Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் ஜூலை ஆரம்பம் ! Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 12:29 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 4 சமூகக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள சுமார் 16 000 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வீதம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு 8500 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிகவும் ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 இலட்சம் குடும்பங்களுக்கு 15 000 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதே வேளை மாற்றுத்திறனாளிகள் , கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன. தற்போதும் உதவி பெறுகின்ற 72 000 மாற்றுத்திறனாளிகளுக்கும் , 39 150 சிறுநீரக நோயளர்களுக்கும் தலா 5000 ரூபாவும் , 416 667 முதியோருக்கு 2000 ரூபாவும் ஒரு மாதத்திற்கு வழங்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/153471
  2. ஆசிரியரை ஏமாற்றிய வாசகர்கள்! மிக்க நன்றி சுவி அண்ணா.
  3. நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள், கள உறவுகளின் பிறந்தநாளை உள்நுழைந்ததும்(login) தெரியும்படி செய்யலாமே? கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பிறந்தநாளில் எல்லோரும் வாழ்த்த வாய்ப்பு உள்ளது அல்லவா?
  4. 30/03 இல் பிறந்தநாளைக் கொண்டாடிய யாயினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  5. பிறந்தநாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
  6. இப்ப கோவில்களில் மக்களைக் காணமுடியாது! செவ்வாய், வெள்ளியில் அருகில் உள்ள முருகன், பிள்ளையார் கோவிலடிக்குப் போனால் பூசகரும் மணியடிக்க உதவியாளரும் மட்டுமே இருப்பார்கள். தேர் திருவிழா நேரமும் மக்கள் குறைவு தான். அக்கா தொடருங்கோ...
  7. சிறுவயதில் கண்ட கனவு நினைவு வருகிறது. தனியனாக பிரமாண்டத்தின் முன் நிற்பேன். அந்தக் கனவு இரண்டு/மூன்று முறை வந்தது. ஒவ்வொரு முறையும் பயந்து அம்மாவை அருகே தூங்க அழைப்பேன். பேரண்டத்தின் முன் நாமெல்லாம் தூசி தான். கரு உங்கள் கவிதைக்கு நன்றி.
  8. ஓமண்ணை, மே மாதம் வரை திருத்தவேலைகள் என முதலில் கூறினார்கள். இப்ப அடுத்த வருடம் தான் முடியுமாம். கொழும்பு யாழுக்கு அரச ஊழியர்களைத் தவிர(வரன்ற்/3 இலவச அனுமதி) ஏனையோர் சொகுசு பேரூந்துகளைப் பாவிக்கலாம்.
  9. மே 15ல் இலங்கை - இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..! காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்ட இந்தப் படகு சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும். காரைக்கால் துறைமுகத்தின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது எனவும் நந்தகோபன் குறிப்பிட்டார். 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி பயணிகள் கப்பல் சேவை கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 120 முதல் 150 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும். இந்தப் படகில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும். கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. பயணிகள் தங்குவதற்கு வசதியாக துறை முகம் மேம்படுத்தப்படுகிறது. இவற்றுக்காக இலங்கை அரசு 150 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 14. கூறியுள்ளார். விசேட சொகுசு தொடருந்து சேவை காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை இயக்கப்படும் நிலையில் கப்பல் சேவையை பயன்படுத்துவோர் வசதி கருதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட சொகுசு தொடருந்து சேவை இடம் பெறும். பௌத்த யாத்ரீகர்கள் கூட படகில் இந்தியாவுக்குச் சென்று புத்த கயாவை சென்றடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். காங்கேசன்துறை - காரைக்கால் இடையேயான இந்த படகு சேவையை இயக்குவது குறித்த திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்தது. இப்போதே அது சாத்தியமாகவுள்ளது. முதலில் சிதம்பரம் உள்ளிட்ட இந்துக் கோவில்களை தரிசிக்க யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு இந்து பக்தர்களை அழைத்துச் செல்வதற்கான திட்டங்களை வகுக்கப்பட்டன. எனினும் விசேட சேவைகளை நடத்துவது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். எனவே தான் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே நிரந்தர கப்பல் சேவையை நிறுவ நான் முன்மொழிந்தேன் என நந்தகோபன் தெரிவித்துள்ளார். 8 மணி நேரத்தில் சென்னை இந்தக் கப்பல் சேவைக்காக இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் தங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான விடுதிகள் உள்ளன. யாழ்.நகரில் இருந்து காங்கேசன்துறைக்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கையில் இருந்து கப்பலில் காரைக்கால் செல்வோர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரங்களில் செல்ல முடியும். சென்னைக்கு 8 மணி நேர பயணத்தில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/shipping-service-between-sri-lanka-and-india-1681621230?itm_source=parsely-top
  10. அக்கா கட்டுநாயக்காவில் இருந்து வரும்போது பரந்தனுக்குப் பிறகு தான் ஆனையிறவு வரும். தொடருங்கோ...
  11. புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வாழ நல்ல நட்பு வட்டம்/நம்பிக்கையான உறவுகள் தேவை. அவசரத்திற்கு உதவும் அயலவர்களும் தேவை.
  12. முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ. வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.
  13. இலங்கை - இந்திய பயணிகள் படகுச்சேவை : காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை Published By: NANTHINI 12 APR, 2023 | 02:52 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக காங்சேகன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியூடாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு நிலையான கடல் வலயத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு திறமையாகவும், திறம்படவும் களமிறங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. அதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் கடற்படையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மூலம் இடம்பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல் என்பன கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடற்படையின் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் கடற்படை அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கடற்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/152741

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.