Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியை மறந்திட்டீங்களோ அவர்களை மறந்துவிட்டதால்தான் வேம்படிக்கு முன்னாலே போய் நடனம் ஆடியிருக்கிறார்கள் பரியோவான் பழைய மாணவர்களின் குழு ஒன்று..
  2. திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது..
  3. தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் இந்த திரியினை எதிர்பார்த்தது போல தொடரமுடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் இயலுமானவரையில் தொடர்ந்து இணைக்க முயற்சிக்கின்றேன். திருகோணமலை எனக்கு மிகவும் பிடித்த இடம். எனது நெருங்கிய உறவினர் அங்கே இருப்பதால் யாழ்ப்பாணம் போகும் பொழுதெல்லாம் திருகோணமலைக்குப் போவது வழமை. அப்படிப் போகும் பொழுது இரு வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த படங்கள் இவை. இதனைப் பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது?? 2018 2023 திருகோணமலை கடற்கரையில் சூரியோதத்தைப் பார்க்க காத்திருந்த பொழுது .. அமைதியான காலைப்பொழுது..
  4. அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது..
  5. கெட்டிக்காரியோ இல்லையோ தெரியாது ஆனால் என்னோடு வந்தவர்களுக்கு ஏன்டா இவளோடு வந்தோம் என்றளவிற்கு காடுமேடு எல்லாம் சுத்தவைத்துவிட்டேன்😊. எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி அங்கிள்! அப்படியானால் இந்த இடத்திற்குப் போனால் இன்னமும் நிறையே கண்முன் வரும்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இதனை வாசிக்கும் பொழுது இந்தப்பாடலே நினைவிற்கு வந்தது.. மிக்க நன்றி.. மிக்க நன்றி அக்கா!
  6. நான் இங்கே இருந்து கொண்டு அங்கே இருப்பவர்களில் குறை கண்டுபிடிப்பதாக யாராவது நினைக்கக்கூடும்.. உண்மையில் அங்கே உள்ளவர்களிடம் வலு, திறமை இருந்தும் வீணாகப் போகிறது என்பதுதான் கவலை. இப்பொழுது அங்கே அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை, சட்ட நடைமுறைகளை வைத்து முயற்சிகளைச் செய்யலாம்.. ஆனால் ஒருவர் ஒரு விடயத்தை தொடங்கினால் அதையே மற்றவர்களும் செய்யத் தொடங்குவது. கேள்வி அதிகம் இல்லாத இடத்தில் அதிக வழங்கல்கள் இருந்தால் நட்டம் யாருக்கு என்பதைப் பற்றி யோசிக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. ஆடம்பர மண்டபங்கள், ஊரின் தன்மைக்கேற்ப இவற்றைக் கட்டலாம்.. அப்படி இல்லை. வங்கியில் கடன் எடுத்து செய்து பின் மாதாந்த தவணைப்பணம் கூட கட்டமுடியாமல் அவதிப்படுவது.. வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய தொழில்களை உருவாக்கலாம்.. இன்றைக்கு சில வேலைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள்.. ஆனால் அவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை. அதே போல இந்த YouTube, நிறைய தெரியாத ஊர்கள், விடயங்களை அறிய முடிந்தாலும், சில தேவையற்ற விடயங்களையும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்.. பாதிக்கப்படுவது யாருடைய தனிப்பட்ட சுதந்திரம்? பிறகு ஒன்று நடந்தவுடன் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? இப்படிப் பல.. அதிகம் கூறினால் வீண் பிரச்சனை அவ்வளவுதான்..
  7. இப்படியான தோட்டங்கள் சரி, ஆனால் திருமண மண்டபங்களை அதிகளவில் கட்டுவதும் அதுவும் மிக பிரமாண்டமாக கட்டி பின் பூட்டி வைப்பதும் தேவையா என நினைப்பதுண்டு.. சில இடங்களில் பார்த்தால் ஒன்றிற்கு இரண்டு திருமண மண்டபங்கள்.. ஆனால் நீங்கள் கூறியது போல விளையாட்டுக்கென வசதி இல்லை.. பாடசாலைகளை, பல்கலைகழகத்தை தவிர நன்றி அங்கிள்… நான் முல்லைத் தீவு கொக்கிளாய் வீதி முடியும் இடம் வரை போயிருந்தேன். கடற்கரைக்கு போக முடியவில்லை.. அனேகமாக இந்த இடங்களுக்கு வெளியாட்கள் போவதில்லைப் போல ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.. அதனால் மேற்கொண்டு கிராமத்திற்குள் போகவில்லை.. தமிழர் இடங்கள் ஆனால் புத்தரும் மெதுமெதுவாக குடியேறுகிறார்.
  8. சில நேரங்களில் பத்திரிகை தலைப்புகளைப் பார்த்தால் ☹️🤯 அதைவிட கவலை பேச்சுத் தமிழின் நிலை..🤐
  9. யாழ்ப்பாணத்திலா??😅.. நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டனத்தில் செய்யுங்கோ.. ஏனென்றால் இரண்டு வகையான ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரு பகுதி இடம்பெயர்ந்து, உரிமையாளர் தெரியாமல் காணி ஒன்றில் வீடு கட்டி காலம் காலமாக வாழ்பவர்கள்(20 வருடங்களுக்கு மேலாக).. காணிச் சட்டம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், அவர்களை திடீரென வெளிநாட்டிலிருந்து போனவர்கள் இது எனது பூர்வீக வீடு etc etc என்று, வீட்டில் உள்ளவர்களை எழும்பச் சொல்லி உள்ளூர் தாதாகளைக் கொண்டு மிரட்டுபவர்கள்.. இன்னொரு பகுதி வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்றுமே தெரியாதவர்கள் என ஏமாற்றுபவர்கள்.. இப்படி பல பகுதிகள், காசு வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நிறுவனங்களை அங்கே உருவாக்கி உள்ளதையும் யாராவது கெடுத்துக் கொள்வார்களா?? கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது. உள்ளூர் பேப்பரில் வாடகைக்கு விடப்படும் என்ற பகுதியில் வரும் வீடுகளின் விபரங்களைப் பார்த்தால், ஏட்டிக்குப் போட்டியாக, தேவையற்ற விதத்தில் பெரிய வீடுகளைக் கட்டி பாராமரிக்க வசதியில்லாமல் வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் போடுகிறார்கள்..🤦🏽‍♀️
  10. மனைவிக்குத் தெரியாமல் தேடிய சொத்துகள், சாதாரணமாகவே கணவன் இறந்தவுடன் மனைவிக்கும், மனைவி இல்லாத விடத்து பிள்ளைகளைக்கும் தானே போகும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் எழுதினீர்கள் அப்படிப் போகாது என்று அதுதான் எனது சந்தேகம். ஏனெனில் கணவனோ மனைவியோ, தனது துணைக்குத் தெரியாமல் சொத்துக்களை வைத்திருந்து இறந்துவிட்டால் உயில் இல்லாதவிடத்து உயிரோடு இருக்கும் துணை, சட்டப்படி சில உதவிகளை நாடி இவற்றை அறியலாம் என்றுதான் நினைக்கிறேன்(இங்கே). இங்கே உயில் இருந்தால் executor இவர்கள் மூலம் வங்கிகளுக்கு, காணி பதியும் தினைக்களத்திற்கு மற்றும் தேவையான அரச தினைக்களங்களுக்கு குறித்த நபர் இறந்ததை அறியத் தரும் பொழுது, இறந்தவரின் பெயரிலுள்ள சகல கணக்குகளும் காணிகளின் விபரங்களும் வழங்கப்படுவதால் தேடிய தேட்டம்/ஒளித்து வைத்திருந்த சொத்துகள் கூட முறையாக பகிரப்படும் என்றுதான் நினைக்கிறேன். இந்த சொத்து விடயம் பெரிய பகுதிகளைக் கொண்டது, சட்ட நுணுக்கங்களும் உடையது. ஆகையால் நான் நினைப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அறிந்து வைத்திருப்பது நல்லதுதான்.
  11. ஒருவர் தனது இறப்பிற்கு பின்பு உறவுகளிடையே ஏதாவது பிரச்சனை வரும் என நினைத்தால்.. அல்லது உயில் எழுத வேண்டிய தேவை இருந்தால் அல்லது உயில் எழுத வசதி கிடைத்தால் எழுதி வைப்பதே நல்லது. எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொல்வேன் wills and probate இருந்தால் இலகு/பாதுகாப்பு. எழுதாவிட்டால் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரலாம். எழுதினால் மட்டும் போதாது அதனை உரியவாறு பதிவு செய்தும் வைத்திருந்தால்தான் நல்லது. ஆனால் பொதுவாக உயிலை எழுத எல்லோரும் விரும்புவதில்லை என நினைக்கிறேன். ஏன் என விளங்குவதில்லை. ஆனால் ஒரு வயதினைக் கடந்தவுடன் அதனை எழுதி வைத்திருப்பதே நல்லது. எனக்கு தெரிந்த ஒருவர் உயிலை எழுதாமல் இறந்து போனார் .. அவர் இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்பே சொத்துக்கள் உரியவர்களிடம் சேர வழி கிடைத்தது.... அதுவரைக்கும் பிள்ளைகளுக்கு இதனால் தேவையற்ற அலைச்சல் இருந்தது.. இதில் வெளிநாடு உள்நாடு என்ற இல்லை. எனக்கு ஒரு சந்தேகம், கணவனே மனைவியோ இருவரில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவிக்குத் தானே இறந்தவரின் சொத்துகள் சட்டப்படி உரித்தாகும் (விதி விலக்காக உயிலில் ஏதாவது எழுதியிருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர). உயில் எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வரும் மக்களிடம் மட்டுமல்ல உள்ளூர்வாசிகளிடமும் அரிது என நினைக்கிறேன்..
  12. “இலங்கையில் உடல் பருமன் கூடியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு” என ஒழுங்காக தலைப்பு எழுதத் தெரியவில்லை..
  13. நன்றி!! இப்பொழுது இதைப்போல செய்வது ஒரு வழமையாகிவிட்டது என நினைக்கிறேன். இன்று WhatsApp groupல் ஒரு videoவைப் போட்டிருந்தார்கள்..பரந்தனில் ஜேர்மன் தமிழர் ஒருவரைப்பற்றியும் அவர் காணி ஒன்று சம்பந்தமாக நடந்துகொண்ட முறையைப் பற்றியும்.. தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மையென தெரியாதமையால் இங்கே இணைக்கவில்லை.. ஆனால் திருமன மண்டபங்கள் கட்டுவது, YouTube videos போல இந்தப் பண்ணைத் தோட்டங்களும் ஒரு trend ஆகியுள்ளதோ தெரியவில்லை..
  14. இப்படித்தான் என்னுடைய homework போகுது சுவி அண்ணா..😄 கிருபனின் cut off date வேறு நடுச்சாமத்தில் முடியும்.. பார்க்கலாம்..
  15. homework ஒழுங்காக செய்து முடித்து பாஸானல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.. BBL பாரப்பது போல IPL பார்ப்பதில்லை.. விருப்பமும் இல்லை.. Justin Langer தனது coach பதவியை விட்டு போனபின் அவுஸ் team சொதப்புவதால் சுவராசியம் குறைந்துவிட்டது. ஆனாலும் பார்ப்போம். நன்றி ஈழப்பிரியன் அங்கிள்.. மற்றும் பையன்!!!
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா!
  17. கடந்த மாதம் வரை இப்படித்தான் உருசிச்சட்டியின் முகப்பு இருந்தது.. இப்பொழுது எப்படி எனத் தெரியவில்லை. தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் போகும்பொழுதுதான் இந்தப் படத்தை எடுத்தேன்.. அதுதான் கொஞ்சம் கோணலாக வந்துவிட்டது..😁 மற்றப்படி நீங்கள் சரியான இடத்திற்குத் தான் சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. நான் நின்றிருந்த சமயங்களில் சில நாள்கள் இந்த வழியால் போயிருக்கிறேன். உணவு எப்படி இருக்கும் எனத் தெரியாது.. அங்கே போனதில்லை. சில நாட்கள்/வாரங்கள் உணவகம் பூட்டியும் இருந்தது .. இப்பொழுது எப்படி எனத்தெரியவில்லை..
  18. இப்பொழுது இப்படியான பண்ணைத் தோட்டங்களை உருவாக்குகிறார்கள். கொக்குத்தொடுவாய்( என்றுதான் நினைக்கிறேன்- கொக்கிளாயிற்கு போகும் வழியில்) உள்ள பரராஜசிங்கம் தோட்டம் கூட அப்படியான ஒன்றுதான். Reecha போல விளையாட்டு வசதிகள் இல்லை ஆனால் அமைதியையும் பருவ காலங்களுக்கு ஏற்ப தமது இடங்களை விட்டு வேறு இடங்களிற்கு பறந்து வரும் பறவைகள், மயில்கள் என பறவைகளை பார்க்கவும் விருப்பம் உள்ளவர்கள்,கடற்கரையை விரும்புபவர்கள், இந்த பண்ணைத் தோட்டத்திற்கும போகலாம்.. இதன் ஒரு எல்லை கடல்.. மறுபுறம் தென்னை மரங்கள்.. இது அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதி.. நான் திருகோணமலைக்கு போய்விட்டு திரும்பும் வழியில் இங்கே போக வேண்டியிருந்தது. இருட்டிவிட்டதுடன் யாழ்பாணமும் உடனே திரும்ப வேண்டியிருந்ததால் வேறு விடயங்களை சேகரிக்க முடியவில்லை.. ஆனால் என் போன்ற இயற்கையையும் அதன் சூழல் தொடர்பான இரசனை உள்ளவர்களுக்கு இந்த இடம் கட்டாயம் பிடிக்கும்.
  19. மிக்க நன்றி ஐலன்ட். தமிழ் இலக்கிய அறிவு இருக்கிறது என்பதற்காக அவரது தவறுகளை மறைக்க முடியுமா இல்லைத்தானே! நான் சிலசமயம் நினைப்பதுண்டு இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் அடைந்ததற்கு இன்னொரு காரணம் இவர்களது காலப்பகுதியில் மக்களிற்கு வேறு பொழுதுபோக்குகள் இருந்திருக்கவில்லை அதனால் இருந்த ஒன்றிற்கு(கம்பன் கழக விழாக்கள் போன்றவற்றிற்கு) போயிருந்திருப்பார்களோ என... 🤔
  20. வரிகள் ஒவ்வொன்றும் பல கடந்த கால நினைவுகளை கூறுகின்றது.. இன்று பலவித கோணங்களில் வாழ்வு போனாலும் எங்களை ஏதோவொரு வழியில் இயங்கவைப்பது இந்தக் கடந்த கால நினைவுகளே.. கவிதைக்கு நன்றி!!
  21. அவுஸ்ரேலியவிற்கு வந்த ஆரம்பத்தில் இப்படியானவர்களைப் பார்த்தவுடன், “ அட இங்கேயுமா” என்று வியப்பாக இருந்தது.. முன்னேறிய நாடு, பின் தங்கிய நாடு என்ற வேறுபாடில்லாமல் இவர்களைக் காணலாம் என்றதை விளங்கிக்கொள்ளமுடிந்தது.. அப்பாவிகளும் உள்ளனர் அதே நேரம் ஆபத்தானவர்களும் இருக்கிறார்கள்.. பல்வேறு காரணங்களால் வீதிக்கு வந்தவர்களும் உள்ளனர்.. நன்றி விசுகு அண்ணா!!
  22. இரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan.. காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே.... கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்? நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..
  23. பகிர்வுற்கு நன்றி கிருபன்.. யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுதே இவரது கூட்டங்களை ரசிப்பதில்லை நம்புவதில்லை.. இங்கேயும் வருகிற மாதம் வரப்போவதாக ஒரு செய்தி🤦🏽‍♀️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.