Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்... தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்🤣🤣
  2. இன்றைய லங்கா மாதவின் பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்
  3. என்ன தான் இருந்தாலும் 30 வயசில -ஹார்மோனியம் வாசிக்கும் பொழுது இருந்த வேகம் இப்பொழுது விரல்களுக்கு இல்லையே என உள் மனதில் ஒர் கவலை அவருக்கு எட்டி பார்த்திருக்கும்
  4. சத்தியமா அது ஒர் வல்லிய சோகமானு🤣
  5. என்ட இதயம் காதலித்தது ஒருத்தியை மட்டுமல்ல ,பல இளம் பெண்களின் இதயத்தை ...ஆனால் ஒரு இதயமும் பதிலுக்கு என்னை காதலிக்கவில்லை🤣
  6. கதை அருமை தொடருங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்
  7. நன்றி ராஜா அவனே எல்லாம்...அவன் ஆட்டிப்படைக்கிறான் நாங்கள் ஆடுகிறோம்
  8. நன்றி யாயினி ,முருகன் இல்லாத உலகமா அவன் இன்றி அணுவும் அசையாதே... இப்ப தான் கொரனா முடிவடைந்துள்ளது இனி அதிகம் வெளிக்கிட்டு திரியலாம்...கதை கரு கிடைக்கும் என் எதிர் பார்க்கலாம். நன்றி பாஞ்..நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் முருகன் ...பதின்மவயதில் காதலியை தந்து விட்டார்...எனக்கு கலியாணம் கட்டமட்டும் காதலியை காட்டவில்லை அதுதான் முருகனோட ஒரு இது
  9. சிறப்பு சுவியர் ..கருத்தாக கள்ளச்சாவி போட்டு கருவறை திறக்கலாம் என சொன்ன‌ கணவானே பாராட்டுக்கள்
  10. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... இந்தியாவுக்கு போய் கொஞ்சம் சொப்பிங் செய்து போட்டு முருகனிட்ட வார ஊர்சனத்துக்கு கலர் காட்டலாம் என்றால் ,கொரனா முட்டுக்கட்டை போடுது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... சுமே
  11. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி புங்கை அண்ணா அவன் வசதியா வாழத் தெரிந்தவன் மட்டுமல்ல பக்தர்களையும் வசதியாக‌ வாழவைக்கும் சூரன் நன்றி தோழரே வருகைக்கும் வரவேற்ப்புக்கும் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிறி வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி
  12. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி அவர் மாறினாலும் உந்த மனிசிமார் மாறினம் இல்லை...அவரின்ட ஏஜன்ட்மார் (ஐயர்மார்) கொஞசம் கொஞ்சமாக மாறி வருயினம் .....அவையள் மாறினால் எங்கன்ட மனிசிமாறும் மாற சந்தர்ப்பம் உண்டு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கு.சா...அவனில்லாமல் சிட்னி புத்தன் இல்லை😅 நானும் அழகு என்று மனிசி இடக்கிட சொல்லுறவ....
  13. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி நிலாமதி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கிருபன் ...கிறுக்குவதே எனது பொழுது போக்கு
  14. எனக்கு பிரச்சனை இல்லை ...நகர்த்துங்கள்
  15. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
  16. மிக்க நன்றி ராஜா மிக்க நன்றி யாயினி மிக்க நன்றி பெருமாள் மிக்க நன்றி paanch மிக்க நன்றி ஜெகாதுரை மிக்க நன்றி இணையவன்
  17. நன்றி அண்ணா நன்றி குமாரசாமி நன்றி ஈழப்பிரியன் மிக்க நன்றி தமிழ்சிறி மிக்க நன்றி நந்தன்
  18. குமாரசுவாமி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி Suvy நன்றி கிருபன் உங்களுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
  19. ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  20. கெதியா சுட்டு அனுப்புங்கோ ....இன்று சனிக்கிழமை பிரயோசனப்படும்..
  21. இதை வாசிக்கும் பொழுது ஓடவேணும் போல இருக்கு ஆனால் .....இன்று தொடக்கம் ஓட வேண்டும்...நன்றி இணையவன்
  22. நன்றி கிருபன் நீங்கள் கூறுவது உண்மை....தமிழர்களின் நிலங்கள் சுருங்குவதை தடுக்க சில போராட்டங்களை செய்கிறார்கள் ஆனால் அவர்களால் வெற்றியடைய முடியாது... சிங்களவரின் பயணம் தொடரும் , இயற்கையும் தன‌து பயணத்தை தொடரும்.... 😀உதுக்குதான் டபிள் அக்டிங் கூடாது என்று சொல்லுறவையள்
  23. நன்றி உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...போர்த்துகீசர் காலத்திலிருந்து அவர்கள் அப்படித்தான்(விபச்சாரிகள்) ... சோலம‌ன் ,ரிச்சேர்ட் களின் வாரிசுகள் எல்லாம் புத்தரின் கொள்கை பரப்பிறன் என்று நாட்டை குட்டிசுவராக மாற்றிந்து தான் மிச்சம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.