Everything posted by விசுகு
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நமக்குள் நாம் பேச ஒன்றிணைந்து செயலாற்ற இந்த அடிப்படை தான் ஆகக் குறைந்த வரம்பு. எமக்கு முன்னால் தம்மால் முடிந்த அளவு செய்து விட்டு போன எவரையும் கனம் செய்யாமல் எவரையும் எம்முடன் இணைக்க முடியாது. எம் முன்னே தம் வாழ்வை கொடுத்து செயலாற்றிவிட்டு சென்றவர்களை சார்ந்த இந்த மாதிரி தூற்றுதல்கள் அடுத்த தலைமுறையை வேண்டாம் இந்த பழி என்று பின் வாங்க செய்து விடும். உலக வரலாற்றில் தம்மால் முடிந்த அளவு செய்தவர்களை நகரங்கள் வீதிகள் மற்றும் கேடயங்கள் என்று அவர்களது பெயர் குறிக்கப்பட்டு பெருமை படுத்துதல் தொடர்வது இதற்காகத் தான். நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இது கமராக்காறன் வம்புக்கு பெத்தது. 🤣
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
மிகத் தவறான கருத்து. மிகப் பெரும் வீரம் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு செய்து போராடிய ஓர் இனத்தை இவ்வாறு சிறுமைப் படுத்திவிடவேண்டாம். எந்த இனத்திலும் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாம் நாடு என்று சிந்திப்பவர்கள் மிகச்சிலராகவும் மதில் மேல் பூனைகளும் நான் என்று சுயநலமாக சிந்திப்பவர்கள் மிக மிக அதிகமாக இருப்பதும் சாதாரண நடைமுறை மற்றும் வரலாறு. தமிழர்களின் தலைவர்களை சாட இவ்வாறு அருவரி பாடங்களை தூக்கி வரவேண்டாம். அதற்காக தான் சிவப்பு.
-
இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
யாரு கொடுத்த பிள்ளையோ?
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?
-
"நிம்மதியைத் தேடுகிறேன்"
வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி.
-
ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே - நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா
இசுலாமிய தமிழர்கள் எப்படி எமக்கெதிராக பாவிக்கப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. தமிழர்கள் பலமுறை மன்றாடியும் அவர்கள் தமிழைப் பாவித்து அந்த ஈனத்தனமான காட்டிக்கொடுப்பை செய்து முடித்தார்கள். இன்று அறுவடை செய்கிறார்கள் இரு பகுதியும்.
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார்.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
என்ன கதையே கந்தலாகுது? ட்றம்ப் வந்தால் புட்டின் வெல்வார் என்பதெல்லாம் கனவா?? 😅
-
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை
வாழ்த்துக்கள். நல்ல முயற்சி.
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
தலைவர்கள் தமது செயல்கள் மூலம் தான் மக்களால் இனம் காணப்படுகிறார்கள். இது முகங்களை அடையாளம் காணும் காலப் பகுதி. தப்பியது தமிழினம். 😪 உங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உள்ள அடிபாட்டை இதைக் கொண்டு ஊதாதீர்கள். இங்கே அது எல்லோருக்கும் தெரியும்.
-
வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்
இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு இது புரிந்து கொள்ள கூடியதே. இறால் பண்ணைக்கு எதுக்கு எதிர்ப்பு ????
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இவருடைய காங்கிரஸ் இணைவும் பேச்சுகளும் நாம் தமிழருக்கு பெரிய சிரமங்களை தரப் போகிறது 😭
-
இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
3 மாதம் மட்டுமே. நானும் பெரிதாக எதிர்பார்த்து வந்தேன்.
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
ம்ம் அதைத் தான் நானும் துரையப்பா பழிவாங்கும் ஆத்திரத்தில் புது வாழ்வை இழப்பதை மறந்து விட்டார் என்று குறிப்பிட்டேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத் தொடர்ந்தாவது முள்ளிவாய்க்காலில் புதை குழிகளும் தோண்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கட்டும்.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
உண்மை தான். நாம் எல்லோரும் அமெரிக்காவின் சின்ன வீட்டின் பிள்ளைகள். உங்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பி மகிழும் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை.
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
சிங்களம் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் துரையப்பா புது வாழ்வை மறந்து விட்டார்.
-
ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை
இந்த இலங்கையின் தடுமாற்றம் மற்றும் அமெரிக்க இஸ்ரேலியர்களுடனான முரண்பாடுகளை எம்மவர் பயன்படுத்தினால்.....?
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
பிரெஞ்சு கலாச்சாரம் மிகவும் உன்னதமானது. வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தெரிந்தவர் தெரியாதவர் எல்லோருக்கும் எல்லோராலும் சொல்லப்படுவது வழக்கம்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
....... என்று வந்தால் நகக்கீறல்களை பரிசாக பார்க்கணும் அண்ணை. அவை கேடயங்கள். நீங்கள் அறியாதததா? 🤩
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
அம்பு அடிக்கடி வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
அண்ணை கடலை போட்டது கணக்கில் வருமே? வந்தால் நான் கனக்க ஓவர் டைம் மற்றும் நைற் யூட்டி செய்திருக்கிறேன்😜
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
வெடிக்க முன் பலூன் 🎈 நன்றாகத் தான் வீங்கி பளபளக்கும்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ஆமாம் அபிவிருத்தி இலவசம் மற்றவர் கையை எதிர் பார்த்தல் என்று ஒரு பலவீனமான தலைமுறையை உருவாக்கி வருகிறோம்.