Everything posted by விசுகு
-
என்ன பார்ட்டி இது??
வீடு வேலை வேலை வீடு இது தானே அண்ணா குடும்ப தலைவன் என்று இதுவரை.... இனியாவது போகமுதல் என்றாலும்...? கேள்வி கொஞ்சம் ஆரம்பித்ததும். 🤣 அதே... 😅
-
என்ன பார்ட்டி இது??
ஓம் அண்ணா ஆனால் இது வேறு ஒரு பார்வை இன்றைய சூழலில் அதிக தகப்பன்மார் மனைவி மற்றும் பிள்ளைகளின் அதிக கட்டுப்பாடுகளின் வாழ்வதை அவதானித்ததின் பெறுபேறு இது. (நானோ என் சம்பந்திமாரோ அல்ல) குடும்பத்தை நாட்டை ஊரை சுமந்து இத்தனை தூரம் வந்தவர்களை அதிக கட்டுப்பாடுகளுடன் (அது அவர்களது உடல் நலம் சார்ந்து இருந்தாலும்) அதிகம் குடிக்க கூடாது அதிகம் சாப்பிட கூடாது ஏன் அதிகம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லி அடக்குவதனை பார்த்து பொழுது ஒரு நாளைக்காவது நாம் திறந்து விடுவோம் நம் வீட்டில் என்று தான் செய்தேன் இந்த ஆண்டு யாழுக்கு எழுத எதுவும் இல்லை என்று நினைத்தேன். சரி இது ஒருவருக்காவது பிரயோசனப்பட்டால்....? அதற்காகவே இப்பதிவு நன்றி அண்ணா.
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
இப்படி தான் நானும் அறிந்தேன் அத்துடன் விண்ணப்பத்தை அனுப்ப சுணங்கிவிட்டதாகவும் அறியப்படுகிறது. நாம் தமிழர் தம்பிமார் சும்மா இணையங்களில் பொங்கி நேரத்தை வீணடிக்கும் நேரத்தில் இதை செய்திருக்கலாம். செய்து விட்டிருந்தால் நீதிமன்றத்தில் வென்றிருக்க வாய்ப்பு அதிகம்.
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
இங்கேயும் பாடசாலை பிள்ளைகள் தான் அதிகம் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் கஞ்சா பாவிப்பதால் ஏற்படும் பாதிப்பை விட கஞ்சா விற்று பிடிபடுவதால் தான் இவர்கள் வாழ்வு அதிகம் அழிந்து போகிறது 😭
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
ஏதோ நாம சிரித்தோம் அல்லவா? 🤣
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சத்தம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு. 🤣 சீனனும் எங்காவது பச்சோந்தி கிடைக்காதா பலத்தை காட்ட என்று தவம் கிடக்கும் இந்த நேரத்தில்...?😂
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
இன்றும் கசிப்புக்கு வரவேற்பு இருக்கும் இடங்களில் இதை சொல்லி அடி வாங்கமுடியுமா?
-
உக்ரைனிற்கு மேற்குலக படைகள் - சாத்தியம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு
தவறான புரிதல் 😂 நீங்கள் சொல்வதை தான் நானும் சொல்லி இருக்கிறேன். வெளியே ஒரு முகமும் உள்ளே ஒரு முகமும் காட்டுகிறார்கள் என்று. உங்கள் கோபம் புரிகிறது. நன்றி.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
வாழ்த்துகள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி எமது மக்கள் முன்னேறுவதே தேவை.
-
என்ன பார்ட்டி இது??
ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது. இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று. சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 🙏
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
அதாவது இதுவரை நடந்தவை சரியான பிறப்புகள் என்கிறீர்கள்?? தவறு அங்கே தான். ஆண்களால் சிலவற்றை புரிந்து கொள்ளவே முடியாது.
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
இது ஒரு பெண் உரிமை சம்பந்தப்பட்டது. அவளது சம்மதம் இல்லாமல் இது நடக்கக் கூடாது என்பதே இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
நல்ல விடயம்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எம் மண்ணை காக்கவுமே நாங்கள் போராடுகிறோம். இதில் உலக அங்கீகாரம் என்பது அடுத்த கட்டம் மட்டுமே. அது சுயநலத்தால் அல்லது அடிபணிதலால் தான் கிடைக்கும் என்றால் நாம் போராட்டப் புறப்பட்ட நோக்கமே இல்லாமல் போய்விடும்.
-
உலகின் பணக்கார செல்லப்பிராணி: மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு!
ஆமா இந்த குந்தர் தனது சொத்தை தனக்குப் பின் யாருக்கு எப்படி எழுதி வைப்பார்?
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இங்கேயும் அதே... சும்மாமே வயிறு எரியும் இதைப் பார்த்தால்????
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
அதாவது போராட்டம் மற்றும் அது சார்ந்த தியாகங்களை மக்கள் நினைவு கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்? கொஞ்சம் விரிவாக நேரடியாக பேசுங்கள். எழுதுங்கள். இங்கே மறைத்து எழுத உங்களுக்கு இனி ஏதுமில்லை.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும்.
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வு - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம்
ரசியாவுக்குள்ளிருந்து புட்டின் இல்லாத ரசியாவை விரும்பும் மக்கள். 👋
-
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகள் - மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள்
அப்புறம்? அடுத்த ரீ பார்ட்டியில்???
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
இது உண்மை தான். ஊர் இரண்டு பட்டால் கூத்தருக்கு கொண்டாட்டம் தானே?
-
துவாரகா உரையாற்றியதாக...
- Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
2003 இல் இதே இடத்தில் 15 நாட்கள் கழித்து இருக்கிறேன். அதே இடத்தை இவர் எடுத்திருப்பது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும் இவர் செய்பவை நாம் செய்ய முடியாமல் போனதை செய்வது அல்லது அக்கனவுகளுக்கு ஒரு பலன் தருவதாக உள்ளது.- Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
இது தான் அந்த நோய் எல்லா இடங்களிலும் காவி காவி வம்புக்கு இழுத்தல். - Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
Important Information
By using this site, you agree to our Terms of Use.