Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. நாங்கள் கடல் எல்லை தாண்டி இந்தியாவுக்கு ஓடியதை மறந்துவிட்டோம் போல. வெளிநாட்டுக்கு வந்த பலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக சென்று பின் தூரதேசம் சென்றார்கள். இங்கே உள்ள பல கருத்துக்களை/வாதங்களை பார்த்தால் இலங்கை அகதிகள் விடயத்தை இந்தியா எப்படி கையாண்டாலும் நியாயம் கேட்கும் அருகதை எமக்கு இல்லை போல. ஏன் என்றால் சட்டவிரோதமாக புகுந்தவர்கள் எப்படி பொதுவான செளகரியத்தை/மரியாதையை எதிர்பார்க்கலாம்?
  2. முதலில் அந்த 12 பக்கங்கள் அடங்கிய பத்திரியை இணையுங்கள். உள்ளடக்கத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்வோம். உள்ளே நடுப்பக்கத்தில் சஜித் தேர்தல் பிரச்சாரம் படம் போட்டு உள்ளதோ என்னவோ. 😁 தவிர, சுமந்திரன் ஐயா ஆங்கில புலமை உடையவர். உள்ளே ஆங்கிலத்திலும் இரண்டு பத்தி காணப்பட வாய்ப்பு உள்ளது. 😁 யார் என்ன சொன்னாலும் ஐயாவுக்கு மனதில் எவ்வளவு வைராக்கியம். எவ்வளவு செல்ப் கொன்பிடன்ஸ். அதை பாராட்ட வேண்டும். 😁 பாடசாலை சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், வகுப்பு பிரிவுகள் இடையே சமூக ஊடக குழுமங்களில் உள்ள நிர்வாக முத்திரைகளுக்கு போட்டியிட்டு அடிபடும் இந்த காலத்தில் தனது அரசியல் எதிர்காலத்தின் ஸ்திரத்தன்மைக்கு சுமந்திரன் ஐயா எடுக்கும் முயற்சிகளை குறை சொல்வதற்கு இல்லை. நாட்டில் உள்ள மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்து அரசியல் செய்கின்றார்கள் என நம்புகின்றேன்.
  3. கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பற்றி பல புதிய தகவல்கள் கூறப்படுகின்றன. போகுற போக்கை பார்த்தால் இதன் பின்னால் உள்ளவர் செலன்ஸ்கியோ என்று முடியப்போகுதோ? ஆக மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதைதானோ.
  4. சுமந்திரம்; ஓசை : 01 மந்திரம் : 01 பக்கங்கள் : 12 பத்திரிகையின் ஒரு பீ டி எவ் கோப்பை இணையுங்கள் உள்ளே என்ன எழுதப்பட்டு உள்ளன என அறிய ஆவல். வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்திட்டங்கள், அறிக்கைகள், நிகழ்வுகள், அவற்றின் நிழற்படங்களின் தொகுப்புக்களை கையேடாக மாதம் ஒரு தடவையோ அல்லது காலாண்டுகளுக்கோ வெளிவிடுவார்கள். ஆனால், இலங்கை மக்களுக்கு இவை புதிய விடயம்தான் போல. சிங்கள அரசியல்வாதிகளும் இப்படி செய்கின்றார்களோ? சுமந்திரம் மூலம் மக்கள் ஏதாவது பயன் பெற்றால் வாழ்த்துக்கள்! 😁
  5. ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா?
  6. பிடிபட்ட ஆள் பைடன் கமலா அக்காவின் அடிப்பொடி போல உள்ளதே. பைடன் இடதுசாரிகளுக்கு தோற்கப்போகின்றோம் என்று பயம் வந்து விட்டதோ?
  7. சிங்கத்திற்கும் கமலா அக்காவிற்கும் இடையிலான போட்டியில் சிங்கத்தின் நிலையை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு இந்த கொலை முயற்சி உதவப்போகின்றது.
  8. கட்டுரையாளர் ஒரு விடயத்தை உணர தவறி உள்ளார். பிரதான வேட்பாளர்கள் மூவருக்குமே பெருன்பான்மை இனத்தவரின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதே முதல் இலக்கு. அதில் அவர்கள் தவறுவார்களாயின் வெற்றி பெறுவதற்கான அத்திவாரமே இல்லாமல் போகும். எனவே, பெருன்பான்மை இனத்தவரின் பசிக்கு தீனி இட்டபின்னரே ஏனையோருக்கு வாக்குறுதி கொடுக்க முடியும். தமிழ்மக்கள் விடயத்தை முதலாவது பணியாக எடுக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எப்படி தமது வாக்குகளை வெவ்வேறு தரப்பினருக்கு வழங்குகின்றார்கள் என்பதே நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் உற்றுநோக்கும் முக்கிய விடயம். தேர்தல் முடிவு பீத்தல்களை நிச்சயம் வெளிக்கொண்டுவரும். வெவ்வேறு தமிழ் தரப்பினரிடையே யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது, தமிழ் மக்கள் யார் பேச்சை கேட்கின்றார்கள், எந்த தரப்பு உதாசீனம் செய்யப்படுகின்றது என பல்வேறு விடயங்களைஅறிய, தமிழ் மக்களின் தற்போதைய மனநிலையை காண்பிக்கும் பாசித்தாள் சோதனை இந்த ஜனாதிபதி தேர்தல். மூக்குடைபடுபவர்கள் எப்படி சப்பைக்கட்டு கட்டி தோல்வியை நியாயப்படுத்துவார்கள் என்பதையும் இப்போதே நாங்கள் ஊகிக்கவும் தொடங்கலாம்.
  9. எழுதியபோது 85 என கை போனதாகவே நினைவு 😁 போலிஸ் வேலையை செய்கின்றார்கள். ஆனால் துரித கதியில் வேலையை செய்ய வைக்க கைக்குள் லட்சுமிதேவியை காட்டவேண்டி உள்ளது. உண்டியல் சட்டவிரோதமானது அல்லவே? கனடாக்காரர் காணி வாங்குவதற்கு கையில் 85 இலட்சம் கொண்டுவந்தது ஒரு பிரச்சனையாக வராது என எண்ணுகின்றேன். செய்தியில் விபரிக்கப்பட்ட தரகன் முன் பின் அறியப்பட்ட ஆளோ/சொந்தக்காரனோ/நண்பனோ/ஊர்க்காரனோ யார் அறிவார்!
  10. போலிசில் முறைப்பாடு போட்டாயிற்று சரி. ஆட்டையை போட்டது 84 லட்சங்கள். தரகன் ஏனென்சி மூலம் பிளைட்டில் ஏறீட்டான் என்றால் எங்கை தேடி அவனை பிடிப்பது?
  11. உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா? குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?
  12. நிறைய களப்புக்கள், குடாக்கள், முனைகள் எல்லாம் ஒருங்கமைந்த கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த நல்லதொரு திட்டம் போல் தோன்றுகின்றது. நல்ல பறப்பிற்கும், பயண அனுபவத்திற்கும் காலநிலையும் இடம்கொடுக்க வேண்டும். கட்டண விபரத்தை அறிய ஆவல். வெளிநாட்டு சுற்று பயணிகள் முக்கியமாக எங்கள் வெளிநாட்டவர் நிச்சயம் இந்த சேவையை பெற்றுக்கொள்வார்கள். சாமத்தியவீட்டு, கலியாணவீட்டு சூட்டிங்க் பார்ட்டிகளுக்கு விலைக்கழிவு கொடுக்கலாம். 😁
  13. அந்த பிள்ளை தன்னால் முடியுமானதை செய்து பெயர் எடுத்துள்ளது. சப்பாத்து அடுக்குவது உங்களுக்கு சரிவராவிட்டால் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்கலாமே. ஐடியா தேவை என்றால் தரலாம்.
  14. மாவீரர்களை வைத்து நிலைப்பாடு எடுப்பது என்றால் தேர்தலை புறக்கணிப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதோ சரியான முடிவாக அமையும்.
  15. அதிகாரிகள் கைகளில் ஒரு ஐயாயிரத்தை வைத்தால் கடவுச்சீட்டை துரித கதியில் தருவார்களோ என்னமோ.
  16. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள்.
  17. 70 வயது நபர் 25 வயசு பொண்ணுடன் கதாநாயகனாக ஒரு படம் நடித்தால் அதை பார்த்து மகிழக்கூடியவர்கள் 52 வயது நபர் 25 வயசு பெண்ணிடம் மயங்குவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்? நமது 52 வயசு சுவிஸ் கீரோவை எங்கள் யூரியூப் தம்பிமார் பேட்டி கண்டு இணைத்தால் பலருக்கும் பிரயோசனப்படும். பல் உள்ளவன் பகோடா சாப்பிடுறான்.
  18. வழமையில் நன்கொடை எனும் பெயரில் ஓட்டை உடைசல்களை அன்பளிப்பு செய்வார்கள். ஆனால் இது புதிய விமானம் போல் உள்ளதே. இந்தியாவை கண்காணிக்க/அமெரிக்காவுக்கு தகவல் பெறுவதற்கு இது பயன்படுமோ.
  19. நான் சாமானிய சிங்கள பெருன்பான்மை இனத்தவர்களுடன் உரையாடி பார்த்த அளவில் இவருக்கே அதிக ஆதரவு உள்ளதுபோல் தெரிகின்றது. ஆனால், தில்லாலங்கடி வேலைகள் பார்த்து ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  20. இஸ்ரேல் விவகாரம் சம்மந்தமாக சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எப்படி செல்கின்றது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.