Everything posted by ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சுவியண்ணா, வாழ்க வளத்துடன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்ப வீடு கட்டவில்லை, வீடும் வளவும் வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். புரோக்கர்மார் கொமிசனுக்கு ஆக்களைக் கூட்டுவாங்கள், அவ்வளவு ஒற்றுமை.
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – யோசனைகளை முன்வைக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ! உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய, குறித்த தரப்பினர் தங்களது யோசனைகளை, justicemedia07@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து, புதிய சட்டமூலம் உருவாக்கப்படும் எனவும், அது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/251865
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
அண்ணை 100kg எடையுடைய பொதிகள் கொண்டு வரலாமாம். வியாபாரிகளுக்கு நன்மை.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் ! யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். 65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/251824
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு!
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சித்திரம் அருமை கவி அருணாசலம் ஐயா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்தேசியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை
வேங்கைவயல்: மலம் மாதிரியை டி.என்.ஏ. பரிசோதனை செய்வது குற்றவாளியை அடையாளம் காட்டுமா? படக்குறிப்பு, வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டி கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 29 ஏப்ரல் 2023, 02:12 GMT புதுகோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நிச்சயமாக திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்தான் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். இது தொடர்பான வழக்கை முதலில் தனிப்படை காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பையே காவல்துறையினர் குற்றவாளிகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு. இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலம் மாதிரியை அடிப்படையாக வைத்து, வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 11பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் கூறி நீதிமன்றத்தை நாடியது சிபிசிஐடி. இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி வழக்கு நகர்ந்திருக்கிறது. ஆனால் மலத்தை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது சரியான தீர்வாக இருக்காது என்றும், இந்த விசாரணை கண் துடைப்பாக மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். உண்மையில் மலம் மாதிரிகளை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது பலன் அளிக்குமா? வேங்கைவயல் தொடர்பான வழக்கு விசாரணையில், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடும் சிக்கல் என்ன? இதுவரை இந்த வழக்கில் என்ன நடந்தது? புதுக்கோட்டை தீண்டாமை சிக்கல்: குடிநீரில் மலத்தை கலந்தவர்களை ஏன் கண்டறிய முடியவில்லை?2 ஜனவரி 2023 'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் தலித் மாணவரை அரை நிர்வாணம் ஆக்கியதா தமிழக காவல்துறை?27 ஏப்ரல் 2023 விஏஓ படுகொலை: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் மணல் மாஃபியா - யார், யாருக்கு பங்கு? ஓர் அலசல்28 ஏப்ரல் 2023 வேங்கைவயலில் என்ன நடந்தது? படக்குறிப்பு, மலம் கலக்கப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் ஏறி பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பின் சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி நகர்ந்திருக்கிறது. முதலில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது வேங்கைவயலைச் சேர்ந்த மேலும் 119 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எழும் குற்றச்சாட்டுகள் என்ன? வேங்கைவயல் சம்பவத்தில், ஆரம்பம் முதலே விசாரணை சரியான வழிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உள்ளூர் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது குறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “கடந்த 26 டிசம்பர் 2022 அன்று குடிநீர் தொட்டியில் எடுக்கப்பட்ட பாலிதீன் கவரில் இருந்த மலத்தை தூய்மை பணியாளர் ஒருவர் காவேரி நகர் செல்லும் வழியில் ஒத்தக்கடை என்கிற இடத்தில் சாலை ஓரம் உள்ள குப்பைமேட்டில் வீசிவிட்டு சென்று இருக்கிறார்.இதனை தொடர்ந்து 30 டிசம்பர் 2022 அன்று இரவு 8.45 மணி அளவில் தலித் குடியிருப்புக்கு வந்த போலீசார் அந்த மலத்தை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது என்று விசாரித்து அதன் அடிப்படையில் அந்த குப்பை கிடங்கில் தேடி மலத்தை எடுத்து சென்றிருக்கின்றனர். இதைத்தான் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.மலத்தை யார் கொட்டி வைத்தார்கள் என்பது பிரச்சனையா? யாருடைய மலம் என்பது பிரச்சனையா? சரி மலத்தை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் யாருடையது என்று கண்டு பிடிக்க முடியுமா? அது துல்லியமானதா? பல்வேறு நிபுணர்கள் இது சாத்தியம் அல்லாத ஒன்று என்கின்றனர்” என்று பதிவு செய்துள்ளார். மேலும், “டி.என்.ஏ.டெஸ்ட் எடுக்க வேண்டிய பட்டியலில் 11 பேரில் 9 பேர் தலித்துகள். உங்கள் விசாரணை பரிசோதனை எல்லாம் எங்கள் பக்கமே இருக்கிறதே? நாங்கள் யார் குற்றவாளி என்று கூறி விட்டோம் ஏன் அங்கு விசாரணை செய்யப்படவில்லை என்று தலித்துகள் கேட்டதற்கு உரிய பதில் இல்லை. யாருடைய மலம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எல்லோரையும் தானே விசாரிக்க வேண்டும், அதைவிட்டு விட்டு எங்களை மட்டும் ஏன் குறி வைக்கவேண்டும்? இதன் உள்நோக்கம் என்ன? ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களைத்தான் குற்றவாளிகள் என்று சித்ரவதை செய்தனர். அதற்கு ஆதரவாக இருப்பது போல தற்போது இந்த டி.என்.ஏ. பரிசோதனையும் உள்ளது. இதனை சுட்டி காட்டி கடந்த 24 ஏப்ரல் 2023 அன்று உயர் நீதி மன்றத்தில் தலித்துகள் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். எங்கே தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி தந்திரமாக நேற்று மேலும் 120 பேரினை டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்போகிறோம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.இதை ஏன் முதலில் செய்யவில்லை.” என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/EVIDENCE KATHIR படக்குறிப்பு, எவிடென்ஸ் கதிர் அவரின் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக எவிடென்ஸ் கதிரை தொடர்புகொண்டது பிபிசி தமிழ். அப்போது பேசிய அவர், “இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே தவறான வழியில் கையாளப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்ட மலத்தை அன்றே குப்பையில் போட்டுவிட்டதாக சொல்கிறார்கள். நான்கு நாட்களுக்கு பின்னர் குப்பையில் போடப்பட்ட மலத்தை தேடி எடுத்து தற்போது டிஎன்ஏ பரிசோதனை என்கிறார்கள். இதில் மலத்தின் மூலம் செய்யப்படும் டிஎன்ஏ பரிசோதனை பெரிதாக பயனளிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அடுத்த மாதம் 6ஆம் தேதிதான் அந்த விசாரணையே துவங்கவிருக்கிறது. கிட்டதட்ட 37நாட்கள் தாமதமாக விசாரணை துவங்குகிறது. இதுவரை சிபிசிஐடி மேற்கொள்ளும் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை. இப்போது நீதிபதியிடம் நாங்கள் சரியான முறையில் விசாரணை செய்திருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே இவர்கள் தற்போது டிஎன்ஏ பரிசோதனையில் இறங்கியிருக்கிறார்கள். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடமே இவர்கள் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது முழுக்கமுழுக்க அதிகாரிகளுக்குள் நடைபெறும் ’ஈகோ’ பிரச்னை” என்று அவர் விவரிக்கிறார் . “இந்த வழக்கு இதுவரை ஒரு சாதாரண கிரைம் சம்பவமாகவே கையாளப்பட்டு வருகிறது. ஆனால் இதில் இருக்கும் சாதிய பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வழக்கின் பின்னனி என்ன என்பதை தெளிவாக விசாரிக்காமல், இதை தலித்துக்கள்தான் செய்திருப்பார்கள் என்ற கண்ணோட்டத்திலேயே விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார் . மலம் மாதிரிகளில் நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனை பலனளிக்குமா? ”மலம் மாதிரிகளை கொண்டு நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனைகள் முற்றிலும் பலனளிக்காது என்றும் சொல்ல முடியாது, முழுமையான பலன் அளிக்கும் என்றும் சொல்ல முடியாது. இது மிகவும் சிக்கலான ஒன்று” என கூறுகிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன். இவர் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” நம்முடைய டிஎன்ஏ மற்றும் டிஎன்ஏ பரிசோதனை குறித்தும் அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்துகொண்டால், இதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நமக்கு விளங்கும். டிஎன்ஏ அல்லது deoxyribonucleic acid என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான டிஎன்ஏ அமைப்பு இருக்கிறது. அதேசமயம் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரின் டிஎன்ஏ-வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதில் டிஎன்ஏ- வின் Code letters ஆக கருதப்படும் ATGC என்ற எழுத்துக்கள்தான் அடிப்படையானவை(Base pair). இது போல மற்ற எழுத்துக்களும் காணப்படும். இதனை sequencing என்று கூறுவோம். இந்த sequence-ல் காணப்படும் நுண்ணிய மாறுபாடுகளே ஒருவரில் இருந்து மற்றொருவரை வேறுபடுத்தி காட்டுகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் கிட்டதட்ட 3 பில்லியன் டிஎன்ஏ-கள் உள்ளன. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY இப்போது அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மலத்தை வைத்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, அதன்மூலம் குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காண முயன்றால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்பதுதான் உண்மை” என்கிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன். அவர் தொடர்ந்து பேசுகையில், “நம் உடலில் இருக்கும் தலைமுடி, நகம், எச்சில், ரத்தம் போன்ற பாகங்களில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும், மலத்தில் இருந்து பரிசோதனை மேற்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மலம் என்பது நம் உடலினுடைய பாகம் அல்ல, அது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவு. அதில் 75சதவீதம் நீரும், 25 சதவீதம் திடக்கழிவாகவும் இருக்கும். இந்த கழிவில் 30 சதவீதம் பாக்டீரியாக்களும் இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் என்பது நாம் சாப்பிட்ட ஏதாவது ஒரு உணவுகளிலிருந்து கூட வெளியேறியிருக்கலாம். மற்றும் மலத்தில் இறந்து போன செல்களும் காணப்படும். எனவே இதனை அடிப்படையாக வைத்து, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும்போது அதில் தெளிவான முடிவுகள் கிடைக்காது. உதாரணமாக ஒருவரின் தலைமுடியை கொண்டு நாம் பரிசோதனை நடத்தும்போது அதில் குறிப்பிட்ட நபருடைய டிஎன்ஏ-தான் இது என்பதை நாம் மிக தெளிவாக சொல்ல முடியும். ஆனால் மலத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 25 - 50 சதவீதம் வரை இது இவராக இருக்கலாம் என்று மட்டுமே நம்மால் யூகிக்க முடியும். இது நிச்சயமாக இவர்தான் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியாது. 'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் தலித் மாணவரை அரை நிர்வாணம் ஆக்கியதா தமிழக காவல்துறை?27 ஏப்ரல் 2023 பொன்னியின் செல்வன் - 2: சினிமா விமர்சனம்28 ஏப்ரல் 2023 இந்த ஐபிஎல் சீசனில் தங்கள் அணிக்குப் பெருமை சேர்க்கும் சீனியர் வீரர்கள் இவர்கள் தான்28 ஏப்ரல் 2023 இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு திருடனை நேரில் பார்த்து நாம் அடையாளம் காண்பதற்கும், அங்க அடையாளங்களை கொண்டு ஒரு உருவத்தை வரைந்து இப்படிதான் இவர் இருப்பார் என்று கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதுதான் இது” என்று விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர். ”அதேபோல் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து எத்தனை நாட்களுக்குள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியம். சில வழக்குகளில் டிஎன்ஏ பரிசோதனைகள் நீண்ட நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த குறிப்பிட்ட மாதிரிகளில் இருக்கும் டிஎன்ஏ எந்தளவு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் வேங்கைவயல் போன்ற விவகாரங்களில், வேறு வழியே இல்லாதச் சூழலில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் என்றால் இதனை நாம் குறை கூறவும் முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். https://www.bbc.com/tamil/articles/czkxl55582jo
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் முன்வைக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது, இது ஒரு தேசிய உரையாடல் முடிவடைந்து தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைக்க வேண்டாம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தீர்வு காண்பதற்கு, மிகவும் தாமதமாகிவரும் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் ஆராய வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்துள்ளது. இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடகால கொடூரமான உள்நாட்டு யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கு மாத்திரம் அமையாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 கள் மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட எழுச்சிகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை இருக்கும், அங்கு பலர் எழுச்சி மற்றும் அரசின் பதில் இரண்டாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/251023
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அட பக்கத்தில வந்திருக்கிறியள், பண்ணாகமா? வழக்கம்பரையா?
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாஃப்டரின் காரில் இருந்த இரத்த மாதிரி யாருடையது? வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட பிறிதொரு நபரின் இரத்த மாதிரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/250574
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது. 1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சட்டத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இன்றும் அவர்களில் சிலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்திருந்தார்கள். அதன்பின்னர், 2022ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நடத்தப்;பட்ட போராட்டத்தை அடுத்து, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் பல சிங்களவர்களும் கைது செய்;யப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு மூன்று இனத்தவர்களும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதியா? அமைச்சர் விளக்கம் தந்த பிறகும் தீராத சந்தேகங்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் ‘அயலான்’ ரகசியத்தை சொல்லும் ரவிக்குமார் - 2 மணி நேரம் வரும் ஏலியன் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் K-pop உலக மர்மத்தை வெளிப்படுத்தும் தற்கொலைகள் - தென் கொரிய இசை உலகில் என்ன நடக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாட்டில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கையில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது ஆயிரம் மடங்கு ஆபத்தான சட்டம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பான சரியான வரைவிலக்கணம் கிடையாது எனவும், மிகவும் பரந்த வரைவிலணக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட சுதந்திரங்களை இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, அம்பிகா சற்குணநாதன் அத்துடன், இந்த சட்டமானது, நாட்டில் ராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். அவர் சொல்லும் சில விஷயங்கள் வருமாறு: 01.ராணுவத்திற்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. (கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் ராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது) 02.தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் தடுப்பாணையை பாதுகாப்பு அமைச்சர் மாத்திரமே வழங்க முடியும். எனினும், புதிய சட்டத்தில் பிரதி போலீஸ் மாஅதிபர்களுக்கு தடுப்பாணையை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுகின்றது. 03.புதிய சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. 04.வர்த்தமானியின் ஊடாக அமைப்புக்களை தடை செய்தல், ஒரு பிரதேசத்தை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியும். 05.வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராக போராடுபவர்களை, சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் நோக்குடன், அந்த பௌத்த மத தலங்களுக்கு சேதம் விளைவிப்பதாக திரிவுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்;. 06.வர்த்தமானியின் ஊடாக தடை செய்யப்பட்ட இடங்களை படம் அல்லது காணொளி எடுத்தலால், அது கூட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றமாக கருதப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. சோழர்கள் இலங்கையில் பௌத்த விஹாரைகளை நிறுவியது மத நல்லிணக்கமா? ராஜ தந்திரமா?22 ஏப்ரல் 2023 இலங்கை குரங்குகளை கோரியதா சீனா? சீன தூதரக பதிலில் உள்ள உண்மை என்ன?20 ஏப்ரல் 2023 யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்19 ஏப்ரல் 2023 07.இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிவதற்காக ரகசிய தகவல்களை திரட்டுவதும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகின்றது. 08.போலீஸாரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது தடுப்பு முகாமில் நடக்கும் விடயங்கள் போன்றவை ரகசிய தகவல்களாக பட்டியலிடப்படுகின்றன. 09. இவ்வாறான தகவல்களை திரட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பெரிதும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்படலாம். 10.தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் உள்ளது. 11.தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொழிற்சங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அந்த சேவையை ஜனாதிபதி அத்தியாவசிய சேவையாக அறிவித்தலின் ஊடாக, அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவித்தலானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். அரசாங்கத்தின் பதில் படக்குறிப்பு, விஜயதாஸ ராஜபக்ஷ பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில குறைபாடுகள் காணப்படலாம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். குறைபாடுகள் எந்தவொரு சட்டத்திலும் காணப்படக்கூடியது எனவும், முழுமையான சட்டமொன்று உலகில் எந்தவொரு நாடும் அமல்படுத்தியது கிடையாது எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். சட்டம் என்பது காலத்தின் மற்றும் சமூகத்தின் தேவை எனவும் அவர் கூறுகின்றார். ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான ஜனாதிபதிகள் இந்த சட்டத்தின் கீழ் செயற்படாத பட்சத்தில், நாடு தற்போது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரத்த ஆறுகள் ஓடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாகவும், அதனை தவிர்த்துக்கொள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். அரசாங்கத்தை பாதுகாப்பதற்காவோ அல்லது ஜனாதிபதியை பாதுகாப்பதற்காகவோ தாம் புதிய சட்டங்களை கொண்டு வருவது இல்லை என அவர் குறிப்பிடுகின்றார். மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு, மக்களுக்கான சட்டங்களையே தாம் கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cv2d5pn1p29o
-
சிரிக்கலாம் வாங்க
அட்சய திருதியை முடிஞ்சுது!
-
சிரிக்கலாம் வாங்க
கொஞ்சம் கொஞ்சமாய் போடுங்க பழகிடும்!
-
மனதுக்கு இதமான இசை
ஈரானிய கிராமிய பாடலை அழகிகளின் வாத்திய இசையுடன் பார்த்து இரசியுங்கள்.
- 20.jpg
- முதியோர் சங்கம் சுழிபுரம்
- 19.jpg
- 18.jpg
- 17.jpg
- 16.jpg
- 15.jpg
- 14.jpg
- 13.jpg