத்யூ ஹேடன் நியமிக்கப்படவில்லை. அவர் அணியின் ஆலோசகர் மாத்திரமே. ஆனால் அவரை அணியை வழிநடத்தக்கூடியவராகச் செயல்படுவதை மைதானத்தில் காண முடிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES “நான் உண்மையிலேயே போராட்டத்தை விரும்புவேன். போராட்டம்தான் வளர்வதற்கான வாய்ப்பை வழங்கும். ஒரு அணியாக உருவெடுக்க வைக்கும்” என்று கூறுகிறார் மேத்யூ ஹேடன். பாகிஸ்தான் ஆடும் போட்டிகளில் இடைவேளைகளின்போது அவரை மைதானத்துக்குள் காண முடியும். மற்ற தருணங்களில் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் காணலாம். ஆலோசகராக இருக்கும் அவரை பயிற்சியாளராக மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டார்கள். பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி எப்படி? பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. மெல்போர்ன் மைதானம் எப்படி? மெல்போர்னில் நாளை காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம். இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/cjl867p5d3xo
  10. ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர். பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது. இந்த ஆறு பேரில் நளினியும் ரவிச்சந்திரனும் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தனர். நளினி வேலூரிலும் ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும் தங்கியிருந்தனர். ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன? ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை உச்ச நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்று வெளியானது. இதையடுத்து நளினி, தான் அடைக்கப்பட்டிருந்த வேலூர் சிறைக்கு வந்து தன்னுடைய சிறை விடுப்பை ஒப்படைத்து, முறைப்படி விடுதலையானார். அதேபோல, அதே சிறையில் இருந்த சாந்தன், முருகன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். படக்குறிப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். ரவிச்சந்திரன் தன்னுடைய சிறைவிடுப்பை ஒப்படைப்பதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை சென்றுகொண்டிருக்கிறார். அவர் இன்று இரவுக்குள் விடுதலை ஆவார் என நம்பப்படுகிறது. இன்று விடுதலை ஆனவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் திருச்சி சிறப்பு முகாமிற்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படும் இவர்களை, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளனர். அந்த அடிப்படையில், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக்கோரலாம் எனத் தெரிகிறது. https://www.bbc.com/tamil/india-63609447
  11. 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:16 PM (எம்.வை.எம்.சியாம்) பாணந்துறை பிரதேசத்தில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரத்வத்த, விகாரைக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 26 வயதுடைய ஒருவர் எனவும் அவர் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139790
  12. யாழில் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 04:05 PM சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன. அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை ஒரு விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139821
  13. மாதம் ரூ.66,660 சம்பாதிப்பவர் ஏழையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறினார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் பங்கேற்கவில்லை. திமுக தவிர ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாதம் 66,660 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா” என்று கேள்வி எழுப்பினார். “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340-வது பிரிவில் சமுதாய ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் வரையறையாக இருக்கிறது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகளை புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்?11 நவம்பர் 2022 EWS உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு: இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு என்ன சொல்கிறது?10 நவம்பர் 2022 நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?10 அக்டோபர் 2022 “பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. 10 சதவீத இடஒதுக்கீடானது, உண்மையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு ஆனது அல்ல இதனை ஏற்றுக் கொண்டால், வருங்காலத்தில் சமூகநீதி உருகுலைந்து போகும்” எனக் கூறினார். ''சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு அதன்படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு செய்தார்கள் அந்தச் சட்டத்தைத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள்'' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பொன்முடி, வைகோ உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் தீர்மானத்தில் கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார். https://www.bbc.com/tamil/articles/cl71ygyve1ro
  14. தனுஸ்க விவகாரம் - பிணைக்கான பணத்தை பெறுவதில் நெருக்கடி 12 NOV, 2022 | 03:12 PM தனுஸ்க குணதிலகவின் பிணைக்கான செலுத்தவேண்டிய 20,000 அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அடுத்த வாரம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கும் போது இந்த பணத்தை செலுத்தவேண்டும். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் ஏற்கனவே சில தனிநபர்களிடம் உதவி கோரியுள்ளனர். வனிந்து ஹசரங்க ஏற்கனவே பெரும்தொகை பணத்தை வழங்கியுள்ளார். பணம் கிடைத்ததும் அதனை பிணைக்காக செலுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139817
  15. "கொலை முயற்சியில் இராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்" - இம்ரான்கான் வலியுறுத்தல் 12 NOV, 2022 | 10:50 AM தன்னை கொல்ல முயன்ற சதி திட்டத்தில் இராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டுமென இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3 ஆம் திகதி பஞ்சாப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து, லாகூரில் உள்ள வைத்தியசாலையிர் அனுமதிக்கப்பட்ட இம்ரான்கானுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது காலில் இருந்து 3 துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டதாக இம்ரான்கான் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னை கொல்ல முயன்ற இந்த சதி திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்நாட்டு அமைச்சர் ராணா சனவுல்லா மற்றும் மூத்த இராணுவ அதிகாரி பைசல் நசீர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு தொடர்பாக இம்ரான்கான் தரப்பில் பஞ்சாப் மாகாண பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் இராணுவ அதிகாரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால் அந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய பொலிஸார் மறுத்து வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்திய அந்த நாட்டின் உயர் நீதிமன்றம், 24 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். எனினும் இந்த வழக்கில் பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் இராணுவ அதிகாரியின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தது. இந்நிலையில் லாகூரில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த இம்ரான்கான், "இராணுவ அதிகாரி பைசல் நசீர் எனது கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது உறுதி. எனவே பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்" என்றார். பொலிஸார் வழக்கு பதிவு செய்தது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னாள் பிரதமரால் அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை என்றால், பாகிஸ்தானில் உள்ள ஒரு சாமானியருக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்யலாம். எனவே இதுகுறித்தும் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்திய சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139782
  16. பாலியல் வழக்கு: ஒஸ்கர் விருது வென்ற இயக்குநருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு By NANTHINI 12 NOV, 2022 | 02:01 PM ஒஸ்கர் விருதை வென்ற பிரபல ஹொலிவுட் இயக்குநர் போல் ஹகிஸ் (69) கனடாவில் பிறந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. போல் ஹகிஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு போல் ஹகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை வன்கொடுமை செய்ததாக ஹாலே ப்ரெஸ்ட் என்கிற பெண் 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நியூயோர்க் நகர நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி, போல் ஹகிஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து, ஹாலே ப்ரெஸ்ட்டை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அவருக்கு போல் ஹகிஸ் 7.5 மில்லியன் டொலர் (சுமார் ரூ.60 கோடி) இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார். எனினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் போல் ஹகிஸ் இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க தனது சட்டக்குழு உதவியுடன் தொடர்ந்து போராட உள்ளதாகவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/139808
  17. பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும், பா.செரோண்யா (senior) பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த மாணவிகள் வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவனின் நெறிப்படுத்தலிலேயே தயார்ப்படுத்தப்பட்டு பளு தூக்கும் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை தனதாக்கிக்கொண்டுள்ளனர். சமீப காலமாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139797
  18. ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 18 வயதான பிரதான முகவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:34 PM ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (11) இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 500 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான கண்டப்பகல (75492) பிரசன்ன (90669) நிமேஸ் (90699) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் வாழைச்சேனை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/139796
  19. ப்ளூ டிக் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது டுவிட்டர் By T. SARANYA 12 NOV, 2022 | 12:44 PM டுவிட்டர் நிறுவனத்தின் புதிய திட்டமான மாதம் 8 டொலருக்கு ப்ளூ டிக் அடையாளத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள், ஊடகவியாலளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலிகணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழலில் ப்ளூ டிக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139799
  20. 195 கையடக்கத்தொலைப்பேசிகள், 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:23 PM நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் நுகேகொடை நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொரளை -ஹல்கஹவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர். 13 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து 195 கையடக்கத்தொலைப்பேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139791
  21. நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,மயங்க் பகவத் பதவி,பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது. குழந்தைகளாக இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் நிமோனியாவால் பாதிக்கப்படக் கூடும். உலகசுகாதார நிறுவனத்தின் தகவலின் படி 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கோவிட்19 வைரஸ் தொற்றின் காரணமாக, பல லட்சம் நோயாளிகள் கோவிட்-நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சில நோயாளிகள் உயிரிழக்கவும் நேரிட்டது. நிமோனியா என்றால் என்ன? எளிதாக அதே நேரத்தில் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், நிமோனியா என்பது சுவாச நோய். வைரஸ்கள் , பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் நுரையீரலில் தொற்றுகள் நேரிடுகின்றன. நிமோனியா என்பது லேசான பாதிப்பாகவோ அல்லது சில நிகழ்வுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரிய பாதிப்பாகவோ இருக்கும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, நிமோனியா என்பது நுரையீரல் செல்களில் நேரிடும் அழற்சியாகும். நுரையீரலில் மிகவும் சிறிய காற்றுப்பைகள் உள்ளன. அல்வியோலி(alveoli) என்று அவை அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும்போது நிமோனியாவை உண்டாக்குகிறது. உடலில் அல்வியோலிவின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகும். சுவாச செயல்பாடுகளில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றின் பரிமாற்றங்கள் நுரையீரலின் சிறிய காற்றுப்பைகள் , ரத்தம் வாயிலாகவே நடைபெறுகிறது. அல்வியோலி வாயிலாக ஆக்சிஜன், உடலின் அனைத்து செல்களுக்கும் அனுப்பப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பாக்டீரியா தொற்றுகள் காரணமாக, அல்வியோலிவில் தண்ணீர் அல்லது சீழ் கோர்க்கிறது. இது அதன் செயல்பாட்டை குறைப்பதால் நிமோனியா ஏற்படுகிறது. இது சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த காற்றுப்பைகளில் நீர் கோர்ப்பதால் ஆக்சிஜனின் தரம் குறைந்து ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. நிமோனியாவின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த ஒரு வயதிலும் நிமோனியா பாதிக்கலாம். கீழ்குறிப்பிட்டுள்ளபடி நிமோனியா அறிகுகுறிகள் காணப்படும். சுவாசிப்பதில் தடை, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மேலோட்டமான சுவாசம் இதயதுடிப்பு அதிகரித்தல் காய்ச்சல் குளிச்சி மற்றும் அதிக வியர்வை இருமல் நெஞ்சுவலி குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு நிமோனியா அறிகுறிகள் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது முக்கியம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். நுரையீரல் நிபுணர் டாக்டர் சலில் பிந்த்ரே,"நிமோனியாவின் ஒவ்வொரு வகையும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல. எனினும், முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை என்பது மிகவும் முக்கியம்," என்றார். காலையில் பல் துலக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பணிச்சுமை, நீண்ட நேர வேலை செய்தால் இந்த நோய் வரும்5 நவம்பர் 2022 மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா?4 நவம்பர் 2022 பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் காரணமாக நிமோனியா தொற்றுகள் ஏற்படுகிறது. ஆனால், அவற்றின் அறிகுறிகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. வைரஸ் தொற்றில் மேலும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இது குறித்து பேசிய டாக்டர் பிந்த்ரே," சுவாசிப்பதில் சிரமம், சளி, காய்ச்சல், வெள்ளை, பச்சை அல்லது சிவப்பு நிறத்திலான கோழை வெளியேறுதல் உள்ளிட்டவை நிமோனியா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் பொதுவான அறிகுகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன," என்கிறார். நிமோனியா பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றின் காரணமாகவே முக்கியமாக நிமோனியா ஏற்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு பாக்டீரிக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இது மக்களிடம் தொற்றுவதுடன் பரவவும் செய்கிறது. 50 சதவிகித நிமோனியா பாதிப்புகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது பொதுவாக காணப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, இது சிறுவர்களிடம் பொதுவாக அதிகம் காணப்படும் பாக்டீரியா தொற்று என்பது தெரியவருகிறது. ஹீமோபிலஸ் நிமோனியா, கிளமிடோபிலா நிமோனியா மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவையும் நிமோனியாவின் இதர சில வகைகளாகும். வைரஸ் காரணமாக ஏற்படும் நிமோனியா பாரா இன்ஃப்ளூயன்ஸா, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் ரைனோவைரஸ் ஆகியவற்றின் காரணமாகவும் நிமோனியா ஏற்படுகிறது. கோவிட்-19 வைரஸ் நுரையீரலை தாக்குகிறது, கொரோனா தொற்றுக்கு உள்ளான பல நோயாளிகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பல்வேறு வகையான பூஞ்சைகள் நிமோனியா ஏற்பட காரணமாக இருக்கின்றன. "இந்த நோய் பெரும்பாலும் பொதுவாக இளம் சிறார்களிடமும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடமும் தீவிரமாக காணப்படும்," என வொக்கார்ட் மருத்துவமனை உள் மருத்துவ நிபுணர் டாக்டர். ஹனி சவாலா கூறுகிறார். இளம் சிறார்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் வலு குறைவாக இருப்பதால் இது ஏற்படுகிறது. எனவே அவர்கள் எளிதாக நிமோனியா தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆகவே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் இந்த வயதில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எவ்வாறு நிமோனியா பரவுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES பல்வேறு காரணங்களால் நிமோனியா தொற்று பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குழந்தைகளின் தொண்டை, மூக்கு பகுதிகளில் வைரஸ், பாக்டீரியா இருப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நுரையீரலில் நுழைந்து நுரையீரலைத் தொற்றுகின்றன. ஒருவர் இருமும்போது வெளிப்படும் கிருமிகள், காற்றில் சிறிய துளிகளாக மக்கள் மத்தியில் பரவுகின்றன. இது தவிர, குழந்தை பிறப்பின் போதோ அல்லது பிறந்த பின்னரோ ரத்தத்தின் மூலம் நிமோனியா பரவ வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் நிமோனியா தொற்று ஏற்படுவதற்கு டிபி(காசநோய்) பரவுவது முக்கியகாரணமாக இருக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். நிமோனியா நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES தொற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நோயாளிகளுக்கு லேசானதாகவும் அல்லது சிலருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். எனவே, உடனடியாக நோயை கண்டறிதல் அவசியமாகும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நெஞ்சடைப்பு அல்லது சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் நிமோனியா கண்டறியப்படலாம். வைரஸ் அல்லது கிருமி நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் உடலின் வழியே பரவுவதற்கும் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். பாக்டீரியாவால் நிமோனியா தொற்று நேரிட்டிருந்தால், ஆண்டிபயாடிக்களை உபயோகித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிமோனியா தொற்றுகளுக்கு வழக்கமாக மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனினும், தீவிர நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அதிகபட்ச ஓய்வு மற்றும் தங்கள் உடலில் அதிக பட்ச தண்ணீர் அளவை நிர்வகிப்பது அவர்களுக்கு பலன்களை அளிக்கும். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அவர்களுக்கு உள்ள அறிகுறிகளின் அடிப்படையில் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுவர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை. எனினும் நோயாளிகள் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு நாக்கு இயக்க குறைபாடு எவ்வளவு அபாயகரமானது?25 அக்டோபர் 2022 உடல் பருமனை ஏற்படுத்தும் அரிசி, கோதுமைக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?17 அக்டோபர் 2022 தூக்கமின்மை, ஆர்வமின்மை: என்னென்ன அறிகுறிகள் இருந்தால் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்?10 அக்டோபர் 2022 குழந்தைகளிடம் தோன்றும் நிமோனியாவின் 5 அறிகுறிகளை அறிந்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2019ஆம் ஆண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளன. சதவிகித அளவில் இது 14 சதவிகிதம் ஆகும். புதிதாக பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படும் 5 நிமோனியா அறிகுறிகள் குறித்தும், பெற்றோர் அதனை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர், ஜெசல் சேத் கூறுகிறார். காய்ச்சல் பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கிருமிகள் அழிக்கப்பட்டவுடன் இந்த காய்ச்சல் குணமாகிவிடும். இது குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனினும் காய்ச்சல் மிகவும் அதிகமாக அல்லது மருந்துகள் கொடுத்தும் குணமாகவில்லை என்றாலோ, குழந்தைகள் செயலின்றி காணப்பட்டாலோ அந்த குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் குழந்தைகளின் சுவாச ஓட்டம் நாளொன்றுக்கு பல முறை வேறுபட்டு காணப்படும். நிமோனியா ஒரு நுரையீரல் நோயாகும். ஒரு வேளை அங்கு தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை சுவாசிப்பதற்கு சிரம்பபடத் தொடங்கும். சில குழந்தைகள் சுவாசிக்கும்போது விசில் போன்ற சத்தத்தையும் கேட்க முடியும். மேலோட்டமான சுவாசம் நிமோனியா பாதிப்பின்போது நுரையீரலில் நீர் கோர்க்கிறது. இது சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை மேலோட்டமான சுவாசம் என்பது விரும்பத் தகுந்தது அல்ல. இது போன்ற நிகழ்வுகளில் குழந்தை வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. அடிவயிறு செயல்பாடு குழந்தைகளின் அடிவயிறு இயக்கத்தை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தை சுவாசிப்பதற்கு சிரமப்பட்டாலோ அல்லது சுவாசிக்க சிக்கலாக இருந்தாலோ அதனை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை சளியால் பாதிக்கப்பட்டால், தொடர்ந்து நிமோனியா வரும் என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த ஐந்து முக்கிய அம்சங்களில் நாம் விழிப்போடு இருந்தால், நிமோனியாவின் அறிகுறிகளை நம்மால் கண்காணிக்க முடியும். தடுப்பூசியின் உதவியுடன் நம்மால் நிமோனியாவை கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் நிமோனியா பற்றிய தகவல்களை அளிப்பதன் வாயிலாக நாராயண சுகாதார மருத்துவமனை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. "நிமோகோக்கல் எனும் கிருமிகளால் நேரிடும் நிமோனியாவுக்கு எதிராக உடல்நலத்தை பாதுகாக்க ஒரு நிமோகாக்கல் தடுப்பூசி இருக்கிறது, சளிகாய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியும் உள்ளது, மேலும் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் 'ஹீமோபிலஸ் இன்பேன்டி'க்கு எதிரான தடுப்பூசியும் உள்ளது,"என குழந்தைகள் நல மருத்துவர் விஜய் சர்மா கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cw06y923z91o
  22. யசோதா - திரைப்பட விமர்சனம் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHU2 11 நவம்பர் 2022 நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா) வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் இருக்கிறார். மற்றொரு பக்கம், மூன்று பேர் இறந்து போகிறார்கள். காவல் துறை இந்த கொலை வழக்கை விசாரிக்கும்போது, யசோதாவைக் கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பல முறைகேடான விஷயங்கள் நடப்பது தெரிகிறது. இந்த வழக்குக்கும் யசோதாவுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை. விளம்பரம் வாடகைத்தாய் விவகாரத்தில் இத்தனை ஆபத்தா? வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்களை நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் மிக முக்கியமான படம் என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம். "வாடக்கைத் தாய் விவகாரத்தை கதைக் கருவாக எடுத்துக்கொண்டு அதையொட்டி திரைக் கதையை உருவாக்கி இறுதியில் வேறொரு விஷயத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், கதைக் களத்தை அறிமுகப்படுத்துவது என முதல் பாதி பெரிய சுவாரஸ்யங்களற்று பொறுமையாகவே நகர்கிறது. இடைவேளைக்கு முன்புதான் திரைக்கதை படத்தின் மையத்திற்குள் நுழைகிறது. படத்தின் இரண்டாம் பாதி முழுவீச்சில் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டு வெவ்வேறு கதைகளும் ஒன்றிணையும் இடமும் இறுதிக் காட்சியில் வரும் திருப்பமும் ரசிக்கும்படியாக இருந்தது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாக படம் அதன் பலத்திலிருந்து குன்றவில்லை.சமந்தாவின் கதாபாத்திரம் வாயிலாக பெண்களுக்கான தைரியத்தை கட்டமைத்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வருகிற பெண்களை ஆசை வார்த்தை கூறி வாடகைத் தாயாக மாற்றுவது, அதற்குள் நடக்கும் கமிஷன் விவகாரங்கள், முறைகேடான வாடகைத் தாய் முறை, குடும்பச் சூழலால் வாடகைத் தாயாக ஒப்புக்கொள்ளும் பெண்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவை ‘யசோதா’ மூலம் வெளிச்சம் பெற்றுள்ளன. சில சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக முக்கியமான கதைக் களத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்ற வகையில் கவனிக்க வைக்கிறது இந்த ‘யசோதா’" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம். லவ் டுடே திரைப்பட விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி?5 நவம்பர் 2022 சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிப்பதால் 'திருநங்கை' நடிகையின் வாய்ப்பு பறிபோகிறதா?7 நவம்பர் 2022 லவ் டுடே படத்தின் கதையில் என்ன சர்ச்சை?4 நவம்பர் 2022 சிரமத்துடன் கடக்க வேண்டிய முதல் பாதி பெயரைப் பார்த்து அந்த யசோதாவை நினைத்துக்கொண்டு செல்லாமல், எதிர்பார்ப்பின்றிச் சென்றால் த்ரில்லான இந்த ‘யசோதா’வை ரசிக்கலாம் என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.கிரைம் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும் முதல் பாதியில் சில இடங்களை திரைக் கதைத் தேக்கம் காரணமாக ‘சிரமத்துடன்’ கடக்க வேண்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. குறிப்பாக, படத்தின் மையமாக மருத்துவம் சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதால் சில காட்சிகளை நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது என்கிற எண்ணமே எழுகிறது. மருத்துவர்களுக்கே வெளிச்சம்.’தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சமந்தா இந்தப் படத்திலும் தன் வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் சர்க்கார் திரைப்படத்திற்கு பின் படத்தில் மீண்டும் எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லியாக மாறினால் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்கிற அளவிற்குக் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நடப்பதால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது" என்கிறது தினமணி நாளிதழ். இது முழுக்க முழுக்க சமந்தாவின் திரைப்படம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்."படத்தின் முதல் பாதி, காமெடி மற்றும் உணர்வுரீதியான காட்சிகள் என்று நகர்கிறது. வாடகைத் தாய்களுக்கான இடத்தில் இருக்கும் மருத்துவருடன் யசோதா கேலியாகப் பேசுவது, அங்கு பணியாற்றுபவர்களுடன் விளையாடுவது, அங்கிருக்கும் பிற வாடகைத் தாய்களுடன் பேசுவது போன்ற காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன. பட மூலாதாரம்,@SRIDEVIMOVIEOFF "சமந்தாவின் நடிப்பு சிறப்பு" அந்த இடத்தைப் பற்றி யசோதா அதிகம் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க, காவல்துறையின் விசாரணை தடம் புரண்டுகொண்டே போகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக் காட்சி, ஒரு சிறப்பான த்ரில்லர் வரப்போகிறது என்பதை முன்னறிவிக்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும் (யூகிப்பது கடினம்தான்) படம் சுவாரஸ்யமாகவே நகரும். ஆனால், யசோதாவைப் பற்றி, தாயின் அன்பைப் பற்றி, பிரசவம், கர்ப்பம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசும்போது சற்று நாடகத்தனமாக நகர்கிறது படம். படத்தின் நீளத்தை அதிகரிப்பதைத் தவிர, இந்தக் காட்சிகளால் வேறு பயன் இல்லை என்பதால் அவை இல்லாமலேயே எடுத்திருக்கலாம். கிராஃபிக்ஸ் காட்சிகளும் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். கதாநாயகியுடன் தங்கியிருக்கும் பெண்களின் பாத்திரங்கள் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். யசோதாவின் பாத்திரத்தில் நடித்திருக்கும் சமந்தா, சிறப்பாக நடித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அவருடைய படம்தான். அவர் சண்டையிடும் காட்சிகளிலும் பஞ்ச் வசனங்களைப் பேசும்போது திரையரங்குகளில் விசில் பறக்கிறது. வரலட்சுமியும் உன்னி முகுந்தனும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கமான மசாலா அல்லது காதல் கதையைக் கொண்ட திரைப்படம் வேண்டாமென்றால், இந்த வார இறுதியில் யசோதாவைப் பார்க்கலாம். த்ரில்லர் ரசிகர்களாகவோ சமந்தாவின் ரசிகர்களாகவோ இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. பட மூலாதாரம்,@SRIDEVIMOVIEOFF ஒற்றைப் பரிமாணமுள்ள சில பாத்திரப்படைப்புகளைத் தவிர்த்துவிட்டு, சில பதிலில்லாத இடைவெளிகளை நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பான த்ரில்லராக வந்திருக்கும் என்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம். "உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் வாடகைத் தாய் என்பது முழுப் படத்தின் ஒரு அம்சம்தான். இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்றாலும் கூட, புதிதாக எதையோ செய்ய முயன்ற வகையில் சுவாரஸ்யமான திரைப்படம்தான் இது. ஏகப்பட்ட க்ளூக்களுடன் கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். இவையெல்லாம் முதலில் சாதாரணமாகத் தெரிந்தாலும் ஒரு த்ரில்லருக்கே உரித்தான பெரிய சித்திரத்தை உருவாக்க இவை உதவுகின்றன. உதாரணமாக, கண்ணாடியில் தனது ஸ்டிக்கர் பொட்டை யசோதா ஒட்டிவைத்துக்கொண்டே இருக்கும் காட்சி. அதை மிகச் சிறப்பாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். யசோதா புலனாய்வைத் துவங்கியவுடன் படம் முழுவீச்சில் நகர்கிறது. ஒரு ஆக்ஷன் த்ரில்லராக படம் மாறுவது இயல்பாக நடக்கிறது. தனது காணாமல் போன நண்பர்களைப் பற்றி யசோதா என்ன கண்டுபிடிக்கப் போகிறார் என்பதை யூகிப்பது கடினமல்ல. ஆனால், அந்தக் காட்சி வரும்போது அதனைப் பார்ப்பது மிகுந்த தொந்தரவைத் தருகிறது. வாடகைத் தாயாக இருப்பவர்கள் தாங்கள் சுமக்கும் குழந்தை மீது பாசத்தை வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முயல்கிறது கதை. ஆனால், வாடகைத் தாய் விவகாரம் என்பது இந்த படத்தின் ஒரு பகுதிதான். முக்கியமான அறிவியல் புனைவு படத்தின் பிற்பகுதியில் வருகிறது. ஒற்றைப் பரிமாணமுள்ள சில பாத்திரப்படைப்புகளைத் தவிர்த்து விட்டு, சில பதிலில்லாத இடைவெளிகளை நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பான த்ரில்லராக வந்திருக்கும். இருந்தபோதும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர்தான்" என்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/clk2kwyl471o
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.