Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 Sep, 2025 | 11:07 AM (இராஜதுரை ஹஷான்) எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் நடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில் பொலிஸார் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலில்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கட்சியின் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும்,நியாயம் கிடைக்கும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதற்கான பொறுப்பினை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகிறார்கள். சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு மூன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா, வெளிநாட்டு புலனாய்வு பிரிவு இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா, நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.ஆகவே நாங்கள் திணறபோவதில்லை என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/224424
  2. 07 Sep, 2025 | 12:05 PM (லியோ நிரோஷ தர்ஷன்) பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனை உலகிற்க வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும், விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டுமே தவிர அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க முடியாது. முதலில் ஜெனிவா சக்கரத்தில் இருந்து விடுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையிலேயே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தான் ஜெனிவா குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, வெறும் அறிக்கைகளை சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையிலிருந்து செல்லும் தரப்பு அறிக்கையை சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகிறது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது. சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்கை கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசாங்கம் தடையாக இருக்க வில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே யாரையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடமைப்பட்டில்லை. அது மாத்திரமன்றி ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும். பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கம் அவர்களுக்கு உரியது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால் இதுவரைக் காலமும் அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். எனவே ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் தயராகவே உள்ளோம். ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் அரசாங்கம் தடையாக இருக்காது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224415
  3. 07 Sep, 2025 | 08:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது. அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும். இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது. அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம். எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும். எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224407
  4. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் 07 Sep, 2025 | 08:27 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நாளைய தினம் ஜெனீவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் நாள் அமர்வில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து மியன்மார் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் சுயாதீன விசாரணைப்பொறிமுறை குறித்த விவாதம் நடைபெறும். அதன் பின்னர் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும். 'இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையக்கூடிய சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்குத் தற்போதுவரை தவறியிருக்கின்றன. இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரதும், சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை வென்றெடுத்த முன்னேற்றகரமானதொரு செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகரவேண்டும்' என உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர், இலங்கை சார்பில் கூட்டத்தொடரில் பங்கேற்றவுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்திப் பதிலளிப்பார். இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான உறுப்புநாடுகளினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் இம்மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளன. https://www.virakesari.lk/article/224408
  5. மாணவி கிருஷாந்தி படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று 07 Sep, 2025 | 08:13 AM 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு செம்மணி அணையா விளக்குத்திடலில் நடைபெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் காலை 9மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் நடைபெற்று 9.30க்கு நினைவுப் பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. 10மணிக்கு “வாசலிலே கிருசாந்தி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு செய்யப்படவுள்ளதோடு 10.30க்கு ஆவண காட்சிப்படுத்தல் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/224406
  6. 07 Sep, 2025 | 11:08 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்திருப்பதாகவும், அதற்கமைய இச்செயன்முறையில் செஞ்சிலுவை சங்கம் வெகுவிரைவில் பங்கேற்கும் எனவும் அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து 45 ஆவது நாளாக சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுத்தல், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் பங்களிப்பினை வழங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர். இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தைக் கையாள்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நீண்டகால அனுபவமும், முறையான நிபுணத்துவமும் உள்ள போதிலும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படாததன் காரணமாக குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதியமைச்சினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. அதுமாத்திரமன்றி மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க, இச்செயன்முறையில் வெகுவிரைவில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224426
  7. யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஆரம்பம் Published By: Vishnu 06 Sep, 2025 | 09:40 PM சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது. சனிக்கிழமை (6) பிற்பகல் ஆரம்பமான குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (7) தினமும் நடைபெற உள்ளது. இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224399
  8. சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்…
  9. உயிரை உலுக்கும் காட்சி - கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு செம்மணி மனிதப் புதைகுழியில் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிகளின் போது குவியலாக எட்டு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அரியாலை மனிதப் புதைகுழி புதைகுழியில் இருந்து புதிதாக 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் நேற்று 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை நேற்று வரை 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இன்று சனிக்கிழமையுடன் அகழ்வு பணிகள் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/chemmani-grave-court-case-today-in-jaffna-1757122788
  10. அததெரண கருத்துப்படங்கள்
  11. பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் Flora Drury BBC News 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்பட அதிகமாக பொதுவெளியில் இல்லை. நமக்கு இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கிம் ஜூ ஏ (வலது ஓரம்) தனது தந்தையுடன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடும்பம் குறித்த ரகசியத்தைக் காக்கும் கிம் ஜாங் உன் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல்-ஜூவுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் மிஸ் கிம் இரண்டாவது குழந்தை என்று நம்பப்படுகிறது. கிம்மின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. கிம் தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். திருமணமாகி சிறிது காலம் ஆன பிறகுதான் தனது மனைவியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒரே பிள்ளையாக கிம் ஜு ஏ-வின் இருப்பு மட்டுமே வடகொரிய நாட்டின் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் வேறு எந்த பிள்ளையும் பொதுவில் காணப்படவில்லை. முதன்முதலாக கிம் ஜு ஏ பற்றிய செய்தி ஒரு எதிர்பாராத இடத்தில் இருந்து தான் வந்தது. கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், 2013ஆம் ஆண்டு தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வட கொரியாவுக்கான ஒரு பயணத்தின் போது 'அவர்களின் குழந்தை ஜூ ஏ-யை' தான் கையில் ஏந்தியதாகக் கூறினார். அதன் பிறகு கிம் ஜு ஏ பற்றி அதிகம் அறியப்படவில்லை. நவம்பர் 2022 அவர் தன் தந்தையுடன் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல் நிகழ்வில் தோன்றினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அவர் தபால் தலைகளில் தோன்றினார். கிம் ஜாங் உன்னின் 'மதிப்பிற்குரிய' (Respected) மகள் என்று விவரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கான விருந்துகளில் கலந்து கொண்டார். 'மதிப்பிற்குரியவர்' என்ற சொல், வட கொரியாவின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிம் ஜு ஏ-வின் தந்தையின் விஷயத்தில், 'எதிர்காலத் தலைவர்' என்று கிம் ஜாங் உன்னின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர் 'மதிப்பிற்குரிய காம்ரேட்' என்று குறிப்பிடப்பட்டார். பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, வட கொரியாவின் வொன்சன் சுற்றுலா ரிசார்ட்டின் திறப்பு விழாவில் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தோன்றினார். 'கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு' இதே காலகட்டத்தில் தான், தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS), அந்தச் சிறுமியைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது. கிம் ஜு ஏ-வுக்கு குதிரை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்கும் என்றும், தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றதாகவும் தேசிய புலனாய்வு சேவை கூறியது. அந்த சமயத்தில் கிம் ஜு ஏ-வுக்கு சுமார் 10 வயது இருக்கும் என்றும் என்ஐஎஸ் தெரிவித்தது. ஜனவரி 2024 வாக்கில், என்ஐஎஸ் மற்றொரு முடிவுக்கு வந்தது. அந்தச் சிறுமி கிம் ஜாங் உன்னின் சாத்தியமான வாரிசு என்றும், ஆனால் அவருடைய தந்தையின் இளம் வயது உள்பட பல காரணிகள், இந்த விஷயத்தில் இன்னும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அப்போதிருந்து, பல சந்தர்ப்பங்களில் கிம் ஜு ஏ தனது தந்தையுடன் தோன்றியுள்ளார். ஐசிபிஎம் ஏவுதல்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில், மேடைகளின் மையத்தில் கிம் ஜாங் உன் அருகில் நின்று, மூத்த ராணுவத் தளபதிகளிடமிருந்து ராணுவ மரியாதைகளைப் பெற்றார். ஆனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் வட கொரியாவிற்கு வெளியே முதல் முறையாகக் காணப்பட்டார். மேலும் இந்தப் பயணம் அவர் தனது தந்தைக்குப் பிறகு வட கொரிய தலைவராக பதவியேற்கக்கூடும் என்ற ஊகங்களை அதிகம் தூண்டியுள்ளன. 1948 முதல் வட கொரியாவை ஆண்டு வரும் கிம் குடும்பத்தினர், தங்கள் குடிமக்களிடம் தாங்கள் ஒரு புனிதமான ரத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வட கொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க, கிம் தனது மகளை இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஊகங்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewnlqd8qqxo
  12. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாயும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/largest-newborn-ever-recorded-was-born-in-world-1757133988
  13. 23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து 23 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் நடந்த மற்றுமொரு மோசமான விபத்தை நினைவூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், பேருந்து முதலில் ஒரு ஜீப்புடன் மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது. இதே நாளில் இந்த நிலையில், நேற்றைய பேருந்து விபத்து, 2002 செப்டம்பரில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தை ஒத்துப்போவதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவிக்கின்றனர். 2002 விபத்தின் போது, பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்திருந்துடன், அந்த விபத்தும் இதே நாளிலும், கிட்டத்தட்ட அதே நேரத்திலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தொடர் பேருந்து விபத்துகள் இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. இவ்வருடம் மே மாதத்தில், கதிர்காமத்தில் இருந்து குருணாகலை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியானார்கள். அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு பஸ்ஸரவில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர். இவ்விரு விபத்துகளும் சமீபத்திய எல்ல – வெல்லவாய விபத்து நிகழ்ந்த அதே மாவட்டத்தில் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ella-bus-accident-similar-to-2002-bus-accident-1757080927#google_vignette
  14. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! 06 Sep, 2025 | 02:48 PM சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224371
  15. “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது! 06 Sep, 2025 | 02:26 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224368
  16. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! 06 Sep, 2025 | 02:48 PM சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224371
  17. பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சிவில் செயற்பாட்டாளரால் முன்வைப்பு 06 Sep, 2025 | 01:15 PM (ஆர்.ராம்) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சிவில் செயற்பாட்டாளரான சிரந்த அமெரிக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் கோரிக்கையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின், இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டது?, இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்) இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம் என்ன? ஆகிய வினாக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224364
  18. சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! Published By: Digital Desk 1 06 Sep, 2025 | 11:29 AM தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 22 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல - கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சஷீந்திர ராஜபக்ஷ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224353
  19. காசாவின் கான் யூனிஸில் மனிதாபிமான மண்டலத்தை நிறுவ தீர்மானம்! Published By: Digital Desk 1 06 Sep, 2025 | 12:28 PM காசாவின் கான் யூனிஸின் அல் - மவாசி பகுதியில் ஒரு மனிதாபிமான மண்டலத்தை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை (இன்று) அதிகாலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கள வைத்தியசாலைகள், நீர் குழாய்கள், உப்புநீக்கும் வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற உட்கட்டமைப்புகள் இந்தப் பகுதியில் இருக்கும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதிக்கு வெளியேறுமாறு இராணுவத்தின் செய்தியாசிரியர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224359
  20. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும் முப்படை தலைமை தளபதி பேசியுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அது தொடரும் எனவும் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவீனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்ததாகவும், இந்த ஆபரேஷனில் முடிவெடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா - சீனா இடையிலான உறவு இணக்கமாவதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்ட நேரத்தில் அனில் சௌகான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் எஸ்சிஓ மாநாட்டில் கலந்து கொண்டது. ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா, இந்திய ராணுவத்தின் நிலைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக கடந்த ஜூலை மாதம் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அனில் சௌகான் சொன்னது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போருக்கான தளங்கள் மாறிவிட்டதாக அனில் சௌகான் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான், "ஒரு நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தற்காலிகமானவை அல்ல. அவை வெவ்வேறு வடிவங்களில் தொடரும். சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அது தொடரும் என நம்புகிறேன். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் ஆகும்." எனக் கூறியுள்ளார். மேலும், "மற்றொரு சவால் என்னவென்றால், போருக்கான களங்கள் மாறிவிட்டன. தற்போது இது சைபர் மற்றும் விண்வெளியிலும் நடக்கிறது. நமது எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணுசக்தி நாடுகள். அவர்களுக்கு எதிராக எந்த மாதிரியான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எப்போதுமே சவாலான ஒன்றாகவே இருக்கும்" எனக் கூறினார். கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் அவர் பேசினார். "ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பயங்கரவாத தாக்குதலுக்கான பழிவாங்கல் அல்ல. அது நமது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை காட்டுவதற்கானது. திட்டமிடுதல் முதல் இலக்கை தேர்வு செய்வது வரை ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது" என்றார். ஆபரேஷன் சிந்தூர் பன்முக ஆபரேஷன் ஆகும். ராணுவத்தின் முப்படைகளுடன் சைபர் பிரிவும் இணைந்து செயல்பட்டது என்றார் அவர். ஜெனரல் அனில் சௌகான் நேற்று (வியாழக்கிழமை) கோரக்பூர் சென்றடைந்தார். அங்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து கோர்கா போர் நினைவுச் சின்னத்தை மறுசீரமைக்கும் பணி மற்றும் கோர்கா அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். "சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது. அது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பாதிக்கக்கூடியது" என கடந்த ஜூலை மாதம் அனில் சௌகான் கூறியிருந்தார். சீனா - பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் சீனாவின் வர்த்தக செயற்கைக்கோளை பயன்படுத்தியதாக ராகுல் சிங் குற்றம்சாட்டினார். ஆபரேஷன் சிந்தூரில், சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுடன் சண்டையிட்டன என ராகுல் சிங் குற்றம்சாட்டினார். இந்தியா–பாகிஸ்தான் மோதலை பாகிஸ்தானுக்கு கொடுத்த தனது ஆயுதங்களின் செயல்திறனை பரிசோதிக்கும் ஆய்வுக்களமாக சீனா பயன்படுத்தியது என்று அவர் விமர்சித்தார். அனில் சௌகானும் இதுபற்றி ஆபரேஷன் சிந்தூர் முடிந்த பிறகு பேசியிருந்தார். ஷங்ரி-லா டயலாக் பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு பிறகான பேட்டியில், "ஆபரேஷன் சிந்தூரின்போது சீனாவின் வர்த்தக செயற்கைக்கோளை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால், நமது நிலைகளை இலக்கு வைக்க பாகிஸ்தானுக்கு அது உதவியதா என்பதற்கு ஆதாரம் இல்லை." என்று அவர் கூறியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது 'இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா' என்பது குறித்த கேள்விக்கும் அனில் சௌகான் பதிலளித்திருந்தார். ப்ளூம்பர்க் டிவி நேர்காணலில், 'விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல. அது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்' எனக் கூறினார். எனினும் இந்தியாவின் 6 விமானங்கள் தங்களது தாக்குதலுக்கு இலக்கானதாக பாகிஸ்தான் கூறியதை அவர் முற்றிலுமாக மறுத்தார். என்னைப் பொறுத்தவரை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை விட, அது ஏன் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதே முக்கியம் என அனில் சௌகான் கூறினார். ஆனால் இதுதொடர்பாக எந்த எண்ணிக்கையையும் அவர் தரவில்லை. சீனா நமக்கு சவால் எனக் கூறுவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோதி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்றனர். டிரம்ப் இந்தியாவுக்கு விதித்த 50% வரிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே நேரத்தில், சீனா நமக்கு சவாலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் அனில் சௌகான். சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு மலர்வதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாக கூறப்பட்டது. இந்திய பிரதமர் மோதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "நாம் இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டதைப் போல தெரிகிறது. அவர்களுக்கு நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் அமையட்டும்" என தனது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து கேட்டபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" என பதில் அளித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்றார். இதற்கு முன்பாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். டிரம்பை மீண்டும் விமர்சித்து அந்த கருத்தை பதிவிட்டிருந்தார். "டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அது முடிந்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். . அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக டிரம்பை பால்டன் விமர்சித்தது அது முதல்முறை அல்ல. முன்னதாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை தடுக்காது என தெரிவித்திருந்தார். பால்டன் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் ஆவார். அவர் டிரம்ப் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m40ryrwx0o
  21. 05 Sep, 2025 | 03:30 PM (எம்.மனோசித்ரா) 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் ஆகஸ்ட் 31 – செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மாநாடொன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகில் பலவந்த நாடுகள் பலவும் பங்கேற்றன. அத்தோடு 10 நாடுகள் அந்த மாநாட்டில் நிரந்தர அங்கத்துவத்தையும் பெற்றுள்ளன. அத்தோடு 25 நாடுகள் பேச்சாளராகவும் பங்கேற்கின்றன. 1999இல் இந்த மாநாடு ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்று வருகிறது. ஆனால் இம்முறை இலங்கையில் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை நிராகரித்துள்ளதாக லங்கா கார்டியன் இணையதளம் தெரிவித்துள்ளது. வெளியக அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த மாநாட்டை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகமும், பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகமும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரமில்லாததால் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அழைப்பு கிடைக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அதனை வெளிவிவகார அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் விவகாரங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் அரசாங்க பேச்சாளர் அறிவார். இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் அனைத்தும் இதில் பங்கேற்றன. இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன? இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது அப்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அமெரிக்க ஆதரவாளர்கள் என விமர்சித்தனர். வல்லரசுகள் கூறுவதற்கமையவே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் விமர்சித்தனர். ஆனால் அந்த அரசாங்கங்கள் அனைத்தும் இவ்வாறான மாநாடுகளை புறக்கணிக்காது அவற்றில் பங்கேற்று நாட்டுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தன. யாரும் அமெரிக்காவுக்கு பயந்து எந்தவொரு மாநாட்டிலும் பங்கேற்றாமல் இருக்கவில்லை. அவ்வாறெனில் அநுர அரசாங்கம் ஏன் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை? சீனாவைப் போன்று ஒரு கட்சி ஆட்சியை அங்கீகரிக்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வாவின் கட்சி அமைத்துள்ள அரசாங்கத்திலுள்ளோர் இதனைப் புறக்கணித்துள்ளனர். அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதே தற்போது கிடைத்துள்ள தகவலாகும். ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்வதை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர அவர் நேரமற்ற வகையில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஜனாதிபதிக்கு செல்ல முடியாவிட்டால் வெளிவிவாகார அமைச்சர் அல்லது வேறு அமைச்சர்கள் பங்கேற்றிருக்க முடியுமல்லவா? அல்லது குறைந்தபட்சம் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரையாவது பங்குமற்றுமாறு ஆலோசனை வழங்கியிருக்கலாமல்லவா? அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து இவர்கள் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இதேபோன்று தான் இவர்கள் பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்தனர். இவர்களது வெளிநாட்டு கொள்கை என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்திடுகின்றனர். ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை. மறுபுறம் ரஷ்யர்களுக்கு இலவச வீசாவை வழங்குகின்றனர். அதிகாரத்துக்கு வர முன்னர் அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இன்று அந்நாட்டின் சகாக்களாகியுள்ளனர். இது ஜே.வி.பி.க்கு பாதிப்பல்ல, ஆனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பாகும் என்றார். https://www.virakesari.lk/article/224286
  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ரெஹான் ஃபாசல் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார். அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை. பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார். ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் அவரை ஓர் இளம் பிரெஞ்சு அறிவுஜீவி என்று தவறாக நினைத்திருப்பார்கள். அவர் உயரத்தில் குள்ளமாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தார். அவரது கறுப்பு முடியும் கருப்பு கண்களும் மக்களை கவர்ந்தன. " என்று எழுதுகிறார். மேலும் "அவர் மோண்ட்மார்ட்ரே பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒரு அழுக்கு பிடித்த அறையில் வசித்து வந்தார். பழைய புகைப்படங்களை பழுது பார்த்து பெரிதாக்குவது அவரது தொழில். அவர் கையில் எப்போதும் ஷேக்ஸ்பியர் அல்லது எமிலி ஜோலாவின் புத்தகம் இருக்கும். அவர் ஒரு அமைதியான மனிதர், ஆனால் பயந்த மனிதர் அல்ல. நாடகம், இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டங்களில் சரளமாக பிரெஞ்சு மொழியில் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார். அவர் மேற்கின் செல்வாக்கை உள்வாங்கியிருந்தார், ஆனால் அதன் ஆதிக்கத்திற்கு தயாராக இல்லை." என்றும் குறிப்பிடுகிறார். ஹோ சி மின் கொல்கத்தா வருகை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஜூலை 4-ம் தேதி அப்போதைய வியட்நாம் பிரதமர் நுயென் தான் ஜங் மற்றும் அவரது மனைவி த்ரான் தான் கீம் ஆகியோர், கொல்கத்தாவில் உள்ள மறைந்த வியட்நாம் அதிபர் ஹோசிமின் சிலைக்கு அருகில் நிற்கின்றனர். 1941-ம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திடீரென அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக கட்சி அலுவலகத்தை அடைய வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின என்பது ஒரு பிரபலமான கதை. கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட், தி ஜர்னி ஆஃப் அன் இந்தியன் கம்யூனிஸ்ட்' (பயணியும், பாதையும் : ஒரு இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கைப் பயணம்) புத்தகத்தில், "நாங்கள் அலுவலகத்தை அடைந்தபோது, சிரித்த கண்களும் மெல்லிய தாடியும் கொண்ட ஒரு ஒல்லியான தோற்றம் கொண்ட மனிதர் எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பின்னர் அணியத் தொடங்கிய ஆடைகளை அவர் அப்போதே அணிந்திருந்தார். அவர் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவர் பெயர் ஹோ சி மின். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச பாரிஸ் செல்வதாகக் கூறினார். கிரேட்-ஈஸ்டர்ன் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள ஒரு பணியாளரின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடைந்தார்." என்று எழுதுகிறார். வியட்நாமுக்கு சுதந்திரம் பெற்று தந்தார் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1965-ல் வியட்நாம் பிரதமர் பாம் வான் டோங்குடன் ஹோ சி மின் ஹோ சி மின்னை குறிப்பிடும் போதெல்லாம், எதிர்ப்பு, புரட்சிகர உணர்வு போன்ற சொற்கள் தானாகவே நினைவுக்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒருபுறம் மதிக்கப்பட்ட ஒரு நபராகவும், மறுபுறம் எதிரிகளால் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தார். நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த தனது நாட்டிற்கு அவர் சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜாக்சன் ஹார்டி தனது 'ஹோ சி மின் ஃப்ரம் எ ஹம்பிள் வில்லேஜ் டு லீடிங் எ நேஷன்ஸ் ஃபை ஃபார் ஃப்ரீடம்' (ஹோசிமின் - சாதாரண கிராமத்தில் இருந்து, விடுதலைப் போராட்டத்தின்‌ தலைமை வரை) என்ற புத்தகத்தில், "மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக உருமாறிய அவரது பயணம், போராட்டம் மற்றும் தைரியத்தின் கதை மட்டுமல்ல, உலகின் வலிமையான சக்திகளால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நபரின் கதையும் கூட. அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அவர்களை ஆதரித்த வல்லரசான அமெரிக்காவையும் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்." என்று எழுதுகிறார். ஆரம்பத்தில் புறக்கணித்த அமெரிக்கா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அமெரிக்க துருப்புகள் பயன்படுத்தின. ஆகஸ்ட் 29, 1945 அன்று, வியட்நாமின் சுதந்திரத்திற்காக போராடிய வியட் மின் எனும் குழு ஹனோயை ஜப்பானிடமிருந்து விடுவித்தது. செப்டம்பர் 2-ம் தேதி வியட்நாம் என்ற சுதந்திர நாடு நிறுவப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா பங்கேற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் வியட்நாமை மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கவில்லை. வியட்நாமை ஐ.நா. பாதுகாப்பின் கீழ் அல்லது தற்காலிகமாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க அவர் தயாராக இருந்தார். ஆகஸ்டின் போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின்படி, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பனிப்போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் பார்வையில், ஹோ சி மின் ஒரு தேசியவாத தேசபக்தர் அல்ல, ஒரு உறுதியான கம்யூனிஸ்டாகவும், 'மாஸ்கோவின் முகவராகவும்' இருந்தார். வி.கே.சிங் தனது 'ஹோ சி மின் அண்ட் ஹிஸ் வியட்நாம்' (ஹோ சி மின் மற்றும் அவரது வியட்நாம்) என்ற புத்தகத்தில், "மார்ச் 27, 1947 ட்ரூமன் கோட்பாடு, உள்நாட்டு கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது கம்யூனிச ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்கா எந்த வகையிலும் உதவும் என்றது. மே 8, 1950 அன்று, அமெரிக்கா வியட்நாமில் பிரான்சுடன் ஒரு மூலோபாய உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செப்டம்பர் 1953 -ல், அமெரிக்க நாடாளுமன்றம் 900 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அங்கீகரித்தது. 1954 வாக்கில், வியட்நாமில் பிரான்சின் போருக்கான செலவில் 80 சதவீதத்தை அமெரிக்கா ஏற்கத் தொடங்கியது." என்று எழுதுகிறார். 1954 -ல், பிரான்ஸ் தியென் பியென் ஃபூவில் (வியட்நாமில் உள்ள ஒரு நகரம்) தோல்வியை சந்தித்தது. 7500 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டனர், 10,000 பேர் போர்க் கைதிகளாக பிடிபட்டனர். ஜூலை 19, 1954 -ல், பிரான்ஸ்-வியட்நாம் போர் ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது. தன்னை விட பல மடங்கு பெரிய சக்திகளுக்கு எதிராக போர்களை நடத்தி வெல்ல முடியும் என்பதை வியட்நாம் கற்றுக்கொண்டது. அமெரிக்கா தனது முழு பலத்தையும் பிரயோகித்தது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் (கோப்புப் படம்) ஜெனீவா ஒப்பந்தங்களைத் தொடர்ந்து வியட்நாமை ஒன்றிணைப்பதற்கான பாதையைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது வெளியுறவுச் செயலர் ஜான் போஸ்டர் டல்லெஸும் பிராந்தியத்தில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தெற்கு வியட்நாமை ஒரு தனி நாடாக உருவாக்க முடிவு செய்தனர். வியட்நாமில் நேரடியாக அமெரிக்கத் தலையீட்டைத் தொடங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஐசனோவர் ஆவார். அதைத் தொடர்ந்து, கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தது. ஜனவரி 27, 1965 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் கெவர்ஸ் பண்டி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக் நமரா இருவரும் அதிபர் ஜான்சனிடம் வியட்நாமில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவத் தலையீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினர். இப்போது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அது இந்தப் போரில் முழுமையாகக் குதிக்க வேண்டும் அல்லது அங்கிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். பிப்ரவரி 6, 1965 அன்று, ஜான்சன் 'ஆபரேஷன் ஃபிளேமிங் டார்ட்' க்கு ஒப்புதல் அளித்தார். அமெரிக்கப் படைகள் பலமாக இருந்தபோதிலும், வடக்கு வியட்நாமின் ராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டது. ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் லேன் பாம் , "ஹோ சி மின்னின் மூலோபாய தலைமையும் வடக்கு வியட்நாமின் கம்யூனிச ஆட்சியும் வியட்காங்கிற்கு (ஆயுதக் குழு) சண்டையைத் தொடர தேவையான வளங்களையும் கருத்தியல் ஆதரவையும் வழங்கின. அமெரிக்கர்கள் விரைவிலேயே தாங்கள் ஒரு ராணுவப் படையை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மக்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்ந்தனர். இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு புதைகுழியானது, அங்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்க ராணுவம் வியட்நாமில் ஹோ சி மின்னின் துருப்புகளிடம் இருந்து எதிர்ப்பை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை, மாறாக போரின் அறநெறி மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அவர்களது சொந்த நாட்டிலேயே ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் வேகம் பெற்று வந்தது." என்று குறிப்பிடுகிறார். கொரில்லா போர் முறைக்கு முக்கியத்துவம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் வியட்நாம் பெண்கள் (கோப்புப் படம்) போர்க்காலம் முழுவதும், ஹோ சி மின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கும் அசாதாரண திறனை வெளிப்படுத்தினார். வில்லியம் ஜே.டைக் தனது 'ஹோ சி மின் எ லைஃப்' (ஹோ சி மின் : ஒரு வாழ்க்கை ) என்ற நூலில், "போரின் போது வடக்கு வியட்நாமின் உறுதியைப் பேணுவதிலும், தேசியவாதம் மற்றும் சோசலிசம் என்ற பதாகையின் கீழ் வியட்நாம் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஹோவின் தலைமை முக்கிய பங்கு வகித்தது. மோதல் குறித்த அவரது புரிதல் மற்றும் கடினமான காலங்களில் அவரது உறுதியான தலைமை ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன." என்று எழுதுகிறார். ஹோ சி மின்னின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் கொரில்லாப் போருக்கு அளித்த முக்கியத்துவமாகும். வியட்நாம் போன்ற காடுகள் சூழ்ந்த நாட்டில் வழக்கமான போர் நடத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். கிராம மக்களுடன் வியட்காங் வீரர்கள் கலந்து அமெரிக்க வீரர்களை திடீரென தாக்கி காடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் மறைந்து விடுவது என்பதே அவரது உத்தியாக இருந்தது. அமெரிக்க வீரர்களுக்கு இந்த வகை போருக்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சோவியத் தலைவர்களுடன் ஹோ சி மின் ஹோ சி மின்னின் வெற்றிக்கு மற்றொரு காரணம் சோவியத் யூனியனும் சீனாவும் வழங்கிய முழு ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாகும். 1957 -ல், ஹோ சி மின் சீனா சென்றார். முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்ற நூலில் , "ஹோ பெய்ஜிங் சென்ற போது, மா சே துங் முதல் சூ என் லாய் மற்றும் லியு ஷாவோ சி வரை சீனாவின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றனர். செருப்பு அணிந்து கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார். அவர் வெளியில் இருந்து மிகவும் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அவரது எலும்புகள் இரும்பைப் போல வலுவாக இருந்தன. 1953 -ல் ஸ்டாலின் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாஸ்கோவில் அவரை ஹோ சி மின் சந்தித்தார்" என்று குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, ஹோவிடம் கேட்டார், இந்த நாற்காலிகளில் ஒன்று தேசியவாதிகளுக்கும் மற்றொன்று சர்வதேசியவாதிகளுக்கும் சொந்தமானது. இவற்றில் எதில் நீங்கள் அமர விரும்புகிறீர்கள்? 'தோழர் ஸ்டாலின், நான் இரண்டு நாற்காலிகளிலும் அமர விரும்புகிறேன்' என்று ஹோ பதிலளித்தார். ஹோவின் புத்திசாலித்தனத்தை ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். ஹோ சி மின் மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வழியாக ரயிலில் ஹனோய்க்குத் திரும்புகையில், தன்னுடன் வந்த மா சே துங் மற்றும் சூ என் லாய் ஆகியோரிடம் இந்த சம்பவத்தை விவரித்தபோது, ஸ்டாலினிடமிருந்து எதையோ பெறுவது சிங்கத்தின் வாயிலிருந்து இறைச்சியைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்." என்று வில்லியம் டைக் எழுதுகிறார். 79 வயதில் மரணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1958-ல் ஹோசிமின் இந்தியா வந்த போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் காட்சி ஹோ சி மின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் அபிமானி. நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை ஹோவை சந்தித்தார். 1954-ல் ஹனோயில் ஒரு முறையும், 1958-ல் டெல்லியில் ஒரு முறையும், ஹோ சி மின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்தபோது சந்தித்தார். அதே பயணத்தின் போது, ஹோ சி மின்னை இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சந்தித்தார். தனது சுயசரிதையான ராசிடி டிக்கெட்டில் அவர், "ஹோ சி மின் என் நெற்றியில் முத்தமிட்டு, 'நாம் இருவரும் வீரர்கள். நீங்கள் பேனாவால் சண்டையிடுகிறீர்கள். நான் வாளால் போரிடுகிறேன்" என்று கூறியதாக குறிப்பிடுகிறார். 1969-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நோய் தீவிரமடைந்தது, செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர். அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். வியட்நாமுக்கு 121 நாடுகள் இரங்கல் செய்திகளை அனுப்பின. அமெரிக்கா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நாள் வியட்நாம் மீது குண்டு வீசுவதை நிறுத்தியது. அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1975- ல் அமெரிக்கா அவரது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgj14l5jqqqo
  23. அண்ணை, எனக்கு மனதில் படுவது ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் தனது இறுதி முடிவை உணர்ந்து அமர்ந்து தியானம் செய்ய உயிரோடு சமாதி புதைத்துவிட்டார்கள்.! மரணித்த ஒருவரின் கால்களை இவ்வாறு மடக்கி உட்கார வைக்க முடியாது என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.