Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. தலைவர் பிரபாகரனை தலை மேல் வைத்து கொண்டாடிய பலர் இன்று போராட்டத்தின் வீழ்ச்சியின் பின்னர் தலைவரை தூற்றி திரிகின்றனர். அது யாழிலும் கண்கூடு. அவை உங்கள் கண்களில் படுவதில்லையா??
  2. சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ மற்றும்பிரபாகரன்.... https://www.facebook.com/share/r/16NjCKDFog/
  3. உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?
  4. அடுத்த தலைமுறை யாவது தமிழர்கள் சார்பாக பேசக் கூடியவர்களாக வரட்டும்.
  5. அதேதான் ஏன் எல்லா தலைவர்களும் கோழி கிறுக்கல் மாதிரி என்று தான் அவர் கேட்கிறார்? 😅
  6. 1- இதுவும் எமது தவறே நான் உட்பட. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. 2- தமிழகத்தின் தலைவர்கள் அதாவது பொறுப்பில் உள்ளவர்கள். 3- கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீங்கள் தமிழ் மக்களின் தலைமையாக ஏற்றிருப்பது புரிகிறது.
  7. அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.
  8. உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில். மேலும் தனது மொழி தவிர்ந்த வேறு மொழிகளில் கையெழுத்து வைப்பது தான் அறிவாளி என்பதற்கு அடையாளமுமல்ல....
  9. தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம் https://www.facebook.com/share/r/1BxNc4CqjS/
  10. என் தம்பிமாரின் எனக்கு எந்த விதமான சந்தேகங்களும் இல்லை இந்த விடயத்தில்....😋
  11. இது நித்தியானந்தாவின் ஆவியின் திருவிளையாடலாக இருக்கும். 😂 பெண் பாவம் பொல்லாதது...😛
  12. அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....??? ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...
  13. நன்றாக கவனித்து பட்டங்களை கொடுங்கள்.😋 என் அனுபவத்தில் கண்ட உண்மை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன் 🤣
  14. அண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாளர். எனவே பெரிதாக வருமானம் அற்றவர். எனக்கு தெரிந்து அவர் தனக்கு என்று எதையுமே இதுவரை சேர்த்து வைக்கவில்லை. நான் உட்பட அநேகமான அப்பாக்களின் நிலை இது தான். எமக்கென்று எதுவும் நாம் செய்வதில்லை. சேர்ப்பதில்லை. எமக்கென்று எந்த தனிப்பட்ட சுய தேவைகளோ ஆசைகளோ விருப்பு வெறுப்புகளோ ஏன் தனிப்பட்ட சேமிப்புகளோ கூட இருப்பதில்லை இருக்கவும் முடியாது. ஆனால் மாத முடிவில் வரக் கூடிய கட்டணங்கள் பணக்கொடுப்பனவுகள் செலவுகள் என்று அத்தனையையும் சமாளித்தபடி அத்தனைக்கும் முகம் கொடுத்தபடி அவற்றை எவருக்கும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக அழும் அப்பாக்கள் இவ்வுலகில் அதிகம். அதற்கு நன்மை சொல்லாவிட்டாலும் இதனைப் போல் வார்த்தைகளை கேட்கும் போது நெஞ்சு வெடிக்கக்கூடும். அப்பாக்களுக்கு சமர்ப்பணம். முற்றும்.
  15. ஆரம்பிக்கிறேன் அண்ணா. அந்த கருவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது நிழலி தான்.
  16. ஆண்மை என்பது ஆண்கள் பல பெண்களை தொடுவது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்?? என் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் சந்தர்ப்பம் கிடைத்தும் எவன்/எவள் அதை தவிர்க்கிறானோ அதுவே ஆண்மை.
  17. அவளின் பரிசம் பட்டதும் உடல் முழுவதும் சில்லிடுகிறது. கண்களை இறுக மூடி திறந்து அவளது கண்களை பார்க்கிறேன் அது கலங்கி இருக்கிறது. அவள் வாய் திறக்கிறாள். அதே என்னை மயக்கிய குரல் அழகு தமிழ். அவள் பேசும் விடயத்தை என் மூளை உணராத அளவுக்கு அந்த குரலுக்குள் அவளின் தமிழுக்குள்ளும் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து நான் 80 களுக்கு சென்று மூழ்கத்தொடங்கினேன்..... திடீரென ஒரு பொறி மனதில் நீ யார் இப்பொழுது என்று? கனவில் எங்கோ சென்று மீண்டும் முழிப்போமே அதைப் போன்றதொரு பதட்டம். அவள் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதால் அதை பிடுங்கவும் முடியாமல் கனவை தொடரவும் முடியாமல்...... இந்த மனித மூளையின் வேகம் மற்றும் ஞாபக சேமிப்பு கண்டு வியந்ததுண்டு. ஒரு சில செக்கன்களில் 25 வருடங்கள் பின்னால் அழைத்து சென்று அத்தனையும் படங்கள் மற்றும் உணர்வுகளுடன் இரைமீட்டிவிட்டு ஒரு சில செக்கன்களில் மீண்டும் களத்தில் வந்து நிற்கும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? மீண்டும் அவளது கண்களை பார்க்கிறேன் அதில் எந்த வித சலனமோ சபலமோ இல்லை. ஒரு வித ஆழ்ந்த நட்பு மட்டுமே எனக்கு தெரிகின்றது. என் கண்களை பார்த்தவள் நான் கைகளை விடுவிக்க நினைப்பதை புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். கைகளை விட்டு விட்டு என் குடும்பத்தை பார்க்கணும் என்றாள். அழைத்து சென்று காட்டினேன். எனது மனைவிக்கு இவளைப் பற்றி திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். இருவரும் நட்பாக சுகம் விசாரித்து கொண்டார்கள். பிள்ளைகளையும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள். இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக அல்லது வழி நடாத்துபவர்களாக பெற்றோர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள். அப்படியானால் பெற்றோரை கண்காணிப்பது வழி நடாத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை எங்கள் சமூகம் அதன் கட்டுப்பாடுகள் மதிப்பு மரியாதை எல்லாமே தான். இந்த சமூக கட்டமைப்பை எல்லோராலும் உதறிவிட முடியாது. இதற்கெல்லாம் கட்டுப்பட தேவையில்லை என்பவர்கள் கூட சில முடிவுகளை எடுக்க முன் நிதானிப்பர். ஏனெனில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சமூகம் ஏற்காத முடிவுகள் எமது பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த சமூக கட்டமைப்பு பல தவிர்க்க வேண்டியதை தன்னுள் இன்றும் சுமந்து கொண்டு இருந்தபோதும் நன்மைகளும் இருக்கின்றன. அவை எம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி வருகின்றன. இது தமிழர்களுக்கானது என்று இல்லை ஐரோப்பியர்கள் ஏன் உலகுக்கே பொருந்தும். அவள் விடைபெறும் முன் தனது இன்றைய வாழ்க்கை நிலைமை பற்றி சொன்னாள். மிகவும் அடிமட்ட நிலை. முன் பின் முகமே தெரியாத எத்தனையோ மக்களுக்கு உதவி இருக்கிறேன். தூக்கி விட்டிருக்கிறேன். துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் என் உயிரில் கலந்த இவளுக்கு என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை. தரவும் கூடாது. இங்கே எனது பள்ளித் தோழிகள், வகுப்புத் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்கள். எனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்கள். அதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி டேய் என்று என்னை கூப்பிடுவாள். ஆரம்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் இதனைக் கேட்டு முகம் சுழித்தபோது அவள் கொஞ்சம் பின் வாங்கினாள். ஆனால் பின்னர் என் மனைவி மக்களே அவளை மீண்டும் மீண்டும் அப்படி கூப்பிடும்படி சொல்வார்கள். இவரை டேய் என்று கூப்பிட்டு நாங்கள் கேட்பது நீங்கள் மட்டும் தான் என்பார்கள். அவை எதுவும் என் மனைவி பிள்ளைகள் உட்பட எவராலும் தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இவளுடன் அப்படி பேசமுடியாது முத்தம் கொடுக்க முடியாது உட்கார்ந்து சாப்பிட முடியாது அவளது தொலைபேசியை எடுத்து அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் அவளுக்கு உதவ முடியாது. காரணம் தொட்டது. அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்....????? முற்றும் (யாவும் கற்பனை அன்று)
  18. உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம் தம்பி நெடுக்ஸ் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.