Everything posted by விசுகு
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாது. ஆனால் நான் 2009க்கு முன்னரும் பின்னரும் என்னால் முடிந்ததற்கும் மேலாக செய்திருக்கிறேன். 2009 க்கு பின்னர் 2010? இல் பிரான்சில் மாவை சேனாதிராஜா சிறீதரன் மற்றும் வித்யாதரன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. (வித்தியாதரன் மேடையில் இல்லாமல் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தார்) அதில் கூட்டமைப்பு சார்பாக ஏதாவது செய்ய முனைகிறார்கள் நாமும் ஏதாவது செய்யலாம் என்று அதில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே தமிழரசுக் கட்சியின் கிளை ஒன்றை பிரான்ஸில் திறக்கும் திட்டம் பற்றி பேச்சு நடந்தது. முதல் ஆளாக நான் எழுந்து கூட்டமைப்பு அதன் தொடர்பான விடயங்களை பேசுவதாக இருந்ததால் பேசலாம். தமிழரசுக் கட்சி பற்றியே அதன் கிளை திறப்பு சார்ந்தோ இங்கே பேசவேண்டாம். அந்த நோக்கத்தோடு பிரான்சுக்கு வரவும் வேண்டாம் என்றபோது வந்திருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். இதுவரை பிரான்ஸில் தமிழரசுக் கட்சிக்கு கிளை இல்லை. இன்று கூட்டமைப்பு அழிந்து தமிழரசுக் கட்சியும் அழிந்து நிற்கும் நிலை 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூட்டமைப்பு சார்ந்த தூரநோக்கோடு எதற்காக தமிழரசுக் கட்சியை தனியே வளர்ப்பதை தடுக்க முனைந்தேனோ அதற்கு சாட்சியாக எம் கண் முன்னே வரலாறாகி நிற்கிறது..
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
எவரும் இல்லை ஆனால் இங்கே தான் நாம் தவறு விடுகின்றோம். நாங்க சரியில்லை எனவே....?? இங்கே நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லை. அதை தான் மக்கள் முன் ஒரேயொரு தெரிவாக விடுகின்றோம். மிக மிக ஆபத்தான மீளமுடியாத குழி இது. எம் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது தான் நான் சொல்வது. அதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் செய்கிறோம். பதில் பூச்சியம் தானே? அப்படியானால் அந்த அரசியல்வாதிகளை மட்டும் கை நீட்டி என்ன பிரயோஜனம்???
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
ஜயா இதெல்லாம் தெரிந்தது தான். எனவே தமிழர் நிலம் மற்றும் தமிழ்தேசியம் என்பதை உதறித் தள்ளிவிட்டு சிறீலங்கன் என்று எல்லோரும் ஜேவிபியில் கலந்து விடலாம் என்கிறீர்களா? சுத்தி வளைக்காமல் ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
நமக்குள் ஒற்றுமை இல்லை நமக்கு நல்ல கட்சி இல்லை நாங்க சரியில்லை நாங்க உதவாக்கரைகள் நாங்க நாங்க....??? என்ன இது?? எங்கே போகிறோம்?? என்னவாகப்போகிறோம்??😭
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
நிச்சயமாக நடாத்துவார். எமது ஆயுதங்களுடன் எம்மை பாதுகாத்த படி கொழும்பில் நின்று. ...
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
இது சார்ந்த செய்தி என்பதால்..... 95காலப்பகுதியில் #சந்திரிக்கா_சாறி #சந்திரிக்கா_bag #சந்திரிக்கா_காப்பு எண்டு எங்கட சனம் கொண்டாடி தீர்த்தது கொஞ்ச நாள்ளையே #சந்திரிக்கா பூரா யாழ்பாணீஸ்சையும் மூட்டை முடிச்சோட கிளபினதும் தான் கண்ணுக்கு முன்னால வந்து போகுது.. இப்ப அதே போலதான் #AKD நம்ம மீட்பர் ரேஞ்சுக்கு வச்சு கொண்டாடுறியள் பாத்து கவவனம் https://www.facebook.com/share/v/3nrnLJoeod7EfSWc/
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
தேர்தல் பதவி இனவாதத்தை விட்டு வெளியே வர அச்சம். (வெளியே வர நினைக்கவே இல்லை என்பது தான் உண்மை)
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
இங்கே சுமந்திரன் மற்றும் சாணக்கியன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு நான் ஒரு போதும் அவ்வாறு அவர்களை துரோகிகள் என்றோ அவர்களை தூர வைக்க வேண்டும் என்றோ எழுதியதில்லை. ஏன் தாயகத்து எந்த அரசியல்வாதியையும் அவ்வாறு எழுதியதில்லை (எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறீதரன் மற்றும் டக்லஸ் தவிர) நீங்கள் இதை திரிவுபடுத்தி பொதுவாக்கி பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்.
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
எங்கே காட்டுங்கள்.
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
எங்கே காட்டுங்கள் நான் அவர்களை பிரிப்பதாக அல்லது தூர வைக்க சொல்லி எழுதிய கருத்துக்களை.
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
இன்னொரு ஈராக்???
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
திடீரென வந்து ஏதேதோ எழுதுகிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் மட்டுமே பதில் தரமுடியும். ஏனெனில் இது என் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. பிரச்சினைக்கு ஆளானவர் தாயகத்தில் அதிலும் வாக்கு சாவடியில் வாக்கு எண்ணும் இடத்தில் இருந்து இருக்கிறார். சந்தேகத்தை அவரே அதே இடத்தில் வெளியிடுகிறார். பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக சமாதானமாகிறார். ஆனால் நெருப்பு இன்னும் அணையவில்லை என்று தான் இந்த செய்தி. டொட்.
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
தேர்தல் காலத்தில் இவை சரியானதாக அமையாது.
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
இன்றைக்கு எமக்கு தேவை. ஒற்றுமை மற்றும் ஒன்றாகி தேர்தலை சந்தித்தல் மட்டுமே. அதற்கு வேட்டு வைக்கும் கருத்து உங்களது.
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
அனைவருக்கும் வணக்கம், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு பல்வேறு கட்சிகளாலும் சுயேட்சைக்குழுக்களாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் ஊடாக வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன். ஆயினும் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக என்னுடைய நண்பர்களுடனும் நலன்விரும்பிகளுடனும் கலந்துரையாடியபோது, பலர் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் போட்டியிடவேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர் என்பதுடன் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதானது உண்மையான தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இருந்த போதிலும் என்னுடைய நலன்விரும்பிகளின் விமர்சனங்களையும் மீறி, தமிழரசுக்கட்சி ஊடாக போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தேன். கடந்த காலங்களில் அந்தக் கட்சி எம்மவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிற்கும் கொண்டு செல்லப்பட்ட கட்சியாகும். அந்த அடையாளத்தை நாங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. ஆனாலும், கடந்த சில நாட்களாக கட்சி சார்ந்து நடைபெறுகின்ற சங்கடம் தருகின்ற விடயங்கள் அந்தக் கட்சி ஊடாக பயணிப்பதன் ஊடாக எங்கள் மக்கள் சார்ந்து எதிர்காலத்தில் பணியாற்ற முடியுமோ? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்கள் சார்ந்த பணியில் முடிந்த அளவிற்கு கடந்தகாலங்களில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். என்னுடைய மக்கள் சார்ந்த பணிக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி அன்புடன், வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் LL.B, LL.M சட்டத்தரணி. https://www.facebook.com/share/p/AKTNU6d1pZhZAgxb/
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இந்த நக்கல் நளினமெல்லாம் யாழில் உதை வாங்க மட்டுமே உதவும் கவனம் கோரிக்கையல்ல எச்சரிக்கை...
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
அவருக்கு என்ன விசரே?? பொந்தில் கையை விட?? இன்றைய நிலையில் அவர் தான் சிறீலங்காவில் சிறந்த அரசியல்வாதி.
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
முட்டை விலை அதிகரிப்பு நல்ல விடயம் தானே??? நம்ம சனம் போத்தல் விலை எவ்வளவு கூடினாலும் சத்தமே வராது. ஆனால் உள்ளூர் முட்டை என்றால் காட்டுக்கத்தல்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
கொஞ்சம் பொறுங்கள். இப்போது தான் வெளியே வந்து இருக்கிறார். இனி கனக்க வெளியே வரும் தானே???
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். ஆதாரதாரர்கள் வரவும்
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
அதிகம் கண்ணீரை விடாதீர்கள். பின்னரும் தேவை. உறுப்பினர் என்ற அட்டையில் எல்லாமே இருக்கிறது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது....
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
சீ சீ அவர்கள் உங்கள் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கு. அங்கால கச்சையும் உருவப்படப்போவது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை புலிகள் மற்றும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு கண்ணாவது போனால் காணும். அவ்வளவு சிறீலங்கா விசுவாசம்.
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
அவர் அதை செய்யவில்லை செய்ய போவதுமில்லை. அரசனை நம்பி....? இது தான் எனது ஆதங்கம். மற்றும் படி உங்களை விட அவர் ஏதாவது தமிழ் மக்களுக்கு நல்லது சொல்வாரா என்று தவம் கிடக்கும் ஒருவன் நான்.