Everything posted by விசுகு
-
துவாரகா உரையாற்றியதாக...
அவர் அவரது தம்பிமார் வீட்டில் இருப்பது தெரிகிறது. தலை காட்ட முடியாதநிலை வரும் என்று சொன்னேன். அது நடக்கிறது. அவர் பொதுவெளியில் வரும் போது எல்லாம் முடிவுக்கு வரும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
மேலே விளக்கமாக அழுத்தமாக இனி அதற்கான தேவை இல்லை என்று எழுதி இருக்கிறேன். என் முடிக்குள் கொண்டையை தேடுபவர்களை தவிர மற்றவர்களுக்கு அது புரிந்திருக்கும். அப்புறம் என் கொண்டையையே தேடி எம் இனத்தின் பலத்தை குறைக்கும் எவராலும் எம் இனத்துக்காக ஒரு துரும்பையும் சேர்க்க முடியாது.
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்?? இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??
-
துவாரகா உரையாற்றியதாக...
எனக்கு என் பிள்ளை இருந்தால் என் முன்னுக்கு வரணும். அதன் பின்னர் எந்த சோதனையும் தேவையில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுக்கெல்லாம் இனி தேவை இல்லை. உங்கள் போன்றோர் பரிசோதனைக்கு தயார் என்பதே வந்ததை நம்பும் நிலை தானே?
-
துவாரகா உரையாற்றியதாக...
சேரமான் போன்ற புத்தகப் புலிகளின் ஒரு கட்டுரையை கூட நான் இதுவரை வாசித்ததில்லை வரவேற்றதில்லை கிருபாகரனை நன்கு தெரியும். அவர் என் கண்ணில் படும் போது என் கேள்விகளுக்கு பதில் தரணும். இல்லை என்றால் செருப்பு பேசும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களை நான் சந்திப்பேனோ தெரியாது. சந்தித்தால் பெத்த அப்பன் என்றாலும் துரோகம் என்றால்??
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் எந்த போலியை ஆதரிக்கிறேன்?? இது நான் எனது முகநூலில் எழுதியது. இது தமிழீழ கொடியை இஸ்ரேல் கொடியுடன் இணைத்து பறக்கவிடத் துணிந்த உங்களைப் போன்றவர்களுக்கும் பொருந்தும். ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. இனத்தை மட்டும் அல்ல தலைவரையும் யாரும் களங்கப்படுத்தக்கூடாது. 😡
-
துவாரகா உரையாற்றியதாக...
இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்??
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை. மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. இதுவும் கடந்து போகும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 😭
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
ஒரு வகுப்பில் ஓர் மாணவர் தலைவர் ஒரு ஊருக்கு ஒரு உள்ளூராட்சி தலைவர் ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி உலகத்துக்கு ஒன்றென்றால் ஒரு நாடு அப்படி இருந்தபடியால் தான் இன்று பிரான்ஸ் என்றொரு தேசம். அதில் நான் நிம்மதியாக வாழ்கிறேன். சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிக்க கூடாது அல்லவா அண்ணா ?
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
உங்கள் கருத்தை பார்த்தால் இந்த இரண்டு போரையும் அமெரிக்கா ஆரம்பித்தது போல இருக்கு. மாறாக அடாத்தாக மற்றவர் தேசங்களுக்குள் நுழைந்த அரக்கர்களை ஆதரிப்பது போன்று இருக்கு.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
யார் குற்றி அரிசியானால் சரி. வந்தா மலை போனால் உரோமம்.... இது தான் என் நிலை
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நல்ல விடயம் தீர்வுகள்+ பொருளாதாரம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எங்கேயோ பார்த்த படங்கள்?? கேட்ட குரல்கள்? இரக்கம் தான் வருகுதில்லை.😭
-
துவாரகா உரையாற்றியதாக...
உங்களுக்கு இந்த ராஜபோக வாழ்க்கை வாழும் எத்தனை பேரை தெரியும்?? எனக்கு 2009 வரை தலைவருக்காக உண்டியல் குலுக்கி அவர் கேட்டதை எல்லாம் செய்து சேர்த்து அனுப்பி இன்று விசாரணைக்கு முகம் கொடுத்தபடி விசா இல்லாமல் வீடு இல்லாமல் திருமணம் இல்லாமல் திருமணம் செய்து பிள்ளைகளின் படிப்பு என்று வரும் போது சிவப்பு லிஸ்டில் தகப்பன் பெயர் வருவதால் படிப்புக்கே சிரமப்படும் பல தொண்டர்களை குடும்பங்களை தெரியும். -----+-----+--------+------+--------+-- எத்தனை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு கழகங்கள் கலை பண்பாட்டு இயக்கங்கள் மாவீரர் நிகழ்வுகள் எப்படி நடக்கிறது எத்தனை தொண்டர்கள் இரவு பகலாக தமது பொன்னான நேரத்தை விதைக்கிறார்கள் என்றாவது தெரியுமா?? ஒரே ஒரு நாள் மாவீரர் மண்டபத்தில் ஒரு தொண்டராக சில மணித்துளிகளாவது நின்று கடமை செய்திருந்தால்....,? பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்று தனியே கிடந்து வயிறு எரிந்து புலம்பவேண்டி வராது.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஒருவர் இருக்கிறார் என்று சொல்வது வேறு அவரை நான் சந்தித்தேன் என்று சொல்வது வேறு. எனவே கார்த்திகை 27 வரை தான் தவணை. அதன் பின்னர் தலை காட்ட முடியாத நிலை வரும் என்று நான் எழுதி இருந்தேன். அது தான் நடக்கிறது. 2009 க்கு முன்னர் உண்டியல் குலுக்க பணித்தவர் தலைவர். எனவே தலைவரின் தொண்டர்களை தொடுபவர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்று மட்டுமே சொல்ல முடியும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
அதேவேளை எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது தலைவர் இருக்கிறார் அவரது பிள்ளைகள் மனைவி இருக்கிறார்கள் என்றவுடன் அதை மறுத்து ஆயிரம் வீடியோக்களும் ஆய்வுகளும் அறிக்கைகளும் சாட்சிகளும் காசுக்கொடுக்கல் வாங்கல்களும் கணக்கறிக்கைகளும் கூட வருகின்றன. ஆனால் இத்தனை நேரங்களையும் ரகசிய புலநாய்வு ஜேம்ஸ் பாண்ட் களையும் பயன்படுத்தி இதுவரை (இந்த 14 வருடங்களில்) ஏன் தலைவர் அவரது குடும்பத்தினர் மற்றும் பொட்டம்மான் எப்படி எங்கே எவ்வாறு இறந்தனர் என்று இவர்களால் நிறுவ முடியவில்லை அல்லது முயலவில்லை. இவ்வாறு செய்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிச்சுக்களுக்கும் முடிவு வருமே.? ஆக இவர்களும் அதனை விரும்பவில்லை. அல்லது ஊக்குவிக்கிறார்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் மொக்கையீனப்படுத்தப்போவது என்னை அல்ல தொடரட்டும் உங்கள் பணி.
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் எந்த உந்துதலும் கொடுக்கவில்லை. செய்தியை மட்டுமே பதித்தேன். நன்றாக சிரிப்பு குறியீடு இடுங்கள் ஆரவாரம் செய்யுங்கள் என் நம்பிக்கையின் தற்கொலையை. தற்கொலை செய்தது நானல்ல. தமிழினம். இனி பாழுங்கிணற்றிற்குள். ...😭
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தாயகத்தில் இருந்து மக்கள் கெஞ்சிக் கேட்டும் ஓடித்தப்பிய எவராவது இங்கே மாண்டால் விதி வலியது என்பதை ஒத்துக் கொள்ள முடியும் 😭
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதாவது பாலஸ்தீனத்திற்கு எம்மை விட இந்தியா தேவை அதாவது சுயநலம். அப்படி பார்த்தால் நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்க ஆயிரம் மடங்கு காரணம் மற்றும் சந்தர்ப்பம் அதிகம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நாங்களும் இதையும் இதைவிட மேலும் செய்தோம். ஆனால் பாலஸ்தீனம் கூட அதை மதிக்கவில்லை. ..😭
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவர் எம்மை அல்லவா மூட நம்பிக்கையாளர் என்கிறார். ஆனால் உண்மையில் கிறித்தவத்தில் இந்த சொல் (மூடநம்பிக்கை) உள்ளதா?