Everything posted by ஏராளன்
-
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
Published By: Vishnu 08 Sep, 2025 | 07:54 PM இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், சர்வதேச தலையீடுகளை நிராகரிப்பதாகவும் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும், வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார். 60 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள் * 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். * வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை. * பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். * பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன. பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் * அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன. * விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. * வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது. * மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் * பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. * இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. * காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. * காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. * பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. * பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும். * மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன. * சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயல்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள் * கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை' என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது. * ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித்த ஹேரத் தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224569
-
யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் , கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும். பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் , 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் , 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும். இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர். இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக , உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர் எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmfat3qgx009qqplpo0zf89ka
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; சம்பத் மனம்பேரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி! 08 Sep, 2025 | 11:01 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கடந்த சனிக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224503
-
'வாரத்திற்கு 2 அல்லது 3 பேர் மரணம்' - இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? தலித் மக்கள் அச்சம்
படக்குறிப்பு, "கிராமத்தின் நிலைமை அச்சமாக இருப்பதாக" கூறுகிறார் சீதம்மா கட்டுரை தகவல் கரிகிபட்டி உமாகாந்த் பிபிசிக்காக 8 செப்டெம்பர் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர். குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, அரசு மருத்துவ முகாம் அமைத்துள்ளது, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து வருகிறது இதுதொடர்பான தங்கள் கவலைகளை பிபிசியிடம் எஸ்சி காலனி பகுதியை சேர்ந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களுள் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அடங்குவர். இதுதொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அரசு கருத்து தெரிவித்தது. கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர். பட மூலாதாரம், x.com/ncbn படக்குறிப்பு, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 'ஒரு வாரத்தில் கண்டறியப்படும்' - முதலமைச்சர் சந்திரபாபு துரகபளம் கிராமத்தில் நிலவும் தற்போதைய சூழலை சுகாதார அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சர் சத்யகுமார் மற்றும் அதிகாரிகளுடன் அமராவதியில் அவசர கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் 42 விதமான மருத்துவப் பரிசோதனைகளை நடத்த சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்ன என்பதை ஒரு வாரத்தில் கண்டறிய அறிகுறிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த கிராமத்தில் யாரும் சமைக்க வேண்டாம் என்றும் எவ்வித உணவை உட்கொள்வதோ அல்லது நீரை பருகுவதோ கூடாது என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். படக்குறிப்பு, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது தன் தாயின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது என்று கூறப்பட்டதாக துரகபளம் கிராமத்தை சேர்ந்த விஜயராமராஜு கூறுகிறார் 'திடீரென இறந்தனர்' - கிராம மக்கள் "இரு மாதங்களுக்கு முன்பு என் அம்மாவுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது, அவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன், அவர் லேசான காய்ச்சல் தான் எனக்கூறி சில மருந்துகளை வழங்கினார். அதன்பின்னும் சரியாகாததால், அவரை குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். என் அம்மாவுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது, சிறுநீரகங்கள் செயலிழந்தன. உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு 50,000 ரூபாய் செலவாகும். பணம் அதிகம் தேவைப்பட்டதால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவையனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துவிட்டன," என துரகபளம் எஸ்சி காலனியை சேர்ந்த விஜயராமராஜு பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு, கடந்த 5 மாதங்களில் துரகபளம் கிராமத்தை சேர்ந்த 29 பேர் உயிரிழந்ததாக, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி தெரிவித்தார் "என் கணவரை அனுமதித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றோம், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் உயிரிழந்தார். அதன்பின், எங்கள் கிராமத்தில் பலரும் இறந்தனர். எனக்கும் உடல்நிலை சரியில்லை. கிராமத்தின் நிலையை கண்டு எனக்கு அச்சமாக இருக்கிறது," என, துரகபளத்தை சேர்ந்த தலித் பெண் குமாரி தன் கவலைகளை பிபிசியிடம் தெரிவித்தார். "கிராமத்தில் வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று பேர் இறக்கின்றனர், என்னுடைய தம்பியும் இறந்துவிட்டார். ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. இது மிகவும் அச்சமாக இருக்கிறது," என எஸ்சி காலனியை சேர்ந்த சீதம்மா பிபிசியிடம் தெரிவித்தார். குழந்தைகளுக்கு காய்ச்சல் எஸ்சி காலனியில் உள்ள பலரும் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் மற்ற பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரகபளம் எஸ்சி காலனியில் 230 வீடுகள் உள்ளன, தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இங்கு வசிக்கின்றனர். "கடந்த இரண்டு மாதங்களாக, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறோம்," என அக்கிராமத்தை சேர்ந்த அனுஷா கூறுகிறார். "இங்கு நிலவும் சூழலால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது." என அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி துரகபளம் கிராமத்தில் இத்தகைய திடீர் இறப்புகளை தொடர்ந்து, கிராம தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவ முகாம் நடத்தியது. சுகாதார அமைச்சர் சத்யகுமார், துறை ஆணையர் வீரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், கிராம மக்கள் பலரும் ஏன் திடீரென மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அறிய ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். குண்டூர் மாவட்ட மற்றும் சுகாதார துறை அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், துரகபளம் கிராமத்துக்கென தனியே செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுகாதார ரீதியிலான தகவல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறினார். படக்குறிப்பு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் தண்ணீர் மாசுபாடு காரணமா? முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் உட்பட கிராமத்தினர் பலரும், சில ஆண்டுகளாக அக்கிராமத்தில், குறிப்பாக தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அருகிலுள்ள குவாரியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்திருப்பதாகவும் அதனாலேயே தற்போதைய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். "திறந்த குவாரியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பது பெரும் தவறு. அந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தியதாலேயே இச்சூழல் ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்," என ஸ்ரீநிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பிபிசியிடம் பேசிய மண்டல மேம்பாட்டு அதிகாரி (MPDO) ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "அந்த தண்ணீர் இப்போது பயன்படுத்தப்படுவது இல்லை" என்றார். குவாரியில் உள்ள குளத்திலிருந்து அக்கிராமத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவது சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தற்போது கிராம மக்கள் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு 'மதுவும் காரணமாக இருக்கலாம்': எம்எல்ஏ பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு பிபிசியிடம் கூறுகையில், ஆரம்பத்தில் இந்த இறப்புகள் ஆல்கஹாலால் ஏற்பட்டதாக நம்பப்பட்டதாகவும் எனினும் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார். "கிராமத்தில் உள்ள சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள், அதிகமாக குடிப்பார்கள். தற்போது நிறுத்தப்பட்டு விட்டாலும், மலிவான மதுபானங்கள் முன்பு இங்கு கிடைத்தன. முன்பு அதை குடித்ததன் விளைவுகள் இப்போது தெரியலாம்." என அவர் கூறினார். "இந்த கிராமத்தில் 5,600 பேர் இருந்தால், எல்லோருமா பாதிக்கப்பட்டுள்ளனர்? சிலர் மட்டுமே பாதித்திருப்பதால், அது மதுவினால் கூட இருக்கலாம். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே காரணம் தெரியவரும்," என அவர் தெரிவித்தார்., படக்குறிப்பு, சுகாதார ஆணையர் வீர பாண்டியன் 'அறிக்கை வருவதற்கு முன்பு கூற முடியாது' - சுகாதார ஆணையர் சுகாதார ஆணையர் வீர பாண்டியன் ஊடகங்களிடம் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தண்ணீர் மாசுபாடு அல்லது ஆல்கஹால் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதையும் விசாரித்துவருவதாகவும் கூறினார். "பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு வரை எதையும் தெளிவாக கூற முடியாது. இறந்த 29 பேரில் 8 பேர் பெண்கள். தண்ணீரை பரிசோதித்ததில் அதில் எந்த மாசுபாடும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே இறுதி அறிக்கை வருவதற்கு முன்னால் நம்மால் முடிவுக்கு வர முடியாது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Kalyan படக்குறிப்பு, புர்கோல்டெரியா சூடோமல்லெய் எனும் மோசமான பாக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாம் என, மருத்துவர் கல்யாண் நம்புகிறார் மருத்துவர்கள் கூறுவது என்ன? குண்டூரில் உள்ள தோல் மருத்துவர் கல்யாண், துரகபளத்தை சேர்ந்த இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia pseudomallei) எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்றாக கருதப்படும் மெலியோய்டோசிஸ் அவர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார். ரத்தத்தில் பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்ததில் இது தெரியவந்ததாக கூறினார். கல்யாண் கூறுகையில், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கே இது அதிகமாக ஏற்படும் என அவர் தெரிவித்தார். காய்ச்சல், இருமல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்து, அது காசநோய் இல்லை என்பது தெரியவந்தால், அவர்களுக்கு இந்த தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். தன்னிடம் வந்த இரு நோயாளிகளில் ஒருவருக்கு தொற்று மோசமானதால் இறந்ததாக அவர் கூறினார். எனினும், குண்டூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், 29 பேரின் ரத்தப் பரிசோதனையில் மெலியோய்டோசிஸ் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார். 'ஆராய குழு': அமைச்சர் சத்யகுமார் துரகபளத்தில் ஏற்படும் இந்த திடீர் இறப்புகளை அடையாளம் காண்பதிலும் அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுவதிலும் தாமதம் இருந்தது உண்மைதான் என அமைச்சர் சத்யகுமார் ஒப்புக்கொள்கிறார். கிராமத்துக்கு சென்றபோது ஊடகங்களிடம் பேசிய அவர், இத்தகைய தகவல் குறைபாட்டுக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvmv2ele4o
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்
-
செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் - சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி
Published By: Vishnu 08 Sep, 2025 | 03:05 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தர்ர. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224486
-
சென்னை உள்பட உலகம் முழுவதும் சந்திர கிரகணம் எப்படி தெரிந்தது?
பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர். பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும். இந்திய நேரப்படி இரவு 9:57 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழ தொடங்கியது. இரவு 11:01 மணிக்கு பூமியின் நிழல் நிலவு முழுவதையும் மறைத்த்து, முழு சந்திர கிரகணம் தோன்றியது. அப்போது நிலவு செந்நிறமாக தோன்ற ஆரம்பித்தது. இந்தக் காட்சி இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, டென்மார்க், எகிப்து, என உலகின் பல்வேறு நாடுகளில் தெரிந்தது. எனினும் லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை காரணமாக சந்திர கிரகணத்தை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பட மூலாதாரம், PTI படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று இரவு தெரிந்த சந்திர கிரகணம். பட மூலாதாரம், MADS CLAUS RASMUSSEN/Ritzau Scanpix/AFP via Getty Images படக்குறிப்பு, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் முழு சந்திர கிரகணத்தை மக்கள் கூடி கண்டு ரசித்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மக்கள் பார்வைக்கு தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் போட்டன்ஸ் பகுதியில் ஒரு தேவாலய கோபுரத்துக்கு மேலே தெரியும் சந்திர கிரகணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னி நகரின் வானில் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சி. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தென் ஆப்பிரிகாவில் ஜோஹனஸ்பர்க் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடர் செந்நிறத்தில் தெரிந்த நிலவு. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று மாலை வானில் தெரிந்த சந்திர கிரகணம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ceq2xpd272go
-
பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரின் கைதால் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கம் - வசந்த சமரசிங்க
Published By: Vishnu 08 Sep, 2025 | 02:51 AM (இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் நண்பர்களான ஊழல்வாதிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள். ஊழல் மோசடியினால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல்பழிவாங்கள் என்று எவ்வாறு குறிப்பிடுவது. பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.இதனையும் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது. போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள்.கடந்த அரசாங்கங்களின் அரச அனுசரணையில் பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களினால் வெளிப்படுத்தப்படும் விடயங்களால் ஜனாதிபதி கனவு காண்பவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.இவர்கள் தான் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தார்கள்.அதன் விளைவையே நாடு இன்று எதிர்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/224484
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா vs யுக்ரேன்: அதிநவீன ஆயுதங்களை தேடும் போர்க்களத்தில் எதிரியை ஏமாற்றும் 'பழைய தந்திரம்' பட மூலாதாரம், Na Chasi படக்குறிப்பு, ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி செய்தியாளர் 7 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது. ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை. இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர் ஒருவர் சிரித்தபடி காண்பித்து " எனது மர டாங்கியை உடைத்துவிட்டனர்" எனக் கூறுகிறார். அங்கிருந்த டாங்கி ரஷ்யாவை குழப்புவதற்காக யுக்ரேன் படைகள் ஏற்பாடு செய்த பலகையால் ஆன ஏமாற்றுவேலை ஆகும். எதிரிகளை ஏமாற்றி வெடிபொருட்கள், அவர்களின் நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்காக யுக்ரேன் மற்றும் ரஷ்யா என இருநாடுகளும் ஆயிரக்கணக்கான போலி ராணுவ மாதிரிகளை வடிவமத்துள்ளதைப் போலவே இதுவும் ஒரு உத்தியாகும். சிறிய ரேடார்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் வீரர்கள் என கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்தும் போலியாக இருக்கலாம். இந்த போலி மாதிரிகள் பெரும்பாலும் தட்டையான பொதிகளாகவோ, ஊதக்கூடிய பலூன் போன்றவையாகவோ, 2D அல்லது ரேடியோ அலைகளை பிரதிபலிப்பதன் மூலம் ஒரு டாங்கியின் ரேடார் மாயை என உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை யுக்ரேனில் ஒரு ஆயுதத்தை செலுத்தினால் அதில் பாதிக்கப்படுவதில் பாதி இந்த போலி மாதிரிகளாகவே இருக்கும். பலூன் பீரங்கிகள் பட மூலாதாரம், Back and alive படக்குறிப்பு, M777 ஹோவிட்சர் பீரங்கி மிகவும் பிரபலமானதாகும். யுக்ரேன் ராணுவம் பயன்படுத்துவதும் போலிகளிலேயே பிரிட்டிஷ் தயாரித்த M777 ஹோவிட்சர் பீரங்கிதான் மிகவும் பிரபலமானதாகும். மேற்கத்திய நட்பு நாடுகள், 150-க்கும் மேற்பட்ட எளிதில் கையாளக்கூடிய பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது. இது யுக்ரேனிய வீரர்களால் 'மூன்று கோடாரிகள்' என அழைக்கப்படுகிறது. யுக்ரேனிய ராணுவம் பயன்படுத்தும் பல ஆயுதங்களைப்போலவே, இந்த போலி மாதிரிகளையும் தன்னார்வலர்கள் தயாரித்துக் கொடுத்து உதவிவருகிறார்கள். நா சாஸி (Na Chasi) என்ற தன்னார்வ அமைப்பு மட்டும் யுக்ரேனிய ராணுவத்திற்கு சுமார் 160 மாடல் M777-களை வழங்கியுள்ளதாக ரஸ்லன் க்ளிமென்கோ கூறுகிறார். இவற்றை ஒன்றுசேர்க்க பெரிய கருவிகள் எதுவும் தேவைப்படாது. 2 பேர் சேர்ந்து மூன்றே நிமிடங்களில் இதை தயார் செய்துவிட முடியும் என்பதே இவர்களை மிகவும் பிரபலமாக காட்டுவதாக க்ளிமென்கோ தெரிவித்துள்ளார். "எத்தனை பொருட்களை வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை. அவையனைத்தும் நல்ல காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார். ரியாக்டிவ்னா போஷ்டா என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பாவ்லோ நரோஷ்னி, பொதுவாக ஒரே சமயத்தில் 10 முதல் 15 M777 பீரங்கிகளை தயாரிப்போம் என தெரிவித்தார். ரியாக்டிவ்னா போஷ்டாவின் மாதிரிகள் பொதுவாக பலகையில் செய்யப்படுகின்றன. இவை 500 முதல் 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 முதல் ரூ.52,000 வரை) மதிப்பு கொண்டவை. ரஷ்யா அடிக்கடி 35,000 டாலர் மதிப்புள்ள லான்செட் காமிகாஸ் (Lancet kamikaze) ட்ரோன்கள் மூலம்தான் குறிவைக்கும். "இப்போது நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்" என நரோஷ்னி கூறுகிறார். ட்லோயா என அழைக்கப்படும் அவரின் ஒரு M777 போலி பீரங்கி ஓராண்டுக்கும் மேலாக தரைப்படையில் உழைத்துள்ளது. இது 14 லான்செட் ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் யுக்ரேன் படைகள் இதை டேப் போட்டு ஒட்டியோ அல்லது ஸ்க்ரூக்களை மாற்றியே மீண்டும் செயல்படுத்துவார்கள் என அவர் கூறினார். சக்கரங்களின் தடம் மற்றும் போலி கழிவறைகள் பட மூலாதாரம், Apate படக்குறிப்பு, ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. இந்த போலி மாதிரிகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் முக்கியம். எதிரிகளை ஏமாற்றி அவர்களை தாக்குதலை தொடரத் தூண்டுவதற்கு உண்மையான ராணுவ நிலைகளைப் போலவே இருக்கவேண்டும். அதனால் வாகனங்களின் சக்கரங்களின் தடம், கழிவறைகள் போன்றவை அச்சுஅசலாக இருக்கவேண்டும். இதனால் எதிரிகள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள். இதுபோன்ற மாதிரிகளால் அதிகாரி ஒருவர் ஏமாந்ததற்கான உதாரணமும் எங்களிடம் உள்ளது. அவர் "பீரங்கிகளை வரிசைப்படுத்த யார் உத்தரவிட்டது? M777 பீரங்கிகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?" எனக் கேட்டதாக யுக்ரேனின் 33வது பிரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். இவர் இன்னொரு உத்தியையும் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால் உண்மையான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு உண்மையான பீரங்கிகளை உடனடியாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலியானதை மாற்றிவிடுவார்களாம். "இவர்கள் எதிரிகளை ஏமாற்றி, அவர்களின் விலையுயர்ந்த உபகரணங்களை ஒன்றுமே இல்லாத போலிகளிடம் வீணடையச் செய்வதில் வல்லவர்கள். இதுபோல நமக்கு நிறைய தேவை" என்கிறார். ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை மலிவான மாதிரிகள் என யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது. "இது இப்போது 50-50 என உள்ளது. 50% உண்மையான ட்ரோன்களும், 50% மாதிரிகளுமாக உள்ளன. "எங்கள் வான் பாதுகாப்புகளை முறியடித்து, விலையுயர்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி மலிவான ட்ரோனை சுட்டு வீழ்த்த நம்மை ஏமாற்றுவதே அவர்களின் குறிக்கோள்" என யுக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகிறார். சில நேரங்களில், இது பள்ளி மாணவர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதைப்போல தோன்றும் ஒரு பலகை மாதிரியாகவும் இருக்கும். பட மூலாதாரம், People's Front Novosibirsk படக்குறிப்பு, போரில் போலி மாதிரிகளை வைப்பது ஒன்றும் புதிது கிடையாது. இது வானில் இருக்கும்போது, யுக்ரேனிய ரேடார் மூலம் பார்க்கையில் உண்மையான ராணுவ ட்ரோன்களைப் போலவே இருக்கும் என கர்னர் இன்ஹாட் கூறுகிறார். ரஸ்பல் என்ற ரஷ்ய நிறுவனம் வான்வழி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை ஏமாற்றும் வகையில் 2D மாதிரிகளை தயாரிக்கிறது. இது எஞ்சின் வெப்பம், ரேடியோ சிக்னல்கள், வாக்கி-டாக்கி, பிரதிபலிப்பான் என எதிரிகளை ஏமாற்ற அனைத்தையும் போலியாக வடிவமைக்கிறது. உண்மையில் ராணுவ வீரர்களும் போலியாக வடிவமைக்கப்படுகின்றனர். நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற மக்களைக் கொண்ட தன்னார்வலர்கள், ராணுவ சீருடை அணிந்திருக்கும் போலி வீரர்களை உருவாக்குகிறார்கள். யுக்ரேனின் வெப்ப கேமராக்களை ஏமாற்ற, மனித உடலின் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜாக்கெட்டுகளுக்கு அடியில் டம்மிகளின் உடல்களைச் சுற்றி வெப்பமூட்டும் கம்பிகளைச் சுற்றி வைக்கின்றனர். ஆனால், போரில் இந்த போலி மாதிரிகளை வைக்கும் யோசனை ஒன்றும் புதிது கிடையாது. டி-டே (D-Day) சமயத்தில்கூட எதிரிகளை திசைதிருப்புவதற்காக இங்கிலாந்து, ராணுவ படைகள், டாங்கிகள், விமானங்கள் என அனைத்தையும் முழுக்க முழுக்க போலியாக வடிவமைத்திருந்தது. களத்தின் உண்மையான நிலவரத்தை மறைப்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. மேலும் எதிரிகளை ஆச்சர்யப்படுத்த நட்பு நாடுகளை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் தானியங்கி கருவிகளும் பெரிய கண்டுபிடிப்புகளாக உள்ளன. ஆனால், என்னதான் புதுப்புது ஆயுதங்களை பயன்படுத்தினாலும், இதுதான் தந்திரமாக உள்ளது. மிகச்சிறிய பொம்மை போன்ற ஒன்று கூட போரில் மிகப்பெரிய பங்காற்ற முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly02422gpqo
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்! 08 Sep, 2025 | 09:45 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/224496
-
மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு
Published By: Vishnu 07 Sep, 2025 | 09:52 PM ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224481
-
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல் நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf9w523x009eqplp48cd1nqe
-
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
திருகோணமலையில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு Published By: Vishnu 07 Sep, 2025 | 06:55 PM திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் சனிக்கிழமை (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். அங்கு நடைபெற்ற தேர் பவனியின் போது வானவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசை அருகில் இருந்த ஒருவர் காலால் உதைத்துள்ளார். அது மற்றொருவரைத் தாக்கி வெடித்ததில், அவர் தீவிரமாக காயமடைந்தார். காயமடைந்தவர் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கந்தளாய் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/224475
-
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
பரிசில்கள் தருவதாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுகின்றது. இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். கைப்பேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmf9hm1sd009aqplpul2ndo92
-
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே, சாரதியின் இரத்த மாதிரிகளை இன்று (7) அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmf9gmnv000a5o29n9id9zhxf
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் தாக்குதல் தீவிரம்: எக்ஸ் தளத்தில் காணொளியை வெளியிட்ட இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்! Published By: Digital Desk 1 07 Sep, 2025 | 03:28 PM காசா நகரத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காசா நகரில் உள்ள உயரமான கட்டிடத்தை அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "நாங்கள் தொடர்கிறோம்" என்ற தலைப்பில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோவை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். காசாவில், நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், சுசி கோபுரத்தை ஹமாஸ் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. அதேநேரம், இந்தக் கூற்றை போராளிக் குழு மறுத்துள்ளது. இதன்போது, உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/224417
-
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான எச்சரிக்கை
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmf9etj1b0097qplp6ki6piq6
-
'கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்' - அதிக கட்டணம் வந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?
பட மூலாதாரம்,Getty Images and UGC கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2025, 08:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது. 'மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது' என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமாக உங்களுக்குத் தோன்றினால் உடனே செய்ய வேண்டியது என்ன? நெல்லை சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி மின்வாரிய கோட்டத்தின் கீழ் வரும் மருதகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷெபா. கூலி தொழிலாளியான கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, 3 குழந்தைகளுடன் ஷெபா வசித்து வருகிறார். அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி மின்சார கட்டணம் தொடர்பாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், 'மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் செலுத்த வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெபா, உறவினர்கள் மூலம் மூலக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பட மூலாதாரம், AFP via Getty Images மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் வந்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, மின்அளவீட்டில் திருத்தம் செய்து மாரியப்பனின் வீட்டுக்கு மின் கட்டணமாக 494 ரூபாய் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். "மாரியப்பன் இறந்துவிட்டதால் அவரது மனைவி தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்தக் கட்டணத்தால் அவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. மறுநாளே (செப்டம்பர் 4) பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். தவறு நேர்ந்தது எங்கே? "மின் கட்டணமாக 1.61 கோடி ரூபாயைக் காட்டும் அளவுக்கு என்ன நடந்தது?" என திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் கேட்டது. பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அதிகாரி, "மின் கணக்கீட்டுக்கு ஊழியர் செல்லும்போது செல்போனில் லொகேஷனை ஆன் செய்ய வேண்டும். பிறகு மின்வாரியத்தின் பிரத்யேக செயலியில் நுகர்வோர் எண்ணைப் பதிவிட வேண்டும். அப்போது நுகர்வோரின் மின்பயன்பாட்டு விவரங்கள் காட்டப்படும்" எனக் கூறுகிறார். "மின் நுகர்வு அலகை (unit) செயலியில் பதிவிட வேண்டும். மாரியப்பனின் வீட்டு மின் கணக்கீட்டில் 1409.00 யூனிட் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இரண்டு பூஜ்ஜியங்களையும் சேர்த்து காட்டியதால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார். இதனால் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மின் யூனிட்டுகளை மாரியப்பன் குடும்பத்தினர் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்டு விட்டதாகக் கூறும் அதிகாரி, "மேற்பார்வை பொறியாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது." எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images 'பூட்டிய வீட்டுக்கு 7 லட்சம் கட்டணம்' திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மலர் வியாபாரம் செய்து வரும் முருகேசனுக்கு கடந்த ஜனவரி மாதம் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. குல்லிசெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரத்தில் இவருக்கு வீடு உள்ளது. கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. உறவினர் ஒருவர் மட்டும் அவ்வப்போது பராமரிப்புக்கு சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டுக்கு மின் கட்டணமாக 7 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. வழக்கமாக, தனது வீட்டுக்கு சராசரியாக 120 ரூபாய் வரை மின்கட்டணத்தை அவர் செலுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக ராமராஜபுரம் மின் பகிர்மான கழகத்தில் புகார் மனு ஒன்றையும் முருகேசன் அளித்துள்ளார். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அளவீடு செய்யும்போது கூடுதலாக 64 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திவிட்டதாக தவறுதலாக சேர்த்துவிட்டது தெரியவந்துள்ளது. மின்வாரிய தலைவர் கூறியது என்ன? திருநெல்வேலி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "நான்கு நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் கவனத்துக்கு வந்தது. ஆய்வு செய்தபோது 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் எனத் தெரியவந்தது. வழக்கத்துக்கு மாறாக, அசாதாரணமாக மின்சார கட்டணம் வந்தால் அதை கணினி மென்பொருளில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" எனக் கூறுகிறார். பட மூலாதாரம், FB/Radhakrishnan படக்குறிப்பு, மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் "ஆளே இல்லா வீடுகளில் தவறாக மின் கணக்கீடு செய்யப்பட்டதாக அறிய வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார். "தமிழ்நாடு முழுவதும் 3.46 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகள் வருவது என்பது மிகமிக அரிதானது. மின் கட்டணத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வந்து அதற்குரிய காரணங்கள் இல்லாமல் இருந்தால் அவை நீக்கப்பட்டுவிடும்" எனவும் அவர் பதில் அளித்தார். 'ஊழியர் பற்றாக்குறையே காரணம்' ஊழியர் பற்றாக்குறை காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நடப்பதாகக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மின்வாரியத்தில் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மின் அளவீடு செய்வதில் சிக்கல் உள்ளது. அதன் காரணமாக மின் பயன்பாட்டை அளவிட பல இடங்களில் அவுட்சோர்ஸிங் முறை கடைபிடிக்கப்படுகிறது. " என்றார். ஊழியர் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மின்வாரியத்தில் 400 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1800 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணக்கீட்டாளர்களை நிரப்புமாறு கூறியுள்ளோம். படிப்படியாக ஆட்களை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன" என்று பதில் அளித்தார். தவறு எவ்வாறு நடக்கிறது? பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி, மின் கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்தார். "முன்புபோல எதையும் அட்டையில் எழுதுவது இல்லை. நுகர்வோர் செல்போன் எண்ணை பதிவேற்றி வைத்திருப்பதால் நுகர்வோருக்கு குறுந்தகவல் சென்றுவிடுகிறது. அனைத்தும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. மின் கணக்கீட்டுக்குச் செல்லும் ஊழியர், தனது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்வாரிய செயலியைப் பயன்படுத்துகிறார். அப்போது ஏதாவது அழைப்பு வந்தால் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது" என்றார் அவர். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, மத்திய மின் ஊழியர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர். "கணக்கீட்டுக்கு செல்லும் நபரின் செல்போன் முகப்பில் (screen) பழுது இருந்தாலும் தட்டச்சு செய்வதில் தவறு ஏற்படுகிறது" எனக் கூறிய அந்த அதிகாரி, "மாறாக, தனியாக சிம் கார்டு பொருத்தப்பட்ட செல்போன்களை பிரத்யேகமாக வழங்கினால் இதுபோன்ற தவறுகளைக் களைய முடியும்" என்றார். தீர்வு என்ன? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நுகர்வோர் நலன் காக்கும் வகையில் சில சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தகவல் வந்தால் TANGEDCO என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், நுகர்வோர் மின் இணைப்புக்கான 10 இலக்க எண்ணைப் பதிவிட வேண்டும். செயலியில் புகார் தெரிவிப்பதற்கு முன்பு கட்டண விவரம், நுகர்வோர் எண் ஆகியவற்றைத் தயாராக வைத்திருத்தல் அவசியம். மின்வாரியத்தின் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை எண்ணான 1912 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மின்தடை, மின் கட்டண பிரச்னை, மின் விபத்துகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு 'மின்னகம்' என்ற சேவை மையம் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக 94987 94987 என்ற குறைதீர் எண் உள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர சேவை மையமாக மின்னகம் செயல்படுகிறது. மின்னகத்தில் மின்சாரம் சார்ந்த 37 விதமான புகார்களைப் பதிவு செய்யலாம் என, கடந்த ஜூன் மாதம் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னகத்தில் அளிக்கப்பட்ட 34,32,084 புகார்களில் 34,24,677 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம்" எனக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர். "ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நுகர்வோர் குறைதீர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது. அங்கு கட்டணம் தொடர்பாக புகார் கொடுத்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் அவர் தெரிவித்தார். "சில புகார்களில் கட்டணத்தின் அளவைப் பார்த்த உடனே தவறு நடந்திருப்பது தெரிந்துவிடும்" எனக் கூறும் ஜெய்சங்கர், "புகாரின் அடிப்படையில் அதனை கணினியில் சரிசெய்துவிடுகின்றனர். நேரடியாக மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலமும் புகார் அளிக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ed8wvnl5jo
-
கிருஷாந்தி நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 07 Sep, 2025 | 03:16 PM யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அத்தோடு "வாசலிலே கிருசாந்தி" எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது மேலும் இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/224452
-
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
07 Sep, 2025 | 01:51 PM திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (06) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/224433
-
விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?
பட மூலாதாரம், The San Francisco Chronicle via Getty Images படக்குறிப்பு, கோழி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் அடங்கிய உண்ணாவிரத உணவு. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 6 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது. இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை அல்ல. தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் இதை உறுதியாக நம்புகின்றனர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்த உணவுமுறை தங்களுக்கு ஒழுங்கான உடலமைப்பை தருவதாக கூறுகின்றனர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சூனக் 36 மணிநேர விரதத்துடன் தன் வாரத்தை தொடங்குவது குறித்து ஒருமுறை பேசியிருந்தார். இந்த உணவுமுறைக்கு ஆதரவாகவே அறிவியல் இதுவரையிலும் இருந்துள்ளது. காலையில் முதல் உணவை தள்ளிப்போடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், செல்களை சரிசெய்யும்,நீண்ட ஆயுளை கூட வழங்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. எனினும், உணவை தவிர்ப்பது சிறந்த தீர்வு அல்ல என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது குறுகிய நேர இடைவெளியில் மட்டும் உணவை உண்பது, பெரும்பாலும் இது எட்டு மணிநேரமாக உள்ளது, மீதமுள்ள 16 மணிநேரத்தில் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. நேரத்தைக் கட்டுப்படுத்தி கடைபிடிக்கப்படும் 5:2 போன்ற மற்ற உணவுமுறைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது சமீபத்தில் வெளியான முதல் பெரியளவிலான ஆய்வு முடிவுகள், இந்த உணவு முறை குறித்து பல மோசமான ஆபத்துகள் குறித்த கவலையை எழுப்புகின்றன. வயது வந்த 19,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அவர்களுள் எட்டு மணிநேர இடைவெளிக்கும் குறைவான நேரத்தில் மட்டுமே உணவுகளை உண்பவர்கள், 12-14 மணிநேர இடைவெளியில் உண்பவர்களைவிட இதய நோய்களால், குறிப்பாக இதய மற்றும் ரத்த நாள நோய்களால் இறக்கும் ஆபத்து 135% அதிகம் உள்ளதாக கூறுகிறது. இந்த இதய நோய்கள் ஆபத்து ஒருவரின் உடல்நலன், வாழ்வியல் முறை மற்றும் முந்தைய மருத்துவ தகவல்களின் அடிப்படையிலேயே, ஆய்வில் பங்கேற்ற மற்றவர்களைவிட மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. பிற காரணங்களால் இறப்பதற்கும் இந்த உணவுமுறைக்குமான தொடர்பு வலுவானதாக இல்லை. நிலையற்றதாக உள்ளது. ஆனால், அதிக பரிசோதனைகளுக்கு பின்னரும் வயது, பாலினம், வாழ்வியல் முறையைக் கடந்தும் இதய நோய்களுக்கான ஆபத்து நீடிக்கிறது. மற்ற வார்த்தைகளில் சொல்வதானால், இத்தகைய நேர கட்டுப்பாட்டு முறைக்கும் மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயநோய்களால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. பட மூலாதாரம், Getty Images இந்த ஆய்வு இறப்புக்கான காரணம் மற்றும் அதன் விளைவுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கவில்லை. ஆனால், விரத முறையை கடைபிடிப்பது என்பது சிறந்த உடல்நலனுக்கான ஆபத்துகள் இல்லாத வழிமுறை என்ற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுக்கின்றன. ஆய்வாளர்கள் இதற்கென அமெரிக்காவை சேர்ந்த வயதுவந்தவர்கள் மத்தியில் எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் உணவுமுறையை புரிந்துகொள்ள இரண்டு வாரங்களில் ஏதேனும் இரு நாட்களுக்கு அவர்கள் உண்ட, அருந்திய எல்லாவற்றையும் நினைவுபடுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்மூலம், ஒருவரின் சராசரி உணவு நேரம் என்ன என்பதை கணக்கிட்டு, அதை அவர்களின் நீண்ட கால வழக்கமாக எடுத்துக்கொள்கின்றனர். எட்டு மணிநேரத்துக்குள் உணவுகளை உண்பவர்களுக்கு 12-14 மணிநேரத்துக்கு தங்கள் உணவுகளை பிரித்து உண்பவர்களைவிட இதய நோய்களால் இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதயநோய் ஆபத்து ஏன்? பலவித சமூக பொருளாதார குழுக்களிடையே இந்த இதயநோய் ஆபத்து நிலையானதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும், புகைபிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் குறுகிய நேர இடைவெளியில் உண்பதை நீண்ட காலத்துக்குக் கடைபிடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. உணவுமுறையின் தரம், உணவுகள் மற்றும் எவ்வளவு தின்பண்டங்கள் உண்கிறோம், மற்ற வாழ்வியல் காரணங்களை மாற்றியும் இந்த தொடர்பு இருப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த இறப்புகள் அதிகரிக்காததை எப்படி புரிந்துகொள்வது என ஆய்வாளர்களிடம் எழுப்பினோம், இது உயிரியல் ரீதியிலானதா அல்லது இந்த தரவுகளில் பக்கச்சார்பு ஏதேனும் உள்ளதா என கேட்டோம். உணவுமுறை தான் நீரிழிவு மற்றும் இதயநோய் சம்பந்தமான நோய்களுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. எனவே, இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பதுடன் உள்ள தொடர்பு எதிர்பாராதது அல்ல என, திறன் வாய்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வின் ஆய்வாசிரியர் விக்டர் வென்ஸ் ஸோங் கூறுகிறார். இந்த ஆய்வு, டயாபட்டீஸ் & மெட்டபாலிக் சிண்ட்ரோம்: க்ளீனிக்கல் ரிசர்ச் அண்ட் ரிவ்யூஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. "எட்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் உண்பது இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்பதுதான் இதில், எதிர்பாராத முடிவாக உள்ளது," என கூறுகிறார் பேராசிரியர் ஸோங். இவர், சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ளார். பட மூலாதாரம், NurPhoto via Getty Images படக்குறிப்பு, இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இந்த தசாப்தத்தின் டிரெண்டிங் உணவுமுறையாக உள்ளது ஓரிரு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், இத்தகைய விரத உணவுமுறைகள் இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துகிறது என்ற நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கிறது. பலன்களும் குறைகளும் அதே இதழில் முன்னணி உட்சுரப்பியல் நிபுணர் அனூப் மிஸ்ரா எழுதிய தலையங்கத்தில் இந்த உணவுமுறை தரும் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகளை சீர்துக்கி பார்க்கிறார். பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இந்த உணவுமுறை உடல் எடை குறைதல், இன்சுலின் ஹார்மோனுக்கு உடல் எதிர்வினையாற்றும் விதம், ரத்த அழுத்தம் குறைதல் மற்றும் அழற்சிக்கு எதிரான பலன்கள் குறித்த சில ஆதாரங்களுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை (lipid profiles) மேம்படுத்தும் என பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார். மேலும், கலோரிகள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கலாசார அல்லது மத ரீதியிலான விரத நடைமுறைகளுடன் எளிதாக பின்பற்றக்கூடிய இந்த உணவுமுறை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் உதவலாம். "எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, பசி அதிகரிப்பது, எரிச்சலூட்டும் தன்மை, தலைவலி மற்றும் நீண்ட காலத்துக்குப் பின் உணவுமுறையை கடைபிடிப்பது குறைந்துபோதல் போன்றவை அதன் குறைகளாக இருக்கின்றன," என பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகிறார். "நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான கண்காணிப்பு இல்லாமல் விரதத்தைக் கடைபிடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் ஆபத்து உள்ளது; மேலும் சாப்பிடக்கூடிய நேரத்தில் நொறுக்குத் தின்பண்டங்களை உண்பதையும் ஊக்குவிக்கிறது. அதிக வயதானவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களை உடையவர்கள், நீண்ட காலத்துக்கு இந்த உணவுமுறையை கடைபிடிக்கும்போது பலவீனத்தையோ அல்லது தசையிழப்பையோ ஏற்படுத்தும்." இப்படி, இத்தகைய உணவு முறை ஆய்வுக்கு உட்படுவது இது முதன்முறையல்ல. ஜாமா இண்டர்னல் மெடிசின் இதழில் 2020ல் பிரசுரமான மூன்று மாத கால ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவுமுறையின் மூலம் சிறிதளவு எடையே குறைந்துள்ளது, அதில் அதிகமான அளவு தசையிழப்பின் மூலம் நிகழ்ந்திருக்கலாம். மற்றொரு ஆய்வில், இந்த உணவு முறையால் பலவீனம், பசி, நீரிழப்பு, தலைவலி மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்படும் என குறிப்பிடுகிறது. புதிய ஆய்வில், பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகையில், மற்றொரு புதிய எச்சரிக்கையையும் சேர்க்கிறார், சில குழுக்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இருந்து அதன் விளைவுகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தான் அறிவுறுத்துவதாக பேராசிரியர் ஸோங் கூறுகிறார். இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இத்தகைய எட்டு மணிநேரம் மட்டும் உணவு உண்ணுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். தனிநபர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தங்களுக்கான உணவுமுறை குறித்த அறிவுரை பெற வேண்டிய தேவை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன. "தற்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மக்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகின்றனர் என்பதைவிட, என்ன சாப்பிடுகின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியமானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், இதய நலனை மேம்படுத்துதல் அல்லது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன் நீண்ட காலத்துக்கு எட்டு மணிநேர உணவுமுறையை கடைபிடிப்பதை யோசிக்க வேண்டாம்." இப்போதைக்கு, முக்கியமான செய்தி என்னவென்றால் விரதத்தை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது அல்ல, அது தனிப்பட்ட ஒருவரின் ஆபத்துகளுடன் இணைப்பது தொடர்பானது. ஆபத்துகளுக்கான ஆதாரங்கள் தெளிவாகும் வரை, நேரத்தைவிட, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8z36n3mgvo
-
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
Published By: Digital Desk 1 07 Sep, 2025 | 03:33 PM வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர். வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியின் பகுதி என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், கையடக்கத் தொலைபேசியிலுள்ள மென்பொருளை சேதப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கள் அமைப்புக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (SLCERT) தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் இதுபோன்ற மோசடி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224449
-
"படைகளை அனுப்பினால் அழிப்போம்": ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர். கட்டுரை தகவல் ஸ்டீவ் ரோசென்பெர்க் பிபிசி ரஷ்யா 5 மணி நேரங்களுக்கு முன்னர் சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், "யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்" என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். "அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்" என ரஷ்ய அதிபர் புதின் கூறினார். அதன்பிறகுதான் எதிர்வினை தொடர்ந்தது. விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் கைதட்டல்களால் ஆரவாரம் செய்தனர். ரஷ்ய அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் மேற்கத்திய படைகளை அழிக்கும் அச்சுறுத்தலை வரவேற்றனர். அந்த அரங்கத்தில் நடந்த காட்சியை பார்கையில் அந்த கைத்தட்டல் சற்று நடுங்க வைத்தது. 'விருப்பக் கூட்டணி' என்று அழைக்கப்படும் யுக்ரேனின் நட்பு நாடுகள், யுக்ரேனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் படையை உருவாக்குவதாக உறுதியளித்த மறுநாளே இது நடந்தது. "யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது ரஷ்யாவில் மட்டுமே" என ரஷ்ய அதிபர் புதின் கூறியதும் பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினர். "இந்த சந்திப்புக்கான சிறந்த இடம் ரஷ்யா தலைநகரான மாஸ்கோதான்" என அவர் கூறினார். ரஷ்யாவிற்கு வெளியே புதினின் இந்த முன்மொழிவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக அது நகைச்சுவையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது. ஆனால் பல வழிகளில் யுக்ரேன் உடனான போர் மீதான புதினின் நிலைப்பாட்டை இது எடுத்துரைக்கிறது. "ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அது எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை நீங்கள் நிராகரித்தால் பின் அமைதி இருக்காது" என்பதுதான் அது. புதினின் இந்த சமரசமற்ற நிலைப்பாடு, பல்வேறு விஷயங்களுக்கு வழிவகுக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். முதலாவதாக, யுக்ரேனில் ரஷ்யப் படைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக புதின் நம்புகிறார். 2வது ராஜதந்திர வெற்றி. இந்த வாரத்தில் புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். இவர்கள் புன்னகையுடன் உரையாடிக்கொண்டார்கள். சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உடன் ரஷ்யா நல்ல உறவுடன் இருக்கிறது என்பதை காண்பிப்பதே இதன் நோக்கமாகும். அதன்பிறகு அமெரிக்கா. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துவிட்டன, என்பதற்கான ஆதாரமாக இந்த நிகழ்வை உள்நாட்டில் புதினின் ஆதரவாளர்கள் விவரித்தனர். முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப், புதினுக்கு நிறைய எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுக்களை விதித்தார். ரஷ்யா அமைதியை நிலைநாட்டவில்லை என்றால் நிறைய தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கைகளை தொடரவில்லை. இதுவே ரஷ்யாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்த மற்றொரு காரணமாக அமைந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார். டிரம்பின் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை புதின் பொதுமேடையிலேயே பாராட்டியுள்ளார். எனினும் அவர் டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை நிராகரித்தார். மேலும் யுக்ரேன் மீதான போரில் சமரசம் செய்வதற்கான எந்த முனைப்பையும் அவர் காட்டவில்லை. அப்படியானால் இதில் அமைதிக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது? புதின் சமீபத்தில் தன்னால் பாதையின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டார். அதாவது ரஷ்யா ஒருபுறமும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா (ஓரளவுக்கு அமெரிக்காவும்) வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருப்பதாக தோன்றுகிறது. யுக்ரேனும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சண்டையை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் போருக்கு பிந்தைய ஊடுருவலை எதிர்கொள்ளும் அளவிற்கு யுக்ரேனிய ராணுவம் பலமாக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது. சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக புதின் கூறியது, என்னைப் பொறுத்தவரை யுக்ரேனில் ரஷ்யாவின் வெற்றியைதான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார் ரோசென்பெர்க். இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கு சாதகமான புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதை அவர் குறிப்பிடுகிறார் என்றார். அமைதியை பொறுத்தவரை இந்த இருவேறு பாதைகளும் எங்கு, எப்போது ஒன்றிணையும் என்பது பற்றி சொல்ல முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kndwv411wo
-
சமூகங்களை துருவமயப்படுத்தும் சர்வதேச பொறிமுறைகளை ஏற்கோம்; ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிவித்தது இலங்கை
07 Sep, 2025 | 09:59 AM (நா.தனுஜா) எந்தவொரு வெளியக பொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன், அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோது ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட எழுத்துமூல அறிக்கையில் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமனங்களுக்கு அமைவான சுயாதீனமானதும், நியாயமானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்கு தவறியிருக்கின்றன. இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க ஆக்கப்பூர்வமான செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்த கரிசணைகளுக்கு பதிலளித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு, நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, நிகழ்நிலை காப்புச் சட்டம் திருத்தம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த ஜுன் மாதம் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு விளக்கப்பட்டது. அதேபோன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றுக்கு அவசியமான நிதி மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதன் ஊடாகவும் உள்ளக நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமும் நிறுவப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இம்மாதம் அளவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை நிலைமாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்கு இடமளிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகிறோம். எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைத்தூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224416