Everything posted by Kapithan
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்தது 15 வருட ரகசியம் யாரும் பார்த்திராத போட்டோ ஆதாரம்
மேலே கூறப்பட்ட கருத்தைப் பார்த்தவுடன் மனதுக்குள் ஏதோ செய்தது. பேட்டியைப் பார்த்தவுடன்தான் புரிந்தது தாங்கள் அவருடைய பேச்சு வழக்கை வைத்துக் கூறியிருக்கிறீர்களென்று.
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி
வாகன parking தான் பிரச்சனை. Canada வில் வாகனத்திலிருந்து இறக்கிவிடும் பல இடங்களுக்குக் Kiss and Ride என்று பெயருண்டு. பயணிகளை இறக்கிவிட்டு, கட்டியணைத்து ஒரு முத்தத்தைக் கொடுத்தவுடன் வாகனத்தை எடுத்து நகர்ந்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் இறக்கிவிடக் காத்திருக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும். வாகன நெரிசலைக் குறைக்கத்தான் இந்த ஏற்பாடு. 😁
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அதைத்தான் நானும் கேட்கிறேன். இலங்கையின் கொழும்பில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் தேவைகளோ உணர்வுகளோ புரியாது என்று தாங்கள் கூறுவது அங்குள்ள மக்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையில் தலையிடுவதாகாதா? 😁 உண்மையாகவும் இருக்கும், உண்மை இல்லாமலும் இருக்கும். பக்கா அரசியல்வாதியாகிவிட்டீர்கள். 🤣
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
இத்தனை இலட்சம் மக்களின் சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் மாவையரருக்கும் பொறுப்பில்லை என்கிறீர்களா? மரணத்தின் தறுவாயில் இருக்கும் அல்லது மூப்படைந்த மனிதர்களின் தவறுகளைத் தோண்டுவது எங்கள் சமூக வழக்கில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மாவையர் தற்போதும் சிந்திக்கும் ஆற்றலில் குறைபாடு ஏதுமற்றவர். தனது தவறுகளை அவர் ஒருபோதும் ஏற்கவில்லை. தன்னை நம்பிய இனத்தை நட்டாற்றில் கைவிட்டதை ஏற்கவில்லை. அத்துடன் தனது சுயநல அரசியலின் வெளிப்பாடாக தனது மகனையும் அரசியலில் தனது வாரிசாக முன்னிறுத்துபவர். இவை எவையுமே அவர் மனச்சாட்சியற்ற மனிதன் என்பதற்கு போதுமானதுது. இவர்கள் போய்ச் சேருவதுதான் தமிழ் இனத்திற்கு நன்மை பயக்கும். (நொச்சியருக்கு மாவையர் சொந்தமோ? உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? வசப்படுகிறீர்கள் 🤣)
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
Sumanthiran கொடும்பாவி எரிப்பதற்கு ஆயத்தம் செய்கிறீர்களோ? 🤣
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
பூமிக்கும் பாரம், சோற்றிற்கும் கேடாய் இருப்பதைவிட போய்ச் சேரலாம். எத்தனை இலட்சம் மக்களை நடுத் தெருவில் இவரும் இவர்களைச் சேர்ந்தவர்களும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்? எங்கள் மக்கள் சிந்திய இரத்தில் சிங்களத்திற்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு இவர்களுக்கும் இருக்கிறது. போய்ச் சேரட்டும். 😏 தலைவர் தமிழ்சிறீ. 🤣
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
விசுகர், வெளிநாடுகளில் இருந்துகொண்டே நிலத்தில் வாழ்வோருக்கு வகுப்பெடுக்கும் தகுதி புலம்பெயர்ஸ் க்கு இருக்கிறது ஆனால் இலங்கையின் கொழும்பில் வசிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அங்கே வடக்கு கிழக்கில் வசிக்கும் மக்களின் தேவைகள் புரியாது என்கிற தங்களின் புரிதலில் தீயை வைக்க,....🤣
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள். ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு புரியும் என்கிறீர்கள். 😁 கற்பனைகளாலும் புனைகதைகளாலும் வெறியூட்டப்படும் ஒரு இனம் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களுக்குப் பாதகமாய் முடிவதே வரலாறு.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ஸ் களால் இலங்கை வாழ் வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்களா? வரலாற்றை கற்பனைகளால் அல்லது யூகங்களால் எழுத முடியாது.
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன் - கருணா
சிவராம் கொடுப்புக்குள் சிரிப்பார். 😏
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சாரி சாத், உங்கள் கொமடி சகிக்கவில்லை. 😁
-
இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்
எந்தப் புத்தகத்திலும் நன்மையான விடயங்களை எடுப்பதில் தப்பில்லையே? (கொழுத்திப்போடுவோம், எரியட்டும்) 🤣
-
இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்
பாஸ் ஏன் பைபிளைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? அது வெறும் புத்தகம்தானே? 🤣
-
மட்டு. இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற படுகொலைக்கு நீதி கோருகிறார் உயிரிழந்தவரின் சகோதரி
டமில் தேசிய வியாபாரிகள் மூலை முடுக்கெல்லாம் ஓடித் திரிகினம். 😏
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
-
இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
பதற்றம் ஆளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. விடுதலைப் புலிகளால் TELO அழிக்கப்பட்டது ஏன் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது. இவரின் பிள்ளைகள் இந்தியாவில் கல்வி கற்கிறார்கள் என்று அறிகிறேன்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல், தேவையின் அடிப்படையில் + யதார்த்தத்தின் அடிப்படையில் எமது தெரிவுகள், முடிவுகள் அமைய வேண்டும். பஸ் போனபின்னர் கைகாட்டி என்ன பயன்?
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
மிருகங்கள் ஒருபோதும் எந்த ஒரு வாகனத்தையும் மோதுவதில்லை. ஆனால் வாகனங்கள்தான் போய் மிருகங்களை மோதுகின்றன. இங்கே எது எதன் மீது வலிந்து போய் மோதியது என்பதுதான் விடயம்.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
இந்தத் தேர்தலுடன் டமில் அரசியல்வியாதிகள் பாடம் படிக்க வேண்டும்.
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அட பார்ரா,..... தானும் தன்பாடும் எனத் தெருவில போன ஆசாரியக் கூப்பிட்டு, தனக்கு ஒரு ஆப்பை வேண்டிச் சொருகிய கதையாக இருக்கிறது மீராவின் கூற்று. 🤣
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா?
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள் மீது யானைகள் மோதுகின்றன. அத்துடன் புகையிர வண்டிகளும் தடம் புரள்கின்றன. ஆதவா,.....🤣
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இருக்கலாம். ஆனால் குழந்தை பொய் சொல்லாதே,..🤣 குழந்தையும் கடவுளும் ஒன்று அல்லவா,..🤣
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அவரைப் போற்றும் எண்ணம் எனக்கும் இல்லை, போற்றவும் போவதில்லை.. ஆனால் அவருக்குச் சேற்றை மட்யும் வாரி இறைப்பதன் பின்னணியில் இருக்கும் நோக்கத்தை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்குவேன். துணைக்கு ஆள் சேர்க்கிறீங்களா சிறியர்,...... 😂😂 சுமந்திரனுக்கு சேறடிப்பதன் நோக்கம் என்ன? என்று கேட்டால் கேட்பவர் சுமந்திரனின் அல்லக்கை, செம்பு,. புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் தேசிய வியாபாரத்தைக் கேள்விக்குள்ளாக்கினால் துரோகி,.. கவனமாக உற்றுப் பார்த்தால் இறுதியில் இரு பகுதியினரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 😁
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தற்போது புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் ஒரே நோக்கம் சுமந்திரனை நாறடிப்பதுதான். அதனை அவர்கள் கன கச்சிதமாகச் செய்கிறார்கள். இதில் யாழ் களமும் பிரதிபலிக்கிறது. கடந்த சில வாரங்களாக யாழ் களத்தில் புலம்பெயர்ஸ் களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடயங்களை நோக்கினாலே எல்லாம் தெளிவாகத் தெரியும். யாரும் எதனையும் இங்கே இணைக்கலாம் என்பது உண்மைதான். ஆனாலும் சேறடித்தல் ரூ,...மச் கைப்புள்ளைக்கு ......சாரி ரங் ஸ்லிப்பாயிடிச்சு,...கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? 🤣