Everything posted by ஏராளன்
-
செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்
பெண்ணின் கருப்பைக்கு மாற்றாக செயற்கை கருப்பை கருவி; விஞ்ஞானிகள் சொல்வது என்ன? | Artificial Womb பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன... அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில், மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சாப்டரின் கொலையாளி பிரையன் தோமசிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி - வெளியானது அதிர்ச்சி தகவல் By RAJEEBAN 19 DEC, 2022 | 11:22 AM வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையாளி என கருதப்படும் நபர் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசிற்கு சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பொரளை கனத்த மயான பகுதியிலிருந்து சாப்டர் கொல்லப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர் என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாப்டரை கொலை செய்தவர் இந்த குறுஞ்செய்தியை சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசிற்கு அனுப்பியுள்ளார் என கருதப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை விசாரணைகளின் போது சம்பவம் நடந்த அன்று சாப்டரின் கார் நேரடியாக அவரின் வீட்டிலிருந்து கனத்தமயானத்திற்கு வந்தமை தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பில் பல ஆச்சரியமளிக்கும் விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளவர்கள் பல ஆச்சரியமளிக்கும் விடயங்களை வெளியிட்டுள்ளனர். எங்களிற்கு கிடைத்துள்ள பல தகவல்களை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/143501
-
செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்
எனக்கென்னமோ எதிர்கால மனிதர்களின் சந்ததி உருவாக்கும் திறன் இல்லாமல் போகப்போகுது போலப்படுகிறது.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் சாஃப்டர் கொலை - கோடிக்கணக்கில் கடன் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருக்கு தடை கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE படக்குறிப்பு, தினேஷ் சாஃப்டர் கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரணை கோணங்கள் இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். படக்குறிப்பு, பொரள்ளை பொது மயானம் தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார். இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?16 டிசம்பர் 2022 ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா?15 டிசம்பர் 2022 இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்6 டிசம்பர் 2022 பிரையின் தோமஸிடம் விசாரணை பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார். பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை; தொழிலதிபருக்கு நடந்தது என்ன?16 டிசம்பர் 2022 'கோ ஹோம் சைனா' போராட்டம் குறித்து இலங்கை தமிழ் அரசியல்வாதி எச்சரிக்கை - பின்னணி என்ன?4 டிசம்பர் 2022 இலங்கை ஜனாதிபதி ரணில் இந்து மத தனித்துவத்தைப் பாதுகாப்பது பற்றி சொன்னது என்ன?30 நவம்பர் 2022 நடந்தது என்ன? கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cz58zk6yl3xo
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
கொல்லப்பட்ட வர்த்தகர் தினேஸ் சாப்டர் கிரிக்கெட் வர்ணைணயாளர் பிரையன் தோமசை சந்திக்க திட்டமிட்டிருந்தார் - விசாரணைகளில் தகவல் By RAJEEBAN 16 DEC, 2022 | 03:37 PM இலங்கையின் பிரபல வர்த்தகரின் கொலை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கதிட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. தினேஸ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையிலாக பணகொடுக்கல் வாங்களிற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பிட்ட குற்றச்செயல் இடம்பெற்ற பகுதிக்கு இன்று காலை சிஐடியினர் சென்றுள்ளனர். தடயங்கள் ஏதாவது கிடைக்கின்றதா என பார்ப்பதற்காக பொரளை பொது மயானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் சிசிடிவியை ஆராயும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் சாப்டரின் வாகனம் பார்ம்வீதி ஊடாக மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது. சாப்டரின் கார் விமானப்படையினரின் நினைவுத்தூபிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிஸார் பார்த்துள்ளனர். சாப்டர் பிளவர்வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணியளவில் கூட்டமொன்றிற்காக சென்றுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திப்பதற்கு செல்வதாக அவர் தனது செயலாளரிடம் தெரிவித்துள்ளார். பிரையன் தோமல் சாப்டரிடமிருந்து 1.4 பில்லியன் கடன்பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/143298
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை; தொழிலதிபருக்கு நடந்தது என்ன? பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பு - பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. கொழும்பு - பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர். உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா?15 டிசம்பர் 2022 இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்6 டிசம்பர் 2022 நடந்தது என்ன? கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து தினேஷ் சாஃப்டர் நேற்று (15) மாலை புறப்பட்டு சென்றுள்ளார். பல கோடி ரூபா கடனை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கடனை பெற்றுக்கொண்ட நபரை சந்திப்பதற்காக தான் செல்வதாக தனது மனைவியிடம் கூறி, தினேஷ் சாஃப்டர் புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர், தினேஷ் சாஃப்டரின் மனைவி, தினேஷ் சாஃப்டருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். எனினும், தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்திருந்ததாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜி.பி.எஸ் அலைவரிசையின் ஊடாக, அவரது தொலைபேசி சமிக்ஞையை தேடியுள்ளார். இதன்போது, தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி, இறுதியாக கொழும்பு - பொரள்ளை மயான வளாகத்தை காண்பித்துள்ளது. மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, கணவருடன் பணியாற்றும் மற்றுமொரு நிறைவேற்று பணிப்பாளர் ஒருவருக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த அதிகாரி, பொரள்ளை மயானத்தை நோக்கி சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பொரள்ளை மயானத்தில் தினேஷ் சாஃப்டரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி காரை நோக்கி சென்று தேடியுள்ளார். தனது காரின் சாரதி ஆசனத்தில் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்து வையர் ஒன்றினால் நெரிக்கப்பட்டிருந்ததை, குறித்த அதிகாரி அவதானித்துள்ளார். இதையடுத்து, மயானத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் குறித்த அதிகாரி அனுமதித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷ் சாஃப்டரின் காருக்கு அருகிலிருந்து, சந்தேகத்திற்கிடமான மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளதை, மயானத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் அவதானித்துள்ளமை போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தன்னிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தினேஷ் சாஃப்டர் பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். விசாரணையின் முன்னேற்றம் இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cp9kw9gxddmo
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள் : தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்! 16 DEC, 2022 | 10:39 AM தினேஷ் சாப்டரின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படும் நபர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொரளை மயானத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்து. முதற்கட்ட விசாரணைகளின்போது சாப்டரின் கார், காசல் வைத்தியசாலை நோக்கி மயானத்துக்குள் செலுத்தப்பட்டது தெரிய வந்ததாக, பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/143255
-
இரசித்த.... புகைப்படங்கள்.
குட்டி யானை காதை வைச்சு பறக்குதோ?!
-
பெயர் மாற்றங்கள்.
உங்கட பஜார்ல குசா அண்ணை தான் யூனியர் போல.
-
பெயர் மாற்றங்கள்.
இத்தால் சகலருமறிய அண்ணைக்கு 60 முடிஞ்சுது, பென்சன் எடுக்க தொடங்கிறார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://twitter.com/ATC_SPACES/status/1589997757682823174?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://twitter.com/ATC_SPACES/status/1590219751590367232?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
சிரிக்கலாம் வாங்க
https://twitter.com/ATC_SPACES/status/1590346955120857090?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மை தான், நன்றி உங்கள் கருத்திற்கு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ்ப் பகுதிகளில் பிழையா அவர்கள் மொழியில் எழுதிவிடவேணும்!
- IMG_0095.JPG
- IMG_0091.JPG
- IMG_0090.JPG
- IMG_0089.JPG
- IMG_0088.JPG
- IMG_0087.JPG
- IMG_0086.JPG
- IMG_0085.JPG
- IMG_0084.JPG
- IMG_0083.JPG