Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ. வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.
  2. இலங்கை - இந்திய பயணிகள் படகுச்சேவை : காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை Published By: NANTHINI 12 APR, 2023 | 02:52 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக காங்சேகன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியூடாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு நிலையான கடல் வலயத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு திறமையாகவும், திறம்படவும் களமிறங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. அதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் கடற்படையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மூலம் இடம்பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல் என்பன கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடற்படையின் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் கடற்படை அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கடற்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/152741
  3. அக்கா நீங்கள் நல்லா கதை சொல்கிறீர்கள், காக்க வைக்ககாமல் தொடர்ந்தால் சுவியண்ணையின் தலை வெடிக்காது!
  4. பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் அனுபவத் தொடர் அருமை அண்ணா, தொடருங்கள். தவிச்ச முயல் அடிப்பவர்கள் அங்கும் உள்ளார்கள்!
  5. 3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/248573
  6. Couple Challenge - A Fun Vlog கணவன் மனைவி கேள்வி பதில் போட்டி
  7. மடு மாதா தலத்திற்கு எல்லா மதத்தவரும் செல்கிறார்கள் அக்கா. சுவி அண்ணாவின் கதையில் உண்மைச் சம்பவங்களும் கலந்திருக்கலாம். நன்றி சுவி அண்ணா.
  8. கருத்தாளம் மிக்க கவிதை. நன்றியும் வாழ்த்துகளும்.
  9. 50 வருட கால இடைவெளியின் பின்னர் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்வௌி வீரர்களை நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதற்காக 04 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களில் பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். கிறிஸ்டினா கோச்(Christina Koch) என்பவர் நிலவுக்கு பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார். நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள முதலாவது கறுப்பின விண்வெளி வீரராக விக்டர் குளோவர்(Victor Glover)பதிவாகவுள்ளார். Christina Koch, Victor Glover, Reid Wiseman மற்றும் Jeremy Hansen ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் நிலவுக்கு பயணிக்கவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/247833
  10. நானே பாதிக்கப்பட்டவன் என்பதால் அவனைப் புரிந்துகொண்டேன்.
  11. அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
  12. வர்ணனைகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சுவி அண்ணை, தொடருங்கள்.
  13. "கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளனர். வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையில் இருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். "சென்னையில் சூப்பர்; டெல்லியில் மோசம்" - விரக்தியில் கஜகஸ்தான் செஸ் வீராங்கனை2 மணி நேரங்களுக்கு முன்னர் வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை27 மார்ச் 2023 சாவர்க்கர்: இந்தியாவில் இவர் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன் - ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் "ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டு டிராக் பேண்ட் அணிந்துகொண்டு அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லி கற்களைப் போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார். எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது," என்று அவர்கள் பேசியுள்ளனர். பல்வீந்தர் சிங்கால் பல்லை பிடுங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வேத நாராயணனிடம் பிபிசி பேசியபோது, "நான் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்கு அந்தச் சான்றிதழ் தேவைப்பட்டதால் கடந்த 20ஆம் தேதி அதைக் கேட்டு என் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர். மறுநாள் கோவில் திருவிழா என்பதால் 23ஆம் தேதி காலை காவல் நிலையம் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, என்னைத் தேடி வந்த இரண்டு காவலர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். காவல் நிலையத்தில் வெகுநேரமாக உட்கார்ந்து இருந்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் 'உனக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்கு, ஏஎஸ்பி வந்து கொடுப்பாரு' என்று கூறினார். இதனிடையே எனது கையில் கட்டியிருந்த பாஜக கயிறு, சாமிக் கயிறு மற்றும் இடுப்பிலிருந்த கயிற்றை போலீசார் அறுத்து எடுத்தனர். சிறிது நேரத்தில் ஏஎஸ்பி அங்கே வந்து என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. நான் உடனே ஆங்கிலத்தில் குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை எனக் கூறினேன். காவல் நிலையத்தின் மேல்பகுதியில் இருந்த அறைக்கு என்னை ஏஎஸ்பி மற்றும் சில காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு கட்டிங் பிளேடு ஒன்றை எடுத்து எனது வாயின் கீழ் தாடையில் உள்ள பல் ஒன்றைப் பிடுங்கினார். மேலும் எனது காதில் அந்த கட்டிங் பிளேயரை வைத்து அமுக்கியதில் எனக்குக் காயம் ஏற்பட்டது. பின்னர் காவல் நியைத்தில் இருந்து மாலை 5 மணிக்கு என்னை அனுப்பினார். நான் அன்றிலிருந்து இன்று வரை ஐந்து நாட்களாகச் சாப்பிட முடியவில்லை," என்றார் வேதநாராயணன். நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை6 மணி நேரங்களுக்கு முன்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்4 மணி நேரங்களுக்கு முன்னர் வீட்டில் பல்லிகள் இல்லையென்றால் மனிதர்களின் நிலை என்னவாகும்?8 ஜனவரி 2023 திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பற்களைப் பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாகப் பலர் கூறுகின்றனர். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாகச் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்னை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஏஎஸ்பி பல்பீர் சிங் அவரது பற்களைப் பிடுங்கியது மட்டுமல்லாமல் விசாரணைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களின் பற்களையும் உடைத்து, தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சூர்யா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் மகாராஜா பிபிசி தமிழிடம் பேசும்போது, "பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ, சிறைச்சாலையில் வைத்தோ காவல்துறையினர் தாக்கக்கூடாது என்பது சட்டம். அந்த விதியை மீறி பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் கைதிகளைக் கொடூரமாகத் தாக்குகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ இதை விசாரிக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏஎஸ்பி மற்றும் இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். இது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வீந்தர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீவைகுண்டம் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அம்பாசமுத்திரம் பொறுப்பு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c514ljyg8xwo
  14. கதை அருமை சுவி அண்ணை. எனக்கு ஒரு விடயம் பிடிபட்டிருக்கு, அவசரக்குடுக்கையா மூக்கை நுழையாது பொறுமையா இருப்பம், நான் நினைச்சது சரியோ என்று கதை முடிவில் சொல்றன்.
  15. ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையை தீர்மானிக்க முடிகிறது, எல்லோரும் கைவிடும் போது. தொடருங்கள் சுவி அண்ணா.
  16. அண்ணை அது நன்மை தானே. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களா எனும் சான்றிதழ் தானே?
  17. தொடருங்க சுவி அண்ணா. (இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.