Everything posted by putthan
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நாங்கள் எல்லாத்தையும் பொதுவுடமையாக்க அரசியலுக்கு வந்தானாங்கள் கண்டியளோ ....உந்த விமானங்களின் வாலில் சிவப்பு நட்சத்திரமும்,உடம்பு பகுதியில் அரிவாள்,சுத்தியல் சின்னம் பதிவது எங்கள் இலட்சியத்தில் ஒன்று கட்டிய மனைவியை தவிர மற்றெல்லாம் பொதுவுடமை...எதுவும் எவருக்கும் சொந்தமில்லை
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
😅
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
உண்மை தான் ...கொஞ்ச நாளாக சிவப்புதொப்பியை கழட்டி வைத்துள்ளனர்...பிரதமரும் கலர் சேலைகள் கட்ட தொடங்கி விட்டார்...
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
இனித்தான் எம்மவர்கள் சிறப்பாக அரசியல் செய்ய வேண்டும் ,,சிறிலங்கா தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்(ஜெ.வி.பி) தங்கள் செல்வாக்கை சிறிலங்கா ஜனாதிபதியிடன் பயன்படுத்தி தாயக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.....மாகாணசபையை மக்கள் ஆளும் சபையாக மாற்ற வேணும் என்ற கோரிக்கையை வைக்க வேணும் ..சிறிலங்கா ஜனாதிபதி மறுக்க முடியாது ... அதே போல தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியாவிடம் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முதல் முழு அதிகாரம் கொண்ட ஆட்சியை அமைக்க உதவ வேணும் எண்டு ...30 வருடங்களாக செய்யாத செயலை மூன்று மாதத்தில் செய்து காட்ட சொல்லவேணும்... இந்தியாவின் சொல் கேட்காமல் நம்மவர்கள் ஆளுனரின் சொற்படி இனிமேல் நடக்க வேணும் அப்பதான் இந்தியா விழித்துக்கொள்ளும்....இந்தியா அனுராவுக்கு செம்கம்பல வரவேற்பு கொடுத்து உறவு வளர்க்கின்றனர்...
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
இந்தியா இதை பெரிதாக கண்டு கொள்ளப்போவதில்லை ...சீனாவும், இந்தியாவும் நண்பேன்டா வட்டதில் தான் இருக்கின்றனர் ...அமேரிக்காவை விட அதிகமான பணத்தை கொடுத்து அனுரா அமெரிக்கா பக்கம் சாயாம்லும் ,அமெரிக்கா தளங்கள் சிறிலங்காவில் வராமல் பார்த்து கொள்வார்கள் ... ...அனுராவுக்கு பிரச்சனை பிரிக்ஸ் உடன் இணைவதா அமெரிக்கா மேற்குலகுடன் கை கோர்ப்பதா என்பது தான்.... ஆட்சி மாற்றங்கள் நடை பெறுகின்றது தலைவர்கள் வெளிநாடு செல்கின்றனர் ...அந்த நாடுகளும் உதவிகளை வழங்குகின்றது ...ஆனால் நாடு உருப்பட்ட மாதிரி தெரியவில்லை ...இன்னும் 5 வருடங்களின் பின்பு புதிய தல வந்தாலும் அவரும் இதே போல வெளிநாடு செல்வார் உதவிகளை பெறுவார் ...நாடு வங்குரோத்து நிலையில் தான் ..
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
கள்ள சேர்டிவிக்கட் பிரின்ட் பண்ணுவது இலகுவான விடயம் இல்லை தானே ...அது தான் தாமதம் போல...அல்லது இனித்தான் கலாநிதி பட்டம் எடுக்க தீசீஸ் எழுதப்போகின்றாரோ
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
இளங்குமரன் எம்.பி.க்கு சொல்லுங்கோ அதிரடி நடவடிக்கை எடுப்பார் ... சிவப்பு தொப்பியும் ,சிவப்பு கோவணமும் ,சிவப்பு நட்சத்திரம் போட்டு கொண்டு கட்சி நடத்துற விடயம் இல்லை ...அதை இலகுவாக செய்துவிடலாம் .. ஒரு நாட்டை நடத்துவது கடினமான விடயம்...
-
குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்
தமிழ் தேசியவாதி குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு நினைவஞ்சலிகள்
-
ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை
தமிழ் மக்கள் பயங்கரவாத பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் அதனால் அவர்கள் பகுதியில் பொருளாதார பிரச்சனை 30 வருடங்களாக இருந்தது ..தற்பொழுது அந்த பொருளாதார பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு தமிழர்கள் எமது கட்சிக்கு ஆதரவு தந்துள்ளனர் ....இனிமேல் வடக்கு சிறிலங்காவில் பாலும் தேனும் ஓடும் சார்...எங்களுக்கு அந்த பகுதியை அபிவிருத்திசெய்ய துட்டு வேணும்....இனி தமிழர் என்ற இனம் எமது நாட்டில் இருப்பதை மறந்து விடுங்கள் ....சிறிலங்கன் என்ற ஒர் இனம் மட்டுமே உள்ளது... ....என அறிக்கை விடுவார்கள்... whay this kolai veri😅
-
வடக்கு, கிழக்கில் அதிகளவு தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை
தமிழ் தேசிய இனத்தின் அதிகாரிகள் ..... இரண்டு,மூன்று தமிழ் சொற்களை பேசும் ஏனைய தேசிய இனங்களின் அதிகாரிகளை நியமித்து விட்டு த்மிழ் அதிகாரிகள் என சொல்வார்கள் ... தற்பொழுது உதவி பொளிஸ் அத்தியேட்சகர்(ஜெரால்) தமிழ் பேசுகின்றார் ...அவர் தமிழரா என தெரியவில்லை...
-
சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு
நல்ல விடயம் அதை விட தமிழ் தேசிய இனம் ,இஸ்லாமிய தேசிய இனம் என்றும் கூறலாம்.
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
ஆகலாம் ,ஆனால் தோழர் அனுராவின் புலனாய்வு துறை இவர் மீது ஒர் கண் வைத்திருக்கும்....இந்தியா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற பயத்தில் ...என்ன தான் இடதுசாரியாக இருந்தாலும் இந்தியா டமிழன் என்ற பயம் இருக்கத்தான் செய்யும்..
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
30 வருசமா ஒரு மயிரையும் புடுங்க முடியாத இந்தியாவை இனிமேலும் நம்ப வேணுமா? 13 இந்தியாவுக்கு நன்மை தரக்கூடும் அதை அவர்கள் பார்த்து கொள்ளட்டும் ..... அர்ஜூனாவை இந்தியா துணைதூதரகம் அழைத்து உள்ளதாம் என ...அவர் கூறுகின்றார்...தங்கள் நலனுக்காக அர்ஜுனாவை உபயோக படுத்த போயினமோ
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
யாழப்பாணத்தாணுக்கு "கிலி கொள்ள வேண்டாம்" என சொல்லியின்ம....சிறிலங்கனுக்கு கிளீன் சிறிலங்கா என சொல்லுயினம்.. அரசியல்வாதிகள் மண்/கல் கடத்துகின்றனர் என சீன் போடுகின்றனர் ...அறிக்கை விடுகின்றனர்.. பொலிசார் பயப்பட வேண்டாம் என அறிக்கை விடுகின்றனர் ... 1974 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாடு தொடக்கம் இன்றுவரை பயப்படாமல் வாழ்கின்ற்னர்
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
ஏற்கனவே பலவீனப்பட்டுக்கொண்டே போகின்றோம் ...சிறிலங்கா அதிகார வர்க்கம் ஒருநாளும் தமிழ் பிரதேச சுயாட்சியை தரமட்டார்கள் ...தமிழர் தாயகம் என்ற ஒர் பிரதேசத்தை அங்கிகரிக்க மாட்டார்கள் அதற்காக தான் 75 வருடங்களுக்கு மேலாக உழைக்கின்றனர் ..அதில் வெற்றி கண்டு வருகின்றனர் ... ...தொடர்ந்து தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்த தான் இந்த வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோஷம் உதவும் ..அத்துடன் அது சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மேலும் தமிழர்களை பலவீன படுத்த உதவியாக இருக்கும்... தமிழர் பிரதேசத்திலிருந்து சிறிலங்கா தேசிய கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது ஒர் அறிகுறி.. எமது நிலம் எம்மவரின் ஆதரவுடன் இழக்கப்படும் நிலை ஆரம்பமாக போகின்றது என்பதின்.. மாவட்ட அதிகார சபையை ஏற்றுக் கொள்ளாமல் மாகாணசபையை ஏற்றுக் கொள்வது சிறப்பானது
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
வடக்கு .கிழககு என தனியாக இருந்தும் சுயாட்சி நடத்தலாம் அல்லவா?...இரண்டு தமிழ் பேசும் முதலமைச்சர்கள் ,தமிழ் பேசும் அமைச்சர்கள் பலர் தெரிவு செய்ய வாய்ப்பு உண்டு ... பதவிகளை விரும்பும் தமிழர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் ...கட்சிகள் பல உருவாக வாய்ப்பு உண்டு ..
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
எதிர் எதிராக வரும் வாகான சாரதிகள் ,பொலிசார் வீதியில் நிற்கின்றனர் என "ஹைய் பீம் லைட்" அடித்து காட்டுவதற்கு என்ன தண்டனை ?
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
வடமாகாணத்தானுக்கு போராட்டம்,யுத்தம் போன்றவைதான் தெரியும் என பிரச்சாரம் செய்யத்தான் 😅
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
புரட்சி செய்யினமாம்
-
வடக்கு, கிழக்கில் அதிகளவு தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை
தமிழ் உயர் பொலிஸ் அதிகரிகளையும் நியமிக்க வேண்டும் ...சிறிலங்காவில் எத்தனை தமிழ் பிரதி பொலிஸ்மாஅதிபர்கள் ,எத்தனை பொலிஸ் அத்தியேட்சகர்,உதவி பொலிஸ் அத்தியேட்சகர்கள் தற்பொழுது உண்டு?
-
வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில்: ரவிகரன் எம்.பி
டாக்டர் அர்ஜூனாவுக்கு தந்தி அடியுங்கள்
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
பாலில் புரட்சி தண்ணீரில் புரட்சி மண் அகழ்வதில் புரட்சி காலில் வீழ்வதில் புரட்சி கட்சிகளை உடைப்பதில் புரட்சி புதுக்கட்சிகளை தொடங்குவதில் புரட்சி யூ டியுப் தயாரிப்பதில் புரட்சி.... போதைப் பொருள் பாவனையில் புரட்சி... ஜோடி சேர்வதில் புரட்சி ஆகஹா,ஆஹா ..புரட்சி மேல் புரட்சி
-
வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
உங்களுக்கு வள்ளுவரின் மூன்றாம்பால் நினைப்பு வந்திடுது போல
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்ற தோழர் அணுராவின் சிந்தனையினால் இந்த சின்ன தோழர் இதை செய்கின்றார் போல .. 1980/81 களில் எங்கன்ட ஆயுத தூக்கிய இடதுசாரிகள் ஒரு கேள்வி கேட்டார்கள் யார் முதலாளிகள் /முதலாளித்துவம் என்றால் என்ன?முதலாளித்துவத்தை ஒழிக்க வேணும் ,அப்ப தான் புரட்சிகர சமதர்ம சமுதாயம் உருவாகும் எண்டு? நான் முந்திரிகை கொட்டை மாதிரி ஊரில் உள்ள கடைக்காரரின் பெயரை சொன்னேன்...அவர் போன்றவர்கள் சின்ன முதலாளிகள் இவரை விட பெரிய முதலாளி அமெரிக்கா என்றார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை ... தலையை ஆட்டிவிட்டேன் ..இரண்டு மூன்று நாட்களின் பின் அந்த ஊர் முதலாளியின் கடையை ஒரு குழு கொள்ளையடித்தது ..அதற்கு அந்த குழு விளக்கம் கொடுத்திருந்தது... தொழிலாளர் புரட்சி ஆரம்பம் எண்டு .... அன்று முதலாளித்துவ பாடம் எடுத்த நண்பர் அமெரிக்காவில் பெரிய முதலாளி...உஷ் ..உஷ்
- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.