Everything posted by விசுகு
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
ஒரு நாள் வரும் அந்த நாள் நானும் @goshan_che சந்தித்த நாள். யாழ் களம் அதிரும். இவர்கள் எப்படி கட்டியணைத்து முத்தம் கொடுக்கலாம் கொடுக்க முடியும் என்று.? அண்ணன் தம்பிடா ராசாக்கள் அண்ணன் தம்பிடா. ❤️🤣
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
லண்டனில் சந்தித்தவர் ஒரு தூதுவராக கணிக்கப்பட்டிருக்கத்தான் அன்றைய சூழ்நிலை காரணமாக இருக்கலாம். இன்று இவர் தனியே என்பது தான் கேள்வி. சும்மா எல்லாவற்றிலும் குற்றமும் குறையும் காணும் அவசரத்தில் எழுதாமல் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு சுயமாக கருத்து எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.. நான் இங்கே தான் நிற்பேன்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
உங்கள் அளவுக்கு எனக்கு விளங்கிக் கொள்வது கடினமாக உள்ளதால் யார் யாரை அவ்வாறு சந்தித்தார்கள் என்று சொல்லமுடியுமா? மேலும் ஒருவரை மட்டுமே சந்தித்தல் எங்காவது நடந்திருந்தால் போனஸ் தகவலாக அதையும் குறிப்பிடவும்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
ஒருவர் மக்களால் வெளியேற்றப்படுகிறார். அவரை மட்டும் தனியே உலகம் சந்திக்கிறது. அவ்வளவு அக்கறை இரு பகுதிக்கும் மக்கள் மேல்....?
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சாக்கடைக்குள் தலைவர்களை தேடும் இனத்தின் இன்றைய நிலை. அந்தந்த ஊர்களில் சேவை செய்பவர்களை தெரிவு செய்யாமல் இவ்வாறு படித்தவன் பட்டம் பெற்றவன் என்று தூக்கிப் பிடித்து நம்பி வாக்குபோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவமானங்களை சுமந்து நிற்கிறார்கள்.
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
இதில் எதிலும் ஒரு போதும் இணைந்தில்லை. ஆதரித்ததில்லை.
-
வடக்கில் 16ஆயிரம் ஏக்கரில் தென்னை முக்கோண வலயம் இலவசமாக தென்னங்கன்றுகள், உரம் வழங்குவதற்கும் நடவடிக்கை; அமைச்சர் சமந்த வித்யாரத்ன
நல்ல வரவேற்கத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்
-
கண் கண்ட தெய்வம்
அருமையான கதை சொல்லி.... இந்த கோயிலுக்கு சென்றிருந்தோம். இங்கே இளம் வயதினரை அதிகம் கண்டபோது அது பற்றி விசாரித்தபோது இந்தியாவில் இருந்து படிப்பு விசாவில் வரும் இளசுகளுக்கு இக்கோயிலில் வழங்கப்படும் தொடர் அன்னதானம் பெரிய பேறு என்று சொன்னார்கள். இது சரி என்றால் நீங்கள் சொல்லும் கோயிலும் ஒன்றே. தொடர்ந்து எழுதுங்கள்.
-
பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள ஈழத்தமிழன்; தேர்வு வாக்குக்கு அழைப்பு
வாக்களியுங்கள் உறவுகளே..
-
அவளைத்தொடுவானேன்....???
புதிய நாடு, நகரம், புதிய புரியாத மொழி, தெரியாத அனுபவமற்ற வேலை, புதிய உறவுகள், நண்பர்கள் என வாழ்க்கை திசை மாறி தன் வழியில் என்னை உள்வாங்கி வழி நடாத்துகிறது இல்லை துரத்துகிறது. அநேகமாக ஊர் நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டநிலை இல்லை மரத்துப் போன நிலை. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகளும் சுய வாழ்வை கடந்து அழுத்த நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்கள் பல பறந்து விட ... திருமண வயதென்பது நினைவிற்கு வருகின்றபோது அவள் நினைவு மீண்டும் பற்றிக் கொள்கிறது. விசாரித்ததில் எல்லாமே காலதாமதமாகியிருந்தது. சரி நம் வாழ்க்கை எம்மை ஓட்ட திருமணம் பிள்ளைகள் என காலம் தடம் பதித்து செல்ல .. நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் நினைத்ததை நாம் விரும்பிய வாழ்வை இலக்கை அடைந்து வருவதாக. ஆனால் உண்மையில் வாழ்க்கை தான் எம்மை வழி நடாத்துகிறது. அதில் முட்டி மோதி அலக்கழிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு வதைக்கப்பட்டு குட்டப்பட்டு வளைந்து நெளிந்து கொண்டே தான் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோமே தவிர அது அவ்வளவு இலகுவானதில்லை. இலகுவாக வாழ்வு கிடைப்பதுமில்லை. இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது. கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம். ஒரு நாள் ஒரு திருமண இரவு விருந்தில் அவள் என்னை கண்டு கொண்டு ஓடி வந்தவள் அன்றே போல் என் கைகளை பிடித்துக் கொண்டாள்.... தொடரும் (அடுத்த கிழமையுடன் இவளை தொட சீ... தொடரமாட்டேன்)
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
நான் சொன்னது பணம் லஞ்சம் பெரிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு பக்க பலமாக மற்றும் அவர்களே செய்யும் களவாடித்தனம் இது. பணம் பாதாளம் வரை மத்திய அரசு எந்த மட்டில்...?
-
சிம்பொனி என்றால் என்ன?
1- நாம் நண்டுகள் கூட்டம் சகோ. நமக்கு வெளியே எதிரி இல்லை. 2- அவர் அதை செய்யவில்லை. ரசிகர்கள் தமிழர்கள் செய்கிறார்கள். 3- திறமைக்கு அகங்காரம் இருக்கும். அதேநேரம் இது பற்றி மேலே நீங்கள் குறிப்பிட்டதற்கு விருப்பு வாக்கு போட்டுள்ளேன். நான் ஆரம்பத்தில் விஸ்வநாதன் இசையை வீட்டில் கேட்டு வளர்ந்ததால் இளையராஜாவின் இசையை பெரிதாக இரசித்ததில்லை. இளையராஜாவின் இசையை விட ரி. ராஜேந்தரின் பிடிக்கும் ஒரு காலத்தில். அப்படியே ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்கள் மக்கள் மனதை இசையால் சீராட்டி செல்கிறார்கள் வரலாறு நீளமானது. நன்றி.
-
பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன்
நன்றி பதிவுக்கு கிருபன் ஆனால் திக் இதை வைத்து தங்களுக்குள் ஒழித்து விளையாடுவது தற்போது சீமானால் வெளியே வந்து நிற்கிறது.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
ஆட்சி அதிகாரம் தரும் வலுவான பாதுகாப்பு இருக்கும் வரை இந்த கொள்ளையை எவராலும் ஏன் மத்திய அரசால் கூட ஒன்றும் செய்துவிட முடியாது.
-
சிம்பொனி என்றால் என்ன?
உண்மையில் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? 😅 உண்மையை தேடுகிறோம் கண்டிக்கிறோம் என்று வெளிக்கிட்டு எம் இனத்தின் பெருமைகளை எல்லாம் துகிலுருந்து ஒன்றுமே இல்லாமல் அம்மணமாக நிற்கப் போகிறோமா என்ற சந்தேகம் வலுக்கிறது....😪
-
சிம்பொனி என்றால் என்ன?
சரி ஒரு தமிழன் சிம்பொனி இசை செய்வது இது தான் முதல் தடவை. பெருமை கொள்வதில் தவறில்லையே.
-
கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
வெற்றி வெற்றி....😂
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
மறக்குமா நெஞ்சம். அது ஒரு கனாக்காலம் 🥰 ஆனால் வெள்ளவத்தையில் தமிழ் சைவமும் கொள்ளுப்பிட்டியில் கொன்வென்ட் லேடீசும் இருக்க மாலினி பொன்சேகாவை பார்த்ததும் ஓடியது சரி தானே?😜
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
சிங்கள அழகி நடிக்கும் என்ற விளம்பரங்கள் கண்டு பைலட் பிரேம் நாத் படத்தை பார்க்க ஓடினேன் ஓடினேன். ஆளைப்பார்த்ததும் திரும்பி பார்க்காமல் ஓடினேன் ஓடினேன் ஓடினேன்...🤣
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
அமைச்சர் தெளிவாக இருக்கிறார் பேசுகிறார். தனது அமைச்சு சார்ந்து துறைசார் அறிவுடன் பேசுவது செயற்படுவது வரவேற்கத்தக்கது.
-
ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்?
அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது??
-
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!
இதைத் தான் நானும் எழுத நினைத்தேன். நன்றி இணையவன்.
-
அவளைத்தொடுவானேன்....???
ஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது. தொடரும்....
-
அவளைத்தொடுவானேன்....???
அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
நோன்பு திறக்கும் விழாவுக்கு போகும் போது இந்த லூசு சுவிங்கம் சாப்பிட்டபடி இருந்துதான் என்றொரு செய்தி பார்த்தேன். நோன்பு என்றால் என்ன என்றே புரியாத ஜடம்.