Everything posted by விசுகு
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தமிழகத்தில் எத்தனை கோடி வாக்காளர்கள்?? மூன்றரை கோடி என்றால் கணக்கு சரியல்லவா?
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் இலக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வது அல்ல அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அடுத்த கட்டத்துக்கு நகர்வது தான். அது நடந்திருக்கிறது. இனி பேரம் கூட்டணி அமைத்தல் என்று அடுத்த கட்டம்.???
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
நான் அன்றும் இன்றும் என்றும் சொல்வது தான் நான் புலிகளின் அத்தனை விடயங்களையும் தெரிந்து கொண்டே ஆதரித்தவன். புலிகளே பேச்சு வார்த்தை மேடைகளை உருவாக்கினார்கள் அவர்களே சிங்கள தரப்பை மேசைக்கு கொண்டு வந்தார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் விட்டு கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ இலங்கைக்குள் ஒரு தீர்வை பெற்று விட துடித்தார்கள். சட்டியில் ஒன்றும் இல்லை என்று தெரிந்த போதிலும் அகப்பையை துலாவியபடியே தான் இருந்தார்கள். பேச்சு வார்த்தைக்குழு ஒரு போதும் தமிழ் ஈழம் பற்றி பேசியதே இல்லை.
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
-
அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
இனித்தானா?? அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன்இ உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
அவர்கள் அப்படி இருக்க அல்லது வளர்க்கப்பட பல்வேறு காரண காரியங்கள் இருக்கலாம். வழி நடத்தும் தலைவர்கள் சரியில்லை என்பது எவ்வளவு உண்மையானது என்பதே எனது கேள்வி.
-
பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
நல்ல முயற்சி. தேவையான அறிக்கை.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
நீங்கள் நாங்க வளர்த்த அல்லது எங்களை பார்த்து வளர்ந்த தலைமுறை ராசா. உண்மையை சொன்னால் உங்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. இப்போது நீங்கள் வளர்க்கின்ற அல்லது உங்களை பார்த்து வளரும் தலைமுறை சார்ந்து தானே கேள்வி....???
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
தற்போது இது போன்ற வசனங்களை அதிகம் காண கேட்கக் கூடியதாக இருக்கிறது. உண்மையில் இது ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற சாட்டாகத்தான் நான் பார்க்கிறேன். உண்மையில் இந்த சந்ததி தாம் எதிலும் பங்கெடுக்காது தூங்கிக் கொண்டு பெரியவர்கள் எம்மை சரியாக வழி நடத்தவில்லை என்று புலம்புவது இதன் முதல் தலைமுறையான எம்மையும் அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதை தான் காட்டுகிறது. ஏனெனில் நாம் எமது பெரியவர்களையும் நாமே வழி நடாத்தி காட்டி இருக்கிறோம். முன்பை விட தற்போது தேவையும் ஒற்றுமையும் அதிகமாக தேவைப்படும் போது அவர்கள் ஆளை ஆள்......???
- இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான பிரேரரணையை தயாரிக்கும் அமெரிக்கா!
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
அப்படியானால் முதலில் முள்ளிவாய்க்காலுக்கு பதில் தரவேண்டும்.
-
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்!
இவர்கள் எப்போது ஒற்றுமையாக இருந்தார்கள் இனி முரண்பட???
-
பொலன்னறுவையில் ஏழு யானைகள் சடலமாக மீட்பு
வீரப்பன் மீள் வருகையா???
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இந்த திரியின் போக்கில் எனது முதற்கேள்வியின் தொடர்ச்சியாக அடுத்ததாக நான் இறுதியில் இப்படி கேட்க இருந்தேன். உங்கள் கருத்து அதற்கு அப்படியே சாட்சியாகிறது. கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிரான பேரணிகளில் அல்லது ஒன்று கூடல்களில் பத்து இருபது மக்கள் தொகையில் தான் பங்கு பெறுகிறார்கள். ஆனால் இவ்வாறான இராணுவ அல்லது அரச ஆதரவு மற்றும் ஒன்று கூடல்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள் என்றால் இதில் எந்த பகுதி மக்களை சிங்களவர்கள் அல்லது சர்வதேசம் ஏன் புலம்பெயர் தமிழர்கள் பைத்தியக்காரர்களாக வகைப்படுத்துவர்??? அப்படி வகைப்படுத்தினால் ஒரு பகுதி மேலும் மேலும் குறைந்து செல்வதும் மற்றப் பகுதியினர் தொடர்ந்து அதிகரித்து செல்வதும் தொடர்ந்தால் நாம் இறுதியில்????
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நான் ஒரு புலம்பெயர் தமிழன் ஒரு பிரெஞ்சுக்காரன். எனவே பலவற்றையும் கலந்து வாழ பழகிக்கொண்டவன் என்பதையும் ஆனால் எனக்கு நீதி காவல் சுதந்திரம் ஒரு பிரெஞ்சு வெள்ளை நிறத்தவருக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இப்போது ஒரு கேள்வி வருகிறது எமது நிலத்தை ஆக்கிரமித்து புத்த மதத்தை புகுத்துகின்றார்கள் என்றும் ஒரு குரலும் போராட்டமும் அங்கே இருந்து வருகிறது இல்லையா? அந்த அபலக்குரலுக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம் அல்லவா? அந்த அபலக்குரலுக்கு அங்குள்ளவர்களின் இச்செயல் சாதகமானதாக இல்லையா? இப்போது இதில் எதை நாம் ஆதரிப்பது???????
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யாரும் யாரையும் துரோகிகள் என்று எழுதியதாக தெரியவில்லை. இங்கே சிலர் இதை தவிப்பது எதிர்கால புத்தமதம் மற்றும் அதன் துணை விரிவாக்கத்துக்கு நாமே பாரிய இடங்களை ஓதுக்கவேண்டிய வழிகளை திறந்து விடுகிறோம் என்பதாக அமையும் என்று விசனம் செய்கிறார்கள். அவ்வளவு தான். நன்றி.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம். ஆனால் இன்று இது ஒரு திசை மாற்றாக அல்லது மதத்திணிப்பாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. நன்றி.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
நம்ம குடும்பத்திற்குள் எத்தனை பிரிவுகள்? எத்தனை சண்டைகள்? யார் பெரிது? யாரிடம் அதிக பணம்? யார் அதிகம் படித்தவர்?? எத்தனை கொக்கரிப்புக்கள் அதிகார போட்டிகள்? எத்தனை நரித்தனங்கள்? ஏன் இவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ முடியாமல்??? ரத்த சொந்தங்களே இந்த நிலையில் என்றால்.....???
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
யாரும் திருந்தக்கூடாது. விட்டு விடுவமா நாங்க?😪
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
மண்ணாசை தான் ....
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
தவறு இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமே.
-
காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு - சர்வதேச சமூகம் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கடும் விமர்சனம்
சர்வதேசம் சார்ந்த (ரசியா உட்பட) தெளிவை விட எமக்குள்ளான குத்துப்பாட்டுக்கே எம் இனம் முக்கியத்துவம் கொடுக்கும்.