Everything posted by விசுகு
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா
-
போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்
சிறீலங்கா இராணுவம் கொன்றதாக அறிவித்த புலிகளின் கணக்கை பார்த்தால் இலங்கையில் இவ்வளவு தமிழர்கள் இருந்தார்களா என தோன்றும்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
எனக்கு இவர்கள் மீது கோபம் வரக் காரணம் இவர்கள் தான் தாயக மக்களுக்கு தவறான தமது நடத்தைகள் மூலம் வெளிநாட்டு மோகத்தை அந்த மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். இவற்றை நம்பி இங்கே வந்து சீரழிந்த சீரழியப்போகும் மக்கள் பலர்.
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
நன்றி நிழலி நானும் முழுமையாக வாசித்தேன் ஆரம்பத்தில் சிலவற்றை பற்றி பேசவேண்டாம் என்றபடி முழுமையாக புலி எதிர்ப்பை செய்திருக்கிறது.. ஆனால் இந்த தலையங்கத்தில் உள்ளபடி 2009 இற்கு பின் முழுமையாக புலி முக அகற்றலை செய்தவன் நான். (பிரான்சில் என் முகத்தை முழுமையாக தவிர்த்தவன் நான்) ஆனால் எந்த இடத்தில் விட்டேனோ அந்த இடத்தில் இருந்து ஓட இதுவரை எவரும் வரவில்லை. இதுவே களநிலை.
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
அனுபவிக்க தெரியாதவர்?
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே.
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
Chéri என்ற பிரெஞ்சு சொல்லை பிரபுவுக்கு அவர் பாவித்து இருந்தால் அது மிக மிக சரியானதே. 🤩
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
அவர்களுக்கு தானே கொடுக்கப்படவேண்டும். அது தானே தர்மமும் அன்னதானத்தின் நோக்கமும் சகோ.
-
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்சில் பங்குகளை வாங்க ஆறு கம்பெனிகள் ஆர்வம்
இனி இந்த பக்கம் வருமானம் தரும் போல தெரியவில்லை?
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.
(34ஆவது அகவை நிறைவு விழாவின் முதல் விழாவை மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கில் 06.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் கொண்டாடியதைத் தொடர்ந்து) இதில் எனது அக்காவும் மைத்துனரும். 89ம் ஆண்டிலிருந்து தமிழ்ப் பணியாற்றி வரும் நாங்கள் ,தமிழ்க் கல்விக் கழகத்தால் 2020இல் முதல் பணியாளராக முதல் *தமிழ் மாணி* யாக நானும் 2022இல் *தமிழ் மாணி* யாக,.முதல் இணையர்களாக நாங்களும் யேர்மனியில் மூன்று உடுக்கள்(நட்சத்திரங்கள்) விருது பெற்ற தம்பதிகளானோம்... 2024இல் 34ஆவது விழா அரங்கில் ஆண்டுகள் நிறைவு செய்த 8 மாணவர்களின் மகிழ்விலும் பெற்றோர்களின் மனநிறைவிலும் அன்பு மழையில் திக்குமுக்காடி நின்ற நிமிடங்கள்.... (இம் மாணவர்களுக்காக வகுப்பாசிரியர் செலவிட்ட நேரங்கள் 5.000 மணித்தியாலம் 40நிமிடங்கள். )
-
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் நிர்வாக முக்கியஸ்தர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம்
அழிக்கப் பட்ட எமது திருத்தலங்கள் மற்றும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது வழிபாட்டு தலங்கள் இவரின் பார்வைக்கு உள்ளாக்கப்படணும். செய்வார்களா? அல்லது இதிலும் சிங்களத்தின் நரிப்புத்தி தான் வெல்லுமா?
-
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
இன்றைய பிரான்ஸ் செய்திகளின் படி: பிரெஞ்சு இராணுவத்தில் இருந்து பல வீரர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு உக்ரைன் போரில் உக்ரைனுக்காக போராடி வருகின்றனர். மிகச் சிறிய சம்பளமே கொடுக்கப்பட்ட போதும் உக்ரைன் வெல்லவேண்டும் என்பதே தமது ஆதரவு க்கான காரணம் என்று பேட்டியில் சொல்கிறார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நெடுமாறன் ஜயா, தேனிசை செல்லப்பா ஜயா, வை கோ அண்ணா, வேல் முருகன், சீமான்.... போன்ற பலருடனும் பிரான்சில் பல மணி நேரம் ஓன்றாக இருந்து பலதை பற்றியும் பேசி இருக்கிறேன். ஆனால் செய்தவை பற்றி அவர்கள் மூச்சு விடுவதில்லை. அதற்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் இப்பொழுது சொல்கிறார்கள் என்றால் அது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதில் மெருகேற்றல் நிச்சயமாக இருக்கும். எனவே வரலாற்று சான்றுகள் ஆகிவிடாது. கூடாது.
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
எம்மீது மட்டுமல்ல சிங்களவர் மீதும் திணிக்கப்பட்ட ஒன்றாகும். தொடருங்கள். கவனமாக இருங்கள். நன்றி.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல எமக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் நாம் தமிழரில் 💯 வீதம் எமது போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். எவரையும் பகைக்காது நாம் பயணிப்பதில் தான் எமது அடுத்த கட்டம் தங்கியுள்ளது.
-
எனது அறிமுகம்
◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான உறவு வாருங்கள் கூடுவோம் பேசுவோம் மகிழ்ந்திருப்போம்..
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த சிலமன் என்பதை பார்த்ததும் ஆகா ஆகா ஈழத் தமிழ் தேன் என்று ஓடி வருவார்.
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அது கூட இங்கே பரவாயில்லை ராசா😋
-
நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அப்படியானால் வெளியில் காட்டப்படும் விம்பம்???? ரூபாவின் எழுச்சி???
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
-
யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு!
அது தான் எனக்கும் புரியல.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணையை மறுப்பதனூடாக அவர் கனடாவில் தங்கி இருக்கும் நாட்களை அதிகரித்து அதை தனது வதிவிட விசாவுக்கு சாதகமாக்க முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும் ஆச்சு? இருப்புக்கு வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
வடை போய் தங்கம் வந்தது டும் டும் டும்☺️
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஏன் ராசா ஏன்?? வடையை காவிக்கொண்டு??☺️
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா. இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.