Everything posted by ஏராளன்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ. வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இலங்கை - இந்திய பயணிகள் படகுச்சேவை : காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை Published By: NANTHINI 12 APR, 2023 | 02:52 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக காங்சேகன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியூடாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு நிலையான கடல் வலயத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு திறமையாகவும், திறம்படவும் களமிறங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. அதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் கடற்படையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மூலம் இடம்பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல் என்பன கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடற்படையின் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் கடற்படை அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கடற்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/152741
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
மரத்தில ஏறி விழுந்ததையா சொல்றீங்க?
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அக்கா நீங்கள் நல்லா கதை சொல்கிறீர்கள், காக்க வைக்ககாமல் தொடர்ந்தால் சுவியண்ணையின் தலை வெடிக்காது!
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் அனுபவத் தொடர் அருமை அண்ணா, தொடருங்கள். தவிச்ச முயல் அடிப்பவர்கள் அங்கும் உள்ளார்கள்!
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/248573
-
கொஞ்சம் சிரிக்க ....
Couple Challenge - A Fun Vlog கணவன் மனைவி கேள்வி பதில் போட்டி
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
மடு மாதா தலத்திற்கு எல்லா மதத்தவரும் செல்கிறார்கள் அக்கா. சுவி அண்ணாவின் கதையில் உண்மைச் சம்பவங்களும் கலந்திருக்கலாம். நன்றி சுவி அண்ணா.
-
யாழ் களமே நீ வாழ் நலமே !
கருத்தாளம் மிக்க கவிதை. நன்றியும் வாழ்த்துகளும்.
-
சிரிக்கலாம் வாங்க
நானே பாதிக்கப்பட்டவன் என்பதால் அவனைப் புரிந்துகொண்டேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
வர்ணனைகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சுவி அண்ணை, தொடருங்கள்.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
ஏன் இப்படி நடந்தது? Doller Today, Sri Lanka Tamil News | Rj Chandru Reports
-
கொஞ்சம் சிரிக்க ....
பார்த்தேன் சிரித்தேன்...
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
கதை அருமை சுவி அண்ணை. எனக்கு ஒரு விடயம் பிடிபட்டிருக்கு, அவசரக்குடுக்கையா மூக்கை நுழையாது பொறுமையா இருப்பம், நான் நினைச்சது சரியோ என்று கதை முடிவில் சொல்றன்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையை தீர்மானிக்க முடிகிறது, எல்லோரும் கைவிடும் போது. தொடருங்கள் சுவி அண்ணா.
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
அசிங்கப்பட்டார் ஆல் இன் ஆல் அழகு ராஜா!
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அதுவும் உண்மை தான்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அண்ணை அது நன்மை தானே. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களா எனும் சான்றிதழ் தானே?
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்க சுவி அண்ணா. (இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)
-
கொஞ்சம் ரசிக்க
மனைவி ஊரில் இல்லாதபோது..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
படித்ததில் பகிர ஆசைப்பட்டது...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தீர்ப்பு சரி தானுங்களே?!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பில் தவறான தகவல் கொடுத்தால் வழக்கு நலன்புரி நன்மைகளை பெற தகுதியானவர்களைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதனிடையே, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு சிலர் தவறான தகவல்களை வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகள் கிடைக்காது எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று சட்டத்தை அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/245190