Everything posted by விசுகு
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது எங்கும் நடந்திருக்கிறது. அவையும் பின்னர் திருத்தப்பட்டு தவிர்க்க பட்டிருக்கிறது (கட்டுநாயக்க விமான நிலையம் உங்களுக்கு தெரிவதில்லை) ஆனால் பெண்கள் மீதான கொடுமைகள் அதிலும் பாலியல் கொடுமைகளை நீங்கள் ஆதரிப்பது கொடுமை.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
கமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மக்களை விரும்பும் அல்லது மக்கள் விடுதலைக்காக போராடும் எவரும் இவ்வாறு செய்யார். இதற்கு எதற்கு படம் அல்லது ஆதாரம்???
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
இது உண்மை அதை கமாஸ் உண்மையில் உணர்ந்திருந்தால் இஸ்ரேலை விட அல்லது இஸ்ரேலே செய்யாத கொடுமைகளை இஸ்ரேலிய மக்கள் மீது முக்கியமாக இஸ்ரேலிய அப்பாவி பெண்கள் மீது செய்திருக்காது அல்லவா?
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பணயக்கைதிகளுக்கும் பொது மக்களுக்குமான வித்தியாசம் தெரியாத உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியாது. நன்றி
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
கேள்வி : பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். பதில்: விபுகள் மக்களை விடுவித்து முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஒவ்வொருவருடைய எழுத்துக்கள் அவர் அவரது செயல்களை, செயலற்ற தன்மையை காட்டி விடும். எனவே உங்களின் இடத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சின்ன அனுபவ குறிப்புடன் முடிக்கிறேன். சாதாரண மக்களை தொடர்ந்து துன்புறுத்த முடியாது கூடாது என்பதற்காகவே நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. +அவை ஆரம்பித்து வைக்கப்பட்டபோது நானும் அங்கே இருந்தேன்.) இதனை சொல்வதன் ஊடாக அவர்களது இன்றைய போக்கை ஆதரித்து எழுதினேன் என்று அர்த்தம் இல்லை. நன்றி.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
மிகவும் வக்கிரமான பொறுப்பற்ற பதில்கள் கால்பந்தாட்ட மைதானத்தில் உள்ள சிரமங்கள் தெரியும் என்று மட்டுமே சொல்ல வந்தேன். நன்றி.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நன்றி நீங்கள் பார்வையாளர் மட்டுமே. எனவே இது போன்ற வக்கிரங்களை மட்டுமே உங்களால் கொட்ட முடியும். ஆகக் குறைந்தது அந்த கால்பந்தாட்ட மைதானத்தில் சில மணி நேரங்கள் கால்பந்தாட்ட எல்லைகளுக்கு காவலுக்காவது நின்று விட்டு வந்து எழுதுங்கள். அதுவரை......
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இது தான் அதி கோமாளித்தனம் ஏன் அந்த பைல்களை நாம் எடுத்து செய்யக்கூடாது என்ற கேள்வியை எம்மீது கேட்பதற்கு பதிலாக மற்றவர்களையே குற்றவாளிகளாக்குவது. ஏன் பைல்கள் நகரவில்லை என்றால் செய்ய ஆட்கள் இல்லை. டொட்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வணக்கம் @கிருபன் கனக்க எழுத வேண்டும். ஆனால் நேரம் தான் இல்லை. ஆனால் சிலவற்றை கண்டும் காணாமலும் கடந்து போகமுடியாது கூடாது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தவர்களால் அண்ணா வாங்க ஏதாவது ஜனநாயக வழியாக முயன்று பார்க்கலாம் என்று கேட்டபோது மறுத்து விட்டேன். ஆனாலும் அவர்களுடன் தொடர்பிலும் தோழமையுடன் இருந்ததோடு அங்கத்துவ பணமும் கொடுத்து வந்தேன். அவ்வாறு அவர்களது கூட்டத்தில் கலந்து கொண்டபோது மூட்டை மூட்டையாக பைல்களை கண்டேன். என்ன என்று கேட்டபோது செய்யவேண்டிய பணிகள் என்றார்கள். அன்றிலிருந்து மனதில் ஓர் குற்ற உணர்வு என்னை கொன்றபடி. ஆனால் உங்களுக்கு வடையும் ரீயும் தெரிந்திருக்கிறது. நமது பார்வையில் தான் எல்லாமே.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
மிகவும் கண்டிக்க தக்க கருத்து. 😪
-
“ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு!
யாரோ காணாமல் போய் விடுவார் என்றார் இன்று தானே???
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
உண்மையில் நாம் பரிதாபப்பட்ட ஜென்மங்கள் தானே?? கேட்க நாதியற்ற பிறவிகள் தானே. இதில் என்ன வெட்கம்??
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
அதே யாழ் களமே சாட்சி அவர்கள் பற்றி பேசத் தேவையில்லை இனி அவர்கள் இன்றி பேச முடியாது. தொடரும் பேசுவோம் ....
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நான் மேலே குறிப்பிட்டேன் தம்பி சீமான் அல்ல நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் எந்த கோவை மற்றும் தேர்தல் அறிக்கையிலும் நீங்கள் சொல்வது போல இல்லை இருக்காது. அது வெகுதூரப்பயணம். வேறு வழியில்லை. நாங்கள் இது பௌத்த சிங்கள தேசம் என்றும் மரமும் கொடியுமாக வாழ்ந்தால் சேர்ந்து வாழுங்கள் என்பவர்களுடன் கூடி வாழ் முயல்கிறோம். அதையே எம்மவர் சொன்னால் தீண்டத்தகாதவராக பார்க்கிறோம்??
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இப்படி நீங்கள் தூற்றினால் எப்படி வளர்வதாம்? வழங்குவதாம்? முதற்படி நாங்க ஆதரிக்க வேண்டும் உற்சாகப்படுத்தணும்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் சகோ இது நீண்ட பயணம். மற்ற கட்சிகளின் வாக்குகள் காவோலை வாக்குகள். நாம் தமிழர் வாக்குகள் குருத்தோலை வாக்குகள். இனி நாம் தமிழருக்கு மட்டுமே வளர்ச்சி. நன்றி.
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
மாமா அரசியல் பேதம் இல்லை என்றபடி அரசியல் தான் பேசுகிறார். வாழைப்பழத்தில் ஊசி???
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இல்லை அண்ணா அப்படியானால் கன்னடத்தை கன்னடர்களும் கேரளத்தை மலையாளிகளும் தெலுங்கு தேசத்தை தெலுங்கர்களும் பஞ்சாப்பை பஞ்சாபியர்களும் ஆள்வதும் எப்படி தமிழகத்தில் வாழும் அமைதியை ஏற்படுத்தும்??? வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பது எவ்வளவு பொய்யான வாதம். இங்கேயும் எல்லோரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மாநிலங்களை போல நாம் தான் ஆழ்வோம் என்பது எப்படி அமைதிக்கு பங்கமாகும். தமிழன் இளிச்சவாயன் என்பதை தவிர.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
உங்கள் பாணியில் சொன்னால் எது வந்தபோதும் கச்சையை எப்பொழுதும் மறப்பதில்லையே அண்ணா
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வணக்கம் சகோ இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்? உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது? பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம். அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது. உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு. தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஏன் நேற்று யாழ் களத்தில் பதியப்பட்டவை இன்று?? உதாரணமாக நிழலி.?? அவரே இன்று இந்த செய்தியை இங்கே பதிகிறார்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தென் காசியில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி தனித்து நின்று பெற்றிருப்பது பெரிய சாதனை தான்.