Everything posted by ஏராளன்
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
Published By: RAJEEBAN 29 JUN, 2023 | 07:55 PM கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர். https://www.virakesari.lk/article/158870
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
தேரிக்காடுகள் முதல் தென்மலை வரை: குற்றாலத்தைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2023 குற்றாலம் என்றாலே அனைவரது மனதிலும் தோன்றுவது அருவிகளும் அழகான மேற்கு தொடர்ச்சி மலையும் தான். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய ஐந்து அருவிகள் மட்டுமே இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடங்கள். மற்ற அருவிகளான செண்பகா தேவி, தேனருவி, மற்றும் பழத்தோட்ட அருவிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. பெரும்பாலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஐந்து பிரதான அருவிகளில் ஆசை தீர குளித்துவிட்டு கிளம்பி விடுவது வாடிக்கை. ஆனால் குற்றாலத்தை சுற்றி பல அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன. அத்தகைய அதிகம் அறியப்படாத இடங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். குண்டாறு அணை படக்குறிப்பு, அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. குற்றாலத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணைக்கட்டு. இது 1983ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் பலர் தங்களது திருமண போட்டோ ஷூட்டுகளுக்கு இந்த இடத்தையே விரும்புகின்றனர். ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, பலாப்பழம், மாம்பழம் என சுற்றியுள்ள மலைகளில் விளைந்த பழங்களை இங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம். இந்த அணையை ஒட்டி இருக்கும் மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய அருவிகள் உள்ளன. அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல முடியாது. மிகவும் கரடு முரடான காட்டு வழிப்பாதை என்பதால் வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் அல்லது தனியார் ஜீப்புகள் மூலமாகவும் நீங்கள் செல்லலாம். ஜீப்பில் செல்ல ஒரு நபருக்கு 100 முதல் 200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த காட்டுப்பாதை வழியாக அருவிக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம் தான். பருவமழைக் காலங்களில் இந்த அணைக்கட்டு வேகமாக நிரம்பி விடும். அணை நிரம்பி மறுகால் பாய்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். குற்றாலத்திலிருந்து செங்கோட்டை வழியாக பயணம் செய்தால் 30 நிமிடங்களில் இந்த அணைக்கட்டை அடையலாம். அடவிநயினார் அணை படக்குறிப்பு, நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடக்கூடும். குற்றாலத்திலிருந்து 21கி.மீ. தொலைவில், கேரள எல்லை அருகே அமைந்துள்ளது இந்த அணை. இந்த அணைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இருக்கும் பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடியே செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்தச் சாலையை பாபநாசம், அந்நியன், தர்மதுரை போன்ற பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடலாம். அவ்வளவு அழகான இடம் இது. அணைக்கு மேலே அருவி உண்டு, ஆனால் அங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை. காரணம் ஆபத்தான காட்டு வழிப்பாதை மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். குற்றாலத்திலிருந்து பண்பொழி வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை அடைந்த பின் பிரதான சாலையிலிருந்து வலது புறம் திரும்பி 3 கி.மீ. தூரம் பயணித்தால் இந்த அணையை அடையலாம். கும்பாவுருட்டி அருவி படக்குறிப்பு, கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணத்தின் போது மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை பார்க்கலாம். குற்றாலம்-அச்சன்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்தால் கேரள எல்லையை அடையலாம். அங்கிருக்கும் கேரள வனத்துறையின் சோதனைச் சாவடியில் உங்கள் வாகனம் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின், கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணம் தொடங்குகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம். இங்கு பயணிப்பது ஊட்டி, மசினகுடி போன்ற சாலைகளில் பயணிக்கும் உணர்வை தரும். வழியெங்கும் தென்படும் சிறு அருவிகளும், அழகிய நீரோடைகளும் நம்மை கவர்ந்து இழுக்கும். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும். குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. தென்காசி-அச்சன்கோவில் இடையே தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலமும் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லலாம். கும்பாவுருட்டி அருவி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் அதிகம். ஒரு நபருக்கான நுழைவு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி விட்டு, பிரதான சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி காட்டிற்குள் நடந்து சென்றால் இந்த அருவியை பார்க்கலாம். சற்று தொலைவு தான் என்றாலும் அருவியை கண்டவுடன் கிடைக்கும் அந்த புத்துணர்வு களைப்பை போக்கி விடும். அருவியை மிகச் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். வார நாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும், அதிக நேரம் குளிக்கலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி. பாலருவி படக்குறிப்பு, ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், பாலருவியில் 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம் குற்றாலத்திலிருந்து 27கி.மீ. தூரத்தில் கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. புளியரை வழியாக கேரள எல்லையைக் கடந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால் ஆரியங்காவு ஊரை அடையலாம். அங்கு உள்ள சோதனைச் சாவடிக்கு அருகில் இடது புறம் திரும்பினால் இந்த அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவு வாயிலை பார்க்கலாம். செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரியங்காவுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருவி அமைந்திருக்கும் காட்டுப் பகுதிக்கு கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். பிரதான சாலையிலிருந்து 4கி.மீ. தூரம் என்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும் நடந்தோ அல்லது தங்கள் சொந்த வாகனங்களிலோ சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. ஒரு நபருக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய். காடுகளின் வழியே செல்லும் ரம்மியமான சாலையில் பயணிக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது சற்று கடினம் தான். அருவிக்கு 200 மீட்டர் தொலைவில், வனத்துறையின் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால், இதமான சாரலை உணர முடியும். பருவமழைக் காலங்களின் போது திருவிதாங்கூர் மகாராஜாக்கள் இங்கு வந்து நீராடி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக சிதிலமடைந்த கல் மண்டபத்தையும், குதிரை லாயங்களையும் இங்கு காணலாம். ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம். தென்மலை அணை மற்றும் சூழலியல் சுற்றுலா பூங்கா படக்குறிப்பு, பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம். ஆரியங்காவு ஊரிலிருந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால், 20 நிமிடங்களில் தென்மலை அணையை அடையலாம். பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம். அணைக்கு முன்பாக மரத்தாலான ஒரு தொங்கு பாலம் உள்ளது. ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே இந்த பாலத்தில் செல்ல அனுமதி உண்டு. தொங்கு பாலத்தில் நடந்தவாறு அணையை மிகவும் அருகிலிருந்து பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அணைக்கு அருகில் அமைந்துள்ள தென்மலை சூழலியல் சுற்றுலா பூங்கா, குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்ற இடம். இங்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்கா, நடனமாடும் இசை நீரூற்று, காட்டிற்குள் சைக்கிள் ஓட்டுவது முதல் அணையில் படகு சவாரி செல்வது வரை, இயற்கை விரும்பிகளை குதூகலப்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள மான் பூங்காவில் சாம்பார் மான்கள் மற்றும் அழகான புள்ளி மான்களை அதிகம் பார்க்க முடியும். மான் பூங்கா செல்வதற்கான நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரவில் தங்குவதற்காக கேரள சுற்றுலாத்துறையின் சார்பாக இங்கு சிறப்பு விடுதிகள் உள்ளன. Thenmalaecotourism.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம். வர்கலா படக்குறிப்பு, வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான். கேரளாவின் கோவா என அழைக்கப்படுகிறது வர்கலா, காரணம் இங்குள்ள அழகான கடற்கரைகள். ஒருநாள் பயணமாக குற்றாலத்திருந்து 104கி.மீ. தொலைவில் இருக்கும் வர்கலாவிற்கு சென்று வரலாம். பல வருடங்களாக கோவா செல்ல திட்டமிட்டு ஆனால் செல்ல முடியாத இளைஞர்களுக்கு வர்கலா சிறந்த ஆறுதலாக இருக்கும். வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான். வருடம் முழுவதும் இங்குள்ள கடற்கரைகளில் வெளிநாட்டினர் சூரியக் குளியல் எடுப்பதை காணலாம். கோவாவின் ஹிப்பி கலாசாரத்தை வர்கலாவிலும் பார்க்க முடியும். ஹிப்பி பொருட்களை வாங்குவதற்கென்றே ஒரு சந்தை கடற்கரை அருகே உள்ளது. இங்குள்ள ரெஸ்டோ கஃபேக்களில் காபி குடித்தவாறே அரபிக் கடலின் அழகை பார்த்து ரசிக்கலாம். இரவு நேரங்களில் கடற்கரை உணவகங்களில் நாம் தேர்வு செய்யும் மீன் வகைகளை உடனடியாக நமக்கு சமைத்து தருவார்கள். விலை சற்று அதிகம் என்றாலும் மலையும் கடலும் சங்கமிக்கும் அந்த பகுதியில் அமர்ந்து இரவு உணவு உண்ணும்போது, விலை பற்றிய கவலை பறந்து விடும். உவரி மற்றும் மணப்பாடு படக்குறிப்பு, கூட்டம் அதிகம் இல்லாத அமைதியான கடலோர கிராமம் உவரி, குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு அமைதியான கடலோர கிராமத்தில் அமர்ந்து கடலை ரசிக்க விரும்பினால், உவரி மிகச் சிறந்த இடம். உவரியின் கப்பல் மாதா கோயில் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம். போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்ட சில கட்டிடங்கள், தேவாலயங்களை இங்கு பார்க்க முடியும். குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது உவரி. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து உவரிக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படக்குறிப்பு, கப்பல் மாதா கோயில் உவரி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம். உவரியிலிருந்து அழகான தேரிக்காடுகள் வழியாக 30 நிமிடங்கள் பயணம் செய்தால் மணப்பாடு கிராமத்தை அடையலாம். மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம் போன்ற அமைப்பில் உள்ளது மணப்பாடு. மீன் ஏற்றுமதிக்கு பெயர்பெற்ற ஊர் இது. கடற்கரை குன்றின் மேல் அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயம், 400 வருடங்களுக்கு முன் போர்த்துகீசிய மாலுமியர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் ஒரு இடமாக இந்த ஆலயம் உள்ளது. அதிகம் வெயில் இல்லாத பருவமழைக் காலங்களின் போது, பனைமரங்கள் நிறைந்த சாலைகளின் வழியாக இந்த இரு கடலோரக் கிராமங்களுக்கு பயணம் செய்தால், ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். எனவே அடுத்த முறை குடும்பத்துடன் குற்றாலம் செல்கிறீர்கள் என்றால், அங்குள்ள அருவிகளில் மட்டுமே குளித்து விட்டு வராமல், மேலே குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் செல்வதன் மூலம் பசுமையான காடுகள், மலைகள், கடல்கள், தேரிக்காடுகள் என பல்வேறு வகையான நிலப்பரப்புகளை காணக்கூடிய ஒரு அருமையான அனுபவம் கிட்டும். https://www.bbc.com/tamil/articles/cy0jdngymnxo
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: உள்ளே என்னென்ன கிடைத்திருக்கின்றன? பட மூலாதாரம்,SHUTTERSTOCK 28 ஜூன் 2023, 23:17 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன. டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோரப் படை தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் தேதி சென்ற 5 பேரும் இறந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன. புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS என்னென்ன கிடைத்திருக்கின்றன? உடல்கள் எதுவும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். "இது கடற்பரப்பில் நம்பமுடியாத அளவுக்கு கடினமான முடியாத சூழல்" என்று கடலோரப் படையின் ஜான் மாகர் கூறினார். இதுவரை டைட்டானிக் கப்பலுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை அடங்கும் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் தெரிவித்தார். டைட்டனின் மீட்பு பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமை ஏற்றது. தற்போது மீட்புப் பணிகளை முடித்துவிட்டு தளத்துக்குத் திரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டைட்டனை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு பற்றி முன்னாள் ஊழியர்கள் பலரும் குறை கூறியுள்ளனர். என்ன நடந்தது? ஜூன், 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்தது டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து நிகழ்ந்த வெடிப்பு(implosion) இந்த இழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறுகிறது. இதற்கிடையே டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்பே வெளிப்படுத்தி கடல் தொழில்நுட்ப சமூகம் என்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஜேம்ஸ் கேமரூனும் இதுகுறித்து முன்பே கணித்ததாகக் கூறுகிறார். இந்த விஷயத்தில் அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன. பட மூலாதாரம்,SHUTTERSTOCK நீர்மூழ்கியில் இருந்தவர்கள் யார்யார்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,SHUTTERSTOCK பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,OCEANGATE டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. "அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார். பட மூலாதாரம்,DAWOOD FAMILY டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும். டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். "நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின். சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர். தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத். போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES டைட்டன் நீர்மூழ்கி எப்படிப்பட்டது? கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. ‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’. ’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும். 'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும். பட மூலாதாரம்,OCEANGATE டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்கும்? ’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல. கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cd1z5ewlp2po
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனிய நகரில் ரஷ்யாவின் தாக்குதலில் நால்வர் பலி Published By: SETHU 28 JUN, 2023 | 09:05 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கிரமடோர்ஸ்க் நகரில் ரஷ்ய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் நால்வர் உயிரழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு விடுதியொன்றும் வணிகப் பகுதியொன்றும் நேற்றிரவு தாக்கப்பட்டது. இந்நகரம் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய பகுதிகளுக்கு அருகில் இந்நகரம் உள்ளது. உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுமியும் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/158734
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீற்றர் உயரமும், 3.2 கிலோ மீற்றர் நீளமும் கொண்டது. சுமார் 7 இலட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர். இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5ஆம்திகதி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், இலட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15இற்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/260093
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அரசின் கொள்கைக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் - என்ன காரணம்? படக்குறிப்பு, நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்வச்சா ராவத் பதவி,பிபிசி நேபாளி சேவை 40 நிமிடங்களுக்கு முன்னர் நேபாள இளைஞரான ரமேஷ் (அவர் கேட்டுக் கொண்டதன்படி அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க விரும்பினார். அதன் காரணமாக மாணவர் விசாவில் உயர்கல்வி பயில ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவர் விரும்பியபடி படிப்பை நல்லபடியாக முடித்தார். இருப்பினும் அதன் பின்னர் ரஷ்யாவிலேயே நல்ல வேலைத் தேடி கொள்வதா அல்லது நேபாளத்துக்கு திரும்பி அங்கே வேலைத் தேடுவதா என்ற கேள்வி எழுந்ததால் அவர் ஒருவித மன போராட்டத்துக்கு ஆளானார். நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, நேபாளத்தில் பெரும்பாலான பணிகள் அமைப்பு சாரா துறைகளில் தான் கிடைக்கப் பெறுவதாகவும் இந்தப் பணிகளை மேற்கொள்வோருக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. வேலை கிடைப்பதில் சிக்கல் "வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் அனைத்து இளைஞர்களும் நல்ல வேலையை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை" என்று பிபிசி நேபாளி உடனான ஆன்லைன் உரையாடலின்போது ரமேஷ் தெரிவித்தார். இப்படி ரமேஷ் போன்ற நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ வீரரின் சித்தரிப்பு படம் ரஷ்ய ராணுவத்தில் சேர வெளிநாட்டவருக்கு வாய்ப்பு ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் இறந்தனர். அதன் விளைவாக ரஷ்ய ராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகைச் செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொன்னான வாய்ப்பை தான் பயன்படுத்தி கொள்ள ரமேஷ் விரும்பினார். தான் விரும்பிய படியே ரஷ்ய ராணுவத்தில் ரமேஷ் இணைந்தார். அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது. இந்தத் தேர்வுகளை எழுத 1,00,000 நேபாளி ரூபாயை செலவழித்தார். இவ்வளவு பெரிய தொகையை தனக்கு அளித்து உதவியவர் யார் என்ற தகவலை பகிரங்கமாக கூற அவர் மறுத்துவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த தனது மகிழ்ச்சியை ‘டிக்டாக்’ பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். “வாழ்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பணியை தேர்ந்தெடுத்துள்ளேன்” என்றும் அந்தப் பதிவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளது எவ்வளவு கடினமான முடிவு என்பது குறித்தும் அவர் தன் வீடியோ பதிவுகளில் தெரிவித்திருந்தார். "செய் அல்லது செத்து மடி" என்பது ராணுவ வீரர்களுக்கான தாரக மந்திரம். எனவே இதனை உணர்ந்து, ராணுவத்தில் சேர்வதற்கு விருப்பம் இருந்தால் மட்டும் அதில் இணையுங்கள்" என்றும் டிக்டாக் வீடியோவில் அவர் கூறியிருந்தார். ‘தகவல்’ என்ற தலைப்பில் ரமேஷ் மற்றொரு வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். “ ராணுவப் பணியில் இங்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நிலைமை எதிர்பார்த்தது போல் இல்லை. ஏனெனில் ரஷ்யா மோதுவது யுக்ரேன் உடன் என்பதால், இதை வாழ்வின் மிகவும் கடினமான தருணம் என்று எண்ணுகிறேன்,” என அந்த வீடியோவில் ரமேஷ் உருக்கமாக கூறியிருந்தார். பிபிசி அவரை கடைசியாக தொடர்பு கொண்டபோது, தான் பயிற்சிக்காக பெலாரஸுக்கு அழைத்து செல்லப்படுவதால், உரையாடுவதற்கு போதிய நேரம் இல்லை என்று ரமேஷ் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பிபிசி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரமேஷ் மட்டுமல்ல. அவரை போன்று நிறைய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் பிபிசியின் ஒரு வார கால கள ஆய்வில் தெரிய வந்தது. படக்குறிப்பு, நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. சட்டவிரோதம் என்று அறியாத நேபாள இளைஞர் இதனிடையே, ராஜ் என்ற நேபாளத்தை சேர்ந்த இளைஞரும், ரமேஷை போல உயர் கல்வி பயில்வதற்காக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்று தெரிய வந்தது. அங்கு அவர் இருந்தபோது தான், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்ப்பது குறித்த அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியான உடனே, நேபாளத்தில் இருந்து பலர் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ரஷ்ய மொழி அவ்வளவு சரளமாக தெரியவில்லை என்பதால், அந்நாட்டு ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் ராஜின் உதவியை நாடினர். எனக்கு அறிமுகமான சில நேபாளிகளுக்கு, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி புரிந்துள்ளேன். அதன் பின்னர் அவர்களே, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளும்படி பலரிடம் எனது தொலைபேசி எண்ணை பகிர்ந்தனர்” என்று பிபிசி நேபாளியிடம் ராஜ் கூறினார். ரஷ்யாவில் உயர் கல்வி பயில விரும்பும் நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை ராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்பின் நேபாள மாணவர்களுடன் தற்போது, ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பிய அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களும் ராஜின் உதவியை நாடினர். பட மூலாதாரம்,OFFICIAL PUBLICATION OF LEGAL ACTS/RUSSIA படக்குறிப்பு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்ட ரஷ்ய அதிபர் விளாதிர் புதின். முத்தரப்பு ஒப்பந்தம் “நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைவது நாட்டின் கொள்கைக்கு இணக்கமானது அல்ல,” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேவா லாம்சல் பிபிசி நேபாளியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். நேபாள குடிமக்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக, 1947 இல் நேபாளம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாள மக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படும் நேபாளிகள் “கூலிப்படைகளாக கருதப்படமாட்டார்கள்” என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனை தவிர, பிற நாடுகளின் ராணுவத்தில் நேபாளிகள் சேர்வதை ஆதரிக்கும் கொள்கை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மாஸ்கோவில் உள்ள நேபாள தூதர் மிலன்ராஜ் துலாதரை பிபிசி நேபாளி சேவை தொடர்பு கொண்டது. “சுற்றுலா விசாவிலும், மேற்படிப்பு பயிலவும் ரஷ்யாவுக்கு வருகை தரும் நேபாள நாட்டினர், இங்கு வேறு எந்த பணியிலும் சேர முடியாது. தங்களின் குடிமக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக மட்டுமே அந்த நாடுகளுடன் நேபாள அரசு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதுபோன்ற ஒப்பந்தம் ரஷ்ய அரசுடன் மேற்கொள்ளப்படவில்லை” என்று பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார் மிலன்ராஜ். நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளது தொடர்பான டிக்டாக் வீடியோக்களை தம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆவணப்படங்கள் ஆய்வு இருப்பினும், ரஷ்ய ராணுவ பயிற்சி முகாம்களில் படமாக்கப்பட்ட இதுபோன்ற சில வீடியோக்களை சரிபாக்கும் பணியை பிபிசி மேற்கொண்டது. ரஷ்ய ராணுவம் தொடர்பான ஆவணப்படங்களை கொண்ட வீடியோக்கள் பதிவிடப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு டிக்டாக் கணக்குகளை பிபிசியின் ரஷ்ய சேவையை சேர்ந்த செய்தியாளர் ஆன்ட்ரி கோசென்கோ சரிபார்த்தார். “ரமேஷ் உள்ளிட்ட இரண்டு நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அந்த வீடியோக்கள் மூலம் அறிய முடிந்தது” என்று கூறினார் கோசென்கோ. சம்பந்தப்பட்ட நபர்கள் ராணுவத்தில் வகிக்கும் நிலை (Rank), அவர்களின் முழு பெயர், உயரதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆவணப்படங்களில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ராணுவத்தில் அவர்கள் பணிபுரியும் பிரிவுகள் குறித்த தகவல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள ரஷ்யாவுக்கான தூதரை பிபிசி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது. இருப்பினும். இந்த கட்டுரை வெளியிடும் வரை ரஷ்ய அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர என்ன காரணம்? படித்த இளைஞர்களுக்கு நேபாளத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “சுற்றுலா, மேற்படிப்பு போன்ற காரணங்களை சொல்லி நேபாளிகள் வெளிநாடுகளுக்கு பயணித்தாலும், அங்கு வேலை தேடி கொள்வதே அவர்களது பயணத்தின் பிரதான நோக்கமாக உள்ளது” என்று கூறுகிறார் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளரான திகாரம் கௌதம். “ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள சில மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை, பிற வழிகளில் சம்பாதிக்க அவர்களுக்கு சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக அவர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறினார். ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 1,729 நேபாளிகள் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர் என்று நேபாள அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 749 நேபாள மாணவர்கள் மேற்படிப்புக்காகவும், 356 பேர் வேலைக்காகவும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று நேபாள அரசின் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது. ராஜ் உள்ளிட்ட ரஷ்யாவில் இருக்கும் நேபாளிகளிடம் பிபிசி பேசியபோது, ரஷ்யா வந்ததற்காக அவர்கள் கூறிய காரணங்கள், சமூகவியலாளர் கௌதமின் கருத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்பு படம் “பணம் சம்பாதிப்பதற்காக தான் நாங்கள் ரஷ்யாவுக்கு வந்தோம்” என்று நேபாள இளைஞர் ஒருவர் பகிரங்கமாக தெரிவித்தார். இதன் காரணமாக தான் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும். அதுகுறித்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட தாகவும் அவர் கூறினார். “ரஷ்யாவில் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை நேபாளத்திலோ, வேறு எந்த நாட்டிலோ எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் இல்லாதவர்கள் தாராளமாக ரஷ்யாவுக்கு வரலாம்” எனவும் அந்த இளைஞர் தெரிவித்தார். “எங்கள் வாழ்வு மீதான அன்பின் காரணமாக நாங்கள் நேபாளத்திற்கு திரும்பலாம். ஆனால் அங்கு எங்களின் வேலைக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று மற்றொரு இளைஞர் கேள்வி எழுப்புகிறார். யுக்ரேன் போரில் பங்கேற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு அதிக ஊதியம் தருவதாக ரஷ்ய அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார் ராஜ். அதன்படி, ராணுவ பயிற்சி காலத்தில் 60 ஆயிரம் நேபாள கரன்சிக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். பயிற்சி காலம் முடிந்ததும், தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக 1.95 லட்சம் ரூபிள்கள் வழங்கப்படும் என்று வேலைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் மற்றொரு நேபாள இளைஞர் தெரிவித்தார். இந்த தொகை மூன்று லட்சம் நேபாள கரன்சிகளுக்கு இணையானது என்கிறார் ராஜ். அத்துடன் ஓராண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு, ராணுவ வீரர்கள் ரஷ்ய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற இயலும். அத்துடன் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் கூறுகிறார் நேபாள இளைஞரான ராஜ். https://www.bbc.com/tamil/articles/cll0p77m7yzo
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும தொடர்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இறுதியான பெயர் பட்டியல் அல்ல - ஷெஹான் சேமசிங்க Published By: VISHNU 27 JUN, 2023 | 08:42 PM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும் , 3300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெறும் ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு பொறுத்தமானவர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நீரிழிவு நோயாளர்கள் , முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் தொடர்பான பெயர் பட்டியல் இவ்வார இறுதியிலேயே வெளியிடப்படும். எனவே இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவோர் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நீரிழிவு நோயாளர்கள், முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்ற போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அவர்களது பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வார இறுதியில் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்படும். எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதல்ல. ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு அதன் பின்னரே இறுதியான பயனாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகள் குறித்த தகவல்கள் வீடுகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக வீடொன்றில் வசிக்கும் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்பட்டால் அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வெளிப்படை தன்மையுடனேயே இந்த தெரிவுகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்டில் அடுத்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். இவ்வாறு வருடாந்தம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படும். சமூர்த்தி உள்ளிட்ட ஏனைய சகல அரச கொடுப்பனவுகளும் இந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும், 3300 எதிர்ப்புக்களும் கிடைத்துள்ளன. 20 இலட்சம் பேருக்கு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது. எனினும் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், அவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர் 33 இலட்சம் பேர் தற்போது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்றார். https://www.virakesari.lk/article/158715
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
கூண்டிற்குள் அடைக்கப்பட்ட யானையை கிரேன் மூலம் தூக்குவதற்கான பயிற்சிகள் - ஒருவாரத்தில் தாய்லாந்து செல்கின்றது சக்சுரின் Published By: RAJEEBAN 27 JUN, 2023 | 06:52 AM இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக்சுரின் யானையை இன்னமும் ஒருவார காலப்பகுதிக்குள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் கூண்டினில் பயணிப்பதற்காக சக்சுரினை பழக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன யானை தாய்லாந்தை சேர்ந்த பாகன்களுடன் நல்லவிதத்தில் நடந்துகொள்கின்றது என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார். இரவில் கூண்டிற்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் கூண்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காலின் கதவுகள் பிணைக்கப்பட்டு இரண்டுமணித்தியாலங்கள் உள்ளே நிற்பதற்கும் முத்துராஜவிற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்டமாக யானை உள்ளே இருக்கும்போது கூண்டை மூடி அதனை கிரேனை பயன்படுத்தி தூக்கும் பயிற்சி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த பயிற்சியை அதிகாரிகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் இந்த பயிற்சி இரண்டாம் திகதி யானை தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் வரை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். முதலாம் திகதி முத்துராஜவை தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்வார்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாய்லாந்திலிருந்து விமானம் கொழும்பை வந்தடையும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஜூலை 2ம் திகதி தாய்லாந்தின் சியாங்மாய் விமானநிலையத்தில் யானைப்பாகன்களும் மிருகவைத்தியர்களும் காத்திருப்பார்கள் அவர்கள் யானையின் நிலையை ஆராய்வார்கள். யானை நல்லநிலையில் காணப்பட்டால் அதனை நேரடியாக அன்றைய தினமே லம்பாங்கில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்வார்கள் ஆறுமணித்தியால விமானநிலையம் அதனை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தால் ஓய்விற்காக சியாங் மாய் சபாரிக்கு அனுப்புவார்கள். https://www.virakesari.lk/article/158661
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு காலம் நீடிப்பு - அரசாங்கம் 26 JUN, 2023 | 12:37 PM அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அரசாங்கம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்துக்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 4 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதுடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் வேலைத்திட்டத்தின் தரவு சேகரிப்புப் பணியில் 6728 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களும் அடங்குவர். பிரதேச அலுவலக மட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் தரவுகளைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பிறகு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பில் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்படும் நபர் அல்லது குடும்பம் இந்த நன்மையை இழந்திருந்தால், இந்தக் காலப்பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக விசாரித்து அதனை சரிசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அஸ்வெசும திட்டத்தின் அடிப்படை நோக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதே தவிர, வெறும் அரசியல் செயற்பாட்டின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல என அரசாங்கம் வலியுறுத்துகிறது. பல்வேறு பிரசாரங்களாலும் தனிப்பட்ட அழுத்தங்களாலும் குழப்பமடையாமல், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டாலோ அல்லது தகுதியில்லாத நபரின் பெயர் அதில் இடம் பெற்றிருந்தாலோ, பிரதேச செயலக அலுவலகங்களின் ஊடாக அது தொடர்பில் ஆராயுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் எந்த பிரச்சினையையும் பிரதேச செயலாளரின் ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. (எம்.மனோசித்ரா) https://www.virakesari.lk/article/158603
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
டைட்டானிக் அருகே கின்னஸ் சாதனை படைக்க விரும்பிய 19 வயது சுலேமான் தாவூத் பட மூலாதாரம்,DAWOOD FAMILY கட்டுரை தகவல் எழுதியவர்,நோமியா இக்பால் & செல்சி பெய்லி பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீர்மூழ்கியின் சென்ற சுலேமானும் அவரது தந்தையும் ஷாஜதாவும் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கிய விபத்தில் இறந்தனர். ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. "அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும். டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். "நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின். சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர். தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத். போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார். படக்குறிப்பு, கிறிஸ்டின் தாவூத் டைட்டானிக் கப்பலில் 3,700 மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போவதாக சுலேமான் கூறிச் சென்றதாகவும் கிறிஸ்டின் தெரிவித்தார். சுலேமான் பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் மாணவர். பிரிட்டனில் வசித்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத், பாகிஸ்தானின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையர் தினத்தன்று 17 வயதான மகள் அலினா, உட்பட குடும்பத்தினர் டைட்டானை நோக்கிய பயணத்துக்காக போலார் பிரின்ஸ் கப்பலில் ஏறினர். கணவரும் மகனும் டைட்டன் நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சில நிமிடங்களில் அவர்கள் கட்டிப்பிடித்து கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின். "நான் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக டைட்டானிக்கை பார்க்க விரும்பினர்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP படக்குறிப்பு, ஷாஜதா மற்றும் சுலேமான் தாவூத் தனது கணவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறுகிறார் கிறிஸ்டின். இரவு உணவிற்குப் பிறகு தங்களை இது தொடர்பான ஆவணப்படங்களைப் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறுகிறார். "குழந்தை போன்ற உற்சாகம் அவருக்குள் இருந்தது," என்று அவர் கூறினார். கணவரும் மகனும் திரும்பி வருவதற்காக கிறிஸ்டின் தாவூத்தும், மகள் அலினாவும் போலார் பிரின்ஸ் கப்பலில் காத்திருந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல தேடல் மற்றும் மீட்பு பணியில் இருந்த நம்பிக்கை குறைந்து போனது. "96 மணிநேரத்தை கடந்தபோது நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்," என்றார் கிறிஸ்டின். அப்போதுதான் தன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியதாக கூறினார். "நான் மோசமான நிலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” ஆனால் மகள் அலினாவுக்கு கூடுதலாகச் சற்று நேரம் நம்பிக்கை இருந்தது. "அமெரிக்காவின் கடலோரப் படையின் அழைப்பு வரும் வரை அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோது அதுவும் முடிந்துவிட்டது." தாவூத் குடும்பம் சனிக்கிழமை செயின்ட் ஜான்ஸுக்குத் திரும்பியது. ஞாயிற்றுக்கிழமை ஷாஜதா மற்றும் சுலேமானுக்கு இறுதிச் சடங்கு நடத்தியது. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY தானும் மகளும் சுலேமானின் நினைவாக ரூபிக்ஸ் கியூப்பை முடிக்க கற்றுக் கொள்ள முயற்சிப்போம் என்றும், தனது கணவரின் பணியைத் தொடர விரும்புவதாகவும் கூறினார் கிறிஸ்டின். "அவர் பல செயல்களில் ஈடுபட்டார். பலருக்கு உதவினார். அந்த மரபைத் தொடரவும் விரும்புகிறேன்.. இது என் மகளுக்கும் மிகவும் முக்கியமானது." விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து பேச கிறிஸ்டின் மறுத்துவிட்டார். "அவர்களது பிரிவால் துன்புறுகிறேன்," அவர் ஆழமாக மூச்சு விட்டார். "நான் உண்மையில் அவர்கள் இல்லாததை உணர்கிறேன்" https://www.bbc.com/tamil/articles/cqvqpe3xe1xo
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
Titanic Missing Sub Titan: விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து என்ன நடக்கும்?
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
வறுமை நிலையிலுள்ள 70 இலட்சம் மக்களும் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - சஜித் 24 JUN, 2023 | 07:09 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் 70 இலட்சம் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். எந்த தரவுகளின் அடிப்படையில் வெறுமனே 12 இலட்சம் மக்களை மாத்திரம் இத்திட்டத்தில் உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். தனது விசேட அறிக்கையொன்றின் ஊடாக இவ்வாறு கேள்வியை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர், அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் 14 சதவீதமாக இருந்த வறுமை நிலை 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருந்து பற்றாக்குறையால் இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. மருந்துக்கான பற்றாக்குறை, மருந்தின் விலை உயர்வின் ஊடான மோசடி, ஊழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டின் நோய்வாய்ப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் உண்மை நிலைவரத்தை புரிந்துகொள்ள ஒரு வெளிப்படைத் தன்மையான கணிப்பீட்டை நடத்துவதுதான் அரசாங்கம் முதலில் செய்திருக்க வேண்டியதாகும். ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம் வழங்கவென அரசாங்கம் அஸ்வெசும எனும் கண்மூடித்தனமான நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 இலட்சம் பேருக்கு 3 ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். நாட்டில் 70 இலட்சம் ஏழ்மையான மக்கள் இருக்கும்போது 12 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்குவதன் நோக்கம் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றோம். எந்த கணக்கெடுப்பின், எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த 12 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்றும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதேச்சதிகாரமாக உரங்களை தடைசெய்து, முழு நாட்டையும் பஞ்சத்தில் தள்ளினார். அவருக்குப் பின் இடைக்கால ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முழு நாட்டையும் ஏமாற்றி முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டுக்கு செய்யப்போகும் பாரதூரமான அவலங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியாகி நாம் முன்னரே நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தோம். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் இரண்டாம் பட்சமில்லை என ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகின்றோம். எவ்வாறாயினும், நாட்டையும் நாட்டு மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமே அரசாங்கத்தின் ஒரே விருப்பமாக அமைந்திருப்பதோடு, அவ்வாறான நோக்கம் இல்லாமல் இருப்பதாக இருந்தால் மக்கள் மீது இவ்வளவு அழுத்தத்தை பிரயோகிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. தற்போது நாட்டுக்கு முக்கியமான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கூட ஒரு பொதுவான இலக்குடன் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக சிந்திக்கப்படுவதை விடுத்து, வெறுமனே தனது குறுகிய இலக்குகளை அடைவதற்காகவே அரசாங்கம் இதை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இவை அனைத்தும் சந்தர்ப்பவாத அரசாங்கத்தின் குறுகிய நோக்கற்ற தன்னிச்சையான செயல்முறையை தவிர வேறொன்றையும் புலப்படுத்துவதாக இல்லை. இந்நிலையை மாற்றி மக்கள் சார் சிந்தனைவாயிலாக புதிய மக்கள் ஆணையின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதற்காக அரசாங்கத்துக்கு அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிப்போம் என்பதையும் வலியுறுத்துகிறோம். அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள 70 இலட்சம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். குறுகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு அறிவியலற்ற முறையில் முன்வைக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் மூலம் உண்மையான தேவைகளை அடையாளப்படுத்துபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டில் நிலவும் கடுமையான மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/158502
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
வவுனியா, தோணிக்கல் கிராமத்தில் உதவித் திட்ட முறைகேடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் 24 JUN, 2023 | 07:33 PM வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24) மதியம் 3 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித் திட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சன சமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்ப்பட்டியல் வந்துள்ளன. இதை பற்றி கேட்கச் சென்றால், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையினமாக பதிலளிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை. மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/158504
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
தகுதி இருந்தும் நிவாரண திட்டத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மேன் முறையீடு செய்யலாம் - பிரதமர் சபையில் தெரிவிப்பு Published By: VISHNU 23 JUN, 2023 | 09:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெருமளவானவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே. பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான மதிப்பீடு தொடர்பில் சபையில் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர். அந்த வகையில் கடந்த மாதத்தில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் சமூகமளிக்காததன் காரணத்தினால் தகைமைகளைக் கொண்ட இளைஞர்கள் சிலரை சுயாதீனமாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கிணங்க நலன்புரி சபை அந்த சவாலை பொறுப்பேற்று முதலாவது சுற்றை எமது அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்திலும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதுகாப்பதற்கான இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதனை மேலும் விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதிப்பீடுகளில் குறைபாடுகள் காணப்படுமாயின் வசதி படைத்தவர்களுக்கும் இந்த நிவாரணத்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். எவ்வாறாயினும் வசதி படைத்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட முடியாது. தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில் இடம் பெறவில்லை என கூறப்படும் போதும் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும். மேன் முறையீடுகளுக்கான காலம் இன்னும் நிறைவடையவில்லை. குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்குள், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோரை எந்த விதத்திலும் இந்த திட்டத்திலிருந்து நீக்க முடியாது. அதனால், அதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பிரச்சினைகள் உள்ளவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவ்வாறெனினும் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும்பாலானவர்களுக்கு இந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்புக்களை மேலும் அதிகமாக எமக்கு பெற்றுக் கொள்ளவும் முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/158425
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
மேன்முறையீடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலப் பயனாளிகள் பட்டியல் திருத்தம் செய்யப்படும் -ஷெஹான் சேமசிங்க மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பெறுபவர்களின் பட்டியல் திருத்தப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சேமசிங்க, மேன்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு தனிநபரும் மேன்முறையீடு அல்லது முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேல்முறையீடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், பதிவேட்டில் திருத்தம் செய்யப்படும் என்றார். விண்ணப்பங்கள் மற்றும் சரிபார்ப்பின் அடிப்படையில் தற்போது பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் திருத்தங்களுக்கு இன்னும் இடமுள்ளதாகவும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பதிவேடுக்காக ஒகஸ்ட் மாதம் மீண்டும் ஒருமுறை பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 148 பில்லியன் ரூபாவிலிருந்து 187 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கவலை எழுப்பியுள்ளனர். இதன்படி, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சபையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/259697
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் - ஆளும் தரப்பு உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை Published By: VISHNU 23 JUN, 2023 | 11:42 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது. தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தகுதியற்ற செல்வந்தர்கள் நிவாரண திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்த திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடையாளப்படுத்தப்படவில்லை. நிவாரணத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேன்முறையீட்டுக்கான காலவகாசம் நீடிக்கப்பட வேண்டும். குளறுபடிகளுடன் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும். ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை செயற்திட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/158388
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாக உயிரிழந்திருப்பார்கள் - அமெரிக்க கடற்படை மருத்துவர் 23 JUN, 2023 | 12:19 PM டைட்டானிக் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாகவே உயிரிழந்திருப்பார்கள் என அமெரிக்ககடற்படையின் முன்னாள் மருத்துவர் டேல்மோல் தெரிவித்துள்ளார். நீர்மூழ்கிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என அவர்தெரிவித்துள்ளார். உள்ளே சிக்குண்டிருப்பது இன்னமும் மோசமான நிலையாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியிருந்திருக்கும் என நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும்,மிகுந்த குளிராக காணப்படும் ஒக்சிசன் முடிவடையும் நிலை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/158400
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி? பட மூலாதாரம்,DAWOOD FAMILY/LOTUS EYE PHOTOGRAPHY/REUTERS 23 ஜூன் 2023, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன. வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS ஓஷன்கேட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டது என்ன? அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. "எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,IFREMER/REUTERS/ OLIVIER DUGORNAY நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார் யார்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,NOAA VIA SPL எப்படி விபத்து நடந்தது? அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு "பேரழிவு வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது. இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள். "கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது. புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள். நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள். தந்தைக்காக நீர்மூழ்கியில் சென்ற மகன் பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார். தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவ்ரகள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது. ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார். அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம். ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார். அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார். அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார். நீர்மூழ்கி வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்தேன்: டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பட மூலாதாரம்,GETTY IMAGES நீர்மூழ்கியை இழந்துவிடுவோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பிபிசியிடம் கூறியுள்ளார். டைட்டானிக் கப்பலைக் காண கேமரூன் இதுவரை 33 முறை சென்று வந்திருக்கிறார். நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். "என்ன நடந்தது என்பதை நான் என் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது" "ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்" "அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு'" https://www.bbc.com/tamil/articles/c97nq3r1qvno
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
கதவு இல்லாத கழிவறை, 17 போல்ட் போட்டு வெளிப்புறத்தில் சீல் - டைட்டன் நீர்மூழ்கி பாதுகாப்பானதா? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர்,மேட் மர்ஃபி பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தற்போது கடலில் மாயமாகியிருக்கும் ’டைட்டன் நீர்மூழ்கி’ அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக் குழுவினரால் பயணத்திற்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி இறங்குவதற்கு முன்னால், துணைக்குழுவினர் அதை வெளியிலிருந்து பூட்டி, பின் போல்ட் மூலம் மூடினர். பின் ஆழ்கடலுக்குள் இறங்கிய நீர்மூழ்கி, டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது, அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது. இந்த நீர்மூழ்கி ஓஷன்கேட் என்னும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது. தற்போது காணாமால் போயிருக்கும் இந்த நீர்மூழ்கியைத் தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. ’டைட்டன் நீர்மூழ்கி’ - ஒரு பார்வை கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. ‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’. ’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும். 'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும். பட மூலாதாரம்,REUTERS டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்குகிறது? ’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல. கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது. கப்பலுக்குள் வடிவமைப்பு எப்படியிருக்கும்? பட மூலாதாரம்,OCEANGATE இந்த நீர்மூழ்கியின் உட்பரப்பு மிகவும் குறுகலாகக் காணப்படுகிறது. வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) என்ற கணக்கில் மட்டுமே இதன் கொள்ளளவு இருக்கிறது. ஒரே நேரத்தில் விமானி உட்பட மொத்தம் 5 பேர் மட்டுமே இதில் பயணிக்க முடியும். ஆனால் இந்த அளவு மற்ற நீர்மூழ்கி கப்பல்களைவிட பெரியது எனக் கூறப்படுகிறது. கப்பலின் முன்புறத்தில் உள்ள குவிமாடத்தில் ஒரு பெரிய துவாரம் (porthole) இருக்கிறது. அதன் மூலம் நாம் கடலுக்குள் செல்லும் வழியைப் பார்க்க முடியும். இந்தத் துவாரத்தின் அளவு மற்ற எந்த நீர்மூழ்கிகளிலும் இருப்பதைவிட மிகப் பெரியது என அதன் நிறுவனமான ஓஷன்கேட் தெரிவிக்கிறது. அதேபோல் அத்தகைய ஆழத்தில், நிலைமைகள் மிகவும் குளிராக மாறும் என்பதால், இந்த நீர்மூழ்கியின் சுவர்கள் தொடர்ந்து தன்னைச் சூடாக்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மட்டுமே இந்த பயணத்தின்போது கிடைக்கும் ஒளியின் ஒரே ஆதாரமாக இருக்கின்றன. நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் பயணிகளுக்காக சிறியளவில் கழிவறையும் இருக்கிறது. பயணத்தின்போது ஒருவர் கழிவறையை உபயோகிக்க வேண்டுமென்றால், உள்ளே சென்று அங்கிருக்கும் திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும். அப்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக கப்பலின் பைலட் மெல்லிய இசையை ஒலிக்க விடுவார். ஆனாலும் இத்தகைய அசாதாரண ஆழ்கடல் பயணத்திற்குத் தயாராகும்போது, பயணிகள் தங்களது உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் டைட்டானிக் கப்பல் சிதலமடைந்து கிடக்கும் பகுதியை அடைந்த பிறகு, அதன் காட்சிகளை ஒளிரச் செய்யும் வகையில் நீர்மூழ்கியின் வெளிப்புறத்தில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,AMERICAN PHOTO ARCHIVE அதோடு அந்தக் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக 4K கேமராக்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் பாதையை நிர்ணயிக்க வெளிப்புற லேசர் ஸ்கேனரும், சோனாரும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதை, நீர்மூழ்கிக்குள் இருக்கும் பெரிய டிஜிட்டல் திரையில், பயணிகளால் காண முடியும். டைட்டன் நீர்மூழ்கியில், 96 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இந்தப் பயணத்தின்போது பயணிகளின் சுவாச வீதத்தில் மாறுபாடு ஏற்படலாம். நீர்மூழ்கியின் பெரும்பாலான உட்பகுதி "off-the-shelf technology"இல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. இது இந்த கப்பலின் கட்டுமானத்தை சீரமைக்கவும், இதை எளிதான முறையில் இயக்கவும் பயன்படுகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. டைட்டன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது? கடலின் ஆழத்திற்குச் செல்லும் இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்மால் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒரு பிரத்யேக வகையில் செய்தி பரிமாரப்படும் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக கடலின் மேற்பரப்பில் இருக்கும் குழுவுடன், நீர்மூழ்கிக்குள் இருப்பவர்கள் அறிவுறுத்தல்களைப் பெற முடியும். இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், நீர்மூழ்கியின் பைலட் கப்பலைச் செலுத்துகிறார். வீடியோ கேம் கண்ட்ரோலர் போல இருக்கும் ஒரு சாதனத்தின் மூலம் அவர் நீர்மூழ்கியைத் தனது கட்டுப்பாட்டில் கடலுக்குள் செலுத்துகிறார். தற்போது தொலைந்து போயிருக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் விமானி ரஷ், கடந்த ஆண்டு சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, நீர்மூழ்கியை இயக்குவது அவ்வளவு சிரமமான காரியமல்ல என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? கடலின் ஆழத்தில் செல்லும்போது, அங்கு நிலவும் கடுமையான அழுத்தங்களை நீர்மூழ்கி கையாள வேண்டும். இதற்காக ’கப்பலின் ஒவ்வொரு நகர்வையும், உடனுக்குடன் கணிக்கும் கண்காணிக்கும் அமைப்பை’ ஏற்பாடு செய்துள்ளதாக ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலுக்குள் நிலவும் மாறுபட்ட அழுத்த நிலைகளைக் கண்காணிப்பு செய்ய அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கி கடலுக்குள் இறங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக்குழு அதை வெளிப்புறத்திலிருந்து பூட்டுகிறது. மேலும் 17 போல்ட்களை கொண்டு வெளிப்புறத்தில் சீல் செய்கிறது. இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தப் பயணத்தில் பல சவால்களும், ஆபத்துகளும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம், அதன் விளம்பர வீடியோக்களிலேயே குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,DIRTY DOZEN PRODUCTIONS ஓஷன்கேட் நிறுவனத்தால் ‘டைட்டன்’ வடிவமைக்கப்பட்டபோது, நீர்மூழ்கி கப்பல்களைச் சோதனை செய்யும் வல்லுநர்கள் தங்களது ஒருமித்த கவலைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் வடிவமைப்பில் இருக்கும் ‘பேரழிவுக்கான சிக்கல்கள்’ குறித்து அவர்கள் அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ வடிவமைப்பு குறித்து பல தவறான கூற்றுகளை ஓஷன்கேட் நிறுவனம் கூறி வருவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. பயணத்திற்கு முன் பயிற்சிகள் அளிக்கப்பட்டதா? இந்தப் பயணங்களில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்களுக்கு, ஆழ்கடல் பயணம் மேற்கொள்வதில் கடந்த கால அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதேனும் பயிற்சிகள் தேவைப்பட்டால், அது ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் நிச்சயம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட இடத்தில் நீண்டநேரம் அமர்ந்துகொள்ளவும், ஏணியில் ஏறுவதற்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனவும் ஓஷன்கேட் நிறுவனம் கூறுகிறது. மேலும் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. அதேநேரம் "பயணத்தின்போது பயணிகள் எவ்வாறு ஈடுபட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம்" எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. தகவல்தொடர்பு குழுக்களுடன் பணிபுரியவோ அல்லது கப்பலின் பைலட்டுக்கு வழிசெலுத்துவதில் உதவும் வாய்ப்பையோ பயணிகள் பெறலாம் எனவும் ஓஷன்கேட் குறிப்பிடுகிறது. https://www.bbc.com/tamil/articles/c721vgrzdn8o
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
'டைட்டன்' நீர்மூழ்கியில் ஆக்சிஜன் காலியான பிறகு உள்ளே இருப்பவர்களுக்கு என்ன ஆகும்? முழு விவரம் பட மூலாதாரம்,DAWOOD FAMILY படக்குறிப்பு, பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத் 21 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் சிதைவுகளை நேரில் பார்க்கும் சுற்றுலா விபரீதத்தில் முடிந்திருப்பதே இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. நீர்மூழ்கி காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அதற்கு என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவரவில்லை. நீருக்கடியில் சத்தம் எழுந்ததைக் கண்டுபிடித்துள்ள தேடுதல் குழுவினர், அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சப்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது. இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை. தற்போது சுமார் 4 கி.மீ. ஆழத்தில் தேடும்பணி நடந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருக்கும் என்று மதிப்பிடப்படும் நிலையில், அதன் பிறகு நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ஆக்சிஜன் காலியான பிறகு என்ன நடக்கும்? நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸுடன் பிபிசி நிருபர் பேசியுள்ளார். டாக்டர் லெடெஸ், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்களுக்கான சில காரணிகளை விளக்கினார். "இது விளக்கை அணைப்பது போல் இல்லை, அது மலையில் ஏறுவது போன்றது," என்று அவர் கூறினார். "அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்." அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார். "தாழ்வுநிலையில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம்". என்கிறார் அவர். "அதிகமாகக் குளிர்ச்சியடைந்து சுயநினைவை இழந்தால், அதன் மூலம் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியாக இருக்கும்போது இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்," என்று அவர் கூறினார். டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி எங்கே மூழ்கியது? காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது. பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீருக்கடியில் சத்தம் - நீர்மூழ்கி விபத்தில் சிக்கியதா? நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் உள்ளுடு தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது. வியாழக்கிழமையன்று கூடுதலாக சப்தம் கேட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, நீர்மூழ்கி காணாமல் போன பகுதி (வரைபடம்) தேடுதல் பணியில் யார், யார் ஈடுபட்டுள்ளனர்? அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன. காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 30 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நீர் மூழ்கியில் யார்யார் பயணித்தனர்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பயணத்திற்கு முன்பு பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SUPPLIED படக்குறிப்பு, நீர்மூழ்கியில் பயணம் செய்த பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத்(மேலே), பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங் கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓஷன்கேட் நிறுவனம் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது? டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி விபத்தால் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு, ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) என்பவர் தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. 'பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக' ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிபுணர் பணிநீக்கம் காணாமல் போன நீர்மூழ்கியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணரை 2018-ம் ஆண்டில் ஓஷன்கேட் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. வாய்மொழியாக அவர் கூறிய விஷயங்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் முறைப்படி அறிக்கையாக தயார் செய்து ஆய்வுக்கு முன்வைத்துவிட்டார். இதற்குப் பரிசாக, அவரை பணிநீக்கம் செய்ததுடன், கம்பெனி ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் இரு தரப்பும் பின்னர் சமரசம் செய்து கொண்டன. பட மூலாதாரம்,DAVID LOCHRIDGE படக்குறிப்பு, பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் 'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன? ஓஷன்கேட் நிறுவனம் - நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் இடையிலான வழக்கில் நீதிமன்ற ஆவணங்களில் டேவிட் லாக்ரிட்ஜ் கண்டுபிடித்த பாதுகாப்புக் குறைபாடுகளாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, தற்போது காணாமல் போயுள்ள டைட்டன் நீர்மூழ்கியின் முன்பக்க காட்சிப் பகுதி 4,265 அடி ஆழம் வரையே செல்ல சான்றளிக்கப்பட்டது. ஆனால், 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க இந்த நீர்மூழ்கியில் தான் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அது தற்போது காணாமல் போயிருப்பது குறித்து டேவிட்டின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதே நீர்மூழ்கிதான், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்ஷூடன் காணாமல் போயுள்ளது. 'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி ஓஷன் கேட் நிறுவனம் கூறுவது என்ன? ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் சுற்றுலாவுக்கென மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளது. அவற்றில் ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலில் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செல்லக்கூடியது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 'டைட்டன்' நீர்மூழ்கியின் முதலிரு பயணங்கள் வெற்றி 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 'டைட்டன்' நீர்மூழ்கியின் செயல்திறன் என்ன? 10,432 கிலோகிராம் எடையும், 22 அடி நீளமும் கொண்ட டைட்டன் நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று ஓஷன்கேட் இணையதளம் கூறுகிறது. ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. பட மூலாதாரம்,CBS NEWS டைட்டானிக் சுற்றுலா - 8 நாள் பயணத் திட்டம் ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திற்கு போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இந்த நீர்மூழ்கிகள் கொண்டுவரப்படும். ஓஷன்கேட் நிறுவனம் சுவாரஸ்ய விளம்பரம் "உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையும் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது. இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது. டைட்டானிக் கப்பல் எப்போது, எப்படி விபத்தில் சிக்கியது? 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் இந்த விபத்து உலகம் முழுவதும் அனைவரும் அறிந்த, ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES டைட்டானிக் சிதைவுகள் எங்கே மூழ்கிக் கிடக்கின்றன? 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன. https://www.bbc.com/tamil/articles/c8095k86erko
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
Video Game Controller மூலம் இயக்கப்படும் கப்பலில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் மீதம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் ஏற்கெனவே பயணம் செய்தவர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் அனைவரும் ஆபத்துக்களை அறிந்திருந்தோம்" என்றார்.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
நீர்மூழ்கி மாயமான கடலடியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டது Published By: SETHU 21 JUN, 2023 | 11:16 AM அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிய நீர்மூழ்கி காணாமல் போன கடலின் அடிப்பகுதியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சோனார் தொழில்நுட்பம் மூலம் இந்த சத்தம் உணரப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கனடாவின் P3 ரக விமானமொன்றின் மூலம் இச்சத்தம் உணரப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை இச்சத்தம் கேட்டது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சத்தம் உணரப்பட்டதை அமெரிக்க கரையோரகக் காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது. 6.5 மீற்றர் (21 அடி) நீளமானஇ டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான தொடர்பை இழந்தது. டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த நிலையில் இந்நீர்மூழ்கி காணாமல் போனது, இந்நீர்மூழ்கியில் பாகிஸ்தானின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர், அவரின் மகன், பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் ஆகியோரும் உள்ளனர் அறிவிக்கக்கப்பட்டுள்ளது, 6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான தொடர்பை இழந்தது. அத்திலாந்திக் சமுத்திரத்தில் 7600 சதுரமைல் பரப்பளவுள்ள பகுதியில் அமெரிக்க. கனேடிய கரையோர காவல்படை கப்பல்கள் தேடுதல் மேற்கொண்டுவந்தன. இத்தேடுதல் நடவடிக்கைகளில் தற்போது அமெரிக்க கடற்படை நிபுணர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/158210
-
குட்டிக் கதைகள்.
பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் கடலுக்குள் போன 5 பேரின் கதி என்ன? பட மூலாதாரம்,OCEANGATE கட்டுரை தகவல் எழுதியவர்,காரேத் ஈவான்ஸ் & லாரா கோஸி பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டைட்டானிக்கை நேரில் பார்க்க 8 நாள் சுற்றுலா பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாலிவுட் சினிமா வடிவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்ட 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate). தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. ஒரு லாரி அளவிலான இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். அதில், வழக்கமாக 4 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் வழக்கமாக ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணிப்பார்கள். விபரீதத்தில் முடிந்த இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது. பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன. காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன. நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் இருக்க வாய்ப்பு "நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கலாம்" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார். 2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மீட்புக் குழுவினர் இந்த பணியை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,CBS NEWS நீர்மூழ்கியில் இருந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கதி என்ன? ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது. "காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு "உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையு ம் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது. இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது. டைட்டானிக் நீர்மூழ்கி ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது. 10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இஇருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. போலார் பிரின்ஸ் என்ற போக்குவரத்து நீர்மூழ்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பல் விபத்து டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன. https://www.bbc.com/tamil/articles/cml11w828mmo