Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
  2. Two boys in Madagascar scratch the back of a habituated lemur (Via National Geographic)
  3. சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது. மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரிபார்க்கும் பொருட்டு, மாவட்டச் செயலகத்தில் உள்ள கள உத்தியோகத்தர்களைக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3.7 மில்லியன் பேர் பயன்பெற விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை 65,000 பேர் மாத்திரமே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு கள உத்தியோகத்தர் ஒருவருக்கு 300 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தாமல் செயற்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பயனாளிகளின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து உரிய தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சில கள அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புவதால், சில விண்ணப்பதாரர்கள் இதற்கான தகவல்களை வழங்க தயங்குவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், தகுதியுடையவர்களாக இருந்தால், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் நிதியமைச்சு மக்களைக் கேட்டுக் கொள்கிறது. மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்பவர்கள் மாத்திரமே சமுர்த்தி உட்பட 52 நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என வலியுறுத்தப்படுகிறது. சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கோ அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கோ சென்று மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது. https://thinakkural.lk/article/242604
  4. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் தீர்மானிக்க ஐவர் கொண்ட விசேட வைத்திய சபை! Published By: VISHNU 27 FEB, 2023 | 03:22 PM ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவர் கொண்ட விசேட வைத்திய சபையொன்றை கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (27) நியமித்தார். தடயவியல் மருத்துவத்தில் நிபுணரான பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஐவர் கொண்ட விசேட வைத்திய சபையில் இரண்டு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை நீதிமன்றில் மீண்டும் கூடிய போதே இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/149267
  5. தேடித் தேடி உள்குத்து, கருத்து கலந்த கார்டூன்களை இணைக்கும் சிறியண்ணைக்கு நன்றி.
  6. மாஞ்சோலை முதல் அத்ரிமலை வரை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழ் 25 பிப்ரவரி 2023 படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவி தமிழ்நாட்டின், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சுவரசியமான விவரங்களை, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தேங்காய் உருளி அருவி நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணைக்கு கீழ் பகுதியில் உள்ளது தேங்காய் உருளி அருவி. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் மரக்கூட்டங்களுக்கு நடுவே, காண்போர் கண்களை மட்டுமின்றி, உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கும். அருவி அருகே ஒரு பாறையில் ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் சிற்பங்களும் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அருவி வன எல்லைக்கு வெளியே இருப்பதாலும் வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பரளிக்காடு படகு சவாரி, கேத்தரின் நீர்வீழ்ச்சி - கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்18 பிப்ரவரி 2023 சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் பார்க்கத் தகுந்தவை எவை?25 ஜனவரி 2023 சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய அதிசய உயிர்ப் பாலம்1 மார்ச் 2020 இந்த அருவிக்கு செல்ல களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து தலையணை செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். தலையணைக்கு கீழே வலது புறம் திரும்பும் சாலையில் திரும்பி சென்றால் சிவபுரம் வழியாக தேங்காய் உருளி அருவி க்கு செல்லலாம். சிவபுரம் வரை மட்டுமே கார்கள், டூவீலர்கள் செல்ல முடியும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மட்டுமே செல்ல முடியும்.சுற்றிலும் இதுதவிர பச்சையாறு அணையில் இருந்தும் இந்த அருவிக்கு பாதை உள்ளது. படக்குறிப்பு, தேங்காய் உருளி அருவி பச்சையாறு அணையில் இருந்து ஊட்டு கால்வாய் கரையின் வழியாக சென்றால் தேங்காய் உருளி அருவியை அடையலாம். இரு பாதைகள் வழியாகவும் கார், வேன், டூவீலர்களில் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அங்கிருந்து சிறு தூரம் சென்றால் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு பல அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இங்கு விழும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி தலையணை வழியாக ஓடி வருவதால் அதில் குளித்தால் நோய்கள் அணுகுவதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு வரும் பொது மக்கள் அருவியில் குளித்து மகிழ்வதுடன், குடும்பத்துடன் உணவருந்தி விடுமுறை நாட்களை கழித்து விட்டு செல்கின்றனர். குத்திரபாஞ்சான் அருவி படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவி நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ளது, குத்திரபாஞ்சான் அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவி செங்குத்தாக பாய்வது தனி சிறப்பாகும். இந்த அருவிக்குச் செல்ல சரியான பாதை வசதி இல்லாமல் கரடு முரடான மலைப் பாதை மட்டுமே உள்ளது. எனவே வாகனங்களில் வருபவர்கள் அருவிக்கு முன் உள்ள கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருவியை நோக்கி நடந்தால் ஒரு ஆற்றை கடக்க செல்ல வேண்டும் பருவமழையின்போது மட்டுமே இங்கு பெருமளவில் தண்ணீர் வரத்து இருக்கும். அருவியிலிருந்து வரும் தண்ணீர், கன்னிமார்கள் தோப்பு என்னும் தடுப்பணையில் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மதுரை, சென்னை, திருச்சி, கேரளாவில் இருந்து மக்கள் குடும்பத்துடன் அதிக அளவு வந்து குளித்து மகிழ்கின்றனர் கார் நிறுத்தும் இடத்தில் வனத்துறையினர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அங்கு சிறுவர் சிறுமியர்களுக்கு திண்பண்டங்கள் மட்டும் கிடைக்கும். அந்த இடம் முழுவதும் ஆலமரங்கள் உள்ளதால் அந்த நிழலில் அமர்ந்து குடும்பத்துடன் உணவருந்த வசதியாக இருக்கிறது. மேலும் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அருவி ஊரை விட்டு சற்று தொலைவில் மலை அடிவாரத்தில் உள்ளதால் குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் மக்கள் செல்லும் வழியில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அத்ரி மலை படக்குறிப்பு, அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை. தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து அல்லது ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். மலைக்கு சென்று விட்டு பக்தர்கள் திரும்பி வருவதற்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டால் ; மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன் செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ள வேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக் பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் வனத்துறையினர் சோதனை சாவடி உள்ளது. வனத்துறையினர் வருகை பதிவேடு ஒன்று வைத்திருப்பார்கள் அதில் பெயர் முகவரி செல்போன் எண் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும். கடனா நதி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்தால அது வழியாக குறுக்கு பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் மலைக்கு நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண் பாதையாக உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும் படியாக உள்ளது. மலை ஏற இரண்டு மணி நேரம் இறங்க இரண்டு மணிநேரம் ஆகிறது. அதன் அருகில் பெரிய பாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மலை ஏறி சென்றதுடன், அருள்மிகு அனுசுயா தேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர். கோரக்கர் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் குகை ஒன்று உள்ளது. இது பார்பதற்கே ரம்மியமாய் இருக்கும். அங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தன மழை பொழியும் என்றும் நம்பப்படுகிறது. அத்ரி மலைக்கு சென்று வருவது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் பலர் சுற்றுலாவாக சென்று அங்கு தங்கி அருவிகளில் குளிப்பது, கடனாநதி அணையின் அழகை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். அரியநாயகிபுரம் அணைக்கட்டு படக்குறிப்பு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அரசன் குளத்துக்கு அடுத்துள்ளது வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி இந்த அணைக்கட்டு வழியாக கடந்து செல்கிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகளவு சுற்றுலா வந்து செல்கின்றனர். அரியநாயகிபுரம் அணைக்கட்டு க்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல்வெளிகள் உள்ளது. அரியநாயகிபுரம் அணைக்கட்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அரியநாயகிபுரம் அணைக்கட்டு 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு தளவாய் அரியநாதர் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு கட்டியதன் முக்கிய நோக்கம் இங்கு வரக்கூடிய தண்ணீரை கால்வாய்களுக்கு திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டது. அணைக்கட்டில் உள்ள மறுகால் வழியாக நடந்து சென்று அக்கரைக்கு செல்ல வேண்டும். செல்லும் போது மரு காலில் விழும் தண்ணீரில் செயற்கை அருவி போன்று அமர்ந்து குளிக்க வசதியாக இருக்கும் அதேபோல் அணைக்கட்டின் மறுபுறம் நீச்சல் குளம் போல் மணல் நிறைந்து விழுந்து குளிப்பதற்கு ஏதுவாக இருப்பதால் விடுமுறை நாட்களில்; பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இங்கு குளித்து மகிழ்கின்றனர். அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் அங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். அகஸ்தியர் அருவி படக்குறிப்பு, அகஸ்தியர் அருவி நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வரும். அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது. இரு புறமும் பசுமையான காட்சிகள் ரசித்த படி செல்லும் போது, இடது பக்கத்தில் அகஸ்தியர் அருவி செல்லும் வழி என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பாதையில் சென்றால், நீர் மின் தொகுப்பு, அதன் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து இறங்கி அருவிக்கு செல்லும் வழியில் ஏராளமான குரங்குகள் கூட்டங்களையும் காண முடியும். அங்கிருந்து கடந்து சென்றால்; அகஸ்தியர் அருவிக்கு சென்று விடலாம். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணம் கலந்தும் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அகஸ்தியர் அருவியில் பெண் சுற்றுலாப் பயணிகள், ஆண் சுற்றுலாப் பயணிகள் தனித் தனியாக நின்று குளிக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள். மாஞ்சோலை - குதிரைவெட்டி படக்குறிப்பு, மாஞ்சோலை - குதிரைவெட்டி திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் 3 மணி நேர பயணித்து 3500 அடி உயரத்தில் நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க மாஞ்சோலைக்கு செல்லலாம். அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன. மாஞ்சோலை சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி வசதிகள் எதுவும் இல்லை. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். வழக்கமாகச் சென்று வரும் பேருந்துகளில் சென்று வருவதற்கு அனுமதி தேவையில்லை. சொந்தக் காரில், வாடகைக் காரில் செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்படுகின்றன. நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கல்லிடைக் குறிச்சி வழியாக மாஞ்சோலை போகலாம். சாலை மார்க்கமாக செல்வோர் கல்லிடைக்குறிச்சி அடைந்து அங்கிருந்து செல்லலாம். இங்கிருந்து சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்ட வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மாஞ்சோலை க்கும் மேல் ஊத்து வழியாக குதிரைவெட்டி க்கு செல்லலாம் குதிரைவெட்டியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த ஊரின் வாயிலிலே இடதுபுரம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விடுதியில் தங்க வரும்புவர்கள் முன்னதாக http://kmtr.co.in/home/bookroom என்ற இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் தங்குமிடத்தில் மூன்று வேளை உணவு வழங்கப்படும். இந்த விடுதி அருகில் காட்சி கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் வயர்லெஸ் கோபுரமும் உள்ளது. இந்த காட்சி கோபுரம் மூலம் இங்கிருந்து கயத்தாறு வரை பார்க்கலாம். மேலும் கரையார், மணிமுத்தாறு ஆகிய அணைகள் தெரியும். படக்குறிப்பு, மாஞ்சோலை - குதிரைவெட்டி https://www.bbc.com/tamil/articles/cw0188yjdkyo
  7. கணனி எனில் இந்த தளத்தில் முயன்று பாருங்கள். https://www.branah.com/tamil
  8. காலமாற்றமா? திட்டமிட்ட மாற்றமா? யாமறியோம் பராபரமே. இருப்பைத் தொலைத்த மனிதர்களானோம்.
  9. மடகாஸ்கர் பயண அனுபவமும் படங்களும் நேரில் பார்க்கக் கிடையாத என்போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தொடருங்கள்.
  10. வாழ்த்துகள் மருத்துவர் அம்மா. படங்களும் அதன் நினைவுகளையும் தொடருங்கோ.
  11. மருத்துவமனையில் நேற்று பார்த்தது, யாருக்காவது பயன்படும் என படம் எடுத்து வந்தேன். திரிக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என கோபிக்க வேணாம்.
  12. அப்பாடா நானும் பயந்துபோய் இருந்தனான்! ஏழரை அலுப்புக் குடுக்குமோ என்று, சுபமாய் கதை முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும் சீட்டுத் தொடர்வது தான் ஏழரையோ? என்னத்தை பெருப்பிக்கப் போறியள் என்று சொன்னால் ....
  13. தைக்கட்டும் தைக்கட்டும், நன்றாக தைச்சுக் கிழிக்கட்டும்.
  14. ஓஹோ! அண்ணையிடம் முழுத் தகவலும் விரல் நுனியில் இருக்கே. அப்பிடியெண்டா வாழ்த்தைச் சொல்லி விடுவம்.
  15. பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணை, வாழ்க வளத்துடன்.
  16. நீங்கள் என்ன மாதிரி இடங்கள் போக விருப்பம் என்று சொல்லுங்கோ, நம்மட @புரட்சிகரத் தமிழ்த்தேசியன் விபரம் தருவார். அண்ணை திருமணங் கடந்த உறவில்லைத் தானே?!
  17. அடக்கடவுளே சின்னப் பொடியளை கலாய்க்க வேணாம் அண்ணை.
  18. வர்ணனைகள் தேர்ந்த எழுத்தாளர் போன்று இருக்கு! தொடருங்கள் சுவி அண்ணை.
  19. அவரைப் பற்றி என்ன வரலாறு தெரியுமோ?!
  20. கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்: பசுமை நிறைந்த அதிகம் அறியப்படாத பகுதிகள் மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களுள் கோவை குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவை குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாகவும் உள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம். சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவை குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேத்தரின் நீர்வீழ்ச்சி கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களைவிடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன. அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலை தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும். நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறை குளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம். இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்', டைனோசர் முட்டைகளின் வழிபாடு மற்றும் கடத்தல் – கள நிலவரம் குருசடை தீவு, கண்ணாடி படகு சவாரி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலா தலங்கள் சென்னையைச் சுற்றி இப்படியும் கூட சுற்றுலா தலங்கள் உள்ளனவா- - BBC News தமிழ் கொடிவேரி அணைக்கட்டு கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. 90களில் முக்கியமான படப்பிடிப்பு தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஆனைக்கட்டி கோவையைச் சுற்றி பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும். பரளிக்காடு சூழல் சுற்றுலா கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம். இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்த சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது. மலம்புழா அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையிலிருந்து எளிதாக செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை. மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. படகு பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. வால்பாறை கோவையிலிருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும். கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம். வால்பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்தி காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயிண்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். ஆழியாறு அணை, குரங்கு நீர் வீழ்ச்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும். அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. இங்கு பூங்கா, மீன் காட்சியகம், பார்க் தமிழ்நாடு மீன்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு நீர் வீழ்ச்சிக்குச் செல்வார்கள். வெள்ளியங்கிரி ட்ரெக்கிங் கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தூரம் மலை பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம். பக்தர்கள் மட்டுமில்லாமல் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது. பாலமலை கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம். நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கை காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம். உடுமலைப்பேட்டை கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளன. திருமூர்த்தி அணைக்கு மேல் பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடைபயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமராவதி அணை அமைந்ந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-64682857 தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்வோர் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.