Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/158133
  2. 5 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கியில் 70 மணித்தியாலங்களுக்கே ஒக்சிஜன் Published By: SETHU 20 JUN, 2023 | 10:40 AM டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பயணித் நீர்மூழ்கி காணாமல் போன நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனேடிய கரையோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளனர். இந்நீர்மூழ்கியில் உள்ள ஒக்சிஜன் சுமார் 70 மணித்தியாலங்களுக்கே போதுமானதாக இருக்கும் என போதுமானதாக இருக்கும் கருதப்படுவதாக என அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார். 6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட இச்சிறிய நீர்மூழ்கியில் 5 பேர் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயைத் தளமாகக் கொண்ட அக் ஷன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமீஷ் ஹார்டிங்கும் இந்நீர்மூழ்கியில் பயணித்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் எனும் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்நீர்மூழ்கி கனடாவின் சென் ஜோன்ஸ் நகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி இந்நீர்மூழ்கி இறங்கத் தொடங்கியது. எனினும் 2 மணித்தியாலங்களின் பின்னர் இந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மசாசூசெட்ஸ் மாநில கரையோரத்திலிருந்து சுமார் 900 மைல்கள் (1450 கிலோமீற்றர் தூரத்தில்) தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க கரையோர காவல்படை தெரிவித்துள்ளது, அதேவேளை. கனேடிய கரையோர காவல்படையும் விமானமொன்று சகிதம் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளது. அமெரிக்க, கனேடிய கடற்படையினர் மற்றும் வணிக ஆழ்கடல் பயண நிறுவனங்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன. டைட்டான் எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கி 4,000 மீற்றர் ஆழம்வரை செல்லக்ககூடியது என ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளை பார்வையிடுவதற்கான 8 நாள் பயணத்துக்கு 250,000 டொலர்கள் அறவிடப்படடுகிறது. டைட்டடானிக் கப்பல் சிதைவுகளை நோக்கி சுழியோடுவத்றகான வாய்ப்பும் இதன்போது வழங்கப்படுகிறது. இந்நீர்மூழ்கியில் ‍6பொதுவாக மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதில் சுமார் 70 மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே எஞ்சி இருக்கும் தாம் கருதுவதாக அமெரிக்க கரையோர காவல்படை அதிகாரி றியர் அட்மிரல் ஜோன் மோகர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/158113
  3. பிபிசி மற்றும் மீடியாசோனா இணைந்து நடத்திய புலனாய்வில், உயிரிழந்த 25,000 ராணுவ வீரர்களின் விபரம் கண்டறியப்பட்டது. ஆனால் ரஷ்யா உறுதி செய்த எண்ணிக்கையை விட இது 4 மடங்கு அதிகம்.
  4. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 07:51 PM டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை. https://www.virakesari.lk/article/158103
  5. பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு ; புடின் அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 17 JUN, 2023 | 11:32 AM பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் உக்ரேன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில், செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பேசியதாவது, முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும். இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம். பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை. இவ்வாறு புடின் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் இருந்து அணு ஆயுதங்கள் வந்துள்ளதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகஷென்கோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/157900
  6. இலங்கை தமிழர்களுக்கு 'நரகத்தை காட்டிய' தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆலிஸ் கட்டி & சுவாமிநாதன் நடராஜன் பதவி,பிபிசி செய்திகள் 15 ஜூன் 2023, 06:33 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த வெப்பமண்டல தீவிலிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், அங்குள்ள அசாதாரண சட்ட நடைமுறைகள் அவர்களை தீவை விட்டு வெளியேற முடியாதபடி செய்துள்ளன. இந்த நிலை, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உதவியற்றவர்களாக உணர்கின்றனர். இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அந்தத் தீவின் பெயர், டியாகோ கார்சியா. அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் (புலம்பெயர்ந்தோர்) அனைவரின் பெயர்களும் இந்தக் கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. திசைமாறிய பயணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் அதிகாலை வேளையில் மீன்பிடிப் படகு ஒன்று டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் சிக்கியது. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள அந்த தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்த பகுதிக்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த எல்லைக்குள் நுழைந்த மீன்பிடி படகு குறித்த விசாரணையில், அந்த தீவின் நிர்வாகம் உடனடியாக இறங்கியது. அந்த படகில் மொத்தம் 89 இலங்கை தமிழர்கள் இருந்ததும், அவர்கள் உள்நாட்டில் அனுபவித்த பல்வேறு இன்னல்களில் இருந்து தப்பிப் பிழைத்து அடைக்கலம் தேடி வேறு நாட்டிற்கு செல்வதும் தெரிய வந்தது. அத்துடன் அவர்கள் டியாகோ கார்சியா தீவில் தரையிறங்க விரும்பவில்லை என்பதும் தெரிந்தது. தஞ்சம் புகுவதற்காக கனடாவை நோக்கி அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, மோசமாக மாறிய வானிலையும், படகின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் அவர்களின் பயணத்தை திசைத் திருப்பின. படகு ஆபத்தில் சிக்கியதால், நாங்கள் கரை ஒதுங்க அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தோம். “அப்போது சிறிது தொலைவில் மெல்லிய வெளிச்சம் தென்படவே, டியாகோ கார்சியா தீவை நோக்கி பயணித்தோம்” என்று படகில் இருந்த ஒரு நபர் பிபிசியிடம் கூறினார். பிரிட்டன் கடற்படை கப்பல், படகை பத்திரமாக கரை ஒதுங்க செய்தது. மேலும் அதில் இருந்த அனைவரும் ஓர் தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். 20 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. “ஆரம்பத்தில் படகின் இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு குறித்து மட்டும் ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புலம் பெயர்ந்த குழுவினர், டியாகோ கார்சியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு தஞ்சம் புகுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க தங்களை வலியுறுத்தலாம் என்ற அனுமானத்தையும் நிராகரிக்க முடியாது” என்றும் தீவின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் அனுமானம் அடுத்த நாளே நிஜமானது. தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழர்கள், அங்கிருந்த பிரிட்டிஷ் கடற்படை தளபதியிடம் ஓர் கடிதத்தை தந்தனர். அதில், “உள்நாட்டில் கடும் கொடுமைகளுக்கு ஆளாகி வந்ததால், 18 நாட்களுக்கு முன் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பயணத்தை தொடங்கினோம்; நாங்கள் பாதுகாப்பான ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2009 இல் இலங்கை ராணுவத்தினருடன் நடைபெற்ற உள்நாட்டு போரில் வீழ்த்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறியதன் விளைவாக தாங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர்களில் பலர் கூறினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் சிலர் குற்றம்சாட்டினர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாராயன் என்று பெயரிடப்பட்ட விசைப் படகில் கனடா நோக்கி பயணிக்கும் இலங்கை தமிழர்கள் முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம் இதனிடையே, வெளிநாட்டு பிராந்தியங்களுக்கான பிரிட்டன் இயக்குநரான பால் கேண்ட்லர் வெளியிட்டிருந்த குறிப்பில், “ பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியில் (BIOT) இதுபோன்றதொரு தஞ்சம் கோரும் சம்பவம் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கை தமிழர்கள் குழுவின் வருகையை “எதிர்பாராத வருகை” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்றும், நிலைமைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் பால் கேண்ட்லர் தமது குறிப்பில் தெரிவித்திருந்தார். “டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்கள் குழு தற்போதைக்கு வெளி உலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் நாளடைவில் இந்தச் செய்தி பரவ வாய்ப்புள்ளது” என்றும் கேண்டலரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நரகமாக மாறிய தீவு இதற்கிடையே, புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக தீவிற்கு வந்தவர்களுக்கு, தங்களின் யதார்த்த சூழ்நிலை போகப்போக புரிய ஆரம்பித்தது. “ஆரம்பத்தில் இங்கு நான் மகிழ்ச்சியாகவும். உயிர் தப்பியதாகவும் உணர்ந்தேன். முகாமில் உணவு அளிக்கப்பட்டது. அதுநாள் வரை அனுபவித்து வந்த கொடுமைகளில் இருந்து விடுபட்டதாகவும் உணர்ந்தேன்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி என்ற இலங்கை தமிழரான பெண் ஒருவர் கடந்த மாதம் பிபிசியிடம் கூறி இருந்தார். ஆனால் தங்களுக்கு அடைக்கலம் அளித்த இந்த வெப்ப மண்டல தீவு விரைவில் நரகமாக மாறியது என்றும் அவர் கூறினார். தன்னுடன் படகில் பயணித்து, தீவு முகாமில் தங்கியிருந்த ஒரு நபரால் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார். “அப்போது நான் கதறி அழுதேன். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை” என்று லெக்ஷனி கூறினார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க விரும்பியதாக கூறிய அவர், ’ஆனால், பாலியல் வன்கொடுமையின் போது தான் உடுத்தியிருந்த துணியை துவைத்து விட்டதன் விளைவாக ஆதாரத்தை சேகரிப்பது கடினம் என்று தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். தம்மை பாலியல் வன்புணர்வு செய்த நபரை வேறு கூடாரத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கும் வரை, கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த நபருடனே ஒரே கூடாரத்தில் தாமும் தங்கியிருக்க வேண்டியிருந்தது என்று பரிதாபமாகக் கூறினார் லெக்ஷனி. ஆனால் பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்திய நிர்வாகங்கள் (பிஐஓடி), இந்த குற்றச்சாட்டு தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GOOGLE EARTH தற்கொலை முயற்சி “முகாமில் நிலவிய சூழல் காரணமாக, தாங்கள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அதன் விளைவாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் அல்லது தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்டனர். கூர்மையான ஆயுதங்களை விழுங்கியதன் விளைவாக சிலர் மூச்சுத் திணறலுக்கும் ஆளாகினர்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி மற்றும் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர். முகாமிற்குள் குறைந்தது 12 தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பது குறித்தும், குறைந்தபட்சம் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தது தொடர்பாகவும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள் என்று புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “நாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்கிறோம். இங்கு நாங்கள் உயிர்பற்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். என்னை நான் நடைப்பிணமாக உணர்கிறேன். இதன் விளைவாக இரண்டு முறை என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்” என்று பிபிசியிடம் கூறினார் டியாகோ கார்சியா தீவு முகாமில் இருக்கும் மற்றொரு புலம்பெயர்ந்த நபரான விதுஷன். பாதுகாப்பு குறித்த தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும், இத்துடன் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார் முகாமில் இருந்த மற்றொரு நபரான ஆதவன். தமது கணவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக, சாந்தி என்ற மற்றொரு பெண் கூறினார். கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு விலங்கை போல நான் இங்கு வாழ விரும்பவில்லை என்றும் அவர் மனம் நொந்து கூறினார். அதிகாரிகள் மிரட்டல் 2021 இல் இலங்கை ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு தான் ஆளாகி இருந்ததாக குற்றம்சாட்டி, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவேன் என்று முகாமில் இருந்த ஓர் அதிகாரி மிரட்டினார். அதன் விளைவாக தான் தற்கொலைக்குத் தூண்டப்பட்டேன் என்று லக்ஷனி குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து, தீவில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாமிற்கு பாதுகாப்பு அளித்துவரும் பிரிட்டன் அரசு மற்றும் ‘G4S’ தனியார் நிறுவன நிர்வாகங்கள் பதிலளிக்க மறுத்து விட்டன. தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தங்களது அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வருகின்றனர் என்று G4S நிறுவன நி்ர்வாகம் தெரிவித்திருந்தது. பிஐஓடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தாங்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டு, அவை குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்திருந்தார். பிஐஓடி நிர்வாகம் அங்கு முகாமில் உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். தீவு முகாமில் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்துள்ளன என்றும், இதில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டியாகோ கார்சியா தீவில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம் பகுதி செல்ஃபோன்கள் பறிமுதல் முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோரின் செல்ஃபோன்கள் மற்றும் தொலைபேசி வசதிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டாம் என்று தனிநபர்கள் எழுத்துபூர்வமாக விருப்பத்தை தெரிவிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளும் திரும்பப் பெறப்பட்டன என்று முகாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்தது பிஐஓடி நிர்வாகம். ஓர் உண்ணாவிரத போராட்டத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக முகாமில் இருந்து கூர்மையான ஆயுதங்கள் அகற்றப்பட்டன. இதேபோன்று, முகாமில் இருப்பவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்வதை தடுக்கும் விதத்தில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிஐஓடி நிர்வாகம் விளக்கம் அளித்தது. பட மூலாதாரம்,GOOGLE மொரிஷியஸ் இடமிருந்து கைமாறிய தீவு ராணுவ தளமாக திகழும் டியாகோ கார்சியா தீவு, புகலிடம் கோரி வருவோரை தங்க வைக்கும் இடம் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டியாகோ கார்சியா உள்ளிட்ட தீவுகளை உள்ளடக்கிய சாக்கோஸ் தீவை தனது காலனி ஆதிக்கத்தில் இருந்த மொரிஷியஸ் வசமிருந்து 1965 இல் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, டியாகோ கார்சியா தீவில் ராணுவ தளம் அமைப்பதற்காக அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ,1968 இல் மொரிஷியஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின் இந்த தீவுகளை பராமரித்து வரும் மொரிஷியஸ் அரசு, இந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. ஐ.நா. நீதிமன்றமும் இந்த பிராந்தியத்தில் பிரிட்டன் ஆளுகை செலுத்தி வருவது சட்டவிரோதம் என்றும், இந்த நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சாக்கோஸ் தீவுகள் விவகாரத்தில் சர்வதேச அழுத்தத்தை விரும்பாத பிரிட்டன், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு இறுதிவரை கூறி வந்தது. அமெரிக்காவின் ஆளுகை சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த, அமெரிக்க போர் விமானங்கள் டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க ராணுவம் விசாரிக்கும் இடமாகவும் இத்தீவு திகழ்கிறது. டியாகோ கார்சியா தீவு முகாம் முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று லண்டன் நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. தற்போது இந்த முகாம், புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் பகுதியைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமிற்குள் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சிற்றுண்டி சாலை (கேன்டீன்) வசதியும் உள்ளது. கூண்டு கிளிகள் ஆனால், “ நாங்கள் கூண்டில் அடைபட்ட கிளிகளாய், எவ்வித சுதந்திரமும் இன்றி இங்கு வாழ்ந்து வருகிறோம்”என்கிறார் முகாமில் உள்ள சாந்தி. ஓராண்டுக்கு முன்பு வரை முகாமில் இருப்போருக்கு அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எலிகளின் தொல்லை காரணமாக வகுப்புகள் பெரும்பாலும் முகாமிற்கு வெளியே திறந்த வெளியில் தான் நடைபெறும் என்று முகாமில் வசிப்போர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோர்களில் சிலர் தங்களது கோரிக்கையை கைவிட்டு அல்லது நிராகரிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் பலர் தஞ்சம் கோரி, பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனுக்கு சென்றுள்ளனர் என்று தீவு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். தற்போது மீதமுள்ள 60 இலங்கை தமிழர்கள் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுக்காக டியாகோ கார்சியா தீவு முகாமில் இன்னமும் காத்திருக்கின்றனர். சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறதா? அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான சர்வதேச சட்டங்களில் பிரிட்டன் கையெழுத்து இட்டுள்ளது. ஆனாலும், இந்த சட்டங்கள் பிஐஓடி பிராந்தியத்திற்கு பொருந்தாதது. ஏனெனில் இந்த பிராந்தியம் அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது மற்றும் பிரிட்டனில் இருந்து தனியானது என்று பிரிட்டன் அரசு கூறி வருகிறது. பல்வேறு இன்னல்களை அனுபவித்து, மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படும் நாட்டில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில், டியாகோ கார்சியா தீவு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதா என்பதை தீர்மானிக்க தனி செயல் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயல் திட்டம், அகதிகளுக்கான சட்டத்திற்கு சவால் விடுவதாக இருப்பதாக கூறும் வழக்கறிஞர் டிசா கிரிகோரி, இது அடிப்படையில் நியாயமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார். லண்டனில் அவர் பணிபுரியும் லீ டே நிறுவனம், புகலிடம் கோரி, டியாகோ கார்சியா தீவில் தவித்து வருபவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பான மூன்றாவது நாட்டை பிரிட்டன் அரசாங்கம் இன்னும் அடையாளம் காணாததால் முகாமில் இருப்பவர்களின் வாழ்க்கை நகரமாக்கப்பட்டுள்ளது என்று டிசா கிரிகோரி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, பிஐஓடி நிர்வாகம், அதன் சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்பவும் தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு கோரிக்கைகள் பரிசீலித்து வருகிறது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. ஐநா கவலை டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் நிலவும் மோசமான சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UKHCR) பிரிட்டன் அலுவலகம் பிபிசியிடம் கவலை தெரிவித்துள்ளது. “பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கான அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரிட்டன் வழக்கறிஞரும், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான இமைய்லி மெக்டோனல் அண்மையில் வலியுறுத்தி இருந்தார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட 5 புலம்பெயர்ந்தோர். இவர்களில் இருவர் டியாகோ கார்சியா தீவிற்கே மீண்டும் திரும்பினர் பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு டியாகோ கார்சியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள போவதில்லை என்று பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த தீவில் தஞ்சம் புகுந்த தமிழர்களில் மூன்று பேர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சி மற்றும் தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர்கள் டியாகோ கார்சியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது. ருவாண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் பிஐஓடி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. பிபிசியின் பார்வைக்கு கிடைத்துள்ள அந்த கடிதத்தில், “ ருவாண்டாவில் மருத்துவத்துக்கான செலவுடன், அங்கு தனியார் விடுதிகளில் தங்குவதற்கான செலவையும் பிஐஓடி நிர்வாகம் ஏற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த யோசனை உங்களுக்கு திருப்தி அளிக்காதபட்சத்தில், நீங்கள் மீண்டும் டியாகோ கார்சியாவுக்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய சூழலில் உங்களை வேறு நாட்டிற்கு அனுப்ப வழிகள் எதுவும் இல்லை” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தங்களை அனுப்பும்படி கோரியிருந்த இத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள நான்கு பேரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோரிக்கையாளர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பிஐஓடி நிர்வாகம் அனுப்பியிருந்த கடிதம் பிபிசியின் கைக்கு கிடைத்துள்ளது. அதில், “உங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடிக்கும் இழுபறி இந்த விவகாரம் தொடர்பாக பிபிசிக்கு அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், “டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைந்துள்ள புலம்பெயர்ந்தோரின் தற்போதைய நிலைமையை மாற்ற, நீண்ட கால தீர்வு காணும் நோக்கில், பிஐஓடி நிர்வாக்கத்துடன் பிரிட்டன் அரசு அயராது உழைத்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்,டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதற்கான தெளிவான காலக்கெடு வரையறுக்கப்படாமல் உள்ளதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கலும் இவர்களின் நிலையை தொடர்ந்து இழுபறியாகவே வைத்திருக்கக்கூடும். “20 மாதங்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்டோம்” என்று விரக்தியுடன் கூறுகிறார் டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர் ஒருவர். https://www.bbc.com/tamil/articles/cy97ng3k8nwo
  7. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சிம் அட்டையை வழங்க முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்குவதற்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு அவரது மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார். அத்துடன், தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடைய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியுமா என்பது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/258221
  8. வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி! நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரின் தொடர்ச்சியாக ரஷ்யாவின் மூத்த தளபதி ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின் தெற்கு டொனெட்ஸ்க் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலிலேயே கோரியாச்சேவ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயதான இவர், போரில் பலியானதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக வகைப்படுத்திய 11 ஜெனரல்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர், படையெடுப்பின் தொடக்கத்தில் 5 ஆவது இராணுவ படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் போரின் போது அவர் இராணுவத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இன்றைய தாக்குதல் இந்த நிலையில், இன்றையதினம் உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukraine-russia-war-latest-news-1686666567
  9. ரஷ்ய படைகளிடம் இருந்து 7 கிராமங்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷ்யா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவதாக இல்லை. இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் எனவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/258177
  10. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 04:44 PM டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளனஇ டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/157467
  11. ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன. பக்முத்திற்கு கிழக்காகவும் ஜபோரிஜியாவிற்கு தெற்கிலும் உக்ரைன் படையினர் முன்னேறியுள்ளனர் அங்கிருந்து ரஸ்ய படையினரை நோக்கி நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டுள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் தாக்குதல்நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் ஆனால் பெரும் இழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளனர் அது முறியடிக்கப்பட்டுள்ளது என ரஸ்ய ஜனாதிபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/157435
  12. வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை - கல்வி அமைச்சர் Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 09:40 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. வரி செலுத்தவேண்டியவர்களும் அதனை புறக்கணித்து வருகின்றனர். இதனால் நலனோம்பு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார். வரி செலுத்தவேண்டியவர்களின் பதவிநிலை மற்றும் வரி விதிப்புக்கு உள்வாங்கப்படுபவர்களின் பட்டியல் நிதி அமைச்சினால் கடந்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் வரி செலுத்துவது வரி செலுத்தவேண்டியவர்களில் மிகவும் குறைவானவர்களாகும். என்றாலும் தற்போது வரி செலுத்த வேண்டியவர்களின் கோப்புகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்றில்லை. என்றாலும் வரி கோப்புகள் திறப்பதன் மூலம், வரி செலுத்துவதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் வரி செலுத்தவேண்டியவர்களும் வரி செலுத்தாமல் அதனை புறக்கணித்து விடுகின்றனர். அரசர்களது காலத்தில் இருந்து நாட்டில் வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தின் மூலமே நலநோம்பு வேலைத்திட்டங்கள் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் எந்தவொரு நாட்டுக்கும் வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் நாட்டில் பாரியளவில் வரி குறைப்பு செய்தமையாலே அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது என்றார். https://www.virakesari.lk/article/156926
  13. யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி ஜூன் 10 முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது. இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2023/06/03/உள்நாடு/99258/யாழ்ப்பாணம்-காரைக்கால்-கப்பல்-சேவைக்கு-அனுமதி
  14. வரிக் கோப்பு குறித்து விளக்கம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 வரவு செலவு திட்டத்தில் நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என்று ஒரு முன்மொழிவு இருந்தது. இதன் பொருள் அரசாங்கம் இவர்கள் அனைவரிடமிருந்தும் வரிப் பணத்தை வசூலிக்கப் போகிறது என்று அர்த்தமல்ல என அவர் தெரிவித்துள்ளது. அரச வருமானத்திற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காகவே எல்லோரையும் பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். சிலருக்கு பதிவு செய்து அந்த கோப்பில் உள்ள தகவலின் படி அரசாங்கம் கொடுக்கும் உதவிகள் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/256525
  15. Published By: VISHNU 01 JUN, 2023 | 05:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்காய்வு நிர்வாக உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவன உறுப்பினர்கள், இலங்கை அளவீட்டு மற்றும் மதிப்பாய்வு நிறுவன உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், பிரதேச செயலகங்களில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்துள்ளவர்கள் (முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரங்கள் தவிர) தம்மை வருமான திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துள்ள அல்லது உரித்தாக்கிக் கொள்வதற்கான உரிமத்தை பரிமாற்றிக் கொண்டவர்கள் , இலங்கையில் மாதாந்தம் ஒரு இலட்சம் அல்லது வருடத்துக்கு 12 இலட்சம் வருமானம் பெறுபவர்களும் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போன்று இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்துள்ள அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் 18 வயதாகவுள்ள அனைவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/156711
  16. மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை முதன்முதலில் வெளியிட்ட ஈரானின் இரு பெண் பத்திரிகையாளர்கள் சிறையில் - நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம் Published By: RAJEEBAN 31 MAY, 2023 | 01:06 PM கடந்தவருடம் செப்டம்பர்மாதம் மாசா அமினியின் மரணம் குறித்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்திய இருபெண் பத்திரிகையாளர்கள் ஈரானில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானின் பெண்பத்திரிகையாளர்கள் இருவரையுமே அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஹாம் மிகான் செய்தித்தாளின் இலாஹே முகமதி மஹ்சா அமினியின் இறுதிசடங்குகள் குறித்த செய்தியொன்றை வெளியிட்டிருந்தார் .தற்போது சிறையில் உள்ள அவர் திங்கட்கிழமை ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகளின் போது பெண் பத்திரிகையாளர்களின் சார்பில்ஆஜரான சட்டத்தரணிகள் தங்கள்கருத்துக்களை வெளியிடவோ தங்கள்கட்சிக்காரர்களிற்கு ஆதரவாக வாதிடவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்தவழக்கை தகுதிவாய்ந்த குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யவேண்டும் என என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மஹ்சா அமீனியின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டஷார்க் செய்தித்தாளின் நிலௌபர் ஹமேதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார் .அவரும் ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். இருபெண் பத்திரிகையாளர்களும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/156600
  17. The Silent Shift When unique people come together, great things happen. One such example is ‘The Silent Shift’ run by 8 specially-abled staff at the SB Road Pune Station, India. With grit, determination, and encouragement from our customers, these champions have created a movement that truly fills hearts with hope.
  18. தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது. தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார். அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் நேற்று (26) தோண்டி எடுக்கப்பட்டது. உடலம் தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் அவ்விடத்திலேயே வழக்கு ஒன்றும் இடம்பெற்றதுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/255605
  19. பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது ! Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 11:52 AM மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அடக்கம் செய்யப்பட்ட அவரின் பூதவுடலை மீண்டும் தோண்டுவதற்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வியாழக்கிழமை (25 ) கொழும்பு, பொரளை பொது மயானத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/156118
  20. பெரிய பூனைக்குட்டி வளர்க்கிறாரோ?!
  21. வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் கோரிக்கையின் பேரில், ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, தினேஷ் ஷாஃப்டரின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தினேஷ் ஷாஃப்டர் தனது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவே உயிரிழந்துள்ளார். https://thinakkural.lk/article/254740
  22. ஓடர் குடுக்கிற கணவர்களுக்கு பயம் வரும் தானே?! காசையும் குடுத்து ____ இழக்கலாமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.