Everything posted by putthan
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
பட்டிலந்த விவகாரம் பேச முடியும் என்றால்,சிங்கள பயங்கரவாத ஜெ.வி.பி யினரின் செயல்களை அங்கிகரிக்க முடியும் என்றால் இனஅழிப்பும் பேசப்பட வேண்டும்...இவற்றை பேசாமல் பக்க சார்பாக பேசுவது என்பது சிங்கள அதிகார வர்க்கத்தின் அதிகார போக்கு ... எனது பார்வையில் ...இடதுசாரிகள் செய்தால் சரி மற்றவர் செய்வது எல்லாம் பிழை என வாதாட வேண்டிய வசியமில்லை... மலையக தமிழர்,சாதி வேறுபாடு,வர்க்க வித்தியாசம் என கூறுவது முப்போக்கு என இலங்கை கொம்னிஸ்ட் கட்சி காலத்திலிருந்து இன்று வரை சொல்லிகொண்டே இருக்கின்றோம் ..ஆனால் இன சுத்திகரிப்பில் எந்த வித மாற்றமும் இல்லை ...
-
தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன?
இந்த அறிக்கை இந்த நேரத்தில் வெளிவந்தமைக்கு முக்கிய காரணமே அதுதான்
-
இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் - ஜெனிவாவில் அனந்தி சசிதரன் வலியுறுத்து
அமெரிக்கா இம்பீரியலிசத்துக்கு எதிராக போராடும் அமைப்புக்களிடம் உதவிகள் கேட்கலாம் சகோதரி...
-
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்
அமெரிக்கன் பயங்கரவாத தடைச்சட்டம் போட்டு கொழும்பில் வந்து கைது செய்ய மாட்டான் என்ற துணிவில் தூதரகத்திற்கு முன் நின்று போராடுகின்றனர் .சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தான் குரல் கொடுக்க முடியும்...சிங்களவர்கள் சித்திரைவதைசெய்யப்பட்டு கொல்லப்படால் மட்டுமே சிறிலங்காவில் விசாரனை செய்யப்படும்...ஏனைய இனங்கள் அமைதி காக்க வேணும் ...அமெரிக்காவுக்கு எதிராக,பிரித்தானியாவுக்கு எதிராக ஏனைய இனங்கள் குரல் கொடுக்கலாம்... "அமெரிக்கா இம்பிரியலிசம் " எங்கயோ கேட்ட குரல் .... சிறுபான்மையினர் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ,பெரும்பான்மயினர் ட்ரம்ப்பிடம் கடன் கேட்டு நாட்டை அபிவிருத்தி செய்வினம்
-
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, அனைத்து மக்களினது விடுதலையுடனும் ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்
எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டின் நிலத்தை காப்பாற்ற குரல் கொடுக்கினம் பாருங்கோ ...தமிழர் பகுதியில் உள்ள விகாரை நிலத்தை காப்பாற்ற ஆட்கள் இல்லை ஆனால் அமெரிக்கா தூதரகத்துக்கு முன்பு போராட்டம் ...அவ்வளவு ஜனநாயகம் சிறிலங்காவில் இருக்கிறதாம் என படம் காட்டியினம்.
-
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —
கள யதார்த்தம்
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
வடக்கு கிழக்கை சேர்ந்த குமாரசூரியர் (சுதந்திரகட்சி) தேவநாயகம்,மகேஸ்வரன், (ஐ.தே.க) வியாழேந்திரன்,பிள்ளையான்,கருணா(மகிந்தா அணி) டக்கிளஸ் (சகல கட்சிகளிலும்) அந்த வரிசையில் இந்த அமைச்சரும் ஜெ.வி.பி யினரினால் உள் வாங்கப்பட்டுள்ளார் ....இவரும் அபிவிருத்தி அபிவிருத்தி என காலத்தை ஓட்டி சிங்கள ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்துவார் வாழும் நாட்டில் அனுமதி பெற்றுத்தான் கோவில் கட்டுவோமல்ல🤣 .அனுமதி பெறாமல் கட்டினால் வந்து உடைத்து போடுவாங்கள் சட்டம் இருக்கு......நாம் வாழும் நாடுகளில் தேர்தலில் நிற்க விடுகிறார்கள் நிற்கின்றோம்😅
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
தமிழ் தேசியத்தை இல்லாது பண்ண ஜெ.வி.பி யினரால் உள்வாங்கப்பட்ட ஒர் டமிழர் ...இன்று தமிழர் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்வது தமிழர் நிலத்தை படிப்படியாக இல்லாமல் பண்ணும் முயற்சி என நான் கருதுகிறேன்.தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு நேற்றைய பாராளுமன்ற உரையிலும் யாழ் நூலக எரிப்பு,பழைய இனக்கலவரங்களை பேசி ஐ.தே.க கட்சியினரை குற்றம் சாட்டுகிறார் ...இவை யாவற்றையும் விட "தமிழ் இன அழிப்பு" "இன படுகொலை" மிகவும் பாரதூரமானது அது பற்றி அவர் பேச வில்லை...இதுவரை காலமும்... தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு பக்கசார்பாக உள்ளது... சில நுனி நாக்கு ஆங்கில தமிழ் அரசியல்வாதிகள் செய்த செயலை ,இவர் நுனி நாக்கு சிங்கள தமிழ் அரசியல்வாதியாக செய்யப்போகின்றார்
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
முன்பு றோயல் கல்லூரி டமிழ்ஸும்,சென்ற் தோமஸ் டமிழ்ஸும் ,கருவாக்காட்டு டமிழ்ஸும் உடரட்ட சிங்களவர்களும் இரண்டர கலந்து ஆங்கில ஆட்சி செய்தனர் ....அழிந்தனர் தமிழர்களை...கொழும்பிலிருந்து தமிழர் பகுதிக்கு சென்று அரசியல் செய்தனர்.. இப்ப அனுராதபுர அப்புஹாமியும் பண்டாரவளை சந்திர சேகரவும் கொழும்பிலிருந்து சென்று தமிழ்ர் பகுதியில் ஆட்சி செய்கின்றனர்...
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
இதில பகிடி என்னவென்றால் போராட்ட காலத்தில் அடக்கி வாசித்த அரசியலே தெரியாத சிலர் முன்வந்து அரசியல் பேசுவது தான் ...ஒரு காலத்தில் இவர்களின் மூத்தோர் கொழும்பிலிருந்து ஐ.தே.க க்கு செம்பு தூக்கியவர்கள் ..இப்பொழுது அவர்களின் வாரிசுகள் புலம்பெயர் பிரதேசத்திலிருந்து செம்பு தூக்கின்றனர். இந்த கூட்டத்தில் புதிதாக மலையக இடதுசாரிகள் சிலரும் கலந்துவிட்டார்கள் ...அவர்கள் வீட்டில் தமிழ் பேசுவார்கள் பாடசாலையில் சிங்களத்தில் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் ...இவர்களின் நுனி நாக்கில் சிங்களம் நன்றாக வரும் ..இவர்களை வைத்து தான் இப்பொழுது ஜெ.வி.பி காய் நகர்த்துகின்றது. எப்படி ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் அப்பாடக்கர் என நினைத்தார்காளோ அது போல இப்ப ஆட்சியாலர்களை குளிர பண்ண சிங்களம் அப்பாடக்கர் என வாதிடுவார்கள் . முன்னைய ஆட்சியாளர்கள் ஆங்கிலம் நுனி நாக்கில் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சியை நடத்தினார்கள் (அது முதலாளி வர்க்க ஆட்சியாம்)..தற்பொழுது நுனி நாக்கில் சிங்களம் பேசும் தமிழர்களை வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.(இது தொழிலாளி வர்க்க ஆட்சியாம்) மொத்தத்தில் தமிழ் அடையாள அழிப்பு ஆட்சி ...
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
"திஸ்ச" விகாரையை பிரபல ப்டுத்துவதின் முக்கிய நோக்கம்... அண்மையில் ஒர் வீடியோ கிளிப் பார்த்தேன் அம்பாறையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தமிழில் (பழங்கால தமிழ்)திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளதாம் அதை சிங்கள ஆய்வாளர்கள் இராவணின் பெயர் என சொல்லி கொண்டு திரிகின்றனர் ..அது தான் இராவணனை சிங்களவனாக்கி ....தமிழர் பிரதேசத்தில் பெள்த்தம் இருந்தது என சொல்ல வருகின்றனர்...."திஸ்ஸ" என்பது தீவிரமாக மக்கள் மத்தியில் பரப்பப்டுகிறது ,,,, புத்தரை ஒர் வாழ்க்கை குருவாக ஏற்க தயார் ஆனால் சிங்கள் ஆக்கிரமிப்புக்கு புத்தரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது ...
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
சந்திரசேகர என்ற தமிழ் அமைச்சர் தமிழ் படிச்சதனால் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பம் காணாது என்று இன்னும் பத்தாயிரம் பிக்குகளா தாங்காதடா சாமி ...
-
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாதுங்காவை சுட்டு கொலை செய்தவர்கள் ,அவர் ஏன் சுட்டு கொல்லப்பட்டார் போன்றவற்றையே இன்னும் விசாரிக்க முன்வராத சந்திரிக்கா எப்படி ஏனைய் விடய்களை விசாரித்திருப்பார்.. புலிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்ட விஜய குமாரதுங்காவை ஏன கொலை செய்தனர் ?செம்பரத்தை பூ அணியினர்
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
நல்ல விடயம் ,வரவேற்கப்பட வேண்டியது ..... தமிழ்கட்சிகளை அழிப்பதற்கு அனுரா மட்டுமல்ல ஏனைய தேசியகட்சிகளும் முன்னுக்கு நின்றவர்கள் ...அனுராவுக்கு பஞ்சமும் பட்டினியும்,புலம்பெயர் தமிழர்கள் சிலரின் முன்னாள் சிவப்பு சிந்தனை குழுவினரின் ஆதரவும் கிடைத்தமை மற்றும் தமிழ் தேசியகட்சிகளின் பிழைகள் சிலவும்
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
❤️...நல்லதே நடக்கட்டும்
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
ரோட்டு போட்டு தான் வெள்ளையன் எங்களை அடிமையாக்கினவன் 🤣வேணுமென்றால் அவையள் மத்திய அரசில இருக்கட்டும் ...உள்ளூராட்சியில் தமிழ் தேசிய கட்சிகள் வெற்றியடைந்தால் சிறப்பு ...எல்லாம் காலம் பதில சொல்லட்டும்
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
இவருக்கு புகுந்து விளையாடுமளவுக்கு செல்வாக்கு இல்லை ...அதுவும் தேர்தல் திணைக்களத்துடன்... தமிழ்தேசிய விரோத கருத்து விடயத்தில் மட்டும் இவரை சிங்களவர்கள் இவரை அரவணைப்பினம் இவரும் சின்ன பிள்ளைமாதிரி துள்ளிகுதித்து கொண்டு அறிக்கை விடுவார் விசயம் தெரிந்திருக்கும் பேசாமல் இருந்திருப்பார் ....சின்ன வயசில நாங்கள் சில நேரம் ..கிடங்கு இருப்பது தெரிந்தாலும் நண்பர்கள் போய் விழுவாங்கள் என் தெரிந்தாலும் சொல்லாமல் இருந்து விட்டு விழுந்த பின்பு சிரிப்பது போல ...
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
என்.பி.பி வருவதை விட டக்கிளஸ் வெற்றி பெறுவதை வரவேற்கிரேன் இது எனது தனிப்பட்ட விருப்பு..காரணம் கள யதார்த்தம் அறிந்தவர்கள் ...மத்தியில் கூட்டாசி மாநில சுயாட்சி சிங்கம் 😅
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
சிறிலங்கா தூதுவர்களை அழைத்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேணும் என்ற ஒர் தரப்பு நீண்ட நாட்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது..."தமிழ்"என்ற சொல்லாடல் இல்லாமல் அமைப்புக்களை உருவாக்க வேணும் என்று விவாதிப்பவர்களும் இருக்கிறார்கள் ... உதாரணத்திற்கு " தமிழ் பொறியியாலாளர் சங்கம்", "தமிழ் மருத்தவர் சங்கம் " என பெயர் இருந்தால் ஒரு குழுவினர் சொல்லுவினம் "தமிழ்"என இருப்பதை எடுத்துவிட்டு சிறிலங்கா என வைப்போம் என்று....இவர்கள் அநேகர் கொழும்பு ,பேராதரனி போன்ற பல்கலைகழகங்களில் பயின்றவர்களாக இருப்பார்கள் ...அத்துடன் அவர்களுடன் கல்வி கற்ற சிங்கள நண்பர்கள் இவர்களின் அரசியல் ஆசான்களாக இருப்பார்கள் ... டி.எஸ் செனநாயக்க முதல் மகிந்தா,ரணில்,சந்திரிக்கா,இன்று இருக்கும் நம்ம மீட்பன் டோழர் அனுரா வரை தமிழர் விவவாகாரத்தில் ஒரே கொள்கை உடையவர்கள்....இவர்களின் "தமிழர்களை அழித்து அரவணைக்கும் கொள்கை" காலம் பூராகவும் தொடர்கின்றது ...அவர்களுக்கு உதவ எம்மவர்களில் சிலரை வைத்துக்கொள்வார்கள் ...இவர்கள் அதி சிறந்த கல்விமான்களாக இருப்பார்கள்
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
சரி ..இது ஒர் நல்ல படிப்பினை ..அடுத்த மாகாண சபை தேர்தலில் ஒழுங்காக நிரப்பி வெற்றியடையட்டும்... வாக்காளர்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும் வாக்கு போடுவதற்கு..."தமிழ் தேசியம்" என்ற பெயரில் எத்தனை கட்சிகள் ? ஆகவே இந்த தடவை இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஒழுங்காக/குழப்பமில்லாமல் தமிழ் தேசிய கட்சிகள் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற வேண்டும்..ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே...
-
அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்!
எங்கன்ட பிரதமர் தோழி ஹரனி அமரசிங்காவிடம் ஏதாவது உதவிகளை ட்ரம்ப் கேட்கலாம் ...அவரும் க்லவி கொள்கையை மாற்ற வேணும் என சொன்னவர் ..
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
நல்ல முடிவு ...நீங்கள் வாதாடி வெற்றியடைந்தால் உங்களுடை கட்சியின் வாக்குகள் குறவைடையும்..ஏனைய கட்சிகள் வெற்றியடைந்து விடும்...😅
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
துறவிக்கு வாழ்த்து சொல்லுவோம் ... சிங்கள துறவி தமிழ் படித்து பட்டம் பெற்று விட்டார் ஏன் தமிழர்கள் சிங்களம் படித்து சிங்களவராக கூடாது என இனி கருத்து வரும்.. துறவி அடுத்த மாகாணசபை தேர்தலில் ஜெ.வி.பி கட்சி சார்பில் தமிழில் பிரச்சாரம் செய்வார்,தமிழ் தேச பந்துக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று உருண்டு விளையாடி வாக்கு கேட்பினம் ...
-
அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி
அவர்கள் கேட்க மாட்டார்கள்...இனபடுகொலை,இனக்கலவரங்கள் (ஒன்றா இரண்டா என்னில் அடங்காதவை)கேட்டார்களா? இல்லை இதுவரை செய்த சிறுபான்மை இனத்திற்கு எதிரான அட்டுழியங்களை நியாயப்படுத்தி அறிக்கை விட்டார்கள் ... சிறிதரன செய்த செயல் வர வேற்கப்பட வேண்டியது
-
சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ
இலங்கை என்ற நாட்டை உருவாக்கி அதை ஜனநாயக நாடு,பல்கலாச்சார நாடு என பிரச்சாரம் செய்து கொண்டு 200 வருடங்களுக்கு மேலாக நீங்கள் கைக்குள் வைத்திருப்பது உலகம் அறிந்த உண்மை... உங்களை விட மகா பயங்கரவாதிகள் உலகில் இல்லை (இப்படி எழுதினால் பிறகு விசா தரமாட்டாங்கள்) இதில பயங்கரவாதம்,கடற்கொள்ளை,ஆயுத பெருக்கம் ,கடத்தல் ....போன்றவற்றை கட்டுப்படுத்தபோயினமாம்... குழப்பங்காசி கூட்டம் இருக்கும் வரை சிறிலங்கா ஆட்சியாளர்களின் காட்டில் மழை தான் ...